TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


SunTv Headline News 24-02-2012 | Sun Tv headline News 24-02-12 | Sunnews 24th february 2012

Posted: 24 Feb 2012 02:04 AM PST


SunTv Headline News 24-02-2012 | Sun Tv headline News 24-02-12 | Sunnews 24th february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 24-02-2012 | Sun Tv Athipookal Serial 24th february 2012

Posted: 24 Feb 2012 01:19 AM PST


Athipookal 24-02-12 | Sun Tv Athipookal Serial 24th february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 24-02-2012 | Sun Tv Elavarasi Serial 24th february 2012

Posted: 24 Feb 2012 12:37 AM PST


Ilavarasi 24-02-12 | Sun Tv Elavarasi Serial 24th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 24-02-2012 | Sun Tv Shows Thiyagam Serial 24th february 2012

Posted: 23 Feb 2012 11:50 PM PST


Thiyagam 24-02-12 | Sun Tv Shows Thiyagam Serial 24th february 2012



Updating...Refresh this page

This posting includes an audio/video/photo media file: Download Now

முப்பொழுதும் உன் கற்பனைகள் - விமர்சனம்

Posted: 23 Feb 2012 11:39 PM PST


முப்பொழுதும் உன் கற்பனைகள் - விமர்சனம்

காதலித்து பைத்தியமானவனின் கதை. இருக்கு ஆனா இல்ல என்று எதிரில் இல்லாத காதலியை இருப்பதாய் கற்பனை செய்துகொள்ளும் காதலனின் கதை. உலகத்திலேயே இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் இருவர் இருக்கிறார்கள் என்று கம்ப்யூட்டரைப் பார்த்து கணக்கெடுப்பாரே ஒரு டாக்டர். அதே வகையான கதை.


சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் அதர்வா, வேலை காரணமாக பெங்களூருக்கு செல்கிறார். அவருடைய சக ஊழியரான அமலா பாலின் நட்பு கிடைக்கிறது. இதற்கிடையில் அதர்வாவின் ஒரே ஆதரவாக கிராமத்தில் இருக்கும் அவருடைய அம்மா மரணமடைகிறார். 


இதனால் மனம் உடைந்துப்போகும் அதர்வாவுக்கு அமலா பாலின் நட்பு ஆறுதலாக இருக்கிறது. பிறகு அமலா பாலிடம் அதர்வாவுக்கு இருக்கும் நட்பு காதலாக மாறுகிறது. அமலா பாலுக்காக கொலைகளையும் செய்கிறார் அதர்வா. இந்த நிலையில் அமலா பால் அமெரிக்கா சென்று விடுகிறார்.  


சென்னையில் வேலை பார்க்கும் அதர்வாவுக்கு அமலா பால் தான் பாஸ். விடுமுறை நாட்களில் பெங்களூர் சென்று அமலாபாலோடு இருக்கிறார் அதர்வா. இங்கே இருப்பது நிஜமான அமலா பால். 


அங்கே இருப்பது கற்பனையான அமலா பால். காதல் முத்திப்போனதால் இப்படி காதல் பைத்தியமாகிறார் அதர்வா. அவர் இந்த நிலையை அடைந்ததற்கு ஒரு பயங்கரமான ஃப்ளாஷ் பேக்கும் படத்தில் இருக்கிறது.


அதர்வாவின் நிலையை அறிந்து அதிர்ச்சியடைந்த அமலா பால், ஏற்கெனவே திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டவர் என்பதால், அதர்வாவின் காதலை ஏற்க மறுக்கிறார். ஆனால் அதர்வாவின் காதல் விடுவதாக இல்லை. காதல் தொல்லைகள் ஒரு புறம் இருக்க, அமலா பாலை யாரோ கடத்திச் சென்று கொல்ல முயல்கிறார்கள். அந்த வில்லன்களிடம் இருந்து காதலியை மீட்கிறார் அதர்வா. 


அதர்வாவும் அமலாபாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். தன் மகனுக்காக தன்னை அசிங்கமாக மாற்றிக் கொள்ளும் அதர்வாவின் அம்மாவாக வரும் அனுபமா மனதில் நிற்கிறார். சண்டைக்காட்சிகளில் தன்னால் இயன்றவரை மெனக்கெட்டிருக்கிறார் அதர்வா. 


கதையை விடுங்க அது பரவாயில்லை! ஆனால் காட்சியமைப்புகள் மனதோடு நிற்கவில்லை. பார்வையாளருக்கும் படத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாத நிலையிலேயே இருக்கிறது காட்சியமைப்புகள். பாட்டப் போட்டுடாதீங்கப்பான்னு... நினைக்கும் போதுதான் பாட்டு வருகிறது. ஜி.வி.பிரகாஷின் இசையில் இரண்டு மூன்று பாடல்கள் கேட்கும் ரகம். 


ஆழமான காதலை அழுத்தம் இல்லாத காட்சிகளால் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எல்ரெட் குமார். காதலர்கள் கட்டியனைத்துக் கவிதை சொல்லும் போதும் ஏதோ ஒருவித சுகம் இல்லாமல் போனதில் காதலர்களுக்கு வருத்தம். காதலியை தூக்கிக்கொண்டு வானத்தில் பறப்பது தேவை இல்லாத கற்பனை. 


இயக்குனரும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் ஒவ்வொரு காட்சிக்கும் செலவு செய்த பணம் நன்றாகவே தெரிகிறது. இவ்வளவு பணத்தை செலவு செய்திருக்கிறார்கள், ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கலாமே! 


முப்பொழுதும் உன் கற்பனைகள் - பைத்தியம் பிடிக்கிறது, படத்தின் நாயகனைப் போலவே பார்ப்பவர்களுக்கும்!
Thanks to Nakkheeran

காதலில் சொதப்புவது எப்படி? - விமர்சனம்

Posted: 23 Feb 2012 11:34 PM PST


காதலில் சொதப்புவது எப்படி? - விமர்சனம்

ஜாலியான படம். காதலர்களுக்கு இடையே நடக்கும் ரகளையான விஷயங்களை படமாக்கிய விதம் அருமை. காதலில் சொதப்புவது எப்படி? என்ற குறும்படத்தில் இருந்து பிறந்ததே இந்த திரைப்படம்.ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள். இருவருக்கும் இடையே சண்டைவருகிறது ( வந்தே தீர வேண்டும் ). யார் விட்டுக்கொடுப்பது என்ற ஈகோ பிரச்சனை. கடைசியில் காதல் கைகூடுகிறது. இதை எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம் என்ற கேள்வி எழலாம். ஆனால், இது புதுசு என்றே சொல்ல முடியும்.


இந்தகாலத்து காதலில் காதலி காதலனுக்கு அதிகபட்சமாக போடும் கண்டீஷன்கள் இதுதான். எந்த வேலையாக இருந்தாலும் அதை விட்டுவிட்டு காதலியோடு ஷாப்பிங் போக வேண்டும். சந்திக்க முடியாத சமயத்தில் அடிக்கடி போன் பண்ணி பேசனும். என்ன ஆனாலும், உலகமே அழிந்தாலும் எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கிட்டே இருக்கனும்! இந்த மாதிரி கடமைகளை காதலன் செய்யாவிட்டால் காதல் கட்! இதே மாதிரி ஒரு பிரச்சனை தான் இவர்கள் காதலிலும். 


சந்தோஷத்தின் பிறப்பிடம் என அருண் வீட்டை சொல்லலாம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் செல்லப்பிள்ளையாக சித்தார்த் (அருண்). அமலா பாலுடன் (பாரு என்கிற பார்வதி) சித்தார்த் நட்புக்கொண்டிருப்பதை கண்டு சித்தார்த்தின் பெற்றோர் மகிழ்கின்றனர். இதனிடையே சித்தார்த்-அமலா பால் நட்பு காதலாக மாறுகிறது.


அமலா பால் வீடோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இவரது அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும், இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சனைகளால் விவாகரத்து வரை
போய்விடுகிறார்கள்.


இந்நிலையில் தனித்து விடப்படும் அமலா பால் சித்தார்த்தின் அன்பை நாட, அவரோ அவரை அறியாமல் அமலா பாலை தவிர்த்து விடுகிறார். இதற்கு முன் சிறு சிறு சொதப்பல்களால் சண்டையிட்டு பின் சேர்ந்து கொண்டாலும் இந்த நிகழ்வால் இருவரும் பிரிந்து விடுகிறார்.


சொதப்பலில் விழுந்த காதல் என்ன ஆனது? அமலா பாலின் பெற்றோர்கள் நிலை என்ன ஆனது? என்பதை சொல்லி சுபம் போட்டிருக்கிறார் அறிமுக இயக்குனரான பாலாஜி மோகன். அருண் என்ற கேரக்டரில் வரும் சித்தார்த் அப்பிராணி காதலன் வேடத்தில் அசத்துகிறார். 


காதலி பிரிந்து விட்டாளே. அதை மறக்க என்ன செய்ய வேண்டும் என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்க, அவர்களில் 75 சதவீதம் பேர் தண்ணியடிக்க சொல்கின்றனர். அப்போது "ஏற்கனவே என் இதயம் டேமேஜ் ஆயிடிச்சி, இதனால் என் கிட்னியையும் டேமேஜ் செஞ்சுக்க விரும்பல" எனும்போது பளிச்சென மனதில் நிற்கிறார். 


பார்வதியாக வரும் அமலாபால் கல்லூரி மாணவி பாத்திரத்தில் கச்சிதமாய பொருந்துகிறார். எதார்த்தமான நடிப்பிலும் அமலா பால் அசத்துகிறார். 


அமலா பாலின் அப்பாவாக வரும் சுரேஷ் மனைவியோடு சேரும் போது 'வளையோசை கலகலகலவென...' என்று பாடல் ஒலிக்கிறதே அது அற்புதமான காட்சியமைப்பு. சித்தார்த்தின் பெற்றோர் அமலா பாலை பார்த்ததுமே, பேசும் விதமும், நீயும் என் பையனும் ப்ரண்ட்ஸாமே! நானும் என் மனைவியும் கூட காலேஜ் படிக்கும் போது ப்ரண்ட்ஸாதான் இருந்தோம்! என்று சொல்லுவது செம கலாட்டா.


சித்தார்த்தின் நண்பனாக வரும் விக்னேஷ், காதலை சொல்லும் நேரத்தில் அந்த பொண்ணு அண்ணான்னு கூப்பிட்டுவது கலாய்ப்பு. நூலகத்தில் புத்தகம் எடுக்கிற காட்சி சூப்பர். எப்போ பார்த்தாலும் பெண்களிடம் அரை வாங்கும் இன்னொரு நண்பன் அர்ஜூன் ஒவ்வொரு வசனத்திலும் சிரிக்க வைக்கிறார்.


அதிகம் இம்சை கொடுக்காத அளவான பாடல்கள் ஆறுதலான விஷயம். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் தனித்துவம். 


காதலில் சொதப்புவது எப்படி?  - ரசிக்க வைக்கும் சொதப்பல்
Thanks to Nakkheeran

Mutharam 24-02-2012 | Sun Tv Muthaaram Serial 24th february 2012

Posted: 23 Feb 2012 11:16 PM PST


Mutharam 24-02-12 | Sun Tv Muthaaram Serial 24th february 2012


Updating....Refresh this page

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 24-02-2012 | Sun Tv Vellai Thamarai Serial 24th february 2012

Posted: 23 Feb 2012 11:15 PM PST


Vellai Thamarai 24-02-12 | Sun Tv Vellai Thamarai Serial 24th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 24-02-2012 | Sun Tv Uravugal Serial 24th february 2012

Posted: 23 Feb 2012 11:13 PM PST


Uravugal 24-02-12 | Sun Tv Uravugal Serial 24th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 24-02-2012 | Sun Tv kasthuri Serial 24th february 2012

Posted: 23 Feb 2012 11:12 PM PST


Kasturi 24-02-12 | Sun Tv kasthuri Serial 24th february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 24-02-2012 | Sun tv Marudhaani 24th february 2012

Posted: 23 Feb 2012 11:12 PM PST


Maruthani 24-02-12 | Sun tv Marudhaani 24th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய அணிக்கு 3 கேப்டன்கள் பலிக்குமா புது பார்முலா

Posted: 23 Feb 2012 07:48 PM PST


இந்திய அணிக்கு 3 கேப்டன்கள் பலிக்குமா புது பார்முலா

மும்பை: இந்திய அணிக்கு மூன்று கேப்டன்களை நியமிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த பார்முலா ஏற்கனவே இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளில் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. வரும் 2013ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற இருப்பதாக தோனி அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்ட மாற்றத்துக்கு இந்திய அணி ஆயத்தமாகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்திக்க, விமர்சனக் கணைகளில் சிக்கித் தவிக்கிறது. இது போதாதென்று கேப்டன் தோனி, சேவக் இடையிலான மோதலும் நிலைமையை மோசமாக்கியது. தற்போதைய பிரச்னைகளுக்கு தீர்வாக, டெஸ்ட், ஒருநாள் போட்டி, டுவென்டி-20 என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கேப்டன்களை நியமிக்க வேண்டுமென முன்னாள் வீரர் கங்குலி கூறினார். தற்போது அதிகமான கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால், இம்முறையை தேர்வாளர்கள் கையாளலாம் என ஐடியா கொடுத்தார். இதனை ஏற்கனவே இங்கிலாந்து(ஸ்டிராஸ், அலெஸ்டர் குக், ஸ்டூவர்ட் பிராட்), தென் ஆப்ரிக்கா(கிரேம் ஸ்மித், டிவிலியர்ஸ்), ஆஸ்திரேலிய(மைக்கேல் கிளார்க், ஜார்ஜ் பெய்லி) அணிகள் பின்பற்றி வருகின்றன. முன்பு இந்திய அணியில் கூட கும்ளே(டெஸ்ட்), தோனி(ஒருநாள், டுவென்டி-20) என இரண்டு கேப்டன்கள் இருந்தனர். கும்ளே ஓய்வுக்கு பின் தான் தோனியின் தனிஆவர்த்தனம் ஆரம்பமானது. 
காம்பிர் வாய்ப்பு:
தோனியை பொறுத்தவரை டெஸ்டில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இவரது தலைமையில் இந்திய அணி தொடர்ந்து 7 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. தவிர, 2013ல் டெஸ்டில் இருந்து விடைபெற திட்டமிட்டுள்ளார். சச்சின், லட்சுமண், டிராவிட் ஆகியோர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் கேப்டனாக சேவக் சோபிக்கவில்லை. இவர்களை தவிர்த்தால் காம்பிர், 30, மட்டுமே சீனியர் வீரராக உள்ளார். இவரை டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கலாம். ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் அணியை வழிநடத்திய அனுபவம் உண்டு. போராடும் குணம் கொண்ட இவர், களத்தில் கங்குலியை போல கண்டிப்புடன் நடந்து கொள்வார். 
தோனி தொடரட்டும்:
ஒருநாள் போட்டிகளில் தோனி, 30, அசைக்க முடியாத வீரர். அணிக்கு உலக கோப்பை வென்று தந்த பெருமைமிக்கவர். டெஸ்டில் சோபிக்காத இவர், ஒருநாள் அரங்கில் தொடர்ந்து அசத்துகிறார். இதுவரை 201 போட்டிகளில் 6,688 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 51.44. மேட்ச் வின்னரான இவர், தேவைப்பட்டால் கடைசி பந்தில் கூட சிக்சர் அடித்து வெற்றித் தேடித் தருவார். இந்திய அணிக்கு அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக உள்ள இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தலைமை வகிக்கிறார். இவரது சுமையை குறைக்கும் பொருட்டு, டெஸ்ட் போட்டிக்கு பிரேக் தரலாம். ஒருநாள் போட்டிகளில் மட்டும் கேப்டனாக தொடரலாம். 
வருகிறார் கோஹ்லி:
தோனி ஏற்கனவே டுவென்டி-20 உலக கோப்பை வென்று விட்டார். இனி இந்த வகை கிரிக்கெட்டில் இவர் சாதிக்க ஒன்றும் இல்லை. எனவே, டுவென்டி-20 அணியின் கேப்டன் பொறுப்பை இளம் வீரரான விராத் கோஹ்லி, 23, வசம் ஒப்படைக்கலாம். இவர், இந்திய அணிக்கு ஜூனியர் உலக கோப்பை வென்று தந்தவர். ஐ.பி.எல்., டுவென்டி-20 தொடரில் பெங்களூரு அணிக்காக ரன் மழை பொழிந்துள்ளார். 
மூன்று கேப்டன் பார்முலாவை இந்திய கிரிக்கெட் போர்டு சோதனை ரீதியாக அமல்படுத்தி பார்க்கலாம். இதில், வெற்றி கிடைக்கும்பட்சத்தில், இந்திய அணி தோல்வி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
Thanks to tamil.yahoo


வங்கி கொள்ளையர்களை சுட்டுக்கொன்ற தனிப்படையினர் விவரம்

Posted: 23 Feb 2012 07:46 PM PST


வங்கி கொள்ளையர்களை சுட்டுக்கொன்ற தனிப்படையினர் விவரம்

சென்னை: வேளச்சேரியில் பதுங்கி இருந்த வங்கி கொள்ளையர்கள் 5 பேர் நேற்று அதிகாலை சுட்டு கொல்லப்பட்டனர். 


இந்த என்கவுன்டரை நடத்தியது 14 பேர் கொண்ட ஒரு தனி போலீஸ் படை. அவர்கள் விவரம்:


துணை கமிஷனர் சுதாகர்.


உதவி கமிஷனர்கள் மாணிக்கம் (கிண்டி), கண்ணன் (மடிப்பாக்கம்).


இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டின் ஜெயசீல், சுந்தரேசன், ரவி, சம்பத்.


சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியலிங்கம், லோகநாதன்.


சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ஏசுபாதம்.


ஏட்டுகள் அம்புரோஸ், சாமிநாதன்.


போலீஸ்காரர் அலாவுதீன்.


இதில், கொள்ளையர்கள் திருப்பி சுட்டதில் இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டின் ஜெயசீல், ரவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to OneIndia

Dinakaran E-paper 24-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 24th february 2012

Posted: 23 Feb 2012 07:24 PM PST


Dinakaran E-paper 24-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 24th february 2012

Download Link

Cinikoothu 22-02-2012 | Free Download Cenekoothu PDF This week | Cinikoothu 22nd february 2012 ebook Latest

Posted: 23 Feb 2012 07:23 PM PST


Cinikoothu 22-02-2012 | Free Download Cenekoothu PDF This week | Cinikoothu 22nd february 2012 ebook Latest

Download Link

Dinamalar E-paper 24-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 24th february 2012

Posted: 23 Feb 2012 07:21 PM PST


Dinamalar E-paper 24-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 24th february 2012

Download LInk

Nakkeeran 22-02-2012 | Free Download Nakeeran latest PDF This week | Nakkheeeran 22nd february 2012 ebook

Posted: 23 Feb 2012 07:21 PM PST


Nakkeeran 22-02-2012 | Free Download Nakeeran latest PDF This week | Nakkheeeran 22nd february 2012 ebook

Download Link

என்கவுன்டர் நடந்தது எப்படி?

Posted: 23 Feb 2012 01:14 PM PST


என்கவுன்டர் நடந்தது எப்படி? வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்

சென்னை : சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட என்கவுன்டர்  வேட்டை  குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.  கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில் 5 பேர் கும்பல்  ரூ.25 லட்சம் கொள்ளையடித்தது.  இந்தச் சம்பவத்தின்போது கொள்ளையர்கள் இந்தி மற்றும் தமிழ் பேசியது தெரியவந்தது.  இதனால் முக்கிய வங்கிகளைத் தவிர, சிசிடிவி கேமரா, வாட்ச்மேன் இல்லாத வங்கிகளை போலீசார் தேர்வு செய்து, கண்காணிக்கத் தொடங்கினர்.


இதைத்தொடர்ந்து, மடிப்பாக்கம் கீழ்க்கட்டளை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதேபோல பகல் 1.30 மணிக்கு 5 கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் உள்ளே புகுந்து ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்தனர். இரு வங்கியிலும் ஒரே நேரத்தில், ஒரே கிழமைகளில், ஒரே வகையான கொள்ளைச் சம்பவம் நடந்ததால், ஒரே கும்பல்தான் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு போலீசார் வந்தனர். இதனால்,  சிசிடிவி கேமரா உள்ள சில வங்கிகளில் ஆய்வு செய்தனர். அப்போது ஸ்டேட் பாங்க் வங்கியில் ஆய்வு செய்தபோது ஒருவன் சந்தேகப்படும்படியாக வங்கியைச் சுற்றிச் சுற்றி வந்தான். 


அவன் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வீடியோ காட்சியை மேடவாக்கம், பெருங்குடியில் கொள்ளை நடந்த வங்கிகளில் ஊழியர்களிடம் இந்த வீடியோவை காட்டியபோது, அவன்தான் கொள்ளையன் என்பதை உறுதி செய்தனர். பின் அந்த வீடியோவை எடுத்து பத்திரிகையாளர்களிடம் போலீஸ் கமிஷனர் போட்டுக் காட்டினர். இதை பார்த்த வேளச்சேரி பெரியார் நகர் நேதாஜி ரோடு ஏ.எல்.முதலி 2வது தெருவில் வசிக்கும் முருகன் என்பவர் கடைக்கு சென்றுள்ளார். அப்போது தமிழ்முரசு பத்திரிகையின் போஸ்டரைப் பார்த்துள்ளார். அதில் தனது அக்கா பார்வதி வசிக்கும், வீட்டில் வாடகைக்கு இருக்கும் வினோத்குமார் போன்று இருப்பதை உணர்ந்தார்.


உடனே தனது அக்கா பார்வதியிடம் சொன்னார். அவர் இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிக்கு போன் செய்தார். ஆனால், இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்தப்படையினர், நேற்று முன்தினம் இரவு கிண்டி போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் கொள்ளையர்கள் எங்கு இருப்பார்கள், எப்படி இருப்பார்கள், அவர்களை எப்படி எல்லாம் பிடிப்பது என்று பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் படையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியும் இருந்ததால், அவர் போனை எடுக்கவில்லை.


அதேநேரத்தில், எப்படியும் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கருதிய பெண், தனது தம்பி முருகனை அழைத்து, போலீஸ்நிலையம் சென்று புகார் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். அவரும் சைக்கிளில் போலீஸ் நிலையம் வந்து, இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் மீட்டிங்கில் இருப்பதால் பார்க்க முடியாது. என்ன விஷயம் என்று காவலர் கேட்டுள்ளார். அவரிடம் விஷயத்தை முருகன் தெரிவிக்கவும், உடனே துணை கமிஷனர் சுதாகரிடம் காவலர் தகவலை தெரிவித்தார்.


இது பற்றி கமிஷனர் திரிபாதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திரிபாதி, கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் கிண்டி காவல்நிலையம் வந்தனர். அவர்கள் எப்படி பிடிப்பது என்று ஆய்வு செய்தனர். பின் வீட்டின் வரைபடம் வரையப்பட்டது. அதன்படி ஆயுதங்களுடன் போலீசார் கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். போலீசார் சுற்றி வளைத்ததைப் பார்த்த கொள்ளையர்கள், வீட்டுக்குள் இருந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் போலீசாரும் ஜன்னலை உடைத்து அதன் வழியாக சுட்டனர். 


அதேநேரத்தில் தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி, துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசீல் ஆகியோர் தலைமையிலான போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, கொள்ளையர்களை சுட்டனர். அதேநேரத்தில் கொள்ளையர்களும் போலீசாரை நோக்கிச் சென்றனர். இரு தரப்பிலும் நடந்த சண்டையில் கொள்ளையர்கள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசார் தரப்பில் இரு இன்ஸ்பெக்டர்களும் காயமடைந்தனர்.


அதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட கொள்ளையர்களின் உடல்களை மீட்ட போலீசார், அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த இன்ஸ்பெக்டர்கள், ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர். பின் சண்டை நடந்த இடத்துக்கு கமிஷனர் திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். காயம் அடைந்தவர்களையும் பார்த்து விசாரணை நடத்தினர்.


அந்த திக்...திக் வினாடிகள்


இரவு 10 மணி: கொள்ளையர்கள் தங்கி இருப்பதாக கிண்டி போலீசாருக்கு ரகசிய தகவல்.
10.15: கிண்டி இன்ஸ்பெக்டர் மீட்டிங்கில் இருப்பதாக புகார் தாரரிடம் ஏட்டு பதில் அளித்தார்.
11.00: கொள்ளையர்கள் குறித்து துணை கமிஷனரிடம் முருகன் புகார் தெரிவிக்கிறார்.
11.35: இணை கமிஷனர், துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் அவசர ஆலோசனை.
11:50: போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவு 12.00: கொள்ளையர்களை சுற்றி வளைக்க கமிஷனர் உத்தரவிடுகிறார்.
12.45: கொள்ளையர்கள் தங்கி இருந்த வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். தெரு முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் ஏ.எல்.முதலியார் தெரு வருகிறது.
அதிகாலை 1 மணி: பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. போலீசார் மீது தாக்குதல் நடத்துகின்றனர் கொள்ளையர்கள். போலீசாரின் எதிர் தாக்குதலில் 5 கொள்ளையர்களும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலி. 2 இன்ஸ்பெக்டர்கள் காயம்.
2.00: சம்பவ இடம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை இடங்களில் பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டனர்.
2.05: மீட்கப்பட்ட உடல்கள் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயம் அடைந்த இன்ஸ்பெக்டர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
2.15: கமிஷனர் திரிபாதி காயம் அடைந்த இன்ஸ்பெக்டர்களை பார்க்க வருகிறார். தொடர்ந்து கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் புகழேந்தி ஆகியோர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்தனர்.
6.00: அனைத்து மக்களும் முற்றுகையிட்டதால் ஏஎல் முதலியார் தெரு பகுதி ஸ்தம்பித்தது.


சென்னையில் முதல் முறையாக 5 பேர் என்கவுன்டர்


இதுவரை நடந்த என்கவுன்டர்கள்:
1996: ஆசைத்தம்பி, கபிலன்
1998: கைபாம் மோகன்
1999: மிலிட்டரி குமார்
2002: சஞ்சய் காட்டியா, முருகேசன், காக்கா ரமேஷ், ஸ்டாலின், சுரா(எ) சுரேஷ், ராஜாராம், புதுக்கோட்டை சரவணன்(ஒரே இடம்), சின்னமாரி உட்பட 3 பேர் (ஒரே இடம்)
2003: அயோத்தியா குப்பம் வீரமணி, வெங்கடேச பண்ணையார்
2005: ரமேஷ், மணிகண்டன்
2006: நாகூரான், பங்க்குமார்
2008: வெள்ளை ரவி, குணா(ஒரே இடம்)
2008: ஜெயக்குமார், சுடலை மணி
2008: பாபா சுரேஷ்
2010: திண்டுக்கல் பாண்டியன், வேலு(ஒரே இடம்)
மாவட்டங்களில்
நடந்த என்கவுன்டர்
2007: மதுரை மாரி முத்து
2008: திருச்சி பாம்பாலாஜி
சிவகாசி சுந்தரமூர்த்தி
கும்பகோணம் மிதுன்
2009: காஞ்சிபுரம் குரங்கு செந்தில்
2010: காஞ்சிபுரம் கொற நடராஜன்
2010: மயிலம் அசோக்குமார்
சாத்தூர் குமார்.
எல்லா என்கவுன்டரிலுமே தனியாகவோ, 3 பேரை மட்டுமோ சுட்டுக் கொன்றனர். ஆனால் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் சென்ற தீவிரவாதி இமாம் அலி மற்றும் அவருடன் இருந்த 4 பேர், தமிழக போலீசாரால் பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், சென்னையில் 5 பேர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது இதுதான் முதல்முறை.
Thnaks to Dinakaran

மார்ச் 5-ம் தேதி ஒரு கல் ஒரு கண்ணாடி இசை!

Posted: 23 Feb 2012 01:11 PM PST


மார்ச் 5-ம் தேதி ஒரு கல் ஒரு கண்ணாடி இசை!

உதயநிதி ஸ்டாலின் - ஹன்ஸிகா - சந்தானம் நடிப்பில், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பைக் கிளறியுள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இசை வரும் மார்ச் 5-ம் தேதி வெளியாகிறது.


பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைத் தந்த ராஜேஷின் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வரும் இந்தப் படத்துக்காக தயாரிக்கப்பட்ட ட்ரெயிலர் ஏற்கெனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இந்த ட்ரெயிலரில் சந்தானத்தின், "வாலிப வயோதிக அன்பர்களே..." டயலாக்கை கேட்ட உடனே குபுக்கென்று சிரிக்கிறார்கள் மக்கள். 


ஐந்து பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ராஜேஷ் இயக்கிய இரு படங்களுக்கும் யுவன்தான் இசையமைத்தார். இப்போது முதல்முறையாக ஹாரிஸ் வந்திருக்கிறார்.
Thanks to OneIndia

ஆந்திராவில் வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நீதிபதிக்கு வலைவீச்சு

Posted: 23 Feb 2012 01:06 PM PST


ஆந்திராவில் வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நீதிபதிக்கு வலைவீச்சு

ஹைதராபாத்: ஆந்திராவில் வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நீதிபதியை போலீசார் தேடி வருகின்றனர்.


ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கிங்கின் ஜமெட்ல தன்டா பகுதியைச் சேர்ந்தவர் குரவத் பாலசந்தர். அவர் சட்டபள்ளி நகரில் உள்ள நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக உள்ளார்.


அவரது வீட்டில் வேலை பார்க்கும் பெண் 24 வயதாகும் கலா (பெயர் மாற்றம்). அவர் பார்க்க அழகாக இருப்பதால் அவர் மீது நீதிபதிக்கு மோகம் ஏற்பட்டது. அவரை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று நீதிபதி நினைத்தார். ஆனால் வீட்டில் அனைவரும் இருப்பதால் தனது திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் இருந்தது.


இந்நிலையில் நீதிபதியின் குடும்பத்தார் அவரை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றனர். இது தான் சமயம் என்று நீதிபதி வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். நீதிபதியிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். உடனே இது குறித்து கம்மம் டி.எஸ்.பி. ரங்கன் கௌடிடம் புகார் கொடுத்தார்.


இதையடுத்து போலீசார் 354வது பிரிவின் கீழ் நீதிபதி பாலச்சந்தர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே பாலசந்தர் நேற்று மதியம் முதல் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Thanks to OneIndia

தேவைப்பட்டால் தெருவில் நிர்வாணமாகவும் ஓடுவேன்: மாதவன்

Posted: 23 Feb 2012 01:01 PM PST


தேவைப்பட்டால் தெருவில் நிர்வாணமாகவும் ஓடுவேன்: மாதவன்

படத்திற்கு தேவைப்பட்டால் தெரிவில் நிர்வாணமாகவும் ஓடுவேன் என்று நடிகர் மாதவன் தெரிவி்த்துள்ளார்.


நடிகர் மாதவன், பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுடன் சேர்ந்து ஜோடி பிரேக்கர்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது.


இந்நிலையில் இந்த படம் குறித்து மாதவன் கூறியதாவது,


ஜோடி பிரேக்கர்ஸ் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது. நல்ல பையனாக நடித்து, நடித்து போர் அடித்துவிட்டது. அதனால் இந்த படத்தில் எனது கேரக்டர் சுவாரஸ்யமாக உள்ளது. செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவன் நான். படத்திற்கு தேவைப்பட்டால் தெருவில் நிர்வாணமாகக் கூட ஓடுவேன்.


ஜோடி பிரேக்கர்ஸ் படத்தில் வரும் முத்தக் காட்சிகளில் நடிக்க எனக்கு கஷ்டமாக இல்லை என்றார். அதற்கு மாதவனின் மனைவி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.


ஆண்டுக்கொரு படம் நடித்தால் போதும் என்று நினைத்து தனது கொள்கையில் உறுதியாக இருப்பவர் மாதவன். இப்படி வருடத்திற்கு ஒரு படம் நடித்தால் குடும்பத்தை எப்படி ஓட்டுவது என்று அவரிடம் கேட்டதற்கு, எனக்கு பணக் கஷ்டம் எதுவும் கிடையாது. விளம்பரப் படங்களில் நடிப்பதால் அதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் வருகிறது என்றார்.
Thanks to OneIndia

பி.இ முடித்து விட்டு கொள்ளைக் கும்பல் தலைவனான எஸ்.ஆர்.எம். மாஜி மாணவன்!

Posted: 23 Feb 2012 12:56 PM PST


பி.இ முடித்து விட்டு கொள்ளைக் கும்பல் தலைவனான எஸ்.ஆர்.எம். மாஜி மாணவன்!

சென்னை: சென்னை வங்கிக் கொள்ளைகளுக்கு மூல காரணமாக, தலைவனாக செயல்பட்டு தற்போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவன், சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பை முடித்த வினோத்குமார் என்பது தெரிய வந்துள்ளது.


வினோத்குமார் குறித்த தகவல் போலீஸாருக்கு தற்செயலாகத்தான் கிடைத்தது. கொள்ளை நடந்த இரு வங்கிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் துப்பு துலங்குவது பெரும் சிக்கலாக இருந்தது. இந்த நேரத்தில்தான் போலீஸாருக்கு இன்னொரு யோசனை தோன்றியது. இரு வங்கிகளிலும் ஒரே மாதிரியாக கொள்ளை நடந்திருப்பதால் நிச்சயம் நோட்டம் பார்த்துதான் இந்தக் கொள்ளையில் திருடர்கள் இறங்கியிருப்பார்கள் என்று அவர்கள் நினைத்தனர்.


இதனால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட புறநகர்ப் பகுதி வங்கிகளை அணுகி அங்குள்ள கேமராக்களில் பதிவானதைப் பார்த்தனர். பின்னர் அந்தக் காட்சிளை சம்பந்தப்பட்ட இரு வங்கிகளின் ஊழியர்களிடமும் காட்டினர். அதில் யாரையாவது அடையாளம் தெரிகிறதா என்று கேட்டபோது ஒரு நபரை வங்கி ஊழியர்கள் சுட்டிக் காட்டினர். இவன்தான் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலுக்குத் தலைவன் போல வந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான் என்று அத்தனை ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக கூறினர்.


இதையடுத்து போலீஸாருக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டது. கொள்ளைக் கும்பலின் தலைவனாக இவன் இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்த போலீஸார் அவன் குறித்த தகவலை சேகரித்தபோது அவனது பெயர் வினோத்குமார் என்றும், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பை முடித்ததும் தெரிய வந்தது.


இதையடுத்து கல்லூரிக்கு ஒரு தனிப்படை விரைந்து வந்தது. வினோத்குமார், 9 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் சேரும்போது கொடுத்த புகைப்படத்தைப் பெற்று, அதை வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்துடன் ஒப்பிட்டபோது இருவரும் ஒருவரே என்பது தெரிய வந்தது.
  Read:  In English 
இதையடுத்து இவன்தான் அவன் என்பது உறுதியானது. வினோத்குமார் படிப்பை முடித்ததும் தனது சொந்த ஊருக்குப் போகவில்லை. மாறாக சென்னையிலேயே தங்கியிருந்துள்ளான். கல்லூரிக்குப் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளான். அதாவது தங்களது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை இந்தக் கல்லூரியில் சேர்த்து விட்டால் அதற்கு புரோக்கர் கமிஷனாக கல்லூரி நிர்வாகம் இவனுக்கு கணிசமாக பணம் கொடுக்குமாம். இந்த வேலையை இவன் செய்து வந்துள்ளான்.


இந்த நிலையில்தான் அவன் தனது மாநிலத்தைச் சேர்ந்த சிலரை இங்கு வரவழைத்து வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளான் என்பது தெரிய வந்துள்ளது.


கல்லூரிக்கு புரோக்கர் வேலை பார்த்ததன் மூலம் மிகப் பெரிய அளவில் பணம் கிடைத்ததால் இங்கேயே தங்கி வேறு வேலை பார்க்காமல் புரோக்கராகவே மாறிப் போயிருந்தான். தற்போது வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு போலீஸாரின் புல்லட்டுகளுக்கு இரையாகி விட்டான்.
Thanks to One India

Jeikapovathu Yaaru 23-02-2012 | Jaya Tv Jeykapovathu Yaaru 23rd february 2012

Posted: 23 Feb 2012 10:16 AM PST


Jeikapovathu Yaaru 23-02-2012 | Jaya Tv Jeykapovathu Yaaru 23rd february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Neengalum Samaikalam 23-02-2012 | Jaya Tv Neengalum Samaikalam 23rd february 2012

Posted: 23 Feb 2012 10:11 AM PST


Neengalum Samaikalam 23-02-2012 | Jaya Tv Neengalum Samaikalam 23rd february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Nadanthathu Enna 23-02-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 23rd february 2012

Posted: 23 Feb 2012 10:05 AM PST


Nadanthathu Enna 23-02-12 | Vijay Tv Kutram Nadanthathu Enna 23rd february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now