TV SHOWS | MOVIES | TV SERIALS |
- Athipookal 13-02-2012 | Sun Tv Athipookal Serial 13th february 2012
- Ilavarasi 13-02-2012 | Sun Tv Elavarasi Serial 13th february 2012
- Thiyagam Serial 13-02-2012 | Sun Tv Thiyagam Serial 13th february 2012
- Mutharam 13-02-2012 | Sun Tv Muthaaram Serial 13th february 2012
- Vellai Thamarai 13-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 13th february 2012
- CCL 2 2012 Winning Movement video - Chennai Rhinos Final match Winning Over video
- Uravugal 13-02-2012 | Sun Tv Uravugal Serial 13th february 2012
- Kasturi 13-02-2012 | Sun Tv kasthuri Serial 13th february 2012
- Maruthani 13-02-2012 | Sun tv Marudhaani 13th february 2012
- ஜெயலலிதா கையெழுத்து மர்மம் விஜயகாந்த்துக்கு தெரியும்!
- சங்கரன்கோவிலிலில் போட்டியிட்டு டைமை வீணடிக்க விரும்பவில்லையாம் தா.பாண்டியன்!!
- ஒரு வாரத்தில் சசிகலா பெயரில் பேரவை தொடங்க ஏற்பாடு: சங்கரன்கோவிலில் போட்டி
- ஆயில் மில்லுக்குக் கூட்டிச் சென்று ராவணனிடம் கிடுக்கிப் பிடி விசாரணை
- பிரிந்து வாழும் மனைவி வாழ கணவர் வீட்டில் இடம் ஒதுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
- Sun Tv Nathaswaram Serial 13-02-2012 | Nadhaswaram 13th february 2012
- Chellame 13-02-2012 | Sun Tv Chellamey Serial 13th february 2012
- "என்னை சீண்டாதீர்கள்; உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்': விஜயகாந்த்
- Dinamalar E-paper 13-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 13th february 2012
- Dinakaran E-paper 13-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 13th february 2012
- ஓட்டத் தெரியாதவருக்கு வாழ்க்(கை) கொடுத்த சைக்கிள்
- வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் கொல்வது அதிகரிப்பு: ஒட்டுமொத்தமாக தடுக்க நடவடிக்கை தேவை
- BalaJothidam 11-02-2012 | Free BaalaJothidam PDF This week | BalaJothidam 11th february 2012 ebook
- பெண்களை தொடாமல் உணர்ச்சிவசப்பட வைக்க முடியுமா?
- எல்லாம் முடிஞ்சி போச்சி ஒரு தம் போடலாம்!
- அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்!
Athipookal 13-02-2012 | Sun Tv Athipookal Serial 13th february 2012 Posted: 13 Feb 2012 01:19 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Ilavarasi 13-02-2012 | Sun Tv Elavarasi Serial 13th february 2012 Posted: 13 Feb 2012 12:55 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Thiyagam Serial 13-02-2012 | Sun Tv Thiyagam Serial 13th february 2012 Posted: 13 Feb 2012 12:15 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Mutharam 13-02-2012 | Sun Tv Muthaaram Serial 13th february 2012 Posted: 12 Feb 2012 11:57 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Vellai Thamarai 13-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 13th february 2012 Posted: 12 Feb 2012 11:57 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
CCL 2 2012 Winning Movement video - Chennai Rhinos Final match Winning Over video Posted: 12 Feb 2012 11:04 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Uravugal 13-02-2012 | Sun Tv Uravugal Serial 13th february 2012 Posted: 12 Feb 2012 11:00 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Kasturi 13-02-2012 | Sun Tv kasthuri Serial 13th february 2012 Posted: 12 Feb 2012 10:52 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Maruthani 13-02-2012 | Sun tv Marudhaani 13th february 2012 Posted: 12 Feb 2012 10:34 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
ஜெயலலிதா கையெழுத்து மர்மம் விஜயகாந்த்துக்கு தெரியும்! Posted: 12 Feb 2012 10:25 PM PST ஜெயலலிதா கையெழுத்து மர்மம் விஜயகாந்த்துக்கு தெரியும்! சட்டசபை கலாட்டாவுக்குப்பின், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வாண வேடிக்கை நடத்தத் தொடங்கியிருக்கிறார். "தேவையில்லாமல் என்னை சீண்டினால், நானும் பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்" என்று, அருப்புக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அவர்."எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்ததே பெரிய விஷயம் என்பதுபோல, அரசியலில் அடக்கி வாசித்துக் கொண்டு, வேறு சோலிகளில் பிசியாக இருந்த விஷயகாந்தை, அப்படியே விட்டு வைத்திருக்கலாம்" இந்த நினைப்பு இப்போது அ.தி.மு.க.-வினருக்கு வந்திருக்கிறது. அமைச்சர்கள் சிலர், மாவட்ட அளவில் விஜயகாந்த் கட்சியினர் அரசியல் ரீதியாக குடைச்சல் கொடுப்பதாக சொல்லத் தொடங்கியுள்ளார்கள். "என்னை சீண்டிப் பார்க்காதீர்கள்; என் வாயை கிளறாதீர்கள்.. வாழ்க மணமக்கள்" கட்சியின் தென்மாவட்ட அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். அவர், "6 மாதங்களுக்கு முன்புவரை லோக்கலில் பாலிட்டிக்ஸ் செய்வதற்கு தி.மு.க.-வில் என்ன நடக்கிறது என்பதில் கண் வைத்திருந்தால் போதும். கேப்டன் கட்சிக்காரர்கள் பெட்டிப் பாம்பாக இருந்தார்கள். இப்போது, விஜயகாந்த் ஏதாவது பேசி அவர்களை உசுப்பேற்றி விட்டுவிடுகிறார்" என்றார். அருப்புக் கோட்டை திருமண விழாவில் விஜயகாந்த், மணமக்களை வாழ்த்தி அப்படி என்னதான் பேசினார்? "என்னை சீண்டிப் பார்க்காதீர்கள்; பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்" என்றார் கண்கள் சிவக்க, ஆவேசமாக! இந்த திருமண வாழ்த்தைக் கேட்டு, மணமக்கள் மிரண்டுபோய் திருதிருவென்று விழித்திருப்பார்கள். சட்டசபையில் நடந்த கலாட்டாவுக்கும் திருமண மண்டபத்தில் விளக்கம் கொடுக்க தவறவில்லை அவர். "சட்டசபையில் என்ன நடந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். எனக்கு எதைப் பற்றியும் பயம் கிடையாது. மக்கள் பிரச்னைகளைத் தான் பேசினேன்; இனியும் பேசுவேன். சபை நாகரிகம் எனக்கு நன்றாகவே தெரியும்" என்றார். அடுத்து நேரடியாகவே ஜெயலலிதா அட்டாக்தான்! "வருமானத்துக்கு மேல் சொத்துக் குவித்ததாக 13 ஆண்டுகளாக பெங்களூரில் வழக்கு நடந்து வருகிறது. அதை உங்களால் தீர்க்க முடியவில்லை. டான்சி வழக்கில் என் கையெழுத்து இல்லை என்று சொல்கிறீர்கள். என் வாயை கிளறாதீர்கள். நான் பேச ஆரம்பித்தால், கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகி விடும்" யாராவது ஒரு அப்பாவி அமைச்சர், கேப்டனுக்கு பதில் செல்ல வேண்டிய நிலை வந்துவிட்டது. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் பக்கம் பக்கமாக தமிழில் சவால் விட்டுக் கொண்டிருந்த கேப்டனை, தேவையில்லாமல் இந்தப் பக்கமாக திருப்பி விட்டர்கள் போலத்தான் உள்ளது. |
சங்கரன்கோவிலிலில் போட்டியிட்டு டைமை வீணடிக்க விரும்பவில்லையாம் தா.பாண்டியன்!! Posted: 12 Feb 2012 10:21 PM PST சங்கரன்கோவிலிலில் போட்டியிட்டு டைமை வீணடிக்க விரும்பவில்லையாம் தா.பாண்டியன்!! மதுரை: சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று படு கூலாக கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது நடந்த ஒரு இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்க முடிவு செய்தபோது, அதைக் கடுமையாக கண்டித்த இடதுசாரி கட்சிகள், தோல்வியோ, வெற்றியோ போட்டியடுவது ஜனநாயகக் கடமை என்று கூறி தனித்து நின்ற நிலையில் தற்போது ஜெயலலிதாவுக்கு மறைமுகமாக உதவும் வகையில் போட்டியிடுவது டைம் வேஸ்ட் என்று தா.பாண்டியன் கூறியிருப்பதாக கருதப்படுகிறது. மதுரை வந்த தா.பாண்டியன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுவில் சந்தித்துக் கொள்வதை வைத்து கூட்டணிக்கு பேசுகிறார்கள் என்றோ, கூட்டணி வைப்பார்கள் என்றோ கூற முடியாது. தனிப்பட்ட வகையில் நட்பு ரீதியில் சந்தித்துக் கொள்ளலாம். சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டோம். நாங்கள் போட்டியிடப் போவதுமில்லை, யாருக்கும் ஆதரவும் தரப் போவதுமில்லை. இதுவரை யாரும் எங்களிடம் ஆதரவும் கேட்கவில்லை. கூடங்குளம் விவகாரத்தைப் பொறுத்த வரை உடனே மத்திய மாநில அரசுகள் கூடி, திட்டம் இயங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மின்சார தட்டுப்பாட்டுச் சிக்கலைத் தீர்க்க உடனடியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் திட்டம் செயல்படுத்தப் பட வேண்டும். அதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். தமிழகத்தில் நிலவும் நதிநீர் பிரச்னையைத் தீர்க்க முயலவேண்டும். தற்போது, நதிகள் இணைப்பு திட்டம் குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, தென்னக நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானத்தை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வரவேண்டும். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நதிகள் இணைப்புத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. எனவே இதை உடனடியாக அரசு முன்வைக்க வேண்டும். தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. சாலை விபத்துகளைத் தடுக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். சாலை விபத்துகள் குறித்து விசாரித்து உடனடியாக வழக்கை முடிக்க நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். இந்த விசாரணை 6 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்படவேண்டும் என்றார் அவர். |
ஒரு வாரத்தில் சசிகலா பெயரில் பேரவை தொடங்க ஏற்பாடு: சங்கரன்கோவிலில் போட்டி Posted: 12 Feb 2012 10:18 PM PST ஒரு வாரத்தில் சசிகலா பெயரில் பேரவை தொடங்க ஏற்பாடு: சங்கரன்கோவிலில் போட்டி தென்காசி: முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலா பெயரில பேரவை தொடங்கி சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று பூலித்தேவன் பாசறையின் மாநில பொதுச் செயலாளர் ராஜாமறவன் அறிவித்துள்ளார். இது குறித்து தென்காசியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, கம்யூனிஸ்ட், சமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து வெற்றி பெற சசிகலா தான் ஏற்பாடு செய்தார். ஆனால் இன்றைய நிலை வேதனை தருகிறது. முக்குலத்தோர் சமுதாயத்தின் சார்பில் சசிகலா பேரவை இன்னும் ஒரு வாரத்தில் துவங்கிறோம். 1 மாதத்தில் அது அரசியல் கட்சியாக மாற்றப்படும். சசிகலாவின் ஆலோசனைபடி தான் பேரவையை துவங்குகிறோம். சங்கரன்கோவில் தொகுதியில் 40,000 முக்குலத்தோர் வாக்குகள் உள்ளன. சசிகலா பேரவை சார்பில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி போட்டியிடுவோம். பிரசாரத்திற்காக சசிகலாவும வருகிறார் என்றார். பேட்டியின் போது சசிகலா பேரவை தென்மண்டல அமைப்பாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, கடையநலலூர் நகர தலைவர் மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். |
ஆயில் மில்லுக்குக் கூட்டிச் சென்று ராவணனிடம் கிடுக்கிப் பிடி விசாரணை Posted: 12 Feb 2012 10:15 PM PST ஆயில் மில்லுக்குக் கூட்டிச் சென்று ராவணனிடம் கிடுக்கிப் பிடி விசாரணை கோவை: சசிகலா சித்தப்பா மருமகன் ராவணனை கோவை போலீஸார் கோவையில் உள்ள ராவணனுக்குச் சொந்தமான ஆயில் மில்லுக்குக் கூட்டிச் சென்று கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர். அவரது உதவியாளரான மோகனையும் இங்கு வைத்து விசாரித்தனர்.கோவை மாவட்டம் காரமடையை அடுத்த கிச்சகத்தியூரை சேர்ந்தவர் ரவிக்குமார், காண்டிராக்டர். இவரை மிரட்டி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக ராவணன் மற்றும் அவரது உதவியாளர் மோகன் ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 26-ந் தேதி கைது செய்தனர். இதற்கிடையில் திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் மணல் குவாரி காண்டிராக்ட் எடுத்து தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்ததாக ராவணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் ரூ.10 லட்சம் மோசடி தொடர்பாக ராவணன் மற்றும் அவரது உதவியாளர் மோகன் ஆகியோரிடம் விசாரணை நடத்த கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து ராவணனிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு ஒரு நாள் அனுமதி அளித்து மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட் ரபி உத்தரவிட்டார். அதன்பேரில் ராவணன் மற்றும் அவரது உதவியாளர் மோகன் ஆகியோரிடம் விசாரணை முடிந்ததும் நேற்று முன்தினம் மாலை 2 பேரும் மீண்டும் மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைத்து மாஜிஸ்திரேட்டு ரபி உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக, கோவை-திருச்சி சாலையில் உள்ள ராகா ஆயில் மில் அலுவலகத்தில் வைத்து தன்னை ராவணனும், அவரது உதவியாளர்களும் மிரட்டியதாக காண்டிராக்டர் ரவிக்குமார் புகாரில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மதியம் ராவணனை கோவை மாவட்ட குற்றப்பதிவேடு போலீசார் திருச்சி சாலையில் உள்ள ராகா ஆயில் மில் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு போலீசார் சோதனை நடத்தினார்கள். 30 நிமிடங்கள் விசாரணை நடத்திய பின்னர் ராவணனை போலீசார் திரும்ப அழைத்து சென்றனர். அங்கு என்ன நடந்தது, விசாரணையில் ராவணன் எதையாவது கக்கினாரா என்பது குறித்துத் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறை தரப்பிலும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பல முக்கியத் தகவல்களை போலீஸார் கறந்துள்ளதாக நம்பப்படுகிறது. |
பிரிந்து வாழும் மனைவி வாழ கணவர் வீட்டில் இடம் ஒதுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் Posted: 12 Feb 2012 10:11 PM PST பிரிந்து வாழும் மனைவி வாழ கணவர் வீட்டில் இடம் ஒதுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் டெல்லி : விவாகரத்து வழக்கில் பிரிந்து வாழும் மனைவி தமது கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.வழக்கு என்ன? டெல்லியை சேர்ந்த பனாட் மற்றும் சவீதா. கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், 23 ந் தேதி திருமணம் செய்துகொண்டு தம்பதியராக வாழ்ந்தனர். அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து 2005 ம் ஆண்டு ஜுலை முதல் பிரிந்து வாழத் தொடங்கினர். 2006 ம் ஆண்டு, நவம்பர் 29 ந் தேதி உள்ளூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றாத்தில் குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் சவீதா ஒரு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, பிரிந்து போன மனைவி சவீதாவுக்கு கணவர் தனது வீட்டின் முதல் மாடியை ஒதுக்குவதுடன், மாதம் ரூ.6 ஆயிரம் ஜீவனாம்சம் தருமாறு உத்தரவிட்டார். அப்படி தர விரும்பாத பட்சத்தில் சவீதா வேறு வீடு பார்த்து குடியேற ஏற்ற வகையில் வாடகை என்ற பெயரில் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்புகளை எதிர்த்து சவீதாவின் கணவர் பனாட் மேல்நீதிமன்றங்களில் முறையீடு செய்தும் பலனில்லை. அனைத்து நீதிமன்றங்களிலும் தீர்ப்பு தள்ளுபடியாக கடைசியாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், ஜே. செலாமேஷ்வர் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பு விவரம் குடும்ப வன்முறைச்சட்டம் அமலுக்கு வரும் முன்பாகவே அந்தப்பெண் பிரிந்து வாழ்ந்தாலும்கூட, அந்தச்சட்டத்தின்படி அவர் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு. கணவரின் வீட்டில் வசிக்கும் உரிமையும் உண்டு. இருப்பினும் எதிர்வழக்குதாரர் (சவீதா) தனது வீட்டில் வசிப்பதை வழக்குதாரர் ஏற்க மறுத்தால், அவர் மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்ள மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற உத்தரவு மாதம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற அளவில் மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் ஜீவனாம்சமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. |
Sun Tv Nathaswaram Serial 13-02-2012 | Nadhaswaram 13th february 2012 Posted: 12 Feb 2012 10:44 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Chellame 13-02-2012 | Sun Tv Chellamey Serial 13th february 2012 Posted: 12 Feb 2012 10:44 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
"என்னை சீண்டாதீர்கள்; உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்': விஜயகாந்த் Posted: 12 Feb 2012 05:05 PM PST "என்னை சீண்டாதீர்கள்; உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்': விஜயகாந்த் ""என்னை சீண்டினால் பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்,'' என, அருப்புக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் விஜயகாந்த் பேசினார். அவர் பேசியதாவது: சட்டசபையில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். எனக்கு எதைப் பற்றியும் பயம் கிடையாது. மக்கள் பிரச்னைகளைத் தான் பேசினேன்; இனியும் பேசுவேன். சபை நாகரிகம் எனக்கு தெரியும். 13 ஆண்டுகளாக பெங்களூரில் வழக்கு நடந்து வருகிறது. அதை உங்களால் தீர்க்க முடியவில்லை. தினமும் 8 மணி நேர மின் தடை, தொழில் முடக்கம், மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மின்சாரத்திற்காக என்ன திட்டம் தீட்டினீர்கள். சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்கு மிக்சி, கிரைண்டர் கொடுக்கப்படுகிறது. மின்சாரம் இருந்தால் தானே ஓடும். என்னை சீண்டிப் பார்க்காதீர்கள்; பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் பேச விடுங்கள். நீங்களாகவே பேசுவதற்கு மட்டும் சட்டசபை கிடையாது. டான்சி வழக்கில் என் கையெழுத்து இல்லை என்று சொல்கிறீர்கள். என் வாயை கிளறாதீர்கள். நான் பேச ஆரம்பித்தால், கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகி விடும்,'' என விஜயகாந்த் பேசினார். |
Posted: 12 Feb 2012 04:41 PM PST Dinamalar E-paper 13-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 13th february 2012 Download Link |
Posted: 12 Feb 2012 04:40 PM PST Dinakaran E-paper 13-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 13th february 2012 Download Link |
ஓட்டத் தெரியாதவருக்கு வாழ்க்(கை) கொடுத்த சைக்கிள் Posted: 12 Feb 2012 04:39 PM PST ஓட்டத் தெரியாதவருக்கு வாழ்க்(கை) கொடுத்த சைக்கிள் காரைக்குடி:சைக்கிள் ஓட்டத் தெரியாமல் 15 ஆண்டுகளாக உருட்டியே "டீ' விற்று தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.காரைக்குடி சேர்வார் ஊரணியை சேர்ந்தவர் லூர்துசாமி, 55. கடந்த 15 ஆண்டுகளாக தனது சைக்கிளை நடமாடும் "டீ' கடையாக மாற்றி வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து சைக்கிளை உருட்ட துவங்கும் இவர் காரைக்குடி மட்டுமின்றி கோவிலூர், மானகிரி, நாச்சியாபுரம், பள்ளத்தூர், கானாடுகாத்தான், புதுவயல் என ஒரு நாளைக்கு குறைந்தது 40 கி.மீ., தூரமாவது நடந்தே பயணிப்பது வாடிக்கையாக கொண்டுள்ளார். சுடச்சுட ஏலக்காய் "டீ' ஸ்பெஷல்: இவரது நடமாடும் சைக்கிள் பின்புறத்தில் "ஸ்டவ்' , பால்பாக்கெட், சீனி, பாத்திரங்கள், "டீ' கப்கள், தண்ணீர் நிரம்பிய வாலி எப்போதும் தயார் நிலையில் இருக்கும். சைக்கிள் முன்பு தொங்கவிடப்பட்டுள்ள துணி பைகளில் குளியல் மற்றும் சலவை சோப்,ஷாம்பு, சீப்பு, பவுடர் டப்பா, முகம்பார்க்கும் கண்ணாடி,பீடி, சுருட்டு, சிகரெட், புகையிலை, முறுக்கு, வடை, மிட்டாய், மிக்சர் போன்றவை இருக்கும். இவரின் "ஸ்பெஷல்' உடனுக்குடன் சுடச்சுட ஏலக்காய் "டீ' போட்டு தருவது தான். அவரிடம் விசாரித்ததில், "" வறுமையில் வசிக்கும் எனக்கு வாடகை கொடுத்து கடை நடத்த முடியாது. "டீ' கடையில் வேலை பார்த்த அனுபவத்தை கொண்டு அத்தொழிலையே முழுநேர தொழிலாக செய்ய முடிவெடுத்தேன். இதன் விளைவாக தற்போது சைக்கிளில் கடந்த 15 ஆண்டுகளாக நடமாடும் "டீ' கடை வைத்துள்ளேன். தினமும் 40 கி.மீ., தூரம் பயணிப்பேன்.இத்தொழில் மூலம் நாளொன்றுக்கு ரூ. 200 வருமானம் கிடைக்கிறது. இது குடும்பத்தை நடத்த போதுமானதாக உள்ளது. எனக்கு இதுநாள் வரை சைக்கிள் ஓட்டத் தெரியாது என ஒரு "குண்டை' தூக்கி நம்மிடம் போட்டு, சைக்கிளை இடத்தை விட்டு உருட்ட துவங்கினார். |
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் கொல்வது அதிகரிப்பு: ஒட்டுமொத்தமாக தடுக்க நடவடிக்கை தேவை Posted: 12 Feb 2012 04:56 PM PST வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் கொல்வது அதிகரிப்பு: ஒட்டுமொத்தமாக தடுக்க நடவடிக்கை தேவை தமிழகத்தில், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து நடக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், பெண்கள் தினசரி தங்கள் பாதுகாப்பிற்கான தேவைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது குறித்து, ஒட்டுமொத்த அணுகுமுறையை போலீஸ் துறை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. சென்னையை சேர்ந்த சந்தானம்,23, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை சேர்ந்தவன். இளங்கோவன்,27, வாணியம்பாடியை சேர்ந்த காமராஜ்,32. இவர்கள் மூவரும், கடந்த ஜனவரி 18ம் தேதி, நாமக்கல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்கள். வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த மூவரும், வெவ்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மூவரும், சிறையில் அமர்ந்து கொண்டே, தங்கள் எதிர்கால திட்டத்தை வகுத்துள்ளனர். இதன் பலனாக, போனது ஐந்து வயது குழந்தை உள்ளிட்ட, ஆறு பேரது உயிர்.இவர்கள் திட்டத்தில், முதலில் டாக்டர் சிந்து,33,வின் வீடு, அவர்கள் கண்ணில் பட்டது. ஆண்கள் வெளியில் சென்றுவிடுவதையும், பெண்கள் மட்டும் வீட்டில் இருப்பதையும் அறிந்தபின், கடந்த அக்டோபர் 13ம் தேதி, இவர்கள் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, மூவரையும் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, 28 சவரன் நகையுடன் தப்பினர்.அடுத்த இரண்டு மாதங்களில், அதாவது டிசம்பர் 28ம் தேதி, கரூரில் அதே போல் வீட்டில் தனியாக இருந்த கல்யாணி,80, கலையரசி,22, தாரணிகா,5 ஆகிய மூவரும், கழுத்தறுத்துக் கொல்லப்பட்டு, 60 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவங்களில், ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். நாமக்கல் எஸ்.பி., சத்தியப்பிரியா விசாரணை மேற்கொண்டு, இறுதியில் சந்தானம், இளங்கோவன், காமராஜ் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலைகளை செய்ததை ஒப்புக் கொண்டனர். சென்னையில், கடந்த மே மாதம் முதல், இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், ஒரு கொலையில் தான், தற்போது குற்றவாளி சிக்கியுள்ளான். புத்தாண்டு துவக்கத்தில், நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் தனியாக வசித்து வந்த சீதாலட்சுமி,52, என்ற பெண் வங்கி அதிகாரி, 2ம் தேதி அதிகாலையில் கொல்லப்பட்டார். சம்பவத்தில் ஈடுபட்ட, ரமேஷ் ஆரோக்கியசாமி என்பவன், கடந்த சில தினங்களுக்கு முன் பிடிபட்டான். முன்னதாக, கடந்தாண்டு மே மாதம் மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்த விஜயலட்சுமி, காமாட்சி சகோதரிகள்,அதன்பின் அடுத்த மாதம் கோடம்பாக்கத்தில் தனியாக இருந்த பரமேஷ்வரி,70, நவம்பரில் நெசப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதம், இந்தாண்டு ஜனவரி 30ம் தேதி, ஓசூரில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியை நாகரத்தினம்,72, என்ற மூதாட்டி கொல்லப்பட்டு, 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல், இம்மாதம், மறைமலை நகரில், வீட்டில் தனியாக இருந்த, ஓய்வு பெற்ற துணை கலெக்டர் பிச்சம்மாள், கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதவிர, பரமக்குடியில், கடந்த மாதம் 27ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த சாந்தி என்ற பெண்ணிடம், கொள்ளையடிக்க முயன்ற ரமேஷ் என்பவனை, அப்பெண்ணே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.அடகுக்கடைக்காரர்களில் குறிப்பிட்ட சிலர், தாங்கள் வாங்கும் நகை திருட்டு நகை என்று தெரிந்திருந்தும், அவர்கள் அதை பற்றியெல்லாம் கவலைபடாமல், குறிப்பிட்ட தொகையை கொடுத்து வாங்குவதும், தங்கம் அபரிமித விலை விற்பதால், பழகிப்போன விஷயமாகி விட்டது. சென்னையில், தற்போது தனியாக வசிக்கும் பெண்கள், மூத்த குடிமக்கள் பற்றிய விவரங்களை, போலீசார் சேகரித்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற நடவடிக்கைகள், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் அமல்படுத்தினால் நல்லது. அத்துடன், வேற்று மாநிலத்தவர் பணி செய்யும் இடங்களில், அவர்களை பற்றிய அடிப்படை ஆவணங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சேகரிப்பதும், குற்றங்கள் குறைய உதவிடும். பெண்களே உஷார்!வருமுன் காப்பது எப்படி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், வயதானவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் இருந்து தங்களையும், தங்கள் உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ""அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில், தங்களை பற்றிய விவரங்கள், வீட்டில் இருப்பவர்கள், தொலை பேசி எண்களை பதிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில், தங்கள் பகுதி போலீஸ் நிலைய அதிகாரிகள் மொபைல் எண், போலீஸ் நிலைய எண் ஆகியவற்றையும் தெரிந்திருக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் கதவுக்கு வெளியில் கிரில் கதவுகள் இல்லை. பொருத்தப்படும் பட்சத்தில், யாராவது வீட்டிற்கு வந்தால், கதவை திறந்து பேசினால் மட்டும் போதுமானது. இதன் மூலம், தேவையில்லாத பிரச்னைகள் வருவதை தவிர்க்கலாம்'' என்றார். - நமது சிறப்பு நிருபர் - |
BalaJothidam 11-02-2012 | Free BaalaJothidam PDF This week | BalaJothidam 11th february 2012 ebook Posted: 12 Feb 2012 11:41 AM PST BalaJothidam 11-02-2012 | Free BaalaJothidam PDF This week | BalaJothidam 11th february 2012 ebook Download Link |
பெண்களை தொடாமல் உணர்ச்சிவசப்பட வைக்க முடியுமா? Posted: 12 Feb 2012 11:24 AM PST பெண்களை தொடாமல் உணர்ச்சிவசப்பட வைக்க முடியுமா? ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா? உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும். அது எப்படி..? .தொடர்ந்து படியுங்கள் பூக்களின் வாசம் தரும் இதம் மலர்களின் சுகந்தம் தரும் இதம் பெண்மையை மலர வைக்கும். காதலை சொல்லாமலேயே சொல்லும் மலர்கள் பெண்களை சரியான மூடுக்கு கொண்டு வரும். கைகள் பேசும் பாஷையை அந்த மலர்கள் பேசும் அப்புறம் பாருங்கள். அருகாமையில் அமருங்கள் துணையின் அருகில் நெருக்கமாக அமருங்கள், தொடவேண்டாம். கூந்தலையும், காதுமடலையும் லேசாக முகர்ந்து பார்த்தாலே போதும். உணர்ச்சி வசப்படத் தொடங்கி விடுவார்கள் பெண்கள். உங்களின் உணர்வுப்பூர்வமான இந்த நெருக்கம் தொடாமலேயே உங்களின் அதீத காதலை வெளிப்படுத்தும். இருவருக்குமிடையே நெருக்கத்தை அதிகரிக்கும். திராட்சையும் ஸ்ட்ராபெரியும் காதலை வெளிக்கொணரும் மலர்களில் திராட்சைக்கும், ஸ்ட்ராபெரிக்கும் தனி பங்குண்டு. இந்த பழங்களைக் கொண்டு பெண்களில் இதழ்களைத் தீண்டலாம். கைகளால் தீண்டுவதை விட இந்த பழங்களினால் தொடுவது அதீத கிளர்ச்சியை ஏற்படுத்துமாம். அதேபோல் சாக்லேட், கேக் கிரீம்களும், காதலின் உணர்வை வெளிப்படுத்தும் என்கின்றனர் உளவியலாளர்கள். பறவையின் இறகு பெண்களின் மென்மையான உடலை கைகளால் தொடுவதை விட பறவையின் இறகினால் லேசாக வருடுவது இதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். அவர்களின் அந்த கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். மென்மையான தோலினை மயிலிறகால் வருடும் போது ஏற்படும் உணர்ச்சிக்கு ஈடு இணையில்லை என்கின்றனர் அவர்கள். பேச்சிலேயே கிளர்ச்சியூட்டலாம் தொட்டுத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை. பேச்சிலேயே கூட கிறங்கடிக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். காதலை சொல்ல நெருக்கமான ஒரு சூழலில் மென்மையான, ரகசியத்தைப் போல பேசும் பேச்சிலும் கூட கிளர்ச்சியூட்டலாம் என்கின்றனர். இந்த வழிமுறைகளை நீங்கள் அப்ளை செய்து பாருங்கள். அப்புறம் என்ன நீங்கள் தொடவே வேண்டாம். உங்களுக்கு வேண்டியது தானாகவே கிடைக்கும். |
எல்லாம் முடிஞ்சி போச்சி ஒரு தம் போடலாம்! Posted: 12 Feb 2012 11:21 AM PST எல்லாம் முடிஞ்சி போச்சி ஒரு தம் போடலாம்! தாம்பத்ய உறவு என்பது களைப்பு ஏற்படுத்தாத ஒரு போர். அந்த போர்க்களத்தில் வெற்றிக்காக தோற்பதும், தோல்விகளை சந்தோசமாக அங்கீகரிப்பதும் அன்றாக வாடிக்கை. காதல் போர்க்களத்தில் தம்பதியர் உற்சாக விளையாட்டு முடிந்தவுடன் என்ன செய்கின்றனர் என்று சுவையான ஒரு ஆய்வு ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் பெண்கள் முத்தமிட விரும்புவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் ஆண்கள் பலரும் ரிலாக்ஸ்சாக புகைப் பிடிப்பதை விரும்புவதாக கூறியுள்ளனர். ஜர்னல் ஆக் செக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள சுவையான அந்த ஆய்வு முடிவு உங்களுக்காக. அரவணைப்பு அவசியம் உறவின் தொடக்கத்தில் துணையை உற்சாகப்படுத்த ஆண்கள் முத்தமிடுகின்றனர். ஏனெனில் உறவின் திறவுகோல் முத்தம்தானே. அப்போது வெட்கப்பட்டு விலக்கும் பெண்கள் கூட உறவு முடிந்ததும் முத்த மழையால் குளிப்பாட்டி விடுகின்றனராம். உறவு முடிந்த களைப்பில் கட்டி துணையை கட்டிக்கொண்டு உறங்குவது, கையால் வருடுவது என ஆசையை வெளிப்படுத்துகின்றனராம் பெண்கள். தம் போட விருப்பம் அதேசமயம் ஆண்கள் பலரும், அதான் எல்லாம் முடிந்தாகிவிட்டதே ரிலாக்ஸ்சாக ஒரு தம் போடலாம் என்று வெளியில் கிளம்பிவிடுகின்றனராம். இன்னும் சிலர் தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவது அல்லது கம்மென்று போர்த்தி படுத்து உறங்குவது போன்றவைகளை செய்கின்றனராம் இவ்வாறு தெரிவிக்கிறது அந்த ஆய்வு முடிவு. |
அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! Posted: 12 Feb 2012 11:06 AM PST அம்மாவின் அன்புதான் குழந்தைகள் அறிவை வளர்க்கும்! குழந்தைகளிடம் அன்பாய் அனுசரனையாய் பேசும் அம்மாக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அதாவது, அம்மாக்கள் அன்பாய் பேசினால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அபரிமிதமாய் இருக்குமாம். அவர்களின் அறிவு வளர்ச்சி அற்புதமாய் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளில் மூளை வளர்ச்சிக்கும் பெற்றோர்களின் செயல்பாட்டிற்கும் உள்ள தொடர்பு குறித்து வாஷிங்டன் பல்கலைக் கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், அம்மாக்களின் அன்புக்கும் தொடர்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர். அன்பால் அறிவு வளரும் நர்சரி பள்ளிகளில் பயிலும் 3 முதல் 6 வயதிற்குட்பட்ட மாணவர்களிடம் ஆய்வாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். மனரீதியான அவர்களின் பிரச்சினைகள், ஆரோக்கிய குறைபாடு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி 92 குழந்தைகளின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர்களில் பெரும்பாலோனோர் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவர்களின் சில குழந்தைகள் மன உளைச்சல் இன்றி காணப்பட்டனர். அதற்குக் காரணம் அந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் அம்மா பாசம் தான் என்பது தெரியவந்தது. ஆய்வின் போது குழந்தைகளை அவர்களின் அன்னையரிடம் பேசவைத்து அது படப் பதிவு செய்யப்பட்டு பின்னர் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது. குழந்தைகளிடம் அதிக அன்பும், பாசமும் காட்டும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாசத்தோடு அதீத நினைவாற்றல் திறனையும் ஊட்டுகின்றனர் என்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவு தேசிய அகடெமி ஆப் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பேச்சுத்திறன் வளரும் இதேபோல் லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். பிறந்த 3 மாதமே ஆன 50 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த குழந்தைகளிடம் அவர்களின் அன்னையர்களை அடிக்கடி பேச்சு கொடுக்கும்படி தெரிவித்தனர். மேலும், விலங்குகளின் படங்களை காட்டி அவற்றின், பெயர்களை கற்றுக் கொடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது. அவர்கள் கொடுத்த பயிற்சியின்படி 3 மாத குழந்தைகள் படங்களை பார்த்து அவற்றின் பெயர்களை உச்சரிக்க தொடங்கினர். மேலும் பல படங்களின் மூலம் அவற்றின் பெயர்களை தெரிவித்தனர். இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம் அன்னையர் பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அம்மாவின் அன்பு பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர். அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என இதுவரை நம்பப்பட்டு வந்தது. இவற்றை எல்லாம் விட அன்னையர்களின் அன்பே குழந்தைகளை அறிவாளிகளாக மாற்றுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |