TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


SunTv Headline News 15-02-2012 | Sun Tv headline News 15-02-12 | Sunnews 15th february 2012

Posted: 15 Feb 2012 01:32 AM PST


SunTv Headline News 15-02-2012 | Sun Tv headline News 15-02-12 | Sunnews 15th february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

DRVikatan 01-03-2012 | Free DR.Vikatan PDF This week | Doctor Vikatan 1st March 2012 ebook

Posted: 15 Feb 2012 01:01 AM PST


DRVikatan 01-03-2012 | Free DR.Vikatan PDF This week | Doctor Vikatan 1st March 2012 ebook

Download Link

Athipookal 15-02-2012 | Sun Tv Athipookal Serial 15th february 2012

Posted: 15 Feb 2012 01:06 AM PST


Athipookal 15-02-12 | Sun Tv Athipookal Serial 15th february 2012



This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 15-02-2012 | Sun Tv Elavarasi Serial 15th february 2012

Posted: 15 Feb 2012 12:42 AM PST


Ilavarasi 15-02-12 | Sun Tv Elavarasi Serial 15th february 2012



This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 15-02-2012 | Sun Tv Thiyagam Serial 15th february 2012

Posted: 15 Feb 2012 12:16 AM PST


Thiyagam 15-02-12 | Sun Tv Thiyagam Serial 15th february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 15-02-2012 | Sun Tv Muthaaram Serial 15th february 2012

Posted: 14 Feb 2012 11:42 PM PST


Mutharam 15-02-12 | Sun Tv Muthaaram Serial 15th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Junior Vikatan 19-02-2012 | Free Junior Vikatan PDF This week | Junior Vikatan 19th february 2012 ebook

Posted: 15 Feb 2012 12:59 AM PST


Junior Vikatan 19-02-2012 | Free Junior Vikatan PDF This week | Junior Vikatan 19th february 2012 ebook

Download Link


http://adf.ly/5V0K5

Thanks for waiting and we release it

Kumudam Reporter 19-02-2012 | Free Download Kumudam Reporter PDF This week | Kumudam Reporter 19th february 2012 ebook

Posted: 14 Feb 2012 11:19 PM PST


Kumudam Reporter 19-02-2012 | Free Download Kumudam Reporter PDF This week | Kumudam Reporter 19th february 2012 ebook

Download Link

Vellai Thamarai 15-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 15th february 2012

Posted: 14 Feb 2012 11:10 PM PST


Vellai Thamarai 15-02-12 | Sun Tv Serial Vellai Thamarai 15th february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 15-02-2012 | Sun Tv Uravugal Serial 15th february 2012

Posted: 14 Feb 2012 11:09 PM PST


Uravugal 15-02-12 | Sun Tv Uravugal Serial 15th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 15-02-2012 | Sun Tv kasthuri Serial 15th february 2012

Posted: 14 Feb 2012 10:46 PM PST


Kasturi 15-02-12 | Sun Tv kasthuri Serial 15th february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 15-02-2012 | Sun tv Marudhaani 15th february 2012

Posted: 14 Feb 2012 10:23 PM PST


Maruthani 15-02-12 | Sun tv Marudhaani 15th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

மார்ச் மாதம் வருகின்றது?

Posted: 14 Feb 2012 08:01 PM PST


மார்ச் மாதம் வருகின்றது?

இன்று வரும் நாளை வரும் எனப் பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்ப சாதனமொன்று எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகுமென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
அது வேறு எதுவும் அல்ல. அப்பிளின் ஐ பேட் 3. 


மார்ச் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வொன்றில் வைத்தே இது அறிமுகப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.


அப்பிளின் ஐ பேட் 2 வும் இதுபோன்றே கடந்த வருடம் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.ஐ பேட் 3 ஆனது அதன் ஐ பேட் 2வின் தோற்றத்தினை ஒத்ததாகவே காணப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.


ஆனாலும் முன்னையதைவிட தெளிவான திரை, ஐ போன் 4 எஸ் இல் அறிமுகப்படுத்தப்பட்ட ' Siri' எனப்படும் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்படும் வசதியினையும் இது உள்ளடக்கியிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது,


மேலும் A6 புரசசரை ஐ பேட் 3 கொண்டிருப்பதனால் அதில் இயங்கும் வகையில் அப்ளிகேசன்களை அப்பிள் இயைபாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகின்றது.


இதைவிட மேலும் பல தொழில்நுட்ப வசதிகளையும் இது உள்ளடக்கியிருக்குமெனவும் நம்பப்படுகின்றது.


இதன் இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.


எது எவ்வாறாயினும் மார்ச் மாதம் அப்பிள் விரும்பிகளுக்குக் கொண்டாட்டாம் தான்.
Thanks to manithan.com

என் மருமகன் ரொம்ப அழகு: ஹேமமாலினி புகழாரம்

Posted: 14 Feb 2012 07:41 PM PST


என் மருமகன் ரொம்ப அழகு: ஹேமமாலினி புகழாரம்

எனது மருமகன் பார்க்க ரொம்ப அழகு என்று பிரபல நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார்.


இந்தி திரையுலக நட்சத்திர தம்பதி ஹேமமாலினி தர்மேந்திராவின் மகள் இஷா தியோல். இவர் தமிழில் ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். இவரும் இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கும் மும்பை தொழில் அதிபர் பரத்தக்தனிக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் காதலை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர்.


இதையடுத்து இஷா தியோல்-பரத் தக்தனி திருமண நிச்சயதார்த்தம் இரு தினங்களுக்கு முன் மும்பையில் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ரஜினி மகள் ஐஸ்வர்யா மட்டும் கலந்து கொண்டார். மருமகனாக போகும் பரத் தக்தனி ரொம்ப அழகாக இருப்பதாக ஹேமமாலினி புகழ்ந்தார். 


அவர் அளித்த பேட்டி:-


இஷா தியோல், பரத்தக்தனி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. திருமண தேதி இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. இஷா திருமணம் செய்து குடும்பத்தோடு செட்டில் ஆக வேண்டும் என்று விரும்பியதால் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளோம். திருமண தேதியை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். எனது மருமகன் பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறார்.


இவ்வாறு அவர் கூறினார்.


இஷா தியோல் கூறும்போது, நிச்சயதார்த்தம் முடிந்ததால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எல்லோரது ஆசீர்வாதத்தாலும் பரத்துக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அனைவருக்கும் நன்றி என்றார்.
Thanks to tamilnewsa2z

ராசாவை நேரில் சந்தித்த பொன்முடி, வேலு-திமுக தலைமையி்ன் முக்கிய முடிவுகளை தெரிவித்ததாக தகவல்!

Posted: 14 Feb 2012 07:37 PM PST


ராசாவை நேரில் சந்தித்த பொன்முடி, வேலு-திமுக தலைமையி்ன் முக்கிய முடிவுகளை தெரிவித்ததாக தகவல்!

டெல்லி: திமுக தலைமை எடுத்துள்ள சில முக்கிய முடிவுகளை திஹார்சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் பொன்முடியும், வேலுவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராசாவை கிட்டத்தட்ட திமுக கைவிட்டு் விட்டதாகவே கூறப்படுகிறது. காரணம், அவரை முக்கியத் தலைவர்கள் யாரும் கடந்த பல மாதங்களாக போய்ப் பார்க்கவில்லை. தனது மகள் கருணாநிதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் மட்டுமே கட்சித் தலைவர் கருணாநிதி சில முறை திஹார் சிறைக்கு வந்து போனார். மற்றபடி ஸ்டாலினோ, அழகிரியோ, திஹார் சிறைக்கு வந்து ராசாவை பார்க்கவே இல்லை.


இந்த வழக்கில் ராசா மட்டுமே இதுவரை ஜாமீன் கோராமல் இருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. வெளியில் வந்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால்தான் ராசா ஜாமீனில் வெளியே வர மறுத்து வருவதாக ஒரு தரப்பு கூறுகிறது. திமுக தலைமையுடன் அவர் மனஸ்தாபததில் இருப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது.


இந்த நிலையில் முன்னாள் திமுக அமைச்சர்கள் பொன்முடி,எ.வ.வேலு ஆகிய இருவரும் நேற்று திடீரென டெல்லி வந்தனர். பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் உள்ள சிறப்பு சிபிஐ கோர்ட்டில் நடந்த விசாரணைக்கு ஆஜராவதற்காக வந்திருந்த ராசாவை இருவரும் சந்தித்துப் பேசினர்.


திமுக தலைமை எடுத்துள்ள சில முக்கிய முடிவுகளை அவர்கள் ராசாவிடம் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. திமுகவுக்குள் ஸ்டாலின், அழகிரி கோஷ்டிகளுக்கு இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சொன்னாலும், சொல்லாவிட்டாலும் கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. ஸ்டாலினுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் கிளம்பியுள்ளதால் திமுக தலைவர் கருணாநிதி அதிர்ச்சியில் உள்ளார்.


இந்த நிலையில் ஸ்டாலினுக்கு பதவி உயர்வும், கனிமொழிக்கு முக்கியப் பதவியையும் கொடுக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக பேச்சு இருந்து வருகிறது. கனிமொழிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியைத் தருவது என்ற முடிவில் திமுக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அந்தப் பதவியை வகித்து வருபவர் ராசா.


கனிமொழிக்கு இந்தப் பதவியைத் தருவதற்கு வசதியாக, ராசா அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று திமுக தலைமை விரும்புவதாக தெரிகிறது. இதுதொடர்பாகவே ராசாவை, பொன்முடியும், வேலுவும் நேரில் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.
Thanks to oneindia.in

Dinakaran E-paper 15-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 15th february 2012

Posted: 14 Feb 2012 07:19 PM PST


Dinakaran E-paper 15-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 15th february 2012

Download Link

திமுக, தேமுதிக இணைந்தாலும் பலனில்லை: ராமதாஸ்

Posted: 14 Feb 2012 12:55 PM PST


திமுக, தேமுதிக இணைந்தாலும் பலனில்லை: ராமதாஸ்

மதுரை: ஸ்டாலினும் விஜயகாந்தும் அடுத்த கூட்டணிக்கு அடித்தளம் போடுவதாகவும், திமுகவும் தேமுதிகவும் இணைந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 


மதுரையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், நிருபர்களிடம் கூறுகையில், "சட்டப்பேரவை கூட்டத்தின்போது, அவை உறுப்பினர்களை நோக்‍கி நாக்‍கை துருத்தி பேசியதன் மூலம் விஜயகாந்த் சட்டப்பேரவையின் மாண்பை சீர்குலைத்துவிட்டார். 


கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றதால்தான், விஜயகாந்தின் தேமுதிகவுக்‍கு எதிர்க்‍கட்சி அந்தஸ்து கிடைத்தது. இந்த கூட்டணி ஏற்பட்டிருக்‍காவிட்டால், விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் கூட வெற்றிபெற்றிருக்‍க முடியாது. 


திமுகவின் இறுதிக்‍காலம் நெருங்கிவிட்டது. இனி அக்‍கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. திமுகவின் அரசியல் அத்தியாயம் முடிவுக்‍கு வந்துவிட்டது. 


கடந்த பேரவைத் தேர்தலிலேயே திமுகவும், விஜயகாந்தின் தேமுதிகவும் கூட்டணி சேர்ந்து போட்டியிட முயற்சித்தன. ஆனால், அது அப்போது முடியாமல் போய்விட்டது. 


அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது விஜயகாந்தும், ஸ்டாலினும் சந்தித்துள்ளனர். அடுத்த கூட்டணிக்கு அடித்தளம் போடுகின்றனர். ஆனால், அவர்களால் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.


ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகளுடனோ, திராவிடக் கட்சிகளுடனோ கூட்டணி வைக்காமல் பாமக தனித்து போட்டியிடும். தனித்துப் போட்டியிட்டு 10 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்," என்றார் ராமதாஸ்.


Thanks to vikatan.com

காதல் கல்யாணம் - தேவை தன்னம்பிக்கை!

Posted: 14 Feb 2012 12:50 PM PST


காதல் கல்யாணம் - தேவை தன்னம்பிக்கை!

''உன் வாழ்க்கை உன் கையில்''


ரஜினியின் இந்த டயலாக் யாருக்கு பொறுத்தப்படுகிறதோ இல்லையோ காதலர்களுக்கு நிச்சயம் பொறுத்தப்படும். நம் அப்பா, அம்மா, சகோதர- சகோதரிகள், பிறப்பு, இறப்பு என எதையும் நம் விருப்பம் போல் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நம் நட்பு, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மட்டும் நமக்கு வாய்த்திருக்கிறது.


காதலை வளர்த்து நீயில்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் நீயில்லை என்ற ரீதியில்சென்ற பிறகு அடுத்த கட்டம் திருமணம் தான். இங்கே தான் பல குடும்பங்களில் நடக்கிறது பூகம்பம்.


பெற்றோர்களிடம் திருமணத்திற்காக அனுமதி கேட்கும்போது நிச்சயம் பெரும்பாலான வீடுகளில் பிரச்னை வெடிக்கிறது. அந்த நேரத்தில் பலர் பல விதமான கருத்துகளை சொல்வார்கள். பெத்தவங்களை விட காதல் தான் உனக்கு பெரிசா? நீ காதல் திருமணம் செய்துட்டா நாங்க உயிரை விட்டிடுவோம் என பெற்றோர்கள் மிரட்டுவது என பல சம்பவங்கள் அரங்கேறும். அதைத் தாண்டி நின்று காதலில் ஜெயிப்பதற்கு தன்னம்பிக்கையும், துணிச்சலும் தேவை.


பெற்றவர்கள் எதிர்பதற்கும் சில காரணங்கள் இருக்கிறது. அவர்களது காரணங்களை புரிந்து கொண்டு நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் காதலன்/ காதலி உங்களுக்கு எந்தளவுக்கு பொறுத்தமானவர் என்பதை பெற்றோரிடம் மனம்விட்டு பேசுங்கள். எதையும் மனம் விட்டு பேசாமல் நீங்களாக பெற்றோர்கள் நம் காதலுக்கு சம்மதிக்க மாட்டார்கள் என முடிவு செய்து உங்கள் காதலை தியாகம் செய்யாதீர்கள்.


உங்கள் காதல் திருமணத்தில் முடிவதற்கு உண்டான அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி பெற்றோர்களை சம்மதிக்க வையுங்கள். ஆனால் முரட்டு பிடிவாதம் பிடிக்கும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக உங்கள் காதலை இழக்காதீர்கள். எங்கள் காதலை நீங்கள் ஏற்க வேண்டாம். அதே நேரத்தில் நீங்கள் சொல்லும் பையனை/பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்ற உறுதியுடன் இருங்கள். உங்கள் கருத்தை ஆதரிக்கும் நபர்களிடம் ஆலோசனை கேளுங்கள். 


வாழ்க்கைத் துணை இவர்தான் என மனதார தீர்மானித்த பிறகு ஏன் பின்வாங்க வேண்டும். மனதிற்கு பிடிக்காத வேலையை எப்படி விரக்தியுடன் செய்வோமோ, அதே போல் தான் மனதுக்கு பிடிக்காத வாழ்க்கை துணையுடன் வாழும் வாழ்க்கையும். பெற்றவர்களுக்காக, மற்றவர்களுக்காக நம்மை ஏமாற்றிக் கொண்டு காதலித்தவரை விட்டு இன்னொருவரை மணக்க நேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் அந்த வாழ்க்கை ரணமாக தான் இருக்கும். அதற்கு பதில் காதலித்தவரை போராடி மணந்துவிட்டால் பிறகு வரும் எந்த பிரச்னையும் சமாளித்து கொள்ளலாம். இதற்கு முக்கியமாக தன்னம்பிக்கை ஒன்று போதும். வாழ்க்கை ஒரு முறை தான். அதில் நம் மனதிற்கு பிடித்தவருடன் வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கை முழுமை பெறும்.


இருவரும் எந்த சூழ்நிலை வந்தாலும் பிரிய மாட்டோம் என்ற உறுதி தான் இருவரையும் திருமணத்தில் இணைக்கும் என்பதை மறக்காமல் உறுதியுடன் இருந்தால் உங்கள் காதல் நிச்சயம் திருமணத்தில் முடியும்.


வாழ்த்துக்கள் காதலர்களே!

வீரபாண்டியை கட்டம் கட்ட முயற்சி: கருணாநிதி கோபம் குறையவில்லை

Posted: 14 Feb 2012 12:45 PM PST


வீரபாண்டியை கட்டம் கட்ட முயற்சி: கருணாநிதி கோபம் குறையவில்லை

ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் மோதலை உருவாக்கி அதன் மூலம் வீரபாண்டி ஆறுமுகம் குளிர்காய்கிறார் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோபமடைந்துள்ளதாக, கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும், அவரை சமாதானப்படுத்த கட்சியின் தலைவர்கள் சிலர் முயற்சித்தும், அவர் சமாதானம் அடையாததால், வீரபாண்டி ஆறுமுகத்தை கட்சியிலிருந்து நீக்கி, கருணாநிதி நடவடிக்கை எடுக்கலாம் என, தெரிவிக்கின்றனர்.


அழகிரியின் ஆதரவாளராகக் தன்னைக் காட்டிக் கொண்டு, அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே உள்ள விரிசலை அதிகரித்து, சுயலாபத்திற்கு செயல்படும் வீரபாண்டி ஆறுமுகம் மீது கருணாநிதி கோபமடைந்துள்ளதாக மூத்த நிர்வாகி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ""வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எச்சரிக்கை விடுத்து, "முரசொலியில்' வெளியான நோட்டீசை, கருணாநிதியே கைப்பட எழுதிக் கொடுத்துள்ளார். அந்த அளவுக்கு வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது அவர் கோபத்தில் உள்ளார்'' என்றார். சேலம் மாவட்டத்தில், இளைஞர் அணிக்கு நிர்வாகிகளை தன்னிச்சையாக வீரபாண்டி ஆறுமுகம் தேர்வு செய்து, கட்சி தலைமையின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல், எச்சரிக்கை நோட்டீஸ் வெளியிட்டது, தன்னை புண்படுத்துவதாக உள்ளது என, அவர் கூறியது கருணாநிதியை மேலும் கோபப்படுத்தியுள்ளது. தவறு செய்துவிட்டு, கட்சி தலைமையை குற்றம்சாட்டும் முயற்சியில் வீரபாண்டி ஆறுமுகம் ஈடுபடுவதாக, தி.மு.க., தலைமை கருதுகிறது.


இதுகுறித்து, பெயர் வெளியிடுவதை விரும்பாத தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம், ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் கருத்து மோதல்கள் இருந்தால், அதை சமாதானப்படுத்த முயற்சித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, அதை அதிகரித்து, தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைப்பது, கட்சி தலைவரின் குடும்பத்துக்குள் மோதலை உருவாக்கும் செயல் என, கருணாநிதியின் குடும்பத்தாரே எண்ணுகின்றனர். மேலும், அழகிரியை கொம்பு சீவி விடும் செயலை, வீரபாண்டி ஆறுமுகம் செய்வதாகவும் அவர்கள் கருதுகின்றனர். கட்சியின் மூத்த தலைவராக வீரபாண்டி ஆறுமுகம் இருந்தும், அவருடைய மாவட்டத்தில் அவருக்கு கட்சியினரின் ஆதரவும் இல்லை. பொதுமக்களின் ஆதரவும் இல்லை. கட்சி தோல்வியடையும் தேர்தல்களில், அவர் தோல்வியடைகிறார். கட்சி வெற்றி பெற்றால் அவர் வெற்றி பெறுகிறார். ஆனால், அமைச்சர்களாக இருந்த துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு போன்றோர் கட்சி தோல்வியடைந்தாலும் வெற்றி பெறுகின்றனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் தோல்விக்கு, கட்சிக்குள் புதியவர்களை வளரவிடாமல் அவர் தடுப்பதே காரணம்.


சேலத்தில் நடந்த ஆறு பேர் கொலை வழக்கில், வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தின் மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். இந்த வழக்கில், அவருடைய தம்பி மகன் சுரேஷ் கைது செய்யப்பட்டதற்கு, ஸ்டாலின் தான் காரணம் என, வீரபாண்டி ஆறுமுகம் கருதுகிறார். ஆனால், முதல்வராக இருந்த கருணாநிதி தான், சுரேஷ் கைதுக்கு உத்தரவிட்டார். ஆறுபேர் கொலை வழக்கால் தான், சேலம் மாவட்டத்தில் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், கட்சிக்குள் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் வீரபாண்டி ஆறுமுகம் செயல்பட்டு வருவது, கட்சி தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


கட்டம் கட்ட முயற்சி: இளைஞர் அணியை சீரமைக்க ஸ்டாலின் எடுத்துள்ள முயற்சியை சீர்குலைக்கும் வகையில், வீரபாண்டி ஆறுமுகம் செயல்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துவிட்ட நிலையில், அவருக்கு மன்னிப்பு வழங்குவதை கட்சி தலைமை விரும்பவில்லை என தெரிகிறது. எனவே, வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்க்கின்றனர்.


- நமது சிறப்பு நிருபர் -

பாதிப்பு!

Posted: 14 Feb 2012 12:42 PM PST


பாதிப்பு!

சென்னை: தமிழகத்தில் மின்வெட்டால், ஜவுளி, விவசாயம், தொழில் என, அனைத்துத் துறையிலும், கடும் பாதிப்பு ஏற்படத் துவங்கியுள்ளது. மின்வெட்டைச் சீர் செய்ய அரசு முழு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பு மக்களிடையேயும் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, நேற்று பல இடங்களில் மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. 


திருப்பூரில் போராட்டம்: திருப்பூர் மாவட்டத்தில், 300 பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில், பாத்திரங்கள் உற்பத்தி செய்து, விற்பனைக்காக, தமிழகம் தவிர வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இத்தொழிலை நம்பி, 7,000 தொழிலாளர்கள் உள்ளனர். நாளொன்றுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு, பாத்திரங்கள் உற்பத்தியாகின்றன. பாத்திரங்களை இணைப்பதற்கான வெல்டிங், பாத்திரங்களை வடிவமைக்க, பாலிஷ் செய்ய, உற்பத்தி செய்த பாத்திரத்தில் டிசைன் செய்ய, என, அனைத்து பணிகளுக்கும், மின்சாரம் அவசியம். தமிழக அரசு தற்போது எட்டு மணி நேர மின்வெட்டை அறிவித்துள்ளது. மின்வெட்டு அறிவிப்பால் தொழில் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது. பாத்திர உற்பத்தி 10 சதவீதம் மட்டுமே நடக்கிறது. தொழில் நடத்த முடியாமல் பலர், பட்டறையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு வேலையில்லா நிலை ஏற்பட்டுள்ளது. மின்வெட்டை கண்டித்தும், தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரியும், பாத்திர உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், தொழிற்சங்கத்தினர் அடங்கிய கூட்டமைப்பினர், நேற்று, பாத்திர உற்பத்தி நிறுத்தம், கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.


மீன் பதப்படுத்துதலில் சிக்கல்: ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். இங்கு பிடிக்கப்படும், நண்டு, கனவாய், இறால், வாவல் போன்ற மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மற்ற வகை மீன்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் மீன்கள், ஐஸ் மூலம் பதப்படுத்தப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. தொடர் மின்தடையால், முழுமையாக ஐஸ் தயாரிக்க முடிவதில்லை. ஜெனரேட்டர் இயக்கினால் அதிக செலவாவதால், ஐஸ் கம்பெனிகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. 


ஐஸ் இல்லாததால், மீன்கள் பதப்படுத்த முடியாமல் அழுகி வீணாகின்றன. தினமும் 70 முதல் 80 டன் மீன்கள் அனுப்பப்பட்டன. தற்போது 40 முதல் 50 டன் மட்டுமே அனுப்பப்படுகின்றன. 


வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சப்ளையா: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் கூறியதாவது: வெளிநாட்டு கம்பெனிகளுக்கு தடையில்லா மின்சாரம், மானிய விலையில் நிலம் உட்பட அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகின்றன. உள்ளூர் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் தொடர் மின்வெட்டு, விலை உயர்வு, மானியம் ரத்து, கடன் இல்லை என, பல நிபந்தனைகளை அரசு விதிக்கிறது. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.


சரக்கு லாரி போக்குவரத்து பாதிப்பு: தமிழகத்தில் தொடர் மின்வெட்டால், சரக்கு லாரி போக்குவரத்து தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக, மதுரை லாரிஉரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். தலைவர் சாத்தையா, செயலர் சாகுல் ஹமீது, பொருளாளர் சேது கூறியதாவது: மின்வெட்டால் தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகளில் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், லாரி மூலம் கொண்டு வரப்படவில்லை. இதனாலும், மின்வெட்டாலும், அனைத்து தொழிற்சாலைகளும் மூடும் அபாயம் உள்ளது. சரக்கு போக்குவரத்தில் 50 சதவீதம், தொழிற்சாலைகளை நம்பி உள்ளது. பொருட்களின் உற்பத்தி குறைவால், லாரி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் மீதான கடனுக்கு, முறையான தவணை தொகைகளை கட்ட இயலவில்லை. பொருளாதார அடிப்படையிலும் தவிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


பேண்டேஜ் உற்பத்தி பாதிப்பு: தினம் ரூ. 3 கோடி இழப்பு: ராஜபாளையம் சத்திரப்பட்டி பகுதிகளில் பேண்டேஜ் துணி தொழிலில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாக, சத்திரப்பட்டியில் தினம் எட்டு முதல் பத்து மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. தொழிலாளர்கள் வேலை இல்லாமலும், குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்ய முடியாமலும் உற்பத்தியாளர்கள் சிரமப்படுகின்றனர். மருத்துவ துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் , "" மின்தடையால் தினம் மூன்று கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது. குறைந்த கூலி கிடைப்பதால், தொழிலாளர்கள் வேலைக்கு வரத்தயங்குகின்றனர். 




குறித்த நேரத்தில் சப்ளை செய்ய முடியவில்லை. இந்நிலை நீடித்தால், பேண்டேஜ் உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள் மூடும் நிலை ஏற்படும்,'' என்றார்.
முதல்வர் இன்று அவசர ஆலோசனை: தமிழக மின்சார நிலைமை குறித்து, மின் துறை அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை அதிபர்களுடன், இன்று முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், தலைமைச் செயலர், மின் துறை செயலர், மின் வாரிய சேர்மன், தொழில்துறை செயலர் மற்றும் மின் வாரிய உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக, தொழிற்சாலை அதிபர்களுடன், அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். 


விடுமுறை: தமிழக மின் நிலைமை சிக்கலுக்கு, வடமாநிலங்களிலிருந்து மின்சாரம் கொண்டுவர, தமிழகத்திற்கு, மத்திய அரசு சரியான அளவுக்கு, மின்தொடரில் (கிரிட்) இட ஒதுக்கீடு தராததால், இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், தொழிற்சாலைகளுக்கு மின்சார வார விடுமுறை தர, முதல்வர் இன்று, முக்கியமுடிவெடுப்பார் எனத் தெரிகிறது. 


மத்திய அரசுக்கு கடிதம்: இதுதவிர, தமிழகத்தில் நடைபெற்று வரும் வள்ளூர், வடசென்னை மற்றும் மேட்டூர் மின் நிலைய புதிய திட்டப் பணிகளை, போர்க்கால அடிப்படையில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நெய்வேலி இரண்டாம் நிலை மின் நிலைய விரிவாக்க திட்டத்தை தாமதப்படுத்தாமல் விரைந்து முடித்து, கூடுதல் மின்சாரம் தர, மத்திய அரசுக்கும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கும் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. குஜராத் மற்றும் சத்திஸ்கர் மாநிலங்களிலிருந்து, மின்சாரத்தை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து கொண்டுவரவும் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dinamalar E-paper 15-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 15th february 2012

Posted: 14 Feb 2012 12:35 PM PST


Dinamalar E-paper 15-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 15th february 2012

Download Link

முதல் திருமணத்தை மறைத்து அனன்யாவை ஏமாற்றிய ஆஞ்சநேயன்

Posted: 14 Feb 2012 12:34 PM PST


முதல் திருமணத்தை மறைத்து அனன்யாவை ஏமாற்றிய ஆஞ்சநேயன்

நடிகை அனன்யாவுக்கு நிச்சயம் செய்துள்ள மாப்பிள்ளை ஆஞ்சநேயன் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடு்தது அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். கேரளத் திரையுலகில் இந்த திடீர் திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாடோடிகள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை அனன்யாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது.


ஆனால் இந்த திருமணம் தற்போது பெரும் பிரளயத்தை சந்தித்துள்ளது. ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவராம். தனது முதல் திருமணத்தை மறைத்து விட்டார். இதையடுத்து அனன்யாவின் குடும்பம் பேரதிர்ச்சி அடைந்துள்ளது.


இதையடுத்து தனது மகளை ஏமாற்றிய ஆஞ்சநேயன் மீது அனன்யாவின் தந்தை பெரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,


எனது மகள் அனன்யாவுக்கும், ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் இப்போது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. முதல் திருமணத்தை எங்களிடம் மறைத்து மோசடியாக அனன்யாவை 2வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து போலீசார் ஆஞ்சநேயன் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரித்தபோது தனக்கு ஏற்கனவே திருமணமானதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.


திருமணம் செய்து கொண்டால் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் மணப்பேன் என்றிருந்த அனன்யா மனமுடைந்து நொறுங்கிப் போயுள்ளாராம்.

'கேப்' விழுந்திருச்சா?..உடனே காரணத்தை கண்டுபிடிங்க!

Posted: 14 Feb 2012 12:27 PM PST


'கேப்' விழுந்திருச்சா?..உடனே காரணத்தை கண்டுபிடிங்க!

திருமணமான புதிதில் தம்பதியர் இடையே காற்று கூட புக முடியாத அளவு நெருக்கம் ஏற்படுவது இயல்பு. தம்பதியர் இடையேயான காதல் உணர்வுகள் ஒரு கட்டத்திற்குப் பின் காணமல் போய்விடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.


மன அழுத்தம்


தம்பதியரை முதலில் தாக்குவது மன அழுத்தம். அது பணிச்சூழல் பற்றியதாகவும் இருக்கலாம், பணம் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இந்த மன அழுத்தமே தம்பதியரிடையேயான நெருக்கத்தை பிரிக்கும் முக்கிய எதிரியாக உள்ளது. எனவே மன அழுத்தத்தின் அளவை தெரிந்து கொண்டு அது குடும்பத்தை பாதிக்காத அளவு மருத்துவர்களிடமோ, உளவியலாளர்களிடமோ ஆலோசனை பெற வேண்டும். மன உளைச்சல் காரணமாகவும் தம்பதியரிடையே இடைவெளி ஏற்பட காரணமாகிறது.


குடும்ப பிரச்சினை


உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் தம்பதியரிடையேயான உறவுக்கு வேட்டு வைக்கும். தகவல் பரிமாற்றத்தில் புரிந்து கொள்ள இயலாத நிலை, தேவையற்ற விவாதங்களும் குடும்ப உறவுகளை பாதிக்கும்.


போதை ஆபத்து


மது குடித்துவிட்டு போதையில் மிதப்பது, கண்ட போதை வஸ்துக்களை உபயோகித்துவிட்டு உறங்கிப் போவது தம்பதியரிடையே நெருக்கத்தை குறைக்கிறது.


உறக்கக் குறைபாடு


பணிச் சூழல், அதிகாலையில் எழுந்து அலுவலகம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது, உடலில் சோர்வை அதிகப்படுத்திவிடுகிறது. நேரங்கெட்ட நேரத்தில் தூங்கி எழுவது அசதியை ஏற்படுத்துவதால் தம்பதியரிடையே இடைவெளி ஏற்படுகிறது. எனவே சரியான அளவில் பணி நேரத்தையும், ரொமான்ஸ்க்கான நேரத்தையும் திட்டமிடவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.


குழந்தை பிறந்திருக்கா?


சிறு குழந்தைகள் பிறந்த சமயமாக இருந்தால் அது தம்பதியரிடையே இடைவெளி ஏற்படும் காலமாகும். எனவே குழந்தைக்கு அதிக நேரம் ஒதுக்குவதோடு, ரொமான்ஸ்சுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.


ரொம்ப குண்டாயிட்டோமோ?


திருமணத்தில் பார்த்ததை விட இப்ப ரொம்ப குண்டாயிட்டோமோ என்ற எண்ணம் உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதுவும் கூட இடைவெளிக்கு காரணமாகிறது. உடல் பருமன் காரணமாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்டிரான் சுரப்பு குறைவதும் தம்பதியரின் இடைவெளிக்கு காரணமாகிறது.


மெனோபாஸ்


பெண்களுக்கு மெனோபாஸ் காலம் வந்தாலே வசந்த காலமே முடிந்துவிட்டதைப் போல உணர்வர். வலி, வறட்சி போன்றவைகளினால் உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. இதுவும் தம்பதியரிடையே வில்லனாக புகுந்து இடைவெளியை ஏற்படுத்துகிறது.


எனவே தம்பதியர் இருவரும் கலந்து ஆலோசித்து பிரச்சினையின் உண்மை தன்மையை புரிந்து கொண்டு இடைவெளியை குறைக்க முயல வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கும்.


முத்தம் கொடுக்கப் போறியளா?...யோசிச்சுக்குங்க..!

Posted: 14 Feb 2012 12:25 PM PST


முத்தம் கொடுக்கப் போறியளா?...யோசிச்சுக்குங்க..!


முத்தம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளனர் நம்மவர்கள். உணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன. உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் அநேக நன்மைகள் விளைகின்றனவாம். அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது போல உணர்ச்சிகளை உணர்ச்சிகளால் தூண்டுவது. அதே சமயம் முத்தமிடுவதன் மூலம் நோய்கள் பரவுதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


30 வாட்ஸ் மின்சாரம்


ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம். (ஆகா மின்சார உற்பத்திக்கு இப்படி ரொமான்டிக்கான ஒரு வழி இருக்கப்பா..இத விட்டுட்டு எங்கெங்கையோ கரண்ட்டை தேடுறாய்ங்களே..)


மனிதர்கள் தங்கள் உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை குறைப்பதற்கு என்னென்னவோ உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து 15 நிமிடம் தொடர்ந்து கொடுத்துகொள்ளும் இதழ் முத்தத்தில் 30 கலோரிகள் குறைகிறது. இது அரைமணி நேராம் மாய்ந்து மாய்ந்து நடக்கும் நடைபயிற்சிக்கு சமமானது. முத்தம்தான் உடலுறவுக்கான முதல் தூண்டுதல். உதடு பிரியாமல் கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தைவிட, உதடு பிரிந்து உதடுகளில் கொடுக்கும் முத்தத்திற்கு ஆரோக்கியம் அதிகம்.


முத்தம் மூலம் நோய் பரவும்


அதே சமயம் முத்தம் கொடுப்பதன் மூலம் நோய்கள் பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் லயோலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முத்தம் மூலம் ஹெச்1என்1, சளி, காய்ச்சல், வைரஸ் நோய்களை பரப்புகிறதாம். அதுவும் இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் அதிக அளவிலான இளைய தலைமுறையினர் இந்த நோய்தாக்குதலுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


குளிர் காலத்தில் தொற்றுநோய்கள் பரவுவது ஒருபுறம் இருக்கையில் முத்தமிடுவதன் மூலமும், ஜோடியாக ஷாப்பிங்மால், சினிமா தியேட்டர், ஓட்டல்கள் போன்ற இடங்களுக்கு செல்வதன் மூலமும் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவி நோய் தாக்குதல் அதிகமாவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காலத்தில் நோய் பரவுவதை தடுக்க சத்தான பழங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் டானிக்குகள் போன்றவைகளை உட்கொள்ளலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


எனவே உதடுகளை ரெடி செய்வதற்கு முன்பு ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சுக்குங்க..அம்புட்டுதேன்..!

விஜய்-விக்ராந்த்தின் பாட்டி மரணம்!

Posted: 14 Feb 2012 12:22 PM PST


விஜய்-விக்ராந்த்தின் பாட்டி மரணம்!

ஷோபா சந்திரசேகரனின் அம்மாவும் விஜய்யின் பாட்டியுமான லலிதா நீலகண்டன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. 


லலிதா நீலகண்டனின் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி, பல படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றை பெரும்பாலும் லலிதாவின் மருமகன் எஸ்ஏ சந்திரசேகரனே இயக்கினார்.


லலிதா நீலகண்டனுக்கு இரண்டு மகன்கள். பாடகரும் நடிகருமான எஸ் என் சுரேந்தர் மற்றும் சுந்தர். இரண்டு மகள்கள் ஷோபா சந்திரசேகரன் மற்றும் ஷீலா. ஷோபாவின் மகன் நடிகர் விஜய். ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்த். 


பாட்டி மீது மிகுந்த பாசமாக இருந்தார் விஜய். மகள் ஷோபா- மருமகன் சந்திரசேரனுடன் வசித்து வந்த லலிதா நீலகண்டனுக்கு நேற்று நெஞ்சுவலி வந்தது. அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் இன்று காலை அவர் மரணமடைந்தார்.


அவருக்கு நுங்கம்பாக்கம் தெரஸா சர்ச்சில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. மாலையில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. லலிதா நீலகண்டனுக்கு விஜய் ரசிகர்கள், திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.