TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


பிரபல கம்ப்யூட்டர் ஹக்கிங் குழுவை மடக்கியது FBI!

Posted: 08 Mar 2012 02:39 AM PST


பிரபல கம்ப்யூட்டர் ஹக்கிங் குழுவை மடக்கியது FBI!

கம்ப்யூட்டர் ஹக்கிங் குரூப் ஒன்றின் முக்கியஸ்தர்களை வளைத்துப் பிடித்திருக்கிறது அமெரிக்க புலனாய்வு அமைப்பு FBI. இந்த விபரத்தை அவர்கள் இன்னமும் வெளியிடவில்லை. ஆனால், அமெரிக்க டி.வி. சேனல் Fox News-க்கு, இந்த தகவல் எப்படியோ லீக் ஆகிவிட, அவர்கள் விஷயத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள்.


அமெரிக்க அரசு, மற்றும் உளவுத்துறை சி.ஐ.ஏ.-வின் ரகசியங்கள், Stratfor தனியார் உளவு அமைப்பின் கம்ப்யூட்டரில் இருந்து ஹக் பண்ணப்பட்ட விவகாரம் இப்போது அமெரிக்க அரசின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் இந்த ஹக்கிங் குரூப்பின் 5 முக்கிய புள்ளிகள் பிடிபட்டுள்ளனர்.


Fox News இன்று (வியாழக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ள செய்தியின்படி, FBI இரு தினங்களுக்குமுன் அமெரிக்கா, பிரிட்டன், அயர்லாந்து ஆகிய மூன்று இடங்களில், ஒரே நேரத்தில், இந்த 5 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளது.


LulzSec என்று அறியப்பட்ட இந்த ஹக்கிங் குரூப்பின் தலைவர் ஹெக்டர் சேவியர் மொன்சேகொர் (கம்ப்யூட்டர் ஹக்கிங் வட்டாரங்களில் 'சாபு' என்ற பெயரில் அறியப்பட்டவர்) ஏற்கனவே சில மாதங்களுக்குமுன் அமெரிக்க உளவுத்துறையிடம் சிக்கி, தற்போது FBI வசம் இருக்கிறார்.


இவர் FBI-க்கு கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே அந்தக் குழுவின் மற்றைய ஐந்து பேரும் மடக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது Fox News.


இந்த LulzSec ஹக்கிங் குரூப்தான், Sony, Fox News, மற்றும் American Public Broadcast System (PBS) ஆகிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை ஹக் பண்ணி, பரபரப்பை ஏற்படுத்திய குரூப்.
Thanks to Viruvirupu

அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!

Posted: 08 Mar 2012 02:33 AM PST


அடாத உறவு... நண்பரின் 43 வயது தாயாருடன், 26 வயது இளைஞர் தற்கொலை!

தர்மபுரி: நண்பரின் 43 வயது தாயாருடன் தகாத உறவு வைத்திருந்த 26 வயது இளைஞர், தனது உறவுக்கு திருமணம் மூ்லம் தடை வந்ததால் அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டார்.


சமூகம் எந்த அளவுக்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி உதாரணமாக அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.


அந்த ஊரைச் சேர்ந்தவர் மாது என்கிற பாரத். 26 வயதாகி விட்ட இவர் இப்போதுதான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.


இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. மார்ச் 4ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பே மாது வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால் திருமணம் நின்று போனது.


இந்த நிலையில் மாதுவுடன் பிளஸ்டூவில் ஒன்றாகப் படித்த நவீன்குமார், தனது தந்தை செல்வராஜுடன் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார். நவீன்குமாரின் தாயார் ஜோதி பாப்பிரெட்டிபட்டியில் தனியாக தங்கியிருந்தார்.


நேற்று அதிகாலையில் நவீன்குமாரும், செல்வராஜும் ஊருக்கு வந்தனர். வீட்டுக் கதவைத் தட்டியபோது அது திறக்கவில்லை. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அப்போது ஜோதியும், அவருக்கு அருகே மாதுவும் சேலையில் தூக்குப் போட்டு பிணமாக தொங்கியதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.


தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். பிணங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.


தனது வீட்டில் தனியாக வசித்து வந்த ஜோதியை, அவ்வப்போது வந்து பார்த்துள்ளார் மாது. நண்பரின் தாயார் என்ற வகையில் ஆரம்பத்தில் இவர்களது சந்திப்புகள் இருந்துள்ளன. பின்னர் இது தவறான பாதைக்குத் திரும்பி விட்டது. இருவரும் அடிக்கடி கள்ள நோக்கத்துடன் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.


இந்த தகாத உறவு குறித்து மாதுவின் வீட்டுக்குத் தெரிய வந்து அதிர்ந்து போயினர். இதனால்தான் அவருக்கு வேகம் வேகமாக பெண் பார்த்து திருமணத்தை நிச்சயித்தனர். ஆனால் ஜோதியை விட்டுப் பிரிய மனமில்லாத மாது, வீட்டை விட்டு வெளியேறி ஜோதி வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் தங்களது முடிவை நாடி விட்டனர்.


பொருந்தாத உறவும், தகாத உறவும் கடைசியில் இப்படித்தான் ஆகும் என்பதற்கு மாது, ஜோதி இன்னும் ஒரு உதாரணமாகியுள்ளனர்.
Thanks to One India

மைசூரில் 'மூக்குடைந்த' அகிலேஷ்- உ.பியில் 'நாக்அவுட்' ஆன ராகுல்!

Posted: 08 Mar 2012 02:17 AM PST


மைசூரில் 'மூக்குடைந்த' அகிலேஷ்- உ.பியில் 'நாக்அவுட்' ஆன ராகுல்!

மைசூர்: இந்தியாவின் இளம் அரசியல்தலைவர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாய்ம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் பற்றிய சுவாரசியமான தகவல்கள் தென்னிந்திய நகரான மைசூரில் இருக்கிறது. அகிலேஷுன் வித்தியாசமான மூக்கு அமைப்புக்கும் மைசூர் பொறியியல் கல்லூரிக்கும் ஒரு தொடர்பும் இருக்கிறது!


மைசூரில் உள்ள ஸ்ரீஜெயசமரஜேந்திரா பொறியியல் கல்லூரியில்தான் அகிலேஷ் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் பெற்று 1994-ம் ஆண்டு வெளியேறினார். இப்போது இந்த கல்லூரிக்கு பொன்விழா ஆண்டு. ஜூன் மாதம் தொடங்கும் கல்லூரியின் பொன்விழா ஆண்டு சிறப்பு விருந்தினர் சாட்சாத் அகிலேஷ்தான்!


அகிலேஷின் கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்து கல்லூரியின் முதல்வர் ஜி. சங்கமேஸ்வர் கூறியதாவது:


நாடே எதிர்பார்த்த தேர்தலில் சூறாவளியாக பிரச்சாரம் செய்த அகிலேஷ், கல்லூரி மாணவர் தேர்தல்களில் பங்கேற்றதுகூட கிடையாது.. மிகவும் அமைதியான மாணவராகவே வலம் வந்தார்.


இந்த ஆண்டு எமது கல்லூரிக்கு பொன்விழா. எமது பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அகிலேஷ் யாதவை அழைக்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அகிலேஷ் எங்களது முன்னாள் மாணவர் என்பதில் பெருமை கொள்கிறோம் என்றார்.


இதேபோல் கருத்துத் தெரிவித்துள்ள துணை முதல்வரான சகீப் உர் ரஹமான், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு உத்தரப்பிரதேச அரசியலில் தனக்கென ஒரு இடத்தை அகிலேஷ் உருவாக்கிக் கொண்டிருப்பது ஆச்சரியமளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது என்றார்.


இவை மட்டும்தானா அகிலேஷுக்கும் மைசூர் பொறியியல் கல்லூரிக்குமான உறவு? இன்னொரு சுவாரசியமான தகவல், அகிலேஷின் மூக்குடன் தொடர்பு கொண்டது!


இது பற்றி அகிலேஷுக்கு ஓராண்டு சீனியராக இருந்தவரும் உத்தரப்பிரதேசத்தின் பரேலி பல்கலைக் கழகத்தின் தற்போதைய உதவிப் பேராசிரியருமான எம்.எஸ். கருணா கூறியதாவது:


எங்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது பந்தை நான் உதைத்தேன். பந்து நேராக போய் அகிலேஷின் மூக்கை பதம் பார்த்தது.


உடைந்து போன அகிலேஷின் மூக்கை ஒட்ட வைக்கவே முடியலை...இப்பொழுதும் கூட மைசூரை அகிலேஷ் நினைத்தாலே தன்னிச்சையாகவே அவரது விரல்கள் மூக்கு பக்கம் திரும்பும்...


அகிலேஷுக்கு இப்பவும் நான் நல்ல நண்பன். குழந்தை உள்ளம் கொண்டவர். கல்லூரி வகுப்புகள் முடிந்த பிறகு பேருந்து நிறுத்தத்தில் நான் நிற்கும்போது திறந்த ஜீப்பில் வந்து என்னை அழைத்துச் செல்வார்.


பரேலிக்கு அகிலேஷ் வந்தால் என்னுடன் சிறிது நேரம் செலவிடுவார். பிஷியான தேர்தல் பிரச்சாரத்தின்போதுகூட என்னுடன் 30 நிமிடம் அவர் செலவிட்டார்..." என்று நெகிழ்கிறார் கருணா. அகிலேஷின் மூக்கு இப்போதும் மைசூரில் விழுந்த அடியால் வளைந்தே இருக்கிறது!


மைசூரில் மூக்கு உடைந்தால் என்ன, உ.பியில் ராகுல் காந்தியை நாக் அவுட் செய்து விட்டாரே அகில்...!
Thanks to OneIndia

பெங்களூர் கோர்ட் கலவரம்... போலீஸை காப்பாற்ற சசி தந்த ஐடியா!

Posted: 08 Mar 2012 02:13 AM PST


பெங்களூர் கோர்ட் கலவரம்... போலீஸை காப்பாற்ற சசி தந்த ஐடியா!

பெங்களூர்: பெங்களூர் பத்திரிகையாளர்களுக்கும் கர்நாடக வழக்கறிஞர்களுக்கும் இடையே ஒரு மாத காலமாக பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.


ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றமும் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில்தான் இருக்கிறது.


கடந்த வாரம் வெளியே வழக்கறிஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே முறுகல் தொடங்கிய அதே நேரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, சசிகலாவை கேள்வி கேட்க ஆரம்பித்தார்.


டான்சி நில மதிப்பீடு, சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் கம்பெனி பற்றிய கேள்விகளுக்கு சசிகலா "தெரியாது' என பதில் சொல்லிக் கொண்டிருந்தபோதே வெளியில் வன்முறை வெடித்தது.


காதை பிளந்த கல்லெறி சம்பவங்களைப் பற்றியெல்லாம் அசராத நீதிபதி மல்லிகார்ஜூனையா, ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், மார்பிள்ஸ் அண்ட் மார்வெல்ஸ், ஜெயா பப்ளிகேஷன் என பல்வேறு நிறுவனங்கள், கைப்பற்றப்பட்ட நகைகள் பற்றி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்.


நகைக் குவியல்- அசரா சசி


நகைகள் குறித்த கேள்விகள் எழத்தொடங்கியபோது சசிகலாவின் முகம் குழப்பத்தில் தத்தளித்தது.


'நல்லம்ம நாயுடு தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 36, போயஸ் கார்டன், சென்னை என்ற முகவரியில் 1996ம் ஆண்டு சோதனை நடத்தியபோது, 97 நகைப் பெட்டிகளில் இருந்த 23 கிலோ 113 கிராம் தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டன. இதில், தங்க நகையின் மதிப்பு 91 லட்சத்து 71 ஆயிரத்து 571 ரூபாய், வைர நகைகளின் மதிப்பு 2 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 700 ரூபாய். இதன் மொத்த மதிப்பு 3 கோடியே 35 லட்சத்து 15 ஆயிரத்து 43 ருபாய் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது பற்றி சாட்சியம் கூறி இருக்கிறார்களே என்ற கேள்வியை, இரண்டு மூன்று முறை சரியாகக் கேட்டு எழுதிக்கொண்டார்.


பிறகு போயஸ் தோட்டத்து வழக்கறிஞரின் முகத்தைப் பார்த்த சசிகலா ஆழமாக யோசித்து, '36, போயஸ் கார்டன், சென்னை முகவரியில் போலீஸார் சோதனையிட்டபோது, நானும் செல்வி ஜெயலலிதாவும் சிறையில் இருந்தோம். இந்தச் சோதனை வீட்டு உரிமையாளர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில் நடக்கவில்லை. சட்டப்படி வீட்டு உரிமையாளர் முன்னிலையில்தான் நடந்திருக்க வேண்டும் அல்லது அவரது அனுமதி பெற்றாவது நடந்திருக்க வேண்டும். அதைவிட்டு, வீட்டு ஊழியர்களை கார் ஷெட்டில் வலுக்கட்டாயமாக அடைத்துவிட்டு சோதனை நடத்தியது சரிதானா? என்று எதிர்க் கேள்வி கேட்டு எகிறினார்..


நீதிபதியும் விடவில்லை..


'வாசுதேவன் அளித்துள்ள சாட்சியத்தில் 31 ஏ, போயஸ் கார்டன் வீட்டில் 42 நகைப் பெட்டிகளை எடுத்ததாகவும், அதில் 4 கிலோ 475 கிராம் தங்க, வைர நகைகள் இருந்ததாகவும், தங்க நகையின் மதிப்பு 17 லட்சத்து 37 ஆயிரத்து 266 ரூபாய் என்றும், வைர நகைகளின் மதிப்பு 30 லட்சத்து 24 ஆயிரத்து 550 ரூபாய் என்றும் கூறி இருக்கிறார். கூடவே சில விலை உயர்ந்த கைக்கடிகாரங்களைக் கைப்பற்றியதாகவும் கூறி இருக்கிறாரே? என்றார் நீதிபதி மறுபடியும்.


சசியும் விடாக்கொண்டன் போல 'முதலில் 31 ஏ போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்த முறையான அனுமதி பெறவில்லை. சோதனையின்போது 42 பெட்டிகள் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வீட்டு உரிமையாளர் இல்லாமல் சோதனை நடத்தியதே தவறு என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு இது பற்றி எழுத்து மூலமாகப் பதில் அளிக்கிறேன்' என்றார்.


சசிகலா ஐடியா


இந் நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நீதிமன்ற அறைக்குள் வழக்கறிஞர்கள் தாக்குதலில் இருந்து தப்பிய சில போலீசார் நுழைந்தனர். உடனே நீதிமன்ற அறையின் கதவை உட்புறமாக போலீசார் ஒருவர் தாழிட்டார்.


இது தான் சாக்கு என உடனே சசிகலாவின் வழக்கறிஞர் விசாரணையை ஒத்திவைக்கக் கோரினார். ஆனால் நீதிபதியோ எல்லாம் சரியாகிவிடும் காத்திருங்கள் என்று கூறி விசாரணையையும் தாற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.


சுமார் 55 நிமிடங்கள்... எந்த விசாரணையும் இல்லை..


இந்நிலையில் உள்ளே இருந்த போலீசாரின் பாதுகாப்புக்காக உடைகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் எங்கே உடைகளை மாற்றுவது என்று பூட்டப்பட்ட நீதிமன்றத்துக்குள் அனைவரும் ஆலோசித்துக் கொண்டிருக்க சட்டென சசிகலாவோ, நீதிபதி அறையில் மாற்றலாமே என்றார்.. இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.


'பாதுகாப்புக்கு வந்த உங்களுக்கே நாங்க பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கு என்று போலீஸாரைப் பார்த்து நீதிபதி கமென்ட் அடிக்க, சசிகலாவும் அதை ரசித்தார்.


அதன் பின்னர் சுதாகரனின் வழக்கறிஞர் தர்மாராவ், வெளியில் நடந்த சம்பவங்களை நீதிபதியிடம் விவரித்தார்.


இதுதான் சாக்கென எண்ணிய சசி தரப்பு, நீதிபதியின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்..இதனால் வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவையுங்கள் என்றார்.


இதையடுத்து விசாரணை ஒத்தி வைக்கப்பட, நீதிமன்றத்தின் பின் வாசல் வழியாக 142 படிகள் இறங்கி காரில் ஏறிக் கிளம்பினார் சசிகலா.


விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதால் சந்தோஷமாக‌ இளவரசியுடன் அன்று மாலையே சென்னைக்கு விமானத்தில் பற‌ந்துவிட்டார் சசிகலா.
Thanks to Oneindia

'புரட்சிப் புயலின்' தோளில் கருப்புத் துண்டு ஏன்?

Posted: 08 Mar 2012 02:13 AM PST


'புரட்சிப் புயலின்' தோளில் கருப்புத் துண்டு ஏன்?

சங்கரன்கோவில்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீளமான கருப்புத் துண்டு அணிவதின் பின்னணியில் அவரது கட்சிக்காரர் ஒருவர் இருக்கிறார்.


முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் என்றால் மக்கள் நினைவுக்கு வருவது கருப்பு கூலிள் கிளாஸ், புஷ் குல்லா, குட்டை துண்டு மற்றும் வலது கையில் கடிகாரம். திமுக தலைவர் கருணாநிதிக்கு அடையாளம் கருப்பு கண்ணாடியும், லேட்டஸ்டாக வந்து சேர்ந்த மஞ்சள் நிற துண்டும். அதே போன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அடையாளம் கருப்பு துண்டு, அதிலும் நீளமான கருப்புத் துண்டு. அதை பேசும்போது படு லாவகமாக அங்கும் இங்கும் அவர் இழுத்து விட்டுக் கொள்ளும் ஸ்டைலே தனி.


முதலில் வைகோ குட்டை துண்டு தான் அணிந்து வந்தார். அதன் பிறகு அவரை நீளமான கருப்புத் துண்டு அணியச் செய்தவர் சங்கரன்கோவில் மதிமுக நகரச் செயலாளர் வாணிபிச்சையா.


இப்போது 76 வயதாகும் வாணி பிச்சையா இதுகுறித்து கூறுகையில், 


கடந்த 1986ம் ஆண்டில் எனது மகள் வாணிக்கு திருமணம் நடந்தது. அந்த திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தவர் வைகோ. அவரிடம் கொடுப்பதற்காக நீளமான கருப்புத் துண்டு ஒன்றை வாங்கி வைத்தேன். அதில் கட்சியின் நிறத்தைக் குறிக்கும் வகையில் துண்டின் பார்டரில் சிவப்பு நிறத்தில் எம்ப்ராய்டரி செய்தேன். அந்த துண்டை வைகோவிடம் கொடுத்து நீங்கள் இனி நீளமான துண்டு தான் அணிய வேண்டும் என்று அன்பு கோரிக்கை விடுத்தேன்.


அவர் என் கோரிக்கையை ஏற்று இந்நாள் வரை கருப்புத் துண்டு அணிந்து வருகிறார். இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. தற்போது சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்து வரும் வைகோ ஒவ்வொரு கூட்டத்திலும் தனது கருப்புத் துண்டுக்கு பின் இருக்கும் கதையை தவறாமல் கூறி வருகிறார் என்றார்.


அரசியலில் எத்தனையோ 'புயல்களை பூகம்பங்களை' சந்தித்தபோதும் இந்த 'புரட்சிப் புயல்' கருப்புத் துண்டை மட்டும் நழுவ விடாமல் கம்பீரமாக நடை போட்டுவது வருவது குறிப்பிடத்தக்கது.
Thanks to OneIndia

SunTv Headline News 08-03-2012 | Sun Tv headline News 08-03-12 | Sunnews 8th March 2012

Posted: 08 Mar 2012 02:08 AM PST


SunTv Headline News 08-03-2012 | Sun Tv headline News 08-03-12 | Sunnews 8th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 08-03-2012 | Sun Tv Athipookal Serial 8th March 2012

Posted: 08 Mar 2012 01:30 AM PST


Athipookal 08-03-12 | Sun Tv Athipookal Serial 8th March 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 08-03-2012 | Sun Tv Elavarasi Serial 8th March 2012

Posted: 08 Mar 2012 12:38 AM PST


Ilavarasi 08-03-12 | Sun Tv Elavarasi Serial 8th March 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

போராடும் வடிவேலு! சினிமா உலக யுத்தம்!-TechRenu

Posted: 08 Mar 2012 12:05 AM PST


போராடும் வடிவேலு! சினிமா உலக யுத்தம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அர சியலும் சினிமாவும் ரெட்டப் புள்ளைக மாதிரிதான். நட்சத் திரங்கள் பலரும் பல்வேறு கட்சிகளில் இருந்தாலும் அவர்களின் சினிமாத் தொழில் ஒருபோதும் பாதிக்கப்பட்ட தில்லை. ஆனால்  கைப்புள்ள வடி வேலுவின் விஷயத்தில் மட்டும் கண்ணக் கட்ற மாதிரி போட்டு பாக்குது ரெட்டப் புள்ளைக.


வெள்ளந்தியான மதுரைத் தமிழால் உலகம் முழுக்க இருக்கிற தமிழர்களை குதூகலிக்க வைத்தவர் வடிவேலு.


தனது சிரிப்பு சேஷ்டைகளால் ரசிகர்களை "வருத்தமில்லா வாலிபர்'களாக்கிய இந்த கைப் புள்ளைக்கு எதிராக சதி செய்யும் அரசியல் கட்டத்துரை யார்?


இந்தக் கேள்வியோடு ஏரியாவில் இறங்கி விசாரித்த போது... ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் கிடைத் தன.


"கான்'கள்பாராட்டிய கைப்புள்ள!


பாலிவுட்டின் மாஜி ஹீரோ மிதுன் சக்கர வர்த்தி பெரும்பா லும் ஊட்டியில் தான் இருப் பார். அவரின் பொழுதுபோக்கே வடிவேலுவின் காமெடியை டி.வி. யில் பார்ப்பது தான். ஒரு டி.வி. பேட்டியில் "நான் வடிவேலுவின் ரசிகன்' எனச் சொன்ன மிதுன், கொஞ்ச நாட்கள் முன்பு வடிவேலுவைத் தொடர்புகொண்டு பேசினார்.


"வடிவேலு காமெடிதான் என்னை ரிலாக்ஸ் பண்ண வைக்கும். ஏன் அவரு புதுசா எதுவும் காமெடி பண்ணல. ஏன்... தமிழ் சினிமாக்காரங்க வடிவேலுவை பயன்படுத்திக்கிற மாட்டேங்கிறாங்க?'னு அமீர்கான் என்கிட்ட கேட் டாரு' எனச் சொல்லியிருக்கிறார் மிதுன்.


விஜய் நடித்த "காவலன்' படத்தைத் தான் இந்தியில் "பாடி கார்ட்' என்ற பெயரில் சல்மான்கான் ரீ-மேக் செய்து நடித்தார். அதற் காக "காவலன்' படத்தைப் பார்த்த சல்மான்கான், "இந்தியிலும் வடிவேலுவை நடிக்க வைக்கலாம். வடி வேலுவுக்கு எதுக்கு மொழி? அவரோட பாடி லாங்வேஜ் சிரிப்பை வரவச்சிடும்' என வியந்து சொன்னாராம்.


அமெரிக்காவில் கைப்புள்ள!


வாஷிங்டனில் உள்ள அமெ ரிக்க தமிழ்ச் சங்கம் வருகிற ஜூன் மாதம் விழா எடுக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள வடிவேலு விடமும் பேசப்பட்டிருக்கிறது. இந்த விழா நடக்கும் இடம் வெள்ளை மாளிகை இருக்கும் பகுதியில் என்ப தாலும், அமெரிக்க முக்கிய செனட் உறுப்பினர்கள் பலரும் இந்த விழா வில் கலந்துகொள்வார்கள் என்பதா லும், பாதுகாப்பு கருதி  இந்த விழாவில கலந்து கொள்பவர்களின் விபரங்களைக் கேட்டார்களாம் அதிகாரிகள். அதில் வடிவேலுவைப் பற்றிக் குறிப்பிட்டு... வடிவேலுவின் காமெடி காட்சிகளை செல்போன் மூலம் காட்டினார்களாம் தமிழ்ச் சங்க நிர்வாகிகள். வடிவேலுவின் அங்க சேஷ்டைகளைப் பார்த்து வியந்து ரசித்தார்களாம்.


கைப்புள்ளைக்காக வேண்டுதல்!


"தண்ணீர் தண்ணீர்' சரிதாவின் கணவரான மலையாள நடிகர் முகேஷும், வடிவேலுவும் தற்செயலாக சந்தித்துக்கொண்டபோது, "எங்க மலையாள மக்கள், நீங்க தொடர்ந்து காமெடி வேடங்களில் நடிக்கணும்னு விரும்புறாங்க. ஒங்க சினிமா வாழ்க்கை மறுபடியும் சுமுகமாக குருவாயூரப்பனை வேண்டிக்கிறேன்' என நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார் முகேஷ்.


...இப்படி மொழிகளைக் கடந்து ரசிக் கப்படும் கலைஞனாக இருக்கிறார் வடி வேலு.


"பிறவிக் கலைஞன் வடிவேலுவை தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என சமீபத்தில் வைர முத்து கேட்டுக்கொண்டிருக்கிறார்.


தேர்தல் விதிமீறல் வழக்கிற்காக நத்தம் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த வடிவேலுவை பார்த்த  சனம் அத்த னையும் கேட்ட கேள்வி... "ஏன் வடிவேலு சினிமாவுல நடிக்காம இருக்கீக?' என்பதுதான்.


யார் காரணம்?


"" "வடிவேலுவை தங்கள் படத்தில் நடிக்க வச்சா... வரிவிலக்கு, மானியம் போன்ற அரசு சலுகைகள் கிடைக்காது. படம்  வெளியாகாதபடி ஆளும்கட்சி தடைபோடும்' என சினிமாக்காரர்களிடம் பலத்த பயம் நிலவுகிறது.


கடந்த ஜனவரியில பிரசாந்த்-வடிவேலு நடித்த "மம்பட்டியான்' படம் எந்த நெருக் கடியுமில்லாமல் வெளியானது. ஜெயா டி.வி.யிலும் வடிவேலுவின் காமெடி ஸீன்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகுது. தி.மு.க. தேர்தல் பிரச்சாரத்தில் கூட வடிவேலு, ஜெயலலிதாவை விமர்சிக்கவில்லை. விஜயகாந்த்தைத் தான் விமர்சனம் செஞ்சார். அதிலிருந்தே அவருக்கு சிக்கல்கள்தான்.


எதிர்க்கட்சித் தலை வரா விஜயகாந்த் தேர்ந் தெடுக்கப்பட்டதும் சினிமா பிரபலங்கள் பலரும் விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்தினாங்க. அப்போ... "வடிவேலுவுக்கு முக்கியத்துவம் தராதீங்க. அடுத்த சி.எம். கேப்டன் தான். அவரோட கோபத்துக்கு ஆளாகாதீங்க'ன்னு சொல்லப்பட்டது. 


விஜயகாந்த் விஷயத்தில் வடிவேலு அன்னைக்கி என்ன சொன்னாரோ... அதைத்தான் ஜெயலலிதா இப்ப சொல்றார்'' என்கிறார்கள் திரையுலகில் உள்ள ஒரு சிலர்.


""ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்துக்கும் இடையே பிரச்சினை வந்து கூட்டணி பிரிஞ்சதுமே...  வடிவேலுவுக்கு புதிய பட வாய்ப்பு கள் வந்து... அது பேச்சுவார்த்தையில் இருக்கு'' என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். ஆனாலும் இன்னும் எந்தப் படமும் வடிவேலுவுக்கு கைகூடவில்லை.


பழைய கோபங்கள்!


"ஃப்ரெண்ட்ஸ்', "சச்சின்', "போக்கிரி', "வில்லு', "காவலன்'... இப்படி விஜய்யும் வடிவேலுவும் கூட்டணி வச்ச காமெடிகள் செம ஹிட். ஆனா... தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் இருந்த விஜய்க்கு, தி.மு.க.வுக்காக வடிவேலு பிரச் சாரம் செய்ததால் கோபம். அதனால் விஜய் படங்களில் வடிவேலு நடிக்க முடியாமல் போனது. மற்றபடி வடிவேலுவை விஜய் விரும்பாமல் இல்லை.


"படிக்காதவன்' படப்பிடிப்பு வெளியூரில் துவங்குவதற்கு முதல் நாள் இரவு வடிவேலுவின் அறைக்கு வந்த தனுஷ், "அண்ணே பேப்பர்ல இருக்க டயலாக்கை மட்டுமே பேசுங்க. ஸ்பாட்டில் புது டயலாக் பேசுனீங்கன்னா... எனக்கு பேலன்ஸ் பண்ண கஷ்டமா இருக்கும்' எனச் சொல்ல...


"ஒவ்வொரு நிமிஷமும் புதுசு புதுசா தோணும். அத பேசினாத்தான் ஸீன் நல்லா வரும். ஒங்க மாமனார் கூட நடிக்கும்போதே அப்படி ஸ்பாட் டயலாக் பேசீ ருக்கேன்' என வடிவேலு சொன் னார். ஆனால் இதற்கு தனுஷ் சம்மதிக்காததால் கருத்து வேறுபாடு.  வடிவேலுவுக்குப் பதில் விவேக் நடித்தார். இந்த பிரச்சினையிலிருந்து தனுஷ் படத்தில் வடிவேலு இல்லை.
"இம்சை அரசன்' டைரக்டர் சிம்புதேவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் "மாரீசன்' படத்தில் வடிவேலுவையும் நடிக்க வைக்க விரும்புகிறார் சிம்புதேவன். ஆனால் தனுஷ் இதுவரை ஓ.கே. சொல்ல வில்லை.


...இப்படிப்பட்ட பழைய கோபங்களும் இப்போது வடி வேலுவுக்கு எதிராக வரிசை கட்டி நிற்கிறது.


ராணா ரஜினி- கோச்சடையான் ரஜினி!


"சந்திரமுகி படத்தின் உண்மை யான ஹீரோ வடிவேலுதான்' என படத்தின் 800-வது நாள் விழாவில் பாராட்டியவர் ரஜினி.
ரஜினியின் "ராணா'வில் ஒப் பந்தம் செய்யப்பட்டிருந்தார்  வடிவேலு. அந்த சமயம் தி.மு.க. பிரச்சாரத்துக்கு கிளம்பியதால் "அரசியல் சங்கடம் வேண்டாம்' என கருதினார் ரஜினி. அதனால் "ராணா'வில் வடிவேலுவின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட... இதுபற்றி கருத்துச் சொன்ன வடிவேலு, "ராணாவாவது... கானாவாவது, விடுங்க பாத்துக்கலாம்' எனச் சொன்னார். ஆனால் ரஜினியை விமர்சனம்  செய்ய வில்லை. 


1996-ல் அ.தி.மு.க. தேர்தல் பிரச் சாரத்தின்போது ரஜினியை தனிப்பட்ட முறையில் மனோரமா விமர்சித்தார். அதையே பெரிதுபடுத்தாமல் தொ டர்ந்து தன் படங்களில் மனோரமாவை நடிக்க வைத்தார் ரஜினி.


வடிவேலு விஷயத்திலும் ரஜினி பெருந்தன்மையாக நடந்துகொள்வார். அதற்கான அறிகுறி... "கோச்சடையான்' படத்தில் ரஜினி, தீபிகா படுகோனே, சரத்குமார், ஷோபனா, "பொம்மலாட்டம்' ருக்மணி... என முக்கிய கேரக்டர்களுக்கு நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டாலும் கூட, நகைச்சுவைப் பாத்திரத் திற்கான நட்சத்திரம் இன்னமும் ஒப்பந்தம் செய்யப்படாததை சுட்டிக்காட்டுகிறார்கள். 


கைப்புள்ளயின் பலவீனம்!


""சினிமாவுல கெட் டுகெதர் சகஜமா நடக்கும். அங்கயெல்லாம் போயி... சினிமா புள்ளிகளோட நெருக்கம் வச்சுக்கணும். ஆனா வடிவேலு அண்ணன் அப்படியெல்லாம் போறதில்ல. இதுதான் அவரோட பலவீனம். "என்னா வடி வேலு புதுப்படம் நடிக்கலையா?'னு போற இடமெல்லாம் விசாரிக்கிறதால... வெளியில போறத தவிர்த்திட்டாரு. ஆனா தினமும் குரூப்பா ஒக்காந்து புதுப்புது காமெடிகளை ரிகர்ஸல் பண்ணி ஏகப்பட்ட கான்செப்ட்டுகள ஸ்டாக் வச்சிருக்காரு''  என்கிறார் வடிவேலுவின்  நண்பர் ஆதம்பாவா.


வடிவேலுவிடம் பேசினோம். ""எங்க அம்மாவுக்கு ஒடம்பு முடியாம மதுரையில அப்பல்லோ ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காக. பாக்கப் போனேன். முடியாம படுத்துக் கிடந்த நோயாளிகள்லாம் "வாப்பா வடிவேலு, நல்லா இருக் கியா வடிவேலு?'னு முகம் மலர்ந்து விசாரிச்சாக. இப்படி சின்னவுக... பெரியவுக... எல்லாரோட அன்பும், ஆசியும் எனக்கு இருக்கு. நல்லதே நடக்கும்'' என்றார் வடிவேலு.


கோட்ட தாண்டி வாங்க கைப்புள்ள!


-இரா.த.சக்திவேல்
Thanks to Nakkheeran

பள்ளிக்கூடத்தை பள்ளியறையாக்கிய ஆசிரியன்!

Posted: 07 Mar 2012 11:50 PM PST


பள்ளிக்கூடத்தை பள்ளியறையாக்கிய ஆசிரியன்!

""மிஸ்... எங்கெங்கள்லாம் கை வைக்கக் கூடாதோ அங்கயெல்லாம் பால்ராஜ் மாஸ்டர் கை வைக்குறாருங்க மிஸ்... ப்ராக்டிக்கல் மார்க்ல கைய வச்சுருவேன்னு சொல்லியே எங்க மேல கை வைக்கறாருங்க மிஸ்... அவர இந்த ஸ்கூல்லயிருந்தே தூக்கணும். இல்லைன்னா நாங்க எக்ஸாம் எழுத மாட்டோம்... எங்களுக்கு மார்க் முக்கியமில்லை மிஸ்... மானம்தான் முக்கியம் மிஸ்...'' என்று நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவிகள் அழ... தகவலறிந்த கீழ் கோத்தகிரி ஊர்மக்கள் திரண்டு... ""அந்த பால்ராஜ எங்க கையில கொடுங்க...'' என்று ஸ்கூல் முன் கொந்தளித்து குவிந்தனர்.


உடனே சோலூர்மட்டம் போலீஸார் கலவரம் ஏதும் நிகழாமல் தடுக்க டி.எஸ்.பி. மாடசாமி தலைமையில் குவிய... 6 மணி நேரம் போக்குவரத்து தடையாகி நீலகிரியே அதிர்ந்து போனது. 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கும் அந்தப் பள்ளியில் நடந்த விசாரணையில் 4 மாணவிகள் கண்ணீர் விட்டபடியே டி.எஸ்.பி. மாடசாமியிடம் புகார் மனு எழுதிக் கொடுக்க... போலீஸ் போர்ஸ் படையெல்லாம் இறக்கியே அந்த ஆசிரியர் என்ற தோலை போர்த்தியிருந்த காமக் கொடூரன் பால்ராஜ் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.


புகார் கொடுத்த அந்த நாலு மாணவிகளிடமும் நடந்தது குறித்து நாம் விசாரித்தோம். ரேணுகா (மாணவி களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியோ... ""சார்... நான் ப்ளஸ் ஒன் படிக்கும் போதே ப்ளஸ் டூ படிக்கும் அக்காங்கள்லாம் "பால்ராஜ் மாஸ்டர் ரூமுக்கு மட்டும் தனியா போயிராதே...'ன்னு சொல்லுவாங்க. நானும் என்ன ஏதுன்னு தெரியாம சரிங்கக்கான்னு தலையாட்டுவேன்.


ஆனா நான் ப்ளஸ் டூ வந்ததுக்கப்புறம் வொக்கேஷனல் குரூப் எடுக்கும் இந்த பால்ராஜ் மாஸ்டர்... ஒருநாளு என்னோட பாஸ்போர்ட் போட்டோவ என் பேக்குல இருந்து எனக்குத் தெரியாமலேயே எடுத்துக்கிட்டாரு. அடுத்தநாள் என்னை அவுரு ரூமுக்குக் கூப்பிட்டாரு.


என்னங்க சார்..?னு நான் போய் நின்ன போது... இதைப் பாருன்னு ஒரு புக்க காமிச்சாரு. அந்த புக்குல மாடலிங் பண்ற லேடிஸ்க அரை குறையா நின்னுட்டு இருந்தாங்க. அப்படி அரைகுறையா இருக்கற ஒரு லேடியோட உடம்புல இருக்கற தலையில என் போட்டோவ ஒட்டி வச்சிருந்தாரு.


எனக்கு கோபமாகி... "என்ன சார்? இப்படியெல்லாம் அசிங்கமா? அதக் குடுங்க சார்'னு கேட்டபோது... "இதை நான் பண்ணலைம்மா... அந்த விநாயகர் கோயில் பக்கத்துல இது கிடந்துச்சு. ஸ்கூல் விட்டதும் என் வீட்டுக்கு வா... இதை நான் கொடுத்துர்றேன்'னாரு.


"இல்லை இப்பவே குடுங்க சார்...'ன்னு கேட்டதுக்கு... "அப்படீன்னா... நான் சொன்னதை யெல்லாம் கேட்கணும்'னு பக்கத்துல வந்தவரு என்னைய தொடக் கூடாத இடத்துல தொட்ட போது நான் கூனிக் குறுகிப் போயிட்டேன்.


"ச்சே'ன்னு... நான் கைய தட்டி விட்டபோது "வெளிய சொன்னேன்னா... ப்ராக்டிகல் மார்க்ல கைய வச்சுருவேன்'னு மெரட்னாரு. நான் ஓடி வந்து க்ளாஸ் ரூம்ல அழுதிட்டிருந்தேன். அப்ப இந்த சுகந்திதான்... அந்த மாஸ்டரு என்கிட்டயும் இப்படித்தாண்டி நடந்துக்கிட்டாருன்னா...


"சரி... அழாதே... யாருகிட்டயும் சொல்லிராதே... நமக்குத்தான் அசிங்கம்'னு சொன்னா... ஆனா நான்தான் சொல்லுவேன்னு மிஸ்கிட்ட சொல்லிட்டேன்.'


சுகந்தியோ... "எக்ஸாம் பேப்பர திருத்த ணும்னு என்னைய ஒருநாளு அவரோட ரூமுக்கு கூப்புட்டவரு இறுக்கி கட்டிப் புடிச்சுட்டாருங்க சார்...'னு மேற்கொண்டு எதையும் பேச முடியாமல் அழுது விட்டாள் அந்த மாணவி.


மகேஸ்வரியோ... எங் கிட்டயும் அந்த மாஸ்டரு தப்பா நடந்துக்கிட்ட போது... "ஏன் சார்... நீங்க இப்படி பண்ணலாமா'ன்னு கேட்டேன். டென்ஷன்ல பண்ணிட்டேன்னு சொன்னாரு மாஸ்டர். ""அப்ப டென்ஷன்ல உங்க பொண்ணுக கிட்டயும் இப்படித்தான் நடந்துக்கு வீங்களான்னு கேட்டுட்டு அழுதுட்டே வந்துட்டேன்'' என்றாள் கண்ணீரைத் துடைத்தபடி.


கீழ் கோத்தகிரிப் பகுதி சமூக ஆர்வலர்களான வெல்ஸனும் ராம்குமாரும்... ""இந்த சின்னப் புள்ளைங்களுக்கு நடந்தது கொடுமையான விஷயம் சார். இதையெல்லாம் கேள்விப்பட்டு இந்த பால்ராஜ பற்றி விசாரிச்சப் போ... இங்கே சிவானந்தபுரம்ங்கற பகுதியில இருக்கற ஒரு ஸ்கூல் பொண்ண வீட்டுக்கு வரச் சொல்லி அந்தப் பொண்ண அனுபவிச்சிருக்கான். மார்க்கை கம்மி பண்ணிருவேன்னு சொல்லியே அந்தப் புள்ளைய அனுபவிச்சு கர்ப்பமும் ஆக்கி, பின்னால அந்த அப்பாவி பொண்ண கூப்புட்டுப் போயி கர்ப்பத்தை கலைச்சும் விட்ருக்கான் இந்தப் படுபாவி. இதுபோலவே இவன் கூடயே வொர்க் பண்ணிட்டிருந்த மாஸ்டரு ஒருத்தரு இவனுக்கு ப்ரண்ட்... அந்த மாஸ்டர் வீட்டுக்கு அடிக்கடி போய் அவுங்க மனைவிய எப்படியோ மயக்கி அனுபவிச்சிருக்கான் சார். இதைத் தெரிஞ்ச அந்த மாஸ்டர் கல்லாறுல விஷம் குடிச்சு செத்துப் போயிருக்கறாருங்க. இவனோட காம வெறிக்கு இப்படி பல பேர் ஆளாகியிருக்காங்க. இந்த பால் ராஜுக்கு டாக்டருக்குப் படிக்கற ஒரு பொண்ணும், ப்ளஸ் ஒன் படிக்கற பொண்ணும் இருக்கறாங்க. பாவம், இவனால அவுங்களுக்குதான் அவமானம். இவன கடுமையா தண்டிக்கணும்ங்க சார். அதுவரை நாங்கள் போராடுவோம்'' என்கிறார்கள் கோபமாய்.


பள்ளித் தலைமை ஆசிரியர் மூர்த்தியோ... ""இப்படியெல்லாம் நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கலை'' என்கிறார் ஒற்றை வரியில்.


விசாரணையின்போது... ""நான் படிக்கச் சொல்லி கடுமையா பேசுவேன் சார். படிக்கச் சொன்னதுக்காக இப்படியொரு அநியாயமான பழி போடறாங்க சார். ஏம்மா நீ சொல்லு... நான் உங்களத் தொட்டாவது பேசியிருக்கறனான்னு...?'' என பக்கத்தில் நின்றிருந்த மாணவியின் தோளில் தொட்டுக் கொண்டே நீ சொல்லு... என சொல்லிய பால்ராஜிடம்... ""அந்தப் பொண்ணு "தோள்லயிருந்து கைய எடுய்யா முதல்ல... பேசிக்கிட்டே எங்க முன்னாலேயே தொடறியேய்யா... பழக்க தோஷம் இப்பக்கூட போகமாட்டேங் குதா''ன்னு அந்த காமவெறியனிடம் கொஞ்சம் கடுமை காட்டியிருக்கிறார்கள் காக்கிகள்.


மாதா, பிதா, குரு என்ற மூன்றாம் இடம் வகித்து ஆசிரியப் பணி செய்து கல்வியை போதிக்க வேண்டிய காமவெறியன் மாஸ்டர் பால்ராஜுக்கு சிறைச்சாலையாவது சொல்லிக் கொடுக்கட்டும்... உன் முன் அமர்ந்திருக்கும் மாணவிகள் எல்லோரும் மனைவிகள் அல்ல... மகள்கள் என்று.


-அ.அருள்குமார்
Thanks to Nakkheeran

மார்பக புற்றுநோயா...அச்சப்படாதீங்க: நடிகை கவுதமி அட்வைஸ்

Posted: 07 Mar 2012 11:42 PM PST


மார்பக புற்றுநோயா...அச்சப்படாதீங்க: நடிகை கவுதமி அட்வைஸ்

சென்னை; இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சென்னையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.


அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் மையம் சார்பில் உலக பெண்கள் தினத்தையொட்டி சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரிதா ரெட்டி தலைமை தாங்கினார். நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, `மார்பக புற்றுநோய் தடுப்பு முறைகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.


நடிகை கவுதமி பேசியதாவது:


உலக அளவில் பெண்களை மிகவும் அச்சுறுத்தும் வகையில் மார்பகப் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால், மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியால் மார்பகப் புற்றுநோயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடியதுதான் என இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.


எனக்கு 32-வது வயதில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் பொதுவாக உடல் மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் மன ரீதியான பாதிப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனை, மருந்துகளைச் சாப்பிடுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மார்பகப் புற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.


மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை பெற்று குணம் அடைவது எளிது. இந்தப் பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு வரக்கூடியது என்பதால், மருத்துவரை முன்கூட்டியே அணுகி தங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்பதை பெண்கள் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.


தவறான உணவுப் பழக்கமும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்பதால் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவு முறையைப் பின்பற்றினால் இந்தப் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் என்பது தனிநபரைச் சார்ந்தது அல்ல. இதனை சமூகப் பிரச்னையாக பார்க்க வேண்டும். மார்பகப் புற்றுநோய் வந்துவிட்டால் அதை துணிச்சலோடும், மருத்துவரின் ஆலோசனையோடும் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் இணைந்து மார்பகப் புற்றுநோயற்ற உலகை உருவாக்குவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார் நடிகை கௌதமி.


இந்நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வி பேசியதாவது:


இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இதற்கு காரணம் பெண்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். பயம், அறியாமை மற்றும் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாதது போன்ற காரணங்கள் பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.


மீன், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும், காரம் மிகுந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தது முதல் பெண்கள் தினந்தோறும் தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பகங்களில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அது பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வெட்கப்பட்டு கொண்டோ, பயந்து கொண்டோ மறைப்பது நல்லதல்ல. பெண்களுக்கு தற்போது பயம் இல்லாத விழிப்புணர்வு தான் தேவை என்றார் அவர்.
Thanks to OneIndia

உலகிலேயே மகா கோடீஸ்வர இந்தியர் முகேஷ் அம்பானி!

Posted: 07 Mar 2012 11:41 PM PST


உலகிலேயே மகா கோடீஸ்வர இந்தியர் முகேஷ் அம்பானி!
டெல்லி: உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 19வது இடத்தைப் பிடித்துள்ளார் ரிலையன்ஸ் இந்தியா அதிபர் முகேஷ் அம்பானி. உலகப் பெரும் பணக்கார இந்தியர்களில் அவர்தான் நம்பர்.


ஒன்.


உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மொத்தம் 48 இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர். அதில் முதலிடத்தில் இருக்கிறார் முகேஷ்.


இவரது சொத்து மதிப்பு 22.3 பில்லியன் டாலராகும். உலக அளவில் 80வது இடத்தைப் பிடித்தவரான சாவித்ரி ஜின்டால் மற்றும் குடும்பத்தினர், 113வது இடத்தில் இருக்கும் சுனில் மிட்டல் மறறும் குடும்பத்தினர், 116வது இடத்தில் இருக்கும் குமார் பிர்லா, 118வது இடத்தில் இருக்கும் அனில் அம்பானி, 124வது இடத்தில் இருக்கும் திலிப் சங்க்வி, 133வது இடத்தில் இருக்கும் சசி, ரவி ரூயா, 153வது இடத்தில் இருக்கும் குஷால் பால் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.


கடந்த ஆண்டு முகேஷ் அம்பானிக்கு 4.7 மில்லியன் டாலர் அளவுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் அவரது நிலை சரியவில்லை. இந்தப் பட்டியலி்ல 2வது இடத்தில் இருப்பவர் லட்சுமி மிட்டல். இவரது சொத்து மதிப்பு 20.7 பில்லியன் டாலராகும். விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜி 15.9 பில்லியன் டாலர் சொத்துடன் 3வது இடத்தில் இருக்கிறார்.


உலகப் பட்டியலில் முகேஷ் 19


உலக அளவிலான கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு 19வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் மெக்சிகோ தொலைத் தொடர்புத்துறையின் பெரும் பணக்காரரான கார்லோஸ், ஸ்லிம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். ஸ்லிம்மின் சொத்து மதிப்பு 69 பில்லியன் டாலராகும்.மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 61 பில்லியன் டாலருடன் 2வது இடத்தில் நீடிக்கிறார். அமெரிக்க முதலீட்டுக் குரு வாரன் பப்பட் 44 பில்லியன் டாலர்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.


நல்ல நஷ்டம்!


உலகப் பெரும் பணக்காரர்களில் மூன்றில் ஒரு பங்குப் பேருக்கு கடந்த ஆண்டு நல்ல நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இந்தியர்களில் லட்சுமி மிட்டல்தான் பெரிய நஷ்டத்தை சந்தித்தவர். கடந்த ஆண்டு அவர் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அதாவது 10.பி்ல்லியன் நஷ்டத்தை சந்தித்துள்ளார். இதன் மூலம் டாப் 10 பட்டியலிலிருந்தும் நீங்கியுள்ளார். கடந்த ஆண்டு டாப் 10க்குள் இருந்த மிட்டல் தற்போது 21வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.


1226 பேர்


இந்த ஆண்டு உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மொத்தம் 1226 பேர் இடம் பிடித்துள்ளனர். இது சாதனை அளவாகும். இந்த பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 4.6 டிரில்லியன் டாலராகும். இது கடந்த ஆண்டை விட 100 பில்லியன் டாலர் அதிகமாகும்.


அதிகம் இருப்பது அமெரிக்காவில்தான்


மொத்தம் 58 நாடுகளில் இந்த பணக்காரர்கள் கூட்டம் பரவி விரவிக் கிடக்கிறது. உலகப் பெரும் பணக்காரர்கள் அதிகம் இருப்பது அமெரிக்காவில்தான். அடுத்த இடம் ஆசியா பசிபிக் 
பிராந்தியத்திற்கு. ஐரோப்பா, அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க கண்டங்கள் அதற்கடுத்த இடங்களில் வருகின்றன.


104 பெண்களும்


இந்த ஆண்டுப் பட்டியலில் 104 பெண்களும் இடம் பிடித்துள்ளனர். அதிலும், கிறிஸ்டி வால்டன்தான் பெண்களில் முதலிடத்தைப் பிடித்திருப்பவர். இவருக்கு உலகப் பட்டியலில் 11வது இடம் கிடைத்துள்ளது.
Thanks to OneIndia

வைகோவைக் குறி வைத்து கலிங்கப்பட்டி செல்லும் ஸ்டாலின்!

Posted: 08 Mar 2012 01:13 AM PST


வைகோவைக் குறி வைத்து கலிங்கப்பட்டி செல்லும் ஸ்டாலின்!

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரப் பாதையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதிமுக . பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அவர் பிரச்சாரத்தை முடிக்கும் வகையில், ஸ்டாலினின் பிரச்சாரப் பாதை மாற்றப்பட்டுள்ளது.


இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து ஸ்டாலின் வரும் 12, 13, 14 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். சங்கரன்கோவில் தெற்கு ரத வீதி தேரடி திடலில் பிரச்சாரத்தை துவக்கும் அவர் மேலநீலித நல்லூர், குருவிக்குளம் ஒன்றியங்களில் பிரச்சாரம் செய்கிறார். 14ம் தேதி இரவு திருவேங்கடத்தில் அவர் பிரச்சாரத்தை நிறைவு செய்வதாக இருந்தது. ஆனால், திடீரென ஸ்டாலினின் பிரச்சாரத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. திருவேங்கடத்திற்கு பதிலாக வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ஸ்டாலின் பிரச்சாரம் நிறைவடைவது போல பிரச்சாரப் பயணத்தின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.


இந்த தேர்தல் பிரச்சாரத்துக்காக கலிங்கப்பட்டியில் உள்ள தனது பூர்வீக வீட்டிலேயே தங்கியிருக்கும் வைகோ அங்கிருந்து தான் தினமும் பிரச்சாரத்துக்கு வந்து செல்கிறார். இதையடுத்து மதிமுகவை எதிர்த்து அதிமுகவினர் கலிங்கப்பட்டி பகுதியில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


இந் நிலையில் திமுகவும் வைகோவைக் குறி வைத்து கலிங்கப்பட்டிக்கு ஸ்டாலினை அனுப்புவது குறிப்பிடத்தக்கது.


காமராஜரா எம்ஜிஆரா?-நெப்போலியன் கேள்வி:


இந் நிலையில் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மத்திய இணையமைச்சர் நெப்போலியன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கினார்.


அவர் பேசுகையில், நான் இங்கு வந்தவுடன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு என்னை பேச வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பதை 


எனக்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.


காமராஜர் முதன் முதலில் 55,000 பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்ததாக கலைஞர் சொன்னபோது அதை மறுத்தவர் ஜெயலலிதா. மாறாக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். என்று கூறியவர். எனவே காமராஜரின் சொந்தங்களாகிய நீங்கள், வேட்பாளர் ஜவகர் சூரியகுமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்து 


ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.


பிரச்சாரத்தின்போது மின் தடையை கண்டித்து அவர் பாட்டும் பாடினார்.
Thanks to OneIndia

Thiyagam 08-03-2012 | Sun Tv Thiyagam Serial 8th March 2012

Posted: 07 Mar 2012 11:51 PM PST


Thiyagam 08-03-12 | Sun Tv Thiyagam Serial 8th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

7 இளைஞர்களை காதலில் விழ வைத்த அழகி: சென்னையில் பல கோடி சுருட்டல்

Posted: 07 Mar 2012 11:28 PM PST


7 இளைஞர்களை காதலில் விழ வைத்த அழகி: சென்னையில் பல கோடி சுருட்டல்
ஆன்லைன் காதல் மூலம் ஒரு நூதன முறையில் பண மோசடி செய்வது சென்னையில் அரங்கேறி வருகிறது. இது போல் ஆன்லைன் காதல் மோசடி மூலம் பணம் பறித்த பட்டதாரி பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஓட்டேரியில் கைது செய்யப்பட்டார்.


இப்போது அதே ஆன்லைன் காதல் மோசடியை ஆந்திர அழகி ஒருவர் சென்னையில் அரங்கேற்றி, பல கோடி பணத்தை சுருட்டி இருப்பதாக புகார்கள் வந்துள்ளது.


இந்த ஆன்லைன் அழகியிடம் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் உள்பட 7 பணக்கார இளைஞர்கள், தங்கள் மனதை பறிகொடுத்து, அவர் விரித்த காதல் வலையில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இவர்கள் 7 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். இந்த விபரீத மோசடி அழகி ஆந்திரமாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்.


இந்த மோசடி அழகி ஆன்லைனில் காதல் வலை விரிப்பதே ஒரு சுவாரஸ்யமான கதை. இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். பி.எஸ்.சி. பட்டதாரி. கம்ப்யூட்டர் ஞானம் உள்ளவர். தனது புகைப்படத்தை இன்டர்நெட் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்து, இவரை தொடர்பு கொள்ளும் இளைஞர்களிடம் இனிக்க, இனிக்க பேசுவார். இளைஞர்களின் வசதியான பின்னணியை கேட்டுத் தெரிந்து கொள்வார்.


தான் பணம் கறப்பதற்கு வசதியான ஏமாறும் இளைஞர்களை பார்த்து தேர்வு செய்வார். அதன்பிறகு காதல் வலையை விரித்து இளைஞர்களை விழ வைப்பார். திருமணம் வரை கதையை கொண்டு செல்வார். பின்னர் திடீரென்று தனது பெற்றோருக்கு இருதய ஆபரேஷன் என்றும், லட்சக்கணக்கில் பணம் தேவை என்றும் நெஞ்சை நெகிழ வைக்கும் சோக கதையை சொல்வார். தனக்கு பணம் இல்லை என்றும் நாடகமாடுவார். இதில் ஏமாந்து இரக்கப்படும் இளைஞர்களிடம் நைசாக பேசி லட்சக்கணக்கில் பணத்தை பிடுங்கி விடுவார்.


பெற்றோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கதை விடுவார். பின்னர் அந்த இளைஞர்களை நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வரவழைத்து பணத்தை பிடுங்குவார். பணம் கைக்கு வந்ததும், ஏமாந்த இளைஞனை கழற்றி விட்டு, விடுவார். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ளவே முடியாது. செல்போன் நம்பரையும் மாற்றி விடுவார். போலி முகவரியை கொடுத்துதான் இவர் செல்போன் கனெக்ஷனும் பெறுவார். தனது வீட்டு முகவரியை கூட போலியாகவே கொடுப்பார்.


இவரிடம் ஏமாந்த இளைஞர்கள் 7 பேரும் சென்னையில் பிரபலமாக உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்றுதான் பணத்தை கொடுத்துள்ளனர்.


ஒரு இளைஞர் தனது 3 சொகுசு கார்களை விற்று ரூ.30 லட்சத்துக்கு மேல் இந்த ஆன்லைன் மோசடி அழகியிடம் மோசம் போய் விட்டதாகவும் சோகமாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த அழகிக்கு சங்கீதா, அபர்ணா என்று வித, விதமான பெயர்களும் உள்ளது.


ஏமாந்த இளைஞர்களிடம் இந்த அழகி தன்னை ஒரு டாக்டர் என்றும், என்ஜினீயர் என்றும் கதை விட்டு ஏமாற்றி உள்ளார். இந்த அழகியை பொறி வைத்து பிடிக்க விசேஷ போலீஸ் படை ஒன்று களத்தில் இறக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை போலீசார் ஐதராபாத்துக்கு சென்று விசாரணை நடத்தி விட்டு வந்துள்ளனர்.


தலைமறைவாக இருக்கும் இந்த அழகியிடம் மேலும் இளைஞர்கள் ஏமாறாமல் இருக்க போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அழகி யாரையாவது இதே ஸ்டைலில் காதல் வலை விரித்து, மோசடி விழூகம் வகுத்தால் உடனடியாக சென்னை போலீசை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Thanks to Nakkheeran

நள்ளிரவில் அழுகின்ற குரல்: சேலத்தில் பரபரப்பு

Posted: 07 Mar 2012 11:26 PM PST


நள்ளிரவில் அழுகின்ற குரல்: சேலத்தில் பரபரப்பு
சேலம் நகரில் உள்ள அம்மாபேட்டை என்ற இடத்தில் இராமக்லிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வெளிப்புறத்தில் கட்டிட வேலைகள் நடந்து வருகிறது.

இப்போது இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பெரும்பாலான மக்கள் இரவில் சரியாக தூங்க முடியாத நிலையில் வீடுகளில் படுத்து கொண்டிருக்கின்றனர். அதேபோல வீடுகளில் உள்ள மின்விசிறிகள் ஓடாமல் இருப்பதால் இரவு நேரங்களில் எந்தவித சத்தமும் இல்லாமல் அமைதியக இருக்கிறது. வெகு தொலைவில் ஏற்படும் சத்தம் கூட மக்களுக்கு தெளிவாக கேட்டு வருகிறது.

இந்த அமைதியான வேளையில் நேற்று முன்தினம் இரவு இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்குள்லிருந்து ஒரு குழந்தை அழுகின்ற குரல் கேட்டுள்ளது. இரவு இரண்டு மணியளவில் இந்த சத்தத்தை அந்த பகுதியிலிருந்த மக்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே கேட்டுள்ளனர்.

மறுநாள் காலையில், கோவிலின் வெளிப்புறம் கட்டிட வேலைகள் செய்வது அம்மனுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அம்மன் குழந்தையாக மாறி தன்னுடைய வேதனையை அழுது வெளிப்படுத்தியுள்ளது என்றும், இல்லை அம்மனுக்கு வேண்டாத எதோ ஒரு வேலையை செய்துள்ளார்கள் அதனால்தான் அம்மன் குழந்தை குரலில் அழுதுள்ளது என்றும் ஆள் ஆளுக்கு ஆருடம் சொல்லிக்கொண்டிருந்தனர்.

உன்னமையில் என்ன நடக்கிறது என்று அறிந்துகொள முடிவு செய்த இளைஞர்கள் சிலர் கோவிலின் வெளியில் இரவு நேர்த்தி மறைந்திருந்து பார்த்தபோது, நள்ளிரவு நேரங்களில் காதல் வயப்படும் பெண் பூனைகள், தங்களின் இனபெருக்கத்துக்கு ஆன் பூனைகளை அழைப்பதும், அந்த சத்தத்தை கேட்டுவிட்டு பக்கத்தில் வரும் ஆன் பூனைகள் கொஞ்சம் கம்மிய குரலில் கத்துவதும், இரண்டு பூனைகளும் நெருங்கி வந்து இணையும் போது அந்த பூனைகளுக்குள் ஏற்படும் கிளுகிளுப்பு சத்தம் தான் குழந்தையின் அழுகை போல கேட்டுள்ளது.

மக்கள் யாரும் இல்லத நேரத்தில், மதில் சுவர்களின் மீது அமர்ந்து காதல் மொழி பேசிக்கொண்டிருந்த பூனைகளின் சத்தத்தை அம்மன் அழுகிறது என்று கதை கட்டியது தெரியவந்துள்ளது.
Thanks to Nakkheeran

Mutharam 08-03-2012 | Sun Tv Muthaaram Serial 8th March 2012

Posted: 07 Mar 2012 11:34 PM PST


Mutharam 08-03-12 | Sun Tv Muthaaram Serial 8th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 08-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 8th March 2012

Posted: 07 Mar 2012 11:17 PM PST


Vellai Thamarai 08-03-12 | Sun Tv Vellai Thamarai Serial 8th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 08-03-2012 | Sun Tv Uravugal Serial 8th March 2012

Posted: 07 Mar 2012 11:15 PM PST


Uravugal 08-03-12 | Sun Tv Uravugal Serial 8th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 08-03-2012 | Sun Tv kasthuri Serial 8th March 2012

Posted: 07 Mar 2012 11:15 PM PST


Kasturi 08-03-12 | Sun Tv kasthuri Serial 8th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Posted: 07 Mar 2012 10:41 PM PST



Nakkeeran 07-03-2012 | Free Download Nakeeran latest PDF This week | Nakkheeran 7th March 2012 ebook

Maruthani 08-03-2012 | Sun tv Marudhaani 8th March 2012

Posted: 07 Mar 2012 10:35 PM PST


Maruthani 08-03-12 | Sun tv Marudhaani 8th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

எதிர்காலத்தில் குஷ்பு தி.மு.க. தலைவராக வருவார்?

Posted: 07 Mar 2012 05:46 PM PST


எதிர்காலத்தில் குஷ்பு தி.மு.க. தலைவராக வருவார்?
எனதருமை பெரியோர்களே… தாய்மார்களே… ஐந்து மாநில தேர்தல் முடியும் வரை வாயை திறக்க வேண்டாம் என்று எனது நண்பர் ஒருவர் கூறியிருந்தார். நண்பரின் கருத்துக்களுக்கு நான் அதிகம் மதிப்பளிப்பவன் என்பதால், நேற்று இரவு வரை அமைதியாகவே இருந்துவிட்டேன்..


இன்று மேடைக்கு வந்து உங்களை எல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி தான்.


தி.மு.க.வினர் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஏன், நம்பமுடியவில்லையா? அதாவது, நில அகபரிப்புச் சட்டம் கொண்டு வந்ததுமே, அது தி.மு.க.வினருக்காக கொண்டு வரப்பட்டது… அதை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் கோர்ட்டு படியேறினார்கள் தி.மு.க.வினர்கள்.


ஆனால், அச்சட்டம் தி.மு.க.வினரை தாக்கிவிட்டு, இன்று அ.தி.மு.க.வின் அதிகார மையங்களை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறதே… ராவணன், நடராஜன், திவாகரன் ஆகிய ஆட்டம் போட்ட ராஜாக்கள் எல்லாம் நில அபகரிப்பு வழக்கில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதை பார்க்கும் தி.மு.க.காரன் சந்தோஷப்பட்டுத்தானே ஆக வேண்டும்.


அதைவிட தி.மு.க.வினர் மிகுந்த மகிழ்ச்சி அடையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை இந்த நேரத்தில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.


ஆமாம். தி.மு.க. வரலாற்றில் யாருக்குமே கிடைத்திடாத ஒரு பாக்கியம் குஷ்பூவுக்கு கிடைத்திருக்கிறதே? ஐ.நா. சபையில், இளைஞர்களின் எதிர்காலம் குறித்து உரையாற்ற, இளைஞரணியின் செயலராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வில் இருந்த ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததா?


அக்கட்சியின் இளைஞர்களின் இளைஞிகளின் ஆற்றலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அடையாளமாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் கனிமொழிக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததா?


இல்லை… நாடாளுமன்ற பேச்சால், இலக்கிய பேச்சால்… நாகரீக பேச்சால் சிறப்படைந்த திருச்சி அசோகனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததா?


இல்லை… உலக கோட்டீஸ்வரராக இருந்த பில்கேட்சே, சென்னையில் வீட்டுக்கு வந்து டிபன் சாப்பிட்ட தயாநிதி மாறனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததா?


இல்லையே… ஒரு வருடத்தில் தி.மு.க.வில் சேர்ந்து… அரசியலில் சூறாவளியாக சுற்றித்திரிந்து வரும் குஷ்பூவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதை எண்ணி எண்ணி,. தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி மகிழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவரது தொண்டர்களும் அப்படித்தானே இருக்க வேண்டும். அதுதான் நியாயம்.


ஒரு காலத்தில், தி.மு.க. சிக்கலில் சிக்கி சிதறும் தருணத்தில் தி.மு.க.வை தூக்கி நிறுத்தப்போகும் தலைவராக குஷ்பூ வரத்தான் போகிறார். அவரை எல்லா கோஷ்டிகளும், குறிப்பாக ஸ்டாலின் கோஷ்டியும் ஆதரிக்கும்… அழகிரி கோஷ்டியும் ஆதரிக்கும்…. கனிமொழி கோஷ்டியும் ஆதரிக்கும்….


என்ன இப்படி பேசுகிறான் அம்பலவாணன்… என்று யாராவது நினைத்தால்…


இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை எப்படி தோன்றியது என்று நினைத்துப்பாருங்கள்…


ஏ.ஓ.ஹூயும் என்ற வெள்ளைக்காரர் தான் காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தார். சிதறிக்கிடந்த இந்திய மக்களை ஒன்று சேர்க்க ஒரு அந்நியன் வந்ததை அன்று இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?


அதுபோலத்தான்… அண்ணன் தம்பி சண்டையால் உடையப் போகும் தி.மு.க.வை தாங்கிப்பிடிக்க குஷ்பு வந்தால், அனைத்து தரப்பும் சிரித்துக் கொண்டே குஷ்பு தலைமையை ஏற்கத்தானே போகிறது?


ஆகவே… யாராவது எதிர்காலத்தில் தி.மு.க.வில் நல்ல பதவியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள், உடனே செய்ய வேண்டியது என்ன?


குஷ்பூ மகளிர் மன்றம்… அல்லது குஷ்பூ பேரவை…. இல்லை ஐ.நா. கண்ட மங்கை பேரவை … ஏதோ ஒன்று ஆரம்பித்து வையுங்கள். எதிர்காலத்தில் பயன் அடையலாம்.


எதிர்கால தி.மு.க. தலைவர் குஷ்பூவுக்கு எனது மனம் திறந்த பாராட்டுக்கள். அந்த காட்சியை காண பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டுகளை கடந்து வாழ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்…


சரி மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலுக்கு வந்துவிடுகிறேன்… 


எப்படியோ… மன்மோகன் பிழைத்துக் கொண்டார். வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரை மன்மோகனை பிரதமர் பதவியிலிருந்து தூக்கவே முடியாது. உ.பி. தேர்தலில் அடி வாங்கிய ராகுல் எழுந்து உட்கார இன்னும் ஐந்து வருடம் தேவைப்படும்…


அதனால், மன்மோகனுக்கு ஜாலி தான். ஆனால் இந்திய மக்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.


நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் பத்து ஆண்டுகளாக பிரதமர் பதவியை வகித்தார் என்ற பெருமையைத் தவிர மன்மோகனுக்கு கிடைக்கப்போவது எதுவுமே இல்லை என்று சொல்லி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.
Thanks to TamilLeader

சில்க், மர்லின் மன்றோ கதைகள் இன்னமும் முடியவில்லையே?

Posted: 07 Mar 2012 05:44 PM PST


சில்க், மர்லின் மன்றோ கதைகள் இன்னமும் முடியவில்லையே?
சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் பெண்ணிய புரட்சி தேவதை ஜெர்மேன் க்ரியர் 'ப்ரா என்பது ஒரு அபத்தமான கண்டுபிடிப்பு' என்று சொல்லி அதைப் பெண்ணியப் போராட்டத்துக்கு மையக் கருப்பொருள் இலக்காக்கினார். 'மார்பின் அளவே ஒரு பெண்ணின் மதிப்பை உயர்த்தும் அல்லது குறைக்கும் அடையாளமாகிப் போனதன் சின்னம் பிரா' என்றார். ஆகவே பெண்களே இந்த உள்ளாடையைப் புறக்கணியுங்கள்! உங்கள் மதிப்பு உங்கள் மார்பளவில் இல்லை! பெண்களை வெறும் செக்ஸ் பொம்மைகளாக மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆண்கள் கருதுவதை எதிர்க்கப் பெண்கள் எடுத்த ஆயுதம் பிரா. 1960-ல் நடந்த மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டியை எதிர்த்து சுமார் 400 பெண்கள் அது நடந்த அரங்கத்துக்கு வெளியே கூடி பிராக்கள், போலி கண் இரப்பைகள். குதிகால் உயர்ந்த ஷூக்கள் எல்லாவற்றையும் அடுக்கி தீயிட்டுக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.


இந்த பிரா கொளுத்தும் இயக்கம் வரலாற்றுப் புகழ் பெற்றது. பின்னாட்களில் தீவிர பெண்ணியக்கவாதிகளின் அடையாளமாகி விமர்சனத்துக்குள்ளானது. பெண்ணியம் என்பது கட்டுப்பாடற்ற வாழ்வும் செக்ஸ் விடுதலையும் கோரும் அடையாளமாக அர்த்தம் கொள்ளப்பட்டது. ஆனால் வெகு விரைவிலேயே இவர்களைப் புறம்தள்ளுவது போல பிரா விற்பனை என்பது பல கோடி மில்லியன் டாலர் மதிப்புகொண்ட மிகப் பெரிய வணிக மார்க்கெட்டாக உருவானதுதான் யதார்த்த உண்மை. அதை ஆர்வத்துடன் ஸ்வீகரித்த பெண் இனம் அறுபதுகளின் பெண்ணிய இயக்கத்தை மறந்தே போனது?


பிராவின் சரித்திரத்துடன் பெண்களின் சமூக அந்தஸ்து இந்தக் கால கட்டத்துடன் அதுவும் சவூதி அரேபியாவில் வினோதமாகப் பின்னப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் அங்கு வாழும் நம்ரதா ஜக்கரியா என்ற பத்திரிகையாளர். சவூதி அரேபியாவில் ஒரு புது வகையான அரேபிய வசந்தம் மலர்ந்திருப்பதாகச் சொல்கிறார். பெண்களே பெண்களின் உள்ளாடைகளை விற்கலாம் என்று சமீபத்தில் அரசு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதாம்.


இஸ்லாமியருக்கு மிகப் புனித ஸ்தலமான மெக்கா இருக்கும் சவூதி அரேபியாவை ஆளும் மன்னரின் ஆட்சி பெண்களின் நடத்தையும் உடுப்பும் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்று மிகத் தெளிவாகச் சொல்லிவருகிறது. பெண்கள் தலையிலிருந்து கால் வரை மூடும் உடுப்பை அணிந்துதான் வெளியில் வரவேண்டும். ஆண்களுடன் பெண்கள் பொது இடங்களில் வேலை செய்வதை மத அடிப்படைவாதிகள் எதிர்க்கிறார்கள். வெளி ஆணுடன் எந்தத் தொடர்பும் கூடாது என்கிறார்கள். மால்கள் போன்ற இடங்களில் ஆண்கள் மட்டுமே பணி செய்யும் கடைகளுக்குத் தனியாக ஆண்துணை இல்லாமல் பெண்கள் செல்லமுடியாது. சவூதி அரேபியாவில் பல பெண்கள் மருத்துவர்களாக, பேராசியர்களாக பணி செய்தாலும், மால்களில் பெண்கள் வேலை செய்ய இதுவரை அனுமதி இருந்ததில்லை. அதனால் பெண்கள் தங்கள் உள்ளாடைகளை வாங்குவதாக இருந்தாலும், புர்க்கா அணிந்து சங்கடத்துடன் அல்லது முணுமுணுத்துக்கொண்டே, கூட வரும் கணவனுடனோ சகோதரனுடனோ கடைக்குச் சென்று தங்களுக்குத் தேவைப்படும் உள்ளாடைகளை வாங்கவேண்டியிருந்தது. 2006-ல் பெண்கள் உடுப்பு, மேக்கப் சாமான்கள் விற்பனை செய்யும் இடங்களில் ஆண்கள் வேலை செய்யக்கூடாது என்று சட்டம் வந்தது. ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை. நல்ல வேளையாக ஃபேஸ் புக் வலைதளம் பெண்களின் சங்கடத்தைக் குறைக்கும் வகையில் பின்னி எடுத்துவிட்டது. ரீம் ஆசாத் என்ற ஆசாமி, பெண்களை வேலையில் அமர்த்தாத, பெண்கள் அணியும் உள்ளாடைகளை விற்கும் கடைகளில் பெண்கள் ஆடைகள் வாங்குவதற்குத் தடை விதிக்கவேண்டும் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அந்தப் பிரச்சாரம் கிளப்பிய சூட்டில் மன்னர் அப்துல்லா விழித்துக்கொண்டு 2006 சட்டத்தை அமலாக்கினார். சவூதிப் பெண்களுக்கு இப்போது மன்னர் ஹீரோ ஆனது மட்டுமல்ல, பெண்கள் உள்ளாடைப் புரட்சியின் முகமாகவும் ஆகிவிட்டார் என்கிறார் நம்ரதா.


இது என்ன பெண்ணியப் புரட்சி, பெண்ணுக்குப் பெண் தான் உள்ளாடை விற்க வேண்டும் என்பதில் என்ன புரட்சி. மறுபடியும் இன்வேற்றுமைக் காட்டும் செய்கைதானே? இதன் உள்ளடக்கம் வேறு. பெண்களுக்கு இதுவரை கிடைத்திராத துறையில் வேலை வாய்ப்பைப் பெருக்கும் முதல் படி இது என்கிறார் நம்ரதா. எப்படியோ அற்ப உள்ளாடை இன்று சவூதிப் பெண்களின் விடுதலையின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது.


வேடிக்கை இந்த மார்புக் கச்சை விவகாரம். தென்னிந்தியாவில் முக்கியமாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மிகக் கெடுபிடியான ஜாதி அமைப்பின் தீவிர சட்டதிட்டத்தை எதிர்த்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த மார்புக் கச்சைப் போராட்டத்தைப் பற்றிப் பெண்ணியவாதி ஜெர்மேன் க்ரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெண்கள் மார்பைப் போர்த்தவே கூடாது என்ற உயர் ஜாதி விதி பெண்களைக் கேவலமாக நடத்தியதன் நிரூபணம் என்று மேற்கத்திய பெண்ணியவாதிகளுக்குத் தெரிந்திராது. மார்பை மறைப்பது அந்தஸ்தின் அடையாளம். இறைவனுக்கு முன்னால் ஆண்கள் வெற்று மார்புடன் செல்ல வேண்டும் என்றால், பிறவியில் உயர்ந்த ஆண்களுக்கு முன் கடை நிலை அந்தஸ்து கொண்ட பெண்கள் மார்பை மறைத்துக் கொண்டு எப்படி வரலாம் என்பது மேட்டுக்குடி ஆண்களின் மேல்ஜாதி வர்க்கத்தின் வாதமாயிற்று. என்ன சோகம் என்றால், நெல்லையில் நாடார் பெண்கள் மார்புக் கச்சை அணிய அனுமதி கோரிப் போராடியபோது திருவிதாங்கூர் மகாராணியே அதை ஏற்க மறுத்தாராம். உயர் ஜாதிப் பெண்களுக்கு மட்டுமே அச்சலுகை என்றாராம். உயர் ஜாதி நம்பூதிரி ஆண்களுக்கு முன் நாயர் பெண்களுக்குக் கூட மார்பைப் போர்த்தும் உரிமை இருக்கவில்லை. 19ஆம் நூற்றாண்டு வரை இப்படிப்பட்ட அவலம் இருந்தது. அதுவே பலரை கிறித்துவ மதத்துக்கு மாறவைத்தது. சென்னையின் ஆங்கிலேய கவர்னர் வற்புறுத்தியதன் பேரில் திருவிதாங்கூர் மஹாராஜா அனுமதி அளித்தார் ஒரு சரத்துடன், கீழ்ஜாதிப் பெண்கள் மார்பைப் போர்த்தலாம் ஆனால் உயர்ஜாதிப் பெண்கள் போர்த்தும் வகையில் அல்ல என்று!


பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பிராமணப் பெண் வித்யா பாலன் 'டர்டி பிக்ச'ரில் தனது மார்பை தாராளமாகக் காட்டி ஊலாலா என்று காமம் சொட்டும் பாடலைப்பாடி மார்பகங்களை உயர்த்தி உயர்த்தி பெருமூச்சு விடுவதைக் கண்டிருந்தால் மஹாராஜா என்ன செய்திருப்பார் என்று தெரியவில்லை. அதைக் கண்குளிரப் பார்த்தாலும் ஆண்கள் பெண்களுக்கு எப்படி இத்தனை துணிச்சல் வரலாம் என்று கேட்பார்கள். கேட்கிறார்கள். 'டர்டி பிக்சர்'படமாக்கப்பட்ட விதம் மகா சொதப்பல். இருந்தாலும் சில்க் போன்ற ஒரு கதாபாத்திரத்தை வித்யா பாலன் ஏற்று நடித்தது மகா துணிச்சலான விஷயம் என்று பல ஆஃப் பீட் கதாபாத்திரங்களில் அபாரமாக நடித்திருக்கும் ஷபானா ஆஸ்மி வியக்கிறார். பரிநீத்தாவில் மிக அடக்கமான பெண் பாத்திரத்தில் நடித்திருக்கும் வித்யா பாலன், செக்ஸை ஆனந்தமாக அனுபவித்து, பாசாங்குத்தனமில்லாத சில்க் என்ற பாத்திரத்தை ஏற்றது பலரை ஆச்சரியப்படுத்தியது. பட உலகில் அத்தகைய செயல் ரிஸ்கானது. அவரது பெயர் கெடலாம், மார்கெட் சரியலாம். வித்யா பாலனே முதலில் சற்று பயந்ததாகச் சொல்கிறார். ஆனால் செக்ஸ் காட்சிகள் ஆபாசத்தின் எல்லையைத் தொடாது என்று இயக்குனரும் படத் தயாரிப்பாளரும் உறுதி அளித்தார்கள். நடிக்க நடிக்க அந்தக் கதாபாத்திரம் தன்னுள் புகுந்ததாகச் சொல்கிறார் வித்யா, தன் உடலை ரசிக்கும் பெண்ணாக, செக்ஸ் என்பது அசிங்கமான வார்த்தையோ செயலோ அல்ல என்று புரிந்துகொண்டதாக.


'டர்டி பிக்சர்' வெளியான தருணத்தில் நண்பர் மணிவண்ணன் லண்டனிலிருந்து தொலைபேசியில் அழைத்து என்னிடம் படத்தைப் பற்றி கருத்துக் கேட்டார். 'பெண்ணை உதாசீனப்படுத்துவதாக மறுபடியும் பெண் கவர்ச்சியை மையமாக வைத்துச் செய்யப்படும் வியாபாரத் தந்திரமில்லையா?" என்று கேட்டார். நான் அதுவரை படத்தைப் பார்த்திருக்கவில்லை.


அதைப் பற்றின செய்திக்குறிப்புகள் வித்யா பாலனின் பேட்டிகள் ஆகியவையைப் பார்த்ததில், பெண் பாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதில் வரவேற்கத்தக்கப் படம் என்று சொன்னேன். கட்டுப்பெட்டி சமூகத்தில் பொய்மைகள் நிறைந்த வாழ்வியலில் அவற்றையெல்லாம் சவால்விடும் வகையில் தன்னிச்சையாக வாழ நினைத்த ஒரு பெண்ணின் கதை சுவாரஸ்யமானது. அவளை ஆண்கள் மோகித்தார்கள். பெண்கள் வெறுத்தார்கள். மோகித்தவர்கள் அவள் கிட்ட நெருங்கியதும் அரண்டு ஓடினார்கள். அவள் அவர்களது பேடித்தனத்தைக் கண்டு முதலில் நகைத்தாள். பரிகாசித்தாள். கடைசியில் விட்டில் பூச்சி போல அவள் வளர்த்த ஆகுதியில் மாண்டுபோனாள். எத்தனை சுவாரஸ்யமான கதாபாத்திரம்! சினிமா என்னும் மீடியம் தர்ம சத்திரம் நடத்துவதல்ல. வியாபார நோக்கமில்லாமல் எந்தப் படம் வெளிவரும்? ஆனால் இது ஒரு பெண் பாத்திரத்தைச் சுற்றியே பின்னப்பட்டது. கடைசியில் அவள் தோற்றாலும் அவளே திரையை நிறைப்பவள். அவள் வெறும் அழகிய பதுமை அல்ல, மற்ற ஹிந்தி சினிமாவில் வருவதைப் போல. அந்த வகையில் சில்க் பாத்திரம் முக்கியமானது.


டர்டி பிக்சர் சில்க் ஸ்மிதாவின் சொந்த வாழ்வை ஆதாரமாக வைத்துப் ப்ன்னப்பட்ட கதை என்று சொல்லப்படுகிற்து. சில்க் ஸ்மிதா என்ற நபர் எப்படி வாழ்ந்தார், தனது செயல்களுக்கு அறிவார்ந்த விளக்கம் கொண்டவரா அல்லது சந்தர்ப்பக் கைதியா என்று எனக்குத் தெரியாது. அவருடைய கண்கள் அதி வசீகரமானவை. மார்லின் மன்ரோவுக்கு இருந்த செக்ஸ் கவர்ச்சி இவருக்கும் இருந்தது. அவரது காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா பல ஆண்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். ஆனால் யாரும் அவரைத் தன் மனைவியாகக் கற்பனை செய்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். காம இச்சைக்கு மட்டுமே அவர் லாயக்கு என்று நினைத்திருப்பார்கள். உலகம் பாசாங்குத்தனம் நிறைந்தது என்று சில்க் ஸ்மிதாவும் மார்லின் மன்ரோவும் விரைவிலேயே புரிந்து கொண்டிருக்க வேண்டும். மிகத் துணிச்சல் மிக்கவர்களாக வெட்கமற்றவர்களாக காட்சி தந்த இருவருக்குள்ளும் மிக நுட்பமான, நொறுங்கிப்போகும் பலவீன மனசு இருந்தது அவர்களது தற்கொலை செய்தி வந்தபோதுதான் தெரிய வந்தது. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தி வந்தபோது எனக்கு உண்மையில் தூக்கிவாரிப்போட்டது இன்றும் நினைவுக்கு வருகிறது. அவரின் ஆளுமைக்குப் பொருந்தாத செயலாகப் பட்டது. உள்ளுக்குள் அவர் எத்தனை காயம் பட்டிருப்பார் என்று யோசனை வந்தது. ஷோபா, படாபட் ஜெயல‌க்ஷ்மி என்று பெண் நடிகைகள் தமிழ்த் திரை உலகில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள், அவர்கள் மனத்தில் எப்படிப்பட்ட கொந்தளிப்புகள் அத்தகைய முடிவுக்கு அவர்களை விரட்டின என்கிற உண்மை யாருக்கும் தெரியவராது. எல்லா தற்கொலைக்கும் பின்னால் ஒரு கோபம் இருப்பதாக மனோதத்துவ வல்லுனர்கள் சொல்கிறார்கள். இவர்கள் எல்லோருக்குமே பாசாங்குத்தனம் மிகுந்த ஒட்டு மொத்த சமூகத்தின் மேல், முக்கியமாகத் தங்களை ஏமாற்றிய ஆண்கள் மேல் மிதமிஞ்சிய கோபம் இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். பல நடிகைகள் தற்கொலை விளிம்பிற்குத் தள்ளப்பட்டு விதிவசத்தால் உயிர்தப்பியிருப்பார்கள். பெண்ணிய சமூக ஆய்வாளர்களுக்கு ஒரு அருமையான, கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஆய்வுக்கான கருப்பொருள் இது என்று நான் நினைக்கிறேன்.


நாகரிகமான முற்போக்குப் பார்வைகொண்ட கதாபாத்திரம் ஏற்று நடித்தாலும் நமது நடிகைகளுக்கு அது நடிப்புடன் நின்றுவிடுவதாகத் தோன்றுகிறது. அவர்களுக்கு மத்திய வகுப்பின் தார்மீக மதிப்பீடுகள் முக்கிய மாகிவிடுகின்றன. திருமணம் என்கிற பந்தம் பாதுகாப்புக்குத் தேவைப்படுகிறது. அதை அவர்கள் கோருவது கூட அபத்தம் என்கிற எண்ணத்தை எதிர்கொள்வோம் என்று அவர்கள் நினைக்காதது எப்படி என்பதுதான் ஆச்சரியம்.


அவர்களுடன் சல்லாபித்து உறவு கொண்ட ஆண்கள் அதற்குத் தாங்கள் உடன்படமுடியாது என்று தெரிவிக்கும்போது நொறுங்கிப் போகிறார்கள். திக்கற்றுப்போனதுபோல, ஏமாற்றப்பட்டதுபோல உணர்கிறார்கள். உன்னுடன் படுக்கமட்டும்தான் நானா என்று மிதமிஞ்சிய கோபம் வருகிறது. அந்தக் கோபம் மட்டுமே அவகளைத் தற்கொலைக்கு விரட்டும் என்று தோன்றவில்லை. மிதமிஞ்சிய பீதியும், பாதுகாப்பு இல்லாத உணர்வும், அநியாயமாய் தோற்றுப்போனோம் என்கிற ஆற்றாமையும் அவர்களை அந்த விபரீத முடிவுக்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். அவர்கள் நிச்சயமாக அதைத் தங்கள் சமிக்ஞைகளி நேயமும் சூட்சுமமும் சுற்றிலுமுள்ளவர்களுக்கு இல்லாததாலேயே இத்தகைய மரணங்கள் நேர்வதாகத் தோன்றுகிறது.


ஒரு வேளை சில்க் ஸ்மிதாவும், மார்லின் மன்ரோவும் தற்கொலை செய்து கொள்ளாமல் எலிஸபெத் டேய்லர் வாழ்ந்ததுபோல பல பேரை மணந்து, பிரிந்து, மணந்து, வயதாகி இயல்பாக இறந்திருந்தால் இந்த அளவுக்கு இன்றும் பரிவுடன் ஏக்கத்துடன் நினைவுகூறப் பட்டிருக்கமாட்டார்களோ என்னவோ. அவர்கள் சுதந்திரமாக தங்களுக்குப் பிடித்தவிதத்தில் வாழ்ந்தார்கள். பெண்ணியச் சிந்தனையோ மார்புக்கச்சை எரிக்கும் அல்லது அணியும் உரிமைக்கான போராட்டமோ அவர்களது நிழலுக்கருகில் கூடச் சென்றிராது. இது என் உடல், அதை உபயோகிப்பது என்னுடைய சுதந்திரம் என்று கோஷம் போடாமல் நினைத்தவர்கள் அவர்கள். ஆனால் செய்கையில் காட்டிய துணிச்சல் மனத்தில் இருக்கவில்லை. ஆண் சமூகம் தங்களை விழுங்கிவிடும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. தாங்கள் சூறையாடப்பட்டோம் என்று உணர்ந்தபோது அவர்கள் போர்த்தியிருந்த மாயை விலகிற்று. தூக்குக் கயிறும் தூக்க மாத்திரைகளும் விடிவுக்கான மார்க்கமாகப் பட்டன.


தங்களது தற்கொலை மூலம் அமரத்துவம் பெற்றார்கள் சில்க் ஸ்மிதாவும் மார்லின் மன்ரோவும். ஆனால் பாவம் அதை அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். அவர்களது கதை இன்னமும் பின்னப்படுகிறது.


நன்றி : வாசந்தி (குமுதம் தீராநதி)

சசிகலாவை மறந்துவிட்ட அதிஷ்ட தேவதை, இன்று லேசாக சிரித்தார்!

Posted: 07 Mar 2012 05:40 PM PST


சசிகலாவை மறந்துவிட்ட அதிஷ்ட தேவதை, இன்று லேசாக சிரித்தார்!
சமீப காலங்களில் சசிகலாவின் காலை வாரிவிடும் அதிஷ்டம், இன்று கைகொடுத்திருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கை சில நாட்களுக்கு ஒத்திவைக்க அவருக்கு லட்டு போல கிடைத்திருக்கிறது, பெங்களூருவில் நடைபெறும் வக்கீல்கள் போராட்டம்!


சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூவரில் ஒருவர்கூட வரவில்லை. இவர்களுக்கு பதிலாக அவர்களது வக்கீல்கள் வந்தார்கள்.


பாதுகாப்பு காரணமாக தமது கட்சிக்காரர்களால் வர முடியவில்லை என மனு தாக்கல் செய்தார்கள்.


வக்கீல் மணிசங்கர், "பெங்களூருவில் சூழ்நிலை சரியில்லை. வக்கீல்கள் போராட்டம் நடக்கிறது. எங்கள் கட்சிக்காரரின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும். சில வக்கீல்கள் இந்த நீதிமன்றத்துக்கு உள்ளே வரமுடியாமல், நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருக்கிறார்கள். வக்கீல்களின் பிரச்னை முடிவுக்கு வந்ததும், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என்று வக்கீல்களின் போராட்டத்தை காரணமாக காட்டினார்.


இந்தக் காரணத்துக்காக வழக்கை ஒத்தி வைப்பதா என்ற தயக்கம் நீதிபதியின் முகத்தில் தெரிந்தது.


அவர் தயங்குவதைப் பார்த்த வக்கீல் மணிசங்கர், எதற்கும் இருக்கட்டும் என்று, சசிகலா வராததற்கு மற்றொரு காரணத்தையும் தூக்கிப் போட்டார். "மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கண்சிகிச்சை பெற்று வருவதால் சசிகலாவால் ஆஜராக முடியவில்லை" என்றார்.


இதற்கும் நீதிபதி தயங்கி யோசித்துக் கொண்டிருந்தபோதுதான், நாம் குறிப்பிட்ட எதிர்பாராத அதிஷ்டம் அடித்தது.


வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் வக்கீல்களில் சிலர், திபுதிபு என்று இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த கோர்ட் ரூமுக்குள் பிரவேசித்தார்கள். "வெளியே வக்கீல்கள் போராட்டம் நடக்கிறது. நீங்கள் இங்கே வழக்கு நடத்துகிறீர்கள். உடனடியாக உங்களது அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி விட்டு போராட்டத்துக்கு ஆதரவாக வெளியேறுங்கள்" என்றார்கள்


இந்த திடீர் குறுக்கீட்டால் ஆத்திரமடைந்த நீதிபதி, "நீங்கள் எல்லாம் யார்? இந்த வழக்கில் யாருடைய தரப்பில் ஆஜராக வந்தீர்கள்? நீங்கள் வக்கீல்கள்தானா? நீதிமன்றத்திற்கு எல்லாம் தெரியும். நீதிமன்றத்தின் கௌரவத்தை கருத்தில் கொண்டு இங்கிருந்து வெளியேறுங்கள்" என்றார் கோபத்துடன்.


சொல்லி வைத்தாற்போல அவர்கள் வெளியேறினர்.


விடுவாரா வக்கீல் மணிசங்கர்? "பார்த்தீர்களா? பார்த்தீர்களா? நீதிமன்றத்துக்கு உள்ளேயே எனது கட்சிக்காரருக்கு பாதுகாப்பு கிடையாது. வக்கீல்கள் போராட்டம் முடியும்வரை 2 வாரங்களுக்காவது வழக்கை தள்ளி வையுங்கள்" என்று சரியான நேரத்தில் பிட்டைப் போட்டார்.


போராட்டக்காரர்கள் கோர்ட்டுக்கு உள்ளேயே வந்து விட்டதை நேரில் பார்த்த பின்னர், நீதிபதியாலும் மறுக்க முடியவில்லை. அடுத்த விசாரணையை மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


சரி. சரியான நேரத்தில் திபுதிபுவென உள்ளே வந்த இளம் வக்கீல்கள், தாங்களாக சுயமாகவே வந்தார்களா? அல்லது, நேரம் குறித்து கொடுக்கப்பட்டு வந்தார்களா?
Thanks to Viruvirupu