TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


Tamilan TV News 29-03-2012

Posted: 29 Mar 2012 02:56 AM PDT


Tamilan TV News 29-03-2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Captain News 29-03-2012 | Captain seithigal 29th March 2012

Posted: 29 Mar 2012 02:54 AM PDT

Captain News 29-03-12 | Captain seithigal 29th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

SunTv Headline News 29-03-2012 | Sun Tv headline News 29-03-12 | Sunnews 29th March 2012

Posted: 29 Mar 2012 02:52 AM PDT


SunTv Headline News 29-03-2012 | Sun Tv headline News 29-03-12 | Sunnews 29th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் நடிக்க வருகிறார் மந்த்ரா: '30 வயசுதான்... குண்டாயிட்டேன்'!

Posted: 29 Mar 2012 02:16 AM PDT


மீண்டும் நடிக்க வருகிறார் மந்த்ரா: '30 வயசுதான்... குண்டாயிட்டேன்'!

தமிழ் சினிமாவில் ப்ரியம் படம் மூலம் அறிமுகமாகி, நிறைய படங்களில் ரசிகர்கள் மனதை அலைபாய வைத்து, திருமணம் செய்து கொண்டு காணாமல் போன மந்த்ரா மீண்டும் நடிக்க வருகிறார்.
மந்த்ரா நடிக்க வந்தபோது அவருக்கு வயது ஜஸ்ட் 14-தானாம்! தமிழ்-தெலுங்கு மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டார்.
2004-ல் சீனிவாஸ் என்ற தெலுங்கு உதவி இயக்குநரை காதலித்து மணந்தார். திருமணத்துக்குப்பின் மந்த்ரா நடிக்கவில்லை. சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவருக்கு இப்போது மீண்டும் நடிக்க ஆசை வந்துவிட்டது. 


30 வயசுதான்... குண்டாயிட்டேன்


மீண்டும் வாய்ப்பு தேடும் அவர் தனது நடிப்பு ஆசை பற்றிக் கூறுகையில், "சின்ன வயசுலயே நடிக்க வந்துட்டேன். திருமணம் ஆனாலும் எனக்கு வயசு 30தான். ஆனால் என் உடம்பு கொஞ்சம் குண்டாகி விட்டது. கடந்த 7 வருடங்களாக, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. முதலில், சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும்.
எனக்கு இப்போது 30 வயதுதான் ஆகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதற்கு இன்னும் வயது இருக்கிறது. வீட்டை கட்டி முடித்துவிட்டு, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.
இன்னொரு ரவுண்ட் சினிமாவில் வரவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. முன்பு போல் எனக்கு கதாநாயகி வாய்ப்பு தரமாட்டார்கள் என்று எனக்கு தெரியும். இப்போது வரும் இளம் கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மற்ற கதாநாயகர்களுக்கு அக்காவாக அல்லது அண்ணியாக நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
மறுபிரவேசத்துக்காக, 89 கிலோவாக இருந்த என் உடம்பை 69 கிலோவாக குறைத்து விட்டேன்.
நான், சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள் என்பதால், நன்றாக தமிழ் பேசுவேன். அதனால், மும்பை கதாநாயகிகளுக்கு 'டப்பிங்' பேச அழைப்பு வருகிறது. அதையும் ஏற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்,'' என்றார்.
Thanks to OneIndia

உலக காதல் காவியம் டைட்டானிக் 3 டி இப்போது தமிழில்!

Posted: 29 Mar 2012 02:14 AM PDT


உலக காதல் காவியம் டைட்டானிக் 3 டி இப்போது தமிழில்!

உலகக் காதலர்களின் காவியம் என்று போற்றப்படும் டைட்டானிக்கை இப்போது 3 டியில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.


1912ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி டைட்டானிக் என்ற பிரம்மாண்ட கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 2,223 பயணிகளில் 1,517 பேர் உயிரிழந்தனர். இந்த வரலாற்று சோகத்தை மையப்படுத்தி, அதில் ஒரு அற்புதமான காதல் கதையை உருவாக்கி டைட்டானிக் என்ற பெயரில் படம் இயக்கினார் ஜேம்ஸ் கேமரூன். 11 ஆஸ்கர் விருதுகளை வாங்கி குவித்தது டைட்டானிக். லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் நடிப்பில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் செய்த வசூல் சாதனை உலக சினிமாவை அதிரவைத்தது. குறிப்பாக இந்தியாவில் வெளியான வேறெந்த ஒரிஜினல் படத்தையும் விட பெரும் வசூலைக் குவித்தது இந்தப் படம்.
இந்நிலையில் வருகிற ஏப்ரல் 15, 2012-அன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் 100-ம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில் டைட்டானிக் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். அதுவும் 2-டி மற்றும் 3-டி தொழில்நுட்பங்களில் இந்தப் படத்தை வெளியிடுகிறார். வருகிற ஏப்ரல் 5-ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாகிறது 3 டி டைட்டானிக். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.
முன்பை விட வண்ணமயமாக, அனைத்தும் நம் கண்முன்னே நடப்பது போன்ற தத்ரூப தொழில்நுட்பத்தில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் ஜேம்ஸ் கேமரூன். அவதார் 3டியை ஒரு முறை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்தப் படத்தைப் போலவே இதிலும் காட்சிகள் அப்படியே கைக்கெட்டும் தூரத்தில் நடப்பது போலத் தெரியுமாம்.
அந்த லியனார்டோ - வின்ஸ்லெட்டின் நீண்ட நேர ரொமான்ஸ் காட்சி... அதுவும் 3 டி எஃபெக்டில்...
இதை நினைத்துதான் நாயகி கேத் வின்ஸ்லெட்டும் பயப்படுகிறாராம். லண்டனில் நடந்த இந்த 3 டி சிறப்புக் காட்சிக்கு வந்திருந்த அவர், "அய்யோ அந்தக் காட்சி 3 டியிலா... எனக்கு ரொம்ப கூச்சமாகவும் பயமாகவும் இருக்கிறது. கண்டிப்பாக இந்த காட்சியை மட்டும் நான் பார்க்க மாட்டேன்.
ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அற்புதமான படைப்பை எனது இரு குழந்தைகளுடன் பார்ப்பது மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்," என்றார்.
Thanks to OneIndia

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி கொலை! திருச்சியில் பரபரப்பு!

Posted: 29 Mar 2012 02:12 AM PDT


முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி கொலை! திருச்சியில் பரபரப்பு! 
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் (50) இன்று (29.03.2012) காலை வழக்கம்போல் நடைப்பயிற்சி சென்றவர், திரும்பி வரவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். 
ராமஜெயம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று திமுகவினர் சந்தேகம் அடைந்ததால், கே.என்.நேரு மற்றும் ராமஜெயத்தின் வீடுகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் திருச்சி கல்லணை ரோட்டில் 8வது கிலோ மீட்டரில் உள்ள திருவளர்சோலை என்ற இடத்தில் ராமஜெயம் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்தனர்.
அங்கு, இரண்டு கைகளையும், கால்களையும் கம்பியால் கட்டி, செல்லோ டேப்பால் ஒட்டி போர்வையால் ராமஜெயத்தின் உடல் மூடியிருந்தது. போலீசார் உடலை பறிமுதல் செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டிருப்பது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thanks to Nakkheeran

Ilavarasi 29-03-2012 | Sun Tv Elavarasi Serial 29th March 2012

Posted: 29 Mar 2012 02:58 AM PDT


Ilavarasi 29-03-12 | Sun Tv Elavarasi Serial 29th March 2012




Download and watch
http://adf.ly/6nGwu

This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 29-03-2012 | Sun Tv Thiyagam Serial 29th March 2012

Posted: 29 Mar 2012 01:55 AM PDT


Thiyagam 29-03-12 | Sun Tv Thiyagam Serial 29th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 29-03-2012 | Sun Tv Muthaaram Serial 29th March 2012

Posted: 29 Mar 2012 01:54 AM PDT


Mutharam 29-03-12 | Sun Tv Muthaaram Serial 29th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 29-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 29th March 2012

Posted: 29 Mar 2012 01:54 AM PDT

Vellai Thamarai 29-03-12 | Sun Tv Vellai Thamarai Serial 29th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 29-03-2012 | Sun Tv Athipookal Serial 29th March 2012

Posted: 29 Mar 2012 02:49 AM PDT


Athipookal 29-03-2012 | Sun Tv Athipookal Serial 29th March 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

ரித்தீஷ் எம்.பி. சொல்லியே திமுக நிர்வாகியை கடத்தினோம்: வரிச்சியூர் செல்வம் வாக்குமூலம்

Posted: 28 Mar 2012 11:42 PM PDT


ரித்தீஷ் எம்.பி. சொல்லியே திமுக நிர்வாகியை கடத்தினோம்: வரிச்சியூர் செல்வம் வாக்குமூலம்

மதுரை: திமுக எம்.பி. ஜே.கே. ரித்தீஷ் கூறியதால் தான் திமுக நிர்வாகியை கடத்தியதாக பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளான். 


ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய திமுக செயலாளர் கதிரவன் கடத்தப்பட்ட வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரைக் கடத்திய கும்பலைப் பிடிக்க திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு சென்றனர். அங்கு கூலிப்படையைச் சேர்ந்த கேரள வாலிபர் சினோஜ்(32) என்பவர் போலீசார் நடத்திய தூப்பாக்கிச்சூட்டில் பலியானார். அப்போது அங்கிருந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்பட 3 பேர் சிக்கினர். செல்வத்தின் தம்பி செந்தில்(32) நீதிமன்றத்தில் சரணடைந்தார். 


இந்த வழக்கில் ராமநாதபுரம் திமுக எம்.பி. ரித்தீஷ் உள்பட மேலும் சிலரின் பெயர்களும் சேர்ககப்பட்டன.
இந்நிலையில் கைதான வரிச்சியூர் செல்வத்தின் வாக்குமூலத்தை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது, என் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. எனக்கும், ரித்தீஷ் எம்.பி.க்கும் நல்ல பழக்கம் உள்ளது. ரித்தீஷ் எம்.பி.யின் நண்பர் சுரேஷ் என்னை சென்னைக்கு வரும்படி கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி சென்னை, பாண்டிபஜாரில் ஒரு லாட்ஜில் அவரை சந்தித்தேன்.
அப்போது ரித்தீஷ் எம்.பி.யின் ஆதரவாளராக இருந்த போகலூர் ஒன்றிய திமுக செயலாளர் கதிரவன் தற்போது முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளராக செயல்படுவதால் எம்.பி. மிகுந்த வருத்தமாக உள்ளதாக கூறினார். அதனால் கதிரவனை கடத்தி, மிரட்டி அவரிடம் பணத்தை பறித்துக்கொண்டு விட்டுவிடும்படி என்னிடம் எம்.பி. கூறச் சொன்னதாக சுரேஷ் கூறினார்.
அதன்படி நானும், கேரளாவில் சாராயம் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த சினோஜ், அஜீத், வர்கீஸ், அனிஸ், என் தம்பி செந்திலின் நண்பர்கள் கண்ணன், கமலக்கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து அவரை கடத்த திட்டம் தீட்டினோம்.
நான் கூறியதுபோல் சினோஜ், அஜீத் உள்பட சிலர் அவரை கடத்தி கொடைக்கானல் அழைத்துச் சென்று மிரட்டினர். பின்னர் அவரிடம் இருந்த தங்க மோதிரம், ரூ.48,000 பணம், ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு விடுவித்தனர். அவற்றை என்னிடம் கொடுத்தனர். நான் பணத்தை அவர்களுக்கே பிரித்துக்கொடுத்துவிட்டேன். ஏ.டி.எம். கார்டுகளை எரித்துவிட்டேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் செல்வத்தை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தனர். விசாரணையின் முடிவில் போலீசார் மற்றொரு வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
கதிரவனை கடத்தி மிரட்டும்படி, ரித்தீஷ் எம்.பி. கூறியதாக சுரேஷ் என்னிடம் கூறினார். நான் உடனடியாக எம்.பி.யை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை நேரடியாக ஏன் என்னிடம் கூறவில்லை என்று கேட்டேன். அதற்கு உனக்கே வேதனையாக உள்ளதே, அதுபோலத்தான் எனக்கும் இருந்தது என்று கூறிய எம்.பி. கதிரவனின் உயிருக்கு ஆபத்து இல்லாமல் கடத்தி மிரட்டினால் போதும் என்று கூறினார். அதன்படி நாங்கள் செயல்பட்டோம் என்றோம் என்று புதிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thanks to OneIndia

'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான' அதிமுகவினர்!

Posted: 28 Mar 2012 11:41 PM PDT


'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான' அதிமுகவினர்!

சென்னை: எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று சசிகலா நீக்கப்பட்டபோது சித்தாந்தமாக பேசி சிலாகித்துப் போன அதிமுகவினர் இப்போது எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டதே என்று திகிலடித்துப் போய் நிற்கின்றனராம்.


காரணம், சசிகலாவின் மறு வருகை.. இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள், பின்னர் சேர்ந்து கொள்வார்கள், இது என்ன புதுசா என்றுதான் 4 மாதத்திற்கு முன்பு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கூண்டோடு அதிமுகவை விட்டும் போயஸ் கார்டன் வீட்டை விட்டும் ஜெயலலிதா தூக்கியபோது அனைவருமே நினைத்தார்கள். இருந்தாலும் ஜெயலலிதாவின் செயல்பாட்டு வேகத்தைப் பார்த்த அதிமுகவினரும், பொதுமக்களும், பரவாயில்லையே உண்மையிலேயே சசிகலாவை துரத்தி விட்டு விட்டாரே என்றுதான் நினைத்தனர்.


விரட்டிய வேகத்தில், சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியாக வழக்குகள் பாயத் தொடங்கின. இதுவரை நடராஜன், திவாகரன், ராவணன் என மூன்று பேர் சிறைக் கம்பிகளுக்குள் சிறைப்பட்டுள்ளனர். அடுத்து மகாதேவன், தொடர்ந்து சசிகலா என பெயர் அடிபட்ட நேரத்தில்தான். அக்கா.. என்னை மன்னிச்சுடுக்கா என்று அறிக்கை வந்துள்ளது சசிகலாவிடம்...


சசிகலாவின் அறிக்கை தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அதிமுக சார்ந்த, அதிகார மட்ட, காவல்துறை அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், இனி மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்கும், நாமெல்லாம் மறுபடியும் கைகளை மாற்றிக் கட்ட வேண்டும் என்ற பதட்டமே.


சசிகலா நீக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆதரவான கட்சிக்காரர்களை மேலிடத்திற்குப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர் தற்போது அதிர்ச்சி அடைந்து போய் நிற்கின்றனராம். தாங்கள் சசிகலாவால் பழிவாங்கப்படலாம் என்ற பயம்தானாம் அது.


அதேபோல சசிகலா தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்து வரும் போலீஸாரும் கூட பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளதாக தெரிகிறது. அதிகாரிகள் மட்டத்திலும், இனி என்ன செய்வது, எப்படி நடந்து கொள்வது, சசிகலா தலையீடு மறுபடியும் இருக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனராம்.


மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம், சசிகலாவின் பெயரைச் சொல்லி பலரும் ஆட்டம் போட ஆரம்பிப்பார்களே, அதை முதல்வர் ஜெயலலிதா எப்படித் தடுக்கப் போகிறார் என்ற கேள்விகள் அதிமுகவினர் மத்தியில் இல்லாமல் அரசு அதிகாரிகள் மத்தியிலும் நிலவுகிறது.


சசிகலாவின் மறு வருகையால், உண்மையான அதிமுகவினர்தான் பெரும் கலக்கத்தில் மூழ்கியுள்ளனர். கட்சி உருப்படும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டு தற்போது மறுபடியும் கலங்கலாக்கி விட்டனரே என்ற வேதனையிலும், விரக்தியிலும் அவர்கள் இருப்பதாக தெரிகிறது. மேலும் சசிகலா நீக்கப்பட்டபோது அதற்கு கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் என பல தரப்பிலும் பெரும் வரவேற்பு காணப்பட்டது. காரணம், சசிகலா குடும்பத்தினர் தமிழகத்தை சூறையாடி போட்ட ஆட்டம்தான். கருணாநிதி குடும்பத்தினரை மிஞ்சி விட்டனரே என்றுதான் அத்தனை பேரும் சசிகலா குடும்பத்தி்னர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.


சசிகலா நீக்கத்தை வைத்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பல முக்கியப் புள்ளிகளும் மீண்டும் கட்சிக்குத் திரும்ப யோசித்து வருவதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அத்தனையும் தவிடுபொடியாகியுள்ளது. ஜெயலலிதா, சசிகலா சண்டை என்பது பொம்மை விளையாட்டு போல என்றாகி விட்டது. எனவே அதிமுகவின் தலைவிதியை மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் இந்த உண்மையான அதிமுகவினர் உள்ளனராம்.


சசிகலாவின் மறு வருகை அதிமுகவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
Thanks to OneIndia

பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொமான்ஸ் காட்சி!

Posted: 28 Mar 2012 11:36 PM PDT


பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொமான்ஸ் காட்சி!

பிரபு தேவாவை பிரிந்த பிறகு, மீண்டும் மும்முரமாக சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.
இந்தப் பிரிவுக்குப் பிறகு அவர் தெலுங்கில் நடிக்க முதல் படம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும். டக்குபதி ராணாவுக்கு ஜோடி.
முதல் காட்சியே, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இருவரும் காதல் பண்ணுவது போல படமாக்கப்பட்டது. வானம் படத்தை இயக்கிய க்ருஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்துக்காக தொடர்ந்து கால்ஷீட் கொடுத்துள்ளாராம் நயன்தாரா.
ஏற்கெனவே தெலுங்கில் நாகார்ஜூனா நடிக்கும் படத்தில் அவரது காதலியாக நடிக்கிறார் நயன். தமிழ் - தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் புதிய படத்திலும் இவர்தான் நாயகி.
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்க, ஏ எம் ரத்னம் தயாரிக்கும் மெகா படத்திலும் நயன்தான் நாயகி.
11 மாத இடைவெளிக்குப் பிறகு பரபரப்பாக தனது அடுத்த ரவுண்டைத் தொடங்கியிருக்கும் நயன்தாராவிடம் அதுகுறித்துக் கேட்டால், "நடிப்பை நான் ரசித்து அனுபவிக்கிறேன். இந்த இன்னிங்ஸ் எனக்கு மறக்க முடியாததாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.
Thanks to OneIndia

வீட்டை சுகாதாரமாக வைக்காவிட்டால் அபராதம் விதிக்கும் பொது சுகாதார சட்டம்- தமிழக அரசு நடவடிக்கை

Posted: 28 Mar 2012 11:33 PM PDT


வீட்டை சுகாதாரமாக வைக்காவிட்டால் அபராதம் விதிக்கும் பொது சுகாதார சட்டம்- தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், புதிய சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் படி வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிடில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.


சுகாதார சீர்கேடு


பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் சுகாதார சீர்கேடுகள் தான். மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, யானைக்கால் போன்ற நோய்கள் கொசுக்கள் மூலமே பரவுகின்றன. குப்பைகள், சாக்கடை நீர் போன்றவற்றில் இருந்து தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே சுத்தத்தை பராமரித்தால் கொசுக்களின் இனப் பெருக்கத்தை தடுத்து அதன் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முடியும்.


பொதுசுகாதார சட்டம்


இதற்காக 1939-ல் தமிழக பொதுசுகாதார சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ராஜன் பரிந்துரையில், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த சட்டத்தை இயற்றியது. அதன்படி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களுக்கு 50 பைசா முதல் 5 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு அமைந்த அரசாங்கங்கள் இந்த சட்டத்தில் உள்ள சரத்துக்களை முறையாக அமல் படுத்தவில்லை. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் தலைதூக்க தொடங்கியதும், கடந்த 2009-ல் பொது சுகாதார சட்டத்தின் பக்கம் அரசின் கவனம் திரும்பியது.


புதிய திருத்தம்


இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது பற்றி பரிந்துரை செய்ய, கூடுதல் பொது சுகாதார இயக்குனர் மருத்துவர் இளங்கோ தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து, அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை செய்தது. சுகாதார துறை செயலாளர் சுப்புராஜிடம் பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


அபராதம் விதிப்பு


இதில் முக்கிய பரிந்துரை, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்பதாகும். அந்த அறிக்கை 3 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. உயிரூட்டல் தற்போது அந்த சட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டம் கொடுக்க, அ.தி.மு.க. அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சட்டத்தில் இந்த காலத்துக்கு பொருந்தும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, ஆலோசனை நடத்தப்படுகிறது. சுமார் 73 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டத்தின் மூலம் நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில், வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். சாக்கடை நீரை தேக்கி வைக்க கூடாது. கழிவுப் பொருள்களை கண்ட இடங்களில் கொட்ட கூடாது.
குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை தெருவில் வீசக் கூடாது. அதே போல தொழிற்சாலைகள், மருத்துவ மனைகள் மற்றும் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் போன்றவைகளால் கழிவுகளை பொது இடங்களில் குவிக்க கூடாது. குடிநீர் ஆதாரப்பகுதிகளில் கழிவு நீரை வெளியேற்றக் கூடாது. அனைத்து தரப்பு சுகாதாரத்தை பேண வேண்டும் என்று வலியுறுத்தும் திருத்தங்கள் சட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.
வீடுகளை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கு அதிக பட்சமாக ரூ.50 ஆயிரமும், தொழிற்சாலைகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்க, சட்டத்தில் வழிவகை செய்யப்பட உள்ளது. பொது சுகாதார சட்டத்தை கடுமையாக அமல்படுத்தினால் 80 முதல் 90 சதவிகிதம் சுகாதார சீர்கேட்டை சரி செய்து விடலாம் என்பது சுகாதார துறையின் எதிர்பார்ப்பு.
Thanks to OneIndia

வழி தவறி சென்ற என்னை எம்எல்ஏ ஆக்கி அழகு பார்ப்பவர் 'புரட்சித் தலைவி அம்மா': கு.ப.கிருஷ்ணன்

Posted: 28 Mar 2012 11:31 PM PDT


வழி தவறி சென்ற என்னை எம்எல்ஏ ஆக்கி அழகு பார்ப்பவர் 'புரட்சித் தலைவி அம்மா': கு.ப.கிருஷ்ணன்

சென்னை: வழி தவறிச் சென்ற என்னை எம்எல்ஏ ஆக்கி அழகு பார்ப்பவர் புரட்சித் தலைவி அம்மா என்று தே.மு.தி.க.வுக்கு சென்று பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கும் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார்.
முன்பு அதிமுக அமைச்சராக இருந்த கு.ப.கிருஷ்ணன் அதிலிருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை கலைத்து விட்டு தே.மு.தி.கவில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில துணை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கு.ப. கிருஷ்ணன் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.


இந் நிலையில் சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கு.ப.கிருஷ்ணன் பேசுகையில்,


பத்து பிள்ளைகளைப் பெற்ற தாய் பிள்ளைகளோடு திருவிழா காண செல்கிறாள். கூட்டத்தில் ஒரு பிள்ளை காணாமல் போய் விடுகிறது. பத்தில் ஒன்று குறைந்தால் என்ன? ஒன்பது இருக்கிறதே என நிறைவு கொள்ளமாட்டார். காணாமல் போன பிள்ளையை கண்டுபிடித்து வாரி அணைத்து உச்சி முகந்து, பக்குவமாக அறிவுரை கூறி, அன்பு பாரட்டுவார். இதுவே தாயின் உள்ளம்.
வழி தவறிப் போன என்னை வழிகாட்டி அறிவு புகட்டி அவையில் அமர வைத்து அழகு பார்க்கும் எங்களின் 'அருந்தவமே'.


வாழ்வே அற்றுப் போய்விட்டது என வாடியிருந்த மக்களுக்கு நடுவனரசை எதிர் நோக்காமல் ரூ.850 கோடியை கொட்டிக் கொடுத்ததோடு ஓராயிரம் கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுப்பதோடு உலக வரலாற்றில் எந்த தலைவருக்கும் உதிக்காத உயரிய திட்டம் கண்டார்.
மா, பலா, வாழை, முந்திரி மரங்களெல்லாம் வேரோடு, வேரடி மண்ணோடு வீழ்ந்துக் கிடப்பதை கண்டு பொறுக்காத நெஞ்சத்தாருக்கு மரக்கன்று தந்து, சிறுதளை பை தந்து உயிர் வாழ நுண்ணீர்ப் பாசனம் தந்து நட்ட மா, பலா, வாழை, முந்திரி பலன் தரும் காலம் வரை பாடுபடும் உழவருக்கு 790.18 கோடி பணக்கொடை தந்து பாரினில் உயர்ந்துள்ளார்.
தங்கள் எண்ணக் கனவு இனிதே நிறைவேறும் பத்தாண்டு காலமென்ன? பாராளும் காலம் தொலைவில் இல்லை.
உணவு பெருக்க நடவடிக்கையாக இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்த முன் எப்பொழும் இல்லாத வேளாண் துறைக்கு 3804.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆளும் போதுதான் காவிரித் தாயின் கைவிலங்கு கழற்றப்படுகிறது.
காவிரி நடுவர் நீதி மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட இன்னல்களை போக்க உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு நடைபெறுகிறது. அடுத்து வரும் ஆண்டிற்கு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய நீரின்றி காத்துக் கிடக்கும் அவல நிலையைப் போக்க உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கொன்றை தொடுத்திருப்பது உரிமையை நிலைநாட்ட தாங்கள் எடுத்திருக்கும் உரிமைப் பிரகடனமாகவே இதைக் கருதுகிறேன்.
கருணாநிதியின் திட்டங்கள், பார்ப்பதற்கும், படிப்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால், உண்மையில் திட்டங்களின் பலன், அவரின் குடும்பத்திற்கு போய் சேரும் வகையில் தான் இருக்கும் என, எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார் என்றார் கு.ப.கிருஷ்ணன்
முன்னதாக அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் இடைத்தேர்தல் அல்ல; எடைத் தேர்தல். திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை எடை போட்டு பார்த்து, மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என கருணாநிதி கூறினார். ஆனால், எந்த திட்டத்தையும் நீங்கள் நிறைவேற்றவில்லை. எதையுமே செய்யாமல் ஆட்சி நடத்தியதால் தான், தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு அளித்தனர் என்றார்.
திமுக மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு அதிமுக உறுப்பினர்கள் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். அவரை, இருக்கையில் அமருமாறு, சபாநாயகர் பலமுறை கூறினார். அதன் பிறகும், தொடர்ந்து அன்பழகன் பேசிக்கொண்டே இருந்தார். இதையடுத்து, அன்பழகனை வெளியேற்ற, சபாநாயகர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். உடனே, சபைக் காவலர்கள் அன்பழகனை வெளியேற்றினர்.
Thanks to OneIndia

Uravugal 29-03-2012 | Sun Tv Uravugal Serial 29th March 2012

Posted: 28 Mar 2012 11:25 PM PDT


Uravugal 29-03-12 | Sun Tv Uravugal Serial 29th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 29-03-2012 | Sun Tv kasthuri Serial 29th March 2012

Posted: 28 Mar 2012 11:24 PM PDT


Kasturi 29-03-12 | Sun Tv kasthuri Serial 29th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 29-03-2012 | Sun tv Marudhaani 29th March 2012

Posted: 28 Mar 2012 10:25 PM PDT


Maruthani 29-03-12 | Sun tv Marudhaani 29th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Ananda Vikatan 04-04-2012 | Free Download Ananda Vikatan PDF This week | Ananda Vikatan 4th April 2012 ebook

Posted: 28 Mar 2012 10:41 PM PDT


Ananda Vikatan 04-04-2012 | Free Download Ananda Vikatan PDF This week | Ananda Vikatan 4th April 2012 ebook

Download Link

Kumudam Reporter 29-03-2012 | Free Download Kumudam Reporter PDF This week | Kumudam Reporter 29th March 2012 ebook

Posted: 28 Mar 2012 10:38 PM PDT


Kumudam Reporter 29-03-2012 | Free Download Kumudam Reporter PDF This week | Kumudam Reporter 29th March 2012 ebook
Download Link

Dinamalar E-paper 29-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 29th March 2012

Posted: 28 Mar 2012 09:16 PM PDT


Dinamalar E-paper 29-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 29th March 2012

Download Link

Dinakaran E-paper 29-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 29th March 2012

Posted: 28 Mar 2012 09:15 PM PDT


Dinakaran E-paper 29-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 29th March 2012

Download Link

Nadanthathu Enna 28-03-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 28th March 2012

Posted: 28 Mar 2012 11:05 AM PDT


Nadanthathu Enna 28-03-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 28th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Azhagi 28-03-2012 | Sun tv Alagi 28th March 2012

Posted: 28 Mar 2012 10:18 AM PDT


Azhagi 28-03-12 | Sun tv Alagi 28th March 2012




This posting includes an audio/video/photo media file: Download Now