TV SHOWS | MOVIES | TV SERIALS |
- கோச்சடையான் படப்பிடிப்பு எப்போது?-Techrenu
- இலங்கையை நொறுக்கி அள்ள அமெரிக்கா தீவிரம்- 100 பிரதிநிதிகளை களம் இறக்கியது!
- மலையாள கவர்ச்சி நடிகை ஸ்வேதாவுக்கு சிறந்த வில்லி விருது!-TechRenu
- வடிவேலு ரியல் எஸ்டேட் விவகாரம்: காமெடி ஆக்கினாரா விவேக்?
- Ananda Vikatan 21-03-2012 | Free Download Ananda Vikatan PDF This week | Ananda Vikatan 21st March 2012 ebook-TechRenu
- Cinekoothu 14-03-2012 | Free Download Cinekuthu PDF This week | cinikoothu 14th March 2012 ebook
- Athipookal 15-03-2012 | Sun Tv Athipookal Serial 15th March 2012
- Ilavarasi 15-03-2012 | Sun Tv Elavarasi Serial 15th March 2012
- Thiyagam 15-03-2012 | Sun Tv Thiyagam Serial 15th March 2012
- Mutharam 15-03-2012 | Sun Tv Muthaaram Serial 15th March 2012
- Vellai Thamarai 15-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 15th March 2012
- Uravuku kai koduppom 15-03-2012 | Kalaignar Tv Uravuku kai koduppom 15th March 2012
- Seetha 15-03-2012 | kalaignar Tv Seetha 15th March 2012
- Uravugal 15-03-2012 | Sun Tv Uravugal Serial 15th March 2012
- 12 வயது பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள்..வீடியோ வெளியிட்டது சேனல் 4!
- கர்ப்பகாலத்தில் உறவு நல்லதுதான் ! ஆனா எச்சரிக்கையாக இருங்க !!
- அடிக்கடி பாராசிட்டமால் சாப்பிடுறீங்களா? இதப்படிங்க!
- Kasturi 15-03-2012 | Sun Tv kasthuri Serial 15th March 2012
- Maruthani 15-03-2012 | Sun tv Marudhaani 15th March 2012
- Cinema Seithigal 15-03-2012 | Sun Tv Cinema News 15th March 2012
- Dailythanthi E-paper 15-03-2012 | Free Download Dinathanthi PDF today ePaper | Dinathanthi 15th March 2012
- Dinakaran E-paper 15-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 15th March 2012
- கோவை சாமியார் ஆசிரமத்தில் அமலா பால்!
- பெரிய நடிகர் தந்த தங்கப்புதையல்!
- Nakkeeran 14-03-2012 | Free Download Nakeeran latest PDF This week | Nakkheeeran 14th March 2012 ebook
கோச்சடையான் படப்பிடிப்பு எப்போது?-Techrenu Posted: 15 Mar 2012 04:42 AM PDT கோச்சடையான் படப்பிடிப்பு எப்போது? இதுகுறித்து நாம் விசாரித்தபோது, படத்தின் ஷூட்டிங் இன்று இல்லை என்றும், அடுத்த வாரத்தில் நடக்கும் என்றும் கோச்சடையான் படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் உறுதியான தேதி எதையும் தெரிவிக்கவில்லை. இன்னும் ஓரிரு நாளில் அதுகுறித்த அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றனர். கோச்சடையான் புதிய ஸ்டில்களும் விரைவில் வெளியாகும் என்றனர். படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் முழுமையடைந்துவிட்டதாகவும், பொருத்தமான நாளில் படப்பிடிப்பை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் ஜப்பானிய மொழியிலும் டப் செய்யப்படுவதாகவும், வழக்கத்துக்கு மாறாக தமிழ்ப் பதிப்பு வெளியாகும்போதே, ஜப்பானிய மொழியிலும் ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிகிறது. Thanks to OneIndia |
இலங்கையை நொறுக்கி அள்ள அமெரிக்கா தீவிரம்- 100 பிரதிநிதிகளை களம் இறக்கியது! Posted: 15 Mar 2012 04:39 AM PDT இலங்கையை நொறுக்கி அள்ள அமெரிக்கா தீவிரம்- 100 பிரதிநிதிகளை களம் இறக்கியது! மார்ச் 19 அல்லது 22ம் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது விவாதமும், தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இலங்கைக்கு எதிரான தனது ஆதரவு வேட்டையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைக் கவுன்சிலில் 22 நாடுகள் தங்களது ஆதரவை இதுவரை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அதைத் திரட்டும் முயற்சிக்காக 100 பிரதிநிதிகளை அமெரிக்கா இறக்கியுள்ளது. இவர்கள் பல்வேறு நாடுகளின் ஆதரவையும் திரட்டி வருகின்றனர். மேலும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள நாடுகளின் ஆதரவையும் உறுதி செய்து வருகின்றனர். இந்த பிரமாண்ட பிரதிநிதிகள் குழு ஒவ்வொரு நாட்டுப் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறதாம். இலங்கையில் அமெரிக்காவுக்கு எதிராக அரசுத் தரப்பே போராட்டங்களைத் தூண்டி வருவதாலும், அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் பேசி வருவதாலும், அமெரிக்கா கடும் கோபமடைந்திருப்பதாகவும், எனவே இலங்கையை மனித உரிமைகள் கவுன்சில் முன்பு தோலுரித்துக் காட்ட அது தீவிரமாகியுள்ளதாகவும் கருதப்படுகிறது. மொத்தத்தில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் முன்பு அமெரிக்காவின் தலைமையில் அதன் ஆதரவு நாடுகள், இலங்கையை மண்டியிட வைக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தமிழ் உலகம் காத்திருக்கிறது. Thanks to OneIndia |
மலையாள கவர்ச்சி நடிகை ஸ்வேதாவுக்கு சிறந்த வில்லி விருது!-TechRenu Posted: 15 Mar 2012 04:27 AM PDT மலையாள கவர்ச்சி நடிகை ஸ்வேதாவுக்கு சிறந்த வில்லி விருது!-TechRenu சந்தித்த வேளை படத்தில் அறிமுகமானவர் ஸ்வேதா மேனன் (சிலோனு சிங்கள பெண்ணே...). தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்தார். சமீபத்தில் வந்துள்ள அரவாணில் தாசி பாத்திரத்தில் நடித்தார். ஸ்வேதா மேனன் தெலுங்கில் ராஜான்னா என்ற படத்தில் நடித்திருந்தார். நாகார்ஜூனா, சினேகா போன்றோரும் இதில் நடித்துள்ளனர். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதில் நடித்ததற்காக ஸ்வேதா மேனனுக்கு சிறந்த எதிர் நாயகிக்கான விருது கிடைத்துள்ளது. ஸ்வேதாவின் கவர்ச்சியும் வில்லத்தனமும் சேர்ந்து மிரட்டலாக இருந்ததாக தெலுங்கு திரையுலகினர் பாராட்டி இந்த விருதை அளித்துள்ளனர். ஸ்வேதா மேனன் ரதி நிர்வேதம் மலையாள படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளார். இப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் ரிலீசாகிறது. இந்தப் படத்துக்கு சிறந்த கவர்ச்சி நடிகை விருது கொடுத்து விடுவார்களோ! Thanks to OneIndia |
வடிவேலு ரியல் எஸ்டேட் விவகாரம்: காமெடி ஆக்கினாரா விவேக்? Posted: 15 Mar 2012 04:25 AM PDT வடிவேலு ரியல் எஸ்டேட் விவகாரம்: காமெடி ஆக்கினாரா விவேக்? அவர் விவேக்.. படம் கந்தா! பாபு கே விஸ்வநாத் இயக்க, கரண் ஹீரோவாக நடித்துள்ள படம் இது. முன்பே ரிலீஸ் ஆக வேண்டியது. கொஞ்சம் டிலே ஆகி, அடுத்த வாரம் வருகிறது. விவேக்கை நேரில் பார்த்தபோது, 'வடிவேலுவுக்கும் சிங்கமுத்துக்கும் நடுவே எழுந்த ரியல் எஸ்டேட் பிரச்னையை கந்தா படத்தில் சீண்டியிருக்கிறீர்களாமே?' என்று கேட்டோம். அதற்கு அவர், "கந்தா படத்தில் ரியல் எஸ்டேட் பிரச்னையை வைத்து நான் ட்ராக் பண்ணியிருப்பது உண்மைதான். ஆனால், இது காமெடி ட்ராக் முடிந்து ஷூட்டிங் முடிந்த பிறகுதான் வடிவேலு பிரச்னை வெளிவந்தது. அதற்கும் இதற்கும் எந்த தொடர்பு இல்லை.. கந்தா பட்ஜெட் படம் என்பதாலும், தியேட்டர்கள் கிடைக்காததாலும் இந்தப் படம் இப்போது தான் வருகிறது. வடிவேலுவிடம் கூட இதுதொடர்பாக பேசிவிட்டேன்," என்றார். Thanks to OneIndia |
Posted: 15 Mar 2012 04:15 AM PDT Ananda Vikatan 21-03-2012 | Free Download Ananda Vikatan PDF This week | Ananda Vikatan 21st March 2012 ebook-TechRenu Download Links |
Cinekoothu 14-03-2012 | Free Download Cinekuthu PDF This week | cinikoothu 14th March 2012 ebook Posted: 15 Mar 2012 03:30 AM PDT Cinekoothu 14-03-2012 | Free Download Cinekuthu PDF This week | cinikoothu 14th March 2012 ebook-TechRenu Download Links |
Athipookal 15-03-2012 | Sun Tv Athipookal Serial 15th March 2012 Posted: 15 Mar 2012 03:08 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Ilavarasi 15-03-2012 | Sun Tv Elavarasi Serial 15th March 2012 Posted: 15 Mar 2012 01:32 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Thiyagam 15-03-2012 | Sun Tv Thiyagam Serial 15th March 2012 Posted: 15 Mar 2012 01:31 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Mutharam 15-03-2012 | Sun Tv Muthaaram Serial 15th March 2012 Posted: 15 Mar 2012 01:30 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Vellai Thamarai 15-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 15th March 2012 Posted: 15 Mar 2012 01:30 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Uravuku kai koduppom 15-03-2012 | Kalaignar Tv Uravuku kai koduppom 15th March 2012 Posted: 15 Mar 2012 01:29 AM PDT |
Seetha 15-03-2012 | kalaignar Tv Seetha 15th March 2012 Posted: 15 Mar 2012 01:28 AM PDT |
Uravugal 15-03-2012 | Sun Tv Uravugal Serial 15th March 2012 Posted: 14 Mar 2012 11:34 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
12 வயது பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள்..வீடியோ வெளியிட்டது சேனல் 4! Posted: 14 Mar 2012 11:34 PM PDT 12 வயது பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள்..வீடியோ வெளியிட்டது சேனல் 4! Sri Lanka's killing fields என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணப் படம் ஒன்றை சேனல் 4 வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், இலங்கையின் இனவெறிப் படுகொலைகள் குறித்து பல ஆதாரப்பூர்வமான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் தற்போது Sri Lanka's killing fields: War Crimes Unpunished என்ற பெயரில் இன்னொரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பயங்கர காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ ஆவணப் படத்தில் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டது, அப்பாவித் தமிழர்களை கொடூரமாக கொன்றது, புதுமாத்தளன் மருத்துவமனையை குண்டு வீசித் தகர்த்தது, போரற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சமடைந்த மக்களைக் கொன்று குவித்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள், உணவு தராமல் கொடூரமாக சாக விட்டது உள்ளிட்ட பல்வேறு போர் குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களை அடுக்கியுள்ளது சேனல் 4. ஆவணப்படத்தின் இறுதியில், இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேச சமுதாயம் என்ன தீர்வு காணப்போகிறது, என்ன தண்டனை தரப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. Thanks to OneIndia |
கர்ப்பகாலத்தில் உறவு நல்லதுதான் ! ஆனா எச்சரிக்கையாக இருங்க !! Posted: 14 Mar 2012 11:32 PM PDT கர்ப்பகாலத்தில் உறவு நல்லதுதான் ! ஆனா எச்சரிக்கையாக இருங்க !! மூன்று மாதங்களுக்கு வேண்டாம் ஒரு பெண் தான் தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்த உடன் மருத்துவர் கூறும் முதல் அறிவுரை முதல் மூன்று மாதங்களுக்கு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதுதான். ஏனெனில் முதல் மூன்று மாதம்தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகும். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகையால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். எச்சரிக்கை தேவை கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் குறைந்தே காணப்படும். முதல் மூன்று மாதத்திற்குப் பின் பெண் சம்மதித்தால் உறவில் ஈடுபடலாம் அதில் தவறு ஏதும் இல்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ள வேண்டும். முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. மிகவும் வசதியான நிலையில் பெண் இருக்கும் போது உடலுறவு கொள்ளல் வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்து விடும். அதனையும் கவனத்தில் கொள்வது பாதுகாப்பு அவசியம் கர்ப்பிணிப் பெண்கள் உடல் மற்றும் மன அளவில் தயாராக இருக்கும் வரை உறவில் ஈடுபடலாம். உறவிற்கு முன்பும், பின்பும் இருவருமே உறுப்புகளை சரியாக சுத்தம் செய்ய வேண்டும். கூடுமானவரை பாதுகாப்புடன் உறவு கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். அவசியம். கர்ப்பகால உறவு நல்லது கர்ப்பகாலத்தில் தம்பதியர் உறவில் ஈடுபடுவதில் ஒரு சில நன்மைகளும் இருக்கிறதாம். உறவினால் தாயின் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து அதனால் சேய்க்கு நன்மை ஏற்படுகிறதாம். கர்ப்பகாலத்தில் தாய்க்கு எழும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைகிறதாம். உறவின் மூலம் ஆணிடம் இருந்து வெளியாகும் prostaglandin ஹார்மோன் பெண் உறுப்பினை மென்மையாக்குகிறதாம். இதனால் எளிதில் பிரசவமாகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு முன்பு தம்பதியர் பாதுகாப்பாக உறவு கொள்வதனால் பெண்ணுக்கு ஏற்படும் ஆர்கஸம் பிரசவத்தை எளிதாக்குகிறது என்றும் கூறியுள்ளனர். மருத்துவரின் ஆலோசனை 8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது. எனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உறவில் ஈடுபடவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். Thanks to OneIndia |
அடிக்கடி பாராசிட்டமால் சாப்பிடுறீங்களா? இதப்படிங்க! Posted: 14 Mar 2012 11:30 PM PDT அடிக்கடி பாராசிட்டமால் சாப்பிடுறீங்களா? இதப்படிங்க! மனிதர்களின் உயிரிழப்பு குறித்து எடின்பர்க் நகர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி திடீர் உயிரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகள் உட்கொள்ளும் பாராசிட்டமல் அளவில் ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது. ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் அதனால் திடீரென இறந்தும் போய்விடுகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். Thanks to OneIndia |
Kasturi 15-03-2012 | Sun Tv kasthuri Serial 15th March 2012 Posted: 14 Mar 2012 11:28 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Maruthani 15-03-2012 | Sun tv Marudhaani 15th March 2012 Posted: 14 Mar 2012 10:28 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Cinema Seithigal 15-03-2012 | Sun Tv Cinema News 15th March 2012 Posted: 14 Mar 2012 10:26 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
Posted: 14 Mar 2012 04:38 PM PDT Dailythanthi E-paper 15-03-2012 | Free Download Dinathanthi PDF today ePaper | Dinathanthi 15th March 2012 Download Link |
Dinakaran E-paper 15-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 15th March 2012 Posted: 14 Mar 2012 05:06 PM PDT Dinakaran E-paper 15-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 15th March 2012 Download Link |
கோவை சாமியார் ஆசிரமத்தில் அமலா பால்! Posted: 14 Mar 2012 04:35 PM PDT அதென்னமோ... சாமியார்கள், ஆசிரமம் போன்றவற்றின் மீது நடிகைகளுக்கு அலாதி ஈடுபாடு. கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே ஏதாவதொரு காலகட்டத்தில் ஆசிரமத்துக்குப் போய் சாமியார்களுடன் போஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். சமீபத்தில் கோவையில் உள்ள ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் இருந்துவிட்டு வந்தாராம் அமலா பால். இந்த ஆசிரமத்துக்குப் போய் வந்த பிறகு அந்த அனுபவம் குறித்துதான் அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அமலா கூறுகையில், "ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் அங்கேயே செலவழித்தேன். அது ஒரு சுகமான அனுபவம். அந்த இடமும் சுற்றுப் புறமும் என் மனதை விட்டு நீங்க வில்லை. அந்த இடத்தை நான் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். இனி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசிரமத்துக்குப் போவேன்," என்றார். இதற்கு முன் ரீமா சென், ஸ்ரேயா, சோனியா அகர்வால் போன்ற நடிகைகள் இந்த ஆசிரமத்துக்கு வந்து 'ஸ்தலப் பெருமை' பாடியது நினைவிருக்கலாம். Thanks to OneIndia |
பெரிய நடிகர் தந்த தங்கப்புதையல்! Posted: 14 Mar 2012 04:16 PM PDT பெரிய நடிகர் தந்த தங்கப்புதையல்! விக்னேஷ் ஜோடியாக ஒரு படத்தில் கதா நாயகியாகத்தான் ஒப்பந்தமானார் அல்போன்சா. அந்தப் படத் துக்காக ஸ்விம் சூட் அணிய வைத்து போட்டோ ஷூட் எடுத்தார்கள். ஆனால் படம் தொடங்கப்படாமலேயே நின்றுபோனது. ஆனால் அல்போன்சாவின் நீச்சல் உடை படங்கள் சினிமா கம்பெனிகளில் வலம் வந்ததால் அல்போன்சாவின் கதாநாயகி கனவு தகர்ந்து போனது. ஆனாலும் கவர்ச்சி நாயகி அந்தஸ்து வலிய வந்து சிவப்புக் கம்பளம் விரித்தது. பொருளாதார ரீதியாக இது உதவிகரமாக இருக்கும் என்பதால் கவர்ச்சி நடிகையாக தன் சினிமா என்ட்ரியை ஆரம்பித்தார். கிட்டத்தட்ட "அல்போன்சா டான்ஸ் அவசியம்' என்கிற அளவுக்கு எல்லா படங்களிலும் அல்போன்சாவின் ஆட்டம் இடம் பிடித்தது. அல்போன்சாவின் இடுப்பழகிற்கு பெரிய பெரிய ஹீரோக்களும் கூட ரசிகர்களாக இருந்தார்கள். தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோ ஒருவர் அல்போன்சாவின் அழகில் சொக்கி... அவரை கொஞ்ச நாட்கள் தன்னுடனேயே வைத்துக்கொண்டார். கடைசியில் தங்கப்புதையலை பரிசாகக் கொடுத்து அல்போன்சாவை விடுவித்தார்... என்றும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. ஒருநாள்... வடபழநி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து "உடனே வாங்க' என அல்போன்சாவுக்கு அழைப்பு. ஒரு இளம்பெண் அழுதபடி உட்கார்ந்திருக்க... "இந்தப் பொண்ண தெரியுமா?' என அல்போன்சாவிடம் இன்ஸ்பெக்டர் கேட்டார். "இந்தப் பெண்ணை முன்னப்பின்ன பார்த்ததே இல்லையே' என அல்போன்சா சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணிடமே "நீ யாரும்மா?' என விசாரித்தார். அப்போதுதான் தன் தம்பி காதலித்து ஏமாற்றியதாக அந்தப் பெண் புகார் கொடுத்த விஷயம் அல்போன்சாவுக்குத் தெரியவர... தன் தம்பியை நாலு பளார் விட்டதோடு... அறிமுகமே இல்லாத அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்கப் போராடினார் அல்போன்சா. இப்படி... ஒரு பெண்ணின் காதலுக்காக போராடினார் அல்போன்சா. ஆனால் அல்போன்சாவின் காதல் அவரை துரத்தித் துரத்தி துயரப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது, அப்போது முதல் இப்போது வரை. மலையாளத்தில் சில ஏடாகூட படங்களில் நடித்திருக்கும் உஸ்மான் என்பவர் படப்பிடிப்பின் போது அல் போன்சாவை சந்தித்தார். அவர் விரித்த காதல் வலையில் அல்போன்சா விழுந்தார். "ஏவி.எம்.மில் ஷூட் டிங் இருக்கு' எனச் சொல்லிவிட்டு ஒருநாள் காதலருடன் ஊர் சுற்றக் கிளம்பிவிட்டார் அல்போன்சா. அவசரமாக மகளை சந்திக்க ஸ்டுடி யோவுக்கு வந்த அம்மா வுக்கு மகளின் காதல் விஷயம் எட் டவே...வீட்டில் பஞ்சாயத்து. காதலை கைவிடும்படி அம்மா அழுது பார்த்தார், அடித்து உதைத்துப் பார்த்தார். ஆனால் "சினிமா வேண்டாம், கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டி லாகப்போறேன்' எனச் சொன்னார் அல்போன்சா. அம்மா சம்மதிக்காததால் தூக்க மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஆஸ்பத் திரிக்குத் தூக்கிக்கொண்டு போய் காப்பாற்றிவிட்டார்கள். "அவன் ஏற்கனவே கல்யாண மானவன், குழந்தைகள் இருக்கு' என அம்மா சொன்னபோது அதிர்ச்சியாகி விட்டார் அல் போன்சா. விசாரித்துப் பார்த்ததில் "அது உண் மை' என தெரியவந் தாலும்கூட... காதலனை மறக்க மறுத்து விட்டார் அல்போன்சா. அம் மாவுக்குத் தெரியாமல் காதலருடன் ஓடிப்போக திட்டமிட்டார். அந்தச் சமயம் ஐதராபாத்தில் ஒரு தெலுங்குப் படப் பிடிப்பு. நாலாவது நாள் ஷூட்டிங் முடிஞ் சதும் காதலனுடன் கம்பி நீட்ட திட்டமிட்டிருந் தார். ஆனால் மகளின் திட் டத்தை மோப்பம் பிடித்தார் அம்மா. நாலாவது நாள் காலை. தன் அறைக்கதவு தட்டப்பட... திறந்தார் அல்போன்சா. அம்மா நின்றிருந்தார். ஷூட்டிங் முடிந்ததும் அம்மாவுட னேயே சென்னை திரும்பினார். அடுத்த நாள் மாலை பேப்பர்களில் அனல் பறந்தது அந்தச் செய்தி. "நடிகை தேவயானி வீட்டை விட்டு தப்பித்துப்போய் டைரக்டர் இராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார்.' இந்தச் செய்தி யைப் படித்துவிட்டு உற்சாகமாகச் சீட்டியடித் தார் அல்போன்சா. தேவயானி ஸ்டைலில் வீட் டிலிருந்து எஸ்கேப் ஆக திட்டம் போட்டனர். இரவில் துணிமணிகளையும், பத்து பவுன் நகையையும் எடுத்து வைத்துவிட்டு "எல்லோரும் அசரும் நேரமான' அதிகாலைக் காக காத்திருந்தார். அதன்படி பேக்கை மாட்டிக் கொண்டு வெளியே வந்தார். கேட்டில் பெரிய பூட்டு. திரும்ப வீட்டுக்குள் போய் சாவி எடுக்கலாமா? என அல்போன்சா நினைத்து ஒரு ஸ்டெப் வைக்க... "நில்லு...' என கத்திக் கொண்டு தம்பி ஓடிவர... அசட்டுத் துணிச்சலில் கேட்டில் ஏறிக் குதித்தார். தெருவில் ஓட... தம்பி துரத்த... தெருமுனையில் காதலர் காரை ஸ்டார்ட் செய்த நிலையில் வைத்திருக்க... ஓடிப்போய் காரில் ஏறி எஸ்கேப் ஆனார். ஆழ்வார்பேட்டையில் உள்ள காதலரின் நண்பர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அந்த வீட்டில் இருந்த லேண்ட்லைன் மூலம் தன் அம்மாவுக்கு போன் போட்ட அல்போன் சா, "ப்ளீஸ்மா... என்னைத் தேட வேணாம்' எனச் சொல்லி லைனை துண்டித்தார். "லூசு... ஒங்க வீட்டு போன்ல காலர் ஐ.டி. இருக்கு. இந்த நம்பரை கண்டுபுடிச்சு வந்துடமாட்டாங்களா?' என காதலர் கத்த... அவசர அவசரமாக ராயப்பேட்டையிலுள்ள நண்பர் வீட்டுக்கு மாறினார்கள். பணம் ஏற்பாடு செய்வதற்காக வெளியே போய்விட்டு வருவதாகச் சொல்லிக் கிளம்பிய காதலர், கொஞ்ச நேரத்தில் சோகமாக திரும்பி வந்தார். ""இப்ப சூழ்நிலை சரியில்ல. அதனால நீ ஒன்னோட வீட்டுக்குப் போயிடு. இன்னும் கொஞ்சநாள் கழிச்சு நாம சேர்ந்துக்கலாம்'' என்றார். அதிர்ச்சியில் உறைந்துபோனார் அல்போன்சா. காதலர் ஏன் அப்படிச் சொன்னார்னா...? (அடுத்த இதழில்) Thanks to Nakkheeran |
Posted: 15 Mar 2012 03:27 AM PDT Nakkeeran 14-03-2012 | Free Download Nakeeran latest PDF This week | Nakkheeeran 14th March 2012 ebook Download Links |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |