TV SHOWS | MOVIES | TV SERIALS |
- Nakeeran 17-03-2012 | Free Download Nakkeeran PDF This week | Nakkheeeran 17th March 2012 Ebook-TechRenu
- Junior Vikatan 21-03-2012 | Free Download Junior Vikatan PDF This week | Junior Vikatan 21st March 2012 ebook Latest
- சிங்கமுத்துவை சீண்டவில்லை விவேக் தரும் விளக்கம்
- கடத்தியவரும் கடத்தப்பட்டவரும்...வீரப்பன் கதை விசேஷம்
- கர்ணன் ரிலீஸ் கம்பீரமாச்சு தமிழ்சினிமா
- உலகத்திலேயே முதல் தடவையா...பெருமை கொள்ளும் 3டி படம்
- எம்.ஜி.ஆர்., கட்சி என்பதால் பொறுமையாக இருக்கிறேன்: விஜயகாந்த்
- கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்! - விமான நிலையத்தில் ரஜினி பேட்டி
- குண்டாக இருந்தால் சம்பளம் கட் ; இங்கிலாந்து அரசு அதிரடி
- சென்னை மாணவனை கடத்திய ஆசிரியை டெல்லியில் கைது
- Thendral This week Promo video
- இயக்குநர் அமீருக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை!
- குண்டு உடலை ஒல்லியாக்கும் நறுமணத்தயிர் – ஆய்வில் தகவல்
- 40 வயதிலும் நலமான தாம்பத்ய வாழ்க்கைக்கு...
- ராஜினாமா செய்ய நான் ரெடி - நீங்க ரெடியா? - விஜயகாந்துக்கு சரத்குமார் சவால் !
- Pasumai Vikatan 25-03-2012 | Free Download Pasumai Vikatan PDF This week | Pasumai Vikatan 25th March 2012 Ebook
- Doctor Vikatan 01-04-2012 | Free Download DR Vikatan PDF This week | DoctorVikatan 1st April 2012 ebook
- Union Budget 2012 Full Details in Tamil | Dinamalar Spl Edition Budget 2012 Issue 17-03-2012
- Puthiya Thalaimurai Kalvi 12-03-2012 | Free Puthiyathalaimurai kalvi magazine PDF ebook 12th March 2012 Download latest
- Puthiya Thalaimurai 15-03-2012 | Free Puthiyathalaimurai magazine ebook 15th March 2012 latest-TechRenu
- Dinamalar Aanmeegamalar 17-03-2012 | Free Download Aanmeegamalar PDF today ebook | Aanmeega Malar 17th March 2012
- Dinamalar E-paper 17-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 17th March 2012
- டூத் பேஸ்ட் to தங்கம் ! : த்ரிஷா
- சதத்தில் சதமடித்து சச்சின் சாதனை!
- Yugiyudan Yugiyungal 16-03-2012 | Jaya tv Yugi yudan Yugiyungal 16th March 2012
Posted: 17 Mar 2012 01:18 AM PDT Nakeeran 17-03-2012 | Free Download Nakkeeran PDF This week | Nakkheeeran 17th March 2012 Ebook-TechRenu Download Links |
Posted: 17 Mar 2012 01:18 AM PDT Junior Vikatan 21-03-2012 | Free Download Junior Vikatan PDF This week | Junior Vikatan 21st March 2012 ebook Latest Download Links First on Net |
சிங்கமுத்துவை சீண்டவில்லை விவேக் தரும் விளக்கம் Posted: 17 Mar 2012 01:17 AM PDT சிங்கமுத்துவை சீண்டவில்லை விவேக் தரும் விளக்கம் சுட சுட சூடத்தை விழுங்கிய மாதிரி, சத்தியத்தை முழுங்கிவிட்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் சிங்கமுத்துவும், வடிவேலுவும். என் நிலத்தை காணோம் என்று வடிவேலுவும், நான் ஏமாத்தல என்று சிங்கமுத்துவும் மாறி மாறி முழங்கிக் கொண்டிருக்க, நிஜம் என்ன என்பதே புரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழகம். வெந்த புண்ணில் வெங்காயத்தை பிழிந்த மாதிரி இந்த பிரச்சனையை அப்படியே கந்தா படத்தில் டீல் பண்ணியிருக்கிறாராம் விவேக்கும். இத்தனைக்கும் விவேக்கும் வடிவேலுவும் வாடா போடா பிரண்ட்ஸ். தொழில் விஷயத்தில் முண்டா தட்டிக் கொண்டாலும், பழகுகிற விஷயத்தில் வெள்ளை வெளேர்தான். அப்படியென்றால் வடிவேலு மனம் கோண நினைப்பாரா விவேக்? அதற்காகதான் இன்று ஒரு விளக்கம் அளித்திருக்கிறார் அவர். "கந்தா படத்தில் ரியல் எஸ்டேட் பிரச்னையை வைத்து நான் ட்ராக் பண்ணியிருப்பது உண்மைதான். ஆனால், இது காமெடி ட்ராக் முடிந்து ஷூட்டிங் முடிந்த பிறகுதான் வடிவேலு பிரச்னை வெளிவந்தது. அதற்கும் இதற்கும் எந்த தொடர்பு இல்லை.. கந்தா பட்ஜெட் படம் என்பதாலும், தியேட்டர்கள் கிடைக்காததாலும் இந்தப் படம் இப்போது தான் வருகிறது. வடிவேலுவிடம் கூட இதுதொடர்பாக பேசிவிட்டேன்," விவேக்கிக் நறுக் சுருக் விளக்கத்திற்கு பிறகாவது பொத்திக் கொள்ளுமா ஊர்? Thanks to tamilcinema |
கடத்தியவரும் கடத்தப்பட்டவரும்...வீரப்பன் கதை விசேஷம் Posted: 17 Mar 2012 01:15 AM PDT கடத்தியவரும் கடத்தப்பட்டவரும்...வீரப்பன் கதை விசேஷம் காட்டுராஜாவின் படமெடுக்க தன் வீட்டையே விற்றுவிட்டார் டைரக்டர் ஒருவர். குப்பி என்ற அற்புதமான படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர் ரமேஷின் அடுத்த படைப்புதான் வனயுத்தம். சந்தனக்கடத்தல் வீரப்பனின் கதையை உண்மைக்கு அருகில் நின்று படமெடுக்க ஆசைப் பட்டிருக்கிறார் ரமேஷ். அதற்கான களப்பலிதான் இந்த அழகான வீடு. மனைவியிடம், "இந்த வீட்டின் வாஸ்து சரியில்லை, வேறு வீடு வாங்கிக் கொள்ளலாம்' என்று கூறி விற்றதாக ரமேஷ் சொன்னபோது அந்த பிரஸ் மீட்டிலிருந்து வந்த ச்சொச்சொச்சோ சப்தம் மனதின் ஆழத்திலிருந்து வந்தவைதான். படத்தின் ஹீரோ அர்ஜுன். வீரப்பனை கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் கேரக்டரில் நடித்திருக்கிறாராம். இந்த படத்திற்காக சுவிட்சர்லாந்தில் ரெண்டு பாட்டு எடுத்தோம்னு சொல்ல முடியாது. எல்லா நாளும் ஜெயில், காடுன்னுதான் போச்சு என்றார். வீரப்பனை சுட்டுக் கொல்கிற காட்சியை எங்கு வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் எடுக்க வேண்டும் என்று சொல்லிட்டார் டைரக்டர். ரொம்ப சிரமப்பட்டுதான் எடுத்திருக்கோம் என்றார் அர்ஜுன். வீரப்பன் கதைதான் எல்லாருக்கும் தெரியுமே, இதில் புதுசா என்ன சொல்லப் போறோம் என்ற ஆக்ஷன் கிங்கின் சந்தேகம்தான் நமக்கும். அதற்கு பிரமாதமான ஒரு பதிலை சொன்னார் ஏ.எம்.ஆர்.ரமேஷ். வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாளிலிருந்தே தனது ஆராய்ச்சியை துவங்கிவிட்டாராம் அவர். ஒவ்வொரு ஜெயிலாக ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி வீரப்பன் விஷயத்தில் கைதானவர்களை பேட்டியெடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, போலீஸ் அதிகாரி விஜயகுமாரை சந்தித்து நிறைய தகவல்களை வாங்கினாராம். இரு தரப்பிலும் நடந்த உண்மை சம்பவங்களைதான் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். இது யாருக்கும் ஆதரவான படமும் இல்லை. எதிரான படமும் இல்லை. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு துளியும் இல்லை என்றார். இந்த படத்திற்காக நடந்த இன்னொரு அதிசயம் நிஜகமாகவே வியப்புக்குரியது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை கடத்தியவர்களில் ஒருவரையும், ராஜ்குமாருடன் சேர்ந்து கடத்தப்பட்ட இன்னொருவரையும் தேடிப்பிடித்து இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இருவரும் படப்பிடிப்பில் சந்தித்தபோது பழைய நினைவுகளில் மூழ்கி விட்டார்கள். அதை பார்க்கவே சுவாரஸ்யமாக இருந்தது என்றார் ரமேஷ். நாங்களும் ரொம்ப ஆர்வமா காத்திருக்கிறோம்.... Thanks to tamilcinema |
கர்ணன் ரிலீஸ் கம்பீரமாச்சு தமிழ்சினிமா Posted: 17 Mar 2012 01:14 AM PDT தமிழ்சினிமாவுக்காக தன்னையே தாரை வார்த்த கர்ணன்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் நடித்த கர்ணன் படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மறு வடிவமைத்திருக்கிறார் தயாரிப்பாளர் சாந்தி சொக்கலிங்கம். பிரசாத் லேப் நிர்வாகத்தின் இந்த அளப்பரிய முயற்சிக்கு மனதார ஒரு வணக்கம் போட்டோம். எத்தனையோ வருடங்களுக்கு முன் பார்த்த கர்ணனை புத்தம் புதிய பிரிண்ட்டாக பார்க்கும்போது நரம்பெல்லாம் சிலிர்த்துக் கொண்டது நமக்கு. அந்த நடை என்ன? சிங்கத்திற்கு நிகரான கர்ஜனையென்ன? இதழோரத்தில் வழியும் கம்பீர புன்னகை என்ன? அடேயப்பா... பிலிம் என்ற பெயரையே சிவாஜி என்று மாற்றினாலும் கூட பொருந்தும். நட்புக்கும் தாய்மைக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு அல்லாடும் சிவாஜியின் நடிப்பையும் வசனத்தையும் ஒருமுறையாவது கேட்காத தமிழனும் பார்க்காத தமிழனும் இனிமேலும் மெத்தனம் காட்ட வேண்டாம். இதோ இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது கர்ணன். அதுவும் தியேட்டர் ஸ்கிரீன் மழையில் நனைகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வரி வரிக்கோடுகள் இல்லை. சவுண்ட் பாக்சில் எலி புகுந்துவிட்டதோ என்கிற மாதிரி ஒலிப்பதிவு இல்லை. எல்லா தொழில் நுட்ப விஷயங்களும் அவ்வளவு துல்லியத்துடன். நான் எட்டாவது படிக்கும்போது இந்த ஷுட்டிங்கை பார்க்க போனேன். பெங்களுர் பேலசில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரே கூட்டம். என்னாலும் பிரபுவாலும் கூட உள்ளே போக முடியவில்லை. நாங்களும் கூட்டத்தோடு கூட்டமா நின்று வேடிக்கை பார்த்தோம். திடீர்னு அப்பா எங்களை பார்த்துவிட்டார். அப்படியே நடந்து எங்கள் பக்கம் வர வர அவ்வளவு கூட்டமும் ஆர்வத்தோடு கூச்சலிட்டதை இப்பவும் என்னால் மறக்க முடியலை. இது என்னோட பசங்க என்று அவ்வளவு கூட்டத்திற்கும் எங்களை அறிமுகம் செஞ்சு வச்சாரு அப்பா... கர்ணன் படப்பிடிப்பை நடிப்பு சிங்கம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் இப்படி நினைவுகூர்ந்தார். சிவாஜியை நாம் நினைவு கூர நூற்றுக்கணக்கான படங்கள் இருக்கின்றன. ஆனால் கர்ணன் எப்பவுமே தனிதான். தியேட்டருக்கு போங்க, திருப்தியா பாருங்க.. Thanks to Tamilcinema |
உலகத்திலேயே முதல் தடவையா...பெருமை கொள்ளும் 3டி படம் Posted: 17 Mar 2012 01:12 AM PDT உலகத்திலேயே முதல் தடவையா...பெருமை கொள்ளும் 3டி படம் ஒரு காலத்தில் தேறாது என்று கைவிடப்பட்ட 3டி படங்கள் இப்போது கோடம்பாக்கத்தில் மறுபடியும் கம்பீரமாக உலா வரத்தொடங்கிவிட்டன. (மை டியர் குட்டிசாத்தான் படத்திற்கு பிறகு ஏராளமான 3டி "வெட்டி சாத்தான்களை' பார்த்த ஏரியாதான் நம்ம கோடம்பாக்கம்) சமீபத்தில் வெளிவந்த அம்புலி 3டி திரைப்படம் தயாரிப்பாளருக்கு தெம்பூட்டியிருப்பதாக தகவல்கள் பரவி வருவது ஆரோக்கியமான விஷயம். இந்த சம்மருக்கு குழந்தைகளின் உலகத்தை அப்படியே லபக்கிக் கொள்ளும் திட்டத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கும் படம்தான் அதிசய உலகம் 3டி. விஞ்ஞானி லிவிங்ஸ்டன் (விஞ்ஞானின்னா குறுந்தாடியும் இருக்கணுமா?) காலசக்கரம் ஒன்றை கண்டு பிடிக்கிறார். கடந்த காலம், எதிர்காலம் இரண்டிலும் பயணிக்கும் வசதியுடைய அதில் இறந்த கால பட்டனை அமுக்கி விடுகின்றன குட்டீஸ். மூன்று பேரும் டைனோசரஸ் வாழ்ந்த காலத்திற்கு சென்றுவிட, காடும் அந்த விலங்குகளின் காட்டுக் கத்தலுமாக படம் நகரும் போல் தெரிகிறது. நமக்கு காட்டப்பட்ட அந்த கொஞ்ச நேர பகுதி நம்மையும் குழந்தையாக்கியதுதான் கிரேட். உலகத்திலேயே முதன்முறையாக டைனோசர்களை 3டி யில் காட்டியிருக்கிறோம் என்றார்கள் படக்குழுவினர். மொத்தம் 90 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த திரைப்படம் பஞ்சுமிட்டாய், பாப்கார்ன், பைவ் ஸ்டார் வரிசையில் குழந்தைகளின் தேசத்து கொண்டாட்டமாக இருக்கப் போவது மட்டும் நிச்சயம். Thanks to OneIndia |
எம்.ஜி.ஆர்., கட்சி என்பதால் பொறுமையாக இருக்கிறேன்: விஜயகாந்த் Posted: 17 Mar 2012 01:09 AM PDT எம்.ஜி.ஆர்., கட்சி என்பதால் பொறுமையாக இருக்கிறேன்: விஜயகாந்த் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்து, பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: அண்ணா நூலகத்திற்கு தீக்குளிப்பதாக கூறும் கருணாநிதி, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம். ஓட்டுக்காக இங்கு வந்து நடித்து சென்றுள்ளார். ஜெ., முன்னால், "ஆமாம்' போட என்னால் முடியாது. 32 அமைச்சர்கள் தேர்தல் பணிக்கு வந்த போதே, என் வேட்பாளர் ஜெயித்துவிட்டார். தொண்டர் யாரும் மனம் தளர வேண்டாம். அ.தி.மு.க., கூட்டணியில் எனக்கு விருப்பமில்லை. சேலத்தில் தொண்டர்கள் கூறியதால், ஒப்புக்கொண்டேன். நான் பேரம் பேசியதாக அவர்களால் கூறமுடியுமா? சட்டசபையில், 10 நாட்கள் தானே "சஸ்பென்ட்' செய்துள்ளார்கள். அதன் பின் நிச்சயம் வருவேன். நீங்கள் தவறு என நினைக்கும் அதே தவறை, மீண்டும் செய்வேன். என்னுடைய தலைவர் எம்.ஜி.ஆர்.,ன் கட்சி என்பதால், இத்தனை நாள் அமைதி காத்தேன்.என்னை சீண்டினால், பல உண்மைகளை வெளியிடுவேன். நானும் சினிமாவில் இருந்தவன் என்பதால். தேர்தல் பணிக்கு அனுப்பியது போல, கடலூர் தானே புயலுக்கு, அமைச்சர் படையை அனுப்பியிருக்கலாமே, என்றார். Thanks to OneIndia |
கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்! - விமான நிலையத்தில் ரஜினி பேட்டி Posted: 17 Mar 2012 01:06 AM PDT கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்! - விமான நிலையத்தில் ரஜினி பேட்டி சென்னை: கோச்சடையான் படத்தில் முன்னிலும் துடிப்பான ரஜினியை நீங்கள் பார்ப்பீர்கள். படம் தீபாவளிக்கு வெளியாகிறது, என பேட்டியளித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கோச்சடையான் படப்பிடிப்புக்காக இன்று அதிகாலை லண்டன் புறப்பட்ட ரஜினி, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி: லண்டனில் வரும் 19-ம் தேதி கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும். பாடல் காட்சிகள், டாக்கி போர்ஷன் என 40 சதவீதம் ஷூட்டிங் லண்டனில். பின்னர் தமிழகத்திலும் கேரளாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தப் படத்தில் இதற்கு முன்பு பார்க்காத புதிய, துடிப்பான ரஜினியை நீங்கள் பார்க்கலாம். படம் இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகிவிடும். தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார். ரஜினியுடன் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் வந்திருந்தார். அவரிடம் இந்தப் படத்துக்குப் பிறகு ராணாவா? என்று நிருபர்கள் கேட்டபோது, "ஆமாம், கோச்சடையானுக்குப் பிறகு ராணாதான். ஆனால் அதுபற்றி அந்த நேரத்தில்தான் அறிவிப்பு வரும்," என்றார் இயக்குநர் ரவிக்குமார். Thanks to OneIndia |
குண்டாக இருந்தால் சம்பளம் கட் ; இங்கிலாந்து அரசு அதிரடி Posted: 17 Mar 2012 01:03 AM PDT லண்டன் : இங்கிலாந்தில் போலீசார் உடல் ஆரோக்கியமாக, கட்டுக்கோப்பாக இல்லாவிட்டால் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ்துறைக்கு தேர்தெடுக்கும்போது ஆரோக்கியம், கட்டுமஸ்தான உடல் ஆகியவற்றை சரிபார்த்துதான் தேர்தெடுக்கின்றனர். ஆனால் வேலையில் சேர்ந்த உடன் பெரும்பாலான போலீசார் உடலை கவனிப்பதில்லை. நாளடைவில் தொப்பையும், குண்டு உடலுமாய் போலீசார் காட்சியளிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. 8 சதவிகித சம்பளம் கட் இங்கிலாந்து நாட்டில் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தினார்கள். இதில் 53 சதவீதம் போலீசார் உடை அதிகரித்து குண்டாக இருப்பதும், 100 பேரில் ஒருவர் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் இவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலீசாருக்கு உடல் பரிசோதனை நடத்தப்படும். அதில் 3 சோதனைக்குள் உடல் எடையை குறைக்க தவறினால் அவர்களது சம்பளத்தில் 8 சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உள்துறை செயலர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டிலும் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலாவது நம் ஊர் போலீஸ்துறை அதிகாரிகளின் தொப்பைகள் குறையும் என்று எதிர்பார்க்கலாம். தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? Thanks to OneIndia |
சென்னை மாணவனை கடத்திய ஆசிரியை டெல்லியில் கைது Posted: 17 Mar 2012 01:01 AM PDT சென்னை மாணவனை கடத்திய ஆசிரியை டெல்லியில் கைது சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் குமுது. இவருக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு ஒரு குழந்தை உள்ளது. இவர் யானைகவுனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியை ஆக பணிபுரிந்தார். அதே பள்ளியில் யானைகவுனி பி.கே.பி. லைனை சேர்ந்த சரவணக்குமார் என்பவரின் 17 வயது மகன் பிளஸ்-1 படித்து வந்தான். கடந்த 4ம் தேதி ஆசிரியை குமுது மாணவன் சரவணக்குமாருடன் ஊரை விட்டு தலைமறைவாகிவிட்டார். ஏற்கனவே சரவணக்குமாருக்கு ஆசிரியை குமுது பாலியல் தொல்லை தருவதாக யானைக்கவுனி போலீசில் சரவணக்குமாரின் தந்தை புகார் செய்து இருந்தார். பின்னர் அதை வாபஸ் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் ஆசிரியை குமுதுவையும் மாணவனையும் திடீரென காணவில்லை. தனது மனைவியை காணவில்லை என ஆசிரியை குமுதுவின் கணவர் எம்.கே.பி.நகர் போலீசில் புகார் செய்தார். அதேபோன்று, மாணவனின் தந்தை சரவணக்குமார் யானைகவுனி போலீசில் புகார் செய்திருந்தார். அதில், ஆசிரியை குமுது தனது மகனை கடத்தி சென்று விட்டதாக கூறி இருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதைதொடர்ந்து பூக்கடை போலீஸ் உதவி கமிஷனர் குமார் தலைமையில் யானைகவுனி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆசிரியை குமுது டெல்லியில் இருந்து சென்னையில் உள்ள தனது சகோதரியுடன் டெலிபோனில் பேசினார். அப்போது தனது செலவுக்கு பணம் இல்லை. தனது வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யும்படி கேட்டு கொண்டார். இதை அறிந்த போலீசார் உடனடியாக டெல்லி சென்றனர். அங்கு மாணவனுடன் பதுங்கி இருந்த ஆசிரியை குமுதுவை கைது செய்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பூக்கடை போலீஸ் நிலையத்தில் வைத்து ஆசிரியை குமுது மற்றும் மாணவரிடம் போலீஸ் உதவி கமிஷனர் குமார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Thanks to OneIndia |
Thendral This week Promo video Posted: 16 Mar 2012 11:15 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
இயக்குநர் அமீருக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை! Posted: 16 Mar 2012 11:05 PM PDT இயக்குநர் அமீருக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை! சங்கத்துக்கு எதிராக செயல்படுவதால் அமீர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர் சங்கம் போன்றவை அவருக்கு ஒத்துழைப்பு தராது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்துக்குப் பிறகு, இது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில், சில கசப்பான நிகழ்வுகளை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது, தயாரிப்பாளர்களை மிகுந்த அளவுக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அமீர் பிரச்சினை டைரக்டர் அமீருக்கும், ஸ்டூடியோ கிரீன் நிறுவன உரிமையாளர் ஞானவேல்ராஜாவுக்கும் இடையில் 2007-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 'பருத்தி வீரன்' திரைப்படம் சம்பந்தமாக பிரச்சினை எழுந்தது. அமீர் தனது சொந்த பிரச்சினைக்கு பெப்சி அமைப்பையும், சம்மேளனத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் ஒரு சிலரையும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி உள்ளார். ஞானவேல்ராஜா தயாரிக்க, கார்த்தி நடிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' என்ற புதிய படப்பிடிப்பு பல்லாவரம் அருகே நடைபெற்றபோது, திரைப்பட தொழிலாளர்கள் காலதாமதமாக சென்று தயாரிப்பாளருக்கு பெரும் பொருள் நஷ்டத்தை உண்டாக்கியுள்ளனர். ஆந்திராவில்... தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தொடர்ந்த இடைïறுகள் காரணமாக திரைப்படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாட்டில் நடத்த முடியாத ஞானவேல்ராஜா, பக்கத்து மாநிலமான ஆந்திராவில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அங்கு சரியாக உணவு வழங்கவில்லை என்ற 'உப்புக்கு சப்பில்லாத' காரணத்தைக் கூறி, 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி ராதாகிருஷ்ணன் தயாரிக்க, விதார்த் நடிக்கும் `காட்டுமல்லி' படப்பிடிப்பையும் நிறுத்தியுள்ளனர். தீர்மானங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டு வரும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் இந்த செயல்பாடுகள் குறித்து விவாதிக்க, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: * தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் அமீர் மீது சங்க விதிமுறைகளின்படி, நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கமும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் எந்த ஒத்துழைப்பும் தராது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்புகள் ரத்து * தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் போக்கினால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) எல்லா தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும். அன்று காலை 11 மணிக்கு அனைவரும் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. * தங்கள் செய்கைக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வருத்தம் தெரிவிக்கும் வரை, ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்துகொள்ளாது.'' இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Thanks to OneIndia |
குண்டு உடலை ஒல்லியாக்கும் நறுமணத்தயிர் – ஆய்வில் தகவல் Posted: 16 Mar 2012 11:03 PM PDT குண்டு உடலை ஒல்லியாக்கும் நறுமணத்தயிர் – ஆய்வில் தகவல் யோகர்ட் என்பது கொழுப்பு நீக்கப்பட்டு நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்ட தயிர். இதில் உடல் பருமனை குறைக்கும் பாக்டீரியாக்கள் உள்ளனவாம். பொதுவாக தயிரில் புரதச் சத்து, கால்சியம், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஆகியவை காணப்படுகின்றன. மாரடைப்பை தடுக்கும் தயிர் எளிதாக செரிக்கக் கூடிய உணவாகும். தையாமின் உயிர்ச்சத்து தயிரில் அதிகமாக உள்ளது. கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களை தயிர் அதிகமாக வழங்குவது மட்டுமின்றி, குடல்களிலிருந்து இரத்தத்தில் உணவை கிரகிக்கவும் உதவுகிறது. இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய் களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. நறுமணத் தயிரிலுள்ள நுண்ணுயிர்கள் அபாயகரமான நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வாய்ந் தவை. இதனால் வயிற்றுப் போக்கு மலச்சிக்கல் போன்றவைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். இரத்தத்தில் கொழுப்பு உயர்வதையும், அதனால் ஏற்படும் மாரடைப் பையும் தடுக்கின்றது. உடல் பருமன் குறையும் அமெரிக்காவின் மிசௌரியில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் உடல் பருமன் குறித்தும் அதை குறைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நொறுக்குத் தீனி அதிக அளவில் சாப்பிடுவதால், உடல் பருமனை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உருவாவது நிரூபிக்கப்பட்டது. உடல் பருமனுக்கு காரணமாக இந்த பாக்டீரிக்களை கொல்லும் சக்தி, யோகர்ட்டில் உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, உடல் பருமனை தவிர்க்க விரும்புகிறவர்கள் தினமும் யோகர்ட் சாப்பிடலாம் என்று ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் பருமன் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வு உடல் பருமனைக் கட்டுப்படுத்த உதவும் என ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உடல் பருமன் நிபுணர் ஜெப்ரே பிளையர் கூறியுள்ளார். உடல் பருமன் கட்டுப்படுத்தப்பட்டாலே இதயநோய்கள், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் எட்டிப்பார்க்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். Thanks to OneIndia |
40 வயதிலும் நலமான தாம்பத்ய வாழ்க்கைக்கு... Posted: 16 Mar 2012 11:01 PM PDT 40 வயதிலும் நலமான தாம்பத்ய வாழ்க்கைக்கு... மருந்தாகும் தாம்பத்யம் மெனோபாஸ் கட்டத்தை எட்டும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வு ஏற்படுவது இயற்கை. அந்த சோர்வை விரட்டுவதற்கு தாம்பத்ய உறவானது அருமருந்தாக பயன்படுகிறது என்பதே உண்மை. புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து நல்லபடியாக நாம் செயல்பட, நல்ல எழுச்சியுடன் மனம் திகழ செக்ஸ் அவசியம் என்பது மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து. மேலும் நம்மை என்றும் போல இளமையுடன் திகழவும் மெனோபாஸுக்குப் பிந்தைய செக்ஸ் உதவுகிறதாம். உணர்வுகள் அதிகரிக்கும் மெனோபாஸ் வந்தால் செக்ஸ் உணர்வுகள் வற்றிப் போய் விடும், முன்பு போல ஒத்துழைக்க முடியாது என்று பல பெண்கள் தவறாக கருதுகின்றனர். ஆனால் இது மூடநம்பிக்கைதான் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த சமயத்தில் டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாகவே இருக்குமாம். இது செக்ஸ் உணர்வுகளை அதிகப்படுத்த உதவுவது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலான பெண்கள் மன ரீதியாக துவண்டு போவதால் இதை சரிவர கவனிப்பதில்லை. எனவே உள்ளுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை முன்பு போலவே நீங்கள் வெளிப்படுத்தி அதற்கு சிறந்த வடிகால் தருவது அவசியம் என்கிறார்கள். வலியால் பிரச்சினை மெனோபாஸ் வந்த பெண்களுக்கு இனி எதற்கு தாம்பத்ய உறவு என்ற மன ரீதியான முடிவுக்கு வந்து விடுவதால், தங்களது கணவர்கள் அருகில் வந்தாலே இறுக்கமான நிலையுடன் ஒத்துழைக்கிறார்கள். அப்போதுதான் பிரச்சினை வரும். வலியுடன் கூடிய அனுபவமாக அது மாறி இருவருக்குமே மன வருத்தத்தையும், அதிருப்தியையும், எரிச்சலையும் கொடுக்கும் கசப்பான அனுபவமாக மாறிப் போய் விடுகிறது. மருத்துவர்கள் ஆலோசனை மெனோபாஸ் வந்த பெண்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதிய உடற்பயிற்சி, தியானம், தேவையான மருந்துகள் என திட்டமிட்டுக் கொண்டால் 40 வயதைத் தாண்டிய பிறகும் கூட நார்மலான செக்ஸ் வாழ்க்கையைத் தொடர முடியும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். எப்படிப்பட்ட உறவில் ஈடுபடுவது என்பது குறித்து மகப்பேறு மருத்துவர்களை அணுகி ஆலோசனைகளைப் பெற்று செக்ஸ் வாழ்க்கையை இனிமையாக தொடருவது நல்லது. தேவைப்பட்டால் மன நல நிபுணர்களின் ஆலோசனைகளையும் கூட பெறலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அப்புறம் என்ன செகன்ட் இன்னிங்ஸ்சை மகிழ்ச்சிகரமாக மாற்றுவது உங்கள் கைகளில்தான் உள்ளது என்பதை புரிந்து செயல்படுங்கள் Thanks to OneIndia |
ராஜினாமா செய்ய நான் ரெடி - நீங்க ரெடியா? - விஜயகாந்துக்கு சரத்குமார் சவால் ! Posted: 16 Mar 2012 10:59 PM PDT ராஜினாமா செய்ய நான் ரெடி - நீங்க ரெடியா? - விஜயகாந்துக்கு சரத்குமார் சவால் ! சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தலின் போது கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை அறிந்து, தரமான கல்வி, கல்விகேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை இளைஞர்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கத்தில் செயல்பட்டு வருகின்றார். இந்தியாவிற்கே பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. தமிழகத்தில் இன்றைக்கு நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம் திமுக அரசு தான். அவர்கள் ஆட்சியில் இருந்த போது புதிய மின்திட்டங்கள் எதுவும் உருவாக்கபடவில்லை மற்றும் பழைய மின்திட்டங்களை பாராமரிக்காமல் இருந்ததே காரணம். இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்தி பல புதிய மின்திட்டங்களை துவங்கியுள்ளார். அதனால் மின் தட்டுப்பாடு விரைவில் சரியாகும். அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று விட்டு, முதல்வர் ஜெயலலிதா குறை கூறும் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் ராஜினமா செய்ய வேண்டும். நானும் தென்காசியில் ராஜினமா செய்கிறேன். இருவரும் ரிஷிவந்தியத்தில் எதிர்த்து நின்று போட்டியிடுவோம். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். போட்டிக்கு நான் தயார்? விஜயகாந்த் தயாரா? என்றார். Thanks to OneIndia |
Posted: 16 Mar 2012 10:56 PM PDT Pasumai Vikatan 25-03-2012 | Free Download Pasumai Vikatan PDF This week | Pasumai Vikatan 25th March 2012 Ebook-TechRenu Download Links First on Net |
Posted: 16 Mar 2012 10:52 PM PDT Doctor Vikatan 01-04-2012 | Free Download DR Vikatan PDF This week | DoctorVikatan 1st April 2012 ebook - Good Quality Download Link |
Union Budget 2012 Full Details in Tamil | Dinamalar Spl Edition Budget 2012 Issue 17-03-2012 Posted: 16 Mar 2012 09:26 PM PDT Union Budget 2012 Full Details in Tamil | Dinamalar Spl Edition Budget 2012 Issue 17-03-2012 Download Link |
Posted: 16 Mar 2012 02:44 PM PDT Puthiya Thalaimurai Kalvi 12-03-2012 | Free Puthiyathalaimurai kalvi magazine PDF ebook 12th March 2012 Download latest Download Link |
Posted: 16 Mar 2012 02:43 PM PDT Puthiya Thalaimurai 15-03-2012 | Free Puthiyathalaimurai magazine ebook 15th March 2012 latest-TechRenu Download Link |
Posted: 16 Mar 2012 02:13 PM PDT Dinamalar Aanmeegamalar 17-03-2012 | Free Download Aanmeegamalar PDF today ebook | Aanmeega Malar 17th March 2012 Download Link |
Dinamalar E-paper 17-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 17th March 2012 Posted: 16 Mar 2012 02:12 PM PDT Dinamalar E-paper 17-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 17th March 2012 Download LInk |
டூத் பேஸ்ட் to தங்கம் ! : த்ரிஷா Posted: 16 Mar 2012 01:22 PM PDT டூத் பேஸ்ட் to தங்கம் ! : த்ரிஷா முன்னணி நடிகைகளாக இருக்கும் த்ரிஷா மற்றும் அனுஷ்கா இருவருக்கும் இடையே விளம்பரங்களில் நடிப்பதில் கடும் போட்டி நடைபெற்று வருகிறது. டூத் பேஸ்ட் ஒன்றின் பிராண்ட் அம்பாஸிடராக இருந்த த்ரிஷாவை நீக்கிவிட்டு தற்போது அனுஷ்காவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். தொடர்ந்து மூன்று வருடமாக பிராண்ட் அம்பாஸிடராக இருந்த த்ரிஷாவை அந்நிறுவனம் நீக்கி இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது அனுஷ்கா கவனம் செலுத்தி வருவதால், அவர் இவ்விளம்பரத்தில் நடித்தால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் விளம்பரத்தை வெளியிடலாம் என்று நினைக்கிறார்களாம். த்ரிஷாவுக்கு தமிழில் விஷாலுடன் 'சமரன்', ஜீவாவின் அடுத்த படம், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கு 'தம்மு' ஆகிய படங்கள் இப்போது கைவசம் உள்ளன. 'கொசுறு' கபாலி : தங்க நகைக்கான விளம்பரத் தூதராக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய அணுகியிருக்கிறது ஒரு நிறுவனம். Thanks to Vikatan |
சதத்தில் சதமடித்து சச்சின் சாதனை! Posted: 16 Mar 2012 01:18 PM PDT சதத்தில் சதமடித்து சச்சின் சாதனை! மிர்புரில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான 4-வது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், சச்சின் தனது 100வது சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட நாட்களாக 100-வது சதம் என்ற சாதனைக்காக காத்திருந்த நிலையில், அந்தக் கனவை சச்சின் நிறைவேற்றியிருக்கிறார். மொத்தம் 33 சர்வதேச இன்னிங்ஸ்கள் காத்திருப்புக்குப் பிறகு, 138 பந்துகளில் 100-வது சதத்தைத் தொட்டார், சச்சின். இது, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு 49-வது சதமாகும்; டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ள சதங்களின் எண்ணிக்கை 51. குறிப்பாக, சர்வதேச ஒருநாள் போட்டிகளில், வங்கதேசத்துக்கு எதிராக சச்சின் அடித்துள்ள கன்னி சதமும் இதுவே. கனவுகளைப் பின்தொடருங்கள்... அற்புதச் சாதனையை நிகழ்த்திவிட்டு பேசிய சச்சின், "நான் மைல்கல் பற்றி சிந்திக்கவில்லை; ஊடகங்கள்தான் பேசத் தொடங்கின. நான் செல்லும் இடமெல்லாம் கேட்கிறார்கள். ரெஸ்டாரன்ட், ரூம் சர்வீஸ்... என எல்லாருமே 100-வது சதத்தைப் பற்றியே பேசுகிறார்கள். யாருமே எனது 99-வது சதம் பற்றி பேசவில்லை. எத்தனைச் சதங்களை அடித்தோம் என்பது விஷயமே இல்லை; அணிக்காக ரன்களைக் குவிப்பதே முக்கியம்," என்றார். இந்தத் தருணத்தில் நீங்கள் சொல்லும் சேதி என்ன? என்ற கேட்டதற்கு, "கனவுகளைப் பின்தொடருங்கள். 22 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, 'இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வது,' என்ற என் கனவு நிறைவேறியது. கனவுகளைப் பின்தொடர்ந்து செயல்படுங்கள்... நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்," என்றார் சச்சின்! கிரிக்கெட் உலகில் பல சாதனைகள் படைத்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துவரும் சச்சின் சூடியிருக்கும் 'சதத்தில் சதம்' என்ற மற்றுமொரு மகுடத்துக்காக வாழ்த்துவோம் வாருங்கள்... Thanks to Vikatan |
Yugiyudan Yugiyungal 16-03-2012 | Jaya tv Yugi yudan Yugiyungal 16th March 2012 Posted: 16 Mar 2012 12:50 PM PDT |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |