TV SHOWS | MOVIES | TV SERIALS |
- Vannathirai 20-02-2012 | Free Download Vannathirai Magazine PDF Ebook | Vannathirai 20th february 2012
- Kungumam 20-02-2012 | Free Kungumam Tamil Magazine PDF This week | Kungumam 20th february 2012
- Athipookal 14-02-2012 | Sun Tv Athipookal Serial 14th february 2012
- Ilavarasi 14-02-2012 | Sun Tv Elavarasi Serial 14th february 2012
- Thiyagam 14-02-2012 | Sun Tv Thiyagam Serial 14th february 2012
- Mutharam 14-02-2012 | Sun Tv Muthaaram Serial 14th february 2012
- Vellai Thamarai 14-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 14th february 2012
- Uravugal 14-02-2012 | Sun Tv Uravugal Serial 14th february 2012
- Kasturi 14-02-2012 | Sun Tv kasthuri Serial 14th february 2012
- காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்
- விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி விருது!!
- காதலை வரவேற்கும் நீல நிறம் ...!
- இந்தியா-வங்கதேசம் இடையே இணையப்போர்: 20,000 வெப்சைட்களை முடக்கிய் வங்கதேச ஹேக்கர்ஸ்!
- Maruthani 14-02-2012 | Sun tv Marudhaani 14th february 2012
- பசங்க காதலை கண்டுபிடிப்பது எப்படி?
- ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ.,
- சல்மானை விட்டுவிட்டு ஷாருக்கானுக்கு அடிபோடும் அசின்
- அவர் பேச்சை எடுக்காதே... அமலா பால் மீது ஓவியா கடுப்பு
- Dinakaran E-paper 14-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 14th february 2012
- வெடித்தது ! ஸ்டாலின்-வீரபாண்டி ஆறுமுகம் மோதல்!
- ஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது
- எங்க காதலுக்கு இளையராஜா தான் காரணம்! சொல்கிறார் பிரசன்னா!!
- நகைக்கடையை திறக்க வந்த ஜான் ஆபிரகாம் விரலைக் கடித்த ரசிகை!
- ஏட்டய்யா கை ரொம்ப நீளம்...மாணவனிடம் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட்!
- மதுரை டூ சென்னை... 'நடுவானில்' ஸ்டாலின், விஜயகாந்த், கார்த்தி சிதம்பரம் ரகசிய ஆலோசனை!
Posted: 14 Feb 2012 12:44 AM PST Vannathirai 20-02-2012 | Free Download Vannathirai Magazine PDF Ebook | Vannathirai 20th february 2012 Download Link Credit - Original Uploader |
Kungumam 20-02-2012 | Free Kungumam Tamil Magazine PDF This week | Kungumam 20th february 2012 Posted: 14 Feb 2012 12:42 AM PST Kungumam 20-02-2012 | Free Kungumam Tamil Magazine PDF This week | Kungumam 20th february 2012 Download Link Credit - Original Uploader |
Athipookal 14-02-2012 | Sun Tv Athipookal Serial 14th february 2012 Posted: 14 Feb 2012 01:12 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Ilavarasi 14-02-2012 | Sun Tv Elavarasi Serial 14th february 2012 Posted: 14 Feb 2012 12:52 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Thiyagam 14-02-2012 | Sun Tv Thiyagam Serial 14th february 2012 Posted: 14 Feb 2012 12:20 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Mutharam 14-02-2012 | Sun Tv Muthaaram Serial 14th february 2012 Posted: 14 Feb 2012 12:18 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Vellai Thamarai 14-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 14th february 2012 Posted: 14 Feb 2012 12:03 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Uravugal 14-02-2012 | Sun Tv Uravugal Serial 14th february 2012 Posted: 14 Feb 2012 12:02 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Kasturi 14-02-2012 | Sun Tv kasthuri Serial 14th february 2012 Posted: 14 Feb 2012 12:02 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம் Posted: 13 Feb 2012 09:56 PM PST காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம் கடந்த 14 ம் நூற்றாண்டில் வேலன்டைன் பாதிரியார், காதலித்தவர்களை திருமணம் செய்து வைக்க தன் உயிரை இழந்தார் என்பதும், இவரது நினைவாக காதலர் தினம் ( பிப்- 14 ) கொண்டாடப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று உலகம் முழுவதும் குறுந்தகவல்கள், மெயில், மூலம் காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஓட்டல்கள், பீச்சுகள், பூங்காக்ககள் நிரம்பி வழிகின்றன. இதற்கென பல மாவட்டங்களில் இருந்து மலர் வரவழைக்கப்பட்டு வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில் காதலர்களுக்கு கவலை தரும் ஒரு கொலை நடந்திருக்கிறது. காதலியை சந்திக்க சென்ற போது., உ .பி., மாநிலம் மீரட் நகர் அருகே நடந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு; கேத்வான் நகரை சேர்ந்த ரசீத் ( வயது 15 ) . இவர் அருகில் உள்ள சர்தானா பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்தார். இது அரசல் புரசலாக பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனால் மாணவி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. காதலர் தினமான இன்று காதலியை சந்தித்தே தீர வேண்டும் என ரசீத்துக்கு எண்ணம் ஏற்பட்டது. எப்படியாவது அவரது வீட்டுக்கு சென்று பார்த்து பேசி விட வேண்டும் என வீரத்துடன் கிளம்பினார் . அங்கு அவளை சந்தித்தார். மகிழ்ச்சி சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இவர்களது சந்திப்பு மாணவியின் உறவினர்களுக்கு தெரிந்ததும் இருவரும் சந்தித்த இடத்திற்கு வந்தனர். காதலனை பிடித்து, அடித்து துவைத்து எடுத்தனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் ரோட்டில் கிடந்தான். மாணவிக்கும் அடி - உதை விழுந்தது. தகவல் அறிந்த ரசீத்தின் பெற்றோர்கள் காதலனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. காதலர் தினமான இந்நாளில் ஒரு கொலை நடந்திருப்பது காதலர்களுக்கு பெரும் கவலையாகாத்தான் இருக்கும். |
விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி விருது!! Posted: 13 Feb 2012 09:49 PM PST விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி விருது!! எடிசன் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்தது. விழாவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், ஆர்கே, பேபி சாரா, கோவை சரளா, மயக்கம் என்ன நாயகி ரிச்சா கங்கோபாத்யாயா, இனியா, லட்சுமிராய், லட்சுமி ராமகிருஷ்ணன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறந்த பாடலாசிரியர் விருது நா முத்துகுமாருக்கும், இசையமைப்பாளர் விருது ஹாரிஸ் ஜெயராஜுக்கும் வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில், விஜய் தன் படங்களில் ரஜினி பற்றிப் பேசி ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கிய காட்சிகளைக் காட்டினர். பின்னர் ரஜினி விருதினை அவருக்கு வழங்குவதாக அறிவித்தனர். விருதினைப் பெற்றுக் கொண்ட விஜய், ரசிகர்களை ஆஹா ஓஹோவெனப் பாராட்டினார். நண்பன் படத்திலிருந்து ஒரு பாட்டுப் பாடினார். எல்லாம் முடிந்ததும், 'சூப்பர் ஸ்டார் ரஜினி அவார்டு வாங்கியிருக்கீங்க... அவரைப் பற்றி பேசுங்கள்' என நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிட்டி பாபு கேட்க (மகா சொதப்பல்), விஜய் ஒன்றுமே பேசவில்லை. மீண்டும் மீண்டும் பேசச் சொன்னபோது, சற்று நேரம் மவுனமாக நின்றுவிட்டு, "வரேன்!" என்று கூறிச் சென்றார். அடுத்த விநாடி, வந்திருந்த ரசிகர்களில் ஒருவர் எழுப்பிய குரல் இது: "முதல் வருசமே இப்படியா? அடுத்த வருசமாவது பொருத்தமானவங்களுக்கு கொடுங்கப்பப்பா"! |
காதலை வரவேற்கும் நீல நிறம் ...! Posted: 13 Feb 2012 09:48 PM PST காதலை வரவேற்கும் நீல நிறம் ...! டிரஸ் போட்டுட்டு போனா கண்டிப்பாக காதல் சக்சஸ்தான். காதலர் தினத்தன்று நம்முடைய காதல் நிலவரம் எப்படி இருக்குன்னு நாம போடும் உடையின் நிறத்தை வைத்தே கண்டு பிடித்து விடலாம். இப்படிச் செய்வதன் மூலம் சில பல கலவரங்களைத் தவிர்க்க முடியும். காதலர் தினத்தன்று அணியும் உடைகளின் நிறத்திற்கு சிறப்பு அடையாளம் வைத்திருங்கின்றனர் காதலர்கள். நீங்க புதுசா லவ் பண்ற ஐடியால இருக்கீங்களா? அப்படீன்னா இதப் படிங்க. பச்சை நிறமே பச்சை நிறமே உங்களைக் காதலிக்க நான் ரெடி. உங்களுக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை உணர்த்துவதே பச்சை நிறம். காதலை ஏற்றுக்கொண்டேன் இப்பொழுதுதான் காதலை ஏற்றுக்கொண்டேன் என்பதை உணர்த்துவதே ரோஸ் நிறம். நான் ரெடி நீங்க ரெடியா? இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. என் இதய அறை இன்னும் காலியாகவே உள்ளது. யார் வேண்டுமானலும் அப்ளை செய்யலாம் என்பதை உணர்த்துவதே நீல நிறம். நான் காதலிக்கிறேன் எனக்கு காதல் செட் ஆயிருச்சி. நான் ஏற்கனவே காதலிக்கிறேன், நீங்க வேற ஆளைப் பார்க்கலாம் என்பதை உணர்த்துவது வெள்ளை நிறம். நிச்சயம் செய்ய ரெடி காதலிப்பது மட்டுமல்ல நான் நிச்சயம் செய்ய ரெடி என்று உணர்த்துவதே செம்மஞ்சள் நிறம். காதலுக்கு நான் ரொம்ப தூரம் காதல் என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது. என்னை ஆளை விடுங்க என்று உணர்த்துவது சிவப்பு நிறம். அதேபோல் கிரே கலர் உடையும் காதலில் விரும்பம் இல்லை என்பதை உணர்த்துமாம். இந்த 'பார்ட்டிங்களைப்' பார்த்தா திரும்பிப் பார்க்காமல் போய் விடுவது நல்லது. காதல் நிராகரிக்கப்பட்டது காதலை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை நிராகரிக்கப்பட்டது என்பதை உணர்த்துவது கறுப்பு நிறம். காதல் தோல்வி நான் ஏற்கனவே லவ் பெயிலியர், அதாவது இவர்கள் காதல் பரீட்சை எழுதி பெயிலானவர்கள். இதை உணர்த்துவது மங்களகரமான மஞ்சள் நிறம். Thanks to oneindia |
இந்தியா-வங்கதேசம் இடையே இணையப்போர்: 20,000 வெப்சைட்களை முடக்கிய் வங்கதேச ஹேக்கர்ஸ்! Posted: 13 Feb 2012 09:46 PM PST இந்தியா-வங்கதேசம் இடையே இணையப்போர்: 20,000 வெப்சைட்களை முடக்கிய் வங்கதேச ஹேக்கர்ஸ்! டெல்லி: வங்கதேசத்தைச் சேர்ந்த பிளாக் ஹாட் ஹேக்கர்ஸ் எனும் குழுவினர் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இணையதளம் உட்பட 20 ஆயிரம் இந்திய இணையதளங்களை முடக்கி, கிட்டத்தட்ட ஒரு யுத்தத்தையே நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தங்களது இணைய பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அக்குழு, வங்கதேச எல்லையில் நிறுத்தப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நியாயமற்ற படுகொலைகளுக்கு பழிவாங்கும் வகையிலேயே www.bsf.nic.in உட்பட 20 ஆயிரம் இந்திய இணையதளங்களை சீர்குலைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தமது பேஸ்புக் தளத்தில், "இந்தியாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் கொடூரமான கொலைகளே இப்படி செய்ய தூண்டியது" என்று குறிப்பிட்டுள்ளார். இதே குழுவைச் சேர்ந்த மற்றொரு நபர், "1971-ம் ஆண்டு இந்தியா எங்களை ஆதரித்தது. இப்போது அதே இந்தியாதான் எங்களை படுகொலையும் செய்கிறது. பொய்யான நண்பனைவிட வெளிப்படையான எதிரியே மேல்...இதற்காக சாவைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை... என்னுடைய தாய்நாட்டைக் காப்பதற்காக..வெற்றி பெறும் வகையில் தொடர்ந்து போரிடுவோம் என்று ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார். இக்குழுவினர் பங்கு சந்தை தொடர்பான www.paisacontrol.com என்ற இணைய தளத்தையும் முடக்கியுள்ளனர். வங்கதேசத்திலிருந்து இயங்கும் இணையதள ஹேக்கர்ஸ் குழுவின் பெயர் 3xp1r3 Cyber Army என்பதாகும். இத்துடன் வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோக்களையும் ஹேக்கர்ஸ் குழு வெளியிட்டுள்ளது. |
Maruthani 14-02-2012 | Sun tv Marudhaani 14th february 2012 Posted: 13 Feb 2012 09:50 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
பசங்க காதலை கண்டுபிடிப்பது எப்படி? Posted: 13 Feb 2012 07:59 PM PST பசங்க காதலை கண்டுபிடிப்பது எப்படி? பசங்க காதலை கண்டுபிடிப்பது எப்படி?டீன் ஏஜ் வயதில் உள்ளோர், காதல் வயப்பட்டால், கண்டுபிடிப்பது பற்றி கூறும் மன நல மருத்துவர் பிருந்தா ஜெயராமன்: பெற்றோர் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்... உங்கள் பிள்ளைகள், ஒரு பையனிடமோ அல்லது பெண்ணிடமோ போனில் பேசுவது அல்லது அவர்கள் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பதை மட்டும் வைத்து, அவர்கள் காதலில் உள்ளனர் என்று தீர்மானம் பண்ண வேண்டாம். பிள்ளைகள் காதலில் விழுந்தால், பரவசமான ஆனந்தத்தில் இருப்பர்; அதிகப்படியான உற்சாகம் அவர்களிடம் இருக்கும்.தன் வெளித்தோற்றத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பர். திடீரென்று வினோதமாக நடந்து கொள்வர். முதலில் பிடிக்காத விஷயமெல்லாம், இப்போது பிடிக்க ஆரம்பித்து விடும். அது, அந்த காதலரின் பாதிப்பாக இருக்கலாம். போன் கால்கள் வந்தால், உடனே தனியிடத்திற்கு போய் விடுவர்.இவையனைத்தும் உங்கள் பிள்ளைகள் காதலில் விழுந்ததற்கான அறிகுறிகள்.இது அனைத்தையும் விட, காதலில் உள்ள பிள்ளைகளுக்கு திடீரென்று, படிப்பில் கவனம் சிதறி, மதிப்பெண் குறைய ஆரம்பித்து விடும். அவர்களின் எண்ணம் முழுவதும் காதலரின் ஆதிக்கமே இருக்கும். இதனால், பிள்ளைகள் மேல் சந்தேகப்பட்டு, அவர்களை கண்காணிக்க ஆரம்பித்தால், அவங்களுக்கு வருத்தமும், கோபமும் அதிகமாகி விடும். இது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம்.காதல் வயப்படுவது டீன் ஏஜில் இயற்கை. இதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் காதல் வயப்பட்டிருந்தாலும், படிப்பில் கவனச் சிதறல் இல்லாமல் பார்த்துக் கொள்வர். இந்த மாதிரியானவர்களுக்கு காதல், ஒரு தன்னார்வத்தை கூட்டுவதாக இருக்கும்.காதல் அனுபவம் அல்லது ஈர்ப்பு இல்லாத இளைஞர்கள், இன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல, எந்தக் காலகட்டத்திலும் கிடையவே கிடையாது. அதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். தன் குறிக்கோளை பாதிக்காத வகையில், லட்சியத்தை நோக்கி நம்மை நகர்த்தும் காதல் தான் சிறந்தது என்பதை, டீன் ஏஜ் வயதில் உள்ளவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். Thanks to Dinamalar |
ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ., Posted: 13 Feb 2012 07:55 PM PST ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ., ஸ்ரீரங்கம் தொகுதி, திருவானைக்காவலில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்திருந்தேன். பெருவாரியான ஓட்டுகள் பெற்று, மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பின், ஜூன் மாதம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தவுடன், 190 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டினேன். தற்போது இரண்டாவது முறையாக உங்களை சந்தித்து, 240 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குவதில் மனநிறைவு அடைகிறேன். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பாடுபடும் என் அரசு, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசு. மக்களுக்கு இடர்ப்பாடுகள் ஏற்படும் போதெல்லாம், ஓடோடிச் சென்று அவர்களின் துயர் துடைக்கும் அரசு. அவ்வகையில், "தானே' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளுக்காகவும், சேதமடைந்த கட்டமைப்புகளின் உடனடி சீரமைப்புக்காக, 850 கோடி ரூபாயை வழங்கி, போர்க்கால அடிப்படையில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.அனைவரும் அசந்து போகும் அளவுக்கு, 790 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை, சட்டசபையில் அறிவித்தேன். இத்திட்டத்தை, அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் பாராட்டி, வரவேற்றுள்ளன. ஆனால், அதை விமர்சிக்கும் வகையில், "அசந்து தான் போனார்கள்' என்ற தலைப்பில், "அசடு' வழியும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார், "ஊழல் மூலம் உலகத்தை அசர வைத்த' ஒரு கட்சியின் தலைவர். தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அரசின் நல்ல திட்டங்களை பாராட்ட மனமில்லாமல், விமர்சிக்க வேண்டும் என்ற வெறியுடன், குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்குடன், விமர்சிக்கும் விமர்சனங்களை புறந்தள்ளுவதை விட வேறு வழி இல்லை. யார் போற்றினாலும், தூற்றினாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே. "தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ் மக்களின் வளர்ச்சியே என்னுடைய வளர்ச்சி' என்ற முறையில், நான் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னை பொறுத்தவரை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வளர்ச்சியாக இருக்க வேண்டும்.எனவே தான், ஏழை மக்கள் உடனடியாக பயன் பெறும் வகையில், எவ்வித விலையும் கொடுக்காத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதே நேரத்தில், ஏழை, எளிய மக்கள், அரசின் நலத்திட்டங்களை மட்டும் சார்ந்து இல்லாமல், அவர்கள் சொந்த காலிலேயே நிற்கும் வகையில், பொருளாதார வளத்தை, அவர்கள் பெற வேண்டும் என்பதே, இந்த அரசின் முக்கிய குறிக்கோள்.அதனடிப்படையில், குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களான, விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டமும், அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. என்னால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக தீர்க்க வழி வகை செய்வதுடன், தங்களின் தேவைகளை, தாங்களே பூர்த்தி செய்து கொள்ள தீட்டப்பட்ட திட்டங்கள்.முந்தைய மைனாரிட்டி தி.மு.க., அரசின் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட திட்டங்கள் எல்லாம், மக்களின் வருவாயை பெருக்குவதற்கு பதிலாக, அவர்களின் குடும்ப வருவாயை பெருக்கும் திட்டங்களாக அமைந்தன. இலவச, "டிவி' திட்டம், அவர்களின் குடும்ப, "டிவி' சானல்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையிலேயே அமைந்தது.அதாவது, அரசு செலவில் அவர்கள், தங்கள் குடும்ப வருமானத்தை பன்மடங்கு பெருக்கிக் கொண்டனர். ஆனால், என் தலைமையிலான அரசு, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார். பட்டினத்தார் கதை: விழா மேடையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, பட்டினத்தார் கதை மற்றும் கொக்கு கதைகளை எடுத்துக் கூறினார். "புத்தர் போன்று பெரிய செல்வந்தராக இருந்து, துறவறம் பூண்ட பட்டினத்தாரை, தலை சுற்ற வைக்கும் அளவுக்கு, இருவர் விமர்சனம் செய்தனர். அவர்களைப் போல விமர்சனம் செய்யும் கருணாநிதியின் விமர்சனத்தை புறந்தள்ள வேண்டும்' என்றார். தந்திரத்தால் உயிரிழந்த கொக்கு:கருணாநிதியின் குணத்தை விளக்குவதற்காக, கொக்கு கதை ஒன்றையும் முதல்வர் கூறினார். அவர் கூறியதாவது:குளத்தில் இருந்த மீன்களை, மறைந்திருந்து பிடிப்பதில், சிரமமடைந்த கொக்கு ஒன்று, "விரைவில் குளம் தூர்ந்து விடும். அருகில் உள்ள குளத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்' என்று கூறி, மீன்களை ஏமாற்றி, அருகில் உள்ள பாறையில் வைத்து தின்றது.ஒரு நாள் குளத்தில் இருந்த நண்டு ஒன்று, அந்த குளத்தைப் பார்க்க வேண்டும் என, கொக்கின் கழுத்தில் தன் கொடுக்கின் உதவியுடன் தொங்கியது. பாறையில் ஏராளமான மீன் முள்களைக் கண்டதும், கொக்கின் தந்திரத்தை புரிந்து கொண்ட நண்டு, அதன் கழுத்தை இறுக்கிக் கொன்றது. இந்த கொக்கை போன்று, சுயநலம் கொண்டது தான் தி.மு.க., அரசு.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா, கொக்கு கதை கூறினார். Thanks to - dinamalar |
சல்மானை விட்டுவிட்டு ஷாருக்கானுக்கு அடிபோடும் அசின் Posted: 13 Feb 2012 07:51 PM PST சல்மானை விட்டுவிட்டு ஷாருக்கானுக்கு அடிபோடும் அசின் கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமீர் கான் ஜோடியாகி பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அசின். அம்மணி பாலிவுட் பக்கம் போனதில் இருந்தே தென்னிந்தியாவை மறந்துவிட்டார். அங்கு அவர் சல்மான் கான், அஜய் தேவ்கன் போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடி்ததுவிட்டார். தற்போது ஹவுஸ்புல் 2 என்ற படத்தில் அக்ஷய் குமார் மற்றும் போல் பச்சன் படத்தில் அபிஷேக் பச்சனுடன் ஜோடி சேர்நதுள்ளார். பாலிவுட்டில் உள்ள பெரிய ஹீரோக்களுடன் நடித்தாகிவிட்டது. ஆனால் இன்னும் 'சக்கவர்த்தி' ஷாருக்கானுடன் டூயட் பாடவில்லையே என்று அசினுக்கு ஏக்கம். இந்நிலையில் சஜித் நாதியத்வாலாவின் 2 ஸ்டேட்ஸ் படத்தில் அசின் ஷாருக்கானுடன் ஜோடி சேர்கிறார் என்று கூறப்படுகின்றது. பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தின் நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறதாம். சல்மான் கானுடன் காதல், திருமணம் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டவர் அசின். இந்நிலையில் சல்மானின் வைரியான ஷாருக்குடன் நடிக்கப் போகிறார். இதனால் இனியும் சல்மான் அசினுக்கு சப்போர்ட் பண்ணுவாரா என்பது தான் பலரது கேள்வி. அதேசமயம் ஷாருக் கான், தற்போது சல்மானின் முன்னாள் காதலியான கத்ரீனா கைபுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. |
அவர் பேச்சை எடுக்காதே... அமலா பால் மீது ஓவியா கடுப்பு Posted: 13 Feb 2012 07:50 PM PST அவர் பேச்சை எடுக்காதே... அமலா பால் மீது ஓவியா கடுப்பு அமலா பால் பற்றி அவரிடம் யாராவது பேசினாலே, என்கிட்ட அவரைப் பற்றி பேசாதீங்க என்று பொறிந்து தள்ளுகிறார். அம்மணி இவ்வளவு கோபபப்டும்படி 'மைனா' என்ன செய்ததோ தெரியவில்லை. சரி ஓவியாவுக்கு தான் அமலா மீது கடுப்பு என்றால் மலையாளத் திரையுலகில் உள்ள பல கதாநாயகிகளுக்கும் 'மைனாவை' சுத்தமாகப் பிடிப்பதில்லையாம். அவர் பெயரைச் சொன்னால் கூட பலரது முகங்களில் எள்ளும், கொள்ளும் வெடிக்கிறது. அமலாவைப் பற்றி பேசுவதென்றால் இடத்தை காலி செய்யுங்கள் என்று கூறிவிடுகிறார்களாம். இப்படி மலையாள நாயகிகள் சக நாயகியான அமலா பாலை வெறுப்பது ஒரு புறம் இருக்க டோலிவுட்டில் இன்னும் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நடிகை அனுஷ்காவுக்கு அமலா பால் என்றால் ரொம்ப இஷ்டம். தெய்வத் திருமகளில் நடித்ததில் இருந்தே இருவரும் மிகவும் நெருங்கியத் தோழிகளாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் தன்னால் நடிக்க முடியாத வாய்ப்பு ஏதாவது வந்தால், அதை அமலா பாலுக்கு ரெக்கமன்டேஷன் செய்கிறாராம் அனுஷ்கா. ஒருத்தொருக்கொருத்தவர் இப்படித்தான் ஒத்தாசையா இருக்கணும்...! |
Posted: 13 Feb 2012 07:26 PM PST Dinakaran E-paper 14-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 14th february 2012 Download lInk |
வெடித்தது ! ஸ்டாலின்-வீரபாண்டி ஆறுமுகம் மோதல்! Posted: 13 Feb 2012 12:27 PM PST வெடித்தது ! ஸ்டாலின்-வீரபாண்டி ஆறுமுகம் மோதல்! .மு.க., இளைஞர் அணியில், சீரமைப்பு செய்யும் பணியை ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். "35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இளைஞர் அணியில் உறுப்பினராக இருக்க வேண்டும். மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாநில அளவிலான பொறுப்பில் இருப்பவர்கள் மட்டும், 40 வயது வரை இருக்கலாம். மற்றவர்கள் கட்சி அமைப்புக்கு செல்ல வேண்டும்' என, புதிய விதிகளை உருவாக்கி, மாவட்டம் வாரியாக இளைஞர் அணி நிர்வாகிகளை ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்து வருகிறார்.இதற்காக, ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, இளைஞர் அணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர் காணல்களையும் ஸ்டாலின் நடத்துகிறார். இந்நிலையில், சேலம் மாவட்ட இளைஞர் அணிக்கு நிர்வாகிகளைத் தேர்வு செய்வதில், ஸ்டாலினுக்கும், வீரபாண்டி ஆறுமுகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எச்சரிக்கை அறிவிப்பு:சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை, ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்வதற்கு வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட அமைப்புகளுக்கு அவரே நிர்வாகிகளை தேர்வு செய்து, பட்டியலை தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.இதில், கடுங்கோபமடைந்த ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம் மீது கருணாநிதியிடம் புகார் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எச்சரிக்கை விடுத்து, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான, "முரசொலி'யில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் கூறியுள்ளதாவது:தி.மு.க., தலைமையின் சார்பில், கழகப் பொருளாளர் ஸ்டாலின், மாவட்டங்கள் அளவில் இளைஞர் அணிக்கு உறுப்பினர்களைச் சேர்த்து, நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். இந்நிலையில், இளைஞர் அணி உள்ளிட்ட பிற அணிகளுக்கு சேலம் மாவட்ட அமைப்பே நிர்வாகிகளை தேர்வு செய்வது, கட்சித் தலைமையின் அனுமதி பெறாமல்செய்வதாகும். இது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகும்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.வலுக்கிறது எதிர்ப்பு:இதில், திருப்தியடையாத ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென கருணாநிதியிடம் வற்புறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, கருணாநிதி தலைமையில் அறிவாலயத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கட்சித் தலைமை அறிவிப்பு செய்த பின்னரும், இளைஞர் அணிக்கு நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்ந்தால், வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.கூட்டம் நடந்தது பற்றி, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இளைஞர் அணி உள்ளிட்ட அணிகளுக்குநிர்வாகிகளை தேர்வு செய்வதை வீரபாண்டி ஆறுமுகம் நிறுத்திவிடுவார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி அவரின் செயல்பாடு இருக்காது' எனக் கூறினார். விண்ணப்பம் வினியோகம்:சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று தி.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாகக் குவிந்தனர். காலை, 10.30 மணியளவில், கட்சி அலுவலகம் வந்த வீரபாண்டி ஆறுமுகம், வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றார். புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களையும், கட்சி நிர்வாகிகளிடம் அவர் வினியோகித்தார்.ஆனால், நேர்காணல் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த கட்சியினர் பலர் ஏமாற்றமடைந்தனர்.மனதை புண்படுத்தியுள்ளது: இதற்கிடையே, கட்சித் தலைமையின் எச்சரிக்கை நோட்டீஸ், மனதை புண்படுத்தி விட்டதாக வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்; இதுகுறித்து, அவர் கூறியதாவது:இளைஞர் அணி உள்ளிட்ட கட்சியின் அணிகளுக்கு மாவட்ட அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்து, கட்சித் தலைமைக்கு அனுப்ப, தலைமை அறிவித்தது. இந்த முறை, இளைஞர் அணிக்கு ஸ்டாலினே நேரடியாக நிர்வாகிகளை தேர்வு செய்வதாக, அறிவிப்பு செய்து, மாவட்ட அளவில் கூட்டங்களை நடத்தி வருகிறார்.சேலம் மாவட்டத்தில் இளைஞர் அணியில் சேர, பலர் மாவட்ட அமைப்புக்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்த தபால்களை ஒவ்வொன்றாகப் பார்த்து, ஸ்டாலின் சேலம் வரும் போது கொடுக்க எடுத்து வைத்துள்ளோம். இதை தவறாக புரிந்து கொண்டு, இளைஞர் அணி நிர்வாகிகளை தன்னிச்சையாக நானே தேர்வு செய்வதாக, "முரசொலி'யில் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இது, மனதை புண்படுத்தியுள்ளது. இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.style="font-weight: bold;">ஸ்டாலின் படம் மிஸ்ஸிங்:சமீபத்தில், சேலத்தில் நடந்த, தாரமங்கலம், தி.மு.க., பிரமுகர் இல்ல திருமண விழா மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், சேலம் வந்திருந்தார். அவர் வருகையையொட்டி, மாவட்ட தி.மு.க., சார்பில் வைக்கப்பட்ட பெரும்பாலான பேனர்களில், ஸ்டாலின் படம் இடம்பெறவில்லை. அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம், வீரபாண்டி ஆறுமுகம் மகன், ராஜா ஆகியோரது படம் மட்டுமே இருந்தது. இது, ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிரான அணியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: பொதுக் குழுவுக்கு பின், வீரபாண்டி ஆறுமுகத்தின் செயல்பாடுகள் சரியில்லை. தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில், ஸ்டாலின் படம் இல்லை. வீரபாண்டி ஆறுமுகத்தின் படமும், அவருடைய மகன் படமும் உள்ளது. சேலத்தில், தனியாக ஒரு தி.மு.க.,வை அவர்கள் நடத்தி வருகின்றனர். சேலத்தில், தி.மு.க., இல்லை, "வீரபாண்டி ஆறுமுகம் தி.மு.க.,' என்ற கட்சி தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் வெளிப்படையாகக் கூறினர். Thanks to : Dinamalar |
ஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது Posted: 13 Feb 2012 12:21 PM PST ஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது சென்னை, அசோக்நகர் காமராஜர் சாலையில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் காதர்மொய்தீன், 40. கடையை ஒட்டிய வீட்டில் உள்ள, 14 வயதுள்ள இரு சிறுமிகளை அழைத்து, ஆபாச படம் காட்டியதோடு, அவர்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதற்கு, அதே வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் ராஜேஸ்வரி, 45 என்பவர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, காதர்மொய்தீன், ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. |
எங்க காதலுக்கு இளையராஜா தான் காரணம்! சொல்கிறார் பிரசன்னா!! Posted: 13 Feb 2012 12:04 PM PST எங்க காதலுக்கு இளையராஜா தான் காரணம்! சொல்கிறார் பிரசன்னா!! தற்போது கல்யாணம் மண்டபம் உள்ளிட்ட விஷயங்கள் வரை பேச்சுவார்த்தை நடக்கிறது. சினேகா இப்போது விடியல், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தபடங்களை எல்லாம் முடிக்க 2-3 மாதம் ஆகும். அதன்பிறகு திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார். சரி, காதலர் தினத்தில் சினேகாவுக்கு என்ன பரிசு கொடுக்க போகிறீர்கள் என்று கேட்டால், அன்றைய தினம் அவருக்கு சூட்டிங் இருப்பதால் இன்றே ஒரு அழகான வாட்ச்சை பரிசாக கொடுக்க போகிறேன் என்கிறார். அப்படின்னா சினேகா கையில் எப்போதும் பிரசன்னா தான்...! |
நகைக்கடையை திறக்க வந்த ஜான் ஆபிரகாம் விரலைக் கடித்த ரசிகை! Posted: 13 Feb 2012 12:02 PM PST நகைக்கடையை திறக்க வந்த ஜான் ஆபிரகாம் விரலைக் கடித்த ரசிகை! பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கர்நாடக மாநிலம் மங்களூரில் நகைக்கடை ஒன்றை நேற்று திறந்து வைக்க வந்தார். அவர் வருவது அறிந்த ரசிகர்கள் கடை முன்பு கூடிவிட்டனர். ஜான் கடையைத் திறந்து வைத்துவிட்டு அந்த வளாகத்தை சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவரைப் பார்க்க முந்தியடித்தனர். அப்போது ஒவ்வொரு ரசிகரும் ஜானுடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். அவரும் சளைக்காமல் கைகுலுக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று ஒரு ரசிகை அவரது விரலைப் பிடித்து கடித்துவிட்டார். உடனே அவர் வலி தாங்காமல் கத்திவிட்டு அந்த ரசிகையை தள்ளிவிட்டார். இதையடுத்து அவரது பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அங்கிருந்து சென்றனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் அநத ரசிகை ஹைய்யா, நான் ஜான் ஆபிரகாமை தொட்டுவிட்டேனே என்று குஷியாக கத்திவிட்டு ஓடினார். |
ஏட்டய்யா கை ரொம்ப நீளம்...மாணவனிடம் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட்! Posted: 13 Feb 2012 11:59 AM PST ஏட்டய்யா கை ரொம்ப நீளம்...மாணவனிடம் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட்! இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு அண்ணாநகர் பகுதியில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒரு பள்ளி மாணவனிடம் விசாரணை நடத்தியுள்ளார். தமது பெண் நண்பரை பார்த்துவிட்டு வருவதாக கூறிய அவனை மிரட்டி ரூ 1000 லஞ்சம் வாங்கியுள்ளார். இந்த தகவல் மதுரை மாநகர ஆணையாளர் கண்ணப்பனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு துணை ஆணையாளர் ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டார். ஏட்டு சிவக்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மாணவனிடம் லஞ்சம் வாங்கியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார் ஏட்டு சிவக்குமார். இதனையடுத்து, ஏட்டு சிவக்குமாரை சஸ்பென்ட் செய்து மதுரை காவல் ஆணையாளர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். |
மதுரை டூ சென்னை... 'நடுவானில்' ஸ்டாலின், விஜயகாந்த், கார்த்தி சிதம்பரம் ரகசிய ஆலோசனை! Posted: 13 Feb 2012 11:55 AM PST மதுரை டூ சென்னை... 'நடுவானில்' ஸ்டாலின், விஜயகாந்த், கார்த்தி சிதம்பரம் ரகசிய ஆலோசனை! அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பார் ஒரு படத்தில் கவுண்டமணி. அதேபோல தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் நடக்கும். கொள்கை, லட்சியம், கோட்பாடு, குறிக்கோள் என்று எதுவும் அரசியலுக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் கூடிக் கொள்வார்கள், தேவையில்லாவிட்டால் கூச்சலிட்டுக் கொண்டு பிரிந்து கொள்வார்கள். யார் யாருடன் சேருகிறார்கள் என்பதெல்லாம் இங்கு முக்கியமே இல்லை. அதைத்தான் தமிழக அரசியல் களம் கடந்த பல காலமாகவே சந்தித்துக் கொண்டிருக்கிறது. திமுகவிலிருந்து விரட்டப்பட்ட வைகோ மதிமுகவை ஆரம்பித்தார். பின்னர் அவரே திமுகவுடன் போய்க் கூட்டணி வைத்தார். பாமகவின் கூட்டணி வரலாறும், அதற்கு அது உதிர்த்த தத்துவ முத்துக்களும் மக்களால் மறக்க முடியாதது. அதேபோலத்தான் காங்கிரஸின் கூட்டணிகளும், தாவல்களும். தத்துவ ரீதியாக வலுவானவர்கள் என்று கூறப்படும் கம்யூனிஸ்டுகளும் கூட மாறி மாறி கூட்டணி மாறித்தான் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் புதிதாக ஒரு கூட்டணி தாவல் கட்சி தமிழக அரசியல் வானில் உதயமாகியுள்ளது. அது தேமுதிக. தனித்தே போட்டியிடுவோம், அதுதான் எங்களது லட்சியம், கொள்கை என்றெல்லாம் கூறி தனியாகவே போட்டியிட்டும் வந்த கட்சிதான் தேமுதிக. ஆனால் அந்தக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது நடுநிலை வாக்காளர்கள் அத்தனை பேரும் அதிர்ந்துதான் போனார்கள். ஆனால் இந்தக் கூட்டணி 6 மாதங்களுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு சட்டசபையில் வைத்து இந்த கூட்டணியை சிதறு காய் போல உடைத்தெறிந்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா. மேலும் சங்கரன்கோவிலில் ஒண்டிக்கு ஒண்டி நிற்கத் தயாரா என்றும் சவால் விட்டார் ஜெயலலிதா. இதனால் தேமுதிக பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தனித்துப் போட்டியிட்டாலும் குறைந்தது 3வது இடத்தையாவது பெற்றாக வேண்டிய நிலையில் அந்தக் கட்சியும், கடந்த முறை வாங்கியதை விட அதிக அளவில் வெல்வதோடு மட்டுமல்லாமல், மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தையும் காட்டியாக வேண்டிய நிலையில் அதிமுகவும் உள்ளது. இந்த நிலையில் புதிய கூட்டணிக்கான வெளிச்சக் கீற்றுகள் அரசியல் வானில் தென்படத் தொடங்கியுள்ளது. அந்த மடம் இல்லாவிட்டால் சந்தை மடம் என்பது போல அதிமுக இல்லாவிட்டால் திமுக என்ற கூட்டணி தர்மத்திற்கேற்ப தற்போது திமுகவை நோக்கி தேமுதிக வேகமாக நகரத் தொடங்கியுள்ளதாக கூறுகிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில் நேற்று மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த தனியார் வி்மானத்தில் விஜயகாந்த்தும், ஸ்டாலினும், கார்த்தி சிதம்பரமும் ஒன்றாகப் பயணித்துள்ளனர். விமான பயணத்தின்போது மூவரும் கூடி ரகசியமாக பேசியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. தேமுதிக கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்துக்காக விஜயகாந்தும், இளைஞரணி உறுப்பினர் சேர்க்கைக்காக மு.க. ஸ்டாலினும் விருதுநகர் சென்றிருந்தனர். இருவரும் மாலையில் தனியார் விமானம் மூலம் சென்னைக்குத் திரும்ப மதுரை வி்மான நிலையம் வந்தனர். முதலில் ஸ்டாலின் வந்து விட்டார். பின்னர்தான் விஜயகாந்த் வந்தார். ஸ்டாலின் வந்திருப்பதை கட்சிக்காரர்கள் அவருக்குச் சொல்ல, நேராக ஸ்டாலினிடம் சென்று பேசினாராம் விஜயகாந்த். அவரும் என்ன கேப்டன் எப்படி இருக்கீங்க என்று அன்புடன் பேசினாராம். இருவரும் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனராம். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் வேறு யாரும் இல்லையாம். பின்னர் விமானம் கிளம்ப சில நிமிடங்கள் இருந்தபோது கார்த்தி சிதம்பரம் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் விமானத்தில் இந்த மூன்று பேரும் சந்தித்துப் பேசினராம். நிச்சயமாக அவர்கள் அரசியல் பேசியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. விமான பயணத்தின்போது மூன்று பேருமே இடைவிடாமல் பேசிக் கொண்டிரு்ந்ததாகவும், ஊர் வந்து இறங்கியபோது மூவருமே இணை பிரியா நண்பர்கள் போல ஒருவருக்கொருவர் விடை பெற்றுக் கொண்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் சாராம்சம் என்னவாக இருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை. நிச்சயமாக சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான பூர்வாங்க ஆலோசனையாகவே இதை பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மேலும் ஏற்கனவே கூட்டணியாக உள்ள திமுக, காங்கிரஸுடன் தேமுதிகவும் எதிர்காலத்தில் இணைந்து செயல்படும் என்றும் திமுக, காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கையுடன் கூறத் தொடங்கியுள்ளனர். தங்களது கூட்டணியின் பலத்தை சங்கரன்கோவிலில் பரீட்சித்துப் பார்க்கவும் இவர்கள் முயலலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது வேட்பாளரை இவர்கள் களம் இறக்குவார்களா அல்லது தேமுதிகவை களத்தில் இறக்கி அக்கட்சிக்கு திமுகவும், காங்கிரஸும் ஆதரவு தருமா என்ற எதிர்பார்ப்பும் ஏகமாக உள்ளது. |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |