TV SHOWS | MOVIES | TV SERIALS |
- அது ரொம்ப தப்புங்க...நயன்தாரா விவகாரத்தில் திருப்பம்
- பிரிஞ்சாச்சு....சந்து-சிம்பு லடாய்
- ராத்திரி பதினொரு மணிக்கு வாங்க...தனுஷும் தெனாவெட்டும்...
- வந்தாச்சு தங்கச்சி மின்னலடிக்கும் லட்சுமிராய்
- Sun Tv Nathaswaram This week promo video | Nadhaswaram 25seconds promo video
- எக்கச்சக்க எதிரிகள்... யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?
- Puthiya Thalaimurai 29-03-2012 | Free Download Puthiyathalaimurai magazine ebook 29th March 2012 latest
- Dinamalar E-paper 31-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 31st March 2012
- Dinamalar Aanmeegamalar 31-03-2012 | Free Download Aanmeegamalar PDF today ebook | Aanmeega Malar 31st March 2012
- அடுத்த 'ஷாக்'தமிழக மக்களுக்கு ... மின் கட்டணம் உயர்ந்தது!
- கொலவெறி '3' - சினிமா விமர்சனம்
- Manvasanai 30-03-2012 | Raj Tv Mann vasanai Serial 30th March 2012
- Sindhu Bhairavi 30-03-2012 | Raj Tv Sindhu Bairavi Serial 30th March 2012
- Suvaiyo Suvai 30-03-2012 | Jaya Tv Suvaiyo Suvai 30th March 2012
- Yugiyudan Yugiyungal 30-03-2012 | Jaya tv Yugi yudan Yugiyungal 30th March 2012
- Rudram 30-03-2012 | Jaya Tv Rudram Maha Ragasiyam 30th March 2012
- Shanthi Nilayam 30-03-2012 | Jaya Tv Santhi Nilayam 30th March 2012
- Thamizhagathin Samayal Champion 30-03-2012 | Jaya tv Thamizhagathin Samayal Champion 30th March 2012
- Nadanthathu Enna 30-03-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 30th March 2012
- Azhagi 30-03-2012 | Sun tv Alagi 30th March 2012
- Aanpavam 30-03-2012 | Sun Tv Aan pavam Serial 30th March 2012
- kana kaanum kalangal 30-03-2012 | Vijay Tv kana kaanum kaalangal Kalluriyin kadhai 30th March 2012
- SolvathuEllam Unmai - Z tamil Tv Show Real Story Solvathu Ellam Unmai 30-03-2012
- Chellame 30-03-2012 | Sun Tv Chellamey Serial 30th March 2012
- Thendral 30-03-2012 | Sun Tv Thendral Serial 30th March 2012
அது ரொம்ப தப்புங்க...நயன்தாரா விவகாரத்தில் திருப்பம் Posted: 30 Mar 2012 03:00 PM PDT அது ரொம்ப தப்புங்க...நயன்தாரா விவகாரத்தில் திருப்பம் இல்லைன்ன அவரை கூட்டிட்டு போவாரா? இப்படி நயன்தாராவின் காதலை மலிவு விலை சரக்கு ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் சிலர். இவர்கள் சொல்லும் அந்த அவர், வேறு யாருமல்ல. நயன்தாராவின் மேக்கப்மேன் ராஜுதான். நடிகை வீட்டு கொசு செத்து விழுந்தால் கூட அதற்கும் மலர்வளையம் வைத்து மாநாடு கூட்டும் பழக்கமுள்ள தமிழனுக்கு இந்த விஷயம்தான் அவலாகி மெல்லவும், டவலாகி துடைக்கவும் சரியான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.எங்கு கூட்டிக்கொண்டு போனாராம் நயன்? தானே புயல் நிவாரண நிதி கொடுக்க முதல்வரை சந்திக்க போனாரல்லவா? அங்குதான் இந்த ராஜுவையும் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார். போகும்போது இருவரும் ஒரே கலர் ஆடையணிந்து சென்றதாக வர்ணிக்கிறது பொழுதுபோகாமல் புரளி கிளப்புவோர் சங்கம். ஆனால் ராஜுவின் நண்பர்களிடம் விசாரித்தால் ஆயுளுக்கும் தேவையான அட்வைஸ்தான் கிடைக்கிறது. நயன்தாராவை தன்னோட தெய்வமா நினைச்சு வணங்கிக்கிட்டு இருக்காரு ராஜு. ஏன் தெரியுமா? அந்த குடும்பம் இன்னைக்கும் சந்தோஷமா இருக்குன்னா அது நயன்தாராவின் கருணை மனசாலதான். வெறும் சம்பளம் கொடுக்கறதோட நிறுத்திக்காம அவருக்கு தனியா ஒரு கார் வாங்கிக் கொடுத்து அதில் வர்ற வருமானத்தையும் குடும்பத்துக்கு உதவியா வச்சுக்கோ என்று கூறியிருக்கிறார் நயன். அந்தம்மா எதிரில் உட்காரக்கூட மனசில்லாம மரியாதையா நிக்கிற மனுஷன் அவரு. அவருக்கு போய் இப்படி ஒரு சோதனையா என்கிறார்கள். கொஞ்சம் பார்த்து எழுதுங்க என்கிறார்கள். மேஸ்திரிக்கே வீடு சொந்தம்னு புதுசு புதுசா சட்டத்தை கொண்டு வராதீங்கப்பா... Thanks to Tamilcinema |
பிரிஞ்சாச்சு....சந்து-சிம்பு லடாய் Posted: 30 Mar 2012 02:57 PM PDT பிரிஞ்சாச்சு....சந்து-சிம்பு லடாய் கவுண்டர் தன் வீட்டில் காலை நீட்டி ஹாயாக படுக்க ஆரம்பித்த பிறகுதான் வடிவேலுவின் கால்(ஷீட்) ஓட ஆரம்பித்தது. அதன்பின் வடிவேலுவின் ரெஸ்ட் நேரம் அரசியல் என்ற தேள் கொடுக்கினால் வந்தது. ஹாயாக அவர் காலை நீட்டியதும் சந்தானம் ஓட ஆரம்பித்தார். கவுண்டருக்கும், வடிவேலுவுக்கும் வந்த அந்த பொல்லாத கெட்ட நேரம் சந்தானத்திற்கும் வரும்போல தெரிகிறது. ('நண்பன்' சத்யனை பார்த்தவர்கள் ஏற்கனவே அது வந்தாச் என்று கூவுவது கேட்கிறதா?)சிம்புங்கிற பெரிய மனுசன் தண்ணி ஊத்தலேன்னா இந்த செடி வளர இன்னும் டைம் பிடிச்சிருக்கும் என்று அவ்வப்போது சிம்புவின் மனசை தண்ணீரால் பதப்படுத்திக் கொண்டே வந்தார் சந்தானம். இப்போது அதே தண்ணீரில் ஒரே பிளிச்சிங் பவுடர் வாசனை வீச ஆரம்பித்திருக்கிறதாம். இருவருக்குள்ளும் நடக்கும் பனிப்போரில் சிம்புவால் கழற்றிவிடப்பட்டிருக்கிறார் திருவாளர் சந்தானம். வேட்டை மன்னன் படத்திற்கு பிட் பிட்டாக கால்ஷீட் கொடுத்திருந்தார் சந்தானம். அழைத்தபோதெல்லாம் வந்துவிட்டு போக இவர் என்ன வையாபுரியா? பிஸியான ஆளேச்சே. சிம்பு ஷுட்டிங்கிற்கு அழைத்த தினத்தில் வேறொரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தாராம் அவர். தனது கால்ஷீட்டை பிரித்துக் கொடுக்க முடியாதளவுக்கு தவித்துப் போனார் சந்து. எப்படியோ தட்டு தடுமாறி சிம்புவிடம் விஷயத்தை சொல்ல, இனிமேல் என் படத்தில் நீயில்லை என்று தெள்ளந்தெளிவாக கூறிவிட்டார் சிம்பு. இப்போதெல்லாம் நொடி முள் ஒவ்வொரு முறையும் கட்டிங் பிளேயராக நகர்கிறதாம் சந்தானத்திற்கு. என்ன இருந்தாலும் சிம்புவின் நட்பு எப்போதும் ஸ்பெஷல் ஆச்சே? Thanks to TamilCinema |
ராத்திரி பதினொரு மணிக்கு வாங்க...தனுஷும் தெனாவெட்டும்... Posted: 30 Mar 2012 02:55 PM PDT ராத்திரி பதினொரு மணிக்கு வாங்க...தனுஷும் தெனாவெட்டும்... விருந்துக்கு அழைச்சிட்டு முதுகுக்கு பின்னாடி இலையை போட்டா எப்படியிருக்கும்? அப்படியொரு எரிச்சலில் இருக்கிறது பத்திரிகையாளர் வட்டாரம். இலை போட்ட மவராசன் நம்ம தனுஷ்தான்.இன்றைக்கு வெளியாகிறது 3 திரைப்படம். கொலவெறி பாட்டு வெளியான நாளில் இருந்தே இப்படத்திற்கும் பாட்டுக்கும் கஞ்சி தடவி போஸ்டர் ஒட்டாத குறையாக பப்ளிசிடி கொடுத்து வருகிறார்கள் பிரஸ் பிரதர்ஸ். நடுவில் ஒருமுறை அழைத்து தேங்ஸ்... என்றார் தனுஷ். நல்ல பழக்கம். அடிக்கடி ஃபாலோ பண்ணுங்க என்று ஆசிர்வதித்துவிட்டு வந்த பிரஸ்சுக்கு நேற்று வந்த தகவல் பொட்டில் விழுந்த ஷட்டில் பால்! ராத்திரி பதினொரு மணிக்கு படம் போட்ருக்கோம். வந்து பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க என்பதுதான் அது. (மிட் நைட்ல போடுறதுக்கு இது என்ன மிட் நைட் மசாலாங்களா?) பொதுவாக குடும்பம், குழந்தை குட்டின்னு அத்தனையையும் சமாளிக்க வேண்டிய அப்பன்காரன்களாகதான் இருக்கிறார்கள் பெரும்பாலான பிரஸ்காரர்கள். நேரம் காலம் தெரியாத பிழைப்பாச்சே. ஏதோ பேச்சுலர்களை பார்ட்டிக்கு அழைப்பதை போல பதினொரு மணிக்கு படம் பார்க்க அழைக்கும் தனுஷின் தெனாவட்டு சிம்புவின் தெனாவட்டுக்கு சற்றும் குறையாமலிருக்கிறதே என்று குமுறித் தள்ளுகிறார்கள். 'பார்த்தா பார்கட்டும், பார்க்காட்டி போகட்டும். இவங்களை நம்பியா நம்ம புகழ் இருக்கு' என்கிறாராம் தனுஷ். வரிக்குதிரைக்கே வெள்ளையடிக்கிற ஜாதிதான் பிரஸ். அது முகத்திலேயே வெள்ளை வெளேர்னு விபூதி பூசுறீங்களே தனுஷ்? Thanks to Tamilcinema |
வந்தாச்சு தங்கச்சி மின்னலடிக்கும் லட்சுமிராய் Posted: 30 Mar 2012 02:52 PM PDT வந்தாச்சு தங்கச்சி மின்னலடிக்கும் லட்சுமிராய் ஒரு கொடியில் இரு மலர்களாக திரிய ஆரம்பித்திருக்கிறார்கள் லட்சுமிராயும் அவரது அழகான தங்கச்சியும். (பேரு என்ன தாயீ...) எங்கு போனாலும் இவரையும் அழைத்துக் கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் லட்சுமி. அதுவும் கொஞ்ச நாட்களாகதான் இந்த பழக்கம்.எங்க வீட்லேயும்தான் குண்டு பல்ப் இருக்கு என்று காட்டுவதற்காகவே பளிச்சென்று சிலரை அழைத்து வருவார்கள் காலம் போன நடிகைகள் சிலர். பாப்பா நடிக்குமா என்று யாராவது கேட்டால், கையில் ஒரு டிஸ்போசபிள் கர்சீப்பை கொடுத்து 'துடைச்சுக்கோங்க' என்பார்கள். கூடவே, 'ம்ஹூம் அவ லண்டன்ல படிக்கிறா' என்று அடிஷனலாக ஒரு புஸ்வாணத்தை கொளுத்தி இன்னும் அழகு சேர்ப்பார்கள். கோடம்பாக்கத்தில் நாள்தோறும் நடக்கும் இந்த கூத்து லட்சுமிராய் விஷயத்திலும் நடப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் இந்த அழைப்புக்கெல்லாம் சின்னதாக ஒரு புன்னகையை மட்டும் சிந்த விடுகிறார் லட்சமிராய். ஒருவேளை மனசுல அப்படியும் ஒரு ஐடியா இருக்கோ என்னவோ? Thanks to Tamilcinema |
Sun Tv Nathaswaram This week promo video | Nadhaswaram 25seconds promo video Posted: 30 Mar 2012 02:50 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
எக்கச்சக்க எதிரிகள்... யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்? Posted: 30 Mar 2012 02:47 PM PDT எக்கச்சக்க எதிரிகள்... யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?- KN.RamaJeyam Murder Spl திருச்சி: திருச்சியில் நேற்று காலை கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு ஏகப்பட்ட எதிரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாராவதுதான் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.கே.என்.நேருவின் வலதுகரம் மற்றும் இடதுகரமாக விளங்கி வந்தவர் ராமஜெயம். மிகக் குறுகிய காலத்திலேயே கே.என்.நேருவும், ராமஜெயமும் திருச்சி மாவட்டத்தின் அசைக்க முடியாத பிரமுகர்களாக மாறியவர்கள். இருவரும் இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்டதால் திருச்சி திமுக இவர்கள் வசமானது. திருச்சி திமுகவில் மட்டுமின்றி, மாவட்டத்திலும் கூட இவர்களை மீறி எதுவும் நடக்காது என்ற நிலைதான் கடந்த திமுக ஆட்சியின்போது நிலவியது. குறிப்பாக ராமஜெயத்தைப் பிடித்தால் ஆகாத காரியம் இல்லை என்ற அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில் கொடி கட்டிப் பறந்துள்ளார் ராமஜெயம். நேருவுக்கு உற்ற துணையாக இருந்து அத்தனை காரியங்களையும் பார்த்து வந்தார் ராமஜெயம். தேர்தல்களின்போது இவர்தான் தி்ட்டமிடுதல், களப் பணியாற்றுதல், இன்ன பிற பணிகள் என அத்தனையையும் பார்ப்பார். குவாரி, ரியல் எஸ்டேட், பொறியியல் கல்லூரி என ஏகப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்தார் ராமஜெயம். அதேபோல கட்டப் பஞ்சாயத்தும் செய்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. தனது அண்ணனின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ராமஜெயம் பல கட்டப் பஞ்சாயத்துக்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கு எதிரிகளும் அதிகம் என்கிறார்கள். குறிப்பாக இவருக்குச் சொந்தமான என்ஜீனியரிங் கல்லூரிக்குத் தேவையான இடத்தை ஆக்கிரமித்து கட்டியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலம் தொடர்பாக மோதல்கள், வழக்குகள் உள்ளன. மேலும் கடந்த திமுக ஆட்சியின்போது ரியல் எஸ்டேட் அதிபரையும், அவரது தம்பியையும் காரில் வைத்து உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொலை செய்தனர் சிலர். இந்த கொலைக்குக் காரணமே ராமஜெயம்தான் என்று அப்போது பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் நடந்தது திமுக ஆட்சி என்பதால் ராமஜெயம் மீது காவல்துறை கரங்கள் படியவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ராமஜெயம் மீதும்,நேரு மீதும் ஏகப்பட்ட வழக்குகள் பாய்ந்தன பெரும்பாலும் நில மோசடி வழக்குகளே தொடரப்பட்டன. திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த டாக்டர் சீனிவாசன், திருச்சி கலைஞர் அறிவாலயத்தை கட்ட தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக கே.என்.நேரு, ராமஜெயம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் ராமஜெயம் மீது திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலை அபகரிக்க முயற்சித்ததாக ஒரு வழக்கும், திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஒரு வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. கே.கே.நகர் பகுதியை சேர்ந்த மொரைஸ் என்பவர் விமானநிலைய போலீசில் ஒரு புகார் கொடுத்து இருந்தார். அதில், தனது நிலத்தை ஏமாற்றி மோசடி செய்து, அங்குள்ள திருவள்ளூர் சிலையை சேதப்படுத்தியதாகவும் கே.என்.நேரு, அவருடைய தம்பி ராமஜெயம் உள்பட சிலர் மீது புகார் கொடுத்து இருந்தார். இந்த புகார்களின் அடிப்படையில் ராமஜெயம் மீது 4 வழக்குகளை போலீசார் பதிவு செய்து இருந்தனர். இந்த நில மோசடி புகார்களில் சிக்கிய ராமஜெயம் சில மாதங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு கோர்ட்டில் ஜாமீன் பெற்று தில்லைநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இப்படி ஏகப்பட்ட எதிரிகள், எதிர்ப்புகள், தொழில் போட்டிகள், வழக்குகள் புடை சூழ வலம் வந்த ராமஜெயத்தை முன்விரோதம் காரணமாகவே யாரோ சிலர் கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அதேசமயம், இது அரசியல் ரீதியான கொலையாகத் தெரியவில்லை என்றும் மக்களிடையே பேச்சு அடிபடுகிறது. எப்படி இருப்பினும், திருச்சி மாவட்டத்தில் மிக முக்கியப் பிரமுகரமாக வலம் வந்த ஒருவரான ராமஜெயம் கை, கால்களைக் கட்டி கொலை செய்யப்பட்டிருப்பது திருச்சி மக்களை அதிர வைத்துள்ளது. Thanks to OneIndia |
Posted: 30 Mar 2012 02:42 PM PDT Puthiya Thalaimurai 29-03-2012 | Free Download Puthiyathalaimurai magazine ebook 29th March 2012 latest Download Link |
Dinamalar E-paper 31-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 31st March 2012 Posted: 30 Mar 2012 02:23 PM PDT Dinamalar E-paper 31-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 31st March 2012 Download Link |
Posted: 30 Mar 2012 02:22 PM PDT Dinamalar Aanmeegamalar 31-03-2012 | Free Download Aanmeegamalar PDF today ebook | Aanmeega Malar 31st March 2012 Download Link |
அடுத்த 'ஷாக்'தமிழக மக்களுக்கு ... மின் கட்டணம் உயர்ந்தது! Posted: 30 Mar 2012 02:00 PM PDT அடுத்த 'ஷாக்'தமிழக மக்களுக்கு ... மின் கட்டணம் உயர்ந்தது! மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மின்வாரியம் செய்திருந்த மனு மீதான விசாரணையை முடித்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கட்டண உயர்வு குறித்த, "ஷாக்' அறிவிப்பை நேற்று வெளியிட்டது. மின்வெட்டு காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு 37 சதவீத கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தின் தேவையை உணர்ந்து அதற்கேற்ற மின் உற்பத்தி திட்டங்களை உரிய காலத்தில் ஆட்சியாளர்கள் துவங்காததால், கடும் மின்பற்றாக்குறை ஏற்பட்டது. கடந்த தி.மு.க., ஆட்சியில் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல், நகர்பகுதிகள், ஊரகப்பகுதிகளுக்கு மின்வாரியம் மின்கட்டுப்பாட்டு முறையை அறிவித்தது. இதன்படி, மணிக்கணக்கில் அங்கீகரிக்கப்பட்ட மின்வெட்டு அமலாக்கப்பட்டது.தொடரும் மின்வெட்டு:மின்வெட்டு நேரம் நீடித்ததால், குடியிருப்புகள் இருளில் மூழ்கின; தொழிற்சாலைகள் முடங்கிப் போயின; தொழிலாளர்கள் வேலையிழந்து, வாழ்வாதாரத்தைத் தொலைத்தனர். மின்வெட்டு காரணமாக, கடந்த ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி, ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது.தி.மு.க., ஆட்சி அகற்றப்பட்டு, தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பின்பும், மின்வெட்டு பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. மின்வெட்டிலிருந்து தப்பியிருந்த சென்னை நகரம் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் பல மணி நேரம் மின்வெட்டு அமலாகி வருகிறது.இந்நிலையில், மின்சார வாரியம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவல நிலையில் இருப்பதாகவும், மின்வாரியத்தை காக்க, மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மின்வாரியம் மனு:இதன் தொடர்ச்சியாக, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்கள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மின் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான மனுவை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அளித்தன.சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் பொதுமக்களிடம் ஆணையம் நேரடியாக கருத்துக்களைக் கேட்டது. மின்வெட்டால் இருளில் வாழும் நிலையில், மின் கட்டண உயர்வை அமல்படுத்துவதா என பொதுமக்களும், தொழில் அமைப்புகளும் கருத்துக் கேட்பு கூட்டங்களில் பொங்கி எழுந்தனர். பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில், மின்வாரியத்திடமும் விளக்கம் கேட்ட மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நேற்று மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.உயர்வு எவ்வளவு?புதிய கட்டணப்படி வீட்டு இணைப்பு வைத்துள்ள பொதுமக்கள் 0-100 யூனிட் வரை உபயோகிப்பவர்களிடம் யூனிட்டிற்கு ரூ. 1.10ம், 100 முதல் 200 யூனிட் வரை உபயோகிப்பவர்களிடம் ரூ. 1.80ம், 200 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகிப்பவர்களிடம் 3.50ம், 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களிடம் ரூ. 5.75ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.