TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


அஜித்தின் வில்லன் இப்போது விஜய்க்கும் வில்லன் ஆனார்...!

Posted: 04 Feb 2012 01:16 AM PST


அஜித்தின் வில்லன் இப்போது விஜய்க்கும் வில்லன் ஆனார்...!

பில்லா-2 படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து வரும் வித்யூத் ஜம்வால், இப்போது துப்பாக்கி படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்து வருகிறார். பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு புதிய வரவாக வந்திருப்பவர் நடிகர் வித்யூத் ஜம்வால். இவர் இப்போது அஜித்தின் பில்லா-2 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படம் தான். ‌

ஒரே நேரத்தில் அஜித், விஜய் என்று இருவரது படங்களில் மாறி மாறி நடித்து வரும் வித்யூத், அந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் உண்மையிலேயே ரொம்ப அதிர்ஷடக்காரன். அதனால் தான் ஒரே நேரத்தில் முன்னணி ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அஜித் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் ரொம்ப ஹாட்டான ஆளு, அதேசமயம் தான் செய்யும் எந்த வேலையிலும் முழு திருப்தி இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். அதேமாதிரி விஜய், ரொம்ப கூலான எனர்ஜிட்டிக் ஆளு. அதேசமயம் தான் ஒரு ஸ்டார் என்ற கர்வம் இல்லாதவர் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் தான், வித்யூத்திற்கு பாலிவுட்டில் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Thanks :http://tamil.yahoo.com/

நயன்தாரா-பிரபுதேவா விவகாரத்தில் என்னை ஏன் இழுக்குறாங்க...? கொதிக்கிறார் ஹன்சிகா மோத்வானி...!

Posted: 04 Feb 2012 01:13 AM PST


நயன்தாரா-பிரபுதேவா விவகாரத்தில் என்னை ஏன் இழுக்குறாங்க...? கொதிக்கிறார் ஹன்சிகா மோத்வானி...!


நயன்தாரா-பிரபுதேவா பிரச்னையில் என்னை ஏன்..? தேவையில்லாமல் இழுக்குறாங்கன்னு எனக்கு தெரியல, இதுபோன்ற விஷயங்களை கேட்கும் போது ரொம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு என்று கொதித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.

பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து தனுஷ், விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரத்தொடங்கியுள்ளார். தற்போது தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கும் ஹன்சிகாவை ஒரு செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிரபுதேவா-நயன்தாரா பிரிவுக்கு காரணம் ஹன்சிகா தான் என்று ஒரு பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, நீண்ட நேரத்திற்கு பின் சூடாக பேசத் தொடங்கினார். என்னைப் பற்றி உங்களுக்கு தெரியும், நான் ரொம்ப ஸ்டைரட் பார்வர்ட். எதையும் தைரியமாக பேசிடுவேன். ஆனா, என்ன பத்தி பிரபுதேவா கூட பேசுறது ரொம்ப தப்பா படுது. அவர் எங்க வீட்டு பெரிய அண்ணன் மாதிரி. அவரை அண்ணா என்று தான் எப்போதும், எங்கிருந்தாலும் கூப்பிடுவேன். ஆனால் இப்போ இந்த மாதிரி செய்தியை கேட்கும் போது ரொம்பவே அசிங்கமா இருக்கு. எங்கேயும் காதல் படத்தின் சூட்டிங் பாரிஸ் நடந்த போது பிரபுதேவா கூட நயன்தாராவும் வந்திருந்தாங்க. அப்போது தான் அவரை பார்த்து சந்தித்து கொஞ்ச நேரம் பேசினேன். அதன் பிறகு பிரபுதேவா, நயன்தாரா யார்கிட்டேயும் நான் பேசல, அவங்க பார்க்கல. அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிவிட்டதால, சூட்டிங்கில் பிஸியாகிவிட்டேன்.

நயன்தாரா-பிரபுதேவா இவர்களுக்குள் நடக்கிற கேட் வால் பிரச்னையில் என்னை ஏன் இழுக்குறாங்க...? என்று தெரியல. இப்படி செய்தியை கேட்கும்போதெல்லாம் ரொம்ப அசிங்கமா, கேவலமா, அருவெறுப்பா இருக்கும். என் இ‌மேஜை கெடுக்க பாக்குறாங்க. இந்தமாதிரி வதந்தியை பரப்புறவுங்க வீட்டிலேயும் பெண்கள் இருப்பாங்க. கண்ணா பின்னான்னு எழுதி, யாருக்கோ நல்லது பண்றோம் என்கிற பேர்வழியில், எங்க வீட்டில் உள்ள ஒட்டு மொத்த நிம்மதியையும் கெடுத்துட்டாங்க. இதைப்பற்றி என் அம்மா, என் அண்ணன் என எல்லோரும் ரொம்ப பீல் பண்ணுனாங்க. 

நான் லண்டன் படிச்சவ என்றாலும், நம்ம நாட்டு கலாச்சாரத்தை நிறையவே பின்பற்றுபவள். எனக்குனு ஒரு லிமிட் இருக்கு. என் வேலை எனக்கு முக்கியம். நான் இன்னும் சினிமாவுல நிறைய சாதிக்க வேண்டியிருக்கு. இப்போ மும்பையில இருக்கேன். ஒரு கல் ஒரு கண்ணாடி படம் முடிஞ்சு, சிம்புவோட வேட்டை மன்னன் படத்தில் நடிக்கிறேன். இதுபோன்ற செய்திகள் என்னை மட்டும் அல்லாமல் என்னோட வேலையையும் பாதிக்குது.

சரி இதுபற்றி பிரபுதேவாவுடன் பேசினீங்களா என்று கேட்டதும், இதுவரைக்கும் இல்ல, பொறுமையா இருக்கேன். இது எல்லாதுக்கும் கடவுளும், காலமும் பதில் சொல்லும். என்ன பத்தி அவதூறான செய்திக்கும், விமர்சனங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லிகிட்டு இருக்க முடியாது என்று கொதித்து போய் பேசி முடித்தார ஹன்சிகா.

Thanks : http://tamil.yahoo.com/

விரைவில் மின்தடை நீங்கும் : ஜெயலலிதா

Posted: 04 Feb 2012 01:10 AM PST


விரைவில் மின்தடை நீங்கும் : ஜெயலலிதா

சென்னை : 2013ம் ஆண்டு மத்தியில், மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் மாதத்திற்குள், மின் உற்பத்தி 1950 மெகாவாட் ஆகவும், அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 600 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

2 ஜி ஊழல் : தப்பினார் அமைச்சர் சிதம்பரம் ! சாமி மனு தள்ளுபடி : கோர்ட்டில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கவில்லை !

Posted: 04 Feb 2012 01:08 AM PST


2 ஜி ஊழல் : தப்பினார் அமைச்சர் சிதம்பரம் ! சாமி மனு தள்ளுபடி : கோர்ட்டில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கவில்லை !

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று வழங்குகிறது. இதற்கென சு. சாமி இன்று காலை கோர்ட்டுக்கு முதல் ஆளாக வந்தார். பின்னர் கோர்ட்டுக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய சு.சாமி., கூறுகையில்: மதியம் 12.15 க்கு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி ‌தெரிவித்தார். என்வே நான் இன்னும் சிறிது நேரத்தில் போய் வருகிறேன். சிதம்பரத்திற்கு எதிராக நிச்சயம் தீர்ப்பு வரும். இந்த தீர்ப்பு ஊழலுக்கு எதிராக கிடைத்த வெற்றியாக இருக்கும் என்றார். சிதம்பரம் அரசியல் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப்போகும் தீர்ப்பு என்பதால், அரசியல் வட்டாரங்கள் உச்சகட்ட பரபரப்பில் உள்ளன.
கோர்ட்டுக்குள் சு. சாமிக்கு மட்டும் அனுமதி: இன்றை தீர்ப்பு விவரம் அறிவிக்கப்படும் போது கோர்ட் அறைக்குள் சு. சாமி மட்டும் அனுமதிக்கப்பட்டார். ஏனையோர் அனைவரும் கோர்ட்டுக்கு வெளியே இருந்தனர். கோர்ட் வளாகம் சுற்றிலும் நிருபர்கள், அரசியல்வாதிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் சு. சாமி கோர்ட் வளாகத்திற்கு மாற்று வழியில் சென்றார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜாவோடு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கடந்த செப்டம்பரில், சி.பி.ஐ., கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., கோர்ட்டில் சாமி ஆஜராகி சாட்சியம் அளித்தார். தவிர, தன் கோரிக்கைக்கு ஆதாரமாக, பல முக்கிய ஆவணங்களையும் நீதிபதி ஷைனி முன் சமர்ப்பித்தார்.

சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜரானபோது, சுப்ரமணியசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகள்: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள் உள்ளன. முதலாவது, 2008ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்கு 2001ம் ஆண்டு விலையை நிர்ணயம் செய்தது. இரண்டாவது, ஸ்வான், மற்றும் யூனிடெக் கம்பெனிகளின் பங்குகளை வெளிநாட்டு கம்பெனிகளான எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளிலும் அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு பங்கு இருக்கிறது. ஏனென்றால், ஸ்பெக்ட்ரத்திற்கு விலை நிர்ணயம் தொடர்பான முடிவுகளை, நிதி அமைச்சரும், தொலைத் தொடர்பு அமைச்சரும் இணைந்து தான் எடுக்கவேண்டும் என்று, 2003ம் ஆண்டு அமைச்சரவை தீர்மானம் கூறுகிறது.

ராஜாவுக்கு யோசனை :அதன்படி நிதி அமைச்சர் சிதம்பரமும், தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவும், 2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளனர். அதேபோல், கடந்த 2008ம் ஆண்டு ஜூலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த, இந்த இரண்டு அமைச்சர்களும் தாங்கள் எடுத்த முடிவு பற்றி தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற எந்த நிறுவனமும், மூன்று ஆண்டுகளுக்குள் தங்கள் லைசென்சை விற்பனை செய்யக்கூடாது என்பது சட்டம். ஆனால், "2ஜி' லைசென்சைத்தான் விற்கக் கூடாது. பங்குகள் மூலம் கம்பெனியை விற்பனை செய்யலாம் என்ற யோசனையை ராஜாவிடம், சிதம்பரம் தெரிவித்திருக்கிறார் என்றார்.அத்துடன் கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் ஆவணத்தையும், கோர்ட்டில் சாமி ஒப்படைத்தார். இந்த ஆவணத்தில்தான், "சிதம்பரம் வலியுறுத்தியிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைபிடித்திருக்கலாம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு:ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில், நேற்று முன்தினம் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 2008 ஜனவரி மாதத்தில் இருந்து, தொலைத் தொடர்பு அமைச்சகம் வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்ததோடு, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டுமா என்பதை சி.பி.ஐ., கோர்ட்டே முடிவு செய்யும் என, குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று வழங்குகிறது. இந்தத் தீர்ப்பு சிதம்பரத்தின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தீர்ப்பாக இருக்கும் என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

Captain News Morning 04-02-2012 | Captain seithigal 4th February 2012 | Captain Tv Morning News

Posted: 04 Feb 2012 01:04 AM PST


Captain News Morning 04-02-2012 | Captain seithigal 4th February 2012 | Captain Tv Morning News

This posting includes an audio/video/photo media file: Download Now

Azhagi 06-02-2012 to 10-02-2012 This week promo | Sun tv Alagi 6th February to 10th February 2011

Posted: 04 Feb 2012 12:59 AM PST


Azhagi 06-02-2012 to 10-02-2012 This week promo | Sun tv Alagi 6th February to 10th February 2011

This posting includes an audio/video/photo media file: Download Now

CCl2 live Match-Celebrity Cricket League 2 04-02-2012 live match | Surya Tv Celebrity Cricket League 4th February 2012 | CCL2 results | CCL2 Live Score | CCL2 Match Results | Kerala Strikers Vs Bengal Tigers Match Results and Scores

Posted: 04 Feb 2012 12:55 AM PST


CCl2 live Match-Celebrity Cricket League 2 04-02-2012 live match | Surya Tv Celebrity Cricket League 4th February 2012 | CCL2 results | CCL2 Live Score | CCL2 Match Results | Kerala Strikers Vs Bengal Tigers Match Results and Scores
Kerala Strikers Team Players:


MOHAN LAL, INDRAJITH, PRITHVIRAJ, ASIF ALI, KUNCHAKO BOBAN, MUNNA SIMON, BALA, VINU MOHAN, VIVEK GOPAN, RAJEEV PILLAI, 
NIKHIL MENON,NIVIN PAULY, MANIKUTTAN, SAIJU KURUP, PRAJOD KALABHAVAN, RIAZ AHMAD, UNNI MUKUNDAN, REJATH MENON, BINEESH 

KODIYERI

Bengal Tigers Team Players:

Jeet,JISSHU,INDRANEIL,JOY,RAJA,TABUN,SAUGATA, BABUL,VIVEK, AMITABH,INDRAJIT,SUMAN,SANDY,SRIJIT,KAUSHIK,SILAJIT

PLace: Vizag

Match Starts at 2 PM IST

Watch Live Match...

Must refresh this page ..when not loading..video..

This posting includes an audio/video/photo media file: Download Now

Watch இசைஅருவி TV Online - Watch Isai Aruvi Tv Online

Posted: 04 Feb 2012 12:35 AM PST


Watch இசைஅருவி TV Online

This posting includes an audio/video/photo media file: Download Now

Watch கலைஞர் டிவி Tv Online

Posted: 04 Feb 2012 12:31 AM PST


Watch கலைஞர் டிவி Tv Online

This posting includes an audio/video/photo media file: Download Now

Watch கலைஞர் செய்திகள் TV Online

Posted: 04 Feb 2012 12:25 AM PST


Watch கலைஞர் செய்திகள் TV Online

This posting includes an audio/video/photo media file: Download Now

Watch சிரிப்பொலி டிவி Online - Kalaigner tv Network Online

Posted: 04 Feb 2012 12:23 AM PST


சிரிப்பொலி டிவி

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒருவரை கொலைசெய்து கண்களையும் மூளையையும் தின்ற கொடூர மனிதன்

Posted: 04 Feb 2012 12:16 AM PST


ஒருவரை கொலைசெய்து கண்களையும் மூளையையும் தின்ற கொடூர மனிதன்


அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் நபரொருவரைக் கோடரியினால் தாக்கி அவரது மூளையை உட்கொண்ட நபருக்கு மனநல பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டரி லிங்கோன் ஸ்மித் (35) என்ற நபரே இக்கொலையுடன் தொடர்புபட்டவராவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி ஏஞ்சல் கொன்சாலிஸ் என்பவரைக் கொலை செய்து அவரது மூளையையும், கண்களையும் உண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அருகில் உள்ள சுடுகாடொன்றில் வைத்தே இவற்றை உட்கொண்டுள்ளதாகக் குற்றவாளி தெரிவித்துள்ளார். இக்குற்றவாளி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  ஸ்மித்தை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென இவர் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் வாதிட்டதாலேயே நீதிபதி இவ் உத்தரவை வழங்கியுள்ளார்.

இவ்வழக்கு இம்மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு 60 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் இவரை விடுதலை செய்ய நேர்ந்தால் அது சமூகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.




"பிரபாகரன்: வாழ்வும் மரணமும்" - பிரபாகரனின் முரட்டுக் காதல் - பா.ராகவன்

Posted: 04 Feb 2012 12:06 AM PST


பிரபாகரன்: வாழ்வும் மரணமும்'' - பிரபாகரனின் முரட்டுக் காதல் - பா.ராகவன்

பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் - இப்போது இல்லை.
ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை 'மாவீரர் மரணம்' என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று ஈழத் தமிழர் உலகமே கண்ணீர் சிந்தியது. அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள்.

எப்படி இந்த மனிதர் இத்தனை லட்சம் பேரை பாதித்தார்? ஒரு தீவிரவாதியாகவும் சமூக விரோதியாகவும் கொலைகளில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்தவராகவும் இருந்தால், அவரது மரணம் இப்படியா அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கும்? இப்படியா தமிழினத்தைக் கதறவைத்திருக்கும்? பிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல். ஈழப் போராட்டத்தின் இறுதித் தோல்விகளுக்கான காரணங்களை, பிரபாகரன் என்னும் தனி மனிதரின் ஆளுமையை முன்வைத்துக் கண்டறியும் முயற்சி இது.

ஈழ யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயம் எழுதப்பட்டுக்கொண்டிருந்த இந்நூலின் சில அத்தியாயங்கள், குமுதம் வார இதழில் தொடராக (s/o வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை என்னும் தலைப்பில்) வெளிவந்தன என்பது ஒரு தகவலுக்காக.

ஆனால் ``பிரபாகரன்: வாழ்வும் மரணமும்'' என்று துணிந்து புத்தகம் எழுதி இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பா. ராகவன்.

பிரபாகரன் இறந்து விட்டார் என்று இலங்கை அரசு பிரகடனப்படுத்தியதை தொடர்ந்து அசுர வேகத்தில் புத்தகத்தை வெளியிட்டு இருக்கின்றார்.

இவர் குமுதம், ரிப்போர்ட்டர் ஆகியவற்றில் வே. பிரபாகரன் குறித்து எழுதிக் கொண்டிருந்த தொடர்கள் இந்நூலின் ஆக்கத்துக்கு பேருதவி செய்து இருக்கின்றன.

இப்புத்தகம் கடைகளுக்கு வந்து சில நாட்களிலேயே வசூலில் சாதனை படைத்து இருக்கின்றது.

எம். ஜி. ஆர் பிரபாகரனுக்கு செய்த உதவிகள், ராஜிவ் காந்தி படுகொலை, மாத்தையாவுக்கு பிரபாகரன் வைத்த சோதனை என்று ஏராளமான விறுவிறுப்பு சம்பவங்களை இந்நூல் கொண்டு உள்ளது.

இந்நூல் கண்டிப்பாக பிரபாகரனுக்கு ஆதரவானதுதான். ஆனால் பிரபாகரன் தரப்பு நியாயங்களையும் கூறுகின்ற அதே நேரம் பிரபாகரன் விட்ட தவறுகளையும் சுட்டுக் காட்டுகின்றது.

இந்நூலில் எல்லோரையும் வாசிக்கத் தூண்டுகின்ற விடயமாக பிரபாகரனின் காதல் உள்ளது.

இதை முரட்டுக் காதல் என்று வர்ணித்து உள்ளார் ஆசிரியர்.

நூலில் இருந்து சம்பந்தப்பட்ட அத்தியாயங்களை வாசகர்களின் பார்வைக்கு தருகின்றோம்.

- ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எண்பத்தி மூன்று என்பது ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை தேவதைகளாலும் சாத்தான்களாலும் ஒருமித்து சபிக்கப்பட்ட ஆண்டாக இருந்தது. எத்தனை அவலங்கள்! திரும்பிய பக்கமெல்லாம் கொலைகள், கொள்ளைகள், கலவரம்.

ஒதுங்க ஓர் இடமில்லாமல் மக்கள் ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்தார்கள். வாழ்விடங்கள் இல்லாமல் போயின. பிள்ளைகளின் படிப்பு போனது. தொழில் போனது. உறவுகள், தொடர்புகள், சொத்து சுகங்கள், மேலான நிம்மதி அனைத்தும் இல்லாமல் போன வருடம் அது.

தறிகெட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இல்லை அது. உட்கார்ந்து யோசித்து திட்டமிட்டுச் செய்யப்பட்ட கலவரம். பீடாதிபதி ஜெயவர்த்தனா ஆசீர்வாதமளித்திருந்தார். அவர் அதிபர். கண்ணசைத்தால் போதும். கலவரதாரிகள் சிலிர்த்துக்கொண்டு எழுந்து விடுவார்கள்.

ஒரு கையில் வாக்காளர் பட்டியல். மறுகையில் ஆயுதம். வீடு வீடாகத் தேடிச் சென்று கொல்வது ஒரு சுகம். இழுத்துப் போட்டு எரிப்பது ஒரு சுகம். குழந்தைகள் கதறுகின்றனவா? தூக்கிப் போட்டு கீழே விழும்போது சுட்டுத்தள்ளு. பார்க்கும் மக்கள் வாயடைத்து நிற்பார்கள்.

கொத்தாகச் சுட்டுத்தள்ள அதுவே தருணம். வீணாக்காதே. ஓடுகிறார்களா? பிடித்து நிறுத்திக் கத்தியைச் சொருகு. கடைகளுக்குள் புகுந்துகொண்டு ஷட்டரை இறக்கிவிடுகிறார்களா? விட்டுவிடு.

அவர்களுக்கு உள்ளேயே ஜீவ சமாதியளித்துவிடலாம். ஒரு கடைக்கு ஒரு கேன் பெட்ரோல் போதும். நீ புகைக்காதவனாயினும் பரவாயில்லை. பாக்கெட்டில் எப்போதும் தீப்பெட்டி இருக்கட்டும்.

இதெல்லாம் காவியத்துக்குப் பாயிரம் போல. மேல் பேச்சுக்கு `விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம்' என்று சொல்வார்கள். ஏய், பார்த்தாயா? இங்கே புலிகள் இருக்கிறார்களா? மரியாதையாகச் சொல்லிவிடு.

பிரபாகரன் இங்கேதான் பதுங்கியிருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். எங்கே? ஊர் ஊராக ராணுவ டிரக்குகள் போகும். இறங்கி, எதிர்ப்படுபவர்களைப் பிடித்து விசாரிப்பார்கள். அடித்துத் துவைத்துத் தூக்கிப் போடுவார்கள்.

அப்படித்தான் ஜூலை 15-ம் தேதி மீசாலை கிராமத்துக்கு ராணுவம் போனது. இரண்டு ஜீப்புகள், ஒரு மினி பஸ், பின் தொடரும் ஒரு பெரிய ராணுவ டிரக். நிறைய வீரர்கள்.

அனைவரிடமும் ஆயுதங்கள். சுற்றி வளைத்து நின்றவர்கள் மத்தியில் நான்கு விடுதலைப் புலிகள் மாட்டிக்கொண்டார்கள். அதுவும் பதுங்க வழியில்லாத வெட்ட வெளிப் பிரதேசம்.

சரி, தாக்கத் தொடங்கலாம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு சுட ஆரம்பித்தார்கள். உக்கிரமான சண்டை. வீரம் செறிந்த சண்டை. நான்கு பேருக்கும் நூறு பேருக்கும் இடையிலான சண்டை.

ஆனால் பதுங்கியிருந்து தாக்குவதற்கும் வெட்டவெளியில் நின்று பதிலடி தருவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. எதிரியின் குறி சரியாக அமையும் வரை மட்டுமே உயிர் பிழைத்திருக்க முடியும்.

பல நிமிடங்கள் நீடித்த அந்த யுத்தம் இரண்டு விஷயங்களைத் தெளிவாக்கியது. இலங்கை வீரர்களுக்குக் குறி பார்த்துச் சுடத் தெரியாது என்பது ஒன்று. வெட்டவெளியில் சுற்றி வளைக்கப்பட்டு சிக்கிக்கொண்டாலும் விடுதலைப் புலிகளுக்குத் தப்பிக்கத் தெரியும் என்பது இரண்டாவது.

இரண்டு பேர் அன்றைக்குத் தப்பித்தார்கள். இரண்டு பேர் இறந்தார்கள். அதுவும் சிங்கள வீரர்களால் கொல்லப்பட்டு அவர்கள் உயிர் துறக்கவில்லை. குண்டடி பட்டிருந்தது. ஓட முடியாது என்று தெரிந்து, எதிரியிடம் நான் மாட்டிக்கொள்ளக்கூடாது, என்னைச் சுட்டுவிடு என்று கேட்டு சக போராளியால் சுடப்பட்டு இறந்து போனார்கள். சுட்டவர்களின் முகமெங்கும் கண்ணீர். சுடப்பட்டவர்களின் முகங்களில் புன்னகை.

சீலன், ஆனந்த் என்கிற அந்த இரு போராளிகளுள் சீலன் பிரபாகரனுக்கு மிக நெருக்கமான தோழன். பின்னாளில் தனக்குத் திருமணமாகி, முதல் குழந்தை பிறந்தபோது அந்தச் சீலனின் இயற்பெயரான சார்லஸ் ஆண்டனி என்பதையே அதற்கு வைக்குமளவுக்கு நெருக்கமான தோழன்.

எனவே பிரபாகரன் துடித்து எழுந்தார். விட்டுவிடுவதற்கில்லை. சீலன், ஆனந்தின் உயிர் இயற்கையில் கரைவதற்குள்ளாக ஒரு பதிலளித்தாக வேண்டும். செல்லக்கிளி என்று கூப்பிட்டார். கிளி பறந்து வந்தது. கூடவே அவரது படைப்பிரிவினர்.

மறுபுறம் புலனாய்வுப் பிரிவினர் தட்டி எழுப்பப்பட்டு, யாழ்ப்பாணம் முழுதும் இரவு நேரங்களில் ராணுவ வாகனங்கள் ரோந்து போகும் பாதைகள் பற்றிய விவரம் உடனே, உடனே வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது.
பரபரவென்று திட்டம் தீட்டப்பட்டது.

திருநெல்வேலியைத் தேர்ந்தெடுத்தார்கள். யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலி. ராணுவக் கவச வாகனங்கள் இரவுப் பொழுதில் அணி வகுத்துப் போகும் பாதை. வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். புறப்பட உத்தரவு கேட்டார் செல்லக்கிளி.

இரு, நானும் வருகிறேன் என்றார் பிரபாகரன். கோபம் குறையவில்லை. சற்றும் அணையாத தீ. உள்ளுக்குள் கனன்ற பெருநெருப்பு. புறப்பட்டார். பிரபாகரன், செல்லக்கிளி, விக்டர், சந்தோஷம், புலேந்திரன், கிட்டு. பதினான்கு பேர் கொண்ட குழுவில் ஆறு கமாண்டர்கள். பிரபாகரனே களமிறங்கினாலும் இந்தத் திட்டத்துக்கு செல்லக்கிளிதான் கமாண்டர் என்று முடிவு செய்யப்பட்டது.

இருள் மூடிய வானம். செல்லக்கிளி பலாலியாழ்ப்பாணம் சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியிருந்தார். பொது மக்களிடம் சாங்கோபாங்கமாக விஷயம் சொல்லப்பட்டிருந்தது. யாரும் வெளியே வரவேண்டாம். கடைகளைத் திறக்கவேண்டாம். வாகனங்களை வெளியே எடுக்க வேண்டாம். இன்றொருநாள் வீட்டில் நிம்மதியாகத் தூங்குங்கள். இனி தூங்க அவகாசம் கிடைக்குமா என்று சொல்லமுடியாது.

சாலையில் கண்ணிவெடிகள் பொருத்தப் பட்டன. எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செல்லக்கிளி ஒருதரம் போய்ப் பார்த்தார். பதினான்கு பேரும் நிலையெடுத்து சாலையின் இரு புறமும் அணி வகுத்துப் பதுங்கி நின்றார்கள். பிரபாகரன் காத்திருந்தார்.

மாதகல் என்னும் இடத்தில் ராணுவ முகாம் ஒன்று உண்டு. அங்கிருந்துதான் புறப்படுவார்கள். புறப்பட்டார்கள். முன்னால் ஒரு ஜீப். பின்னால் ஒரு கவச வாகனம். மொத்தம் பதினைந்து வீரர்கள். வருகிறார்கள் என்றார் செல்லக்கிளி. அலர்ட் ஆனார்கள். ஜீப் நெருங்கியது. கண்ணிவெடி பொருத்தப்பட்ட இடத்தை அது தொட்டபோது பிரபாகரன் விசையை அழுத்தினார். வெடித்தது. வெடித்தார்கள்.

அதுதான் ஜெயவர்த்தனாவை அதிரச் செய்தது. எண்பத்தி மூன்றாம் வருடம் ஜனவரியிலேயே ஆரம்பித்த அரசாங்கக் கலவரத் திருவிழா தன் அடுத்த பரிமாணத்தை எட்டுவதற்கும் அதுவே காரணமாயிற்று. அன்றைக்கு ராணுவ டிரக்கில் சென்றுகொண்டிருந்த அத்தனை பேரும் இல்லாமல் போனார்கள்.

விவரிக்க முடியாத கொடூரங்கள். எங்கும் மரண ஓலம், காணுமிடமெல்லாம் ரத்தம். யாழ்ப்பாணம் ஒரு மாபெரும் திறந்தவெளி மயானமாகிக்கொண்டிருந்தது. அவலம் ஒரு பக்கம். சீற்றம் ஒரு பக்கம். பிரபாகரன் விடாமல் பதில் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த சமயம் அது.

மக்களின் முழு ஆதரவும் புலிகளின் பக்கம் இருந்தது. இைளஞர்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை நோக்கிப் படையெடுத்து வந்து சேரத் தொடங்கிய தருணம் அது. ஒரு மாறுதலுக்கு அந்தச் சமயம் நான்கு பெண்கள் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். கல்லூரி மாணவிகள். பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு அநியாயம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திலிருந்த கடைசித் தமிழ் மாணவர் வரை நீக்கிவிட்டு, முற்றிலும் சிங்கள மயமாக்க அரசு மேற்கொண்ட முயற்சி.

எனவே `நாம் உண்ணாவிரதம் இருப்போம்' என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்த அந்த மாணவிகள் நான்கு பேரும் ஒப்புக்குச் சொல்லவிலை. உண்மையிலேயே சாகும் வரை உண்ணாவிரதத் திட்டம் அவர்களிடம் இருந்தது. யார் சொல்லியும் கேட்கவில்லை.

விஷயம், பிரபாகரனுக்குப் போனது. நான்கு பெண்கள். யார் அவர்கள்? விவரம் திரட்டப்பட்டது. எதற்கு உயிர் விட வேண்டும்? இந்த மன உறுதியை இவர்கள் வேறு உருப்படியான விதங்களில் வெளிப்படுத்தலாம் அல்லவா? ம்ஹும். வேண்டாம். அவர்கள் உண்ணாவிரதம் இருந்து செத்துப் போக அனுமதிக்காதீர்கள். தூக்கி வந்துவிடுங்கள் என்று சொன்னார்.

ஒரு ஜீப். நான்கு போராளிகள். மின்னல் வேகம். அந்த நான்கு பெண்களும் பிரபாகரனின் எதிரே நின்றுகொண்டிருந்தார்கள். பெயரென்ன என்று கேட்டார்.

நான்கு பேரும் பேரைச் சொன்னார்கள். அதிலொரு பெயர் மதிவதனி.. மன்னிக்கவேண்டும். நீங்கள் சாக அனுமதிப்பதற்கில்லை என்றார்' பிரபாகரன்.

நான்கு பெண்களும் ஆளுக்கொரு பக்கம் திரும்பி நின்றிருந்தனர். நான்கு முகங்களிலும் நான்கு கோபங்கள். இதே உண்ணாவிரதம் கூடாது என்று அரசாங்கக் காவல் துறையினர் வந்து இழுத்துச் செல்வார்கள் என்றுதான் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

போகிற வழியில் தர்ணா செய்யலாம். லாக்கப்பில் கலாட்டா செய்யலாம். கோர்ட்டில் கோஷம் போடலாம், சிறைச்சாலையில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கலாம், செய்தி வெளியே வரும், விஷயம் பெரிதாகும், மக்கள் திரண்டு ஊர்வலம் போவார்கள், கல்லூரி காலவரையறையற்று மூடப்படும் என்று அடுத்தடுத்த திட்டங்கள் தயார்.

எதிர்பார்க்கவில்லை. இப்படி இழுத்து வந்து வலுக்கட்டாயமாகச் சாப்பிடவைத்து போதனை செய்யும் இந்த மனிதர் யார்? என் பெயர் பிரபாகரன் என்றார் பிரபாகரன். கேள்விப்பட்டிருந்தார்கள். பார்த்ததில்லை. இவரா? சே. ஒரு புரட்சி இயக்கத்தின் தலைவர் இத்தனை குள்ளமாக, கட்டை குட்டையாக, மெல்லிய குரலில் பேசிக்கொண்டு… பார்த்தால் குண்டு வைக்கக்கூடிய ஆசாமிபோல் தெரியவில்லையே? குரலில் என்ன ஒரு மிருது!

சுற்றி இருந்தவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். அன்பான பேச்சு. கனிவான பார்வை. துடிப்பான கண்காணிப்பு. உயிர் விலைமதிப்பற்றது. வீணாக அதனை இழக்கக்கூடாது. உங்களை நான் தமிழகத்துக்கு அனுப்புகிறேன். தேசத்துக்கு ஏதாவது செய்ய நினைத்தால் உருப்படியாகச் செய்யுங்கள். சம்மதமா? சம்மதித்தார்கள். தோணி ஏறினார்கள்.

மதிவதனி, வினோஜா, லலிதா, ஜெயா என்கிற அந்த நான்கு பெண்களும் கோடியக்கரை வரைக்கும் தோணியில் வந்து அங்கிருந்து பஸ் பிடித்துச் சென்னைக்கு வந்து சேர்ந்தபோது, அழைத்துச்சென்று தங்கவைக்கும் பொறுப்பு திருமதி அடேல் பாலசிங்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

திருவான்மியூர் வீட்டில் நான்கு பெண்களுக்கும் அறை ஒதுக்கப்பட்டது. பாலசிங்கம் தன் மனைவியைத் தனியே கூப்பிட்டுச் சொன்னார். கவனம். யாழ்ப்பாணத்து ஒழுக்க விதிகள் ரொம்பக் கடுமையானவை. திருமணமாகாத பெண்களை நாம் ஆயுதங்களைப் பாதுகாப்பதுபோல் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

ஆண்களுடன் பேசுவது, பழகுவது, அவர்கள் புழங்கும் இடத்தில் சகஜமாக வந்து போவதற்குக் கூட கண், காது, மூக்கு வைத்துவிடுவார்கள். தம்பி, உன் பொறுப்பு என்று சொன்னது அவர்களது நிகழ்காலத்துக்கு மட்டுமல்ல. எதிர்காலத்துக்கும் சேர்த்து.

அடேலும் பெண் தான். ஆனால் ஆஸ்திரேலியப் பெண். லண்டனில் வசித்த பெண். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண். அவர் யாழ்ப்பாணத்து மக்களை அப்போதுதான் படித்துக்கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளின் முகாமில் முதல் முதலில் அவர் வந்து சேர்ந்தபோதே நிறைய சங்கடங்களைச் சமாளிக்கவேண்டியிருந்தது. ஒருவழியாகப் பிரபாகரன் அவரை `அன்ரி' (ஆண்ட்டி) என்று அழைத்து ஆரம்பித்துவைக்க, அதுவே அவரது நிரந்தர உறவு முறையாயிற்று.

ஆனால் இந்தப் பெண்கள்?

பிரபாகரன் வந்தார். அனைவருக்கும் அந்த நான்கு பேரையும் அறிமுகம் செய்துவைத்தார். இனி இவர்களும் நம்மைச் சேர்ந்தவர்கள். சமையலில், பிற வேலைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆயுதம் பழக விரும்பினால் ரொம்ப சந்தோஷம். கற்றுக்கொடுங்கள். இன்னும் சில பெண்கள் விரைவில் வந்து சேர வாய்ப்பு இருக்கிறது. வந்தார்கள். ஒருவர் இருவரல்லர். நிறையவே வந்தார்கள். தமிழகத்தில் பயிற்சி, ஈழத்தில் யுத்தம், வாருங்கள் என்று.

`டெலோ' கூப்பிட்டு நிறையப் பெண்கள் தோணி ஏறியிருந்தார்கள். கல்லூரிப் பெண்கள். படிப்பை விட்ட, படித்து முடித்த பெண்கள். துரதிருஷ்டவசமாக அவர்களைத் தமிழகத்தில் தங்க வைக்கவோ, முறையான பயிற்சியளிக்கவோ டெலோ ஏற்பாடு செய்யத் தவறியிருந்தது.

என்ன செய்வது, எங்கே போவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்களுக்குப் பிரபாகரன் ஒரு மூத்த சகோதரன் போல நின்று அழைத்தது, மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.
Original Source : www.manithan.com

கட்சியை உடைக்க சதி: கருணாநிதி வேதனை

Posted: 03 Feb 2012 11:57 PM PST


கட்சியை உடைக்க சதி: கருணாநிதி வேதனை


சென்னை: கட்சியில் பிளவை ஏற்படுத்த, சில குண்டர்கள் முயற்சிப்பதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டினார்.

நேற்றைய தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தின் இறுதியில், அவர் பேசியதாவது: தி.மு.க.,வின் பொதுக்குழு சீரோடும், சிறப்போடும், அமைதியாக நடைபெறுகிறதே என்பதை ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்டு, அவர்களை விட்டே சிலரைத் தூண்டிவிட்டுள்ளனர். வீரபாண்டி ஆறுமுகம் பேச்சில் எந்தத் தவறும் இல்லாத சூழ்நிலையில், அவர், தி.மு.க.,வில் உள்ள தொண்டர்களுக்கு விடுத்த வேண்டுகோளை தவறாகத் திரித்து, அவர் மீது மோதுவது போல, ஸ்டாலினுக்கு ஆதரவாக இருப்பதைப் போல காட்டி, ஒரு பிளவை கட்சியில் ஏற்படுத்த, சில குண்டர்கள் முயற்சித்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நீங்கள், ஸ்டாலினுக்கு உதவி புரிந்ததாக அர்த்தமில்லை. ஸ்டாலின் வளர்ந்துவரும் காலத்தில், இந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்கும் முன், அவர் மீது ஒரு களங்கத்தைக் கற்பிக்கிற முறையில், இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டதே என்று தான் கவலைப்படுகிறேன். "இந்தப் பொதுக்குழு அமைதியாக நடந்தது' என்ற செய்தி, பத்திரிகைகளில் வராமல் செய்ய வேண்டும். பெரிய கலவரம், அமளி, தி.மு.க., இரண்டாக ஆகிவிட்டது, அவ்வளவு பெரிய கலவரம் நடந்தது என்று, பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் பார்த்து, மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதற்காக, யாராவது முயன்றால், அவர்களை எச்சரிக்கிறேன், உங்கள் சூழ்ச்சி தி.மு.க.,வில் பயன்படாது.

"பேரும், புகழும், மதிப்புகளும், சான்றிதழும் வாங்கியவன் நான். அண்ணா, பெரியாராலேயே பாராட்டப்பட்டவன். பேராசிரியரின் நன்மதிப்பைப் பெற்றவன்' என்றெல்லாம் சொல்லி, நான் தி.மு.க., தலைவனாக நீடிக்க வேண்டுமென்று உங்களிடம் ஓட்டு கேட்க விரும்பவில்லை. ஓட்டுப் பிச்சையெடுத்து, நான் தலைவனாக நீடிக்க வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால், அடுத்த பொதுக்குழுவை, தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் என்று வைத்து, அதில் ஓட்டளிக்கச் செய்து, அதை எண்ணிப் பார்த்து, யார், யார் இதற்கு என்று அறுதியிட்டு, முடிவு செய்யலாம். இந்தப் பொதுக்குழு எதற்காக கூட்டப்பட்டிருக்கிறது என்பதை, முன்கூட்டியே தலைமை அறிவித்திருக்கிறது. அந்தப் பொருள் பற்றிப் பேசி, எடுக்கப்பட்ட முடிவை நிறைவேற்றும் கடமை உணர்ச்சி இருக்க வேண்டுமே அல்லாமல், வேறு எங்கோ நமது கவனம் செல்லக் கூடாது.

உங்களுடைய அருமையான, ஆதங்கமற்ற, அன்பான, மேடையை நோக்கிப் பாய்கிற அளவுக்கு, தம்பி வீரபாண்டி ஆறுமுகம் எத்தனையோ கூட்டங்களைச் சமாளிப்பார். அவரையே திக்குமுக்காடச் செய்கிற அளவுக்கு, நீங்கள் நடத்திய இந்த நிகழ்ச்சி, வரவேற்கத்தக்கது. ஏனென்றால், அப்போது தான், நமக்கு விளம்பரம் கிடைக்கும். அந்த விளம்பரத்தை காசில்லாமல் தெரிவித்த உங்களுக்கு, என்னுடைய நன்றி. எனக்கும், பொதுக்குழுவைப் பற்றிய, இப்போதுள்ள தி.மு.க.,வைப் பற்றிய, ஒரு காட்சியைக் காட்டியதற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.



கட்சிக்கட்டளையை புறக்கணித்தாரா பண்ருட்டி: தே.மு.தி.க.,வில் சலசலப்பு

Posted: 03 Feb 2012 11:55 PM PST


கட்சிக்கட்டளையை புறக்கணித்தாரா பண்ருட்டி: தே.மு.தி.க.,வில் சலசலப்பு


எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். ஆனால், எதிர்க்கட்சி துணைத் தலைவரான, பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெள்ளைச் சட்டையில் சபைக்கு வந்திருந்தார். தே.மு.தி.க., தலைமைக்கும், அவருக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாகவே, அவர் கறுப்புச் சட்டை அணியாமல் சபைக்கு வந்ததாகவும் பரபரப்பு எழுந்துள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி சட்டசபையில், அநாகரிகமாக நடந்து கொண்டதாக உரிமைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கறுப்புச் சட்டை அணிந்து வருகை: நேற்று, காலை 10 மணிக்கு சட்டசபை துவங்கிய நிலையில், 10.40 மணிக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் தனியாளாக சட்டசபைக்கு வந்தார். கொறடா சந்திரகுமார் தலைமையில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து நிமிடம் கழித்து, 10.45 மணிக்கு சட்டசபைக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர். ஆனால், முன்னதாக வந்திருந்த பண்ருட்டி ராமச்சந்தின் வெள்ளைச் சட்டை அணிந்து இருந்தார். தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் யாரும், அவருடன் பேசவோ, கருத்துக் கேட்கவோ இல்லை.

குழப்பமான காரணங்கள்: கறுப்புச் சட்டை அணியாதது குறித்து, பண்ருட்டி ராமச்சந்திரனிடம் கேட்டபோது, "நான் வெளியூரில் இருந்து நேரடியாக சட்டசபைக்கு வந்துவிட்டேன். அதனால், கறுப்புச் சட்டை அணியவில்லை' என்று தெரிவித்தார். தே.மு.தி.க., எம்.எல்.ஏ., ஒருவரிடம் கேட்டபோது, "எல்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கட்சித்தலைமை அலுவலகத்திற்கு வந்துவிட்டு, அங்கிருந்து சட்டசபைக்கு வந்தோம். பண்ருட்டி ராமச்சந்திரன் நேரடியாக சட்டசபைக்கு வந்ததால், அவருக்கு இது தெரியாமல் இருந்திருக்கலாம்' என்றார். தே.மு.தி.க., சட்டசபை கொறடா சந்திரகுமாரிடம் கேட்டபோது, "நாங்கள் நாளையும் (இன்று) கறுப்புச் சட்டை அணிந்து வந்து எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்' என்றார்.

தகவல் மறைப்பு: நேற்று முன்தினம் விஜயகாந்த் பேட்டியளித்தபோது, கட்சி அலுவலகத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தார். ஆனால், அதன்பிறகு நேற்று காலை கட்சி அலுவலகத்தில் நடந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாள் நிகழ்ச்சியில், அவர் பங்கேற்கவில்லை. சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ள, பண்ருட்டி ராமச்சந்திரன் தே.மு.தி.க., அவைத் தலைவராகவும் உள்ளார். கறுப்புச் சட்டை அணிந்து சபை நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு இருந்தால், அது குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்பட்டுஇருந்தால், எந்த ஊரில் இருந்து வந்தாலும், வழியில் ஒரு கறுப்புச் சட்டை வாங்கி அவர் அணிந்து சட்டசபைக்கு வந்துஇருக்க முடியும். இந்த முடிவு குறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்படாததாலேயே, அவர் கறுப்புச் சட்டை அணியாமல் சபைக்கு வந்துள்ளதாக ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பண்ருட்டி மேல் கோபம்: சட்டசபை விவாதத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், "தானே' புயல் நிவாரணம் குறித்து எழுப்பிய குற்றச்சாட்டிற்கு, முதல்வர் ஜெயலலிதா சூடாக பதில் கொடுத்தார். குற்றச்சாட்டை நிரூபிக்க தயாரா என்று அவர் சவால் விடுத்தார். அதன் பிறகு, பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது, முதல்வரை குளிர்விக்கும் வகையில் பேசியதாகவும், அவரின் இந்த அணுகுமுறையை கட்சித் தலைவர் விஜயகாந்த் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, இருவருக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், கட்சித்தலைமை மீது கோபம் கொண்டதால்தான், அண்ணாதுரை நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்காததோடு, கறுப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கவும், அவர் விரும்பவில்லை என்றும் மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர். சட்டசபை பொதுக்கணக்கு குழுத்தலைவரான, பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று, அதன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்த நேரத்தில், கறுப்புச் சட்டை அணிந்து வரக்கூடாது என்று கூறி பண்ருட்டி மறுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த கருத்துமோதல் தொடரும் பட்சத்தில், அது கட்சியில் பிளவாக மாறக்கூடிய வாய்ப்புள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

2 ஜி ஊழல் : சிதம்பரம் தலைஎழுத்து : இன்னும் சில நிமிடங்களில் தெரிந்து விடும்

Posted: 03 Feb 2012 11:52 PM PST


2 ஜி ஊழல் : சிதம்பரம் தலைஎழுத்து : இன்னும் சில நிமிடங்களில் தெரிந்து விடும்



ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று வழங்குகிறது. இதற்கென சு. சாமி இன்று காலை கோர்ட்டுக்கு முதல் ஆளாக வந்தார். பின்னர் கோர்ட்டுக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய சு.சாமி., கூறுகையில்: மதியம் 12.15 க்கு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி ‌தெரிவித்தார். என்வே நான் இன்னும் சிறிது நேரத்தில் போய் வருகிறேன். சிதம்பரத்திற்கு எதிராக நிச்சயம் தீர்ப்பு வரும். இந்த தீர்ப்பு ஊழலுக்கு எதிராக கிடைத்த வெற்றியாக இருக்கும் என்றார். சிதம்பரம் அரசியல் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப்போகும் தீர்ப்பு என்பதால், அரசியல் வட்டாரங்கள் உச்சகட்ட பரபரப்பில் உள்ளன.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜாவோடு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கடந்த செப்டம்பரில், சி.பி.ஐ., கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., கோர்ட்டில் சாமி ஆஜராகி சாட்சியம் அளித்தார். தவிர, தன் கோரிக்கைக்கு ஆதாரமாக, பல முக்கிய ஆவணங்களையும் நீதிபதி ஷைனி முன் சமர்ப்பித்தார்.

சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜரானபோது, சுப்ரமணியசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகள்: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள் உள்ளன. முதலாவது, 2008ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்கு 2001ம் ஆண்டு விலையை நிர்ணயம் செய்தது. இரண்டாவது, ஸ்வான், மற்றும் யூனிடெக் கம்பெனிகளின் பங்குகளை வெளிநாட்டு கம்பெனிகளான எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளிலும் அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு பங்கு இருக்கிறது. ஏனென்றால், ஸ்பெக்ட்ரத்திற்கு விலை நிர்ணயம் தொடர்பான முடிவுகளை, நிதி அமைச்சரும், தொலைத் தொடர்பு அமைச்சரும் இணைந்து தான் எடுக்கவேண்டும் என்று, 2003ம் ஆண்டு அமைச்சரவை தீர்மானம் கூறுகிறது.

ராஜாவுக்கு யோசனை :அதன்படி நிதி அமைச்சர் சிதம்பரமும், தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவும், 2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளனர். அதேபோல், கடந்த 2008ம் ஆண்டு ஜூலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த, இந்த இரண்டு அமைச்சர்களும் தாங்கள் எடுத்த முடிவு பற்றி தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற எந்த நிறுவனமும், மூன்று ஆண்டுகளுக்குள் தங்கள் லைசென்சை விற்பனை செய்யக்கூடாது என்பது சட்டம். ஆனால், "2ஜி' லைசென்சைத்தான் விற்கக் கூடாது. பங்குகள் மூலம் கம்பெனியை விற்பனை செய்யலாம் என்ற யோசனையை ராஜாவிடம், சிதம்பரம் தெரிவித்திருக்கிறார் என்றார்.அத்துடன் கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் ஆவணத்தையும், கோர்ட்டில் சாமி ஒப்படைத்தார். இந்த ஆவணத்தில்தான், "சிதம்பரம் வலியுறுத்தியிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைபிடித்திருக்கலாம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு:ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில், நேற்று முன்தினம் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 2008 ஜனவரி மாதத்தில் இருந்து, தொலைத் தொடர்பு அமைச்சகம் வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்ததோடு, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டுமா என்பதை சி.பி.ஐ., கோர்ட்டே முடிவு செய்யும் என, குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று வழங்குகிறது. இந்தத் தீர்ப்பு சிதம்பரத்தின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தீர்ப்பாக இருக்கும் என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

-நமது டில்லி நிருபர்-

ரகளை! : தி.மு.க., பொதுக்குழுவில் ரகளை: அழகிரி - ஸ்டாலின் மோதல் வெடித்தது: கருணாநிதி கடும் "அப்செட்!'

Posted: 03 Feb 2012 11:47 PM PST


ரகளை! : தி.மு.க., பொதுக்குழுவில் ரகளை: அழகிரி - ஸ்டாலின் மோதல் வெடித்தது: கருணாநிதி கடும் "அப்செட்!'

சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், அழகிரி-ஸ்டாலின் ஆதரவாளர் களிடையே திடீர் மோதல் வெடித்தது. எதிர்பாராத இந்த ரகளையால், அக்கட்சித் தலைவர் கருணாநிதி கடும் வேதனையடைந்தார்.

அறிவாலயத்தில் தி.மு.க., பொதுக்குழு நேற்று கூடியது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, கட்சிப்பிரமுகர்கள் பேச அழைக்கப்பட்டனர். விவாதம், இரண்டாவது கட்டமாக மாலை 4 மணிக்கும் தொடர்ந்தது. திண்டுக்கல் லியோனி, வழக்கறிஞர் ஜோதி மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் பேசும் போது, லேசான பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. சேலம் மாவட்டச் செயலர் வீரபாண்டி ஆறுமுகம் பேசும் போது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது.

பொதுக்குழுவில் அவர் பேசியதாவது:தி.மு.க.,வில் இன்று ஒரு வேதனையான பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருவரை, "இவர் இன்னாருக்கு வேண்டப்பட்டவர், இவர் அவருடைய ஆள்' என அடையாளம் காட்டும் நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தலைவர் ஆரோக்கியமாக இருந்து, நம்மை எல்லாம் வழி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோல் இன்னொருவரை தலைமைப்பதவிக்கு முன்னிறுத்துவது நல்லதல்ல. ஸ்டாலின், அழகிரி மட்டும்அல்ல, தலைவரின் குடும்பமே நமது இதயம் போன்றது தான். அந்தக் குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும், அவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அதற்காக, தலைவர் முன்னிலையிலேயே, "இவர் தான் அடுத்த தலைவர்' என்றெல்லாம் பேசுவது உகந்ததல்ல. இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் பேசிக் கொண்டு இருந்தபோதே, பொதுக்குழுவில் அமர்ந்திருந்த கட்சியினர், அவருக்கு எதிராகவும், "தளபதி, தளபதி' என்றும் கோஷமிடத் துவங்கினர். அதற்கு எதிர் கோஷமும் எழுந்தது. பலர், மேடையை நோக்கி முன்னேறினர். இதனால், பொதுக்குழுவில் பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவியது. "இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' எனக் கூறிய ஆறுமுகம், தொடர்ந்து பேச முயன்றார். ஆனால், அவரை பேச விடாமல், கட்சிக்காரர்கள் கோஷமிட்டபடி இருந்தனர். மேடையில் இருந்த முன்னணித் தலைவர்களாலும், தொண்டர்களை அமைதிப்படுத்த முடியவில்லை.

இறுதியில் எழுந்த, கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் பேசியதாவது: அடுத்த தலைவர் பற்றி பேச்சு எழுந்தபோது, "இது ஒன்றும் சங்கர மடம் அல்ல, வாரிசுகளை அறிவிப்பதற்கு. இது ஜனநாயக அமைப்பு. கட்சி கூடித்தான் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும்' என, ஏற்கனவே தலைவர் கூறியிருக்கிறார். நானும், தலைவரும் இல்லாத தருணங்களில் எல்லாம் கட்சியை ஸ்டாலின் தான் வழி நடத்தி வந்திருக்கிறார். இனிமேலும், அவர் தான் தலைவராக வேண்டும் என இருந்தால், அதை யார் தடுத்துவிட முடியும்? அதற்காக, இப்போதே இதுபோன்ற சர்ச்சைகள் எழுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசிய பிறகே, ஒருவாறு அமைதி திரும்பியது.

அடுத்ததாக, கட்சித் தலைவர் கருணாநிதியின் பக்கம் மைக் வைக்கப்பட்ட போது, "அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறேன்' எனக் கூறி, மைக்கை திருப்பி விட்டு விட்டார். தொண்டர்கள் எழுந்து, பெருங்கூச்சலோடு வேண்டுகோள் விடுக்கவே, தொடர்ந்து அவர் பேசியதாவது: பெரியாரால், அண்ணாவால் பாராட்டுப் பெற்றவன் நான். தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என ஒருக்காலும் விரும்பியவனல்ல. பொதுக்குழுவில் விவாதத்துக்காக கொடுக்கப்பட்ட பொருள் தவிர, மற்றவை பற்றி பேசினால், அது பத்திரிகைகளுக்குத் தான் செய்தியாகப் பயன்படும். இவ்வாறு ஆரம்பித்து விரிவாக பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, பேச்சின் இடையில் கண் கலங்கினார். பொதுக்குழு முடிந்து, நிருபர்களைச் சந்தித்த போது, "அடுத்த தலைவர் யார் என்பதைப் பற்றி கூட்டத்தில் எந்த விவாதமும் நடக்கவில்லை' என, திட்டவட்டமாக மறுத்தார்.

அழகிரி புறக்கணிப்பு?
* தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டில் இருந்து, அறிவாலயம் வரை, சாலையின் இரு புறமும் கட்சிக்கொடிகள், தோரணங்கள், குழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
* மதிய வேளையில், 2,500 பேருக்கு சைவ சமையல் தயாரித்து வழங்கப்பட்டது.
* காலையில், 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலையில், சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானமும், பொதுக்குழு விளக்கக் கூட்டங்கள் நடத்துவது பற்றிய இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
* கூட்டம் நடந்த கலைஞர் அரங்கம் அருகே வரை செல்ல, காலையில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாலையில், கூட்டம் முடியும் வரை, அந்த கட்டடத்துக்கு உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை.
* கூட்டத்தில் பேசிய பலர், காங்கிரசுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு, தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், கைதட்டலும் இருந்தது.
* திண்டுக்கல் லியோனி பேசுகையில், "மொபைல் போனும், கையுமாக கட்சியினர் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, தி.மு.க., இன்னமும் ஆட்சியில் தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது' என்றார்.
* "தேர்தலில், பணக்காரர்களுக்குத் தான் சீட் கொடுக்கப்படுகிறது' என, வழக்கறிஞர் ஜோதி பேசியபோது, பெரும் ஆதரவு அலை எழுந்தது. "நீ பார்த்தியா' என ஒருவர் சத்தம் போட, அவரைக் கண்டித்தும், ஜோதியை ஆதரித்தும் பெரும் கூச்சல் ஏற்பட்டது.
* "தி.மு.க.,வுக்கு இரண்டு சேனல்கள் இருக்கின்றன. பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க, கலைஞர் "டிவி'யைப் போலவே, அந்த இன்னொரு சேனலும் செயல்பட வேண்டும்' என, திருச்சி சிவா பேசியபோது எழுந்த கைதட்டல் அடங்க, நெடுநேரம் ஆனது.
* காலையில், பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கட்சியினர் பேச அழைக்கப்பட்ட உடன், மத்திய அமைச்சர் அழகிரி, அரங்கை விட்டு வெளியேறினார். மாலையில், நடந்த விவாதத்தில் அவர் பங்கேற்கவில்லை.
- நமது சிறப்பு நிருபர் -
Thanks : 
http://tamil.yahoo.com

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை

Posted: 03 Feb 2012 11:34 PM PST


அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை


தன்னால் கற்க முடியாமல்போன கல்வியைத் தமிழகத்தின் தலைமுறைகள் கற்பதற்கு வழியமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். தான் கற்ற கல்வியையும் அதன் மூலம் பெற்ற அறிவையும் தமிழகத்தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.


இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது என்றால் அது அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான். 1967ல் ஆட்சிக்கு வந்த அண்ணா, ஓராண்டு பத்து மாதங்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார்.


அந்தக் குறுகிய காலத்திற்குள் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். அதற்கு முன் சென்னை மாகாணம் என்றுதான் அழைக்கப்பட்டது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை (தமிழும் ஆங்கிலமும்) நடைமுறைப்படுத்தினார். சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட ஏற்பளிப்பு கிடைக்கச் செய்தார். இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தினார். பேருந்துகளை அரசுடைமையாக்கினார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கான பரிசுச்சீட்டுத் திட்டம் ஆகியவையும் அண்ணாவால் கொண்டு வரப்பட்டவையாகும்.


1969 பிப்ரவரி 3ஆம் நாள் அண்ணா மறைந்தபோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்குச் சாதனைமிகு எண்ணிக்கையாக அமைந்தது.


அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார். இவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது. அண்ணா தனது அக்காள் மகள் சௌந்தரியின் பிள்ளைகளான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகியோரை வளர்ப்பு மகன்களாக்கிக்கொண்டார்.


தமிழகத்தின் மிகப்பெரும் தலைவராகவும், முதல்வராகவும் இருந்த அண்ணாவுக்குச் சொந்தமான சொத்துகள் என்றால் காஞ்சிபுரத்தில் ஒரு வீடு. ஒரு ஏக்கர் நிலம். சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் ஒரு வீடு ஆகியவையாகும். அண்ணா முதல்வரானதும் அரசு அதிகாரிகள் அவரது வீட்டில் கொண்டு வந்து வைத்த ஃப்ரிட்ஜ், சோபா செட்டுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தச் சொல்லிவிட்டார். அண்ணா மறைந்தபோது அவர் சேமித்து வைத்த தொகை என்பது நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கிக்கிளையில் 5000 ரூபாயும், மயிலாப்பூர் இந்தியன் வங்கிக் கிளையில் 5000 ரூபாயும்தான்.


தனது குடும்பத்தினருக்கு அரசியலில் பதவி எதையும் அண்ணா தரவில்லை. அவரது குடும்பத்தினர்கள் அரசியலிலோ அரசாங்கத்திலோ பொறுப்புகளை எதிர்பார்க்கவில்லை. கலைஞர், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் அண்ணா குடும்பத்தினருக்குப் பொறுப்புகளைக் கொடுக்க முன்வந்தபோதுகூட அண்ணாவின் வளர்ப்புப் பிள்ளைகள், அதனை இயக்கத்தில் வேறு யாருக்கேனும் கொடுங்கள் என்று சொன்ன நிகழ்வுகள் உண்டு. அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார் சட்டமேலவை உறுப்பினராக எம்.எல்.சி.) கலைஞர் ஆட்சியின்போது இருந்திருக்கிறார். அண்ணாவின் நூல்களை செல்வி.ஜெயலலிதா அரசு நாட்டுடைமையாக்கி அவரது குடும்பத்தாருக்கு 75 லட்ச ரூபாய் வழங்கியது. அண்ணா நூற்றாண்டையொட்டி (2009) அண்ணாவின் வளர்ப்பு மகன்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கியது கலைஞர் அரசு.


அண்ணாவின் முதல் மகன் பரிமளம், மருத்துவம் பயின்றவர். டாக்டர் அண்ணா பரிமளம் என்றழைக்கப்பட்ட இவர், அரசு தோல் மருத்துவராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அண்ணா பேரவை என்ற அமைப்பை நிறுவி அண்ணாவின் படைப்புகள் அச்சில் வருவதற்கு பாடுபட்டு, வெற்றியும் கண்டார். அண்ணாவைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வதற்காகவே www.arignaranna.info என்ற இணையதளத்தை உருவாக்கினார். தற்போதும் அந்த இணையதளம் மாதமிருமுறை பதிவேற்றம் செய்யப்படுகிறது. அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கும் பணிகளைச் செய்வதற்காகவே மருத்துவப்பணியைக் கைவிட்ட பரிமளம், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.


பரிமளத்தின் மனைவி சரோஜா பரிமளம். இத்தம்பதியரின் மூத்த மகன் மலர்வண்ணன், மலர் அச்சகம் நடத்தி வருகிறார். அவருடைய துணைவியார் ஜெயஸ்ரீ பாலர் பள்ளி நடத்தி வருகிறார். இவர்களுக்கு அகிலன், ஆதித்யன் என்ற இரு மகன்கள். பள்ளியில் படித்து வருகிறார்கள். டாக்டர் பரிமளம்-சரோஜா தம்பதியரின் மகள் இளவரசி. இவரது கணவர் முத்துக்குமார் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுடைய மகள்கள் சுருதி, ப்ரீத்தி ஆகியோர் பள்ளியில் பயின்று வருகிறார்கள். பரிமளம்-சரோஜா தம்பதியரின் இரண்டாவது மகன் அ.ப.சௌமியன் கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் பெயர் சரளா. இத்தம்பதியருக்கு அரவிந்த், அர்ஜூன் என இரு மகன்கள். இவர்கள் பள்ளிப்படிப்பு பயில்கிறார்கள்.


அண்ணாவின் இரண்டாவது மகன் சி.என்.ஏ.இளங்கோவன். இவர் அண்ணாவின் காஞ்சி பத்திரிகையில் பணியாற்றியதோடு, அச்சுத்தொழிலையும் மேற்கொண்டவர். முதியோர் இல்லத்தின் ஆலோசகராகவும் இருந்த இவர், காலமாகிவிட்டார். இவரது துணைவியார் விஜயா இளங்கோவன். இவர்களின் மகள் பெயர் கண்மணி. இவரது கணவர் ரமேஷ்பாபு, பொறியாளராக இருக்கிறார். இத்தம்பதியரின் மகள் பிரியதர்ஷினியும் பொறியாளராக உள்ளார்.


சி.என்.ஏ.கௌதமன். இவர் அண்ணா வளர்த்த மூன்றாவது மகன். நூல் வெளியீடு மற்றும் அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் துளசி கௌதமன் காலமாகிவிட்டார். இத்தம்பதியரின் மகள் சரிதா. இவரது கணவர் சிவக்குமார். இத்தம்பதியருக்கு ப்ரித்வின் என்ற மகன் உள்ளார்.


அண்ணாவின் நான்காவது மகன், பாபு என்கிற சி.என்.ஏ.ராஜேந்திரன். இவர் அரசு தகவல் தொடர்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி பெயர் சாந்தா. இத்தம்பதியரின் மகன் ஆனந்தன் பொறியாளராவார். இவர்களது மகள் ராஜாமணியின் கணவர் வெங்கடேஷும் பொறியாளர். ராஜாமணி-வெங்கடேஷ் தம்பதியருக்கு ஸ்ரீஹரிஹரன் என்ற மகன் உள்ளார்.


அரசியலில் ஆர்வம் செலுத்தாமல் அண்ணா குடும்பத்தினர் தங்களுக்கு விருப்பமான துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அண்ணாவுக்குப் பிறகு அரசியலுக்கும் ஆட்சிக்கும் வந்தவர்கள் அண்ணா குடும்பத்தினரைப் புறக்கணித்துவிட்டனர் என்றெல்லாம் அரசியல்தளங்களில் விமர்சனம் எழுகின்ற போதும், அண்ணா குடும்பத்தினர் அரசியல் இயக்கங்களிடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ எதிர்பார்ப்பதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்வதிலேயே மகிழ்வும் பெருமையும் கொள்கிறார்கள்.


தகவல் உதவி: செம்பியன்


http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=402#

Sivashankari New Serial 04-02-2012 | Sun tv shows Sivasankari Thiriller Serial February 2012 2011

Posted: 03 Feb 2012 11:28 PM PST


Sivashankari New Serial 04-02-2012 | Sun tv shows Sivasankari Thiriller Serial February 2012 2011


This posting includes an audio/video/photo media file: Download Now

Bairavi 05-02-2012 | Sun Tv Bairavi Thiriller Serial 5th February 2012 promo video

Posted: 03 Feb 2012 11:28 PM PST


Bairavi 05-02-2012 | Sun Tv Bairavi Thiriller Serial 5th February 2012 promo video



This posting includes an audio/video/photo media file: Download Now

Aanpavam Serial 06-02-2012 promo video | Sun Tv New Serial Aan pavam promo video 6th February 2012

Posted: 03 Feb 2012 11:27 PM PST


Aanpavam Serial 06-02-2012 promo video | Sun Tv New Serial Aan pavam promo video 6th February 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Nakkeeran 01-02-2012 | Free Download Nakeeran PDF This week | Nakkheeeran 1st February 2012 Ebook Latest

Posted: 03 Feb 2012 11:26 PM PST


Nakkeeran 01-02-2012 | Free Download Nakeeran PDF This week | Nakkheeeran 1st February 2012 Ebook Latest

Download Link

CCl2 live Match-Celebrity Cricket League 04-02-2012 live match | K Tv , Surya tv Celebrity Cricket League 4th February 2012 | CCL2 results | CCL2 Live Score | CCL2 Match Results | Chennai Rhinos vs Telugu Warriors Match Results and Scores

Posted: 03 Feb 2012 11:29 PM PST


CCl2 live Match-Celebrity Cricket League 04-02-2012 live match | K Tv , Surya tv Celebrity Cricket League 4th February 2012 | CCL2 results | CCL2 Live Score | CCL2 Match Results | Chennai Rhinos vs Telugu Warriors Match Results and Scores


Celebrity Cricket League Season 2


Chennai Rhinos VS Telugu Warriors

PLace: Vizag
Match Starts at 6 PM IST
Chennal - K TV 

Chennai Rhinos Team Players:

VISHAL, VIKRAANTH, ARYA,JIIVA, BHARATH, ABBAS, PRITHIVI, JITHAN AMESH, SHIVA, SHANTHNU, KARTHIKKUMAR, VISHNU, SRIKANTH,
RAMANAA, SHAAM, HAMSA VIRDHAN

Telugu Warriors Team Players:

VENKATESH, THARUN, SRIKANTH, NITIN, AADARSH, TARAK RATNA, AJAY, SAMRAT, KHAYYUM, AKHIL, RAJIV KANAKALA, RAGHU, PRABHU,
AYYAPPA P SHARMA, CHARAN TEJA, VISHWA, NANDAKISHORE.

Live Match Scores and Videos Coming soon...


Dinkaran E-paper 04-02-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 4th February 2012

Posted: 03 Feb 2012 05:42 PM PST


Dinkaran E-paper 04-02-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 4th February 2012

Download Link

Dinamalar Aanmeegamalar 04-02-2012 | Free Download Aanmeegamalar PDF today ebook | Aanmeega Malar 4th February 2012

Posted: 03 Feb 2012 05:27 PM PST


Dinamalar Aanmeegamalar 04-02-2012 | Free Download Aanmeegamalar PDF today ebook | Aanmeega Malar 4th February 2012

Download Link