TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிகாரப்பூர்வ விளக்கம்

Posted: 22 Mar 2012 04:21 AM PDT


ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிகாரப்பூர்வ விளக்கம்

டெல்லி: இந்திய சட்டப்படி ஓரினச்சேரிக்கை குற்றம் அல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலை என்று உச்சநீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டது.


டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு


அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற ஒரு தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு வழங்கியது. அந்த தீர்ப்பில், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.


நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த தீர்ப்பினை எதிர்த்து பாரதிய ஜனதா தலைவர் பி.பி.சிங்கால், ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.


சர்ச்சை


இந்த வழக்கு விசாரணை பல்வேறு திருப்பங்களை சந்தித்தது. முதலில் ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரணானதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாறிவரும் சூழ்நிலையில், ஓரினச்சேர்க்கைக்கு எதிரான பார்வையும் மாற்றப்படவேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மல்கோத்ரா வாதிடுகையில், "ஓரினச்சேர்க்கை ஒழுக்கக்கேடானது, எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் பரவ காரணமாக உள்ளது. ஓரினச்சேர்க்கையை நமது சமூகம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அது குற்றம்தான்'' என்று வாதாடினார்.


ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் ஜெயின் வாதாடியபோது மாறுபட்ட கருத்தினை கூறினார். "(இருவர் சம்மதத்துடனான) ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்ற தீர்ப்பில் எந்த சட்டத்தவறும் இல்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது'' என தெரிவித்தார்.


உச்சநீதிமன்றம் கண்டனம்


மத்திய அரசின் இரு வெவ்வேறு துறை அமைச்சகங்களின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களின் வாதம் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி கண்டனம் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் ஒரு மனுத் தாக்கல் செய்தது. அதில், "டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்படி சரியானதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவை உச்சநீதிமன்றம் எடுத்துக்கொள்ளட்டும்' என கூறப்பட்டிருந்தது.


அரசின் நிலை 


இந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்குகள் மறுபடியும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் முன்னிலையில், அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி ஆஜராகி அரசின் நிலையை தெளிவுபடுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:


ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் அல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலை ஆகும். டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து, ஓரினச்சேர்க்கை குற்றம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்பதை தெரிந்துகொண்டோம். தெளிவு பெற்றோம். அதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.


கோர்ட்டில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்கோத்ரா ஓரினச்சேர்க்கைக்கு எதிராக வாதாடியது, சட்ட அமைச்சக அதிகாரிகளுக்கும், உள்துறைக்கும் இடையே சரியான தகவல் பரிமாற்றம் நடைபெறாததின் விளைவுதான் என்றார்.
Thanks to OneIndia

இந்தியா ஆதரவுடன்- இலங்கைக்கு எதிரான தீர்மானம் வென்றது - சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணம்!

Posted: 22 Mar 2012 04:19 AM PDT


இந்தியா ஆதரவுடன்- இலங்கைக்கு எதிரான தீர்மானம் வென்றது - சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணம்!

ஜெனீவா: ஐநாவில் போர்க்குற்றவாளி இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம், இந்தியாவின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.


தமிழருக்கு எதிராக இலங்கை நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.


ஐநாவில் இன்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இலங்கையை எதிர்த்து 24 நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. இலங்கையை எதிர்த்த முக்கிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.


இதைத் தொடர்ந்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
Thanks to OneIndia

SunTv Headline News 22-03-2012 | Sun Tv headline News 22-03-12 | Sunnews 22nd March 2012

Posted: 22 Mar 2012 03:14 AM PDT


SunTv Headline News 22-03-2012 | Sun Tv headline News 22-03-12 | Sunnews 22nd March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Jaya Tv News 22nd March 2012 | Jaya Tv news 22-03-2012

Posted: 22 Mar 2012 03:13 AM PDT


Jaya Tv News 22nd March 2012 | Jaya Tv news 22-03-2012

Seetha 22-03-2012 | kalaignar Tv Seetha 22nd March 2012

Posted: 22 Mar 2012 03:12 AM PDT


Seetha 22-03-2012 | kalaignar Tv Seetha 22nd March 2012

Ilavarasi 22-03-2012 | Sun Tv Elavarasi Serial 22nd March 2012

Posted: 22 Mar 2012 03:21 AM PDT


Ilavarasi 22-03-12 | Sun Tv Elavarasi Serial 22nd March 2012
Source 1
Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 22-03-2012 | Sun Tv Thiyagam Serial 22nd March 2012

Posted: 22 Mar 2012 03:09 AM PDT


Thiyagam 22-03-12 | Sun Tv Thiyagam Serial 22nd March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 22-03-2012 | Sun Tv Muthaaram Serial 22nd March 2012

Posted: 22 Mar 2012 03:09 AM PDT


Mutharam 22-03-12 | Sun Tv Muthaaram Serial 22nd March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 22-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 22nd March 2012

Posted: 22 Mar 2012 03:07 AM PDT


Vellai Thamarai 22-03-12 | Sun Tv Vellai Thamarai Serial 22nd March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 22-03-2012 | Sun Tv Athipookal Serial 22nd March 2012

Posted: 22 Mar 2012 03:15 AM PDT


Athipookal 22-03-12 | Sun Tv Athipookal Serial 22nd March 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய ஆப்பிள் ஐபேட் அதிக சூடாவதாக புகார்!

Posted: 21 Mar 2012 11:50 PM PDT


புதிய ஆப்பிள் ஐபேட் அதிக சூடாவதாக புகார்!

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய ஐபேடை ஆப்பிள் கடந்த வாரம் விற்பனைக்கு வைத்தது. அதற்குள் இதுவரை 3 மில்லியன் ஐபேடுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆனால் தற்போது இணைய தளத்தில் வந்திருக்கும் செய்தி என்னவென்றால் இந்த புதிய ஐபேட் ஐபேட் 2 வைவிட அதிகமாக சூடாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்த புதிய ஐபேடை தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தினால் இது 116 டிகிரி பாரன்ஹீட் (47 செல்சியஸ்) வெப்பத்தை அடைந்து விடுகிறது. இது ஐபேட் 2ஐவிட 13 டிகிர பாரன்ஹீட் அதிகமாகும்.
இந்த குறைபாட்டை கருத்தில் கொண்ட ஆப்பிள் அதற்கு உடனடியாக பதிலையும் கொடுத்திருக்கிறது. அதாவது ரெட்டினா டிஸ்ப்ளே, எ5எக்ஸ் சிப், 4ஜி எல்டிஇ சப்போர்ட் மற்றும் 10 மணி நேர இயங்கு நேரம் கொண்ட பேட்டரி போன்ற வசதிகளைக் கொண்ட இந்த புதிய ஐபேட் ஆப்பிளின் தெர்மல் எல்லைக்குள் மிக அருமையாக இயங்குகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் இந்த புதிய ஐபேடில் ஏதாவது பிரச்சினையை உணர்ந்தால் உடனடியாக அவர்கள் ஆப்பிள் சேவை மையத்தை அணுக வேண்டும் என்று ஆப்பிள் அறிவுறுத்துகிறது.
ஆப்பிளின் தயாரிப்பு வெளிவந்த முதல் வாரத்தில் இப்படிப்பட்ட புகார்கள் வருவது ஆப்பிளுக்கு புதிது அல்ல. ஏற்கனவே ஆப்பிள் ஐபோன் 4 வந்த போது அதில் ஆன்டனா பிரச்சினை இருப்பதாக புகார்கள் வந்தன. உடனே ஆப்பிளின் முன்னாள் இயக்குனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை எவ்வாறு கையாள வேண்டும் என்று அதன் வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
மேலும் அந்த குறைபாட்டை நீக்குவதற்காக ஆப்பிள் இலவச பெட்டிகளையும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இப்போது அதுபோல் இந்த புதிய ஐபேடுக்கும் இலவச பெட்டிகள் வழங்கப்படுமா என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புதிய ஐபேடுக்கு வந்திருக்கும் வெப்ப பிரச்சினை அதன் விற்பனையைப் பாதிக்குமா என்று போகப் போகத்தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.
Thanks to OneIndia

திருப்பதியில் நயன்தாரா!

Posted: 21 Mar 2012 11:46 PM PDT


திருப்பதியில் நயன்தாரா!

மீண்டும் பரபரப்பாக செய்திகளில் அடிபட ஆரம்பித்துவிட்டார் நடிகை நயன்தாரா. முன்பு காதல், மோதல் சமாச்சாரங்களுக்காக. இப்போது அடுத்தடுத்து பெரிய சினிமாக்களில் நடிக்க ஒப்பந்தமாவதற்காக.


ஏற்கெனவே அஜீத், கோபிசந்த் படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நயன்தாரா, தெலுங்கிலும் இரு படங்களுக்கு ஓகே சொல்லி, ஒன்றில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.


தமிழில் இன்னும் இரு பெரிய படங்களுக்கு அவருடன் பேசி வருகிறார்கள் இயக்குநர்கள்.


இத்தனை ஆண்டுகள் கடந்தும், தனக்கு இருக்கும் மவுசையும் வரவேற்பையும் பார்த்து அகமகிழ்ந்துபோன நயன்தாரா, நேற்று காலை 10 மணிக்கு திருப்பதிக்கு சென்றார்.


ஏழுமலையானை மனமுருக வேண்டிக் கொண்டு திரும்பிய அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திருமலையில் திரண்டுவிட்டனர்.


அவர்களுக்கு 'டாட்டா' காட்டிக் கொண்டே, 'திருமலைக்கு வந்து தரிசனம் முடித்த பிறகு மிகுந்த நிம்மதியை உணர்கிறேன்,' என்று கூறியபடி காரில் ஏறிக் கிளம்பினார் நயன்தாரா.
Thanks to OneIndia

'கொலவெறி' புகழ் '3' மார்ச் 30ல் ரிலீஸ்!

Posted: 21 Mar 2012 11:45 PM PDT


'கொலவெறி' புகழ் '3' மார்ச் 30ல் ரிலீஸ்!
கொலவெறி... என்ற ஒரேயொரு பாடலால் உலகமெங்கும் பிரபலமாகி, பிஸினஸில் எக்கச்சக்க பணத்தையும் தனுஷுக்கு ஏகப்பட்ட வாய்ப்பையும் அள்ளிக் கொட்டிய '3' வரும் மார்ச் 30-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.


தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ள இந்தப் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரித்துள்ளார்.


ரஜினி குடும்பத்துக்கு மிக நெருங்கிய உறவுக்கார இளைஞர் அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தையும் தனுஷே எழுதியுள்ளார்.


கொலவெறி பாடலுக்கு கிடைத்த பெரும் புகழும் வரவேற்பும், தனுஷுக்கு இந்திப் பட உலகில் பெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளது. அவர் இப்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு இந்திப் படத்தை இயக்குகிறார்.


படத்தின் வெளியீட்டு உரிமை பெரும் விலைக்குப் போயுள்ளது. ரஜினி படங்கள் தவிர வேறு எந்த நடிகர் படத்துக்கும் கிடைக்காத அளவு பிறமொழி உரிமைக்கான விலை 3-க்கு கிடைத்துள்ளது.


சென்னையில் திரையுலகினருக்காக படத்தின் சிறப்புக் காட்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
Thanks to OneIndia

Uravugal 22-03-2012 | Sun Tv Uravugal Serial 22nd March 2012

Posted: 22 Mar 2012 12:07 AM PDT


Uravugal 22-03-12 | Sun Tv Uravugal Serial 22nd March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 22-03-2012 | Sun Tv kasthuri Serial 22nd March 2012

Posted: 21 Mar 2012 11:21 PM PDT


Kasturi 22-03-12 | Sun Tv kasthuri Serial 22nd March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Cinema Seithigal 22-03-2012 | Sun Tv Cinema News 22nd March 2012

Posted: 21 Mar 2012 10:41 PM PDT


Cinema Seithigal 22-03-2012 | Sun Tv Cinema News 22nd March 2012

Maruthani 22-03-2012 | Sun tv Marudhaani 22nd March 2012

Posted: 21 Mar 2012 10:30 PM PDT


Maruthani 22-03-12 | Sun tv Marudhaani 22nd March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Ananda Vikatan 28-03-2012 | Free Download Anandha Vikatan PDF This week | Ananda Vikatan 28th March 2012 ebook

Posted: 21 Mar 2012 10:11 PM PDT


Ananda Vikatan 28-03-2012 | Free Download Anandha Vikatan PDF This week | Ananda Vikatan 28th March 2012 ebook

Download link

Dinakaran E-paper 22-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 22nd March 2012

Posted: 21 Mar 2012 09:21 PM PDT


Dinakaran E-paper 22-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 22nd March 2012

Download Link

Dinamalar E-paper 22-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 22nd March 2012

Posted: 21 Mar 2012 09:07 PM PDT


Dinamalar E-paper 22-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 22nd March 2012

Download Link

அவுங்களுக்கும் டெபாசிட் போச்சு: வருந்தத் தேவையில்லை: கருணாநிதி

Posted: 21 Mar 2012 01:01 PM PDT


அவுங்களுக்கும் டெபாசிட் போச்சு: வருந்தத் தேவையில்லை: கருணாநிதி

சென்னை: "தி.மு.க., ஆட்சியில், கடைசியாக நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில், இன்றைய ஆளுங்கட்சி தனது டெபாசிட்டை பறிகொடுத்ததை மனதில் கொண்டால், சங்கரன்கோவிலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்ததற்காக வருந்தத் தேவையில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: சங்கரன்கோவில், 1991ம் ஆண்டு முதல் தொடர்ந்து அ.தி.மு.க., வெற்றி பெற்று வருகிற தொகுதி. அதை அவர்கள் தக்கவைத்துக்கொள்வர் என்பது எதிர்பார்த்த ஒன்று தான். எனினும் தி.மு.க., தனது ஜனநாயகக் கடமையை அங்கே ஆற்றியது. அந்த வகையில், வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவதுடன், தி.மு.க., வேட்பாளருக்கு வாக்களித்தவர்கள், பாடுபட்ட தோழமைக் கட்சித் தோழர்கள், கட்சி முன்னணியினர் அனைவருக்கும் நன்றி. "சங்கரன்கோவில் தேர்தலில் சவால் விட்டவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்' என முதல்வர் ஜெயலலிதா பேட்டி கொடுத்ததாக செய்தி வந்துள்ளது. ஆனால், ஜெயலலிதா தான் தே.மு.தி.க., தலைவரைப் பார்த்து, தேர்தல் முடிவு தங்களுக்குச் சாதகமாக இருக்குமென்ற ஏதோ ஒரு திடமான நம்பிக்கையோடு சட்டசபையில் சவால் விட்டவர். அவரது சவால் பொய்க்காதிருக்கத்தான் சங்கரன்கோவில் தொகுதியில், 32 அமைச்சர்கள் முற்றுகையிட்டு, தேர்தல் கமிஷனின் பூரண ஒத்துழைப்போடு, தங்களால் முடிந்த அளவு பணத்தை வாரி இறைத்தனர். அதற்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலின்போது, இதே சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் 61 ஆயிரம் ஓட்டு பெற்றதற்கு மாறாக, இந்த இடைத்தேர்தலில் 26 ஆயிரம் ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். அதாவது, 35 ஆயிரம் ஓட்டு, தி.மு.க.,வுக்கு இந்த ஒன்பதே மாதங்களில், என்ன காரணத்தாலோ குறைந்துவிட்டது. அல்லது குறைக்கப்பட்டுவிட்டது.


இடைத்தேர்தல்களில், பொதுவாக ஆளுங்கட்சி தான் வெற்றி பெற்று வருகிறது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு. 2006 முதல் 2011 வரை தி.மு.க., ஆளுங்கட்சியாக இருந்தபோது நடந்த 11 இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக் கூட்டணி தான் வெற்றி பெற்றது. கடைசியாக நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில், இன்றைய ஆளுங்கட்சி தனது டெபாசிட் தொகையை பறிகொடுக்கக் கூடிய நிலைக்கு ஆளானதை மனதில் கொண்டால், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்ததற்காக வருந்தத் தேவையில்லை. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Thanks to Dinamalar

சங்கரன்கோவிலில் தி.மு.க., உட்பட கட்சிகள் தூக்கியடிப்பு: அ.தி.மு.க., அபார வெற்றி

Posted: 21 Mar 2012 01:00 PM PDT


சங்கரன்கோவிலில் தி.மு.க., உட்பட கட்சிகள் தூக்கியடிப்பு: அ.தி.மு.க., அபார வெற்றி

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில், "தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்' என முதல்வர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றி, இடைத்தேர்தலில் அ.தி.மு.க., விற்கு அபார வெற்றியை வாக்காளர்கள் அளித்துள்ளனர். ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.


சங்கரன்கோவில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கருப்பசாமி மறைவையடுத்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., சார்பில் முத்துச்செல்வி, தி.மு.க., சார்பில் ஜவகர் சூர்யகுமார், ம.தி.மு.க., சார்பில் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க., சார்பில் முத்துக்குமார் என வேட்பாளர்கள் களமிறங்கினர். நான்கு கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தை மேற் கொண்டனர். மேலும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் என பெரும்படையே சங்கரன் கோவில் வாக்காளர்களை கவரும் பணியில் இறங்கியது. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவின் சொந்த ஊர் இடம் பெற்றுள்ள தொகுதி என்பதால், அக்கட்சியினரும் நம்பிக்கையோடு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


மின்வெட்டு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி எதிர்க் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டன. ஆனால், முதல்வர் ஜெயலலிதா, ஆளுங்கட்சியின் சாதனைகளை மையப்படுத்தி பேசியதோடு, "தி.மு.க., வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்' என சங்கரன் கோவில் வாக்காளர்களுக்கு பிரசாரத்தின் போது நேரடி வேண்டுகோள் விடுத்தார்.


அ.தி.மு.க., அமோக வெற்றி: பெரிய அளவிலான எவ்வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியாக முடிந்த சங்கரன்கோவில் தேர்தலில், அதிகபட்சமாக 77 சதவீத ஓட்டுகள் பதிவாயின. பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. மொத்தம் 18 ரவுண்டுகள் எண்ணப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க., முன்னிலை வகித்தது. ஓட்டு எண்ணிக்கை முடிவில், அ.தி.மு.க., வேட்பாளர் முத்துச்செல்வி 94 ஆயிரத்து 977 ஓட்டும், தி.மு.க., வேட்பாளர் ஜவகர் சூர்யக்குமார் 26 ஆயிரத்து 220 ஓட்டும் பெற்றனர். 3வது இடத்தை பிடித்த ம.தி.மு.க., வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 20 ஆயிரத்து 678 ஓட்டுகள் பெற்றார். தே.மு.தி.க.,வேட்பாளர் முத்துக்குமார் 12 ஆயிரத்து 144 ஓட்டுகள் பெற்றார். அ.தி.மு.க.,வேட்பாளர் முத்துசெல்வி, தி.மு.க., வேட்பாளரை விட 68 ஆயிரத்து 757 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற முத்துச்செல்வி தேர்தல் அதிகாரி பரமசிவன் மற்றும் டி.ஆர்.ஓ., உமாமகேஸ்வரி உள்ளிட்டோரிடம் இருந்து வெற்றிக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
முதல்வர் பெருமிதம்: முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்ற சங்கரன்கோவில் வாக்காளர்கள் அ.தி.மு.க.,விற்கு அமோக வெற்றியை அளித்துள்ளனர். எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகள்


அனைத்தும் டெபாசிட் இழந்துள்ளன. தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, "எதிர்க் கட்சிகள் விடுத்த சவாலுக்கு, சங்கரன் கோவில் வாக்காளர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்' என பெருமிதம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.,வை தவிர மற்ற அனைத்து 12 வேட்பாளர்களும் பெற்ற மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையை விட, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து ஆளுங்கட்சி மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை வாக்காளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சங்கரன்கோவிலில், 1991ம் ஆண்டு முதல் தற்போதைய இடைத்தேர்தல் வரை, தொடர்ந்து நடந்த 6 தேர்தல்களிலும், அ.தி.மு.க.,விற்கு வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
- நமது சிறப்பு நிருபர் -
Thanks to Dinamalar

Nakkeeran 21-03-2012 | Free Download Nakeeran latest PDF This week | Nakkheeeran 21st March 2012 ebook

Posted: 21 Mar 2012 12:02 PM PDT


Nakkeeran 21-03-2012 | Free Download Nakeeran latest PDF This week | Nakkheeeran 21st March 2012 ebook

Download Link

Sindhu Bhairavi 21-03-2012 | Raj Tv Sindhu Bairavi Serial 21st March 2012

Posted: 21 Mar 2012 11:51 AM PDT


Sindhu Bhairavi 21-03-12 | Raj Tv Sindhu Bairavi Serial 21st March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Manvasanai 21-03-2012 | Raj Tv Mann vasanai Serial 21st March 2012

Posted: 21 Mar 2012 11:51 AM PDT


Manvasanai 21-03-12 | Raj Tv Mann vasanai Serial 21st March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now