மின்உபயோகத்திற்கு ஏற்ப, அடுக்கு முறையில் (சிலாப்) கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டாலும், இந்த உயர்வு பழைய கட்டணத்தோடுஒப்பிடுகையில், 37 சதவீதம் அதிகரிக்கும். புதிய கட்டண உயர்வு, நாளை (ஏப்ரல் 1ம்தேதி) முதல் அமலுக்கு வருகிறது. கட்டண உயர்வு மூலமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கூடுதலாக 7,874 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். யாருக்கு பாதிப்பு:வீட்டு உபயோகப் பொருட்களான குளிர்சாதனப் பெட்டி, பேன், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவற்றை உபயோகிக்கும் நடுத்தர குடும்பத்தினரின் மின் உபயோகம், சர்வசாதாரணமாக 500 யூனிட்டை தாண்டும். தமிழக அரசே இத்தகைய வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கும் நிலையில், அவர்களையும் மின் கட்டண உயர்வு கடுமையாகப் பாதிக்கும். விவசாயத்திற்கு மின் கட்டணம் ஏழு மடங்கு கூடியுள்ளது. ஆனால், அவற்றை அரசே மானியமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.- Thanks to Dinamalar |
கொலவெறி '3' - சினிமா விமர்சனம் Posted: 30 Mar 2012 12:11 PM PDT கொலவெறி '3' - சினிமா விமர்சனம் நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதிஹாஸன், பிரபு, பானுப்ரியா, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமுஇசை: அனிருத் ஒளிப்பதிவு: வேல்ராஜ் எழுத்து - இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ் தயாரிப்பு: ஆர் கே புரொடக்ஷன்ஸ் & வுண்டர்பார் பிலிம்ஸ் பிஆர்ஓ: ரியாஸ் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் '3' என்னவாகப் போகிறதோ.. என்பதுதான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு. ஆனால் ஐஸ்வர்யா தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன படங்களின் சாயல் லேசாகத் தெரிந்தாலும் (செல்வராகவன் உதவியாளர் அல்லவா... இருக்கத்தானே செய்யும்!), இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சோதித்தாலும் படத்தைப் பார்க்க முடிகிறது! இன்னொன்று, அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய அமெச்சூர்த்தனம், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை 3-ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்! ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம். ப்ளஸ்டூ படிக்கும் தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் (ரெண்டு பேருமே மாணவ வேடம் அத்தனை கச்சிதம்). ரொம்ப அழகான காதல். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகுதான் தனுஷுக்கு சோதனை ஆரம்பமாகிறது. ஒரு ஆள் பல பரிமாணமெடுக்கும் மனநோய். இதனால் பல பிரச்சினைகள். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதிக் கதை. எல்லோரும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்ட கொலவெறி பாடலைத் தாண்டி இந்தப் படம் மனதில் நிற்பதற்குக் காரணம், இளமை துள்ளும் அந்த முதல் பாதி. ட்யூஷன் சென்டரில் ஸ்ருதியைக் கவர தனுஷ் செய்யும் முயற்சிகள் செம. தனுஷ் - ஸ்ருதி திருமணம் நடக்கும் இடம், அந்த திருமணத்தை எதிர்க்கும் ஸ்ருதி பெற்றோரிடம் தனுஷ் பேசும் வசனங்கள், அதற்கு ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் அடுத்த ரியாக்ஷன் போன்றவை சற்றும் எதிர்பாராத திருப்பக் காட்சிகள். அதென்னமோ தொடர்ந்து தனுஷு்ககு சைக்கோ கேரக்டர்களாக அமைகின்றன. இது எதேச்சையானதா திட்டமிட்டதா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிப்பில் தனுஷ் மிரட்டியிருக்கிறார். இதுவரை பார்க்காத வேறுமுகம் அது. அதிலும் மனைவிக்குத் தெரியாமல் தன் நோயை மறைக்க அவர் படும் பாடு... வாவ்! நடிப்பா இயக்கமா... யார் பெஸ்ட் பார்ப்போம் என கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கும் போல! ஏழாம் அறிவில் எல்கேஜி லெவலுக்கு இருந்த ஸ்ருதி ஹாஸன் நடிப்பு இந்தப் படத்தில் டிகிரி வாங்கிவிட்டது. இந்தப் பொண்ணு இந்த அளவு நடிக்குமா என கேட்க வைக்கிறது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் நாம் தலை கவிழ வேண்டியுள்ளது. அதைக் கொஞ்சம் கவனியுங்கள் அம்மணி! இயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா! சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர். இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து, மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி என்று புரியவில்லை (நண்பன் ஒருவனைத் தவிர). அடுத்தடுத்த படங்களில் மனநோயாளியாகவே தனுஷைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது! அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும்படி உள்ளது. உலகமகா கொலவெறிப் பாட்டை இப்படி சுமாராகத்தான் எடுத்திருப்பார்கள் என நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது. வேல்ராஜின் கேமரா அருமை. கோலா பாஸ்கர் கத்தரி இடைவேளைக்குப் பிறகு கோளாறாகிவிட்டது போலிருக்கிறது. ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்! Thanks to OneIndia |
Manvasanai 30-03-2012 | Raj Tv Mann vasanai Serial 30th March 2012 Posted: 30 Mar 2012 11:57 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Sindhu Bhairavi 30-03-2012 | Raj Tv Sindhu Bairavi Serial 30th March 2012 Posted: 30 Mar 2012 11:37 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Suvaiyo Suvai 30-03-2012 | Jaya Tv Suvaiyo Suvai 30th March 2012 Posted: 30 Mar 2012 11:06 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Yugiyudan Yugiyungal 30-03-2012 | Jaya tv Yugi yudan Yugiyungal 30th March 2012 Posted: 30 Mar 2012 11:05 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Rudram 30-03-2012 | Jaya Tv Rudram Maha Ragasiyam 30th March 2012 Posted: 30 Mar 2012 10:43 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Shanthi Nilayam 30-03-2012 | Jaya Tv Santhi Nilayam 30th March 2012 Posted: 30 Mar 2012 10:42 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Thamizhagathin Samayal Champion 30-03-2012 | Jaya tv Thamizhagathin Samayal Champion 30th March 2012 Posted: 30 Mar 2012 10:35 AM PDT Thamizhagathin Samayal Champion 30-03-2012 | Jaya tv Thamizhagathin Samayal Champion 30th March 2012 This posting includes an audio/video/photo media file: Download Now |
Nadanthathu Enna 30-03-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 30th March 2012 Posted: 30 Mar 2012 10:26 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Azhagi 30-03-2012 | Sun tv Alagi 30th March 2012 Posted: 30 Mar 2012 10:18 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Aanpavam 30-03-2012 | Sun Tv Aan pavam Serial 30th March 2012 Posted: 30 Mar 2012 10:07 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
kana kaanum kalangal 30-03-2012 | Vijay Tv kana kaanum kaalangal Kalluriyin kadhai 30th March 2012 Posted: 30 Mar 2012 10:02 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
SolvathuEllam Unmai - Z tamil Tv Show Real Story Solvathu Ellam Unmai 30-03-2012 Posted: 30 Mar 2012 09:29 AM PDT |
Chellame 30-03-2012 | Sun Tv Chellamey Serial 30th March 2012 Posted: 30 Mar 2012 11:01 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Thendral 30-03-2012 | Sun Tv Thendral Serial 30th March 2012 Posted: 30 Mar 2012 08:50 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |