TV SHOWS | MOVIES | TV SERIALS |
- மலையாள தயாரிப்பாளர் மீது நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா புகார்: வழக்கு தொடரவும் முடிவு
- கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க வரும் பிரசார வீடியோ படம் 'திருவாளர் முத்து'!
- Aratai arangam 04-03-2012 | Sun Tv Aratai arangam 4th March 2012
- ஷகீலாவுக்கு தண்டனை கிடைக்குமா?...ஆபாசப் பட வழக்கில் விரைவில் 'ஜட்ஜ்மென்ட்'!
- Nijam 04-03-2012 | Sun Tv Nijam 4th March 2012
- Oru vaarthai Oru Laksham 04-03-2012 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 4th March 2012
- kadhalil sodhapuvadu yeppadi Spl Show 04-03-2012 | Jaya tv Shows Actor Siddharth Sp lInterview 4th March 2012
- Lakshmi Sahasranamam 04-03-2012 | Vijay Tv Lakshmi Sahasranamam 4th March 2012
- Intha Vaara Rasi Palan 04-03-2012 | Vijay Tv Shows Intha Vaara RasiPalan 4th March 2012
- Nanayam Vikatan 11-03-2011 | Free Download Nanayam Vikadan PDF this week | Nanayam Vikatan 11th March 2012 Latest
- Vinayagar Thiruvilayadal 04-03-2012 | Sun Tv Vinayagar Thiruvilayadal 4th March 2012
- Top 10 Movies 04-03-2012 | Sun Tv Top 10 Movies 4th March 2012
- Deiva Darisanam 04-03-2012 | Sun Tv Deiva Darisanam 4th March 2012
- SunTv news 04-03-2012 Morning 7 am | Sun Tv News 04-03-2012 | Sunnews 4th March 2012
- Kalyana Maalai 04-03-2012 | Sun Tv Kalyana Maalai 4th March 2012
- Raasipalan 04-03-2012 | Sun Tv Rasipalan This week 4th March 2012
- “அண்ணன் சும்மா ஜாலியா விரலை நீட்டினாருங்க!”
- Intha Naal Iniya Naal 04-03-2012 | Sun Tv Sugisivam in Intha Naal Iniya Naal
- அதிக அளவில் வெளியாகும் ஆபாசப் படங்கள் : நடவடிக்கை என்ன?
- Dinamalar E-paper 04-03-2012 | Free Download Dinamalar Daily Epaper PDF | Dinamalar 4th March 2012
- Dinakaran E-paper 04-03-2012 | Free Download Dinakaran today Epaper PDF | Dinakaran 4th March 2012
- மூன்று வயது சிறுவனின் வயிற்றில் உருவான கரு!
- Dinamalar Varamalar Book 04-03-2012 | Free Download Varamalar E-book PDF Paper | Dinamalar Varamalar 4th March 2012
- Dailythanthi E-paper 04-03-2012 | Free Download Dinathanthi PDF today ePaper | Dinathanthi 4th March 2012
- அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்?
மலையாள தயாரிப்பாளர் மீது நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா புகார்: வழக்கு தொடரவும் முடிவு Posted: 03 Mar 2012 10:53 PM PST மலையாள தயாரிப்பாளர் மீது நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா புகார்: வழக்கு தொடரவும் முடிவு நடிகை ஸ்ரேயா மலையாள பட அதிபர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார். நடிகை ஸ்ரேயா நடித்து அண்மையில் வெளிவந்த மலையாள படம் போக்கிரி ராஜா. அதில் மம்மூட்டி, பிருத்விராஜ், ரியாஸ்கான், சரண்ராஜ், காதல் தண்டபாணி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்ணன் தம்பியான மம்முட்டி, பிரித்விராஜில் ஸ்ரேயா தம்பியைக் காதலிக்கிறார். தனது தம்பியின் காதலை சேர்த்து வைக்க அண்ணன் போராடுவது தான் கதை. இந்த படத்தை தாமஸ் ஆண்டனி என்பவர் தயாரித்துள்ளார். இந்நிலையில் தாமஸ் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார். இது குறித்து ஸ்ரேயா கூறியதாவது, போக்கிரி ராஜா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே அதை வேறு மொழிகளிலும் டப் செய்து வெளியிடக் கூடாது என்று நிபந்தனை விதித்து தான் நடிக்க ஓகே சொன்னேன். அதற்கான ஒப்பந்தத்தில் நானும், தாமஸ் ஆண்டனியும் கையெழுத்திட்டுள்ளோம். இந்நிலையில் ஒப்பந்தத்தை தாமஸ் மீறிவிட்டார். அதனால் அவர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். போக்கிரி ராஜா படத்தை தமிழ் உள்பட வேறு எந்த மொழியிலும் டப் செய்து வெளியிட தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானித்திருக்கிறேன் என்றார். Thanks to OneIndia |
கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க வரும் பிரசார வீடியோ படம் 'திருவாளர் முத்து'! Posted: 03 Mar 2012 10:47 PM PST கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க வரும் பிரசார வீடியோ படம் 'திருவாளர் முத்து'! கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேசிய அணு சக்தி கழகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த திருவாளர் முத்து விளக்கப் படம் வெளியாகியுள்ளது. இது ஒரு கார்ட்டூன் படமாகும். கூடங்குளம் அணு மின் நிலையத்தின் சாதகங்கள் குறித்து இந்த கார்ட்டூன் முத்து எளிய கிராமப்புற பேச்சின் மூலம் விளக்குகிறார். இதுகுறித்து தேசிய அணு சக்தி கழக செயல் இயக்குநர் நாகையா கூறுகையில், மக்கள் நலனையும், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே அணு மின் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மக்களின் கனவுகளையும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நாங்கள் முன்னுரிமை தருகிறோம். அணு மின் சக்தி உற்பத்தி தொடர்பான மக்களின் சந்தேங்களுக்கு விளக்கம் தர வேண்டியது எங்களது கடமை. அவர்களின் அச்சத்தையும், சந்தேகங்களையும் நாங்கள் நிராகரிக்கவில்லை,மதிக்கிறோம். அவற்றுக்குரிய விளக்கங்களைத் தர எப்போதுமே நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதன் ஒரு பகுதிதான் இந்த விளக்கப் படம். முத்து என்ற பெயரில் தமிழகத்தில் வெளியான திரைப்படத்தைத் தழுவியே இந்தப் பெயரை நாங்கள் சூட்டினோம். மேலும் தமிழக கிராமங்களில் முத்து என்ற பெயர் மிகவும் பிரபலமானது என்பதால் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தோம் என்றார். இந்த விளக்கப் படம் தமிழ் தவிர கன்னடம், இந்தி, தெலுங்கு, பெங்காலி, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியில் இப்படத்திற்கு மிஸ்டர் புதியா என்று பெயர் வைத்துள்ளனர். இதுதவிர ரேடியோ, டிவி விளம்பரங்கள் மூலமாகவும் அணு சக்தியின் அவசியம் குறித்து பிரசாரம் செய்யப் போகிறதாம் தேசிய அணு சக்தி கழகம். Thanks to OneIndia |
Aratai arangam 04-03-2012 | Sun Tv Aratai arangam 4th March 2012 Posted: 03 Mar 2012 10:01 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
ஷகீலாவுக்கு தண்டனை கிடைக்குமா?...ஆபாசப் பட வழக்கில் விரைவில் 'ஜட்ஜ்மென்ட்'! Posted: 03 Mar 2012 09:43 PM PST ஷகீலாவுக்கு தண்டனை கிடைக்குமா?...ஆபாசப் பட வழக்கில் விரைவில் 'ஜட்ஜ்மென்ட்'! பாளையங்கோட்டையில் உள்ள சினிமா தியேட்டரில் கடந்த 26-8-2003ம் ஆண்டு நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் நடித்த இளமை கொண்டாட்டம் என்ற படம் ஓடியது. இதில் ஆபாச காட்சிகள் காட்டப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாளை போலீசார் தியேட்டருக்கு சென்று ஆபாச காட்சிகள் ஒளிப்பரப்புவதை கண்டுபிடித்து படச்சுருளை கைப்பற்றினார்கள். இது தொடர்பாக தியேட்டர் மேலாளர் பாஸ்கரன், ஆபரேட்டர் பரமசிவன், ஊழியர்கள் வசிகரன், சிவசுப்பிரமணியன் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் படத்தில் ஆபாசமாக நடித்த நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செயயப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நெல்லை குற்றவியல் முதலாவது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் மற்றும் தியேட்டர் ஊழியர்கள் உள்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். நீதிபதி (பொறுப்பு) ராபின்சன் ஜார்ஜ் வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிந்துள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபாசப் படத்தில் நடித்ததாக நிரூபணமானால் ஷகீலாவுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Thanks to OneIndia |
Nijam 04-03-2012 | Sun Tv Nijam 4th March 2012 Posted: 03 Mar 2012 09:40 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Oru vaarthai Oru Laksham 04-03-2012 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 4th March 2012 Posted: 03 Mar 2012 09:44 PM PST |
Posted: 03 Mar 2012 09:34 PM PST kadhalil sodhapuvadu yeppadi Spl Show 04-03-2012 | Jaya tv Shows Actor Siddharth Sp lInterview 4th March 2012 This posting includes an audio/video/photo media file: Download Now |
Lakshmi Sahasranamam 04-03-2012 | Vijay Tv Lakshmi Sahasranamam 4th March 2012 Posted: 03 Mar 2012 09:09 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Intha Vaara Rasi Palan 04-03-2012 | Vijay Tv Shows Intha Vaara RasiPalan 4th March 2012 Posted: 03 Mar 2012 09:05 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Posted: 03 Mar 2012 09:50 PM PST Nanayam Vikatan 11-03-2011 | Free Download Nanayam Vikadan PDF this week | Nanayam Vikatan 11th March 2012 Latest Download Links |
Vinayagar Thiruvilayadal 04-03-2012 | Sun Tv Vinayagar Thiruvilayadal 4th March 2012 Posted: 03 Mar 2012 08:56 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Top 10 Movies 04-03-2012 | Sun Tv Top 10 Movies 4th March 2012 Posted: 03 Mar 2012 10:02 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Deiva Darisanam 04-03-2012 | Sun Tv Deiva Darisanam 4th March 2012 Posted: 03 Mar 2012 08:39 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
SunTv news 04-03-2012 Morning 7 am | Sun Tv News 04-03-2012 | Sunnews 4th March 2012 Posted: 03 Mar 2012 08:33 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Kalyana Maalai 04-03-2012 | Sun Tv Kalyana Maalai 4th March 2012 Posted: 03 Mar 2012 08:32 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Raasipalan 04-03-2012 | Sun Tv Rasipalan This week 4th March 2012 Posted: 03 Mar 2012 08:07 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
“அண்ணன் சும்மா ஜாலியா விரலை நீட்டினாருங்க!” Posted: 03 Mar 2012 08:03 PM PST "அண்ணன் சும்மா ஜாலியா விரலை நீட்டினாருங்க!" நிறுத்துகிறோம்" என்று அறிவிப்பும் செய்தார் அவர். முத்துக்குமார் எனற வேட்பாளரை நிறுத்தியும் விட்டார். விஜயகாந்த் நடிக்கும் படங்களில் இடைவேளை வருவதற்கு சற்றுமுன் அவர் சவால் விட்டால், அதன்பின் என்னாகும் என்பது வேறு விஷயம். சங்கரன்கோவிலில் நடப்பது வேறு விஷயம். இன்றைய தேதியில் சங்கரன்கோவில் தொகுதியில் தே.மு.தி.க. என்றொரு கட்சி போட்டியிடுகின்றது என்பதற்கான அறிகுறிகளே பெரிதாக தெரியவில்லை. என்னதான் விரலை நீட்டி, நாக்கை துருத்தி, சவால் விட்டாலும், சங்கரன்கோவிலில் ஜெயிக்க முடியாது என்பது விஜயகாந்துக்கு நன்றாகவே தெரியும். இந்த உண்மை அவரது வேட்பாளர் முத்துக்குமாருக்கும் தெரிந்துவிட்டது போலிருக்கிறது. பாவம், அவர் ஒத்தை ஆளாக தொகுதிக்குள் சுற்றிக்கொண்டு இருக்கிறார். தே.மு.தி.க. தேர்தல் பணிக்குழுவில் மொத்தம் 58 மாவட்டச் செயலாளர்களை விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். இவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முத்துக்குமாரை ஆதரித்து, வரும், 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை, சங்கரன்கோவிலில் முகாமிட்டு பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அப்போது வந்து தலையைக் காட்டுவார்கள் போலிருக்கிறது! அதுவரை ஒத்தையில் சுற்றித் திரியும் வேட்பாளர்மீது மக்களுக்கு பரிதாபம் ஏற்பட்டு, அதனால் அனுதாப அலை ஏற்படும் என்று நினைக்கிறார்களோ, என்னவோ. தே.மு.தி.க.-வின் வேட்பாளரோடுதான் ஆட்களை காண முடியவில்லை என்றால், அவர்களது கட்சி அலுவலகத்தையும் சுலபமாக அடையாளம் காண முடியாது. சங்கரன்கோவிலில் மெயின் ரோடில் இருந்து விலகி குறுகலான சந்து ஒன்றில் தமது தேர்தல் அலுவலகத்தை திறந்திருக்கிறார்கள் அவர்கள். ரயில்வே ஸ்டேஷன் செல்லும் குறுகலான ரயில்வே பீடர் ரோட்டில் உள்ளது தே.மு.தி.க. தேர்தல் அலுவலகம். இதுவரை தொகுதிக்குள் தலை காட்டியுள்ள ஒரேயொரு தே.மு.தி.க. வி.ஐ.பி., விஜயகாந்த் மச்சான் சுதீஷ்தான். அக்கட்சியில் மொத்தம் 3 வி.ஐ.பி.-களே உள்ளனர். மற்றைய இரு வி.ஐ.பி.-களான விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் வரும் 11-ம் தேதி சங்கரன்கோவில் வருகின்றனர். மச்சானும் அதே தேதியில் தொகுதிக்குள் நின்றால், "கட்சி வி.ஐ.பி.கள் அனைவரும், ஒரே நேரத்தில் தொகுதிக்குள் நின்ற கட்சி" என்ற பெருமை தே.மு.தி.க.-வுக்கு கிட்டும். வி.ஐ.பி.கள் வரும்வரை, முத்துகுமாரின் தனித் தவில் கச்சேரி நடைபெறும். Thanks to ViruVirupu |
Intha Naal Iniya Naal 04-03-2012 | Sun Tv Sugisivam in Intha Naal Iniya Naal Posted: 03 Mar 2012 07:54 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
அதிக அளவில் வெளியாகும் ஆபாசப் படங்கள் : நடவடிக்கை என்ன? Posted: 03 Mar 2012 07:38 PM PST அதிக அளவில் வெளியாகும் ஆபாசப் படங்கள் : நடவடிக்கை என்ன? அதே போல், மதுரையில் ஒரு இளைஞர் தன் காதலியுடன் நெருக்கமாக இருந்ததை, ஆபாசப் படம் எடுத்து, அதை வைத்து மிரட்டி, அப்பெண்ணை தன் நண்பர்களுக்கும் விருந்தாக்கிய சம்பவம், தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மேலும், சென்னை பல்லாவரத்தில், நான்கைந்து கல்லூரி மாணவர்கள் இணைந்து, ஒரு இளம்பெண்ணை சீரழித்த விவகாரமும், இந்த வரிசையில் நடந்தது தான். இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம், தற்போது வெளிவரும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.முன்பெல்லாம் ஆபாசப் படங்கள் என்பது, ஒன்றிரண்டு எப்போதாவது தான் வெளிவரும். அவை, குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்படும். அவற்றை, 18 வயதுக்கு குறைந்தவர்கள் பார்ப்பதற்கு அனுமதியில்லை.ஆனால், மொபைல்போன், இன்டர்நெட் வந்துவிட்ட பின், இப்படங்களை பார்ப்பதற்கு, வயது வரம்பு என்பது இல்லாமல் போய்விட்டது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, வீட்டில் இன்டர்நெட் இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டர் வசதியை, வசதியான பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். விளைவு, அவர்களை பாடத்தை தவிர மற்றவற்றை கற்றுக் கொள்ளச் செய்கிறது. இது தவிர, மொபைல்போனில் உள்ள மெமரி கார்டு வசதியை பயன்படுத்தி, சில சமூக விரோத கும்பல்கள், ஆபாசப் படங்களை அவற்றில் பதிவு செய்து கொடுக்கின்றனர். இவற்றை, பள்ளி மாணவர்கள் கூட தங்கள் மொபைல்போனில் வைத்திருப்பதை, தற்போது பார்க்க முடிகிறது. விளைவு, அடிக்கடி பார்க்கப்படும் இந்த ஆபாசப் படங்களை, ஒரு கட்டத்தில், நிஜத்தில் நடத்திப் பார்க்க முடிவெடுக்கின்றனர். இது போன்று நடந்தது தான், கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவி மற்றும் பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்திய, "கேங்க் ரேப்' சம்பவங்கள்.மொபைல்போனில், சிலர் தனக்கு மட்டுமே என வைத்திருக்கும் ஆபாசப் படங்கள் கூட, தற்போது வெளியானதற்குக் காரணமும் உண்டு. அவர்கள் மொபைல்போனை ஏதாவது பிரச்னை என்று பழுது பார்க்கக் கொடுக்கும் போது, பழுது பார்க்கும் பணியில் இருப்போர், "ரெகவரி சாப்ட்வேர்' மூலம், அதில் பதிந்திருக்கும் படங்களை எடுத்து விடுகின்றனர்.அப்படி வெளியானது தான், தேவநாதன் என்ற அர்ச்சகரின் ஆபாசப் படங்கள். அதன் பின் தான், அதுதொடர்பான புகாரே வந்தது. இந்த வீடியோ பதிவுகள், தற்போது வரை இன்டர்நெட்டில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆபாச வீடியோ பதிவுகள் என பதிவு செய்து காத்திருந்தால், ஒரு வெப்சைட்டில், 300க்கும் அதிகமான வீடியோ பதிவுகள், தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி என, வகை வகையாக வந்து கொட்டுகின்றன. இவற்றிற்கு மிகவும் கீழ்த்தரமான விளக்கங்கள் வேறு கொடுத்திருக்கின்றனர். பெரும்பாலும், இதில், பெண்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோக்கள் அதிகம். அதுவும், மொபைல்போன் கேமராவில் பதிவானவை, 80 சதவீதம் இருக்கும். இதுபோன்ற பதிவுகளால், திரைமறைவு விஷயங்கள் பல, தெருவிற்கு வந்துள்ளன. அதே நேரத்தில், அது தொடர்பான குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே போகின்றன.இதுபோன்ற விஷயத்தில், தடுப்பது என்பது மிகவும் கஷ்டம் என்கிறது, சைபர் கிரைம் போலீஸ். "ஆபாச வீடியோ பதிவுகளை, மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுதல், ஆபாசப் படம் எடுப்பது உள்ளிட்ட புகார்கள் மீது மட்டுமே, நம்மால் இப்போதைக்கு நடவடிக்கை எடுத்து, தண்டனை பெற்றுத் தரமுடியும்' என்கிறார், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர். அவர் மேலும் கூறியதாவது:இணையதளங்களில், ஆபாசப் படங்களை பார்ப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகள், தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியா முழுமைக்கும், ஏன் உலகத்திற்கே இந்த பிரச்னை உண்டு. இங்கு எடுக்கப்படும் படங்களை, உலகம் முழுமைக்கும் பார்ப்பதற்கான வசதி உள்ளது.ஒரு வெப்சைட்டில் வெளியிடப்படும் படங்களை, நாம் தடை செய்தால், அதே படங்கள் வேறு பெயரில், அடுத்த சில மணி நேரத்தில் வந்துவிடும். காரணம், இந்த படங்களை வெளியிடும் சர்வர்கள், இந்தியாவில் இல்லை என்பது தான்.நம் நாட்டு தொழில்நுட்பம் தொடர்பான, சைபர் கிரைம் சட்டம் வேறு; படங்களை வெளியிடும் சர்வர்கள் உள்ள நாடுகளின் சட்டம் வேறு. அந்த நாடுகளில், இது குற்றமாக இல்லை. அதே நேரத்தில், ஆபாசப் படங்களை மொபைல்போனில் வைத்திருத்தல், அவற்றை பகிர்ந்து கொள்ளுதல், ஆபாசப் படங்களை எடுத்தல் போன்றவற்றிற்கு, தொழில்நுட்ப சட்டப்பிரிவு, 67ன் கீழ், முதல் முறை தவறு செய்தால் மூன்றாண்டு சிறையும், ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அடுத்த முறையும் அதே தவறு செய்து பிடிபட்டால், ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்ச ரூபாய் சிறையும் விதிக்கப்படும். பெண்களை வற்புறுத்தியோ, அவர்களை மயங்க வைத்தோ, ஆபாசப் படங்களை எடுப்போர் மீது, பெண் வன்கொடுமை, தொழில்நுட்ப குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால், இன்டர்நெட் விஷயத்தில், இது போன்ற படங்களை கட்டுப்படுத்தவும், தடை செய்யவும், சர்வதேச அளவில், பொதுவான சட்டம் வரவேண்டும்.இவ்வாறு சுதாகர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் - Thanks to Dinamalar |
Dinamalar E-paper 04-03-2012 | Free Download Dinamalar Daily Epaper PDF | Dinamalar 4th March 2012 Posted: 03 Mar 2012 07:28 PM PST Dinamalar E-paper 04-03-2012 | Free Download Dinamalar Daily Epaper PDF | Dinamalar 4th March 2012 Download Links |
Dinakaran E-paper 04-03-2012 | Free Download Dinakaran today Epaper PDF | Dinakaran 4th March 2012 Posted: 03 Mar 2012 07:42 PM PST Dinakaran E-paper 04-03-2012 | Free Download Dinakaran today Epaper PDF | Dinakaran 4th March 2012 Download Links |
மூன்று வயது சிறுவனின் வயிற்றில் உருவான கரு! Posted: 03 Mar 2012 07:11 PM PST மூன்று வயது சிறுவனின் வயிற்றில் உருவான கரு! இந்த அதிசய சம்பவம் குறித்து டாக்டர்கள் கூறுகையில், "ஐந்து லட்சம் பேரில் ஒருவருக்கு, இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இரட்டை குழந்தைகளின் கருக்கள், இந்த சிறுவனின் தாயின் வயிற்றில் உருவாகியிருக்கும். அதில், ஒரு கரு மட்டும் வளர்ச்சியடைந்து, இந்த சிறுவன் பிறந்துள்ளான். மற்றொரு கரு வளர்ச்சி அடையாமல், அந்த சிறுவன் கருவில் இருக்கும்போதே, அதற்குள் ஊடுருவியதால், இந்த வினோதமான நிகழ்வு நிகழ்ந்துள்ளது...' என்றனர். சிறுவனின் வயிற்றில் இருக்கும் கருவை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும், சிறுவனின் வயிற்றில் இருந்து, கரு அகற்றப்படலாம். — ஜோல்னா பையன். Thanks to Dinamalar |
Posted: 03 Mar 2012 07:55 PM PST Dinamalar Varamalar Book 04-03-2012 | Free Download Varamalar E-book PDF Paper | Dinamalar Varamalar 4th March 2012 Download Links |
Posted: 03 Mar 2012 07:56 PM PST Dailythanthi E-paper 04-03-2012 | Free Download Dinathanthi PDF today ePaper | Dinathanthi 4th March 2012 Download Links |
அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Posted: 03 Mar 2012 06:59 PM PST அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? கடந்த 2001-06ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சராகவும், கால்நடைத்துறை அமைச்சராகவும், தூத்துக்குடி மாவட்டச் செயலராகவும் பணியாற்றினார். அ.தி. மு.க., ஆட்சியில் தென் மாவட்டத்தில் பவர்புல் அமைச்சராக பணியாற்றினார். அவரது மூன்று மகன்களின் திருமணம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியராகவும் அனி தா ராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். போயஸ்கார்டன் இல்லத்தில் சசிகலா இருந்த போது, அவரது குடும்பத்தினரின் நெருக்கடியினால் அ.தி.மு.க.,விலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் ஓரங்கட்டப்பட்டார். கடந்த தி.மு.க., ஆட்சியில் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.,வில் இணைந்தார்.இடைத் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ., பதவி ஏற்றார்.கடந்த சட்டசபைத் தேர்தலில் மீண்டும் திருச்செந்தூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.,வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் சசிகலா குடும்பத்தினர் அ.தி. மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்டதால் அ.தி.மு.க.,வில் இணைய அனிதா ராதாகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் அவர் சொல்ல வில்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொகுதியில் தேர்தல் பிரசாரப் பணிக்கு வரும்படி தி.மு.க., தரப்பில் அழைப்பு விடுத்தும் அந்த அழைப்பை அவர் உதாசீனப்படுத்தியுள்ளார்.சங்கரன்கோவில் தொகுதியில் நாடார் சமூகத்தினர் ஓட்டுக்கள் அதிகம் உள்ள சேர்ந்தமரம் கடையா சுருட்டி என்ற பகுதியில் தேர்தல் பொறுப்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் தேர்தல் பணிக்குச் செல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தனது தாய் கட்சியான அ.தி.மு.க.,வில் இணைய அவர் விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் கொடுத்துள்ளார்.அவரை கட்சியில் இணைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 13ம்தேதி சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தரும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி. மு.க.,வில் இணையும் வாய்ப்பு இருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - எஸ்.சிந்தாஞானராஜ் Thanks to Dinamalar |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |