TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


பாலச்சந்திரன் படுகொலை: வீடியோ ஆதரங்கள் வெளியானது !

Posted: 13 Mar 2012 04:47 AM PDT


பாலச்சந்திரன் படுகொலை: வீடியோ ஆதரங்கள் வெளியானது !
தேசிய தலைவர் பிரபாகரனின் கடைசி மகனை இலங்கை இராண்வம் கொலைசெய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சனல் 4 தொலைக்காட்ச்சி இதனை நாளை மறுதினம் வெளியிட உள்ள நிலையில், இது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 மெய்பாதுகாப்பாளர்களோடு சரணடைந்த பாலச்சந்திரனை இராணுவம் ஈவிரக்கம் இன்றி நெஞ்சில் 5 முறை சுட்டுள்ளது. இரத்தத்தை உறையவைக்கும் இக் காட்சிகளை சனல் 4 தொலைக்காட்ச்சி புதன்கிழமை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இந்தக் காணொளியைக் காணமுடியாத நிலை உள்ளது. காரணம் சனல் 4 தொலைக்காட்ச்சியின் இணையம் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.









This posting includes an audio/video/photo media file: Download Now

மல்லுக்கட்டிய சோனா!

Posted: 13 Mar 2012 04:42 AM PDT


எக்கச்சக்க துணி - கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிய சோனா!

சென்னை விமான நிலையத்தில் அளவுக்கு அதிகமான துணிகளைக் கொண்டு வந்த நடிகை சோனா, அதற்கான வரியைச் செலுத்தாமல் சுங்க அதிகாரிகளுடன் மல்லுக்கட்டினார். கடைசியில், பணத்தை பின்னர் செலுத்திவிட்டு துணிகளை எடுத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு கிளம்பினார்.


அடிக்கடி வெளிநாடு போய் புதுப்புது துணிகள், பேஷன் பொருட்களை வாங்கி வருபவர் சோனா. இது அவரது வியாபாரமும் கூட.


நேற்று நள்ளிரவு பாங்காங்கில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்தார் சோனா. இதில் வந்தவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது நடிகை சோனா கொண்டு வந்த உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை போட்டனர். அவர் ரூ.27 ஆயிரத்திற்கும் அதிகமான ரெடிமெட் துணிகளை கொண்டு வந்தது தெரிய வந்தது (தாய்லாந்தில் துணிகளின் விலை மிகக் குறைவு!).


"இந்த துணிகளுக்கு சுங்க தீர்வை கட்ட வேண்டும்'' என்று சுங்க இலாகா அதிகாரிகள் சோனாவிடம் கூறினார்கள்.


ஆனால் நடிகை சோனா சுங்க தீர்வை விதிக்கக் கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் நடிகை சோனா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பணம் செலுத்தவே மாட்டேன் என மல்லுக்கட்டிப் பார்த்தார் சோனா.


'சுங்க தீர்வை செலுத்தாமல் பொருட்களை வெளியே எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம்' என்று அதிகாரிகள் கறாராகக் கூறினார்கள்.


அதற்கு சோனா, 'என்னிடம் இப்போது பணம் இல்லை; சுங்க தீர்வையை நானோ என் உதவியாளரோ செலுத்தி பொருட்களை எடுத்து செல்கிறேன்' என்று கோபமாகக் கூறி விட்டுச் சென்றார்.
Thanks to OneIndia

ரீமா சென் கல்யாணத்தில் ஸ்ரேயா ஐட்டம் டான்ஸ்!

Posted: 13 Mar 2012 04:37 AM PDT


ரீமா சென் கல்யாணத்தில் ஸ்ரேயா ஐட்டம் டான்ஸ்!

ரீமா சென் கல்யாணத்தில் தமிழ் நடிகை ஸ்ரேயா நடனமாடினர். நடிகைகள் சோனியா அகர்வால் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.


கடந்த மார்ச் 11-ம் தேதி ரீமா சென்னுக்கும் - ஹோட்டல் அதிபர் ஷிவ் கரன் சிங்குக்கும் திருமணம் நடந்தது.


இதில் பங்கேற்க ரீமா சென்னின் நெருங்கிய தோழிகள் ஸ்ரேயா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர்.


வட இந்திய திருமணங்களில் ஆட்டம் பாட்டு என பொழுதுபோக்கு அமர்க்களப்படும். அதிலும் இது ஒரு பிரபல நடிகையின் திருமணம் என்பதால் பல கலைஞர்களும் வந்திருந்தனர்.


திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகை ஸ்ரேயா சரணின் நடனம் இடம்பெற்றது. சிக்னி சமேலி எனும் இந்திப் பாட்டுக்கு அவர் நடனம் ஆடினார். வந்திருந்த நடிகைகள், நடிகர்கள் உள்ளிட்டோர் அனைவரும் தங்கள் இடத்திலிருந்தபடியே உற்சாகத்துடன் ஆடினர்.


நடிகை சோனியா அகர்வாலும் உற்சாகமாக ஆடினார். இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், "ரீமா எனது பெஸ்ட் பிரண்ட். 10 வருடங்களாக நாங்கள் பழகி வருகிறோம். அவரது திருமணத்தில் இதுபோல ஒரு நடனத்தை பரிசாகத் தர விரும்பினேன்," என்றார்.
Thanks to OneIndia

உலகை உலுக்கப் போகும் பிரபாகரன் மகன் கொடூரக் கொலை வீடியோ நாளை வெளியீடு

Posted: 13 Mar 2012 04:33 AM PDT


உலகை உலுக்கப் போகும் பிரபாகரன் மகன் கொடூரக் கொலை வீடியோ நாளை வெளியீடு

சென்னை: உலகையே உலுக்கப் போகும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சிகளை லண்டனின் சேனல் 4 நிறுவனம் நாளை வெளியிடுகிறது. இதனால் உலகம் எங்கும் உள்ள அத்தனைத் தமிழர்களும் நாளைய இரவை நோக்கி பெரும் சோகத்துடன் காத்துள்ளனர்.


பல நாட்டு ராணுவ உதவியுடனும், ஏராளமான சதி வேலைகளின் உதவியுடனும், விடுதலைப் புலிகளின் நிழலைக் கூட நெருங்க முடியாத இலங்கை ராணுவம், கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் ஈழப் போரை கொடூரமாக முடித்தது. லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் இனத்தையே ஈழத்தில் சின்னாபின்னமாக்கி விட்டது.


ரத்த வெறி பிடித்த ஓநாய்களை விடவும் மோசமாக சிங்கள ராணுவத்தினர் நடந்து கொண்ட வெறிச்செயல், ஈனச் செயல், இனவெறி கொடூரம் குறித்த வீடியோ ஆதாரங்களை கடந்த ஆண்டு சேனல் 4 நிறுவனம் வெளியிட்டு உலகையே அதிர வைத்தது.


இந்த நிலையில் தற்போது இன்னொரு வீடியோ படத்தை அது உருவாக்கியுள்ளது. லண்டன் நேரப்படி நாளை இரவு 10.55 மணியளவில் ஒளிபரப்பவுள்ளது சேனல் 4 நிறுவனம்.


இந்த வீடியோ படத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்ட கொடூரக் காட்சி அடங்கியுள்ளது. மேலும் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்த காலம் மெக்காரே தெரிவித்துள்ளார்.


இந்த ஆவணப் படத்தை இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நாலரை மணியளவில் காணலாம்.


ஐ. நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகள் கொண்டு வந்துள்ளன. இந்தப் பின்னணியில் நாளை வெளியாகவுள்ள வீடியோ காட்சிகள் உலக சமுதாயத்தை வெகுண்டெழச் செய்து, இலங்கையை வீழத்தும் என்ற பெரும் நம்பிக்கையுடன் ஈழப் போரில் நீதி கேட்டும் நிற்கும் ஈழத் தமிழர்களும், உலகின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்களும் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.


குறிப்பாக நாளைய வீடியோவில் தங்களது தலைவர் பிரபாகரன் குறித்த செய்தி இருக்குமோ என்ற பதைபதைப்பும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் மனதில் மேலோங்கி நிற்கிறது.
Thanks to OneIndia

SunTv Headline News 13-03-2012 | Sun Tv headline News 13-03-12 | Sunnews 13th March 2012

Posted: 13 Mar 2012 03:30 AM PDT

SunTv Headline News 13-03-12 | Sun Tv headline News 13-03-12 | Sunnews 13th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Seetha 13-03-2012 | kalaignar Tv Seetha 13th March 2012

Posted: 13 Mar 2012 03:19 AM PDT


Seetha 13-03-12 | kalaignar Tv Seetha 13th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 13-03-2012 | Sun Tv Elavarasi Serial 13th March 2012

Posted: 13 Mar 2012 02:22 AM PDT


Ilavarasi 13-03-2012 | Sun Tv Elavarasi Serial 13th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 13-03-2012 | Sun Tv Thiyagam Serial 13th March 2012

Posted: 13 Mar 2012 02:21 AM PDT


Thiyagam 13-03-2012 | Sun Tv Thiyagam Serial 13th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 13-03-2012 | Sun Tv Muthaaram Serial 13th March 2012

Posted: 13 Mar 2012 02:20 AM PDT


Mutharam 13-03-12 | Sun Tv Muthaaram Serial 13th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 13-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 13th March 2012

Posted: 13 Mar 2012 02:19 AM PDT


Vellai Thamarai 13-03-12 | Sun Tv Vellai Thamarai Serial 13th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 13-03-2012 | Sun Tv Athipookal Serial 13th March 2012

Posted: 13 Mar 2012 02:16 AM PDT


Athipookal 13-03-12 | Sun Tv Athipookal Serial 13th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

திருமணமான ஒரு மணி நேரத்திலேயே கார் கேட்டு அடம்பிடித்த புது மனைவி: விவாகரத்து கொடுத்த கணவர்

Posted: 13 Mar 2012 12:01 AM PDT


திருமணமான ஒரு மணி நேரத்திலேயே கார் கேட்டு அடம்பிடித்த புது மனைவி: விவாகரத்து கொடுத்த கணவர்

கோலாலம்பூர்: மலேசியாவில் திருமணமான ஒரு மணி நேரத்திலேயே தனது காதல் மனைவியை ஒருவர் விவகாரத்து செய்ய விண்ணப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் லீ(23) என்பவர் தனது காதலி வாங்கை(27) சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பதிவு திருமணம் செய்து கொண்டார். அப்போது அங்கு ஒரு கார் டீலர் வந்துள்ளார். அவரைப் பார்த்த வாங் தனக்கு புதிய கார் ஒன்றை வாங்கித் தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு லீ மறுத்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த வாங் தனது கணவருடன் தகராறு செய்துள்ளார். அவர்களின் தகராறு முற்றியபோது புதிய கார் வாங்கித் தரவில்லை என்றால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன் என்று வாங் மிரட்டியுள்ளார். ஆனால் லீ அதற்கும் மசியவில்லை. இவ்வளவு பிடிவாதம் பிடிக்கும் மனைவி தேவையில்லை என்று நினைத்த அவர் வாங்குடன் விவாகரத்து பிரிவுக்கு சென்று அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தார். இதையடுத்து அவர்களுக்கு விரைவில் விவாகரத்து கிடைக்கவிருக்கின்றது.


கார் கேட்டு மனைவி அடம்பிடித்ததால் திருமணமான ஒரு மணி நேரத்திலேயே அவரை கணவர் விவகாரத்து செய்த சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thanks to OneIndia

என்னைப் பத்தி எழுதும்போது... - இது அசின் வேண்டுகோள்

Posted: 12 Mar 2012 11:56 PM PDT


என்னைப் பத்தி எழுதும்போது... - இது அசின் வேண்டுகோள்-TechRenu

ஏதோ ஒரு வகையில் தன்னைப் பற்றிய செய்தி சினிமாவுலகில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது ஒரு கலை. சினிமாவில் தானும் இருப்பதை உலகுக்கு உறுதிப்படுத்தும் ஒரு டெக்னிக் அது.


அசினுக்கு அந்தக் கலை நன்றாகவே கைவந்துள்ளது. எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் தன்னைப் பற்றிய செய்திகள் மீடியாவில் வரும்படி பார்த்துக் கொள்கிறார். 'செல்ஃப் பிஆர்!'


சமீபத்தில் ஹைதராபாத் வந்திருந்த அசின், அங்கு நிருபர்களைச் சந்தித்து, தான் ரொம்ப ரொம்ப பிஸியாக இருப்பதாகக் கூறினார். 


பெரும்பாலும் சினிமா பின்னணி உள்ளவர்கள்தான் இங்கு வெற்றி பெற முடியும். ஆனால் நான் எந்தப் பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தேன். போராடி ஜெயித்தேன் என்றார்.


தன் குடும்பத்தில் தான் ஒருத்தி மட்டுமே திரைத்துறையில் இருப்பதாகவும், வேறு யாரும் வரவில்லை என்றும் கூறினார். எதற்கு இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்றபோது, "எனது இந்தப் பின்னணி தெரியாமல் என்னைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இனி எழுதும்போது இதனை ஞாபகம் கொள்ளுங்கள்," என்றார்.
Thanks to OneIndia


ஜெயலலிதாவின் ஹெலிபேட் யாருடைய கணக்கில்?

Posted: 12 Mar 2012 11:54 PM PDT


ஜெயலலிதாவின் ஹெலிபேட் யாருடைய கணக்கில்?

சங்கரன்கோவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், பிரசாரத்தில் ஈடுபடும் கட்சிக்காரர்களும் செய்யும் செலவுகளை, கண்களில் விளக்கெண்ணை விட்டுக் கவனிப்பதுபோல தேர்தல் ஆணையகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஆளும்கட்சி அமைச்சர்களே பயந்து பயந்துதான் பாக்கெட்டில் கையை விடும் நிலையில் உள்ளனர்.


இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், "முதல்வர் ஜெயலலிதா வருகைக்காக சங்கரன்கோவிலில் அமைக்கப்படும் ஹெலிபேட், யாருடைய கணக்கில் வருகிறது?" என்று கேள்வியை எழுப்பி, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.


"ஒரு வேட்பாளருக்காக யார் பிரசாரம் செய்தாலும் அது வேட்பாளரது தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும் என்பது தேர்தல் விதி. அ.தி.மு.க. வேட்பாளருக்காக பிரசாரம் செய்வதற்காகதானே முதல்வர் ஜெயலலிதா இங்கு வருகிறார்? அதற்காகத்தானே இங்கு ரூ.5 லட்சம் செலவில் ஹெலிபேட் அமைக்கப்படுகிறது. இந்த செலவையும், அ.தி.மு.க. வேட்பாளரின் தேர்தல் கணக்கில் சேர்த்துக் கொள்வார்களா?" என்று விஜயகாந்த் பேசியிருக்கிறார்.


இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நாம் விசாரித்தோம். அவர்கள், "விஜயகாந்த் ஒரு புகாரை எழுத்து மூலம் கொடுத்தால், அது பற்றி நாமும் அ.தி.மு.க. வேட்பாளரிடம் விளக்கம் கேட்போம்" என்றனர்.


டில்லியில் உள்ள தேர்தல் ஆணைய உயர் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு விசாரித்தபோது, "தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிபேட் அமைக்கும் விவகாரம் சர்வசாதாரணமாக நடப்பதில்லை. எப்போதாவது ஒருமுறைதான் நடக்கும். அதனால், செட்-ரூல் என்று ஒன்றுமில்லை. புகார் வந்தால், நிச்சயம் விளக்கம் கேட்போம்.


முதல்வரது ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்காக ஹெலிபேட் அமைக்கப்படுகிறது என்றால், அது அரசின் சார்பில் அமைக்கப்படுகிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் என்று அரசு செலவில் ஹெலிபேட் அமைக்க முடியாது. ஆனால், முதல்வர் பணியை நிறைவேற்ற அந்த ஹெலிபேட் தேவை என்று வலுவான காரணங்கள் காண்பிக்கப்பட்டால், அரசு செலவில் அமைத்துக் கொள்ளலாம். அதுதான் சட்டம்" என்றார்.


தேர்தல் முடிந்தபின் யாராவது ஹெலி-பேட் விவகாரத்தை "தேர்தல் முறைகேடு" என்று நிச்சயம் புகார் கொடுப்பார்கள்.
Thanks to OneIndia

ராமதாஸ் காதும் காதும் வைத்தது போல வந்திறங்கிய விசாரணை!

Posted: 12 Mar 2012 11:50 PM PDT


ராமதாஸ் காதும் காதும் வைத்தது போல வந்திறங்கிய விசாரணை!

கொலை வழக்கில் சி.பி.ஐ.-யிடம் சிக்கியுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தன்மீது நடத்தப்படும் விசாரணை ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று சி.பி.ஐ. அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அவர்கள் சம்மதித்ததாகவும் தெரியவருகிறது.


இதையடுத்து, அரசு அலுவலக லீவு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் வைத்து ராமதாஸ் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.


தமாஷ் என்னவென்றால், ஒரு செட் அதிகாரிகள் ராமதாஸை ரகசியமாக விசாரிக்க பச்சைக்கொடி காட்டிவிட, மற்றொரு செட் அதிகாரிகள் "இவருக்கு மட்டும் என்ன சிறப்பு ட்ரீட்மென்ட் என்று எதிர்த்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் விசாரணை காதும் காதும் வைத்ததுபோல நடந்துவிடவே, விசாரணை விபரத்தை வெளியே கசிய விட்டுவிட்டார்கள்.


வழமையாக திண்டிவனத்தில் இருந்து சென்னை வரும்போதெல்லாம் கட்சிக்காரர்களின் 'வாழ்க' கோஷம் ஒலிக்க விஜயம் செய்யும் ராமதாஸ், கொலை கேஸ் விசாரணைக்காக முதல்நாளே ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் சென்னை வந்து, உறவினர் ஒருவரது இல்லத்தில் தங்கிக் கொண்டார். ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணைக்காக வாடகைக் காரில் வந்திறங்கினார்.


இதே வழக்கில் ராமதாஸின் மகனும், ரகசியமான முறையிலேயே விசாரிக்கப்பட்டார் என்று தெரியவருகிறது. கடந்த வியாழக்கிழமை சென்னையில் வைத்து அவரை விசாரித்திருக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.


சி.பி.ஐ. வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவல்களில் இருந்து, இந்த விசாரணையை தவிர்ப்பதற்கு ராமதாஸ் பெரிதும் முயற்சித்தார் என்று தெரியவருகிறது. டில்லியில் உள்ள தொடர்புகள் மூலம், சி.பி.ஐ. விசாரணைக்காக என்ன நடந்தது என்பதை எழுத்து மூலம் கொடுக்கலாமா என்ற முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால், சி.பி.ஐ. அதை நிராகரித்து விட்டது.


அதையடுத்து, சென்னையில் உள்ள ராமதாஸ் உறவினர் ஒருவரது அலுவலகம் ஒன்றில் வைத்து விசாரிக்கலாமே என்ற ரிக்வெஸ்ட் சி.பி.ஐ.-க்கு போனது. குறிப்பிட்ட அலுவலகம், சென்னையில் உள்ள உயர்ந்த காம்பிளக்ஸில் அமைந்திருந்தாலும், பின்புற பார்க்கிங் ஒன்றின் வழியாக மற்றையவர்களின் கண்களில் படாமல் மேலே செல்லக்கூடிய வசதி உள்ளது.


இந்தக் கோரிக்கைக்கும் சி.பி.ஐ., "நோ" சொல்லிவிட்டதில் டாக்டர் தரப்பு அப்செட்டில் இருந்தது.


இதற்கிடையே டாக்டர் தரப்பை மேலும் மிரள வைக்கும் காரியம் ஒன்றை சி.பி.ஐ. செய்தது. இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில் பெயர் குறிக்கப்படாத இருவரிடம் விசாரணை என்று போய் நின்றார்கள் அதிகாரிகள்.


இதில் முக்கிய விவகாரம் என்னவென்றால், சென்னையில் உள்ள உயர்ந்த காம்பிளக்ஸில் அலுவலகம் வைத்திருக்கும் உறவினரும், இந்த இருவரில் ஒருவர்! மற்றையவர், டாக்டரின் மனைவியின் உறவினர்.


சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த இருவரது கதவுகளையும் விசாரணைக்காக போய் தட்டியபோது, ஒருவர் பணிவாக விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். மற்றையவரோ, "சம்மன் இருக்கிறதா? எஃப்.ஐ.ஆரில் எனது பெயர் கிடையாதே" என்றெல்லாம் எகிறியிருக்கிறார்.


"அப்படியா சமாச்சாரம்" என்று கூறிய சி.பி.ஐ. அதிகாரிகள், அவருக்கு எதிராக தாம் வைத்திருக்கும் இரு ஆதாரங்களை காட்டிவிட்டு, "எஃப்.ஐ.ஆரில் என்ன, குற்றப் பத்திரிகையிலேயே உங்க பெயரை சேர்த்துக் கொள்ளலாமா? நீங்க ரெடின்னா நாங்களும் ரெடி" என்றிருக்கிறார்கள். அத்துடன் அந்த 'வீர' உறவினரும் சரண்டர்!


பெரிய ஐயாவை முதலில் சனிக்கிழமை விசாரணைக்குத்தான் அழைத்திருந்தார்கள். வேறு ஏதாவது முயற்சிகள் செய்து விசாரணையில் இருந்து தப்பும் நோக்கத்துடன், சனிக்கிழமை தமக்கு வேறு வேலைகள் உள்ளன என்று டாக்டர் கூறியிருக்கிறார். அதையடுத்தே, சி.பி.ஐ. கடுமையாகியது. "விசாரணைக்கு நிங்களாக வர மறுத்தால், நாங்கள் வந்து அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும்" என்றாராம் ஒரு அதிகாரி இறுக்கமான குரலில்.


"நாங்கள் வந்து அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும்" என்றால் என்ன அர்த்தம் என்பது பெரிய ஐயாவுக்கு தெரியாததா என்ன? ஞாயிற்றுக் கிழமை, நேரம் தவறாமல், வாடகைக் காரில் போய் இறங்கிவிட்டார்.


நாம் உரையாடிய சி.பி.ஐ. அதிகாரி, "அவர் முன்பு அரசியலில் செல்வாக்காக இருந்த நாட்களில் விசாரணையை எப்படியெல்லாம் தவிர்த்தார் என்பது எமது பைலில் இருக்கிறது. இப்போதும் பழைய கற்பனையில் இருந்திருப்பார் போலிருக்கிறது.


ஆனால், அந்த குட் ஓல்ட் டேஸ் எல்லாம் முடிந்து விட்டன என்பதை விசாரணையின்போது புரிந்து கொண்டிருப்பார்" என்றார்.


-விறுவிறுப்பு.காமுக்காக, ரிஷி
Thanks to Viruvirupu

மார்ச் 16-ம் தேதி முதல் சிவாஜி கணேசனின் கர்ணன்!

Posted: 12 Mar 2012 11:41 PM PDT


மார்ச் 16-ம் தேதி முதல் சிவாஜி கணேசனின் கர்ணன்!

சிவாஜி கணேசன் நடித்த மிகப் பிரம்மாண்டமான காவியப் படம் கர்ணன். 1964 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை 48 ஆண்டுகள் கழித்து இப்போது மறுவெளியீடு செய்கின்றனர் சிவாஜியின் ரசிகர்கள்.

டிஜிட்டல் திரைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தப் படம் மார்ச் 16ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு மார்ச் 14ம் தேதி துவங்குகிறது.

சென்னையில் சத்யம் சினிமாஸ், சாந்தி காம்ப்ளெக்ஸ், அபிராமி காம்ப்ளெக்ஸ், ஏவிஎம் ராஜேஸ்வரி, பாரதி போன்ற மிக முக்கிய திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. அதை ஒரு திருவிழா மாதிரி கொண்டாட சிவாஜியின் ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பி ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய இந்தப் படத்துக்கு, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர். மொத்தம் 16 பாடல்கள். அனைத்தையும் கவியரசு கண்ணதாசன் எழுதியுள்ளார்.

எஸ் ஏ அசோகன், என்டி ராமாராவ், தேவிகா, சாவித்ரி, முத்துராமன், எம் ஏ ராஜம்மா என பெரும் கலைஞர்கள் இந்தப் படத்தில் மகாபாரதப் பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.
Thanks to OneIndia

மாமியாருக்காக ஐநா பயணத்தை ரத்து செய்தார் குஷ்பு!-TechRenu

Posted: 12 Mar 2012 11:40 PM PDT


மாமியாருக்காக ஐநா பயணத்தை ரத்து செய்தார் குஷ்பு!-TechRenu

மாமியாருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு காரணைமாக தனது ஐ.நா பயணத்தை நடிகை குஷ்பு ரத்து செய்துள்ளார்.


நைரோபியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் உரையாற்ற நடிகை குஷ்புவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


மகளிர் முன்னேற்றம் என்ற தலைப்பில் அவர் உரையாற்றவிருந்தார்.


தற்போது தனது மாமியாருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஐ.நா பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக இந்த மாநாட்டுக்காகவே சங்கரன்கோயில் பிரச்சாரத்தை அவசர அவசரமாக முடித்து சென்னை திரும்பினார் குஷ்பு.


இதுகுறித்து குஷ்பு கூறுகையில், "என் குடும்ப சூழ்நிலை காரணமாக ஐ.நா. மாநாட்டுக்கு செல்ல முடியவில்லை. எனது மாமியாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வருகிற 15-ந் தேதி வாக்கில் இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.


கடந்த சனிக்கிழமை ஆஞ்சியோகிராம் நடந்துள்ளது. எனக்கு குடும்ப பொறுப்புகள்தான் முதலில். மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.


மாமியார் உடல் நலக்குறைவாக இருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் ஐ.நா. சபை மாநாட்டுக்கு செல்வது என்பது இயலாத காரியம். மாநாட்டில் பங்கேற்க இயலாத நிலை குறித்து ஏற்கனவே ஐ.நா. சபைக்கு கடிதம் அனுப்பி விட்டேன்.


ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க எதிர்காலத்தில் வாய்ப்பு கிட்டலாம். ஆனால் மாமியாருக்கு உதவியாக அவர் பக்கத்தில் இருப்பதுதான் இப்போது எனக்கு முக்கியம்'' என்று கூறியுள்ளார்.
Thanks to oneIndia

பெயரில் சுட்டியா இருந்தால் ஃபேஸ்புக் அக்கவுன்டு காலாவதியாகுமா?-TechRenu

Posted: 12 Mar 2012 11:36 PM PDT


பெயரில் சுட்டியா இருந்தால் ஃபேஸ்புக் அக்கவுன்டு காலாவதியாகுமா?

ஃபேஸ்புக் அக்கவுன்டில் உங்களின் பெயர் சுட்டியா என்று முடிந்தால், அந்த ஃபேஸ்புக் அக்கவுன்டு காலாவதி ஆகிவிடும் என்று ஒரு புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது அசாமில் சுட்டியா என்ற பெயர் ஒரு சமூகத்தினரின் பெயரை குறிக்கிறது.
ஆனால் இதே சுட்டியா என்ற வார்த்தை ஹி்ந்தி மொழியில் முட்டாள் என்பது போன்ற அர்த்தத்தை கொடுக்கும் வார்த்தையாக குறிக்கிறது. இதனால் சுட்டியா என்ற பெயரில் ஃபேஸ்புக் அக்கவுன்டு வைத்திருந்தால் அது தவறான வார்த்தையாக கருதப்பட்டு, அந்த அக்கவுன்டு காலாவதி செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனால் சுட்டியா என்ற பெயரை கொண்ட அசாமை சேர்ந்த சமூகத்தினர் ஃபேஸ்புக் சின்னத்தை எரித்து, ஃபேஸ்புக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
Thanks to OneIndia

எந்த கிரிக்கெட் வீரரையும் 'பிக்ஸ்' செய்ய உதவவில்லை- நடிகை நூபுர் மேத்தா

Posted: 12 Mar 2012 11:35 PM PDT


எந்த கிரிக்கெட் வீரரையும் 'பிக்ஸ்' செய்ய உதவவில்லை- நடிகை நூபுர் மேத்தா

மும்பை: இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. மேலும் எனது புகைப்படத்தை அனுமதியில்லாமல் பிரசுரித்துள்ள லண்டன் சண்டே டைம்ஸ் பத்திரிக்கை மீது வழக்குத் தொடரவுள்ளேன் என்று இந்தி நடிகை நூபுர் மேத்தா கூறியுள்ளார்.


சண்டே டைம்ஸ் இதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த புக்கிகள், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் பெருமளவில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போட்டிகளின் முடிவுகளை இவர்களே நிர்ணயிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு விலை வைத்துள்ளனர்.


மேலும் தங்களின் செயல்களுக்கு இந்தி திரைப்பட நடிகைகள் சிலரையும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் மூலம் வீரர்களை வளைத்து தங்களது வலையில் விழ வைக்கின்றனர்.


கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியைக் கூட பிக்ஸ் செய்துள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இதுகுறித்து ஐசிசியும் விசாரிக்கப் போவதாகவும் அது கூறியிருந்தது.


இந்த செய்திக்கட்டுரையில் நடிகை நூபுர் மேத்தாவின் கவர்ச்சிகரமான புகைப்படத்தையும் சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த சூதாட்டத்தில் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நூபுர் மறுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த செய்திக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள நடிகையின் படம் நான்தான். ஆனால் புகார்களுக்கும் எனக்கும் சற்றும் சம்பந்தமில்லை. அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள் இவை.


சண்டே டைம்ஸ் இதழ் எனது அனுமதி பெறாமலேயே எனது படத்தைப் பயன்படுத்தியுள்ளது. இதற்காக அந்த இதழ் மீது நான் வழக்குத் தொடரவுள்ளேன். இந்தப் புகைப்படத்தால் எனது மனது நிம்மதி கெட்டு விட்டது. பெரும் மன உளைச்சலும், அவப் பெயரும் ஏற்பட்டுள்ளது.


எனக்கு எந்த கிரிக்கெட் வீரரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. யாருடனும் நான் தொடர்பு வைத்துக் கொண்டதில்லை. அதேபோல எந்த புக்கியையும் எனக்குத் தெரியாது. எந்த கிரிக்கெட் போட்டியையும் நான் நேரில் பார்த்ததில்லை. எனது பெயரை எப்படி இதில் இழுத்து விட்டனர் என்பதே எனக்குப் புரியவில்லை என்றார் நூபுர்.


நூபுர் சன்னி தியோல் நடித்த ஜோ போலே சோ நிஹால் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் ஸ்டில்லைத்தான் சண்டே டைம்ஸ் முகம் மறைத்துப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


சண்டே டைம்ஸ் செய்திக்கு ஐசிசி மறுப்பு


இதற்கிடையே சண்டே டைம்ஸ் பத்திரிக்கைச் செய்திக்கு ஐசிசி மறுப்பு தெரிவித்துள்ளது. இது திசை திருப்பும் செய்தி என்று அது வர்ணித்துள்ளது. மேலும் இந்தியா-பாகிஸ்தான் அரை இறுதிப் போட்டி குறித்து ஐசிசி விசாரிக்கப் போவதாக வெளியான செய்தியையும் அது மறுத்துள்ளது.


இதுதொடர்பாக ஐசிசி கூறுகையில், இது மிகவும் தவறான செய்தி, திசை திருப்பும் செய்தி. அரை இறுதிப் போட்டி குறித்து விசாரிக்கு ஐசிசியிடம் எந்தவிதமான காரணமும், முகாந்திரமும் இல்லை. இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளிலேயே மிகச் சிறப்பான போட்டி அது. எனவே அதுகுறித்து சந்தேகம் எழத் தேவையே இல்லை என்று தெரிவித்துள்ளது.


ஐசிசியின் முன்னாள் ஊழல் தடுப்பு்ப பிரிவு தலைவர் ரவி சவானியும் இந்த செய்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அரை இறுதிப் போட்டி மிகவும் சுத்தமானது. அதுகுறித்து சந்தேகமே எழத் தேவையில்லை என்றார்.
Thanks to Oneindia

என்கௌன்டரில் தப்பிய வரிச்சியூர் செல்வம் கைது!

Posted: 12 Mar 2012 11:29 PM PDT


என்கௌன்டரில் தப்பிய வரிச்சியூர் செல்வம் கைது!

திண்டுக்கல் : ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய செயலாளர் கதிரவன் (தி.மு.க.,) கடத்தல் வழக்கில் தொடர்புடைய கேரள நபர், திண்டுக்கல்லில், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார்.மதுரை நடராஜ் நகரில் வசிப்பவர் கதிரவன். ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் தி.மு.க., செயலாளரான இவரை, பிப்.,12ல் விரகனூர் அருகே, "சி.பி.ஐ., அதிகாரிகள்' என்றுக்கூறி, சிலர் அவரை கடத்தி, ரூ.2 கோடி கேட்டனர். அவர்களிடமிருந்து தப்பிய கதிரவன், பிப்.,15ல், மதுரை எஸ்.பி., ஆஸ்ராகர்க்கிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, ரித்தீஷ் எம்.பி.,யிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், ரவுடி வரிச்சியூர் செல்வம் தலைமையிலான கும்பல், கதிரவனை கடத்தியதாகவும், திண்டுக்கல்லில் பதுங்கியிருப்பதாகவும், மதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று இரவு 7.15 மணிக்கு, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே சுகன்யா லாட்ஜில், இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், சேதுமணி மாதவன் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர்.கேரள முகவரியில், இரு அறைகளில் தங்கியிருந்த ஐந்து நபர்கள் குறித்து விசாரித்தனர். இதில் ஒருவன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனை தாக்கி விட்டு தப்ப முயன்றான். அந்த நபரை போலீசார் சுட்டனர். இடது தோள்பட்டையில் குண்டு பாய்ந்து அவன் பலியானான். மற்றொருவன் தப்பி ஓடினான். அறையில் பதுங்கியிருந்த ரவுடி வரிச்சியூர் செல்வம், கேரளாவை சேர்ந்த பிஜூ உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
Thanks to Dinamalar

படம் ஓடாததால் ரஜினியைக் காப்பியடித்து பெயர் வைத்துக் கொண்ட விஜயகாந்த்-ராமராஜன்

Posted: 12 Mar 2012 11:24 PM PDT


படம் ஓடாததால் ரஜினியைக் காப்பியடித்து பெயர் வைத்துக் கொண்ட விஜயகாந்த்-ராமராஜன்

சங்கரன்கோவில்: ஆரம்பத்தில் விஜயகாந்த் நடித்த ஒரு படமும் ஓடவில்லை. இதனால் தனது விஜயராஜ் என்ற பெயரில், ரஜினிகாந்த்தின் பெயரில் இருந்த காந்த்தை எடுத்து ஒட்டிக் கொண்டு விஜயகாந்த் ஆகி விட்டார். அவர் ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்தவர். அவருக்கு மக்கள் பாடம் கற்றுத் தர வேண்டும் என்று நடிகர் ராமராஜன் பேசினார்.


சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய ராமராஜன்,


ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர்தான், விஜயகாந்த். அவரது ஒரிஜனல் பெயர் விஜயராஜ். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரில் இருந்த `காந்த்' என்ற சொல்லை எடுத்து `விஜயகாந்த்' என்று பெயரை மாற்றிக் கொண்டவர், அவர்.


விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் முதல்வர் ஜெயலலிதாதான். விஜயகாந்த் நன்றி மறந்துவிட்டார். தன்னை பதவியில் அமர்த்திய அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்துவிட்டார். மறைந்த அமைச்சர் சொ.கருப்பசாமி மேடைகளில் எம்.ஜி.ஆர். பாடல்கள் பாடினார். அதை கேட்டு ரசிப்பவர் நம்முடைய முதல்வர்.


சங்கரன்கோவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஒரு பெண்ணை வேட்பாளராக அறிவித்தார். பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். ஏழை மக்களின் வருமானம் உயர ஆடு, மாடுகளை வழங்கி வருகிறார்.


தி.மு.க. ஆட்சியின் போது சட்டம்- ஒழுங்கு மோசமாக இருந்தது. இப்போது சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. முதல்- அமைச்சரின் சீரிய திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்றார் அவர்.
Thanks to OneIndia

Uravugal 13-03-2012 | Sun Tv Uravugal Serial 13th March 2012-TechRenu

Posted: 12 Mar 2012 11:20 PM PDT


Uravugal 13-03-12 | Sun Tv Uravugal Serial 13th March 2012-TechRenu

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 13-03-2012 | Sun Tv kasthuri Serial 13th March 2012-TechRenu

Posted: 12 Mar 2012 11:18 PM PDT


Kasturi 13-03-12 | Sun Tv kasthuri Serial 13th March 2012-TechRenu

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 13-03-2012 | Sun tv Marudhaani 13th March 2012

Posted: 12 Mar 2012 10:24 PM PDT


Maruthani 13-03-12 | Sun tv Marudhaani 13th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Dinakaran E-paper 13-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 13th March 2012

Posted: 12 Mar 2012 07:16 PM PDT


Dinakaran E-paper 13-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 13th March 2012
Download Link