TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


விஜயகாந்த்துக்கு 'டபுள் ஆக்ட்'-தேமுதிகவின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் தேர்வு!

Posted: 21 Feb 2012 12:50 AM PST


விஜயகாந்த்துக்கு 'டபுள் ஆக்ட்'-தேமுதிகவின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் தேர்வு!

சென்னை: சென்னை, வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று நடந்த தேமுதிகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் இரண்டு பதவிகளுக்கும் விஜயகாந்த்தை ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர்.


இதுவரை தலைவர் பொறுப்பை மட்டுமே விஜயகாந்த் வகித்து வந்தது நினைவிருக்கலாம். தற்போது பொதுச் செயலாளர் பொறுப்பையும் அவரே வகிக்கவுள்ளார்.


கட்சி ஆரம்பித்ததிலிருந்து தனித்து போட்டியிட்டு வந்தது தேமுதிக. மற்ற கட்சிகளைப் போல இல்லாமல் தேவையில்லாத போராட்டங்களை நடத்தாமல், செயல்பட்டு வந்ததால் தேமுதிகவுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் போல மக்கள் கூட ஆரம்பித்தனர். வித்தியாசமான அரசியல்வாதி என்ற பெயரையும் விஜயகாந்த் பெற்றார்.இதனால் அவருக்கென தனி வாக்கு வங்கியும் உருவானது.


ஆனால் வாக்கு வங்கி நிலைப்பட்டதுமே கூட்டணி அரசியலுக்குத் தாவி விட்டார் விஜயகாந்த். கடந்த சட்டசபைத் தேர்தலில் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த கூட்டணியால் அதிமுகவுக்குக் கிடைத்த பலத்தை விட தேமுதிகவுக்கே பெரும் பலம் கிடைத்தது. அக்கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது, முரசு சின்னம் நிரந்தரமானது. சட்டசபையிலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. ஒரு எம்.எல்.ஏவுடன் இருந்து வந்த அந்தக் கட்சிக்கு கை நிறைய எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். தமிழகத்தின் பாரம்பரிய கட்சிகளில் ஒன்றான திமுகவையே 3வது இடத்திற்குத் தள்ளி விட்டது தேமுதிக.


ஆனால் அதிமுகவுடனான கூட்டணி படு வேகத்தில் உடைந்து சிதறிப் போனது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவால் பெரிய அளவிலான வெற்றியைப் பெற முடியவில்லை. இந்த நிலையில்தான் சமீபத்தில் சட்டசபையில் வைத்து தேமுதிகவை செமத்தியாக வாங்கி விட்டார் ஜெயலலிதா. கடுமையாக சாடிய அவர் தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுவதாக கூறினார். மேலும் சங்கரன்கோவிலில் திராணி இருந்தால் தனித்துப் போட்டியிடத் தயாரா என்றும் விஜயகாந்த்தை முகத்திற்கு முகம் நேரில் பார்த்து சவாலும் விட்டார்.


இந்தப் பரபரப்புப் பின்னணியில் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துள்ளது தேமுதிக. இருப்பினும் திடீரென திமுக நீட்டியுள்ள பாசக் கரமும், நேசக் குரலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வருங்காலத்தில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. சங்கரன்கோவிலில் திமுக-தேமுதிக கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது.


ஆனால் திமுகவும் சரி, தேமுதிகவும் சரி தனித் தனியாக வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இதனால் சங்கரன்கோவிலில் இரு கட்சிகளும் இணைந்து களம் காணும் வாய்ப்பு மங்கி விட்டது. இருப்பினும் விஜயகாந்த் மனதில் என்ன திட்டம் உள்ளது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.


இந்தப் பின்னணியில்தான் இன்று பொதுக்குழுவையும், செயற்குழுவையும் கூட்டியிருந்தார் விஜயகாந்த். சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டங்கள் விஜயகாந்த் தலைமையில் இன்று முற்பகலில் தொடங்கின.


முன்னதாக பொதுக்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த விஜயகாந்த்து தடபுடலாக வரவேற்பளித்தனர் தேமுகவினர். வரும் வழியெங்கும் கட்சியின் கொடிகள் பறந்தன. வரவேற்பு பேனர்களும் கண்ணைப் பறித்தன.


முதலில் செயற்குழுவும், பின்னர் பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்கள் கேமராக்கள், செல்போன்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்ததால் அனைவரும் அது இல்லாமல் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
Thanks to OneIndia

அம்புலி 3 டி - சினிமா விமர்சனம்

Posted: 21 Feb 2012 12:47 AM PST


அம்புலி 3 டி - சினிமா விமர்சனம்

நடிகர்கள்: பார்த்திபன், அஜய், ஸ்ரீஜித், தம்பி ராமையா, சனம், ஜோதிஷா அம்மு, ஜெகன், கோகுல்
இசை: வெங்கட் பிரபு சங்கர், சாம், சதீஷ், மெர்வின்
பிஆர்ஓ: மவுனம் ரவி
ஒளிப்பதிவு: சதீஷ் ஜி
எடிட்டிங்: ஹரி சங்கர்
எழுத்து - இயக்கம்: ஹரி சங்கர் - ஹரீஷ் நாராயணன்.
தயாரிப்பு: கேடிவிஆர் லோகநாதன்


தமிழின் முதல் ஸ்டீரியோஸ்கோப் 3 டி படம் என்ற அறிமுகத்தோடு வந்திருக்கிறது அம்புலி.


மனோஜ் ஷியாமளனின் 'வில்லேஜ்' மாதிரி ஒரு த்ரில்லர் கதையை 3 டியில் சொல்ல முயன்றிருக்கிறார்கள் புதிய இயக்குநர்கள் ஹரி சங்கர் - ஹரீஷ் நாராயணன்.


இந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். க்ளைமாக்ஸை இன்னும் புத்திசாலித்தனமாக, மிரட்டலாக அமைத்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு.


எழுபதுகளின் இறுதியில் நடக்கிறது கதை. கிராமத்தையொட்டியுள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் வேந்தன் (ஸ்ரீஜித்) அமுதன் (அஜய்) இருவரும், கோடை விடுமுறைக்கு கூட ஊருக்குச் செல்லாமல் கல்லூரி வாளகத்திலேயே தங்கிவிடுகின்றனர். வேந்தனின் தந்தை தம்பி ராமையாதான் அந்தக் கல்லூரி வாட்ச்மேன். அமுதனுக்கு பக்கத்து கிராம பஞ்சாயத்து தலைவர் பெண் மீது காதல். இந்த விடுமுறையில் காதலைச் சொல்ல அங்கேயே தங்கிவிடுகிறான்.


ஒரு இரவு நண்பன் துணையுடன் தன் காதலியைப் பார்க்கச் செல்கிறான். இந்த கிராமத்திலிருந்து பக்கத்து கிராமத்துக்கு செல்ல ஒரு சோளக்காட்டு குறுக்கு வழி உண்டு. ஆனால் அந்த வழியாக யாரும் செல்லப் பயப்படுவார்கள். காரணம் அம்புலி. அம்புலி ஆளை அடித்து கொன்றுவிடும் என்ற பயம். அதற்காகவே சோளக்காட்டுக்கு குறுக்கே தடுப்பு சுவரெழுப்பி வசிக்கிறார்கள் கிராமத்தினர்.


ஆனால் அந்த பயமின்றி, நண்பனை தடுப்பு சுவர் அருகில் நிற்கவைத்துவிட்டு நிலா இரவில் காதலியைப் பார்க்கப் போகிறான் அமுதன். போகும்போது பிரச்சினையில்லை. வரும்போது அவனை நடுங்க வைத்துவிடும் அளவு திகிலான நிகழ்வுகள் நடக்க அலறிப் புடைத்துக் கொண்டு வருகிறான் அமுதன்.


தனக்கு நேர்ந்ததை நண்பனிடம் சொல்ல, அதைக் கேட்கும் தம்பி ராமையா அம்புலியின் கதையைச் சொல்கிறார்.


ப்ளாஷ்பேக்கில் கர்ப்பிணியான உமா ரியாஸுக்கு குழந்தை பிறக்கிறது. பிறக்கும்போதே மிருகமாகப் பிறக்கும் அந்தக் குழந்தை, மருத்துவம் பார்த்த பெண்ணின் கழுத்தைக் கடித்துக் கொன்றுவிடுகிறது. ஊர் பயந்து நடுங்குகிறது. அந்த குழந்தையை கொல்லச் சொல்லி வற்புறுத்த, கொல்ல மனமின்றி, புறவாசல் பக்கம் இருக்கு சோளக்காட்டுக்கு துரத்திவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்கிறார் உமா. அந்தக் குழந்தை வளர்ந்து அம்புலியாகி, மனிதர்களை அடித்துக் கொன்று சாப்பிடும் அளவுக்குப் போய்விட்டதாக தம்பி ராமையா சொல்கிறார். இந்த அம்புலியுடன் பிறந்தவரான பார்த்திபன் மட்டும் அம்புலிக்குப் பயப்படாமல் சோளக்காட்டுக்கு நடுவில் குடிசை கட்டி வசிக்கிறார்.


ஒரு பெண்ணின் வயிற்றில் இப்படியொரு மிருகம் தோன்ற காரணம் என்ன என்பது இன்னொரு கிளைக்கதை. இந்த அம்புலியை எப்படி அழித்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.


தமிழில் சில காட்சிகளைத்தான் இதற்கு முன்பு 3 டியில் காட்டினார்கள். ஆனால் இந்தப் படத்தில் அனைத்துக் காட்சிகளுமே 3 டி. சில காட்சிகளில் ஈட்டி கண்ணைக் குத்திவிடுமோ என சட்டென்று கண்ணாடியைக் கழட்டுமளவுக்கு அசத்தல்.


மகள் சொல்லச் சொல்ல கேட்காமல் சோளக்காட்டுக்கு நடுவில் குடித்துவிட்டு தடுமாறிக்கொண்டே அடமாக மொட்டை ராஜேந்திரன் நடக்கும் அந்தக் காட்சியே கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது.


ஆனால் சில காட்சிகள் தொடர்பற்றுத் தெரிவதால், குழப்பங்கள், கேள்விகள். பார்த்திபன் பாத்திரம் மிரட்டலாக இருந்தாலும், அந்தப் பாத்திரம் அம்புலியைக் கொல்ல வருவது எதனால் என்பதில் தெளிவில்லை.


அம்புலி என்ற அந்த கேரக்டருக்கு படம் முழுக்க அவ்வளவு பில்ட் அப் கொடுத்துவிட்டு, கடைசியில் மனிதக்குரங்கை விட சற்று பெரிய சைஸ் உருவத்தைக் காட்டி, இதுதான் அத்தனை கொலைகளுக்கும் காரணமான அம்புலி எனும்போது சப்பென்றாகிவிடுகிறது, அந்த சஸ்பென்ஸ்.


குறைகள் சில இருந்தாலும், ஒரு வித்தியாசமான முயற்சி என்ற வகையில் இந்தப் படத்தை பாராட்டத்தான் வேண்டும். அதுவும் எந்த வெளிநாட்டு கலைஞர்களின் துணையுமின்றி, கோடம்பாக்கத்திலேயே இத்தனை நுட்பமாக 3டி படம் காட்டியிருப்பது சாதாரண விஷயமல்ல.


வெறும் 'ஹார்ரர்' வகைப் படமாகக் காட்டாமல், விஞ்ஞான ஆராய்ச்சி என்ற பெயரில் நடக்கும் விபரீதங்களைத் தவிர்ப்போம் என்ற மெசேஜும் படத்தில் உண்டு.


ஹீரோக்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. எல்லோருமே முக்கிய பாத்திரங்கள்தான். இவர்களில் பார்த்திபன் அசத்தலாக செய்திருக்கிறார். என்ன அவரது தோற்றம்தான் ஆயிரத்தில் ஒருவனை நினைவுபடுத்துவதாக உள்ளது.


புதியவர்கள் ஹரீஷ், ஸ்ரீஜித், கோகுல், சனம், ஜோதிஷா அம்மு என அனைவருமே சரியாக செய்திருக்கிறார்கள் தங்கள் பாத்திரங்களை. தம்பி ராமையா வழக்கம் போல அருமையான நடிப்பைத் தந்துள்ளார்.


ஜெகன்தான் படத்தில் அம்புலியை உண்மையில் கண்டுபிடிப்பவர். சிறப்பாக செய்துள்ளார். அம்புலியாக கோகுல் நடித்துள்ளார்.


நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்த படம். இரண்டு பாடல்கள் ஓகே. பின்னணி இசை நன்றாக உள்ளது. ஒளிப்பதிவுதான் படத்துக்கு உண்மையான ஹீரோ. அந்த சோளக்காட்டை காட்டிய விதத்திலேயே பாதி பயத்தை மனதில் விதைத்துவிடுகிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் ஜி. ஹரி சங்கரின் எடிட்டிங் கச்சிதம். படத்தை இரண்டரை மணி நேரத்துக்குள் முடித்திருப்பது இன்னொரு ப்ளஸ்.


முதல் பரீட்சையே கடினமானதாக அமைந்திருந்தாலும், விருப்பத்தோடு செய்திருப்பதால் பார்வையாளர்களிடம் பாஸ் மார்க்கோடு, பாராட்டுகளையும் பெறுகின்றனர் புதிய இயக்குநர்கள்!


-எஸ் ஷங்கர்
Thanks to OneIndia

சஞ்சனா சிங்கின் செல்ல முயல்கள்!

Posted: 21 Feb 2012 12:42 AM PST


சஞ்சனா சிங்கின் செல்ல முயல்கள்!

அது என்னமோ எல்லா நடிகைகளுக்குமே செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அப்படி ஒரு இஷ்டம். சஞ்சனா சிங்கும் அதற்கு விலக்கல்ல.. ஆனால் அவர் வளர்ப்பது அழகான மெத்து மெத்தென்ற முயல்குட்டிகளை.


இந்த முயல்கள் இருப்பது இங்கல்ல... மும்பையில். தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும், இந்த முயல்களுக்காகவே அவர் வாரம் ஒருமுறை மும்பை பறந்துவிடுகிறார். இவற்றுக்காக தனி படுக்கையறை, மெத்தை என மும்பை வீட்டில் ராஜ உபசாரமாம்.


ஏங்க இது கொஞ்சம் ஓவரா இல்லையா என்றால்..., "அப்படியெல்லாம் சொல்லாதீங்க. முயல்கள் ரொம்ப மென்மையானவை. ரொம்ப அற்புதமான பாசப் பிராணிகள். நான் எவ்வளவு டென்ஷனா இருந்தாலும், ஒரு முறை இந்த முயல் குட்டிகளை தடவிப் பார்த்தாலே, யோகா பண்ண மாதிரி ஒரு ரிலாக்ஸ் மூடுக்கு வந்துடுவேன். இப்போ நான்கு குட்டிகள் வேறு போட்டிருக்கு. அதனால அவற்றைப் பார்த்துக் கொள்வதில் தனி சந்தோஷம் எனக்கு," என்கிறார் இந்தி கொஞ்சும் தமிழில்.


முயலுக்கே நேரத்தை ஒதுக்கினால், பட வாய்ப்புகள் என்னாவது?


"அது முக்கியம்தான். என் முதல் படம் ரேணிகுண்டா. அப்படியொரு அழுத்தமான வேடம். அந்த மாதிரி வேடம் எல்லோருக்கும் அமைந்துவிடாது. ஒரு ஹீரோனுக்குக் கூட கிடைக்காத பேர் எனக்கு கிடைச்சது. நண்பர்கள் கேட்டதற்காக கோ, மறுபடியும் ஒரு காதஸ், மயங்கினேன் தயங்கினேன், வெயிலோடு விளையாடு படங்களில் கெஸ்ட் ரோல் பண்ணேன். ஜஸ்ட் ஐட்டம் நம்பர்ஸ். ஆனா அதிலும் நான் தனியா தெரிஞ்சேன். கோ முதல் பாட்டை உங்களால மறக்க முடியுமா...சினிமாவில் நண்பர்கள் ரொம்ப முக்கியம்.


இப்போ யாருக்குத் தெரியும் படத்தில் செம ரோல், அதுவும் ஹீரோயின் வேடம் கிடைச்சிருக்கு. பார்க்கிறவங்கள அதிர வைக்கிற மாதிரி ஒரு கேரக்டர் அது. அடுத்த வருகிற எல்லாமே எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு அந்தஸ்து தரக்கூடிய படங்கள்தான். முத்திரை பதித்த இயக்குநர்களின் படைப்புகள். கேஎஸ் அதியமானின் தப்புத் தாளங்கள், தமிழ்ப் படம் சிஎஸ் அமுதனின் இரண்டாவது படம் என என் நம்பிக்கையை உயர்த்தும் படங்கள். சந்தோஷமா இருக்கு.


இது ஒரு ஆரம்பம்தான். இனி எல்லாமே நல்லா நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. எனக்கும் அவார்டு படம் பண்ண ஆசைதான். என்னைப் பொறுத்தவரை பணம் முக்கியமில்லை. நண்பர்கள் முக்கியம். நாலுபேருக்கு உதவியா இருக்கணும், தேவைக்கேத்த அளவு பணம் இருக்கணும்... அவ்வளவுதான்!," என்கிறார் சஞ்சனா.


இன்றைய தேதிக்கு சஞ்சனா சிங்தான் கோடம்பாக்கத்தின் ஹாட் கிளாமர் கேர்ள். கவர்ச்சியில் நமீதாவின் வாரிசு என்றால், நடிப்பில் தானே ரோல் மாடலா இருக்கணும் என்று ஆசைப்படும் அளவு ஆர்வமான நடிகை.


'ஹோம்லியா கிளாமரா? எது உங்க சாய்ஸ்' என்றால், "இதை நிறையபேர் கேக்குறாங்க... இரண்டுமே ஒரு நடிகையின் இரு பக்கங்கள். எனக்கு ரெண்டு ரோலுமே ஓகேதான். இரண்டையுமே அதன் எல்லை வரை போய் சவாலா எடுத்து நடிக்கணும். ஒண்ணு கைத்தட்டல் வாங்கணும்.. இல்லைன்னா, கவர்ச்சில கலக்கணும்... அதான் சஞ்சனா!," என்றார்.


பார்த்தாலே தெரியுதுங்கோ சஞ்சனா!
Thanks to OneIndia

கலைஞரின் “அன்புத் தம்பி விஜயகாந்த்” டயலாக் கடைசி நிமிடத்தில்…

Posted: 21 Feb 2012 12:35 AM PST


கலைஞரின் "அன்புத் தம்பி விஜயகாந்த்" டயலாக் கடைசி நிமிடத்தில்

முதல்வர் ஜெயலலிதாவின் நேரடிச் சவாலை ஏற்றுள்ளார் விஜயகாந்த். "சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக முத்துக்குமார் போட்டியிடுகிறார்" என்று அவர் அறிவித்திருப்பதன் மூலம், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகியபின் (அல்லது விலக்கப்பட்டபின்), தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும் களம் இது. உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிட்டபோது, அ.தி.மு.க. அணியில் போட்டியிட இல்லை என்ற போதிலும், அவர்களது கூட்டணி முறிந்து போனதாக இரு தரப்பும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.


சமீபத்தில்தான், முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும் சட்டசபையில் மோதிக்கொண்டு, தமக்கிடையே சகவாசம் வைத்துக் கொண்டதற்கு வெட்கப்படுவதாக, பப்ளிக்கில் அறிவித்திருந்தனர்.


இனியும் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லாமல், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்தனியே போட்டியிடுகின்றனர்.தேர்தல் முடிவுகள் வெளியானபின், "தேர்தலில் பேட்டியிட்டதற்கு வெட்கப்படுகிறேன்" என்று அறிவிக்காவிட்டால் சரி.


தேர்தலில் வேட்பாளரை இறக்கும் விஜயகாந்தின் அறிவிப்பு ஆச்சரியமானதுதான். மிக ரிஸ்கியான அறிவிப்பும்கூட. தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள இவர்கள், போட்டியில் ஜெயிக்கத் தேவையில்லை, 2-வது இடத்தைப் பிடித்தாலே பெரிய வெற்றிதான். ஆனால், அதுகூட நடக்குமா என்பது சந்தேகமே!


அதுதான் இதிலுள்ள ரிஸ்க்.


விஜயகாந்த் தனித்துப் போட்டியிடும் அறிவிப்பை வெளியிடும் கடைசி நிமிடம்வரை, மற்றொரு டீலுக்கான முயற்சிகள் நடைபெற்றது. அந்த டீல் என்ன?


"தே.மு.தி.க. இந்த இடைத் தேர்தலில் மட்டும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு, தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கும். இந்த 'தற்காலிக' கூட்டணிக்குள் காங்கிரஸை கொண்டு வருவது தி.மு.க.-வின் வேலை. கம்யூனிஸ்டுகளை உள்ளே கொண்டுவர வேண்டியது விஜயகாந்தின் பொறுப்பு" என்பதே அந்த டீல்.


விஜயகாந்த் உறவினர் ஒருவரும், ஸ்டாலின் நண்பர் ஒருவரும் மிக மும்மரமாக இந்த டீல் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். இரு தரப்பிலும் கிரீன் சிக்னல் தரப்பட்டு இருந்ததாகவும் சொல்லிக் கொண்டார்கள்.


தி.மு.க. தலைவர் கருணாநிதியே, "கழக வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு தம்பி விஜயகாந்தை அன்புடன் அழைக்கிறேன்" என்று ஒரு ஸ்டெப் முன்னே போய் அறிவிப்பார் எனவும், அதன்பின் விஜயகாந்த தமது முடிவை அறிவிக்கலாம் எனவும் சீரியஸாக ஸ்டெப்-பை-ஸ்டெப்பாக திட்டமிட்டார்கள். விஜயகாந்த் உறவினர் – ஸ்டாலின் சந்திப்பு நடப்பதாகவும் இருந்தது.


கடைசி நிமிடத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை. எல்லாமே புஸ் ஆகிவிட்டது.


அந்த டீலுக்கு இன்னமும் சான்ஸ் இருக்கிறது என்று இன்னமும் தி.மு.க. வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள். "தே.மு.தி.க. தரப்பில் இருந்து வேட்பாளர் அறிவிப்பு மட்டும்தானே வந்திருக்கிறது.. வேட்பு மனு தாக்கல் செய்தபின்கூட காட்சிகள் மாறலாம்" என்று அவர்கள் சொல்கிறார்கள்.


வேட்புமனு வாபஸ்பெறும் கடைசி தேதிவரை இந்த டீலுக்கான பேச்சுக்கள் ஓடிக்கொண்டு இருக்கும்!

Athipookal 21-02-2012 | Sun Tv Athipookal Serial 21st february 2012

Posted: 21 Feb 2012 01:11 AM PST


Athipookal 21-02-12 | Sun Tv Athipookal Serial 21st february 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 21-02-2012 | Sun Tv Elavarasi Serial 21st february 2012

Posted: 21 Feb 2012 12:21 AM PST


Ilavarasi 21-02-12 | Sun Tv Elavarasi Serial 21st february 2012
Updating....Refresh this page

This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 21-02-2012 | Sun Tv Thiyagam Serial 21st february 2012

Posted: 20 Feb 2012 11:53 PM PST


Thiyagam 21-02-12 | Sun Tv Thiyagam Serial 21st february 2012
Updating....Refresh this page

This posting includes an audio/video/photo media file: Download Now

மின் வெட்டு: இனி சென்னைக்கு 3 மணி; பிற பகுதிகளுக்கு 6 மணி நேரம்?

Posted: 20 Feb 2012 11:27 PM PST


மின் வெட்டு: இனி சென்னைக்கு 3 மணி; பிற பகுதிகளுக்கு 6 மணி நேரம்?

சென்னை: சென்னையத் தவிர்த்து பிற பகுதிகளில் நிலவி வரும் 8 மணி நேரத்துக்கும் மேலான மின் வெட்டைக் குறைப்பதற்கு மின்துறை முடிவு செய்துள்ளது. 


இதன்படி, சென்னையில் மின் வெட்டை 3 மணி நேரமாக உயர்த்தவும், பிற பகுதிகளில் 6 மணி நேரமாக மின் வெட்டை குறைக்கவும் அரசுக்கு மின்சார வாரியம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


சென்னையில் தற்போது ஒரு மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. அதேவேளையில், மாநிலத்தின் பிற பகுதிகளில் 8 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். 


இதேபோல், தொழில் நிறுவனங்களும் மின் வெட்டால் மிகுந்த பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. 


இந்த நிலையில், சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் 6 மணி நேரம் மின் தடையை அமல்படுத்துவது என்றும், இதை ஈடு செய்யும் விதமாக, சென்னையில் மின் தடையை 3 மணி நேரமாக உயர்த்துவது எனவும் மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. 


மேலும், தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மின் விநியோகத்தையும் சற்றே உயர்த்தவும் தீர்மானித்துள்ளது. 


மின்சார வாரியத்தின் இந்தப் பரிந்துரைகள், முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. 


முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன், இப்புதிய மின் வெட்டு விரைவில் நடைமுறைக்கு வரும் என மின் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Thanks to Vikatan

Sun Tv Nathaswaram Serial this week Promo video

Posted: 20 Feb 2012 11:21 PM PST


Sun Tv Nathaswaram Serial this week Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 21-02-2012 | Sun Tv Muthaaram Serial 21st february 2012

Posted: 20 Feb 2012 11:37 PM PST


Mutharam 21-02-12 | Sun Tv Muthaaram Serial 21st february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 21-02-2012 | Sun Tv Vellai Thamarai Serial 21st february 2012

Posted: 20 Feb 2012 11:13 PM PST


Vellai Thamarai 21-02-12 | Sun Tv Vellai Thamarai Serial 21st february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 21-02-2012 | Sun Tv Uravugal Serial 21st february 2012

Posted: 20 Feb 2012 11:13 PM PST


Uravugal 21-02-12 | Sun Tv Uravugal Serial 21st february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 21-02-2012 | Sun Tv kasthuri Serial 21st february 2012

Posted: 20 Feb 2012 11:12 PM PST


Kasturi 21-02-12 | Sun Tv kasthuri Serial 21st february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 21-02-2012 | Sun tv Marudhaani 21st february 2012

Posted: 20 Feb 2012 11:01 PM PST



Maruthani 21-02-12 | Sun tv Marudhaani 21st february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னை வங்கியில் ஒரே மாதத்தில் 2வது துணிகர கொள்ளை-வங்கிகளின் அசட்டையால் மக்கள் அதிருப்தி

Posted: 20 Feb 2012 08:09 PM PST


சென்னை வங்கியில் ஒரே மாதத்தில் 2வது துணிகர கொள்ளை-வங்கிகளின் அசட்டையால் மக்கள் அதிருப்தி

சென்னை: வங்கிகளில் கண்காணிப்புக் காமராக்களைப் பொருத்துங்கள், காவலர்களை நியமியுங்கள் என்று காவல்துறை எத்தனை முறை அறிவுறுத்தினாலும் அதை கண்டு கொள்ளாமல் வங்கி நிர்வாகங்கள் அசட்டையாக உள்ளன. இதனால் மக்களின் பணத்தை கொள்ளையர்கள் பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த ஒரு மாதத்திற்குள் சென்னையில் 2வது முறையாக வங்கி ஒன்றில் துணிகரமாக கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது மக்களை அதிர வைத்துள்ளது.


சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் கடந்த மாதம் 23ம் தேதிதான் பிற்பகல் வாக்கில் 4 வாலிபர்கள் துப்பாக்கி முனையில் ரூ. 18 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் இதுவரை துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதே பாணியில் ஒரு வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.


சென்னை கீழ்க்கட்டளை மேடவாக்கம் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கி கடந்த 2 ஆண்டுகளாக அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.


இந்த வங்கியில் 15 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பகல் 2 மணிக்கு வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாப்பிட சென்றனர். வங்கி முதன்மை காசாளர் கோபாலகிருஷ்ணன் பாதுகாப்பு பெட்டக அறையை பூட்டிவிட்டு சாப்பிட சென்றுவிட்டார். வங்கி மேலாளர் சண்முகசுந்தரம் தனது அறையில் இருந்தார். மேலும் ஒரு பெண் உள்பட 10 வாடிக்கையாளர்களும் உள்ளே இருந்தனர்.


அப்போது 4 பேர் வங்கிக்குள் வந்தனர். அவர்கள் முகத்தை கைக்குட்டையால் கட்டி மூடி இருந்தனர். அவர்களில் 2 பேர் மேலாளர் அறைக்கு சென்றனர். மேலாளர் சண்முகசுந்தரத்தை துப்பாக்கி முனையில் மிரட்டி சத்தம் போடக் கூடாது என்று அமர வைத்தனர்.


பின்னர் அவர்களில் 2 பேர் அங்கிருந்த வாடிக்கையாளர்களை மிரட்டி அமர வைத்தனர். அவர்களிடம் இந்தி கலந்த தமிழில் பேசி மிரட்டியுள்ளனர்.


பின்னர் ரெஸ்ட் ரூமில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஊழியர்களையும் துப்பாக்கியைக் காட்டி அமைதிப்படுத்தினர். அவர்களின் செல்போன்களையும் பறித்துக் கொண்டனர். பின்னர் அனைவரையும் ஒரு அறையில் போட்டுப் பூட்டினர். மேலாளரை மட்டும் தங்களுடன் வைத்துக்கொண்டு பணம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டக சாவியைக் கேட்டுள்ளனர். அதற்கு அவர், அந்த சாவி முதன்மை காஷியரிடம்தான் உள்ளது, அவர் சாப்பிடப் போயிருக்கிறார் என்றார்.


மேலும் கேஷ் கவுண்டரின் சாவியும் தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கொள்ளையர்கள் மேலாளரை தாக்கியுள்ளனர். பின்னர் உதவி மேலாளரை அழைத்து அவரிடம் இருந்த சாவி மூலம் பணம் வைக்கப்பட்டிருந்த கேஷ் கவுண்டரை திறக்கச் செய்தனர். பின்னர் அங்கிருந்த ரூ. 14 லட்சம் பணத்தை எடுத்து தாங்கள் கொண்டு வந்திருந்த பையில் போட்டனர். பின்னர் சண்முகசுந்தரத்தையும் அறையில் போட்டுப் பூட்டி விட்டு கிளம்பி விட்டனர்.


வங்கியை விட்டு வெளியே வந்த அவர்கள் படு சாவகாசமாக ரோட்டைக் கடந்து அங்கு நிறுத்தி வைக்கப்ப்ட்டிருந்த ஆம்னி வேனில் ஏறிப் போயுள்ளனர்.


இரண்டரை மணியளவில் சாப்பிடுவதற்காகப் போயிருந்த துப்புறவுத் தொழிலாளர் சாந்தி வங்கிக்குத் திரும்பி வந்தபோதுதான் கொள்ளைச் சம்பவம் தெரிய வந்தது. இதையடுத்து அறைக்குள் பூட்டப்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்தார்.


இதையடுத்து வங்கி மேலாளர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.


வழக்கம் போல இந்த வங்கிக் கொள்ளையிலும் இந்திக்காரர்களே ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் ஏற்கனவே பெருங்குடியில் நடந்த கொள்ளைக்கும், இந்தக் கொள்ளைக்கும் இடையே நிறைய ஒற்றுமைளும் உள்ளன.


அதேபோல இந்த வங்கியிலும் கண்காணிப்பு கேமரா இல்லை, காவலாளி இல்லை. இதுகுறித்து போலீஸார் பலமுறை வங்கிகளுக்கு அறிவுறுத்தியும் கூட அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கண்காணிப்பு கேமரா இல்லாததால், கொள்ளையடித்தவர்கள் யாரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையே, கீழ்க்கட்டளையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மது அருந்துவதற்காக அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். அவர் கொள்ளையர்களைப் பார்த்துள்ளார். இதுகுறித்து கண்ணன் கூறுகையில், 


மதுபான பார் அருகே 4 பேர் முகத்தை மறைத்தபடி சென்றனர். அவர்களிடம் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இந்தியில் பதில் அளித்தபடி மாருதி காரில் ஏறிச் சென்றனர். மது அருந்திவிட்டு திரும்பி வந்தபோது போலீசார் நின்றனர். அதன்பிறகு தான் வங்கியில் கொள்ளை நடந்து இருப்பது எனக்கு தெரிய வந்தது என்றார்.


தற்போது அவர் சொன்ன அடையாளங்களை வைத்தும், ஊழியர்கள் சொன்ன அடையாளங்களை வைத்தும் கம்ப்யூட்டர் மூலம் படம் வரைந்து கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.


வங்கியின் முதன்மை காஷியர் சாப்பிட வெளியே போயிருந்ததால் பாதுகாப்புப் பெட்டகத்தை திறக்கும் நிலை ஏற்படவில்லை. இல்லாவிட்டால் பெருமளவில் கொள்ளை போயிருக்கும்.


இந்த இரு சம்பவங்களுக்குப் பின்னராவது, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு வசதிகள் இல்லாத வங்கிகள் அதுகுறித்து தீவிர கவனம் செலுத்தினால் மக்களின் பணம் அநியாயமாக கொள்ளை போவதைத் தடுக்கலாம்.
Thanks to OneIndia

மின்வெட்டை சரி செய்ய என்னிடம் யோசனைகள் உள்ளன, ஆனால் யாரும் கேட்பதில்லை-ராமதாஸ்

Posted: 20 Feb 2012 08:08 PM PST



மின்வெட்டை சரி செய்ய என்னிடம் யோசனைகள் உள்ளன, ஆனால் யாரும் கேட்பதில்லை-ராமதாஸ்
திருச்சி: மின்வெட்டை சரி செய்யாமல்,மக்களை திசை திருப்பும் வகையில் தன்னுடன் இருந்தவர்களையெல்லாம் கைது செய்து கொண்டிருக்கிறார்கள். மின்வெட்டை சரி செய்ய என்னிடம் யோசனைகள் உள்ளன. ஆனால் யாரும் அதை கேட்பதில்லை என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.


திருச்சியில் மின்வெட்டைக் கண்டித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,


மின்வெட்டால் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் மின்வெட்டை சரிசெய்வோம் என்று அதிமுக கூறியது. ஆனால் 8 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.


மின்வெட்டு நேரம் 8 மணி நேரம், 10 மணி நேரம் என அதிகரித்துள்ளது. மின்வெட்டை சரிசெய்யாமல் தம்முடன் இருந்தவர்களை கைது செய்து மக்களை திசைதிருப்புகின்றனர். எங்களிடம் மின்வெட்டை சரிசெய்ய பல்வேறு ஆலோசனைகள் உள்ளன. ஆனால் நாம் கூறினால் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை என்றார் அவர்.


ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் நூற்றுக்கணக்கான கட்சியினர் கலந்து கொண்டனர்.
Thanks to OneIndia

Kalkandu 22-02-2012 | Free Download Kalkandu Tamil Magazine PDF This week | Kalkandu 22nd february 2012 ebook

Posted: 20 Feb 2012 08:03 PM PST


Kalkandu 22-02-2012 | Free Download Kalkandu Tamil Magazine PDF This week | Kalkandu 22nd february 2012 ebook

Download Link

புற்றுநோய் அல்லாமல் வேறு என்ன ?

Posted: 20 Feb 2012 07:28 PM PST


புற்றுநோய் அல்லாமல் வேறு என்ன ?

சனிக்கிழமை அன்று சசிகலாவின் கணவர் நடராஜன் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதைப் பார்க்கும் போது, வரலாறு திரும்புகிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.    மூன்று மாதங்களுக்கு முன்பு, சசிகலாவின் நெருக்கமான உறவினர்கள் இது போல கைது செய்யப்படுவார்கள் என்று யாராவது சொல்லியிருந்தால், நம்புவதற்கு ஆள் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் மன்னார்குடி மாபியாக்கூட்டத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக சிறை சென்ற வண்ணம் உள்ளார்கள்.


இந்த மன்னார்குடி மாபியா கும்பல் தங்களிடம் அதிகாரம் இருந்தபோது மற்றவர்களுக்கு அவர்கள் செய்தது, இன்று அவர்களுக்கே திருப்பிக் கிடைக்கிறது. 2001ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, 2003 ஜுலை மாதம் திடீரென்று மதுரையைச் சேர்ந்த செரினா பானு என்கிற ஜனனி என்கிற பெண் கைது செய்யப்பட்டார்.   அவரோடு, அவர் தாயார் ரமீஜா மற்றும் அவர்கள் கார் டிரைவர் சதீஷ்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் காரிலிருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவர்கள் வீட்டிலிருந்து 1.04 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.   விமானப்பணிப்பெண் பயிற்சி பெற்றிருந்த செரினா என்கிற அந்தப்பெண் எதற்காக கைது செய்யப்பட்டார், ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விபரங்கள் மர்மமாகவே இருந்தன.


ஆனால் செரினாவுக்கு ஜாமீன் வேண்டி நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் யார் தெரியுமா ?   தற்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருக்கும் கபில் சிபல்.    கபில் சிபல் செரினாவுக்காக ஆஜரானதும் ஒட்டுமொத்த பத்திரிக்கை உலகமுமே பரபரப்பாகி இந்த வழக்கை உற்று கவனிக்கத் தொடங்கின. அதற்குப் பிறகு அப்போதைய ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் போன்ற பத்திரிக்கைகள் இந்த வழக்கின் பின் உள்ள மர்மங்களை மறைமுகமாக எழுதத் தொடங்கின.  அந்தப் பத்திரிக்கைகள் எழுதியவற்றின் சாராம்சம் என்னவென்றால், செரினா என்ற இந்தப்பெண், சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நெருக்கமானவர்.   அவர் தன் கணவரோடு நெருக்கமாக இருப்பதை விரும்பாத சசிகலா, ஜெயலலிதாவிடம் சொல்லி, காவல்துறையை விட்டு, செரீனா மீது கஞ்சா வழக்கு போட உத்தரவிட்டார்.  அவரைப்போலவே, காவல்துறையில் சிக்கிய மற்றொருவர், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன். சென்னை தியாகராயநகரில் உள்ள வி.என்.சுதாகரன் வீட்டில் கடந்த 2001 ம் ஆண்டு ஜுன் மாதம் 13 ந் தேதி பாண்டி பஜார் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்து 16 கிராம் ஹெராயின் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வி.என்.சுதாகரனின் அபிராமபுரத்தில் உள்ள அலுவலகத்திலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்தும் 72 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.  போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சுதாகரன், முகைதீன், பாஸ்கர் மற்றும் ஜலாவுதீன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு இன்று வரை நடந்து வருகிறது.


இந்த இரண்டு வழக்குகளுமே சசிகலாவின் உத்தரவால் பதியப்பட்டவை.   செரினா வழக்கு நடராஜனுடனான அவரது நெருக்கத்தால் அவர் மீது பதியப்பட்டது என்றால், சுதாகரன் வழக்கு ஜெயலலிதா நம்பிக்கையோடு கொடுத்தனுப்பிய பணத்தை கையாடல் செய்ததால் தொடுக்கப்பட்டது என்பது அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் செய்தி.  தன்னிடம் அதிகாரம் இருந்தபோது, தன்னுடைய எதிரிகளை பழிவாங்குவதற்கு காவல்துறையை பயன்படுத்திய சசிகலா, இன்று அதே அதிகாரம் தன்னுடைய குடும்பத்தினரை பதம் பார்ப்பதை நேரடியாக அனுபவித்து வருகிறார்.


முதலில் சசிகலாவின் தம்பி திவாகரன்.  பின்னர் சித்தப்பா மருமகன் ராவணன்.  கடைசியாக சசிகலாவின் கணவர் நடராஜன்.  அடுத்து டாக்டர் வெங்கடேஷ் மற்றும் நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் என்று தெரிவிக்கிறது காவல்துறை வட்டாரங்கள்.  தற்பொழுது அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ராவணனும், திவாரகனும் செய்தி அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.


மன்னார்குடியில் நேஷனல் ஸ்கூல் என்று ஒரு பள்ளி இருக்கிறது. இந்தப்பள்ளியின் நிர்வாகம் தொடர்பாக இரண்டு பிரிவினருக்கு இடையில் நெடுங்ககாலமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.  இதில் ஒரு தரப்பு திமுக ஆதரவு தரப்பு. மற்றொரு தரப்பு திவாகரன் ஆதரவு தரப்பு.   திமுக ஆதரவு தரப்பிடம் இந்தப் பள்ளி நிர்வாகம் இருந்து வந்த நிலையில், அந்தப் பள்ளியின் நிர்வாகத்தை ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.  அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திவாகரன் ஆதரவு தரப்பு பள்ளி நிர்வாகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், நிர்வாகத்தை கவனித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் 4 கோடி ரூபாய் கையாடல் செய்து விட்டார் என்று புகார் அளிக்கின்றனர். அந்தப் புகாரில் ஓய்வு பெற்ற ஆசிரியரை கைது செய்ய வேண்டும் திவாகரன் உத்தரவிட, மன்னார்குடி டிஎஸ்பி அய்யனார், ஆய்வாளர் சேதுமணிமாதவன் ஆகியோர் நள்ளிரவு 1 மணிக்கு ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டுக்கு சென்று, இரும்பு கேட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளனர்.   அவரின் திருமணமான பெண் மற்றும் அவரது வயதான மனைவி மட்டும் இருந்துள்ளனர்.   "எங்கே உங்கள் அப்பா" என்று மிரட்டி விட்டு அவர் இல்லை என்றதும், அந்தப் பெண்ணை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு, அவர்களது அடுத்த மகள் இருக்கும் வேதாரண்யத்துக்கு ஜீப் சென்றுள்ளது.  அங்கேயும் அவர் இல்லை என்றதும், அவரது இரண்டாவது மகளின் கணவர் ஜீப்பில் ஏற்றப்பட்டுள்ளார். அடுத்த மகள் குடியிருக்கும் நாகப்பட்டினத்துக்கு சென்று, அவரின் கணவரும் ஜீப்பில் ஏற்றப்பட்டுள்ளார். காலை 8 மணிக்கு மகள் மட்டும் விடுவிக்கப்பட்டு, மருமகன்கள் இருவரும் காவல்நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் தாக்கல் செய்துள்ளார்.  இந்த சாதாரண மோசடி வழக்கில், ஜாமீன் வழங்கக்கூடாது என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவனீதகிருஷ்ணன் ஆஜராகி வாதாடியுள்ளார்.    ஒரு வாரம் வரை கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பை தள்ளி வைக்கிறது.   இந்த தைரியத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீண்டும் வீட்டுக்கு செல்கிறார்.   வீட்டுக்கு சென்றவுடன், தலைமை ஆசிரியர் அவர் பணியாற்றிய பள்ளியில் உள்ள ஒருவரை கொலை முயற்சி செய்ததாக அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


இது அத்தனையும், அக்டோபர் 2011 முதல் நவம்பர் 2011 வரை நடைபெற்றவை. இப்படி காவல்துறையை ஆட்டிப்படைத்த திவாகரன்தான் இன்று சிறையில் தன் இருளான எதிர்காலத்தை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.


இந்த அத்தனை வழக்குகளிலும் பின்ணியில் இருப்பவர் முதலமைச்சராக, காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜெயலலிதா.   தன் தோழிக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ஒரு பெண் மீது கஞ்சா வழக்கு.   தன் பணத்தை எடுத்துச் சென்று விட்டார் என்பதற்காக மற்றொருவர் மீது ஹெராயின் வழக்கு.  தன்னையே பகைத்துக் கொண்டார்கள் என்பதற்காக தற்போது சசிகலா உறவினர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு.


இந்த அத்தனை நேர்வுகளிலும், சட்டவிரோதமாக பணியாற்றியது யார் என்று கேட்டால் அது தமிழக காவல்துறை அதிகாரிகள் தான்.   உங்களில் யாராவது ஒருவர் காவல்நிலையம் சென்று, உங்கள் இரு சக்கர வாகனம் தொலைந்து விட்டது என்று புகார் கொடுத்துப் பாருங்களேன்.   எப்ஐஆர் போடுவதற்குள் தாலியை அறுத்து விடுவார்கள். உங்களுக்கு யாராவது உயர் அதிகாரியோ, பத்திரிக்கையாளரோ, முக்கிய பிரமுகரோ தெரிந்திருந்தால் மட்டுமே எப்ஐஆர் போடப்படும்.   வேறு ஏதாவது அடிதடி வழக்கு என்று சென்று புகார் கொடுத்தப் பாருங்களேன்.   உங்களை பஞ்சாயத்து பேசி அனுப்பி வைப்பார்களே தவிர, சாமான்யத்தில் எப்ஐஆர் போட மாட்டார்கள்.


நடராஜனோ, திவாகரனோ, ராவணனோ, இவர்கள் உண்மையில் நில அபகரிப்பில் ஈடுபட்டிருந்தார்களேயானால் இவர்கள் மீது சட்டம் பாய்வதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  ஆனால், மணல் குவாரி வாங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்தேன் திருப்பித் தராமல் மிரட்டினார், மிரட்டி நிலத்தை வாங்கிக் கொண்டார் என்றெல்லாம் போடப்படும் வழக்குகள் உண்மையான வழக்குகளா ?   திவாகரன் ராவணன் போன்றோர் செய்த காரியங்களுக்கு அவர்கள் சிறைக்கு செல்ல தகுதியானவர்கள் என்றாலும் கூட பிடிக்காத எதிரிகள் மீது பொய் வழக்கு போடுவதை எப்படி நியாயப்படுத்த முடியும் ?


ஆட்சியாளர்கள் யாரை கைது செய்ய உத்தரவிட்டாலும், அதற்காக ஒரு புகார்தாரரை தயார் செய்து, எப்ஐஆர் போட்டு, உடனே கைது செய்து சிறையில் அடைக்கும் காவல்துறை அதிகாரிகள் அரசு ஊழியர்கள் அல்ல…. அடிமைகள்.


நடராஜனை கைது செய்யும்போது, சென்னையில் அவரை கைது செய்த தஞ்சாவூர் போலீசார் என்ன வழக்கில் கைது செய்வதென்றே முடிவு செய்யவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.   முள்ளிவாய்க்காலில் இறந்த ஈழத்தமிழருக்காக நினைவிடம் என்று பொங்கல் விழாவில் நடராஜன் அறிவித்திருந்த இடத்தின் சொந்தக்காரரை, விடுதலைப்புலிகளோடு தொடர்பு என்று வழக்கு பதிவு செய்து கைது செய்வோம் என்று மிரட்டி புகார் பெறப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.  நடராஜனை கைது செய்து, தஞ்சாவூர் அழைத்துச் சென்று விடியற்காலை 4.30 மணிக்கு இரண்டாம் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பதிலாக முதலாம் நீதிமன்ற நடுவர் மாலதி முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.    மாலதி, நடராஜனை ரிமாண்ட் செய்வதற்கு மறுத்துள்ளார்.  முதலாம் நீதிமன்ற நடுவர் முருகன் என்பவர் லீவில் சென்று விட்டார் என்று அவரிடம் கூறியுள்ளார்கள்.  இல்லை அவர் விடுப்பில் செல்லவில்லை, அவர் நேற்றுதான் விடுப்பு.  இன்று விடிந்து விட்டது.  இன்று அவர் பணியில் உள்ளார் நான் எப்படி ரிமாண்ட் செய்ய முடியும் என்று மறுத்ததற்கு, முருகனை நாங்கள் லீவில் அனுப்புகிறோம் என்று சொல்லி, முதலாம் நீதிமன்ற நடுவரை விடுப்பில் செல்ல வைத்திருக்கிறார்கள்.


சட்டபூர்வமான உத்தரவுகள் வருகையில் அதை நிறைவேற்றுவது ஒரு காவல்துறை அதிகாரியின் கடமை.   ஆனால் அதே நேரத்தில் ஆட்சியாளர்களுக்கு பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யுங்கள் என்று வரும் உத்தரவுகளை நிறைவேற்றும் இந்தக் காவல்துறை அதிகாரிகள் தாங்கள் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறோம் என்ற நினைவில்லாமல், ஜெயலலிதாவின் சொந்தப் பணத்தில் ஊதியம் பெறும் விசுவாசமான பண்ணை அடிமைகளைப் போல நடந்து கொள்வது வேதனையளிக்கும் விஷயம்.  பொய்வழக்கு பதிவு செய்ய மாட்டேன் என்று ஒரே ஒரு காவல்துறை அதிகாரி கூட மறுப்பதில்லை என்பது, நம் நாட்டில் ஜனநாயக முறைதான் உள்ளதா… அல்லது மகாராணியின் அடிமை ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.


இப்படி மகாராணியின் விசுவாசமான அடிமைகளாக இருப்பதால்தான், காவல்துறை அதிகாரிகள் அப்பாவிகளைச் சுட்டுக் கொல்லும் போதும், பழங்குடிப்பெண்களை இரவில் கைது செய்து பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் போதும், அரசு முன்னின்று அவர்களைக் காப்பாற்றுகிறது.


காவல்துறையினர் மத்தியில் பரவியிருக்கும் இந்த அடிமை மனோபாவம்  ஜனநாயகத்தை பீடித்திருக்கும் மிக மோசமான புற்றுநோயே அல்லாமல் வேறு என்ன ?
Thanks to savukku

Dinakaran E-paper 21-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 21st february 2012

Posted: 20 Feb 2012 07:23 PM PST


Dinakaran E-paper 21-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 21st february 2012

Download Link

Dinamalar E-paper 21-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 21st february 2012

Posted: 20 Feb 2012 01:57 PM PST


Dinamalar E-paper 21-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 21st february 2012

Download Link

சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிக்க தயாரா?

Posted: 20 Feb 2012 01:57 PM PST


சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிக்க தயாரா?

"சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிக்க தயாரா?' என, முதல்வர் ஜெயலலிதா விடுத்த சவாலை விஜயகாந்த் ஏற்றுக் கொண்டுள்ளார். "சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க., வேட்பாளராக முத்துக்குமார் போட்டியிடுகிறார்' என, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தும், தி.மு.க., வேட்பாளர் ஜவகர் சூரியகுமாருக்கு ஆதரவு அளிக்கப்படும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் நேற்று அறிவித்துள்ளனர். இதனால் தேர்தல் களத்தில் நான்கு முனைப்போட்டி உருவாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் கருப்பசாமி மறைவு தொடர்ந்து, அடுத்த மாதம் 18ம் தேதி சங்கரன்கோவில் தொகுதியில், இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நாளை துவங்குகிறது. ஆளுங்கட்சியின் சார்பில் முத்துச்செல்வி போட்டியிடுகிறார். தொகுதியில், 26 அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணி ஜரூராக நடந்து வருகிறது. தி.மு.க., வேட்பாளராக ஜவகர் சூரியகுமாரும், ம.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமாரும் போட்டியிடுகின்றனர். வரும் 24ம் தேதி சதன் திருமலைக்குமார் மனு தாக்கல் செய்கிறார். இடைத்தேர்தலில் தே.மு.தி.க., போட்டியிடுமா அல்லது புறக்கணிக்குமா என்பது குறித்து சென்னையில் இன்று நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.ஆனால், திடீரென தே.மு.தி.க., வேட்பாளராக முத்துக்குமார் நிறுத்தப்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டார்.


அவரது அறிக்கை:நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட துணை செயலர் முத்துக்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார்.திருநெல்வேலி அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., பயின்றவர். எம்.பி.ஏ., பட்டப் படிப்பு அழகப்பா பல்கலைக் 
கழகத்தின் தொலைதூர கல்வி மூலம் முடித்துள்ளார். 2006ல், சட்டசபை தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டவர். இவர் சங்கரன்கோவில் நகரத்தில் வசிக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.கடந்த உள்ளாட்சிதேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிட்டது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலுடன் நடந்த திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் நேருவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.நடந்து முடிந்த தி.மு.க., பொதுக்குழுவில் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என, தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் டில்லியில் உள்ள மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டுள்ளார்.அதன் அடிப்படையில் நேற்று தி.மு.க., வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளராக ஜவகர் சூரியகுமாரை அக்கட்சி வேட்பாளராக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளரை ஆதரிக்கும் என்பதை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான குலாம்நபி ஆசாத் ஒப்புதலின் பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தற்போதைய நிலவரப்படி சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., ஆகிய நான்கு கட்சிகள் மத்தியில் போட்டி உருவாகியுள்ளது.


வேட்பாளர்கள் யார் யார்? கட்சி வேட்பாளர்
அ.தி.மு.க., முத்துச்செல்வி
தி.மு.க., ஜவகர் சூரியகுமார்
தே.மு.தி.க., முத்துக்குமார்
ம.தி.மு.க., சதன் திருமலைக்குமார்


சங்கரன்கோவில் தே.மு.தி.க., வேட்பாளர் பயோடேட்டா
பெயர்: க.முத்துக்குமார், 37.
படிப்பு:பி.இ., எம்.பி.ஏ.,
தொழில்: விவசாயம்
குடும்பம்: தந்தை கருப்பசாமி, மனைவி ராஜலட்சுமி, பி.காம்., 3 மாத பெண் குழந்தை.
அரசியல்: கட்சியின் மாவட்ட துணைச்செயலர். 
2006ல் சங்கரன்கோவில் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்டு, 5,531 ஓட்டுகள் பெற்றார்.
- நமது சிறப்பு நிருபர் - 

ஏப்ரல் 14-ல் சகுனி!

Posted: 20 Feb 2012 01:48 PM PST


ஏப்ரல் 14-ல் சகுனி!

ஏப்ரல் 14-ம் தேதியை என்னவென்று கொண்டாடுவதென்று தமிழர்கள் குழப்பத்திலிருந்தாலும், ஏதோ ஒரு விசேஷ தினமாக கொண்டாடிவிட்டுப் போகட்டும், நம்ம வியாபாரத்தைப் பார்க்கலாம் என்ற நினைப்பில் புதுப்படங்களை ரிலீஸ் செய்யும் வேலையில் மும்முரமாகியுள்ளனர் தமிழ் சினிமாக்காரர்கள்.


அவர்களைப் பொறுத்தவரை அய்யா ஆட்சியிலிருந்தால் ஏப்ரல் 14 சித்திரை திருநாள். அம்மா வந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு என்பதில் தெளிவாக உள்ளனர்!


இந்த சித்திரை முதல் தினத்தில் வெளியாகும் படங்களில் முந்திக் கொண்டுள்ளது கார்த்தி நடிக்கும் சகுனி.


இந்தப் படத்தில் கார்த்தி அரசியல்வாதியாக நடித்துள்ளார். கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, அரசியல் ஆட்டத்தில் எப்படியெல்லாம் விளையாடுகிறார், எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றுகிறார் என்பதுதான் கதை.


கார்த்திக்கு இந்தப் படத்தில் ஜோடி பரணிதா. ஆனால் உண்மையான ஜோடி சந்தானம் எனும் அளவுக்கு காமெடியில் பின்னிப் பெடலெடுத்துள்ளார்களாம்.


ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. மார்ச்சில் பாடல் வெளியீடு, ஏப்ரல் 14-ல் பட வெளியீடு என பக்கா திட்டமிடலுடன் படத்தைத் தயார் செய்துள்ளார் இயக்குநர் சங்கர் தயாள்.
Thanks to OneIndia


உடும்பன் - விமர்சனம்

Posted: 20 Feb 2012 01:46 PM PST


உடும்பன் - விமர்சனம்
நடிப்பு: திலீப் ரோஜர், சனா, கீத்திகா, சுனில், செந்தில்
பிஆர்ஓ: செல்வரகு
ஒளிப்பதிவு: கிச்சாஸ்
இசை, எழுத்து, இயக்கம்: பாலன்
தயாரிப்பு: ஜெகந்நாதன் - மாடர்ன் சினிமா


தனியார் கல்விக் கொள்ளையை தைரியமாகச் சாடியிருக்கும் படம் உடும்பன். எடுத்துக் கொண்ட கதையில் எந்த காம்ப்ரமைஸுக்கும் இடம் தராமல் உடும்புப் பிடியாக நின்று, 'யாருப்பா இந்த இயக்குநர்?' என்று கேட்க வைத்திருக்கும் பாலனுக்கு முதலில் பாராட்டுக்கள், வாழ்த்துகள்!


ஹீரோவுக்கு (திலீப் ரோஜர்) தொழில் திருட்டு (அவர் குடும்பத்துக்கே அதான் தொழில்!). அதற்கு பார்ட்னர் ஒரு உடும்பு! ஒரு நாள் ஹீரோவும் உடும்பும் வழக்கம்போல திருடப் போகிறார்கள். இந்த முறை ஒரு போலீஸ் ஐஜி வீட்டுக்குப் போகிறார்கள்.


ஆனால் அங்கோ திருட ஒன்றும் கிடைக்கவில்லை. ஐஜியும் அவர் மனைவியும் தங்களிடம் இருந்த பணம், நகை அனைத்தையும் தனியார் பள்ளியில் பிள்ளையைச் சேர்க்க இழந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். நீ முகமூடி போட்டு கொள்ளையடிக்கிறாய்... தனியார் பள்ளிகளோ முகமூடியே போடாமல் பகல் கொள்ளை அடிக்கிறார்கள், என்று கதற... 'அடடா கொள்ளையடிக்க இது நல்ல ரூட்டாயிருக்கே' என்று மனசு மாறும் ஹீரோ, இருக்கும் பணத்தையெல்லாம் போட்டு ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறான்.


ஆனால் அந்த நேரம் பார்த்து ஐஜி வீட்டில் திருட முயன்ற குற்றத்துக்காக சிறை செல்ல நேர்கிறது. அப்போதுதான் ஜெயிலிலிருந்து திரும்பும் தன் அண்ணனிடம் பள்ளியை ஒப்படைத்துவிட்டு சிறைக்கு செல்கிறான்.


சிறையிலிருந்து திரும்பி வந்து பார்த்தால், அவன் ஆரம்பித்த பள்ளி ஓஹோவென்று வளர்ந்து, மக்களிடம் நன்கொடை பிடுங்குவதில் நம்பர் ஒன்னாக நிற்கிறது. அண்ணன் பெரிய கல்வி வியாபாரியாகி, அடுத்து கல்லூரி ஆரம்பிக்கும் லெவலில் இருக்கிறான்.


ஆனால் தன் அண்ணன் ஏழைகளிடம் பெரிய அளவு பணத்தை பிடுங்கி அவர்களின் சாபத்துக்குள்ளாவதைப் பார்த்து, மனம் மாறுகிறான் ஹீரோ. அப்போதுதான் பள்ளிக்கூடம் பற்றி ஆய்வுப் படிப்புக்காக வரும் சனாவுடன் ஹீரோவுக்கு காதல் மலர்கிறது.


ஆனால் அந்தக் காதல் நிறைவேற சனா ஒரு கண்டிஷன் போடுகிறார். அது அனைவருக்கும் இலவசக் கல்வி. அதை எப்படி நிறைவேற்றுகிறார்கள், கொள்ளையடிக்கும் பள்ளிக்கு எப்படி கடிவாளம் போடுகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.


இன்றைய கல்வி முறையால் எந்த அளவு இந்த சமூகம் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இந்தப் படம்.


'உடும்பைப் போட்டு கொள்ளையடித்து போலீசுக்கு ஷேர் கொடுத்துக் கொண்டிருப்பதைவிட, ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சு மக்கள்கிட்ட புடுங்கினா சீக்கிரம் கோடீஸ்வரன் ஆகிடலாம்' என்பதுதான் நாட்டின் யதார்த்த நிலை. அதை கொஞ்சமும் தயக்கமின்றி, ஒளிவு மறைவின்றி சொல்லியிருக்கிறார்கள்.


குறிப்பாக வசனங்கள் ஒவ்வொன்றும் கல்விக் கயவர்களை நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் அளவுக்கு செம ஷார்ப். தனியார் பள்ளிகளில் இவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும், அவர்கள் மாணவர்களைப் பார்த்துக் கொள்ளும் லட்சணத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இந்தக் கொள்ளையர்களுக்கு பணம் கட்டி மாளாமல் ஒரு விவசாயி மாண்டே போவகு கண்களை கசிய வைக்கும் சோகம்!


ஹீரோ திலீப் ரோஜர். பைக் ரேஸ் வீரர். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நன்றாகவே நடித்திருக்கிறார். ஹீரோயின்கள் சனா, கீந்திகா தங்கள் கேரக்டர்களைப் புரிந்து நடித்திருக்கிறார்கள்.


ஹீரோவின் அண்ணனாக வரும் சுனில் நடிப்பு சமயத்தில் மீட்டரைத் தாண்டிப் போகிறது. ஹீரோவின் அம்மா கம்பம் மீனா, நண்பனாக வரும் செந்தில் அனைவருமே மனதில் இடம்பிடிக்கிறார்கள்.


ஒரு படம் நம் பிரச்சினைகளைப் பேசினால் நம் மனசுக்கு நெருக்கமாகிவிடும். அதன் மற்ற குறைகள் கூட பெரிதாகத் தெரியாது. இந்த உடும்பன் கூட அப்படித்தான். படத்தின் இரண்டாம் பாதியில் தேவையற்ற சில பாடல்கள், லாஜிக் மீறல்கள், இது நக்கலா சீரியஸா என்று யோசிக்க வைக்கும் சில காட்சிகள் இருந்தாலும், உடும்பன் நம்மை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது.


அரசுப் பள்ளியை தரமுயர்த்த மந்திரி வீட்டிலே கன்னக்கோல் வைக்கிறான் உடும்பன். கைத்தட்டலில் அரங்கம் அதிர்கிறது.


உடும்புக்கறி சாப்பிட்டு கல்விக் கொள்ளையன் இறக்க, அவனது மொத்த சொத்துக்களையும் அரசிடமே ஒப்படைக்கிறான் அதே உடும்பன். இதற்கும் கைத்தட்டல். மனித மனம் எத்தனை வினோதமானது பாருங்கள்!


கிச்சாஸ் ஒளிப்பதிவு, விடி விஜயன் எடிட்டிங் இரண்டும் படத்துக்கு பலம். இயக்குநர் பாலனே இசையமைத்துள்ளார். பாவேந்தர், பட்டுக்கோட்டையாரின் பாடல்களைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.


இன்றைய கல்விச் சூழலுக்கு எதிரான குரல்கள் ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருந்தாலும், அதை மக்களின் குரலாக மாற்றும் சக்தியும் வீச்சும் சினிமாவுக்கு மட்டும்தான் உள்ளது. உடும்பன் மாதிரி படங்களை மக்கள் ஆதரிப்பது, அவர்கள் பிள்ளைகளுக்கு நல்லது!
Thanks to OneIndia

தமிழ் சினிமாவின் அபார நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்!

Posted: 20 Feb 2012 01:44 PM PST


தமிழ் சினிமாவின் அபார நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்!

தமிழ்த் திரையுலகம் கண்ட ஒப்பற்ற நடிகைகளில் ஒருவரான எஸ்.என்.லட்சுமி மரணமடைந்துள்ளார்.


பெரிய ஹீரோவாக இருந்தால்தான் உண்டு, பெரிய ஹீரோயினாக இருந்தால்தான் பரிமளிக்க முடியும் என்பதெல்லாம் கிடையாது. சாதாரண வேடங்களில் வந்து போகும் பலர் தங்களது அபார நடிப்பால் அசத்தி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர் லட்சுமி.


தமிழ்த் திரையுலகம் கண்ட சிறப்பான நடிகைகளில் இவருக்கும் தனி இடம் உண்டு. 85 வயது குடு குடு பாட்டியானாலும் கூட தனது நடிப்பை விடாமல், தொடர்ந்து வந்தவர் லட்சுமி.


அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கே அம்மாகவாக நடித்து அசத்தியவர். இந்தக் காலத்து நடிகர்களுடனும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். துலாபாரம் படத்தில் இவரது கேரக்டர் அனைவரையும் கண்ணீர் விட வைத்தது. இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 1000. ஆனால் அதில் இவரது நடிப்பு பல ஆயிரம் படங்களுக்குச் சமமானது.


சமீப காலமாக டிவி தொடர்களில் நடித்து வந்த எஸ்.என்.லட்சுமி, ஒரு படப்பிடிப்பின்போது வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவரது முதுக் தண்டுவடத்தில் அடிபட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.


கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்போடு வாழ்ந்து வந்தவர் லட்சுமி. தனது சாலிகிராமம் வீட்டில் அண்ணன் பேத்திகளோடு வசித்து வந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். நாளை உடல் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சென்னல்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.


நாடகங்களிலேயே அசத்தியவர்


ஆரம்ப காலத்தில் இவர் நாடக நடிகையாக இருந்தார். என்.எஸ்.கேவின் நாடகக் குழுவில் இணைந்து நடித்து வந்தார். பின்னர் கே.பாலச்சந்திரன் ராகினி ரீக்ரியேஷன்ஸ் உள்ளிட்டவற்றிலும் இடம் பெற்று நடித்தார்.


நாடகத்தில் நடித்தபோதே தனது நடிப்பாற்றலால் அனைவரையும் வியக்க வைத்தவர் லட்சுமி. பெண்களே நடித்த நாடகம் ஒன்றில் இவர் ஸ்டண்ட் காட்சிகளிலும், பல்டி அடிக்கும் காட்சிகளிலும் நடித்து அசத்தினாராம். சண்டையை முறையாகவும் கற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கத்திச் சண்டை பிரமாதமாகப் போடுவாராம்.


எம்.ஜி.ஆர் நடித்த பாக்தாத் திருடன் படத்தில் இவர் சிறுத்தையுடனும் கூட சண்டை போட்டு நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


இவர் நடித்த முதல் படம் எது என்றால் அது நல்ல தங்காள். ஆனால் சர்வர் சுந்தரம்தான் இவருக்குப் பிரேக் கொடுத்த படமாகும். சர்வர் சுந்தரத்தில் இவரது பாத்திரத்தை யாரும் மறக்க முடியாது.


பின்னாளில் கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகையாக மாறிப் போனார் லட்சுமி. தேவர் மகனில் ஆரம்பித்து விருமாண்டி வரை கிட்டத்தட்ட கமல்ஹாசனின் அத்தனைப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இவர் நடித்த அந்த திருட்டுப் பாட்டி கேரக்டரை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அதேபோல மகாநதியில் கமல்ஹாசனின் மாமியாராக வந்து அனைவரையும் கவர்ந்தார்.


அதேபோல மணிரத்தினமும் இவரை தனது படங்களில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக அக்னிநட்சத்திரம் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.


டெல்லி பெல்லி - ஆர்யா, சந்தானம் !

Posted: 20 Feb 2012 01:40 PM PST


டெல்லி பெல்லி - ஆர்யா, சந்தானம் !
அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள காமெடி படம் 'டெல்லி பெல்லி'. இப்படம் இந்தி திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


'டெல்லி பெல்லி' படத்தினை விநியோகம் செய்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையும் யு.டிவி நிறுவனத்திடம் தான் இருக்கிறது. ஆகவே தமிழில் அப்படத்தினை யு.டிவி தயாரிக்க இருக்கிறார்கள்.


'டெல்லி பெல்லி' படம் குறித்து பல்வேறு தகவல்கள் கோடம்பாக்கத்தில் உலா வந்தன. அனைத்து தகவல்களையும் யு.டிவி நிறுவனம் மறுத்தது.


இந்நிலையில் தற்போது மீண்டும் 'டெல்லி பெல்லி' குறித்து செய்திகள் கோடம்பாக்கத்தை வலம் வர ஆரம்பித்துள்ளன.


ஆர்யா, சந்தானம் நடிக்க இப்படத்தினை இயக்க இருக்கிறாராம் கண்ணன். 'டெல்லி பெல்லி' ரீமேக்கில் முதலில் ஜெயம் ரவி நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின.  ஆனால் இப்போது, 'பாஸ் (எ) பாஸ்கரன்' காமெடி கூட்டணியான ஆர்யா, சந்தானம் இருவரும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


செல்வராகவன் இயக்கி வரும் 'இரண்டாம் உலகம்' படத்தினைத் தொடர்ந்து இப்படத்தில் ஆர்யா நடிப்பார் என தெரிகிறது.
Thanks to OneIndia