TV SHOWS | MOVIES | TV SERIALS |
- பெண்ணாக மாற விபரீதமாக முயற்சித்த 5 வயது சிறுவன்!
- பாலகிருஷ்ணா படத்தில் 'ப்ளூ' பிகினியில் வரும் லக்ஷ்மி ராய்!
- நாங்க உங்க கூட இருக்கோம், டோணிக்கு மனைவி ஆதரவு
- Athipookal 22-02-2012 | Sun Tv Athipookal Serial 22nd february 2012
- Ilavarasi 22-02-2012 | Sun Tv Elavarasi Serial 22nd february 2012
- Thiyagam 22-02-2012 | Sun Tv Thiyagam Serial 22nd february 2012
- Mutharam 22-02-2012 | Sun Tv Muthaaram Serial 22nd february 2012
- Vellai Thamarai 22-02-2012 | Sun Tv Vellai Thamarai Serial 22nd february 2012
- Uravugal 22-02-2012 | Sun Tv Uravugal Serial 22nd february 2012
- முற்றுகிறது மோதல்-சுழற்சி முறை குறித்த டோணியின் பேச்சுக்கு ஷேவாக் அதிருப்தி, எதிர்ப்பு
- நாடு முழுவதும் நாளை சினிமா காட்சிகள் ரத்து!
- Kasturi 22-02-2012 | Sun Tv kasthuri Serial 22nd february 2012
- சிறுதாவூர் பங்களாவில் வைத்து ஜெயலலிதா, சசி சந்திப்பு
- துணை நடிகைகளை வைத்து விபச்சாரம்: பிரபல அம்மா நடிகை கைது!
- டூரிஸ்ட் கார் உரிமையாளர்கள் புகாரால் நடிகை பானுப்ரியா பயணித்த கார் பறிமுதல்!
- எங்க வீட்டுக்கு வந்து கூட்டணிக்காக காத்திருந்த 3 அமைச்சர்கள்-பிரேமலதா 'குண்டு'!
- Maruthani 22-02-2012 | Sun tv Marudhaani 22nd february 2012
- Junior Vikatan 26-02-2012 | Free Junior Vikatan PDF This week | Junior Vikatan 26th february 2012 ebook
- Dinakaran E-paper 22-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 22nd february 2012
- மர்ம கும்பல், 38 கிலோ தங்கம், வைர நகைகளை திருடிச் சென்றனர்.
- Dinamalar E-paper 22-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 22nd february 2012
- ஆசையா வர்றப்ப போரடிக்குதுன்னு சொல்லாதீங்க!
- சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது, சட்டசபையில் பேச வாய்ப்பில்லை-தேமுதிக கண்டனம்
- Rasipalan 21-02-2012 to 05-03-2012-Jothida rathna K.B. Vidyadharan
- Jaya tv Shows Kadhambari Serial 21-02-2012
பெண்ணாக மாற விபரீதமாக முயற்சித்த 5 வயது சிறுவன்! Posted: 22 Feb 2012 01:19 AM PST பெண்ணாக மாற விபரீதமாக முயற்சித்த 5 வயது சிறுவன்! லண்டனை சேர்ந்தவர் டரென் அவெரி(41). இவரது மனைவி தெரசா(32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் ஷாஜெரி ஜாக் ஏவெரி(5), இளைய மகன் பெயர் அலெக்ஸ். இதில் ஜாக் ஏவெரிக்கு 3 வயதான போது, அவனது செயல்பாடுகளில் மாற்றம் தெரிந்தது. தான் ஒரு பெண் என்று கூறி பெண் குழந்தைகளுக்கு பிடித்த ஆடைகள், விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றின் மீது விருப்பம் காட்டினான். மேலும் பெண் குழந்தைகளுடன் இருக்கவே அதிகம் விரும்பினான். ஜாக் ஏவெரியின் போக்கை ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்து கொண்டு, பெற்றோர் போக போக வருத்தம் அடைய துவங்கினர். இந்த நிலையில் ஜாக் ஏவெரி வளர வளர பெண்களுக்கான செயல்பாடுகளே அவனிடம் தெரிந்தது. இதன் உச்சக்கட்டமாக தனது தாயிடம் நான் ஒரு பெண் குழந்தை என்று கூறி, தனது பிறப்புறுப்பை அறுக்க முயன்றான். இதில் பயந்து போன ஜாக் ஏவெரியின் பெற்றோர், அவனை உடனடியாக ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றனர். மருத்துவ சோதனையில் ஜாக் ஏவெரிக்கு ஏற்பட்டுள்ள பிறவிக் குறைப்பாட்டால், அவனது மூளை அவனை ஒரு பெண்ணாக நினைக்க வைப்பது தெரிய வந்தது. இதையடுத்து பெண் குழந்தைகளை போல முடியை நீளமாக வளர்த்து கொண்டு, பெண்களை போல உலா வருகின்றான். ஜாக் ஏவெரியின் நடவடிக்கைகளுக்கு அவனது பெற்றோரும் வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்து உள்ளனர். தற்போது அவன் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளான். அதன் ஒரு பகுதியாக, ஜாக் ஏவெரி படிக்கும் பள்ளியில் ஆண்-பெண் பாலருக்கும் பொதுவான கழிவறையே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றான். இது குறித்து ஜாக் ஏவெரியின் தாயார் தெரசா கூறியதாவது, ஜாக் ஏவெரிக்கு 3 வயது முடிந்த நிலையில், திடீரென ஒருநாள் என்னிடம் வந்து நான் ஒரு பெண் குழந்தை என்று கூறினான். ஆனால் அதனை நான் பெரிய பொருட்டாக எண்ணவில்லை. பின்னர் ஒரு தான் ஒரு பெண் என்று கூறி அழுது கொண்டு, தனது பிறப்புறுப்பை அறுக்க முயன்ற போது தான் நிலையின் தீவிரத்தை உணர்ந்தோம் என்றார் Thanks to OneIndia |
பாலகிருஷ்ணா படத்தில் 'ப்ளூ' பிகினியில் வரும் லக்ஷ்மி ராய்! Posted: 22 Feb 2012 01:15 AM PST பாலகிருஷ்ணா படத்தில் 'ப்ளூ' பிகினியில் வரும் லக்ஷ்மி ராய்! தமிழில் நடிக்கையில் போர்த்திக் கொண்டும், தெலுங்கு படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டுவதும் நடிகைகளின் வழக்கமாகிவிட்டது. இதற்கு லக்ஷ்மி ராயும் விதிவிலக்கல்ல. தமிழில் காஞ்சனா, மங்காத்தா ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அதிநாயகடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு லக்ஷ்மி ராய்க்கு கிடைத்துள்ளது. இதனால் அவர் படுகுஷியாகக் காணப்படுகிறார். பரச்சூரி முரளி எழுதி, இயக்கும் இந்த படத்தில் சலோனி, சுகன்யா, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் லக்ஷ்மி ராய் நீச்சல் குளத்தில் இருந்து நீல நிற பிகினியில் வருவது போன்ற காட்சி உள்ளதாம். தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் அனுஷ்காவும், பிரியாமணியும் ஏற்கனவே பிகினியில் வந்து டோலிவுட் ரசிகர்களை அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாகவே லக்ஷ்மி ராய் கவர்ச்சிகரமாகத்தான் வருவார், இப்போது 'ப்ளூ' பிகினியில் வரப் போவதால் ரசிகர்கள் பாடு என்னாகப் போகிறதோ என்ற பெரும் 'பரபரப்பு' ஏற்பட்டுள்ளது. Thanks to OneIndia |
நாங்க உங்க கூட இருக்கோம், டோணிக்கு மனைவி ஆதரவு Posted: 22 Feb 2012 01:10 AM PST நாங்க உங்க கூட இருக்கோம், டோணிக்கு மனைவி ஆதரவு இந்திய அணி்க்கு 2வது முறையாக உலக கோப்பை பெற்று தந்தவர் என்ற புகழ் பெற்றவர் கேப்டன் டோணி. இதன்மூலம் இவருக்கு எண்ணற்ற ரசிகர்களும், வீரர்களின் ஆதரவும் இருந்தது. ஆனால் இன்று டோணிக்கு எதிரான அலை பலமாக வீசத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டோணி அறிமுகப்படுத்திய சுழற்சி முறையிலான வாய்ப்பு முறைக்கு, அணியில் உள்ள மூத்த வீரர்கள் இடையே கடும் அதிருப்தி நிலவுகின்றது. ஏற்கனவே டோணியின் சுழற்சி முறைக்கு பல முன்னாள் இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அணியில் உள்ள வீரர்கள் இடையேயும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, டோணியை கவலை அடைய வைத்துள்ளது. மேலும் நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் தடை பெற்று, பங்கேற்க முடியாமல் போனதால் டோணி மேலும் சோர்வடைந்து உள்ளார். இந்த நிலையில் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம் என்று டோணியின் மனைவி சாக்ஷி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உங்களை யாரெல்லாம் கீழே இழுத்து தள்ள நினைத்தாலும் கவலைப்பட வேண்டாம். அதனை ஒரு பொருட்டாக எண்ணவும் வேண்டாம். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக எப்போதும் உள்ளோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நேரம் வரும் போது அவர்கள் தானாக விலகி போவார்கள் என்று தெரிவித்துள்ளார். Thanks to OneIndia |
Athipookal 22-02-2012 | Sun Tv Athipookal Serial 22nd february 2012 Posted: 22 Feb 2012 01:07 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Ilavarasi 22-02-2012 | Sun Tv Elavarasi Serial 22nd february 2012 Posted: 22 Feb 2012 12:36 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Thiyagam 22-02-2012 | Sun Tv Thiyagam Serial 22nd february 2012 Posted: 21 Feb 2012 11:49 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Mutharam 22-02-2012 | Sun Tv Muthaaram Serial 22nd february 2012 Posted: 21 Feb 2012 11:46 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Vellai Thamarai 22-02-2012 | Sun Tv Vellai Thamarai Serial 22nd february 2012 Posted: 21 Feb 2012 10:51 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Uravugal 22-02-2012 | Sun Tv Uravugal Serial 22nd february 2012 Posted: 21 Feb 2012 10:29 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
முற்றுகிறது மோதல்-சுழற்சி முறை குறித்த டோணியின் பேச்சுக்கு ஷேவாக் அதிருப்தி, எதிர்ப்பு Posted: 21 Feb 2012 10:28 PM PST முற்றுகிறது மோதல்-சுழற்சி முறை குறித்த டோணியின் பேச்சுக்கு ஷேவாக் அதிருப்தி, எதிர்ப்பு ஏற்கனவே டோணிக்கும், ஷேவாக்குக்கும் இடையே பணிப்போர் நடந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் டோணியின் சுழற்சி முறைக்கு ஷேவாக் அதிருப்தி தெரிவித்துள்ளது விரிசலை மேலும் அதிகரித்து வரும் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளது. இந்திய அணியில் உள்ள இளம்வீரர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், மூத்த வீரர்களுக்கு சுழற்சி முறையில் விளையாடும் முறையை கேப்டன் டோணி அறிமுகப்படுத்தினார். இதன்படி அணியில் உள்ள கம்பிர், ஷேவாக், சச்சின் ஆகியோருக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இது மூத்த வீரர்களின் அதிருப்தியையும், கண்டனத்தையும் சம்பாதித்தது. காரணம், சுழற்சி என்ற பேரில் சச்சினையும் உட்கார வைத்து விட்டாரே டோணி என்பதுதான் காரணம். இத்தனைக்கும் சச்சின் இந்தத் தொடரில் இதுவரை பெரிய அளவில் விளையாடவில்லை என்பது வேறு விஷயம். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பத்தரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பேசிய டோணி, மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதால், சுழற்சி முறை அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார். இதனால் மூத்த வீரர்களான சச்சின், ஷேவாக், கம்பிர் ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில், டோணி கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனால் கேப்டனாக பொறுப்பு வகித்த ஷேவாக், டோணியின் சுழற்சி முறையை பின்பற்றாமல், 3 மூத்த வீரர்களும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தார். (இந்த மூன்று பேருமே 55 ரன் சேர்ப்பதற்குள் அவுட்டாகிப் போய் விட்டனர். இவர்களில் அதிகபட்சமாக சச்சின் மட்டும் 29 ரன்கள் சேர்த்தார். ஷேவாக் முட்டை போட்டார், கம்பிர் 22 ரன்கள் எடுத்தார்.) இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷேவாக், டோணியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள அடுத்த உலக கோப்பை தொடருக்கு இளம் வீரர்களை தயார் செய்யும் வகையில், இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்படுவதாக டோணி எங்களிடம் அறிவித்து இருந்தார். ஆனால் மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதாக அவர் எங்களிடம் கூறியதே இல்லை. டோணி மீடியாவில் அப்படி கூறியது ஏன் என்று தெரியவில்லை. அவர் மீடியாவில் கூறியதன் கருத்தும் எனக்கு புரியவில்லை. நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் நான் எப்படி கேட்ச் பிடித்தேன் என்பதை பார்த்தீர்களா? இதேபோல தான் கடந்த 10 பத்து ஆண்டுகளாக பீல்டிங் செய்து வருகின்றேன். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மூத்த வீரர்களின் பீல்டிங்கில் 20 ரன்கள் தவறியதாக டோணி கூறுவது ஏன் என்று தெரியவில்லை. டோணி அணியின் கேப்டன், தலைவர். எனவே இது குறித்து நான் அவரிடம் கேட்க போவதில்லை. அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கேப்டனும், பயிற்சியாளரும் நினைத்தால், அதனை ஏற்க நான் தயாராக உள்ளேன். இதனால் எந்த தடையும் இல்லை. நான் எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ள தயாராக இருக்கின்றேன். ஆனால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தேர்வு செய்யும் 11 அடங்கிய அணிக்கும் மதிப்பு அளிக்கின்றேன். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக எங்களுக்கு சற்று ஓய்வு தருவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். நாங்கள் ஒரு குழுவாக செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கேப்டன் டோணியின் விருப்பதற்கு ஏற்ப அவர் பேசலாம். கடந்த 2 ஆண்டுகளாக டோணி தான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி வருகின்றார். அதில் நாங்கள் திருப்தியாக உள்ளோம். நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் நான் உட்பட பேட்ஸ்மேன்கள் யாரும் பொறுப்புடன் விளையாடவில்லை. எனது பேட்டிங்கில் இன்னும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதிரடியாக விளையாட முயன்று, சில எளிய முறைகளில் அவுட்டாகி விடுகின்றேன். அதற்காக அதிக பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளேன் என்றார். Thanks to OneIndia |
நாடு முழுவதும் நாளை சினிமா காட்சிகள் ரத்து! Posted: 21 Feb 2012 10:23 PM PST நாடு முழுவதும் நாளை சினிமா காட்சிகள் ரத்து! இதுகுறித்து இந்திய திரையுலக சம்மேளன தலைவர் வினோத் கே.லம்பா கூறுகையில், திரையுலகம் ஏற்கனவே ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. ஏறக்குறைய 95 சதவீத படங்கள் தோல்வி அடைகின்றன. 5 சதவீத படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. சினிமாவுக்கு ஏற்கனவே பொழுதுபோக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. எனவே சேவை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். சேவை வரியை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும் இந்திய திரையுலக சம்மேளனம் ஒரு முழுமையான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது. இதற்காக, நாளை (23ம்தேதி) நாடு தழுவிய அளவில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும். ஸ்டூடியோக்கள் மூடப்படும். படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். திரையுலகம் சம்பந்தப்பட்ட அத்தனை அமைப்புகளும் நாளை ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன, என்றார். Thanks to Tamil.yahoo |
Kasturi 22-02-2012 | Sun Tv kasthuri Serial 22nd february 2012 Posted: 21 Feb 2012 10:21 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
சிறுதாவூர் பங்களாவில் வைத்து ஜெயலலிதா, சசி சந்திப்பு Posted: 21 Feb 2012 10:19 PM PST சென்னை: போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேறிய நிலையில் கடந்த 16ம் தேதி சசிகலாவை சிறுதாவூரில் உள்ள பங்களாவுக்கு வர வைத்து அவரிடம் முக்கியமாகப் பேசியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறப்படுகிறது. அந்த சந்திப்பின்போது நடராஜன் கைது குறித்தும் ஜெயலலிதா முன்கூட்டியே தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி தனது நெருங்கிய தோழி சசிகலா உள்ளிட்ட 12 பேரை அதிமுகவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். ஆனால் அதற்கு முன்னதாகவே டிசம்பர் 10ம் தேதியே சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். டிசம்பர் 12ம் தேதி சசிகலாவை யாரும் சந்திக்கக் கூடாது, பேசக் கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன், உறவினரான கோவையைச் சேர்ந்த ராவணன் போன்றவர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்தது முதல் சசிகலாவின் உறவினர்கள் அதிகார மையங்களாக மாறி கோடி கோடியாக வசூலித்ததும், சில பல சொத்துக்களை வாங்கி குவித்ததும் உளவுத்துறை மூலமாக ஜெயலலிதா தெரிந்து கொண்டதால் தான் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகின்றது. இது உண்மையா ... இப்படியெல்லாம் நடக்குமா ? இல்லை இது நாடகமா… எப்படியும் மூன்று அல்லது ஆறு மாதங்களில் மீண்டும் சேர்ந்துவிடுவார்களா ? அப்படி சேர்ந்துவிட்டால் நாம் என்ன செய்வது?என்று அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றனர். இல்லை, இல்லை, இது நிரந்தரமான பிரவு தான். சந்தேகம் வேண்டாம். சசிகலா மீண்டும் முதல்வர் ஜெயலலிதாவோடு சேரவே முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் முதல்வர் என்று எல்லாரும் பேசி வருகின்றனர். இந்த நிலையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் கடந்த 16ம் தேதி மாலை சிறுதாவூரில் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகின்றது. அப்போது இளவரசியும் உடன் இருந்தாராம். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. அப்போது அங்கு சோகம், வேகம், பாசம், என பல முக பாவனைகள் கலந்து சம்பவங்கள் நடைபெற்றதாக அதிமுக வட்டாரங்களில் இருந்தே தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது நடராஜன் கைது குறித்து ஜெயலலிதா கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பின்னர்தான் பெங்களூர் கோர்ட்டில் சசிகலா ஆஜராகி கண்ணீர் வடித்தபடி தானே அத்தனைக்கும் பொறுப்பு என்று வாக்குமூலம் அளித்தார். தற்போது போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேறினாலும், அவரது அண்ணி இளவரசி ஜெயலலிதாவுடன் இன்னும் தொடர்பில் உள்ளதாகவே கூறப்படுகின்றது. இளவரசி மூலமாகவே பல தகவல்கள் ஜெயலலிதா வசம் சென்றதாக ஒரு தகவல் உண்டு. இளவரசி மூலமே பல தகவல்கள் போயஸ் கார்டனுக்கு அப்டேட் செய்யப்படுகின்றதாம். தற்போது இளவரசி கொடியே போயஸ் கார்டனில் பறப்பதாகவும் கூறப்படுகின்றது. சசிகலா ஆதரவு அமைச்சர்கள் பலர் தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்ள ரகசியமாக இளவரசியின் உதவியை நாட ஆரம்பித்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஆனால் ஏற்கனவே சசிகலா விவகாரத்தில் பட்ட சூட்டால், இளவரசிக்கு அந்த அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா இடம் தர மாட்டார் என்றும் திடமாக பேசப்படுகிறது. Thanks to OneIndia |
துணை நடிகைகளை வைத்து விபச்சாரம்: பிரபல அம்மா நடிகை கைது! Posted: 21 Feb 2012 10:17 PM PST துணை நடிகைகளை வைத்து விபச்சாரம்: பிரபல அம்மா நடிகை கைது! சென்னை நகரில் ஞாயிற்றுக்கிழமைதோறும், ஒரு விபசார கும்பல் கிண்டி ரேஸ் கிளப் அருகே ரகசியமாக காரில் வந்து, வாடிக்கையாளர்களை அங்கு வரவழைத்து, ரேட் பேசி நட்சத்திர ஓட்டலில் உல்லாசம் அனுபவிப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிரபல அம்மா நடிகை சோபனா (வயது 40) இந்த விபசார கும்பலுக்கு தலைமை ஏற்று நடத்துவதாகவும் தெரிய வந்தது. இந்த விபசார கும்பலை மடக்கிப்பிடிக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர், விபசார தடுப்பு உதவி கமிஷனர் கிங்ஸ்லின் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையிலான தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். விபசார கும்பல் தலைவியாக செயல்பட்ட அம்மா நடிகையை போலீசார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். கம்ப்யூட்டர் என்ஜினீயர் பேசுவதுபோல பேசினார்கள். வாடிக்கையாளர் கிடைத்த மகிழ்ச்சியில் அம்மா நடிகை சோபனா, பல உண்மைகளைக் கூறிவிட்டார். பிரபலமான படங்களில் துணை நடிகை வேடத்தில் நடித்துள்ள அக்கா தங்கை நடிகைகள் இருவரது பெயரைச் சொல்லி, அவர்களை அழைத்து வருவதாக சொன்னார். பெரிய தொகையையும், சோபனா கேட்டார். அதற்கு ஒப்புக்கொண்டு மாறுவேட போலீசார் வாடிக்கையாளர் போல கிண்டி ரேஸ் கிளப் அருகே காரில் காத்திருந்தனர். 3 மணி நேரம் காத்திருந்த பிறகு அம்மா நடிகை சோபனா மட்டும் முதலில் காரில் வந்தார். அடுத்து 1 மணி நேரம் கழித்து அக்கா தங்கை துணை நடிகைகள் இருவரும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்தவுடன் மாறுவேட போலீசார் சோபனாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அடுத்து அக்கா தங்கை இருவரும் பிடிபட்டனர். உடனடியாக நீதிமன்றத்தில் சோபனா ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மறைந்த பழம்பெரும் வில்லன் நடிகரின் உறவினர் என்றும் போலீசார் தெரிவித்தனர். அக்கா தங்கை துணை நடிகைகள் இருவரும் பாதிக்கப்பட்ட பெண்களாக கருதப்பட்டு, மைலாப்பூர் அரசு பெண்கள் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இதேபோல, சூளைமேடு பகுதியில் போலீசார் நடத்திய வேட்டையில் சாந்தி என்ற துணை நடிகையும், ஜெயராஜ் மோசஸ் என்ற புரோக்கரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்தும் 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டு, மைலாப்பூர் அரசு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Thanks to OneIndia |
டூரிஸ்ட் கார் உரிமையாளர்கள் புகாரால் நடிகை பானுப்ரியா பயணித்த கார் பறிமுதல்! Posted: 21 Feb 2012 10:10 PM PST டூரிஸ்ட் கார் உரிமையாளர்கள் புகாரால் நடிகை பானுப்ரியா பயணித்த கார் பறிமுதல்! பொள்ளாச்சி: வாடகைக் காரை எடுக்காமல் தனியாருக்கு சொந்தமான வாகனத்தை குத்தகைக்கு எடுத்ததால், நடிகை பானுப்ரியா பயணித்த காரை பறிமுதல் செய்தனர் ஆர்டிஓ அலுவலகத்தினர்.பொள்ளாச்சி, ஆனைமலை போன்ற நகரங்களில் டூரிஸ்ட் கார் வைத்திருப்போரும் போலீஸ் - ஆர்டிஓ அலுவலகத்தினரும் கிட்டத்தட்ட கூட்டாளிகள் போல செயல்படுகின்றனர். இங்கே காருக்கு வாடகையாக பெரும் தொகையை நிர்ணயித்து, வருகின்ற பயணிகளை அலற வைக்கின்றனர். குறிப்பாக சினிமாக்காரர்கள் வருகிறார்கள் என்றாலே, பொள்ளாச்சி, ஆனைமலை டூரிஸ்ட் கார் டிரைவர்கள் ஏக குஷியாகிவிடுவார்கள். இவர்களிடம் கேட்ட தொகை கிடைக்கும் என்பதுதான் காரணம். இதனால் பெரும்பாலான பயணிகள், தெரிந்தவர்கள் மூலம் வீட்டு உபயோகத்துக்கு உள்ள கார்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சினிமாகாரர்களுக்கு இந்தப் பகுதியில் தெரிந்த புரோக்கர்கள், சினிமா உதவியாளர்கள் அதிகம் இருப்பதால், தனியார் வாகனங்களை குறிப்பிட்ட தொகைக்குப் பேசி நாள்கணக்கில் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த டூரிஸ்ட் கார் உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெகநாதனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் பொள்ளாச்சி பகுதிக்கு படப்பிடிப்புக்கு வருபவர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு வாடகை காரை பயன்படுத்துவதில்லை. வாடகை குறைவாக இருக்கிறது என்பதற்காக சிலரின் சொந்த காரை வாடகைக்கு எடுத்து செல்கிறார்கள். இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறி இருந்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெகநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஆய்வாளர் சத்திய மூர்த்தி மற்றும் செல்வி ஆகியோர் நேற்று பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவருக்கு சொந்தமான கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் பிரபல நடிகை பானுப்பிரியா இருந்தார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த அவர் வாடகை காரை எடுத்துச் செல்லாமல், தெரிந்த ஒருவருக்கு சொந்தமான காரை குறைந்த வாடகைக்கு எடுத்த சென்றது தெரிய வந்தது. உடனே நடிகை பானுப்பிரியா வந்த காரை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பானுப்பிரியாவை வேறு வாடகைக் காரில் ஏற்றி பொள்ளாச்சியில் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு அனுப்பி வைத்தனர். 'இது ரொம்ப மோசம். பயணம் என்பது அவரவர் வசதிப்படிதான் இருக்க வேண்டும். வாடகைக் கார் - வேன் வைத்திருப்பவர்கள் வசதிக்கேற்றபடிதான் பயணிகள் வரவேண்டும், வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றால் என்ன அர்த்தம்', என்று கொதித்தார் பானுப்ரியா. யார் கண்டார்கள்... இனி பொள்ளாச்சி, ஆனைமலை, டாப் ஸ்லிப் பகுதிக்கு செல்வோர் சொந்தக் காரில் வந்தால்கூட, அதை ஓரமாக நிறுத்திவிட்டு வாடகைக் காரில்தான் போக வேண்டும் என்பார்கள் போலிருக்கிறதே! Thanks to OneIndia |
எங்க வீட்டுக்கு வந்து கூட்டணிக்காக காத்திருந்த 3 அமைச்சர்கள்-பிரேமலதா 'குண்டு'! Posted: 21 Feb 2012 10:06 PM PST எங்க வீட்டுக்கு வந்து கூட்டணிக்காக காத்திருந்த 3 அமைச்சர்கள்-பிரேமலதா 'குண்டு'! நேற்று நடந்த தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் வழக்கம் போல உச்சஸ்தாணியில் கோபாவேசமாக பேசினார். நரம்பு புடைக்க அவர் பேசிய பேச்சின்போது அதிமுகவையும், திமுகவையும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்தார். அவர் பேசுகையில், எல்லா இடைத் தேர்தலையும் தே.மு.தி.க. சந்தித்து வருகிறது. ஆனால் 5 ஆண்டுகளாக இடைத் தேர்தலையே சந்திக்காதவர்கள்தான் நம்மைப் பார்த்து திராணி இருக்கிறதா என்று கேட்கின்றனர். தே.மு.தி.க.வோடு கூட்டணி அமைப்பதற்காக அ.தி.மு.க.வின் மூன்று முக்கிய நிர்வாகிகள், இப்போது அமைச்சர்களாக இருப்பவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து காத்திருந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய முழு விவரத்தையும் பதிவு செய்து உள்ளோம். தேவைப்படும்போது அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம். தே.மு.தி.க. போன்று எதையும் தைரியமாகச் சந்திக்கக்கூடிய கட்சி தமிழகத்தில் இல்லை. முன்பு நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தேர்தலின் போதெல்லாம் தி.மு.க. இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று சவாலாகப் பேசி வந்தவர் மு.க.அழகிரி. இப்போது வாக்கு வித்தியாசத்தைப் பற்றிப் பேசாமல் வெற்றி பெறுவோம் என்று மட்டும் கூறுகிறார். தே.மு.தி.க.வுக்காக எங்களின் பல்வேறு சொத்துகளை இழந்துதான் போராடி வருகிறோம். அது எங்களுக்குப் பெரிது இல்லை. எத்தனை இழந்தாலும் வெற்றியை நோக்கி போராடுவோம். ராமுவசந்தன் மகன் திருமணத்துக்காக மார்ச் 11-ம் தேதி மதுரைக்கு வருகிறோம். அன்று முதல் நானும் விஜயகாந்தும் பிரசாரம் செய்ய உள்ளோம். அனைத்து மாவட்டத் தே.மு.தி.க.வினரும் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தது 10 வாக்குகள் சேகரித்தாலே போதும். நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர் பேசியதாக பேச்சைக் கேட்டவர்கள் தெரிவித்தனர். Thanks to OneIndia |
Maruthani 22-02-2012 | Sun tv Marudhaani 22nd february 2012 Posted: 21 Feb 2012 10:03 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Posted: 21 Feb 2012 08:09 PM PST Junior Vikatan 26-02-2012 | Free Junior Vikatan PDF This week | Junior Vikatan 26th february 2012 ebook Download Link |
Posted: 21 Feb 2012 07:52 PM PST Dinakaran E-paper 22-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 22nd february 2012 Download link |
மர்ம கும்பல், 38 கிலோ தங்கம், வைர நகைகளை திருடிச் சென்றனர். Posted: 21 Feb 2012 01:08 PM PST மர்ம கும்பல், 38 கிலோ தங்கம், வைர நகைகளை திருடிச் சென்றனர். ஆலுக்காஸ் ஜுவல்லரி பி.ஆர்.ஓ., சிவக்குமார் கூறியதாவது: வழக்கம்போல் நேற்றிரவு, கடை மூடப்பட்டது. இரவில் இரண்டு செக்யூரிட்டிகள் பணியில் இருந்தனர். காலையில் கடையை திறந்த போது, நகைகள் திருடு போயிருந்தன. மொத்தம் 70 கிலோ நகைகள் இருந்தன. லாக்கரில் இருந்த நகை எதுவும் திருடு போகவில்லை. "÷ஷாகேஸ்' கண்ணாடி பெட்டிகளில் இருந்த நகைகள் அனைத்தும் காணவில்லை. 36 கிலோ தங்க நகைகள், வைர கற்கள் பதித்த இரண்டு கிலோ நகைகள் திருடப்பட்டுள்ளன, என்றார். திருட்டு நடந்தது எப்படி?: ஆலுக்காஸ் ஜுவல்லரி உள்ள கட்டடத்தின் பின்பகுதியில், "வென்டிலேட்டர்' வசதி உள்ளது. அதில் "எக்ஸாசிஸ்ட்' பேன் உள்ள பகுதி, ஜன்னல் போன்ற அமைப்புடன் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கடை மூடியதும், பின்புறமுள்ள கட்டடத்தின் வழியாககொள்ளையர்கள் மேலே ஏறி, "வென்டிலேட்டர்' வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி, "காஸ் வெல்டிங் கட்டர்' மூலம், "வென்டிலேட்டர்' இரும்பு கம்பிகளை துண்டித்துள்ளனர். "வென்டிலேட்டர்' வழியாக "ஏசி' பெட்டிகள் வைத்திருந்த அறைக்குள் இறங்கி, நகை வைத்திருந்த தளத்துக்கு வரும் வழியில் உள்ள இரும்பு கம்பி கதவை உடைத்து, அப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக, அப்பகுதிகளில் காஸ் சிலிண்டர்கள், ஸ்க்ரூ டிரைவர், கட்டிங் பிளேயர் உள்ளிட்ட சில கருவிகள் கிடந்தன. கடையின் பின்பக்கமாக நுழைந்த திருடர்கள், இரு தளங்களிலும் இருந்த நகைகளை "நிதானமாக' திருடி தப்பிச் சென்றனர். திருட்டு நடந்த ஜுவல்லரிக்கு எதிரே போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. போலீசார் தீவிர விசாரணை: டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில், ஐந்து இன்ஸ்பெக்டர்களை கொண்ட, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கடையின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு முறைகள் குறித்து தெளிவாக அறிந்த நபர்களே, இத்திருட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதால், கடை ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள கடை ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக, "ஏசி' மெஷின்களை சர்வீஸ் செய்ய வந்த மெக்கானிக் ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடக்கிறது. சந்தேகத்துக்குரிய நபர்களிடம் கைரேகை பெறப்பட்டது. டி.ஐ.ஜி., சஞ்சய் குமார் நிருபர்களிடம் கூறுகையில், ""காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி, கம்பிகள் உடைக்கப்பட்டு, திருடர்கள் நகைக்கடைக்குள் புகுந்துள்ளனர். பேக் உட்பட சில கருவிகள் கிடைத்துள்ளன. அது பற்றி இப்போது கூற முடியாது. அனுபவமிக்க நபர்களால், திட்டமிட்ட ஒரு திருட்டாக நடந்துள்ளது,'' என்றார். செயல்படாத கேமரா: ஜுவல்லரிக்குள் வாடிக்கையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி. "டிவி') பொருத்தப்பட்டுள்ளன. இரவில் கடை மூடும் போது, கேமராக்களை "ஆப்' செய்து விடுவதால், திருடர்கள் கைவரிசை காட்டிய போது, கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை. Thanks to Dinamalar |
Posted: 21 Feb 2012 01:02 PM PST Dinamalar E-paper 22-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 22nd february 2012 Download Link |
ஆசையா வர்றப்ப போரடிக்குதுன்னு சொல்லாதீங்க! Posted: 21 Feb 2012 01:01 PM PST ஆசையா வர்றப்ப போரடிக்குதுன்னு சொல்லாதீங்க! சுத்தமா இருக்கணுங்க படுக்கையறையில் சுத்தமும், சுகாதாரமும் கடைபிடிக்கவேண்டியது அவசியம், சிகரெட் வாசமோ, மது வாடையோ மூடை மாற்றிவிடும். அனைத்து பெண்களுமே சுத்தமான சுகந்தமான வாசனையையே படுக்கையறையில் எதிர்பார்க்கின்றனர். எனவே ஆண்களே உங்களின் சுத்தமும், சுகந்தமும்தான் பெண்களை கவரும். ரொமான்ஸ் அவசியம் தாம்பத்ய உறவு என்பது இயந்திரத்தனமானது அல்ல. அது உணர்வுப் பூர்வமானது. ஏதோ கடமைக்கு செயல்படும் கணவர்களை பெண்கள் விரும்புவதில்லை. கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம் கலந்த கணவர்களையே மனைவிகள் விரும்புகின்றனர். படுக்கையறையில் உடல் ரீதியான தொடுகைகளை விட உள்ளரீதியான தொடுகை முதலில் அவசியம். அதைத்தான் பெண்களும் எதிர்பார்க்கின்றனர். வேலையிருக்கு வேலை யாருக்குதான் இல்லை. படுக்கையறையில் ஆசையாய் உங்கள் துணை உங்களின் அருகில் வரும்போது வேலை பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள். அப்புறம் அலுவலகத்திற்கும், படுக்கையறைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அப்புறம் அன்றைய அப்செட் ஒருமாதம் வரையும் நீடிக்கலாம். மென்மையான அணுகுமுறை படுக்கையறையில் கடுமையான அணுகுமுறையை பின்பற்றுவதை எந்த பெண்ணுமே விரும்புவதில்லை. அநேகம் பெண்கள் புகார் தெரிவிப்பது இதைத்தான். நீங்கள் வேட்டைக்காரர் போல செயல்பட படுக்கையறை ஒன்றும் கானகம் அல்ல. அங்கே மென்மையான அணுகுமுறையை கடைபிடித்தால் இனிய கனவுகள் உற்பத்தியாகும். இல்லையெனில் வேட்டைகாரன் கையில் அகப்பட்ட மானைப் போலத்தான் பெண்கள் உணர்வார்கள். அப்பாடா முடிஞ்சது உறவு முடிந்த உடனே எதோ கடமை முடிந்தது என்ற கணக்காக தம் அடிக்கவோ, தூங்கவோ போய்விடும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லையாம். அழகாய் ஒத்துழைத்த துணைவியின் நெற்றியில் மென்மையாய் ஒரு முத்தம். மார்பில் சாய்ந்து செல்லமாய் ஒரு உறக்கம். தலைகோதுவது போன்ற சின்ன சின்ன ஐட்டங்களை ரொமான்ஸ் நடவடிக்கைகளை கணவர் செய்யவேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். இதெல்லாம் படுக்கையறையில் நிகழ்ந்தால் உங்கள் மனைவி உங்களின் மகுடிக்கு மயங்கிய துணைவியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை |
சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது, சட்டசபையில் பேச வாய்ப்பில்லை-தேமுதிக கண்டனம் Posted: 21 Feb 2012 12:57 PM PST சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது, சட்டசபையில் பேச வாய்ப்பில்லை-தேமுதிக கண்டனம் சென்னை வானகரத்தில் இன்று காலை நடந்த தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் போட்டு நிறைவேற்றியுள்ளனர். அதன் விவரம்.. - பஸ் கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலைக்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் மற்றும் பால் விலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். - தமிழகம் முழுவதும் 10 மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டை அமல்படுத்தியதற்கு இந்த கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது. தமிழகத்தை இருண்ட தமிழகமாக மாற்றிய தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம். - மின் கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று கோரிக்கை வைக்கிறோம். - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதே இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையும். முல்லைப் பெரியாறு அணை மட்டுமல்லாமல், தமிழகத்தின் நதி நீர்ப் பிரச்சினைகளில் மத்திய அரசு இரட்டை வேடம் போட்டு வருவற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். - தமிழகத்தின் வேளாண் மற்றும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண தென்னக நதிகளை இணைக்க வேண்டும். - கூடங்குளத்தில் மீண்டும் அமைதி திரும்ப மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - இந்தியா, இலங்கை இடையே போடப்பட்ட கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய் வேண்டும். கச்சத்தீவை மீட்டு மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். மீனவர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். - நீக்கபப்ட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும். - அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். - லோக் ஆயுக்தா போன்ற கடுமையான லஞ்ச ஒழிப்பு சட்டத்தையும், அமைப்பையும் தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும். - அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும். - கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும். - கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ. 3000 ஆக உயர்த்த வேண்டும். - அரசுப் பள்ளிகளில் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதற்காக அரசைக் கண்டிக்கிறோம். - சட்டசபையில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவையில் பாரபட்சமின்றியும், கால அவகாசமின்றியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி தர வேண்டும். - தானே புயல் பாதித்த கடலூர், நாகை மாவட்டங்களை இயற்கைப் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். |
Rasipalan 21-02-2012 to 05-03-2012-Jothida rathna K.B. Vidyadharan Posted: 21 Feb 2012 12:54 PM PST |
Jaya tv Shows Kadhambari Serial 21-02-2012 Posted: 21 Feb 2012 10:42 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |