TV SHOWS | MOVIES | TV SERIALS |
- 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் வந்தது 550 கோடி தயா -கலாவுக்கு‘ நிதி’ வந்தது எப்படி? பிடிஇறுகுகிறது
- தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்பின் உச்சத்தில் மக்கள்!
- சட்டசபையில் திமுக தான் சரியான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது: இல.கணேசன்
- Junior Vikatan 12-02-2012 | Free Junior Vikatan PDF This week | Junior Vikatan 12th february 2012 ebook
- Athipookal 08-02-2012 | Sun Tv Athipookal Serial 8th february 2012
- Ilavarasi 08-02-2012 | Sun Tv Elavarasi Serial 8th february 2012
- Thiyagam 08-02-2012 | Sun Tv Thiyagam Serial 8th february 2012
- Mutharam 08-02-2012 | Sun Tv Muthaaram Serial 8th february 2012
- Vellai Thamarai 08-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 8th february 2012
- Uravugal 08-02-2012 | Sun Tv Uravugal Serial 8th february 2012
- Kasturi 08-02-2012 | Sun Tv kasthuri Serial 8th february 2012
- Maruthani 08-02-2012 | Sun tv Marudhaani 8th february 2012
- Vannathirai 13-02-2012 | Free Download Vannathirai Magazine PDF Ebook | Vannathirai 13th february 2012
- Kungumam 13-02-2012 | Free Kungumam Tamil Magazine PDF This week | Kungumam 13th february 2012
- மூன்று பெண்களை மணந்த "ஜாலி' கணவன் மீது நான்காவது பெண் புகார்: "புதிராகிறது' விவகாரம்
- மின்வெட்டு, 8 மணி நேரமாக, இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது.
- 'அதுக்கு' ஏத்த நேரம் 'ஏழரை மணி'தானாம்!!
- உற்சாகம் தரும் 65
- Dinamalar E-paper 08-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 8th february 2012
- Dinakaran E-paper 08-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 8th february 2012
- கோட், சூட் போட்ட சிம்பன்சி அமெரிக்க விளம்பரத்தால் சர்ச்சை!!
- விஜயகாந்த் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது: என்.டி.ஆர். மனைவி ஆரூடம்!
- சங்கரன்கோவிலில் தேர்தல் பணியாற்ற 26 அமைச்சர்கள் ஒதுக்கீடு: ஜெ. அறிவிப்பு
- ஸ்டாலின்... அழகிரி... வைகோ?- திமுகவுக்கு அடுத்த தலைமை யார்?
- மகனுக்கு நயன்தாரா .... அப்பாவுக்கு தாரா
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் வந்தது 550 கோடி தயா -கலாவுக்கு‘ நிதி’ வந்தது எப்படி? பிடிஇறுகுகிறது Posted: 08 Feb 2012 01:21 AM PST 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் வந்தது 550 கோடி தயா -கலாவுக்கு' நிதி' வந்தது எப்படி? பிடிஇறுகுகிறது தயாநிதி மீது நடந்து வரும் விசாரணை மற்றும் குற்றம் தொடர்பான விஷயங்கள் குறித்து கடந்த கால சில திரட்டுக்கள் கீழே தரப்பட்டுள்ளன. தயாநிதி குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலான விஷயங்கள்: சி.பி.ஐ.,தயாநிதி விவகாரம் தொடர்பாக எடுத்து வரும் நடவடிக்கையை விவர அறிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தாக்கல் செய்தது. சீல் இட்ட கவரை நீதிபதிகள் ஜி.எஸ்.,சிங்வி மற்றும் ஏ.கே.,கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு தெரிவித்தபோது தயாநிதி மீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. எனவே இன்னும் ஒரிரு நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார். இதனையடுத்து சி.பி.ஐ., எப்.ஐ.ஆர்., பதிவு செய்தது. சி.பி.ஐ.,வக்கீல் வேணுகோபால் கூறியிருப்பதாவது: கடந்த 2004 -2007 காலகட்டத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அப்போது, ஏர்செல்தனது சேவையை விரிவாக்கம் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கான உரிமம் கேட்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் செய்தது. ஏர்செல் நிறுவனத்தோடு மேலும் இரு நிறுவனங்களும்உரிமம் கேட்டு விண்ணப்பித்தன. உரிமம் வழங்குவதற்காக, ஏர்செல் நிறுவனத்திடம், தேவையில்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த நடைமுறையை மற்ற இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம், அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரம், ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதில் இழுத்தடிப்பு நடந்தது. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., யின் முதற்கட்ட விசாரணையில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர், ஏர்செல் நிறுவனத்திற்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளைவிற்கும்படி, ஏர்செல்லின் அப்போதைய அதிபர் சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இறுதியில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அந்த நெருக்கடியின் விளைவாக, ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்ற பின்தான், ( 2006, மார்ச் மாதத்திற்கு பின்) ஏர்செல் நிறுவனத்திற்கான ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கின. இவ்வாறு வக்கீல் கோர்ட்டில் தெரிவித்தார். ஊழலுக்கு வித்திட அமைச்சர் குழு பரிந்துரையை நிராகரித்தார் : தி.மு.க., கூட்டணியுடன் மத்திய அமைச்சரவை அமைந்ததும் எனக்கு தொலை தொடர்பு துறை தான் வேண்டும் என அடம் பிடித்து பெற்றுக்கொண்டார். அமைச்சர் பதவியை இழந்தார் தயா : ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தயாநிதி மீதான குற்றத்திற்கு ஆதாரம் இருப்பதாக சி.பி.ஐ., தெரிவித்ததையடுத்து எதிர்கட்சிகள் இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தின. பார்லி., கூட்டம் முடங்கியது. இதனையடுத்து வேறு வழி இல்லாமல் கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்தார். ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக மத்திய அமைச்சர் பதவியை இழந்த 2 வது நபர் என்ற இடத்தை பிடித்தார் தயாநிதி. அமைச்சர் பதவியை இழந்ததுடன் முடிந்து விடக்கூடாது, தொடர் குற்ற நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என எதிர்கட்சிகள் மற்றும் ஊழல் எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி வந்தனர். சிலர் சி.பி.ஐ.,விசாரணை மீது சந்தேக பார்வை வைத்தனர். ஆனால் காலம் கடந்தாலும் தயாநிதியை தப்பிக்க விடாமல் பெரும் ஆதார திரட்டுடன் இன்று அமலாக்க துறையினர் வழக்கை பதிவு செய்துள்ளனர். |
தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்பின் உச்சத்தில் மக்கள்! Posted: 08 Feb 2012 01:19 AM PST தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்பின் உச்சத்தில் மக்கள்! கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் போன்ற தொழில்வளம் மிக்க மாவட்டங்கள் இந்த மின்வெட்டு காரணமாக கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன. திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் சென்னையில் 1 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது. ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணமாக அமைந்ததே இந்த மின்வெட்டுதான். ஆட்சிக்கு வந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் மின்வெட்டை சீராக்கிவிடுவோம் என அதிமுக உறுதியளித்தது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, மின்வெட்டுக்கான காரணங்களை மட்டுமே அடுக்கினார்களே தவிர, அதைத் தீர்ப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்து 8 மாதங்களாகியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மின்வெட்டு தாறுமாறாக உள்ளது. சென்னையில் 1 மணி நேரம் மின்வெட்டு என்று சொன்னாலும், அறிவிக்கப்படாமல் கூடுதலாக அரை மணி அல்லது 1 மணிநேரத்துக்கு மின் வெட்டு நிலவுகிறது. எப்போது கேட்டாலும் பராமரிப்பு என காரணம் கூறுகிறார்கள் மின்வாரிய ஊழியர்கள். 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை... கிராமப் புறங்களின் நிலைமைதான் சொல்லத் தரமற்றுப் போயுள்ளது. சில பகுதிகளில் 6 மணி நேரம், சில மாவடங்களில் 8 மணி நேரம், வேலூர் போன்ற வட மாவட்டங்களில் சில நாட்களில் 12 மணி நேரம் கூட மின்வெட்டு நிலவுகிறது. பொங்கல் பண்டிகை சமயத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 8 மணி நேரம் மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டதை நேரில் பார்க்க முடிந்தது. முன்பெல்லாம் என்னதான் மின் தட்டுப்பாடு இருந்தாலும், மழைக்காலத்தில் மின்வெட்டு என்பதே இருக்காது. கடந்த திமுக ஆட்சி முழுவதுமே, மழைக் காலங்களில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டோ, 'மழையாவது வெயிலாவது... கட் பண்ணு கரண்டை' என்கிற ரீதியில் நிலைமை உள்ளது. மழை வெளுத்தெடுத்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூட சென்னையில் 2 மணி நேரமும், பிற பகுதிகளில் 6 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது. குறிப்பாக மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடக்கும் இந்தத் தருணத்தில் மின்சாரம் அடியோடு இல்லாமல், மக்கள் லாந்தர்கள், மெழுகுவர்த்திகள், சிம்னி விளக்குகளுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாகவே 8 மணி நேர மின்வெட்டை சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நகரம், கிராமம் என்ற பேதமின்றி இந்த 8 மணி நேர மின்வெட்டு இருக்கும். மின்வெட்டு நேரங்கள்: காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும். சில பகுதிகளில் காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9 முதல், 10 என, 8 மணி நேரம். சென்னையில் மட்டும் 2 மணி நேரம் கூடுதலாக மின்வெட்டு நீடிக்கும் எனத் தெரிகிறது. தொழில்துறை முடங்கும் நிலை இந்த மின் வெட்டு காரணமாக தொழில்துறை அடியோடு முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே கோவையில் 40000 தொழிற்சாலைகளில் 80 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறு தொழில்கள், விசைத் தறிகள் இயக்கம் முடங்கியுள்ளது. ஈரோட்டிலும் நிலைமை மோசமாகியுள்ளது. அதேநேரம் பெரும் தொழில் நிறுவனங்கள் தடையின்றி மின்சாரத்தை தனி வழியில் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது! திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டுள்ள 4 புதிய மின் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வர 2013 அல்லது 2014 ஆகலாம். அந்தத் திட்டங்கள் வந்தால் மட்டுமே தமிழக மக்களின் இருட்டுக்கு ஓரளவு விடிவு பிறக்கும். அதுவரை? |
சட்டசபையில் திமுக தான் சரியான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது: இல.கணேசன் Posted: 08 Feb 2012 01:08 AM PST சட்டசபையில் திமுக தான் சரியான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது: இல.கணேசன் நிருபர்களிடம் அவர் கூறுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒரு ஆண்டு ஆன பிறகும் அங்கு வாழும் அப்பாவித் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்கவில்லை. தமிழர்கள் கட்டும் வீடுகளில் புத்தர் சிலை வைக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இந்தியாவில் இருந்து செல்லும் பிரதிநிதிகள் இதை ஆழ்ந்து கவனிப்பதில்லை. திமுக பொதுக் குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கலைஞர், பாஜகவை மதவாத கட்சி. பாபர் மசூதி மற்றும் குஜராத் கலவரங்கள் மீண்டும் வேண்டுமா என்று பேசியது கண்டிக்கத்தக்கது. பாஜகவை அவர் சீண்டுவது சரியல்ல. தற்போது குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்கள் கூட மோடியை ஏற்றுக் கொள்கின்றனர். கூடங்குளம் அணு மின் நிலையம் வர வேண்டும் என்பது எங்கள் கருத்து. அதை தடுக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்த் கட்சி சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டால், இந்த அளவு சீட்டுகளில் வென்றிருக்காது. அவரது கட்சி சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்தாலும், சரியான எதிர்கட்சியாக செயல்படவில்லை. தி.மு.க. தான் உண்மையில் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. தமிழகத்தில் அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது அரசுக்கு கேடு. தமிழகத்தில் மூன்றாவது அணி வர வாய்பில்லை என்றார். |
Posted: 08 Feb 2012 12:33 AM PST Junior Vikatan 12-02-2012 | Free Junior Vikatan PDF This week | Junior Vikatan 12th february 2012 ebook Download Link |
Athipookal 08-02-2012 | Sun Tv Athipookal Serial 8th february 2012 Posted: 08 Feb 2012 01:15 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Ilavarasi 08-02-2012 | Sun Tv Elavarasi Serial 8th february 2012 Posted: 08 Feb 2012 01:01 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Thiyagam 08-02-2012 | Sun Tv Thiyagam Serial 8th february 2012 Posted: 08 Feb 2012 12:33 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Mutharam 08-02-2012 | Sun Tv Muthaaram Serial 8th february 2012 Posted: 08 Feb 2012 12:04 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Vellai Thamarai 08-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 8th february 2012 Posted: 08 Feb 2012 12:03 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Uravugal 08-02-2012 | Sun Tv Uravugal Serial 8th february 2012 Posted: 08 Feb 2012 12:02 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Kasturi 08-02-2012 | Sun Tv kasthuri Serial 8th february 2012 Posted: 08 Feb 2012 12:02 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Maruthani 08-02-2012 | Sun tv Marudhaani 8th february 2012 Posted: 08 Feb 2012 12:01 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Posted: 07 Feb 2012 06:53 PM PST Vannathirai 13-02-2012 | Free Download Vannathirai Magazine PDF Ebook | Vannathirai 13th february 2012 Download Link |
Kungumam 13-02-2012 | Free Kungumam Tamil Magazine PDF This week | Kungumam 13th february 2012 Posted: 07 Feb 2012 06:52 PM PST Kungumam 13-02-2012 | Free Kungumam Tamil Magazine PDF This week | Kungumam 13th february 2012 Download Link |
மூன்று பெண்களை மணந்த "ஜாலி' கணவன் மீது நான்காவது பெண் புகார்: "புதிராகிறது' விவகாரம் Posted: 07 Feb 2012 06:38 PM PST சென்னை : பெண் எஸ்.ஐ., உள்ளிட்ட மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டதுடன், மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த, " திருமண மன்னன்' மீது முதல் மனைவி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அமுதா, 37. இவரது கணவர் முருகன்,42. இவர்கள் இருவருக்கும், ராஜா என்ற மகனும், ராதா என்ற மகளும் உள்ளனர். நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த அமுதா, தன் கணவர் மீது, புகார் மனு ஒன்றை அளித்தார். அப்புகாரில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், தொழில் செய்வதற்காக சென்னை வந்த கணவர், இரண்டு முறை ஊருக்கு வந்தார். அதன் பின், நான்கு மாதங்களாக ஊருக்கு வரவில்லை. வராதது குறித்து, உறவினர்கள் மூலம் விசாரித்தபோது, தலைமைச் செயலக பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ., ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டதாகவும், இது குறித்து, பெண் எஸ்.ஐ.,யிடம் கேட்டபோது, அவர் கணவரை அனுப்பாததுடன் மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார். ராயபுரம் போலீஸ் குடியிருப்பில் ஸ்ரீதேவி வசிப்பதால், ராயபுரம் போலீஸ் விசாரணைக்கு கமிஷனர் அலுவலகத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது. என் எதிரிலேயே இரண்டாவது மனைவி புகார் தொடர்பாக அமுதா கூறியதாவது: கடந்த 1991ம் ஆண்டு, எங்களுக்கு திருமணம் நடந்தது. அப்போது சென்னையில் ஆட்டோ ஓட்டிவந்தார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்த நிலையில், அவர் புதுப்பட்டிக்கு வந்து, நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். நகைக்கடை தொழிலின்போது, கோவை, அவினாசியைச் சேர்ந்த விதவையான சித்ரகலாவிற்கும், என் கணவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. தனக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்த அவர், சித்ரகலாவை திருமணம் செய்து, பலமுறை வீட்டிற்கே அழைத்து வந்தார். இது குறித்து, திருமயம் போலீசில் புகார் அளித்த நிலையில், அப்பெண் பிரிந்து சென்று விட்டார். அதன் பின், திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்த, லட்சுமி என்ற இலங்கை பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் திருமணமாகாமலேயே குடும்பம் நடத்தி வந்தார். அப்பெண், முதல் மனைவியை விவாகரத்து செய்து வந்தால், திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதால், என்னை கொடுமைப்படுத்தினார். அதன் பின், ஒரு நாள் அப்பெண், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, நிலைமை புரிந்ததால், அப்பெண் விலகி சென்று விட்டார். இவ்வாறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்ததால், பிரச்னை ஏற்பட்டது. இதற்கிடையில், தொழில் நஷ்டம் காரணமாக, நகைகளுடன் சென்னைக்கு வந்து, பெண் எஸ்.ஐ.,யை திருமணம் செய்துள்ளார். அவர், என் மகனுக்கு எழுதி வைத்த சொத்தும் கூட, செல்லாத சொத்தாக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். "திருமணம் செய்யவில்லை' இதுகுறித்து, அமுதாவின் கணவர் முருகனிடம் பேசியபோது, மனைவியின் நடத்தை சரியில்லாததால் தான், ஊரை விட்டு வந்ததாகவும், பெண் எஸ்.ஐ.,யுடன் நட்பாக பழகியதாகவும், திருமணம் செய்யவில்லை என்றும், அந்த முடிவும் இல்லை என்றும் தெரிவித்தார். "ஒண்ணு' தான் எனக்கு தெரியும்' முருகனின் இந்த கூற்று, உண்மைதானா என்பதை அறிய, நான்காவது பெண்ணாகிய ஸ்ரீதேவியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: நான் தாயை விட்டு பிரிந்து, தனியாக வசித்து வருகிறேன். வயது அதிகம் ஆனதால், ஆண் துணை வேண்டி, புரோக்கர் ஒருவர் மூலம் முருகனை சந்தித்தேன். தான் அனாதை என்று கூறியதை நம்பி, திருமணத்திற்கு சம்மதித்தேன். நானும் அவரும், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி, நண்பர்கள் முன்னிலையில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டோம். அதன்பின், ராயபுரம் போலீஸ் குடியிருப்பில் வரவேற்பு நடந்தது. இரண்டு மாதங்களில் அவரை பற்றி தெரிய வந்ததால், நான் அவரை அனுப்பி விட்டேன். ஒரு திருமணம் செய்த விஷயம் தான், அப்போது எனக்கு தெரிந்தது. பலரைத் திருமணம் செய்து ஏமாற்றிய விவரம் தற்போது தான் எனக்கு தெரிந்தது. நானும், முருகன் மீது நடவடிக்கை கோரி புகார் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். அமுதா அளித்த புகாரின் மீதான விசாரணை, இன்று ராயபுரம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நடக்கிறது. அப்போது, முருகன் ஏமாற்றிய பெண்கள் பட்டியல், இன்னும் நீளும் என்று கூறப்படுகிறது. |
மின்வெட்டு, 8 மணி நேரமாக, இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. Posted: 07 Feb 2012 06:36 PM PST மின்வெட்டு, 8 மணி நேரமாக, இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. பாகுபாடு கிடையாது: நிலைமை இன்னும் மோசமானதைத் தொடர்ந்து, இன்று முதல், தலைநகர் சென்னை தவிர, மாநிலம் முழுவதும், 8 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்த, வாரியம் உத்தரவிட்டுள்ளது.இதில், நகர்ப்பகுதி, கிராமப்பகுதி என்ற பாகுபாடே கிடையாது. எல்லா இடங்களிலும், 8 மணி நேரம், "கரன்ட் கட்' இருக்கப் போகிறது. சென்னையில், அறிவிக்கப்படாமல், 2 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதே, 8 மணி நேரமாகிவிட்ட நிலையில், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், அதை விடவும் அதிகமாகவே மின்வெட்டு இருக்கும் என அஞ்சப்படுகிறது. எந்த நேரம்? இந்த புதிய மின்வெட்டு, இரண்டு விதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரம் மின்வெட்டு வருகிறது. இன்னொரு முறைப்படி, காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9முதல், 10 என, 8 மணி நேரம் இருட்டில் மூழ்கப் போகிறது.மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு விட்டாலும், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், இது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் துவங்கும் நேரம் இது; சும்மாவே, புழுக்கத்துக்கு பஞ்சமிருக்காது. மாணவர்களுக்கான தேர்வுக் காலமும் நெருங்கிவிட்டது; பரீட்சை பதட்டத்தில் இருக்கும் அவர்களுக்கும், இந்த மின்வெட்டு ஓர் இடியாகவே இறங்கும். பற்றாக்குறையும், பயன்பாடும் அதிகரித்து வருவதால், தமிழக அரசுக்கும் வேறு வழியில்லாதது போல் தான் தெரிகிறது.மாலை, 6 மணிக்கு மேல், வர்த்தக நிறுவனங்கள், ஜெனரேட்டரைத் தான் பயன்படுத்த வேண்டும்; அரசின் மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. மின் உற்பத்தி சீராகும் வரை, புதிய இணைப்புகள் வழங்கப்படாது என்பன போன்ற முடிவுகளை மின்வாரியம் எடுத்தால், பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும். அப்பாவி பொதுமக்களும், தொழில் துறையும் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும். முதல்வரின் மவுனம் கலையுமா? தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்குமா?மின் தட்டுப்பாட்டால் திணறும் ஒரு மாநிலத்தில், புதிய மின் உற்பத்தித் திட்டம் துவக்கப்படாமல் தடுக்கப்படுவது, ஒரு வினோதம் தான். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவக்கப்பட்டால், அதில், தமிழகத்தின் பங்காகமட்டும், 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.இன்றைய பற்றாக்குறை நிலையில், இது மிகப்பெரிய அளவு. ஆனால், அந்த நிலையத்தைத் துவக்கவிடாமல், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். மத்திய அரசு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும், பேச்சு நடத்தியும், விளக்கங்கள் பல அளித்தும், இவர்கள், தங்கள் பிடிவாதத்தை மட்டும் தளர்த்துவதாக தெரியவில்லை. எல்லா பிரச்னைகளிலும் மன உறுதியோடு நடவடிக்கை எடுக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், இந்த விஷயத்தில் மட்டும் ஏன் மவுனம் காக்கிறார் என்பது, புரியாத புதிராக இருக்கிறது. ஒரு படி மேலே போய், "முதல்வரின் மவுனத்தில் உள்நோக்கம் இருக்கிறது' என்றே, தி.மு.க., குற்றம் சாட்டிவிட்டது. அப்படியும், அவரது மவுனம் கலையவில்லை.முதல்வரின் மவுனம் கலையுமா? தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்குமா? - நமது சிறப்பு நிருபர் - |
'அதுக்கு' ஏத்த நேரம் 'ஏழரை மணி'தானாம்!! Posted: 07 Feb 2012 06:08 PM PST 'அதுக்கு' ஏத்த நேரம் 'ஏழரை மணி'தானாம்!! தம்பதியர்கள் உறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற நேரம் என்பது குறித்து இத்தாலி நாட்டில் உள்ள தம்பதியரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் காலை ஏழரை மணிக்கு உறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது என்று கண்டறியப்பட்டது. காலை நேரத்தில் உறவு கொண்டால் அன்றைய தினம் உற்சாகமாக இருக்குமாம். காலை நேரத்தில் என்னதான் பரபரப்பு இருந்தாலும், பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இருக்குமாம். எனவே காலை நேரத்தில் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்தோடு ஆர்கசத்தையும் அதிகரிக்கும் என்கின்றார் ஆய்வில் ஈடுபட்ட செக்ஸாலஜிஸ்ட் சுஸி ஹெமான். அது சரி ஆபீஸ் போற அவசரத்தில அதுக்கு எங்க நேரம் என்கிறீர்களா? ஆய்வு இத்தாலியில தான் நடந்திருக்கு நம் ஊரில் இல்லை. |
Posted: 07 Feb 2012 06:06 PM PST உற்சாகம் தரும் 65 ஃப்ளோரிடா மாகணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட 238 தம்பதியரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் தாம்பத்ய உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மாதம் ஒருமுறை மகிழ்ச்சி அப்போது மாதம் ஒருமுறை உறவில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவும் 40 சதவிகித்ததிற்கு மேற்பட்ட தம்பதியர் கூறியுள்ளனர். தனித்தனியாக கேட்கப்பட்ட கேள்விகளில் மாதத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை உறவில் ஈடுபடுவது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் 80 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு பாஸ்டனில் நடைபெற்ற ஜிஎஸ்ஏ வின் 64வது வருடாந்திர கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆரோக்கியம், உற்சாகம் அதேபோல் ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவர்கள் 70 வயது வரை தாம்பத்ய உறவில் ஈடுபடுவதற்கான உணர்வு இருக்கும் என்று இங்கிலாந்தின் மருத்துவ இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மருந்தியல் பிரிவின் ஸ்டேசி டெஸ்லர் லிண்டாவ் தலைமையிலான குழுவினர் வயதான ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் உணர்வு குறித்து வெவ்வேறு ஆய்வுகளை நடத்தினர். அதில் முதுமைக் காலத்தில் பெண்களை விட ஆண்களுக்கு பாலுணர்வு அதிகம் இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவர்கள் 70 வயது வரை தாம்பத்ய உறவில் ஈடுபாடு காட்ட முடியும் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதான ஆண்கள் ஆரோக்கியமாக இருந்தால் மேலும் 15 ஆண்டுகளுக்கு உறவில் ஈடுபட முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். |
Posted: 07 Feb 2012 06:02 PM PST Dinamalar E-paper 08-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 8th february 2012 Download Link |
Posted: 07 Feb 2012 06:01 PM PST Dinakaran E-paper 08-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 8th february 2012 Download Link |
கோட், சூட் போட்ட சிம்பன்சி அமெரிக்க விளம்பரத்தால் சர்ச்சை!! Posted: 07 Feb 2012 05:55 PM PST கோட், சூட் போட்ட சிம்பன்சி அமெரிக்க விளம்பரத்தால் சர்ச்சை!! 2011-ம் ஆண்டு சீசன் போட்டியின் இறுதி சுற்றாக கருதப்படும் இதில் நியூயார்க் ஜெயின்ட்ஸ், நியூ இங்கிலாந்து பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் குவிந்து வருவதால் உற்சாகம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், இப்போட்டியை கருத்தில் கொண்டு விளம்பரம் ஒன்றை அமெரிக்க நிறுவனமான 'கேரியர்பில்டர்' தயாரித்து வெளியிட்டுள்ளது. இது அமெரிக்காவின் முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனம் ஆகும். உயரதிகாரி போல கோட், சூட் அணிந்திருக்கும் சிம்பன்சி ஒன்று ஸ்டைலாக குஷன் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் காட்சி இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. டிவிக்களில் இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப கேரியர்பில்டர் நிறுவனம் ரூ.17.5 கோடி ஒதுக்கியிருக்கிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டுக்கான சிறந்த விளம்பர பட்டியலில் இது இடம் பிடிக்கும் என்றும் கேரியர்பில்டர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த விளம்பரத்துக்கு விலங்குகள் நல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. 'கோட், சூட், மேக்கப் போடுவதாக கூறி சிம்பன்சியை பாடாய்ப் படுத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே, சிம்பன்சி எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி, இதுபோன்ற சித்ரவதைகளையும் அவை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. விலங்குகளின் உரிமை மீறி தயாரிக்கப்பட்ட இந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஷூட்டிங்குக்காக எந்த வகையிலும் சிம்பன்சியை தொந்தரவு செய்யவில்லை என்று கேரியர்பில்டர் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. ஆனாலும், எதிர்ப்பு கோஷம் அடங்கவில்லை. This posting includes an audio/video/photo media file: Download Now |
விஜயகாந்த் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது: என்.டி.ஆர். மனைவி ஆரூடம்! Posted: 07 Feb 2012 05:49 PM PST திருப்பதி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் காலத்தில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புள்ளதாக மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் 2வது மனைவியும், என்.டி.ஆர். தெலுங்கு தேச கட்சித் தலைவருமான லட்சுமி சிவபார்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திருப்பதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, வரும் 2014ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் ஆந்திர மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சமாதிகட்டுவார்கள். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்குவதென்று மக்கள் தீர்மானித்துவிட்டனர். என்.டி. ராமராவ், ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக்காலம் ஆந்திர மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அப்பேர்பட்ட ராமராவின் மகன் பாலகிருஷ்ணாவின் மூலம் ஆட்சியைப் பிடிக்க சந்திரபாபு நாயுடு முயற்சி செய்கின்றார். அது ஒருபோதும் நடக்காது. ஏனென்றால் மக்கள் பாலகிருஷ்ணாவை என்.டி.ஆரின் கலைவாரிசாக நினைக்கிறார்களே தவிர அரசியல் வாரிசாகக் கருதவில்லை. மேலும் பாலகிருஷ்ணாவின் செல்வாக்கு தான் 2009ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலேயே தெரிந்துவிட்டதே. நடிகர் சிரஞ்சீவி முதல்வராக வேண்டும் என்று வெறி பிடித்து அலைகிறார். பதவிக்கு குறிவைத்து வந்த அவர் தனது லட்சியம் நிறைவேறாததால் பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். காங்கிரஸை வைத்து முதல்வராகிவிடலாம் என்று நினைக்கின்றார். நிஜமாகவே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தால் தமிழகத்தின் விஜயகாந்திடம் அவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கட்சி துவங்கிய விஜயகாந்த் முதல் சட்டசபை தேர்தலில் தான் மட்டும் வெற்றி பெற்றார். மக்கள் சேவையாற்றியதன் பயனாக அடுத்த தேர்தலில் அவரது கட்சியைச் சேர்ந்த 29 பேர் வெற்றி பெற்றனர். வருங்காலத்தில் அவர் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு படிப்படியாக முன்னேறும் அவரைப் பார்த்து சிரஞ்சீவி பாடம் கற்றுக்கொள்ளட்டும் என்றார். |
சங்கரன்கோவிலில் தேர்தல் பணியாற்ற 26 அமைச்சர்கள் ஒதுக்கீடு: ஜெ. அறிவிப்பு Posted: 07 Feb 2012 05:47 PM PST சங்கரன்கோவிலில் தேர்தல் பணியாற்ற 26 அமைச்சர்கள் ஒதுக்கீடு: ஜெ. அறிவிப்பு சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சங்கரன்கோவில் நகரசபை தலைவர் என்ஜினியர் முத்துசெல்வி போட்டியிடுகிறார். எப்படியும் இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு அதிமுக தேர்தல் பணிகளை தற்போதே துவங்கிவிட்டது. விரைவில் முதல்வர் சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்கிறார். அதற்காக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. இந்நிலையில் 26 அமைச்சர்கள் உள்பட 34 பேர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விரைவில் நடைபெற உள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். 1. ஓ. பன்னீர்செல்வம், 2. செங்கோட்டையன், 3. நத்தம் விசுவநாதன், 4. கே.பி. முனுசாமி, 5. வைத்திலிங்கம், 6. பா. வளர்மதி, 7. சி.வி. சண்முகம், 8. தாமோதரன், 9. செல்லூர் ராஜூ, 10. பச்சைமால், 11. எடப்பாடி பழனிசாமி, 12. ஆர். காமராஜ், 13. எம்.சி. சம்பத், 14. கே.வி. ராமலிங்கம், 15. சின்னையா, 16. பி. தங்கமணி, 17. எஸ். சுந்தரராஜ், 18. செந்தூர்பாண்டியன், 19. கோகுல இந்திரா, 20. பி.வி. ரமணா, 21. ந. சுப்பிரமணியன், 22. வி. செந்தில்பாலாஜி, 23. என்.ஆர். சிவபதி, 24. ராஜேந்திர பாலாஜி, 25. செல்லப்பாண்டியன், 26. டாக்டர். விஜய், நெல்லை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர். முருகை யாபாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பி.எச். பாண்டியன், அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் சின்னசாமி எம்.எல்.ஏ., அதிமுக மாணவர் அணிச்செயலாளர் எஸ். சரவணபெருமாள், அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளர் அன்வர்ராஜா, ஜெயலலிதா பேரவைச் செயலாளர் டி.ஆர். அன்பழகன், அதிமுக கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ராஜலட்சுமி எம்.எல்.ஏ. ஆகிய 34 பேர் நியமிக்கப்படுகிறார்கள். கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். 6 பேர் மட்டும் சென்னையில்... தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர்த்து மொத்தம் 32 அமைச்சர்கள் உள்ளன. அவர்களில் 6 பேரை மட்டும் சென்னையில் வைத்துக் கொண்ட மற்ற 26 பேரையும் அவர் சங்கரன்கோவிலுக்கு அனுப்பி வைக்கவுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. |
ஸ்டாலின்... அழகிரி... வைகோ?- திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? Posted: 07 Feb 2012 05:45 PM PST ஸ்டாலின்... அழகிரி... வைகோ?- திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? காரணம், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழக அரசியலில் திமுகவின் ஆளுமை அப்படி! கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? என்ற கேள்வியை முன் வைத்து 'குமுதம் ரிபோர்ட்டர்' வாரமிருமுறை இதழ் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், முக ஸ்டாலினே தலைமைக்குத் தகுதியானவர் என்று 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்டாலினுக்கு இன்று வரை தலைமைப் பதவி கிடைக்காமலிருக்க முக்கிய காரணம் என்று சித்தரிக்கப்படும் அழகிரிக்கு 12 சதவீத ஆதரவு மட்டுமே இருப்பதாக அந்தப் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது. திமுகவிலிருந்து பிரிந்து போய், தனிக்கட்சி நடத்தி வரும் வைகோவை 8 சதவீதம் பேர் திமுக தலைமைக்கு தகுதியானவர் என்று கருத்து கூறியுள்ளார்களாம்! இந்த சர்வேயில் இன்னும் இருவர் உண்டு. தயாநிதி மாறன் மற்றும் கனிமொழி! தயாநிதிக்கு 5 சதவீத ஆதரவும், கனிமொழிக்க 3 சதவீத ஆதரவும் உள்ளதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. இது கனிமொழி ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. காரணம், கனிமொழியின் 'திகார் தியாகத்துக்கு' கட்சியில் பெரிய பதவியை பரிசாகத் தர வேண்டும் என்று அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் வெளிப்படையாகக் கூறிவந்தார். கருணாநிதியும் அதுகுறித்து யோசிப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த சர்வேயை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் கருணாநிதிக்குப் பின் திமுகவின் அடுத்த தலைவர் முக ஸ்டாலின்தான் என்பது உறுதியாகிறது என இந்த சர்வே முடிவு கூறுகிறது. 2007ல் இதே கேள்வியை வைத்து தினகரன் நடத்திய சர்வே மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் நினைவிருக்கலாம்! |
மகனுக்கு நயன்தாரா .... அப்பாவுக்கு தாரா Posted: 07 Feb 2012 05:40 PM PST மகனுக்கு நயன்தாரா .... அப்பாவுக்கு தாரா நடிகர் பிரபுதேவா - நடிகை நயன்தாரா காதல் விவகாரம் சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர்கள் விவகாரம் குடும்பநல நீதிமன்றம் வரைக்கும் வந்தது. இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. பைனலாக 'செட்டில்' ஆகவில்லை. இந்த நிலையில் நடிகர் பிரபுதேவாவின் தந்தையான டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், திருமணத்துக்கு முன்பு செய்த லீலைகள் வெளிவந்துள்ளன. தன்னை காதலித்து கர்ப்பிணியாக்கி, பின்னர் திருமணமும் செய்து கொண்ட சுந்தரம், பின்னர் ஏமாற்றிவிட்டுப் போய் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக டான்ஸ் மாஸ்டர் தாரா முறையிட்டிருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடத்தப்படும், சமரச தீர்வு மையத்தில் தாரா இந்தப் புகாரைக் கொடுத்தார். அது சில தினங்களுக்கு முன்புதான் மீடியா வெளிச்சத்துக்கு வந்தது. தன்னையும் தனது மகனையும் கடந்த பல ஆண்டுகளாக சுந்தரம் பராமரித்து வந்தார் என்றும் தற்போது குடும்பத்தை நடத்துவதற்கு நிதியுதவி செய்வதில்லை என்றும் புகார் மனுவில் தாரா கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து குடும்பத்தை பராமரிப்பதற்காக ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரியுள்ளார். இந்த மனு தொடர்பான விசாரணைக்காக ஆஜராகும்படி சுந்தரத்துக்கு பலமுறை சமரச தீர்வு மையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் நோட்டீஸ் அடிப்படையில் அவர் ஆஜராகவில்லை. அதைத் தொடர்ந்து தாராவுக்கு சமரச தீர்வு மையம் ஆலோசனை வழங்கியது. இந்த புகார் மனுவை வழக்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என்று தாராவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கைவசம் எக்கச்சக்க ஆதாரங்கள் இருப்பதால் விரைவில் வழக்கு தொடரப் போகிறாராம் தாரா. |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |