TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


CCL 2 Semi FInal 1 Live Match-Mumbai Heroes vs Karnataka Bulldozers Live Match 11-02-2012

Posted: 11 Feb 2012 01:07 AM PST


CCL 2 2012 Semi FInal 1 Live Match-Mumbai Heroes vs Karnataka Bulldozers Live Match 11-02-2012


Semi FInal - 1


Mumbai Heroes vs Karnataka Bulldozers 

Watch Live Match ..

Refresh this page ..when not loading..

This posting includes an audio/video/photo media file: Download Now

டூப் போடாமல் சண்டைபோட்ட அஜித்

Posted: 11 Feb 2012 01:01 AM PST


டூப் போடாமல் சண்டைபோட்ட அஜித்
அஜித், பார்வதி ஒமணக்குட்டன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் பில்லா 2. சக்ரி இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் பாடல் வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். பில்லா 2 படத்தினை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்களாம். ஒவ்வொரு காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.


 அஜித் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் படமாக்கி இருக்கிறார் சக்ரி. இது வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்கிறது படக்குழு. அதுபோலவே ஆங்கில படங்களில் வரும் ஹெலிகாப்டர் சண்டைக்காட்சியை போன்று பில்லா 2 படத்திலும் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார்கள். ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் இருந்தும் டூப் எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டு தானே நடித்து கொடுத்து இருக்கிறார்

தனி விமானத்தில் வெளிநாடு கிளம்பினார் கலாநிதி !

Posted: 11 Feb 2012 01:00 AM PST


தனி விமானத்தில் வெளிநாடு கிளம்பினார் கலாநிதி !

சென்னை: 2 ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்க துறையினர் சட்ட நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வரும் வேளையில் சன்குழும தலைவர் கலாநிதி தனது மனைவியுடன் இத்தாலி புறப்பட்டு சென்றார்.


ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஆதாயம் பெற்ற மாக்ஸிஸ் நிறுவனம் சன் குழுமத்தில் ரூ. 550 கோடியை முதலீடு செய்தது. இந்த பணம் பெற்றதன் நோக்கம் என்ன என்பதும், இது சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்தும் மத்திய அமலாக்க இயக்குனரகம் விசாரித்து கடந்த 7ம் தேதி வழக்கை பதிவு செய்தது. மாஜி அமைச்சர் தயாநிதி மற்றும் கலாநிதி குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சி.பி.ஐ.,தாக்கல் செய்த வழக்கும் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் நிலுவையில் இருந்து வருகிறது.


இந்நிலையில் நேற்று ( வெள்ளிக்கிழமை) மதியம் 2. 20., க்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சன் குழும சிறப்பு விமானம் மூலம் கலாநிதி இத்தாலிக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் மனைவி காவேரி கலாநிதி, சன்குழும தலைமை அலுவலர் விஜயகுமார், இவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் சென்றனர். இதனை ஏர்போர்ட் அலுவலக வட்டாரம் மற்றும் உளவு பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.


இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் நகருக்கு சென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.இவர் எப்போது திரும்புவார் என்ற விவரம் வெளியே அறியப்படவில்லை. சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்க துறையின் வழக்கு பதிவிற்கு பின்னர் விசாரணைக்கு அழைப்பர். இந்நிலையில் கலாநிதி இத்தாலி பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் வடிவேலு வழக்கை விசாரிக்க தடை: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 11 Feb 2012 12:55 AM PST


நடிகர் வடிவேலு வழக்கை விசாரிக்க தடை: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நடிகர் வடிவேலு மீது தேர்தல் விதியை மீறியதாக தொடரப்பட்ட வழக்கை கீழ் நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


நடிகர் வடிவேலு பிரசாரம்


கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது நடிகர் வடிவேலு, தமிழகம் முழுவதும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட விஜயனை (இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க செயலாளராக உள்ளார்) ஆதரித்தும் நத்தம் பகுதியில் 6.4.2011 அன்று பிரசாரம் மேற்கொண்டார்.


தேர்தல் விதிமுறையை மீறி அவர் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி நத்தம் போலீசார், நடிகர் வடிவேலு, விஜயன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நத்தம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


ரத்து செய்யக் கோரி மனு


இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில் ஆஜராக தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு, விஜயன் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 


மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கூறுகையில், "நடிகர் வடிவேலு, விஜயன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 290 (பொதுமக்களுக்கு இடை/tறு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரில், சட்டவிரோதமாக கூடியது தொடர்பாகவோ, பொதுமக்களுக்கு இடை/tறு விளைவித்தது தொடர்பாகவோ எதுவும் கூறப்படவில்லை. தேர்தல் விதியை மீறியதாகவே புகாரில் கூறப்பட்டுள்ளது. எனவே மனுதாரர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 290 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்," என்றனர். 


மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் வடிவேலு, தி.மு.க பிரமுகர் விஜயன் ஆகியோர் மீதான வழக்கை நத்தம் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் நீதிமன்ற விசாரணையின்போது அவர்கள், கீழ் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தியிலும் வெளியாகிறது தனுஷின் '3'!

Posted: 11 Feb 2012 12:54 AM PST


இந்தியிலும் வெளியாகிறது தனுஷின் '3'!

'குறுகிய காலத்திலேயே அகில உலக பேமஸ்' ஆகிவிட்ட தனுஷின் கொலவெறி புகழ் '3' படம் உலகமெங்கும் தமிழ் - இந்தியில் வெளியாகிறது. வெளிநாடுகளில் ஆங்கில சப் டைட்டில் போடப்பட்டு வெளியாக உள்ளது. 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் '3' படம் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. 


காரணம் இந்த்ப படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷ் பாடும் கொல வெறி பாட்டுதான் என்பது சொல்லாமலே புரிந்திருக்கும். 


படம் இப்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம், இப்போது மார்ச் இறுதி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரம் வெளியாகவிருக்கிறது.


இந்தத் தகவலை தனுஷ் சமீபத்தில் வெளியிட்டார். 


3 படத்துக்கு ஐஸ்வர்யா தனுஷின் நெருங்கிய உறவினர் அனிருத் இசையமைத்துள்ளார்.

ரஜினியின் புகழ்பெற்ற கேரக்டர் பெயரை தலைப்பாக்கிய கார்த்தி!

Posted: 11 Feb 2012 12:49 AM PST


ரஜினியின் புகழ்பெற்ற கேரக்டர் பெயரை தலைப்பாக்கிய கார்த்தி!

சகுனிக்குப் பிறகு தான் நடிக்கும் அடுத்த படத்துக்கு ரஜினியின் புகழ்பெற்ற ஒரு கேரக்டர் பெயரையே தலைப்பாக்கியுள்ளார் கார்த்தி.


'என் பேர கேட்டா அழுவுற குழந்தை கூட வாயை மூடும்' என்பார் வில்லன். 


அதற்கு ரஜினி, 'கண்ணா.. அதே குழந்தை கிட்ட என் பேரை சொல்லிப்பாரு... அவங்கம்மா வாயையும் சேர்த்து மூடும்,' என்பார் ஹீரோ... 


எந்தப் படம் புரிகிறதா... ஹாங்... எவர்கிரீன் ஆக்ஷன் படமான மூன்று முகம் படத்தில் வரும் ரஜினியின் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர்தான். 


கார்த்தி நடிக்கும் அடுத்த படத்துக்கு 'அலெக்ஸ் பாண்டியன்' என்றுதான் பெயர் சூட்டியுள்ளனர். சுராஜ் இயக்குகிறார். 


கார்த்தியின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஏற்கெனவே ரஜினியின் படத் தலைப்புகளான படிக்காதவன், மாப்பிள்ளை போன்றவற்றை தனுஷுக்காகப் பயன்படுத்தியவர் சுராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. 

சோனியா அழுகை: காங். தலைவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த பாஜக கோரிக்கை

Posted: 11 Feb 2012 12:49 AM PST


சோனியா அழுகை: காங். தலைவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த பாஜக கோரிக்கை

டெல்லி: டெல்லியில் 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட என்கவுண்டரில் முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்களைப் பார்த்து சோனியா காந்தி அழுதார் என்ற விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகளை சொல்லும் காங்கிரஸ் தலைவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்க விடுத்துள்ளது.


இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளதாவது:


சோனியா காந்தி அழுதார் என்கிறார் சட்ட் அமைச்சர் சல்மான்குர்ஷித். ஆனால் அவர் அழுகவே இல்லை என்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்.


இரண்டு காங்கிரஸ் தலைவர்களில் யார் உண்மை பேசுகிறார்கள் என்பதை உண்மை கண்டறியும் கருவி மூலம் சோதனை நடத்தி அறிய வேண்டியுள்ளது.


1984-ம ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நிகழ்ந்த போது சோனியா அழுதாரா?


ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினரான பண்டிட்டுகளுக்கு எதிரான வன்முறையின் போது அவர் அழுதாரா?


டெல்லியில் 2008-ம் ஆண்டு பயங்கரவாதிகள் என்போரை சுட்டுக் கொன்றதற்காக ஏன் சோனியா அழுகிறார் என்றார் அவர்.


சரத்பவார் கருத்து


சோனியா அழுத விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவரும் வேளாண் அமைச்சருமான சரத்பவார், டெல்லி என்கவுண்டர் சம்பவத்தை உத்தரப்பிரதேச தேர்தலுக்குப் பிறகு எழுப்புவோம் என்றார்.


இருப்பினும் ஒரு விவகாரத்தில் அமைச்சர்களும் கட்சித் தலைவர்களும் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்துவது சரியானது அல்லது என்பதும் பவாரின் கருத்து.

Thendral This week Promo video

Posted: 11 Feb 2012 12:43 AM PST


Thendral 13-02-2012 | Sun Tv Thendral 13th February  2012 This week Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Thirumathi Selvam This week Promo video

Posted: 11 Feb 2012 12:42 AM PST


Thirumathi Selvam This week Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Bakthi Thiruvizha 11-02-2012-Vijay Tv Programs

Posted: 10 Feb 2012 11:51 PM PST


Bakthi Thiruvizha 11-02-2012-Vijay Tv Programs



Captain News Morning 11-02-2012 7 Am | Captain seithigal 11th February 2012 | Captain Tv Morning News

Posted: 10 Feb 2012 11:48 PM PST


Captain News Morning 11-02-2012 7 Am | Captain seithigal 11th February 2012 | Captain Tv Morning News

Kumudam Reporter 12-02-2012 E-book | Free Download Kumudam Reporter PDF This week | Kumudam Reporter 12th February 2012

Posted: 10 Feb 2012 11:39 PM PST


Kumudam Reporter 12-02-2012 E-book | Free Download Kumudam Reporter PDF This week | Kumudam Reporter 12th February 2012

Download link

நேரம் பார்த்து மொட்டை தனுஷின் தந்திர பக்தி

Posted: 10 Feb 2012 11:25 PM PST


நேரம் பார்த்து மொட்டை தனுஷின் தந்திர பக்தி

நினைத்தாரோ தெரியவில்லை. தனது '3' பட படை பரிவாரங்களோடு திடீரென்று திருப்பதி புறப்பட்ட தனுஷ் தேவஸ்தானத்தில் தனது முடியை காணிக்கை செலுத்தினார். 'கொஞ்சம் முன்பே செய்திருக்க வேண்டியது. சரி இனியும் தள்ளிப்போட வேண்டாமே என்று தான் என் மனைவி ஐஸ்வர்யா, கொலவெறி அனிருத் உட்பட அனைவருமே திருப்பதி புறப்பட்டு வந்தோம். திரைப்பட தொழிலாளர் ஸ்ட்ரைக், '3' பட ரிலீஸ் இருப்பதால் மொட்டை அடிக்க எந்த டென்சனும் இல்லை. எப்படியும் இன்னும் ஒரு மாதத்துக்கு ஷூட்டிங் இருக்காது என்பது தெரிந்தே மொட்டை போட்டுக்கொண்டேன்' எனும் தனுஷ் சச்சினுக்காக போட்ட 'கொலவெறி ஆலபமும் யூடிபில் செம ஹிட்டுகளை அள்ளுவதால் ஏகப்பட்ட உற்சாகத்தில் இருக்கிறாரம்.


'3' ரிலீஸானதும் முதலில் முடிக்கப்போவது ஒப்புக்கொண்ட இந்திப்படத்தைத்தானாம். அடுத்து தமிழ்ப்படத்துக்கு எட்டிப்பார்க்க எப்படியும் ஆறு மாதமாவது ஆகும். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது கொலவெறி கொண்ட தனுஷ்.

ஒரு நடிகையின் வாக்குமூலம்..! - சினிமா விமர்சனம்

Posted: 10 Feb 2012 11:22 PM PST


ஒரு நடிகையின் வாக்குமூலம்..! - சினிமா விமர்சனம்

சினிமாவில் மின்மினி பூச்சிகளாய் மின்னிக் கொண்டிருந்து மறைந்த நடிகைகளுக்கு சமர்ப்பணத்துடன் ஆரம்பமாகிறது இப்படம். நடிகைகள் உள்ளத்தாலும் உடலாலும் பாதிக்கப்படுவதை சொல்ல முயற்சி செய்கிறது.


பிரபலமாகி வரும் தொலைக்காட்சி நிறுவனத்தில் மேலும் விளம்பரத்தை பெருக்க  புது நிகழ்ச்சிக்காக நடக்கும் கூட்டத்தில் சீனியர் ரிப்போர்ட்டரின் ஐடியா அனைவரையும் கவர்கிறது. சினிமாவில் பிரபலமாக இருந்து பிறகு இருக்கிற இடமே தெரியாமல் போன ஒரு நடிகையின் வாழ்க்கையை வெட்ட வெளிச்சம் போடுவதே அந்த புரோகிராமின் மெய்ன் கான்செப்ட்.


தேடலில் கிடைக்கும் நடிகை தன்னைப்பற்றிய ரகசியங்களை சொல்ல முடியாமல் ஒரு டைரியை கொடுத்து விட்டு சொல்கிறார் மீத படத்தை டைரியை படிக்க விசுவல் விரிகிறது.


ஊரில் ஏற்படும் அவமானத்தைப் போக்க வறுமையில் வாடும் கூத்தாடிக் குடும்பத்தை சேந்த கிரிஜா தன் மகளை நடிகையாக்கும் சபதத்துடன் சென்னைக்கு வந்து ''பலான பலான'' போராட்டத்திற்கு பிறகு மகளை நடிகையாக்குகிறாள். பிரபல நடிகையான பிறகு அந்த நடிகையின் மனப்போராட்டம் தான் வாக்குமூலமாக சொல்லப்படுகிறது.


காபி சாப்பிடுவது போல் சில விசயங்கள் ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் பணம், பிரபலம் எல்லாம் கிடைக்கும் என்றால் எதையும் செய்ய சில பெண்கள் முடிவு எடுக்கிறார்கள்.தேடி வந்த வாய்ப்புக்காக கையை விட்டு போய்விடக்கூடாது என முடிவு எடுப்பதால் மகளை ஆண்களின் இச்சைக்கு ஆளாக்குகிறாள் கிரிஜா.


அம்மாவிற்கான வேலையை விட்டு விட்டு வேறு வேலையை பார்க்கிறாள். மகளை முதன்முதலில் ஒருத்தனுடன் உள்ளே அனுப்பி விட்டு நான் பட்ட அவஸ்தை இருக்கே எனும்  போது ஏண்டி அனுப்பி இப்படி பொழப்பு நடத்துறிங்கன்னு கேட்க தோணும் சினிமாவுல இதெல்லாம சாதாரணமப்பா என்று போக வேண்டி இருக்கிறது.


 சில இயக்குனர்களின் ஆசைக்கு ஆமாம் சாமி போட்டு முன்னேறிவிட்ட பிறகு எந்த நடிகையும் முன்னேற்றத்துக்கு காரணமான இயக்குனரை மதிக்கிறது இல்லை எனும் சினிமா தத்துவத்தை காட்சியாக்கி இருப்பது அருமை.


முதல் படத்திலேயே சினிமாவையே விமர்சித்து சினிமா எடுக்க தைரியம் அதிகம் தான். பெண்களுக்காக எந்த பெண் இயக்குனரும் எடுக்காத படத்தை ஒரு ஆணாக இருந்து பெண்களின் உணர்வை புரிந்து படமாக்கி இருக்கும் இயக்குனர் ராஜ்கிருஷ்ணா பாராட்டுக்குரியவர்.


ஆந்திரா மாநிலத்திலிருந்து தமிழில் நடிக்க வரும் நடிகை தெலுங்கு சினிமாவுக்கே போய் இருக்கலாமே, ஒரு வேலை நெல்லூரிலிருந்து சென்னை பக்கம்னு வந்துட்டாங்கலோ.


காலாவதியான கல்யாணத்திற்கு பிறகும் நடிக்க வந்த சோனியா அகர்வால் அப்படியே அறிமுக நடிகை போல இருந்தாலும் சிரிக்கிற காட்சியிலும் உள்ளுக்குள் சோகத்துடன் இருப்பது போலவே இருக்கிறார்.


இயக்குனர் ராஜ்குமார், கோவை சரளா, நிக்கோல், மனோபாலா, கஞ்சா கருப்பு என ஆங்காங்கே தெரிந்த சினிமா முகம் இருந்தாலும் புது முகத்தினருக்கும் நடிக்க வாய்ப்பு உள்ளது. நட்புக்காக ஜித்தன் ரமேஷ் , தயாரிப்பாளரான புன்னகை பூ கீதாவும் நடித்து இருக்கிறார்.


கொஞ்சம் விட்டு இருந்தாலும் படம் அடுல்ட் ஒன்லி ஆகி இருக்கும், ஆகவில்லை அந்த வகையில் சந்தோஷமே….!!!

CCl2 Semi Final 2012 live Match-Celebrity Cricket League 11-02-2012 live match | K Tv Celebrity Cricket League 11th February 2012 | CCL2 results | CCL2 Live Score | CCL2 Match Results | Chennai Rhinos vs Telugu Warriors Match Results and Scores

Posted: 10 Feb 2012 08:01 PM PST


CCl2 Semi Final 2012 live Match-Celebrity Cricket League 11-02-2012 live match | K Tv Celebrity Cricket League 11th February 2012 | CCL2 results | CCL2 Live Score | CCL2 Match Results | Chennai Rhinos vs Telugu Warriors Match Results and Scores

CCl2 Semi Final 2012 live Match

Chennai Rhinos Team Members:

VISHAL, VIKRAANTH, ARYA,JIIVA, BHARATH, ABBAS, PRITHIVI, JITHAN AMESH, SHIVA, SHANTHNU, KARTHIKKUMAR, VISHNU, SRIKANTH,
RAMANAA, SHAAM, HAMSA VIRDHAN

Telugu Warriors Team Members:

VENKATESH, THARUN, SRIKANTH, NITIN, AADARSH, TARAK RATNA, AJAY, SAMRAT, KHAYYUM, AKHIL, RAJIV KANAKALA, RAGHU, PRABHU, AYYAPPA P SHARMA, CHARAN TEJA, VISHWA, NANDAKISHORE.

Match Strating time-- 6.30pm(IST)

Update coming soon..

இளம் பெண்ணுடன் குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ.

Posted: 10 Feb 2012 07:37 PM PST


இளம் பெண்ணுடன் குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ.

பாட்னா: பீகாரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இளம் பெண்களுடன் குத்தாட்டம் ஆடிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவின் ஷிவான் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி திருமண நிகழ்ச்சியும் தொடர்ந்து ஆடல்பாடல் நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் அம்மாநில ஆளும் ஐக்கிய ஜனதா தள் கட்சி எம்.எல்.ஏ. ஷியாம் பகதூர் சிங் கலந்து கொண்டார். 
அப்போது நடந்த இளம் பெண்கள் ஆடிய நடனத்திற்கு ‌ஏற்றவாறு குத்தாட்டம் போட்டார். இதனை தனியார் டி.வி.சானல் ஓளிபரப்பியதால் சர்ச்சை எழுந்தது.எனினும் இது தொடர்பாக அவர் கூறுகையில் திருமண வீடு என்றால் வயது வித்தியாசம் பார்க்காமல் தான் ஆடிப்பாடி மகிழ்வர் அதனைத்தான் நான் செய்தேன்.


இதில் தவறு இல்ல‌ை. எனினும் இதனை உள்ளூர் சேனலில் ஒளிபரப்பி மானத்தை வாங்கி டி.வி. மீது வழக்குப்பதிய கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது..எனினும் இதே போன்று கடந்த 2010-ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் இளம் பெண்களுடன் இதே அமைச்சர் ஆடியதாக புகார் எழுந்ததது.

Dinkaran E-paper 11-02-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 11th February 2012

Posted: 10 Feb 2012 07:17 PM PST


Dinkaran E-paper 11-02-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 11th February 2012

Download Link

கலைஞர் முதல் முறையாக தோற்றுப் போனார்!

Posted: 10 Feb 2012 07:10 PM PST


கலைஞர் முதல் முறையாக தோற்றுப் போனார்!

நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்களைக் கேட்கிறேன். தொலைவில் இருந்து என் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருக்கின்ற என் நண்பர்களைக் கேட்கிறேன். இலட்சக்கணக்கான தொண்டர்களின் கண்ணீரையும், இரத்தத்தையும் சிந்தி வளர்க்கப்பட்ட இயக்கம், ஒரு குடும்பத்துக்காகவா? ஒரு குடும்பம் கொள்ளை அடிப்பதற்காகவா? நாட்டைப் பாழாக்குவதற்காகவா?


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கோடிக்கணக்கான மக்கள் இதயத்தில், அண்ணா உருவாக்கிய தி.மு.க. என்ற பெயரை ஏற்றி வைத்தார். அவரைத் தூக்கி எறிவதற்காக, வெள்ளித்திரையில் தன் மூத்த மகனைக் கொண்டுபோய்த் திணித்தார். 'மு.க.முத்து அகில உலக ரசிகர் மன்றம்,' என்று கோபாலபுரத்தில் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. தி.மு.க.வில் அப்போது ஒன்றியச் செயலாளர்கள் கிடையாது. ஒவ்வொரு வட்டச் செயலாளருக்கும், நீங்கள் மு.க.முத்து ரசிகர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தலைமைக் கழகத்தில் இருந்து தாக்கீது அனுப்பப்பட்டது.


'துப்பாக்கி எத்தனையோ அக்கிரமங்களைச் செய்து இருக்கலாம்: ஆனால், அது எம்.ஜி.ஆரைக் கூடச் சுடத் துணியுமா? என்று நான் நினைத்தேன். துப்பாக்கிக் குண்டு தொண்டைக்குழியில் பாய்ந்தது. எம்.ஜி.ஆர். செய்த தருமம் அவரது தலையைக் காத்தது, உயிரைக் காத்தது' என்றார் அண்ணா. எந்த முகத்தைக் காட்டினால், இயக்கத்துக்கு முப்பது இலட்சம் வாக்குகள் அதிகம் கிடைக்கும் என்று அண்ணா சொன்னாரோ, அந்த அண்ணனின் மறைவுக்குப் பிறகு, எம்.ஜி.ஆரால் வெற்றி பெற்றதற்குப் பிறகு, அவருடைய உதவியைப் பெற்று, நாவலரைப் புறந்தள்ளி, முதல் அமைச்சர் பதவியைக் கைப்பற்றிக்கொண்டார் கலைஞர் கருணாநிதி.


'பெரியார் இருந்த நாற்காலி காலியாகவே இருக்கும்; தி.மு.க.வில் தலைவர் பதவியே கிடையாது' என்று அண்ணா சொன்னதை மாற்றி, தனக்கென்று தலைவர் பதவியை உருவாக்கிக் கொண்ட கலைஞர் கருணாநிதியைக் கேட்கிறேன்.


திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக, என் தம்பியின் மீது பழிபோட்டு விட்டு, நான் தி.மு.கழகத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று என்னிடம் கையெழுத்து கேட்டு, கோ.சி.மணி அவர்களையும், டி.ஆர்.பாலு அவர்களையும் விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தீர்கள்.


'நான் எதற்காக?' என்று கேட்டேன். என் தம்பி விடுதலைப் புலிகளை வீட்டில் வைத்து இருந்தான். அதனால் கட்சிக்குக் களங்கம் வந்து விட்டது. எனவே, தி.மு.கழகத்தில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்று கையெழுத்து இடுங்கள்; மற்றதைப் பின்னாளில் பார்த்துக் கொள்ளலாம் என்று கேட்டார்கள்.


கோ.சி.மணிக்கு, உள்ளுக்குள் இதில் விருப்பம் இருந்திருக்க முடியாது. சேலம் சிறைச்சாலையில், மிசா கைதியாக, பக்கத்துப் பக்கத்து அறைகளில் நானும், அண்ணன் கோ.சி.மணியும் இருந்தோம். அவர் சொன்னார், என் வாழ்நாளில் நான் யாருக்கும் பணிவிடை செய்தது கிடையாது. எனக்குத்தான் மற்றவர்கள் பணிவிடை செய்வார்கள். ஆனால், உனக்கு விடியற்காலை நான்கு மணிக்குக் காபி போட்டுக் கொடுக்கிறே, நீ படிக்கட்டும் என்பதற்காக என்று சொல்லி எனக்குக் காபி போட்டுக் கொடுத்தார். அப்படிப் பாசத்தோடு அவரிடம் நான் பழகினேன். அந்த அண்ணன் கோ.சி.மணி மனதுக்கு உள்ளே இதில் விருப்பம் இருக்க முடியாது.


ஏனென்றால், அதற்கு முதல்நாள் அறிவாலயத்தில் அவர் என்னிடம் சொன்னார்: 'உன் தம்பி கைது செய்யப்பட்டதை நான் அறிந்தேன். நானும், என் மனைவியும் சாப்பிடவில்லை. எங்கள் குடும்பமே சாப்பிடவில்லை என்று சொல்லிவிட்டு, நீதிமன்றத்தில் உன் தம்பி வாக்குமூலம் கொடுத்தானே, சட்டப்படி வேண்டுமானால் அவன் குற்றவாளியாக இருக்கலாம், ஆனால், மனசாட்சியின்படி நான் விடுதலைப்புலிகளை வீட்டில் வைத்துக் காப்பாற்றினேன் என்று சொன்னானே, இத்தனை ஆண்டுகள் நீ மேடையில் பேசி, நாடாளுமன்றத்தில் பேசி, கட்சிக்கு உழைத்து உனக்குக் கிடைத்த பெருமை, புகழை விட, உன் தம்பி கொடுத்த இந்த ஒரு வாக்கு மூலத்தினால் உயர்ந்த பெருமையையும், புகழையும் பெற்று விட்டானப்பா' என்று அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் நின்றுகொண்டு என்னிடம் சொன்னார்.


ஆனால், கருணாநிதியின் உத்தரவுக்காக, விமான நிலையத்துக்கு வந்து ராஜினாமா கடிதம் கேட்டார். இரவு 11 மணி. அறிவாலய மண்டபத்துக்கு உள்ளே காரைக் கொண்டு போய் நிறுத்தினோம். டி.ஆர்.பாலுவிடம், 'நீங்கள் கொஞ்சம் வெளியே இருங்கள். நான் மணி அண்ணனிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்' என்று சொன்னேன். அதில் அவருக்குக் கோபம்.


அப்போது கோ.சி.மணியிடம், 'இதற்குப் பதிலாக நஞ்சைக் கொடுங்கள்' என்று சொன்னேன். இந்தக் கட்சிக்கு முப்பது ஆண்டுகளாக உழைத்ததற்கு, இதுதான் எனக்குப் பரிசா? கட்டி இருக்கின்ற கருப்பு, சிவப்பு வேட்டிக்கு நான் பெருமை தேடித்தந்து இருக்கிறேன். களங்கத்தைத் தேடித் தந்து இருக்கின்றேனா? சுயநலத்துக்காக இருக்கின்றேனா? கட்சியை விட்டு விலகிக் கொள்கிறேன் என்று எழுதிக் கொடுப்பதைவிட, விஷத்தைக் கொடுங்கள், சாப்பிட்டு விட்டுச் செத்துப் போகிறேன்'என்று சொன்னேன்.


அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. விடியற்காலையில் உங்களுக்குப் பதில் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நேராக, இரவு ஒரு மணிக்கு, வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக் கதவைத் தட்டினேன்.


இந்த ராத்திரியில் வந்து இருக்கிறாயே? என்ன விஷயம்? என்று கேட்டார்.


'தி.மு.க.வில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்' என்று ஒரு கடிதம் எழுதிக் கொண்டு வந்து, அதில் கோ.சி.மணியும், டி.ஆர்.பாலுவும் என்னிடம் கையெழுத்துக் கேட்கிறார்கள்' என்று சொன்னேன்.


'நீ கையெழுத்துப் போட்டாயா?' என்று கேட்டார்.


'இல்லை. நாளைக் காலையில் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்' என்றேன்.


'நீ கையெழுத்துப் போடாதே. என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொள்வோம்' என்றார்.


நான் விடியற்காலை ஆறரை மணிக்கு, நெஞ்சை விட்டு அகலாத தினகரன் ஐயா கே.பி.கே.அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். நடந்ததைச் சொன்னேன்.


'பார்க்கலாம். நீங்கள் என்ன தப்பு செய்தீர்கள்? உங்களால் இந்தக் கட்சிக்கு என்ன கேடு? நீங்கள் கையெழுத்துப் போடாதது சரிதான்' என்று சொன்னார்.


அப்பொழுது நாஞ்சிலார் ஒரு தகவல் சொன்னார். காலை ஏழரை மணிக்கு, நேருவும், கோ.சி.மணியும் என் வீட்டுக்கு வந்தார்களாம். ஆறரை மணிக்கெல்லாம் வீட்டை விட்டுப் போய்விட்டேன் என்று தெரிந்து கொண்டு, நேராகக் கோபாலபுரத்துக்குப் போய்ச் சொன்னார்களாம். பத்து மணிக்கு செயற்குழுவைக் கூட்டி இருக்கின்றார் கலைஞர் கருணாநிதி. கையெழுத்துப் போடவில்லை என்ற ஆத்திரத்தில், மேலே போட்டு இருந்த துண்டைத் தூக்கிக் கீழே எறிந்துவிட்டு, செயற்குழுவில் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, செயற்குழுவுக்கு வந்தாராம்.


தி.மு.க. செயற்குழுவில்...


வாசலிலேயே எல்லோரிடமும் கையெழுத்து வாங்கினார்களாம், என்னைத் தி.மு.க.வில் இருந்து நீக்குவதற்காக. செயற்குழுவில் விவாதம் நடைபெற்றது. என் மீது யாரும் குற்றம் சொல்லவில்லை. அவர்கள் தயார் செய்து வைத்து இருந்த இரண்டு பேர் மட்டும் குற்றம் சாட்டிப் பேசினார்களாம். அவர்களுக்கும் மனம் இல்லை. வேறு வழி இல்லாமல்தான் பேசினார்கள். அதில் ஒருவர் இப்போது உயிரோடு இல்லை. மற்றொருவர் இருக்கின்றார், பெயரைச் சொல்ல விரும்பவில்லை.


செயற்குழுவில் இருந்த யாருக்குமே, தி.மு.க.வில் இருந்து என்னை நீக்குவதில் விருப்பம் இல்லை. ஒரேயொருவர் மட்டும், கப்பலில் இருந்து கடலில் தூக்கிப்போடுவதைப் போலப் போட வேண்டியதுதானே? என்றார். அவரது பெயரையும் சொல்ல விரும்பவில்லை. கருணாநிதி சொல்லிக் கொடுத்ததை அவர் பேசினார்.


அந்தக் கட்டத்தில், கோ.சி.மணி எழுந்து, குற்றம் சாட்டப்பட்டு இருக்கின்ற வைகோவை அழைத்து விளக்கம் கேட்கலாமே? அதுதானே முறை? என்று சொன்னார். கருணாநிதி இதை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், கட்டை விரலை வெட்டிக்கொடு என்று சொன்னால், வெட்டிக் கொடுக்கக்கூடியவர் கோ.சி.மணி. அவர் இப்படிப் பேசியதை, கலைஞர் கருணாநிதி எதிர்பார்க்கவில்லை.


'கோபால்சாமியே விளக்கம் கொடுக்கிறேன் என்று சொல்லவில்லை. நீ என்னய்யா வக்காலத்து?' என்றார் ஆத்திரத்தோடு.


உடனே கடைசி வரிசையில் உட்கார்ந்து இருந்த நான் எழுந்து, 'வாய்ப்புக் கொடுத்தால், நான் விளக்கம் அளிக்கிறேன்' என்றேன். அண்ணன் மன்னை அதை ஆமோதித்தார். கலைஞர் கருணாநிதிக்கு வேறு வழி இல்லை. அன்பில் இல்லை. என்னை உயிராக நேசித்தவர் அண்ணன் மன்னை. என் மீது குற்றம் சாட்டி ஒன்றேகால் மணிநேரம் பேசினார், கலைஞர் கருணாநிதி. நான், 33 நிமிடங்கள் விளக்கம் அளித்துப் பேசினேன்.


என்னால் இந்த இயக்கம், ஒரு அங்குலமாவது வளர்ந்து இருக்கிறதா? இல்லையா? நான் செய்த தவறு என்ன? நான் இந்த இயக்கத்துக்குத் தொண்டு ஆற்றி இருக்கிறேன். ஈழத்தமிழர்களை, விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறேன் என்றால், அது அண்ணா ஊட்டிய உணர்வு. திராவிட இயக்கம் ஊட்டிய உணர்வு. அதனால் நான் செய்தேன். என் மீது என்ன தவறு? என்று கேட்டேன்.


அப்போது ஒருவர் கேட்டார், 'விடுதலைப்புலிகளால் உங்களுக்கு ஏதாவது நெருக்கடி இருக்கிறதா? அந்த பயத்தில் அவர்களை ஆதரிக்கிறீர்களா?' என்று கேட்டார். அவர் இப்போது, தி.மு.க.வில் இல்லை. எந்தக் கட்சியிலும் இல்லை. அவரை அப்படிக் கேட்கும்படி தயார் செய்து வைத்து இருந்தார்கள்.


அவர் அப்படிக் கேட்ட உடனேயே, வீரபாண்டியார் கோபமாக, 'நீ என்னய்யா முந்திரிக்கொட்டை? அவர்தான் விளக்கம் கொடுக்கிறாரே?' என்றார். அதற்குப்பிறகு நான் தொடர்ந்து விளக்கம் அளித்துப்பேசி விட்டு, நான் தவறு செய்து இருந்தால், வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொன்னேன். மொத்தச் செயற்குழுவும், எந்தச் சலனமும் இல்லாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தார்கள்.


யாருக்கும் என்னை நீக்குவதில் விருப்பம் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட கலைஞர் கருணாநிதி, அவரை நீக்குவதா? இல்லையா? என்பதைப் பற்றி முடிவு எடுக்க எனக்கும், பொதுச்செயலாளருக்கும் அதிகாரம் இருப்பதால், நாங்கள் முடிவு எடுப்போம். இதோடு இந்தச் செயற்குழு கலைகிறது என்று சொல்லிவிட்டுப் போனார்.


நினைத்தது நடக்கவில்லை


அண்ணா காலத்தில், சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளராகவும், பின்னர் தி.மு.க. அமைப்புச் செயலாளராகவும் இருந்த நீலநாராயணன், மறுநாள் காலையில் தொலைபேசியில் சொன்னார். அப்போது செல்போன் கிடையாது. உரையாடல்களைப் பதிவு செய்ய முடியாது.எனவே, அவர் துணிச்சலாக என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். கட்சி சொல்வதுதான் அவருக்கு வேதவாக்கு. கட்சியை ஒருபோதும் விமர்சிக்க மாட்டார். அவர் சொன்னார்: 'நான் அண்ணா காலத்தில் மாவட்டச் செயலாளராக இருந்தேன். 40,50 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் இருக்கிறேன். கலைஞர் கருணாநிதி திட்டமிட்டு, நேற்றைக்குத்தான் முதல் முறையாகத் தோற்றுப் போனார். அவர் நினைத்ததை நேற்றுச் சாதிக்க முடியவில்லை. மொத்தச் செயற்குழுவும் உங்கள் பக்கம்தான். எனவே, உங்களைக் கட்சியில் இருந்து நீக்க முடியவில்லை' என்றார். கடைசியாக, கொலைபழி சுமத்தி, என்னைக் கட்சியில் இருந்து வெளியேற்றினார். அதைத் தி.மு.க. தொண்டர்கள் நம்பவில்லை.


- வைகோ (கருணாநிதி குடும்பமா? தமிழ்நாடா?)

காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?

Posted: 10 Feb 2012 07:01 PM PST


காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?

மேஷம்: காதலுக்காக/காதலிக்காக கொஞ்சம் நிறைய காசு அள்ளிவிட வேண்டியிருக்கும். அதனால் என்ன? அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியாதான்! சிநேகிதர்களை விட சிநேகிதிகள் தூதுக்கு உதவுவார்கள்.


ரிஷபம்: உட்கார்ந்த இடத்தில் பதில் மெசேஜ் வரும். நீல நிறப் பொருட்களைப் பரிசாகக் கொடுங்க. அப்படியே சரண்டர் தான். இதுவரை காதலில் ஈடுபடாதவர்களுக்கு, கோயிலில் முதல் சந்திப்பு.


மிதுனம்: வெளியூர் வெளிநாட்டில் உறவினர் நண்பர்கள் இருந்தால் கையில் காலில் விழுந்தாவது காசு கொடுத்தாவது வாசனைப் பொருட்களை வாங்கி உங்க ஆளுக்குப் பரிசா கொடுங்க.


கடகம்: உங்களைவிட அதிக படிப்பு இருப்பவர்களை அணுகாதீங்க. உங்க டாடியோட ஃப்ரெண்டின் மகன்/மகள் உங்களின் காதலன்/காதலியாக வாய்ப்பு உள்ளது. வெள்ளை நிறப் பரிசை விரும்புவாங்க.


சிம்மம்: உறவினர் நண்பர்கள் யாராவது ஆஸ்பத்திரியில் இருந்தால் ஆப்பிள் சாத்துக்குடி செலவை பொருட்படுத்தாமல் போய்ப் பாருங்க. அங்கே வெச்சு தான் உங்கள் காதலன்/காதலி உங்களை முதல் முதலாய்ச் சந்திக்க வாய்ப்பு உண்டு.


கன்னி: நூறு சதவிகிதம் காதல் வயப்படுவீங்க. என்னங்க? ஏற்கெனவே வயப்பட்டாச்சா? அப்போ டாடி மம்மிகிட்ட பேசி முடிச்சுடுவீங்க. தனியா சந்திக்கும் போது கட்டுப்பாட்டுத் திரையை நடுவில் போட்டுக்கறது நல்லது.


துலாம்: இத்தனை காலம் நண்பர்/சிநேகிதி என்று நினைத்தவர் மனத்தில் காதல் வெளிப்படும். சந்தோஷ அதிர்ச்சிதான் போங்க. செலவைப் பொருட்படுத்த வேண்டாம். இது சற்று காஸ்ட்லி காதல்தான்.


விருச்சிகம்: காதல் பற்றி டென்ஷன்களைப் பார்த்துப் பயந்து பின்வாங்க வேண்டாம். பிற்காலத்தில் இரண்டு பேரும் ஓஹோன்னு இருக்கப் போறீங்கல்ல! இரண்டு பேரும் கோயிலில் சந்திப்பை வெச்சுக்குங்க. பிரச்னை நீங்கும்.


தனுசு: உங்க காதலை மம்மி கண்டுபிடிச்சுட்டாங்க. கொஞ்சம் கவனமாய் இருங்க. அவங்க காலில் விழுந்து உண்மையைச் சொல்லிடுங்க. காப்பாத்துவாங்க. இதுவரை காதலில் விழாதவங்களுக்கு அலுவலக நண்பர்/சிநேகிதி விண்ணப்பிப்பாங்க.


மகரம்: அண்ணன் என்னடா தம்பி என்னடான்னு கண்ணதாசன் பாட்டெல்லாம் பாடாதீங்க. அவங்கதான் உங்க காதலுக்கு முதன்மையா உதவுவாங்க. இனி தூது அவங்கதான்! பிற்பாடு டாடியின் ஆதரவு கண்டிப்பாய்க் கிடைக்கும்.


கும்பம்: நீங்க எதிர்பார்த்ததைவிடவும் சீக்கிரத்தில் காதல் கனிந்து கையில் வந்து விழும். காதலன்/காதலிக்கு சிறிய அளவில் உடல் நலம் பாதிக்கப்பட்டால் நடுங்க வேண்டாம். சும்மா ஜுஜூபி. கடந்து செல்லும் மேகம் போலத்தான்.


மீனம்: உங்களுடைய தேசியக் குணமாகிய அவசரத்தைக் காதலிலும் காட்டினால் எப்படி! முறையாய் இரண்டு வீட்டுப் பெரியவங்க கிட்டேயும் சொல்லுங்க. ஒண்ணு புரிஞ்சுக்குங்க. அவங்க சும்மா மேலுக்குத்தான் மறுக்கறாங்க. உங்க உறுதியை சோதிக்கிறாங்க!


- வேதா கோபாலன் 

இறைவா, எங்கே போகிறோம்?

Posted: 10 Feb 2012 07:00 PM PST


இறைவா, எங்கே போகிறோம்?

வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம். 39 வயதான உமா மகேஸ்வரி, ஆசிரியர் பணியை மக்கள் சேவையாகக் கருதி, தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறியும்போது, கொலையுண்டிருப்பது ஓர் ஆசிரியையா அல்லது தமிழகத்தின் வருங்காலமா என்று நெஞ்சம் துணுக்குறுகிறது.


அதே சென்னையில் இன்னொரு சம்பவம். அனகாபுத்தூரில் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை, அவரிடம் நண்பர்களாகப் பழகிய நான்கு இளைஞர்கள் வஞ்சகமாக அழைத்துச் சென்று, அவருக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து வெறித்தனமாகக் கற்பழித்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் மாணவர்கள். அதிலும் பொறியியல் படிக்கும் மாணவர்கள்.


இளம் தலைமுறையினர் மத்தியில் காணப்படும் பொறுமையின்மைக்கும், வெறித்தனமான பிடிவாதங்களுக்கும், கட்டுப்பாடில்லாத ஒழுக்கக் கேடுகளுக்கும் அடிப்படைக் காரணங்கள் இறையுணர்வு இல்லாமையும், நுகர்வுக் கலாசாரத்தின் தாக்கமும்தான் என்பது நமது தேர்ந்த கருத்து. அதிலும் குறிப்பாக, நுகர்வுக் கலாசாரம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒழுக்கக் கேடுகளில் முக்கியப் பங்கு வகிப்பது வக்கிரத்தனங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் காட்சி ஊடகங்களும், வெறித்தனத்துக்கு வழிகோலும் மதுப் பழக்கமும்தான் இந்தப் போக்குக்குக் காரணங்கள்.


இறையுணர்வாளர்கள் தவறிழைக்கவில்லையா? இறைவனின் பெயரால் இழைக்கப்பட்ட கொடுமைகள் கொஞ்சமா நஞ்சமா? ஆஷாடபூதிகளாகவும், ருத்திராட்சப் பூனைகளாகவும், கபட வேட தாரிகளாகவும் எத்தனையோ பேர் காவி உடை தரித்த, வெள்ளை அங்கியை அணிந்த காமுகர்களாக உலவினார்கள் தெரியுமா? என்றெல்லாம் இறை மறுப்பாளர்கள் எதிர்க்கேள்வி எழுப்பக்கூடும். அவர்கள் கூறுவது எல்லாம் பொய் என்று நாம் மறுக்கவோ, ஒதுக்கித் தள்ளவோ தயாராக இல்லை.


அதேசமயம், இறையுணர்வு என்பது பரவலாக, சமுதாயத்தில் ஒழுக்கத்தையும் நேர்மையையும் தவறு செய்தால் இறைவன் தண்டிப்பார் என்கிற தார்மிக பய உணர்வையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது. கபடவேட தாரிகள் சாமியார்களாகவும், பாதிரியார்களாகவும், மௌல்விகளாகவும் உலவி இருக்கலாம். ஆனால், அப்படி நடந்துகொண்ட ஒரு சிலரைக் காரணம் காட்டி சமுதாயத்தில் ஒழுக்கத்தைப் போதித்த தெய்வத் தொண்டர்கள் அனைவரையும் நாம் இழிவு செய்துவிட முடியாது. கூடாது!


இளைஞர்களுக்கு ஆன்மிக போதனை நடத்தி வந்த காலகட்டத்தில், பேராசைக்கு இடம் கொடுக்காதே, ஒழுக்கம்தான் உயர்வு தரும், இறை நம்பிக்கை உன்னைக் காப்பாற்றும் என்று பிஞ்சு உள்ளங்களில் நல்ல போதனைகளைப் பள்ளிகளிலும் வீட்டிலும் ஊட்டி வளர்த்துவந்த காலங்களில் எங்கோ ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்ததுபோக, இப்போது இளைஞர்கள் பாதை தவறி நடப்பது என்பதே ஒரு நெறியாக மாறி விட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.


கடவுள் என்று ஒருவர் இல்லையென்றால், அப்படி ஒருவரை நாம் கண்டுபிடித்து நிலைநிறுத்தியாக வேண்டும் என்பார் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர் வால்டேர். பள்ளிகளில் இறையுணர்வு போதிக்கப்பட்டது. ஆத்திச்சூடியும், கொன்றை வேந்தனும், உலக நீதியும், மூதுரையும் பிஞ்சு உள்ளங்களை நெறிப்படுத்த சொல்லிக் கொடுக்கப்பட்டன. இப்போதைய நர்சரி ரைம்ஸ் கல்வி முறை, பணத்தைத் தேடுவதும் வாழ்க்கை வசதிகளைத் தேடுவதும், சிற்றின்ப சந்தோஷங்களுக்கு வழிகோலுவதும் மட்டுமே தனது குறிக்கோள் என்று மாறிவிட்டிருப்பதன் வெளிப்பாடுதான் சென்னையில் நடந்தேறியிருக்கும் அந்த இருவேறு சம்பவங்கள்.


கற்பழிக்கப்பட்ட பெண், தனது நண்பர்கள் என்று அந்த நான்கு மாணவர்களையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து தாய்க்கு அறிமுகப்படுத்தியபோது, சகோதரிபோலத் தனது மகளுடன் பழகுகிறார்கள் என்று அந்தத் தாய் கருதி அதை அங்கீகரித்ததன் விளைவுதான் இன்று கற்பழிப்பில் முடிந்திருக்கிறது என்று நாம் சொன்னால் நம்மைப் பழமைவாதிகள் என்று ஒதுக்கக்கூடும். ஆனால், அதுதானே நிஜம்?


ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதுபோலத் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும், கதைகளும் பரவலாக வெளிவருகின்றன. அவை நடைமுறையில் சாத்தியம்தானா என்பதை நினைத்துப் பார்க்கக்கூட திராணியற்றவர்களாக நாம் மாறிவிட்டிருக்கிறோம். காரணம் இதைத் தவிர்க்க முடியாது என்கிற சூழ்நிலையை இன்றைய நுகர்வுக் கலாசாரச் சூழல் உருவாக்கி விட்டிருக்கிறது.


திரைப்படங்கள் சமுதாய சீர்திருத்தங்களுக்கு வித்திட்டதுபோய் சமுதாயச் சீரழிவுக்கு வழிகோலிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் காதலைத் தவிர, வேறு உணர்வுகளே இல்லை என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தாத திரைப்படங்கள் ஒன்றிரண்டு மட்டுமே என்றாகிவிட்டது.


பள்ளி மாணவர்கள் தொடங்கி பிறந்த நாளானாலும், தேர்வில் வெற்றி பெற்றாலும், மகிழ்ச்சியான தருணம் என்றாலும் மது அருந்திக் கொண்டாடுவது என்பது கலாசாரமாகிவிட்டிருக்கிறது. போதாக்குறைக்கு, நமது அரசும் ஊருக்கு ஒன்றிரண்டு என்பதுபோய் தெருவுக்குத் தெரு மதுபான விற்பனைக் கடைகளைத் திறந்து வைத்து இளைஞர்களைத் தவறான வழிக்குத் திசைதிருப்புவதில் முனைப்பாக இருக்கிறது.


பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாகக் கருதுகிறார்களே தவிர, குறைந்த வருமானமானாலும் ஒழுக்கமான நிறைந்த வாழ்வுக்கு அவர்களைப் பழக்கத் தயாராக இல்லை. ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலைசெய்த அந்தப் பள்ளிச் சிறுவனுக்கு தினமும் கைச்செலவுக்கு நூறு ரூபாய் தருவார்களாம் பெற்றோர்.


திரைப்படம் பார்த்துதான் தனது பழிவாங்கும் குணம் அதிகரித்ததாகக் கூறுகிறான் அந்தப் பள்ளி மாணவன். சகோதரியாகப் பழகிய பெண்ணை போதையில் கற்பழிக்கிறார்கள் நான்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள். இறைவா, நாங்கள் எங்கே போகிறோம்?

கொந்தளிப்பு!

Posted: 10 Feb 2012 01:23 PM PST


கொந்தளிப்பு!

கோவை: தமிழகத்தில் நிலவும் மின் தடையால், தொழில்கள் நசிந்து போவதை அடுத்து, கொந்தளித்துக் கொண்டிருக்கும்கோவை தொழில் அமைப்பினர் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மறியல், போலீஸ் தடியடி ஆகியவை நடந்தன. மின் தடையைக் கண்டித்தும், சீரான மின் வினியோகம் கோரியும், ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, கோவையைச் சேர்ந்த 40 வெவ்வேறு தொழில் அமைப்பினர், போலீசாரிடம் அனுமதி கோரினர். அதன்படி அவர்களுக்கு, காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், அரை மணி நேர ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
போக்குவரத்து ஸ்தம்பிப்பு: "கொடிசியா' தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்; வெவ்வேறு சங்க நிர்வாகிகள், கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். பெரும் கூட்டம் திரண்டதால், டாக்டர் நஞ்சப்பா ரோட்டில், இரு புறமும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதன் பாதிப்பு, மாநகரின் பெரும்பாலான சாலைகளில் இருந்தது. "அரை மணி நேரம் முடியட்டும்' என்று கருதி, போலீசாரும் அமைதியாக காத்திருந்தனர். ஆனால், காலை 10.40 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டம், 11.40 மணி வரை நீடித்தது. 


   முடிவில், அனைவரையும் அமைதியாக கலைந்து போகும்படி, "கொடிசியா' தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்தது ஆர்ப்பாட்டம்: அதை பொருட்படுத்தாத, வேறு சில சங்கங்களின் உறுப்பினர்கள், மத்திய பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் உள்ளே நுழையும் இடத்தில் மறியலில் இறங்கினர். அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்த தீவிர முயற்சிமேற்கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, "கொடிசியா' தலைவர் கந்தசாமியிடம், போலீஸ் துணை கமிஷனர் ஹேமா, கடுமையாக பேசி, உடனடியாக, மறியலை முடிவுக்கு கொண்டு வரும்படி கூறினார். மறியல் செய்வோர், "டேக்ட்' மற்றும் "காட்மா' சங்கத்தினர் என தெரிந்து கொண்ட கந்தசாமி, சம்பந்தப்பட்ட சங்கத் தலைவர்களை அழைத்து வந்தார். அவர்கள் வந்து, சங்க உறுப்பினர்களை சமாதானம் செய்வதற்குள், 20 நிமிடங்களுக்கும் மேலாகிவிட்டது. அதன் பிறகே,வாகனப் போக்கு வரத்துக்கு வழி ஏற்பட்டது.
இந்நிலையில் சித்தி விநாயகர் கோவில் - லாலா கார்னர் பகுதியில் சிலர் மறியல் செய்வது தெரிந்தது. துணை கமிஷனர் தலைமையில் அங்கு சென்ற போலீசார், போராட்டத்தை முடிக்கும்படி கூறினர். அவர்கள் மறுத்ததால்,தடியடி நடத்த உத்தரவிடப்பட்டது.


சரமாரி தடியடி: ஆயுதப்படை போலீசார், அங்கு கூடியிருந்த அனைவரையும் சரமாரியாக தடியால் அடித்து விரட்டினர். மறியல் செய்தோர், வேடிக்கை பார்த்தவர்கள் என நூற்றுக்கணக்கான பேர், விழுந்தடித்துக் கொண்டு ஓடினர். கிராஸ்கட் ரோடு, சத்தி ரோடு, திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் என, நாலாபுறமும் ஓடியவர்களின் செருப்புகள், ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ஒரு சிலர், வழியில் நின்றிருந்த இரு சக்கர வாகனங்களையும், தள்ளி விட்டுச் சென்றனர். இதனால், அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. கடைசியில், மறியலில் ஈடுபட்டதாகக் கூறி, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் ஸ்டேஷனில் உறங்கிய ராவணன்

Posted: 10 Feb 2012 01:12 PM PST


போலீஸ் ஸ்டேஷனில் உறங்கிய ராவணன்

பெ.நா.பாளையம்:மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ராவணன், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கினார்.சசிகலா உறவினர் ராவணன்; இவர், காரமடையைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ரவிக்குமார் என்பவரை மிரட்டி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மனு செய்திருந்தனர். நேற்று மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ராவணனை போலீஸ் காவலில் விசாரிக்க, கோர்ட் அனுமதித்தது. நேற்று மாலை ராவணன், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டார். 


இன்ஸ்பெக்டர் அறையில் ராவணனிடம் போலீசார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினர். இரவு உணவை போலீஸ் ஸ்டேஷனிலேயே சாப்பிட்டார். இதன் பின், போலீஸ் ஸ்டேஷனின் முதல் தளத்தில் கைதிகள் விசாரிக்கப்படும் அறையில் கயிற்றுக் கட்டிலில் தூங்கினார். இதனால், போலீஸ் ஸ்டேஷனைச் சுற்றி ஆயுதப் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


அதுக்கும் கொஞ்சம் லீவ் விடுங்க ! ஆர்வம் அதிகரிக்கும் !!

Posted: 10 Feb 2012 01:05 PM PST


அதுக்கும் கொஞ்சம் லீவ் விடுங்க ! ஆர்வம் அதிகரிக்கும் !!

தம்பதியரின் சந்தோசமான தருணங்கள் தாம்பத்ய உறவின் போது ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்பது வெறும் கடமையாக மட்டுமில்லாமல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் பின்பற்றுங்கள்.


புதுசா இருக்கட்டும்


எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய முயற்சி ஆர்வத்தை அதிகரிக்கும்.


தனிமையில் சந்திப்பு


அலுவலகம் செல்லும் ரகசியமாய் ஒரு குறிப்பு எழுதுங்கள். மாலைப் பொழுதில் புதிதாய் ஒரு இடத்திற்கு வரச்சொல்லி அங்கே காத்திருங்கள். அழகான ஆடையில் கணவரை கவர்ந்திழுக்கும் வகையில் நீங்கள் அமர்ந்திருப்பதை கண்டு உங்களவர் அசந்து போவார். அந்த தருணத்திலேயே காதல் நெருப்பு பற்றிக்கொள்ளும்.


கொஞ்சம் பிரிவு அதிக நெருக்கம்


இருவரும் தனித் தனியே சுற்றுலா செல்லுங்கள். அது அலுவலக வேலையாகவும் இருக்கலாம். அந்த சில நாள் பிரிவு நெருக்கத்தை அதிகரிக்கும். எப்பொழுது சந்திப்போமோ என ஏக்கத்தை ஏற்படுத்தும்.


முதல் ஸ்பரிசம்


முதல் இரவில் நடந்த சம்பவங்கள். தேனிலவு நினைவுகளை மனதில் ஓட்டிப்பாருங்கள் அந்த நினைவுகள் புது உத்வேகத்தை உருவாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


சுறு சுறுப்பான செயல்பாடு


உற்சாகம் தரும் விளையாட்டில் ஈடுபடுவது உறவிற்கான ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். வேகமாக ஆற்றில் படகில் செல்வது, சுறுசுறுப்பாக வேலை செய்வது. நீந்துவது என உற்சாகமாக செயல்படுங்கள். புதுவித த்ரில் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்


சில நாள் விடுமுறை


தினமும் உறவு என்பது போராடித்து விடும். ஒருவாரம் விடுமுறை விட்டுப்பாருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் அதை வைத்துக்கொள்ளலாம் என தீர்மானியுங்கள். அதுவரை தீண்டல், விளையாட்டு, சின்ன சின்ன முத்தம் என எதிர்பார்ப்பை எகிற வைக்கலாம். அதற்காக ஒரேடியாக லீவ் தேவையில்லை என்பது அவர்களின் அறிவுரை.

சூர்யாவுடன் நடிப்பதில் பிரச்சினையில்லை! - விஜய்

Posted: 10 Feb 2012 01:04 PM PST


சூர்யாவுடன் நடிப்பதில் பிரச்சினையில்லை! - விஜய்

சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. விரைவில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன், என்றார் நடிகர் விஜய்.


மதுரையில் நண்பர் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் தோன்றிப் பேசினார்.


பின்னர் மதுரை காளவாசலில் உள்ள ஓட்டலில் நடந்த விழாவில் கே.கே.நகரில் உள்ள ஷைன் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ-மாணவிகளுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார். அப்போது மாணவர் அசோக் தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு வழங்கினார். விழாவில் ஆதரவற்ற பெண்கள் 2 பேருக்கு தொழில் தொடங்க நிதி உதவி வழங்கினார் விஜய். 


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "அரசியல் சம்பந்தமான கேள்விகள் இப்போது வேண்டாம். தற்போது சினிமா பற்றி மட்டும் பேசலாம்.


நண்பன் படத்தின் கதை போல அமைந்தால் நிச்சயம் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பேன். ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை தான் ஹீரோ. நாங்கள் அதற்கு பின்னணியில் தான் உள்ளோம்.


நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல கதை அமைந்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன்.


தற்போது துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதுவும் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.


விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிடி செல்வகுமார், ரசிகர்மன்ற மாவட்ட தலைவர் எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ட்விட்டரில் தனுஷ் - சிம்பு மோதல்!

Posted: 10 Feb 2012 01:02 PM PST


ட்விட்டரில் தனுஷ் - சிம்பு மோதல்!

தனுஷும் சிம்புவும் வெளியில் சிரித்துப் பேசி கட்டிப் பிடித்து போஸ் கொடுத்தாலும், உள்ளுக்குள் அப்படி இல்லை என்பது கோலிவுட் அறிந்த சமாச்சாரம்.


கொஞ்ச நாள் அடங்கியிருந்த இவர்களின் பகை, மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது, ட்விட்டர் வழியாக.


சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு பாடலை உருவாக்கியிருந்தார் தனுஷ். இந்தப் பாடல் யு ட்யூபில் வெளியானது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பாடலை யுட்யூப் நீக்கிவிட்டது. அதற்குள் 4.5 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டிருந்தனர்.


உடனே தனுஷ், "அடுத்தவர் துன்பத்தைப் பார்த்து சிலர் சிரித்து மகிழ்கிறார்கள். மனித இனம் அன்பு செலுத்த படைக்கப்பட்டது என்ற உண்மை புரியாத அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்," என்று ட்வீட் செய்திருந்தார்.


உடனே சிம்பு தனது ட்விட்டரில், "காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமா இருக்காங்களே," என்று ட்வீட் பண்ணியிருந்தார்.


அடுத்த சில நிமிடங்களில் தனுஷ்: "பிரதர், அந்தப் பாட்டை சச்சினுக்காக இலவசமாதான் செய்து கொடுத்தேன். பாடல் உருவாக்கத்துக்கான செலவு மட்டும் பூஸ்ட் நிறுவனம் கொடுத்திருக்கு," என்று கூறியிருந்தார்.


உடனே பதிலுக்கு சிம்பு, "உலகில் யாரும் யாருக்கும் எதிரியில்லை. வெற்றிதான் ஒருவரை உலகுக்கு காட்டுகிறது. தோல்வியோ உலகை உனக்குக் காட்டுகிறது," என தத்துவமழை பொழிந்திருந்தார்.


"போங்கப்பா... பொழப்பை சரியா பாருங்க... இல்லன்னா உங்களை ஒருத்தனும் பார்க்க மாட்டான்" - இது குறுக்கில் புகுந்த ஒரு ரசிகரின் கமெண்ட்!


இதெப்டி இருக்கு!