TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


Makkal Arangam 11-03-2012 | Jaya Tv Makkal Arangam 11th March 2012-TechRenu

Posted: 11 Mar 2012 12:03 AM PST


Makkal Arangam 11-03-2012 | Jaya Tv Makkal Arangam 11th March 2012-TechRenu

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு சில மணி நேரம் மட்டுமே பிரசாரம் செய்த பண்ருட்டியார்!

Posted: 11 Mar 2012 12:00 AM PST


ஒரு சில மணி நேரம் மட்டுமே பிரசாரம் செய்த பண்ருட்டியார்!

சங்கரன்கோவில்: தேமுதிகவில் பண்ருட்டி ராமச்சந்திரனைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்து வருகின்றன. சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரக் களத்தில் ஒரே ஒரு கூட்டத்தில் மட்டும் கலந்து கொண்டு சில மணி நேரம் மட்டுமே பேசினார் பண்ருட்டி ராமச்சந்திரன்.


விஜயகாந்த்துக்கு அரசியல் கற்றுக் கொடுத்து, அவருக்கு சரியான வழிகாட்டியாக திகழ்ந்து, எந்த முடிவை எப்போது, எப்படி எடுக்க வேண்டும் என்பதை பண்ருட்டியார்தான் ஆரம்பத்திலிருந்து சரியாக சொல்லிக் கொடுத்து வந்தார் என்று கூறப்படுவதுண்டு. அதனால்தான் கட்சியில் அவருக்கு அவைத் தலைவர் பொறுப்பைக் கொடுத்து நல்ல மரியாதையுடன் வைத்திருந்தார் விஜயகாந்த்.


இருப்பினும் அதிமுகவுடன் முதல் முறையாக கூட்டணி சேர்ந்து, அதன் பின்னர் ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்டதால் பெரும் அப்செட் ஆகி விட்டார் விஜயகாந்த். இதற்காக பண்ருட்டியாரிடம் அவர் கடுமையாக கோபித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. 


அன்று முதல் பண்ருட்டியாரிடம் முன்பு போல விஜயகாந்த் பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தேமுதிக நிர்வாகிகளும் கூட பண்ருட்டியாரிடம் முன்பு போல நெருக்கம் காட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இடையில் பண்ருட்டியார் அதிமுகவுக்குப் போகப் போவதாகவும் கூட வதந்திகள் வந்தன.


இருப்பினும் எப்போதும் போல பண்ருட்டியார் செயல்பட்டு வருகிறார். இருப்பினும் இத்தனை கால அரசியல் அனுபவத்தால், தனக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே அவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயகாந்த்திடமே அவர் தெளிவாக சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.


இதனால் சங்கரன்கோவில் பிரசாரத்திற்குக் கூட ஆரம்பத்தில் பண்ருட்டியாரை விஜயகாந்த் அனுப்பவில்லை. இதனால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்று அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டதால் ஒரே ஒரு கூட்டம் அவர் பேச கட்சி மேலிடம் அனுமதித்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று சங்கரன்கோவிலில் நடந்த ஒரு கூட்டத்தில் மட்டும் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.


அரசியல் நாகரீகத்துடன் அவரது பேச்சு இருந்தது. யாரையும் தேவையில்லாமல் திட்டவில்லை, யாரையும் தேவையில்லாமல் விமர்சிக்கவில்லை. அநாகரீகமாகப் பேசவில்லை. மாறாக எது நடந்தது, என்ன நடந்தது, என்ன நடக்க வேண்டும் என்பது பற்றிப் பேசினார் பண்ருட்டியார்.


அவர் பேசுகையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திராணி இருந்தால் போட்டியிடுங்கள் என்றனர். அதனால் போட்டியிடுகிறோம். நாம் உண்மையை சொன்னது, அவர்களுக்குப் பிடிக்காமல் போய் விட்டது. நெருப்போடு நெருப்பு மோதி பெரும் நெருப்பாகி விட்டது. 


அவர்கள் திராணி இருக்கிறதா என்று கேட்டது நம்மிடம்தான். ஆனால் தேவையில்லாமல் பிறரும் -அதாவது மதிமுக, திமுகவை குறிப்பிட்டு - போட்டியிடுகின்றனர். 


கடந்த, 20 ஆண்டுகளில், சரியான மின் திட்டம் இல்லாததே, தற்போதைய மின்வெட்டுக்கு காரணம். கடந்த ஆட்சியில், மின் திட்டங்களை கருணாநிதி செய்திருந்தால், இந்த பற்றாக்குறை இருந்திருக்காது. இந்தியா முழுவதும் மின்சாரம் இல்லாத போது, தமிழகத்திற்கு மட்டும், மத்திய அரசு எப்படி தர முடியும். 


சட்டசபையில் நாங்கள், 29 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளோம், அதை 30 ஆக மாற்றுங்கள். அதற்காக சங்கரன்கோவிலில் தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என்று பேசினார் பண்ருட்டியார்.
Thanks to OneIndia

அடிக்கடி அவுட்டிங் போங்க அன்பு அதிகரிக்கும்– ஆய்வில் தகவல்-TechRenu

Posted: 10 Mar 2012 11:58 PM PST


அடிக்கடி அவுட்டிங் போங்க அன்பு அதிகரிக்கும்– ஆய்வில் தகவல்

'ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்பது பழமொழி மட்டுமல்ல இன்றைக்கு பலரது வாழ்க்கையில் அது உண்மையாகி வருகிறது. திருமணமான புதிதில் உற்சாகமாக வாழ்க்கையை தொடங்குபவர்கள் நாளடைவில் குழந்தை, பணிச்சுமை என பல்வேறுவகையான அழுத்தங்களில் சிக்கி சந்தோசமான இல்லற வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். 


எனவே தம்பதியரின் வாழ்க்கையில் தடங்கல் இல்லாத சந்தோசம் நீடிக்க அடிக்கடி அவுட்டிங் போக வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றும் இதை உறுதிபடுத்தியுள்ளது. திருமணமாகி நீண்ட நாட்கள் ஆன பின்னரும் தம்பதியரிடையே அன்பு நீடிக்க வேண்டுமா? அடிக்கடி சினிமா, பீச், பார்க் என்று அவுட்டிங் போங்க உங்க தாம்பத்ய வாழ்க்கை உற்சாகமாகும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.


தம்பதியரிடையே உள்ள உறவு பரிமாற்றம், குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து சமீபத்தில் அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


உற்சாக காதல் உணர்வு


திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்த பின்னும் உற்சாகத்துடன் உறவில் ஈடுபடுவதாக பெரும்பாலான தம்பதியர் தெரிவித்துள்ளனர். தங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்னரும் கணவருடன் சினிமா, பார்க் என அவுட்டிங் செல்வது தங்களுக்கு உற்சாகத்தையும், இளமையையும், காதல் உணர்வுகளையும் புதுப்பிக்கின்றது என்றும் அவர்கள் பதிலளித்துள்ளனர்.


திருமண வாழ்க்கையில் போரடிக்காமல் இருக்கவும் சுவாரஸ்யத்தை தக்கவைக்கவும் வாரம் ஒருமுறையாவது தம்பதியர் தனியாக ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்ல வேண்டும். அதேபோல் சுற்றுலா, பார்ட்டி என எங்காவது தனியாக செல்லலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அப்படி செல்வதன் மூலம் அன்னியோன்யம் அதிகரிப்பதோடு தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறையாமல் இருக்கும் என்று அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.


மகிழ்ச்சி பரிமாற்றம்


தாம்பத்ய உறவு மட்டுமல்லாது சிறு, சிறு அன்பு மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதால் பரஸ்பர அன்பு விலகாமல் நீடிக்கும் என்பதும் பல தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.


வளர்ந்த குழந்தைகள் இருந்த போதிலும், தம்பதியர் தங்களின் மகிழ்ச்சி பாதிக்காதவாறு வாழ்க்கையை வாழலாம். அதேபோல் குழந்தைகளுக்கும் தேவையான சுதந்திரத்தை அளிப்பதன் மூலம் அவர்களும் பெற்றோர்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.


மணமுறிவை தவிர்க்கலாம்


தாம்பத்ய உறவு தொடர்பாக பல குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை தாம்பத்யம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் மட்டுமே மணமுறிவு ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் திருப்தியில்லாத உறவின் மூலம் விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன.


மணவாழ்க்கை என்பது மணம் வீச வேண்டுமே தவிர, மனதை காயப்படுத்திவிடக்கூடாது. எனவே தம்பதியர் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி புரிந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடரலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்
Thanks to OneIndia

100வது சதம் அடித்ததும் ரிடையர் ஆக சச்சின் முடிவு?- இல்லை என்கிறார்

Posted: 10 Mar 2012 11:55 PM PST


100வது சதம் அடித்ததும் ரிடையர் ஆக சச்சின் முடிவு?- இல்லை என்கிறார்

டெல்லி: தனது நூறாவது சதத்தை அடித்ததும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற சச்சின் டெண்டுல்கர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல விரைவில் வி.வி.எஸ்.லட்சுமனும் தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இருப்பினும் தன்னைப் பற்றிய இந்த செய்தியை சச்சின் உடனடியாக மறுத்துள்ளார்.


இதுதொடர்பாக ஒரு செய்திச் சேனலுக்கு அவர் அவசர எஸ்.எம்.எஸ். ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எனது ஓய்வு குறித்த செய்திகளில் உண்மை இல்லை. குறிப்பாக, நான் நூறாவது சதத்தை அடித்த பிறகுதான் ஓய்வு பெறுவேன் என்பதில் உண்மையில்லை என்று கூறியுள்ளார் சச்சின்.


எத்தனையோ சாதனைகளைப் படைத்து அத்தனை கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் மிகப் பெரிய இமயமாக உயர்ந்து நிற்பவர் சச்சின். இவரால் இந்திய அணி பலமுறை உயர்வு கண்டிருந்தாலும் கூட சாதனைகளை மனதில் வைத்துக் கொண்டு விளையாடுபவர் சச்சின் என்ற குற்றச்சாட்டும் கூடவே உள்ளது.


இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு சதம் அடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் சச்சின். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மற்ற வீரர்கள் என்றால் பரவாயில்லை, சச்சினே சதம் போட திணறலாமா என்ற ஆதங்கம்தான் அது.


இங்கிலாந்திலும் தொடர்ந்து ஆஸ்திரேலியாலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை சச்சின். குறிப்பாக ஆஸ்திரேலிய தொடரில் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை சச்சின். சச்சினைப் பார்த்து பயந்த ஆஸ்திரேலியர்கள், அடப் பாவமே என்று அனுதாப்படும் அளவுக்கு இந்த முறை நிலை இருந்தது.


இதனால் சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அவர் உடனடியாக விலக வேண்டும் என்றும் இதுவரை இல்லாத அளவுக்கு கோரிக்கை இருக்கிறது. குறிப்பாக கவாஸ்கரே சச்சின் ஓய்வு பெறலாம் என்று கூறி விட்டார்.


ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ராகுல் டிராவிட் தனது ஓய்வை சந்தோஷமாக அறிவித்து விட்டார். இது சச்சினுக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.


இந்த நிலையில், தனது நூறாவது சதத்தை எடுத்தவுடன் சச்சின் ஓய்வு பெறலாம் என்று செய்திகள் வெளியாகின. அதைத்தான் தற்போது சச்சின் மறுத்துள்ளார்.


இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தகவல்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில், 


தனது 100வது சர்வதேச சதத்திற்காக சச்சின் காத்திருக்கிறார். அதை முடித்தவுடன் ஒரு நாள் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெறுவார். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவார். அதேபோல விவிஎஸ் லட்சுமனும் தனது ஓய்வு முடிவை விரைவில் அறிவிக்கவுள்ளார் என்று அந்த செய்தி கூறுகிறது.


இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது மிச்சமுள்ள ஜாம்பவான் வீரர்கள் சச்சின், டிராவிட் மற்றும் லட்சுமன் மட்டுமே. அதில் டிராவிட் விலகி விட்டார். எஞ்சியுள்ளது சச்சினும், லட்சுமனும்தான் என்பதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்புகளும், நெருக்கடிகளும் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது.


இன்று தொடங்கியுள்ள ஆசியக் கோப்பைப் போட்டியில் சச்சின் தனது 100வது சதத்தை எட்டுவார் என்று தெரிகிறது. காரணம், இப்போட்டி தெற்காசியாவில், அதாவது வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இந்தியர்களுக்குச் சாதகமான மைதானம் என்பதால் இங்காவது தனது சாதனையை சச்சின் நிகழ்த்துவார் என்று பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆசியக் கோப்பைப் போட்டியுடன் சச்சின் விடைபெறுவார் எனத் தெரிகிறது.


எனவே அடுத்த பத்து நாட்களில் சச்சினின் ஓய்வு குறித்து ஒரு தெளிவான நிலை தெரிய வரும் என்று எதிர்பார்க்கலாம்.
Thanks to OneIndia

Pasa Paravaigal 11-03-2012 | Kalaignar Tv Pasa Paravaigal 11th March 2012

Posted: 10 Mar 2012 11:49 PM PST


Pasa Paravaigal 11-03-12 | Kalaignar Tv Pasa Paravaigal 11th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Sunday Galatta 11-03-2012 | Sun Tv Shows Sunday Galatta Spl Show 11th March 2012-TechRenu

Posted: 10 Mar 2012 11:56 PM PST


 Sunday Galatta 11-03-2012 | Sun Tv Shows Sunday Galatta Spl Show 11th March 2012-TechRenu

This posting includes an audio/video/photo media file: Download Now

Manthiram oru thanthiram 11-03-2012 | Jaya Tv Manthiram oru thanthiram 11th March 2012-TechRenu

Posted: 10 Mar 2012 11:35 PM PST


Manthiram oru thanthiram 11-03-2012 | Jaya Tv Manthiram oru thanthiram 11th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Thaka Thimi Tha 11-03-2012 | Jaya Tv Thaka Thimi Tha 11th March 2012-TechRenu

Posted: 10 Mar 2012 11:33 PM PST


Thaka Thimi Tha 11-03-2012 | Jaya Tv Thaka Thimi Tha 11th March 2012-TechRenu

This posting includes an audio/video/photo media file: Download Now

Thai mannin Swamigal 11-03-2012 | Jaya Tv Thai mannin Saamigal 11th March 2012-TechRenu

Posted: 10 Mar 2012 11:32 PM PST


Thai mannin Swamigal 11-03-2012 | Jaya Tv Thai mannin Saamigal 11th March 2012-TechRenu

This posting includes an audio/video/photo media file: Download Now

Naalaiya Iyyakunar Season 3 11-03-2012 | Kalaignar Tv Naalaiya Iyyakunar 11th March 2012

Posted: 10 Mar 2012 11:32 PM PST


Naalaiya Iyyakunar Season 3 11-03-12 | Kalaignar Tv Naalaiya Iyyakunar 11th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Aratai arangam 11-03-2012 | Sun Tv Aratai arangam 11th March 2012-TechRenu

Posted: 10 Mar 2012 11:31 PM PST


 Aratai arangam 11-03-2012 | Sun Tv Aratai arangam 11th March 2012-TechRenu

This posting includes an audio/video/photo media file: Download Now

Dalmia's Best House 11-03-2012 | Vijay tv Shows Best Home Program 11th March 2012-TechRenu

Posted: 10 Mar 2012 11:38 PM PST

 
Dalmia's Best House 11-03-2012 | Vijay tv Shows Best Home Program 11th March 2012-TechRenu


This posting includes an audio/video/photo media file: Download Now

Top 10 Movies 11-03-2012 | Sun Tv Top 10 Movies 11th March 2012-TechRenu

Posted: 10 Mar 2012 11:30 PM PST


Top 10 Movies 11-03-2012 | Sun Tv Top 10 Movies 11th March 2012-TechRenu

This posting includes an audio/video/photo media file: Download Now

Athanaikum Asaipadu 11-03-2012 | Vijay Tv Athanaikum Asaipadu 11th March 2012-TechRenu

Posted: 10 Mar 2012 11:30 PM PST


Athanaikum Asaipadu 11-03-2012 | Vijay Tv Athanaikum Asaipadu 11th March 2012-TechRenu


This posting includes an audio/video/photo media file: Download Now

Deiva Darisanam 11-03-2012 | Sun Tv Deiva Darisanam 11th March 2012

Posted: 10 Mar 2012 11:29 PM PST


Deiva Darisanam 11-03-12 | Sun Tv Deiva Darisanam 11th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Nijam 11-03-2012 | Sun Tv Nijam 11th March 2012-TechRenu

Posted: 10 Mar 2012 11:28 PM PST


Nijam 11-03-2012 | Sun Tv Nijam 11th March 2012-TechRenu


This posting includes an audio/video/photo media file: Download Now

Kalyana Maalai 11-03-2012 | Sun Tv Kalyana Maalai 11th March 2012-TechRenu

Posted: 10 Mar 2012 11:28 PM PST


Kalyana Maalai 11-03-2012 | Sun Tv Kalyana Maalai 11th March 2012-TechRenu


This posting includes an audio/video/photo media file: Download Now

Oru vaarthai Oru Laksham 11-03-2012 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 11th March 2012-TechRenu

Posted: 10 Mar 2012 11:27 PM PST


Oru vaarthai Oru Laksham 11-03-2012 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 11th March 2012-TechRenu

This posting includes an audio/video/photo media file: Download Now

SunTv news 11-03-2012 Morning 7 am | Sun Tv News 11-03-2012 | Sunnews 11th March 2012-TechRenu

Posted: 10 Mar 2012 11:26 PM PST


 SunTv news 11-03-2012 Morning 7 am | Sun Tv News 11-03-2012 | Sunnews 11th March 2012-TechRenu

This posting includes an audio/video/photo media file: Download Now

Intha Vaara Rasi Palan 11-03-2012 | Vijay Tv Shows Intha Vaara RasiPalan 11th March 2012

Posted: 10 Mar 2012 11:26 PM PST


Intha Vaara Rasi Palan 11-03-2012 | Vijay Tv Shows Intha Vaara RasiPalan 11th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Lakshmi Sahasranamam 11-03-2012 | Vijay Tv Lakshmi Sahasranamam 11th March 2012

Posted: 10 Mar 2012 11:24 PM PST


Lakshmi Sahasranamam 11-03-12 | Vijay Tv Lakshmi Sahasranamam 11th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Nanayam Vikatan 18-03-2012 | Free Nanayam Vikadan PDF this week | Nanayam Vikatan 181th March 2012 ebook Latest

Posted: 10 Mar 2012 09:01 PM PST


Nanayam Vikatan 18-03-2012 | Free Nanayam Vikadan PDF this week | Nanayam Vikatan 181th March 2012 ebook Latest

Download Links

பிகரு சுகரு மாதிரி! : ஓகே ஓகே கானா!

Posted: 10 Mar 2012 08:41 PM PST


பிகரு சுகரு மாதிரி! : ஓகே ஓகே கானா!

உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்சிகா மற்றும் பலர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. ராஜேஷ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 


இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.  ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. அதனால், படக்குழு தற்போது பெரும் உற்சாகத்தில் இருக்கிறது.


படத்தில் காதலில் தோல்வியடைந்த இளைஞர்களுக்காக நா.முத்துக்குமார் பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். இளைஞர்கள் மத்தியில் தற்போது அப்பாடல் தான் ஹைலைட்.


அப்பாடல் வரிகள் :


வஞ்சிரம் மீனு வவ்வாலு
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை எராலு
எறங்கி கலக்கு கோபாலு..!


வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு..!
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு...!


மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா..!
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டுனா டவுசர் அவுருண்டா..!


கண்ண கலங்க வைக்கு பிகரு வேணாண்டா - நமக்கு
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா..!


பைக்குல தினமும் ஒன்னா போனோம்
பேக்குல இப்போ அவள காணோம்..!
பீச்சுல சொகமா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்..!


காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கண்ணு முழிச்சுக்கிட்டா அங்க காதல் கிடையாது..!


அவ போனாளே போனா தண்ணீர விட்டு மீனா... நான்
காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா..!


பிகரு சுகரு மாதிரி
ஜனக்கு ஜனக்கு வவ்வாளு..
நட்பு தடுப்பு ஊசிடா
ஜனக்கு ஜான கோபாலு
பிகரு சுகரு மாதிரி
பசங்க ஒடம்ப உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசிடா
ஒடைஞ்ச மனச தேத்திடும்..!


பாதியில் வந்த பொண்ண நம்பி
ஆதியில் வளர்ந்த நட்ப விட்டேன்..!
தேதிய போல கிழிச்சுப் புட்டா
தேவதை அவளை நம்பி கெட்டேன்..!


தோலு மட்டும் வெள்ள உன்ன கவுத்துப் புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்..!
அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுக்கல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா..!


கண்ணுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்ய வெப்பாடா
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு காயம் வெப்பாடா


கண்ண கலங்க வைக்கு பிகரு வேணாண்டா - நமக்கு
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா..!
Thanks to Vikatan

போடா போடி கிட்டத்தட்ட ரெடி! TechRenu

Posted: 10 Mar 2012 08:09 PM PST


போடா போடி கிட்டத்தட்ட ரெடி!

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் ' போடா போடி '. வரலெட்சுமி சரத்குமார் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.


தரண் இசையமைக்க, விக்னேஷ் இயக்கி வருகிறார்.  படப்பிடிப்பு  முழுவதுமே லண்டனில் நடத்தி இருக்கிறார்கள். படத்தின் கதைக்கு ஏற்ப, லண்டனில் குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.


மேலும் ஒரு குழந்தையை பிறந்த உடனேயும் அதே குழந்தை 6 மாதங்கள் கழித்தும் இப்படத்தில் நடிக்க  வேண்டியிருந்ததால்தான் தயாரிப்பில் சிறிது தாமதமாகிக் கொண்டிருப்பதாகத் தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


LOVE ANTHEM பணிகளை முடித்து விட்டு சிம்பு சென்னை திரும்பி இருப்பதால், படப்பணிகளில் ஈடுபட இருக்கிறார். மார்ச் 20ம் தேதி முதல் MACAU- வில் போடா போடி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.


இப்படப்பிடிப்போடு படத்தின் அனைத்து காட்சிகளும் முடிகின்றன. இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடித்து, படத்தினை கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று தீர்மானித்து இருக்கிறார்களாம்.


சிம்பு நடித்து வரும் படங்களில் ' போடா போடி ' இறுதி கட்டத்தினை எட்டி இருக்கிறது.  ' வேட்டை மன்னன் ' மற்றும் தொடங்க இருக்கும் 'வடசென்னை' ஆகிய படங்களுக்கு எப்போது தேதிகள் ஒதுக்க போகிறாரோ?!
Thanks t oVikatan

Raasipalan 11-03-2012 | Sun Tv Rasipalan This week 11th March 2012

Posted: 10 Mar 2012 07:57 PM PST


Raasipalan 11-03-12 | Sun Tv Rasipalan This week 11th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now