TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


Athipookal 02-03-2012 | Sun Tv Athipookal Serial 2nd March 2012

Posted: 02 Mar 2012 01:14 AM PST


Athipookal 02-03-12 | Sun Tv Athipookal Serial 2nd March 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 02-03-2012 | Sun Tv Elavarasi Serial 2nd March 2012

Posted: 02 Mar 2012 12:32 AM PST


Ilavarasi 02-03-12 | Sun Tv Elavarasi Serial 2nd March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Kumudam 07-03-2012 | Free Download Kumudham Tamil Magazine PDF This week | Kumudam 7th March 2012 ebook

Posted: 02 Mar 2012 12:20 AM PST


Kumudam 07-03-12 | Free Download Kumudham Tamil Magazine PDF This week | Kumudam 7th March 2012 ebook - First on Net

Download Links

DrVikatan 16-03-2012 | Free Doctor Vikatan PDF This week | Dr.Vikatan 16th March 2012 ebook

Posted: 01 Mar 2012 11:39 PM PST


DrVikatan 16-03-2012 | Free Doctor Vikatan PDF This week | Dr.Vikatan 16th March 2012 ebook

Download Links

http://adf.ly/5uaTc

http://adf.ly/5uaUU

http://adf.ly/5uafH

Thiyagam 02-03-2012 | Sun Tv Thiyagam Serial 2nd March 2012

Posted: 02 Mar 2012 12:00 AM PST


Thiyagam 02-03-12 | Sun Tv Thiyagam Serial 2nd March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 02-03-2012 | Sun Tv Muthaaram Serial 2nd March 2012

Posted: 01 Mar 2012 11:24 PM PST


Mutharam 02-03-12 | Sun Tv Muthaaram Serial 2nd March 2012
Updating...

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 02-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 2nd March 2012

Posted: 01 Mar 2012 11:23 PM PST


Vellai Thamarai 02-03-12 | Sun Tv Vellai Thamarai Serial 2nd March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 02-03-2012 | Sun Tv Uravugal Serial 2nd March 2012

Posted: 01 Mar 2012 11:23 PM PST


Uravugal 02-03-12 | Sun Tv Uravugal Serial 2nd March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 02-03-2012 | Sun Tv kasthuri Serial 2nd March 2012

Posted: 01 Mar 2012 11:22 PM PST


Kasturi 02-03-12 | Sun Tv kasthuri Serial 2nd March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 02-03-2012 | Sun tv Marudhaani 2nd March 2012

Posted: 01 Mar 2012 11:21 PM PST


Maruthani 02-03-12 | Sun tv Marudhaani 2nd March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

காதலில் கலை கட்டும் விஷால்!

Posted: 01 Mar 2012 07:00 PM PST


காதலில் கலை கட்டும் விஷால்!

தமிழ்சினிமாவில் எப்போதுமே காதல் படங்களுக்கு ஒரு கிராக்கி இருந்து கொண்டே இருக்கும். அது கண்ணீர் காதலாக இருந்தாலும், நம் அருகில் நடக்கிறமாதிரி படமாக்க வில்லை என்றால் அந்தப்படம் ஃபாக்ஸ் ஆபிஸில் மினிமம் கியாரண்டி படமாக தயாரிப்பாளரின் நம்பிக்கையை காப்பாற்றும். இன்னும் ஒருபடி மேலேபோய், படத்தை கொஞ்சம் கலாபூர்வமாகவும் செதுக்கி விட்டால் போதும் 'தென்மேற்கு பருவக்காற்று' போல தேசிய விருதுவரை பயணம் புறப்படும்.


ஆனால் மாஸ் ஹீரோகளை வைத்து எடுக்கப்படும் காதல் கதைகளில் ஸ்டார் இமேஜும் இணைந்து கொள்வதால், அதில் இருக்கும் செயற்கை தன்மையை ரசிகர்கள் தள்ளி வைத்து விட்டு படம் பார்க்க முடியாது. அதையும் மீறி ஒரு மாஸ் ஹீரோவின் படம் ரசிகர்களுக்கு நெருக்கமான காதல் படமாக அமைந்து விட்டால், அதில் இயக்குனரின் படைப்பாளுமை ஓங்கியிருக்கும். அப்படிப்பட்ட படங்களுக்கு உதராணமாகச் சொல்வதென்றால் பாசில் இயக்கத்தில் விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' சித்திக் இயக்கத்தில் நடித்த 'காவலன்' போன்ற பல படங்கள் இருக்கின்றன.


 விஷாலைப் பொறுத்தவரை உணர்வு பூர்வமான காதல் படம் எதுவும் இதுவரை அவருக்கு அமையவில்லை. விஷாலின் படங்களில் ஆக்ஷனுக்கு மத்தியில் காதல் அழுது கொண்டிருக்கும். அந்தவகையில் விஷால் தற்போது நடித்து வரும் 'சமரன்' படம், காதலுக்காக ஒரு க்ரைம் என்ற கான்செப்டில் உருவாகிவருகிறதாம். இந்தப் படத்தில் விஷாலை ஒரு அற்புதமான காதலனாகப் பார்க்கலாம் என்கிறார்கள். இதை உறுதி செய்கிறது இயக்குனர் திரு, விஷால் கூட்டணி!


"மொழியே தேவைப்படாத இரு யூனிவர்சல் சப்ஜெக்ட்கள் காதலும், க்ரைமும். இதில் முதல் சப்ஜெக்டை விஷாலும், நானும் எங்களது முதல் படமான 'தீராத விளையாட்டுப் பிள்ளை'யில் முயன்றுப் பார்த்தோம். ஆனால் தோல்விதான் கிடைத்தது. இரண்டாவது படமான சமரனில் காதலில் சம விகிதத்தில் க்ரைமை கலந்திருக்கிறோம். என்றாலும் விஷாலுக்கு இதுவே முதல் காதல் படமாக இருக்கும்" என்றார் நம்மிடம்.


 கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாங்காக்கில் தங்கியிருந்து சமரன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் விஷால். த்ரிஷா, சுனேனா என்று இரு ஹீரோயின்கள். காதல் க்ரைம் த்ரில்லராக தயாராகி வரும் இந்தப் படத்தில் த்ரிஷா இருப்பதால், மொத்தபடத்திலும் காதல் ஏரியா கண்டிப்பாக கலைகட்டும் என்று நம்பலாம்!
Thanks to TamilLeader

எனக்குத் தமிழ் தெரிந்திருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும். சசிகலாவை கண்டித்த நீதிபதி.

Posted: 01 Mar 2012 06:57 PM PST


எனக்குத் தமிழ் தெரிந்திருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும். சசிகலாவை கண்டித்த நீதிபதி.
ஆங்கிலம் தெரியவில்லை என்பது புரிகிறது. அதற்காக என் கேள்வியும் புரியவில்லையா? என்று சசிகலா மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.


தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை அமர்வின்போது நீதிபதி மல்லிகார்ஜுனையாவின் கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்தார்.


நீதிபதி அதிருப்தி: உயரதிகாரியின் உத்தரவின்பேரில் அரசுப் பணிமனைக் கண்காணிப்பாளர் மாரியப்பன் மெட்டல் கிங்க்ஸ் மற்றும் ஆஞ்சிநேயா பிரின்டர்ஸ் நிறுவனங்களில் 1996-ம் ஆண்டு இயந்திரங்களை மதிப்பீடு செய்தார். அப்போது 55 இயந்திரங்கள் இருந்ததாகவும் இதன் மதிப்பு ரூ.3,05,88,000 என்றும் மதிப்பிட்டிருந்தார். இதுபற்றி உங்களுக்கு தெரியுமா என்று நீதிபதி கேட்டார்.


இதற்கு சசிகலா விளக்கமான பதிலை அளித்தார். மேலும், மதிப்பீடு செய்ய மாரியப்பனுக்கு தகுதியில்லை என்றும் கூறினார்.


இதற்கு ஆட்சேபம் தெரிவித்த நீதிபதி,"கேள்வியில் நான் குறிப்பிட்ட தகவல்களை மீண்டும் பதிலில் குறிப்பிடுவது அவசியமா? குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 313-ன் கீழ் தனது தரப்பு பதிலை பதிவு செய்ய வேண்டுமே தவிர, வாதம் செய்யக் கூடாது. அதை வழக்குரைஞர்கள் வாதப் பிரதிவாதங்களின்போது தெரிவிக்கலாம்.


பதில்களுக்கு விளக்கங்களை அளிக்க விரும்பினால், அதை எழுத்துப்பூர்வமாக பின்னர் தாக்கல் செய்யலாம். சுருக்கமாக பதில் அளித்தால் போதுமானது என்று பலமுறை கூறிவிட்டேன். சசிகலா பேசுவது யாருக்கும் கேட்பதில்லை. சப்தமாக பேசும்படி கூறியும் அவர் பொருட்படுத்தவில்லை. பதில்களை சப்தமாக கூறினால் வழக்குரைஞர்கள் அதைச் சுருக்கலாம். எனக்குத் தமிழ் தெரிந்திருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும். அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பது புரிகிறது. அதற்காக என் கேள்வியும் புரியவில்லையா? பிரச்னைகள் இருக்கிறது என்பதற்காக வேறொரு பிரச்னையை உருவாக்கக் கூடாது என்று சசிகலா மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.


அதன் பின்னரும், எல்லாக் கேள்விகளுக்கும் சசிகலா விரிவான, விளக்கமான பதில்களை கூறினார். இதனால், பொறுமை இழந்த நீதிபதி, இது காலத்தை விரயமாக்கும். சுருக்கமாக பதில் கூற வேண்டும் என்று கண்டிப்புடன் சசிகலாவுக்கு எடுத்துரைத்தார்.


புதன்கிழமை 64 கேள்விகளுக்கு பதிலளித்த சசிகலா, வியாழக்கிழமை நடந்த விசாரணையின்போது 5 மணி நேரத்தில் 46 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தார்.


கூலிங்கிளாசில் சசிகலா: கண்நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சசிகலா, நீதிபதியின் அனுமதியின்பேரில் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு நீதிமன்றத்தில் கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளித்தார்.
Thanks to thedipaar

திருச்சி சிறுவனுடன் பைக்கில் மெரீனாவில் வலம் வந்த அஜித் !

Posted: 01 Mar 2012 06:53 PM PST


திருச்சி சிறுவனுடன் பைக்கில் மெரீனாவில் வலம் வந்த அஜித் !

அஜித் தனது அலுவலகத்தின் இண்டிரீயர் பகுதிகளை, வாஸ்துபடி இடித்துக் கட்டி வருவதாக மீடியா பரபரப்பாக எழுதிக்கொண்டிருக்கிறது. ஆனால் இது பற்றி எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை அஜித். எப்போதும் அமைதியாக இருந்து எப்போதாவது வெடித்து விடும் மனம் கொண்ட உணர்ச்சிகரமான மனிதர், 'மங்காத்தா' வெற்றிக்குப் பிறகு பேசுவதை நிறுத்திக்கொண்டு, அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார். இந்த முனைப்புக்குக் காரணம் மங்காத்தாவின் வசூல்!

'எந்திரன்' 175 கோடி வசூல் செய்ததாக சன் டிவி கணக்கு காட்டியது. அதேபோல  'எந்திரனு'க்கு அடுத்த நிலையில் 'மங்காத்தா' 135 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதை, அந்த படத்தின் வரவு செலவுக் கணக்கு அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள் அஜித் வட்டாரத்தில். கடந்த ஆண்டு வெளியான  '7-ம் அறிவு'  'மங்காத்தா'வுக்கு அடுத்த நிலையில் 85 கோடி ரூபாய் வசூல் செய்ததாகக் கூறுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் அஜித் தோல்விகளின் தொடர் தோழனாய் இருந்து வந்த காலம் தற்போது மலையேறி இன்று வசூல் மாமன்னராக இருப்பது, ரஜினியே கூட எதிர்பார்க்காத ஒன்று என்கிறார்கள். 'மங்காத்தா' வசூல் காரணமாக தற்போது அஜித் நடித்து முடித்திருக்கும் 'பில்லா-2' விற்பனையில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை ராடான் டிவி மூலம் சன் குழுமம் வாங்க முயற்சிப்பதாக தகவல் கிடைக்கிறது.

தனது படத்தை எந்த டிவி வாங்குகிறது, அந்த டிவியிடம் எப்படி அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் அஜித் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. இதனால் அஜித் தற்போது தனது அடுத்த இரண்டு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். 'பில்லா' இரண்டாம் பாகத்தை தொடர்ந்து, விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்தப் படத்தில் ஆர்யா மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விஷ்ணுவர்த்தன் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். ஷங்கரும்  'நண்பன்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான புதிய கதையை எழுதிவருவதாக குறிப்பிட்டு இருக்கிறார். ஷங்கர் முழுக்கதையும் எழுதித் தயாரானதும், அதில் யாரை ஒப்பந்தம் செய்யப்போகிறார் என்பதை அஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். காரணம், மாஸ் ஹீரோக்களில் இந்த கூட்டணி மட்டுமே இன்னும் இணையவில்லை!

இதற்கிடையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் அஜித் அலுவலகத்தில், ரசிகர்கள் மற்றும் உதவிபெற வரும் மாற்றுத் திறனாளிகளின் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

மாற்றுத் திறனாளிகள் யார் தனது அலுவலகத்தை தேடி வந்தாலும் அவர்களை வயிறு முட்ட சாப்பிட வைத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அஜித். போலியோவால் பாதிக்கப்பட்ட திருச்சியை சேர்ந்த பத்து வயது சிறுவன் தனது பெற்றோருடன் அஜித்தை பார்க்க அப்பாயின்மென்ட் பெற்று வந்திருக்கிறான். அவன் நன்றாக ஓவியம் வரையக் கூடியவனாம். "உங்களூடன் பைக்கில் ஒரு ரவுண்ட் அடிக்க வேண்டும்" என்ற கோரிக்கையை அந்தச் சிறுவன் வைக்க, ஹெல்மெட் அணிந்து கொண்டு ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து சென்னை மெரினா கடற்கரை வரை ரவுண்ட் அடித்து, அவனைச் சந்தோஷப்படுத்தி அனுப்பியிருக்கிறார் அஜித்!

விளம்பரத்துக்காக கல்வி உதவி செய்யும் ஹீரோக்களுக்கு மத்தியில் அஜித், சத்தமில்லாமல் பல நூறு எழைக் குழந்தைகளின் படிப்புக்கு ஸ்பான்சர் செய்து வருகிறார்.
Thanks to Tamilleader

செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமாகும் அல்லு அர்ஜுன்!

Posted: 01 Mar 2012 06:50 PM PST


செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமாகும் அல்லு அர்ஜுன்!

தமிழ் ஹீரோக்கள் ஆந்திர தேசத்தை ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்ததில் கடுப்பான, தெலுங்கு ஹீரோக்கள், தற்போது தமிழ்பட உலகிலும் தங்களுக்கு சந்தையை உருவாக்க துடிக்கிறார்கள். ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆதி, சர்வானந்த் ஆகியோர் பிரபலமாக இருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து டோலிவுட்டின் மாஸ் அண்ட் க்ளாஸ் ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நேரடி தமிழ் படம் மூலம் இங்கே அறிமுகாக இருக்கிறார். 'இரண்டாம் உலகம்' படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் அல்லு அர்ஜுனை இயக்குகிறார் என்ற உறுதியான தகவல் செல்வராகவன் வட்டாரத்தில் இருந்து கிடைக்கிறது.


ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடித்து ஆந்திராவில் பட்டையைக் கிளப்பிய சூப்பர் ஹிட் படங்களை ஜெயம் ரவி, சிம்பு ஆகியோர் தமிழில் ரிமேக் செய்திருக்கிறார்கள். கடைசியாக அல்லு அர்ஜுன் நடித்த 'வேதம்' தெலுங்குப் படம் தமிழில் 'வானம்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் சிம்பு நடித்து தனது மார்க்கெட்டை தக்கவைத்து கொண்டார். தமிழில் விஜய்க்கு இணையான மார்கெட் கொண்டவர் அல்லு அர்ஜுன். சென்னையில் பிறந்து வளர்ந்த அல்லு அர்ஜுனுக்கு தமிழில் பேசுவது பிரச்னை அல்ல!


இதற்கிடையில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருந்த செல்வராகவன், அல்லு அர்ஜுன் படத்தை முடித்து விட்டு அதற்குச் செல்ல முடிவு செய்திருக்கிறராம். 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் முடியும் போது ' பயணம் தொடரும்' என்று போட்டிருந்ததால், செல்வராகவன் எப்போது வேண்டுமானலும் 'ஆயிரத்தில் ஒருவன்' இரண்டாம் பாகம் இயக்கலாம் என்று தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் செல்வராகவனே தனது டிவிட்டர் பக்கத்தில் " ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை தயாராகி விட்டது. விரைவில் இதற்கான பணிகளை தொடங்குவேன் " என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். என்றாலும் தற்போது அல்லு அர்ஜுன் படமே முதலில் என்று தாவியிருக்கிறார். அல்லு அர்ஜுன் படத்திலிருந்து செல்வாரகவன் வேறு படத்துக்கு தவாமல் இருந்தால் சரிதான்!
Thanks to Tamilleader

வாதையுற்ற வடக்கு! (மனவாசம்)

Posted: 01 Mar 2012 06:48 PM PST


வாதையுற்ற வடக்கு! (மனவாசம்)

லால்பகதூர் அமைச்சரவையில் செய்தி விளம்பரத் துறை அமைச்சராக இருந்தவர், சர்.சி.பி.ராமசாமி ஐயரின் குமாரர் சி.ஆர்.பட்டாபிராமன் அவர்கள். பாகிஸ்தான் யுத்தத்தில் இந்தியா வெற்றி பெற்றவுடன் இந்தியப் படை வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டத் தென்னாட்டுக் கலைஞர்கள் குழு ஒன்று செல்ல வேண்டும் என்று அவர் தமிழ்நாடு காங்கிரசைக் கேட்டுக் கொண்டார்.


அப்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவராக இருந்த அவனது சகோதரர் ஏ.எல்.சீனிவாசனுக்கும் இந்த வேண்டுகோளை விடுத்தார்.


தலைவர் காமராஜர் அவனைக் கூப்பிட்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.


அவனுக்கு இரட்டை மகிழ்ச்சி.


யுத்தம் நடந்து கொண்டிருந்தபோதே, அவனும் சின்ன அண்ணாமலையும் ஒரு லாரியில் ஏறி நின்று இந்தியப் படை வீரர்களுக்காக ஏராளமான துணிமணிகளையும் பாத்திரங்களையும் சேகரித்திருந்தார்கள். அவற்றின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும்.


அந்தப் பொருள்களைப் பெரியால் திடலில் விழா வைத்து முதல்வர் பக்தவத்சலத்திடம் அவன் ஒப்படைத்திருந்தான்.


அடடா! நெருக்கடி என்று வரும்போதுதானே தமிழ் மக்களின் தேச பக்தி பொங்கிப் பீறிட்டு வெளியில் வருகிறது!


எத்தனை தேச விரோதிகள் மேடை போட்டு அவர்கள் மனத்தைப் பாழ்படுத்தியிருந்த போதிலும், சீனப் போரின் போதும், பாகிஸ்தான் போரின் போதும் அவர்கள் கண்களில் கனல் கொப்பளிக்க அல்லவா நின்றார்கள்.


ஏன், அவனது உடம்பிலும் தேசபக்தி நெருப்பல்லவா பொங்கி எழுந்தது!


சீனப் போர் காலத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பணம் வசூல் செய்யப்பட்டபோது அவன் தனது பத்துப் பவுன் கடிகாரச் சங்கிலியையும், ஏழாயிரம் ரூபாய் ரொக்கத்தையும் அல்லவா கொடுத்தான்.


பாகிஸ்தான் யுத்தத்தின்போது ஆயிரம் ரூபாய் பட்டுப் புடவையை கூட அலட்சியமாகத் தூக்கிக் கொடுத்த கடைக்காரர்களை எப்படி மறக்க முடியும்?


வந்துவிளை யாடவந்த
வஞ்சகரை நம்படைகள்
பந்துவிளை யாடுதல்போல்
பாய்ந்துவிளை யாடுதம்மா


-என்று அவன் கவிதை எழுதியிருந்தான், அந்தப் படை வீரர்களுக்கு உற்சாகம் ஊட்ட.


நடிக, நடிகையர் போக வேண்டும் என்ற உடனே, அவன் சிறந்த நடிகர்கள் யாரையும் பாக்கிவிடவில்லை.


சிவாஜி கணேசன், சந்திரபாபு, பத்மினி, ராஜசுலோசனா, ஜெயலலிதா, சாவித்திரி, தேவிகா, அம்பிகா, விஸ்வநாத - ராமமூர்த்தியோடு அவரது குழுவினர், அவன், சின்ன அண்ணாமலை ஆகியோர், ஏ.எல்.எஸ்.தலைமையில் புறப்படத் தயாரானார்கள்.


எல்லாரும் முதலில் டில்லி சென்று அங்கிருந்தே இரண்டு விமானப் படை விமானங்களில் விமானத் தளங்களுக்குச் செல்ல வேண்டும்.


அது ஓர் அற்புதமான பயணம்.


பஞ்சாப் பகுதியில் உள்ள ஆதம்பூர், அல்வாரா, ஜலந்தர் ஆகிய பல விமானத் தளங்களுக்கு அவர்களது விமானங்கள் பறந்தன.


ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் தங்குவதற்கு நல்ல நல்ல குடியிருப்புக்களை அவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள். உலகிலேயே அமெரிக்க விமானப்படைக்கு அடுத்தபடியான வசதிகள் நமது விமானப் படைக்குக்த்தான் தரப்பட்டிருக்கிறதோ என்று எண்ணும்படி அவ்வளவு வசதிகள். குவியல் குவியலாக முட்டைகள், இறைச்சிகள், மீன்கள்.


நமது நடிகர்கள் அது போன்ற வசதிகளை எந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் பார்த்ததில்லை என்றார்கள்.


வாழ்வும் சாவும் வந்து வந்துதான் போகின்றன. ஆனால் ஓர் இந்தியன் நன்றாக வாழ்ந்து சாகவேண்டும் என்றால் அவன் நமது விமானப் படையில் சேர வேண்டும்.


விமானப்படை அதிகாரிகள் பலர் தென்னிந்தியர்களாக இருப்பதை அவன் கண்டான். ஒரு விமானப்படை அதிகாரியின் மனைவியான பிராமண மாமிதான் படைத் தளங்களில் அவர்களோடு சுற்றுப் பயணம் நடத்தினார்.


விமானத் தளத்தில் காற்று 'விர்'ரென்று அடித்தது. மாலை நான்கு மணிக்கு அதில் நடந்து செல்வதே அவ்வளவு உற்சாகமாக இருந்தது.


நமது படை வீரர்கள் நன்றாகக் கவனித்தார்கள். தங்கள் விடுதியில் வகை வகையான மதுபானங்களைக் கொடுத்தார்கள்.


அல்வாரா தளத்தில், எட்டு மணிக்கு நாட்டியம் ஆரம்பமாயிற்று. அதிகாரிகள் நமது நடிகைகளோடு நாட்டியமாடினார்கள். நடிகர் சந்திரபாடி, அதிகாரிகளின் குடும்பத்தினரோடு நாட்டியமாடினார்.


இதில் பயந்துகொண்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்தவர், அப்போது மிகவும் சிறு வயதாக இருந்த ஜெயலலிதாதான்.


எல்லாரையும் பத்திராமகக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு ஏ.எல்.எஸ்.ஸுக்கு இருந்தது.


இரவு பன்னிரண்டு மணிவரையில் நாட்டியம், ஒரே உற்சாகம்.


திடீரென்று ஏ.எல்.எஸ்., விசுவநாதனுக்குக் கையைக் காட்டினார். விசுவநாதனும் 'ஜனகனமண' வாசிக்க ஆரம்பித்தார்.


எவ்வளவோ ஆர்வத்தோடு ஆடிக்கொண்டிருந்த அதிகாரிகள் தேசிய கீதத்தைக் கேட்டதும் சிலைபோல் அசையாமல் நின்றார்கள்.


தேசிய கீதம் முடிந்ததும் ஓர் அதிகாரிக்குச் செல்லக் கோபம் வந்தது. "இனி, நாங்கள், உங்களை எப்போது சந்திக்கப் போகிறோம்? விடியும் வரை வாசிக்கக் கூடாதா?"என்று விசுவநாதனிடம் கேட்டார். "சரி மறுநாள் பொழுது வந்துவிட்டது. மீண்டும் வாசியுங்கள்" என்றார், அவர். பிறகு மேலும் அரை மணி நேரம் வாசித்து முடிந்தார்கள்.


நமது நடிகைகளில் அதிகாரிகளுக்கு ஈடுகொடுத்து ஆடியவர் பத்மினி; ஆடத்தெரியாமல் விழித்தவர் தேவிகா.


இரவு இரண்டு மணிக்கு எல்லாரும் படுத்த பிறகுதான் அவன் சாப்பிட்டான்.


அவனும் அவனது டிரைவர் பாபு ராவும் விமானத் தளத்தின் ஓடு பாதையில் வந்தபோது அவன் அப்படியே அந்தப் பாதையைத் தொட்டு வணங்கி, உச்ச ஸ்தாயியில் பாட ஆரம்பித்தான்.


அங்கே ஒரு பதுங்கும் குழியைக் கட்டியிருந்தார்கள். பாகிஸ்தான் விமானங்கள் வந்தபோது அந்தக் குழியில் ஆறு வீரர்கள் பதுங்கியிருந்தார்களாம். பக்கத்தில் விழுந்த குண்டினால் குழி மண் குண்டினால் குழி மண் மூடப்பட்டு ஆறு பேரும் உயிர் நீத்தார்களாம். அந்த இடத்தையும் அவன் தொட்டு வணங்கினான்.


காலையில் குளித்துவிட்டு எல்லாரும் விமானத் தளத்தைச் சுற்றிப் பார்த்தார்கள்.


அங்கே ஒரு 'நாட்' விமானத்தின் அருகில் 'கீலர்' என்ற புகழ்பெற்ற விமானியைக் கண்டார்கள். அந்தக் கீலரும் அவரது சகோதரரும் யுத்த காலத்தில் மிகவும் புகழ்பெற்றவர்கள். சகோதரர்கள் வேறொரு தளத்துக்குப் போயிருந்ததால் கீலர் மட்டும் இருந்தார்.


பாகிஸ்தான் விமானங்களைத் தொடர்ந்து சென்று குருவிகளைச் சுடுவது போல் சுட்டவரல்லவா, அவர்!


அவரைப் பற்றி ஒரு கதையைச் சொன்னார்கள்.


பாகிஸ்தான் விமானம் ஒன்று மேலே பறந்ததாம். அதைக் கீழே இறங்கும்படி நமது அதிகாரிகள் ரேடியோவில் கட்டளையிட்டார்களாம். விமானியோ இரண்டு குண்டு களைப் போட்டுவிட்டு, 'How do you like it' என்று கேட்டானாம். உடனே கீலர் பறந்து சென்று லாகூர் எல்லை வரையிலே விமானத்தைத் துரத்தித் திருப்பிக் கொண்டு வந்து கீழே இறங்கி அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டாராம்.


அத்தகைய வீரன் கீலர், மிகுந்த கூச்சத்துடன் நின்றார். நம்முடைய நடிகைகள் அவரோடு நின்று படம் எடுத்துக் கொண்டபோது, அவருக்கு வெட்கம் தாங்கவில்லை.


அல்வாராவில்தான் சந்திரபாபு சூரியோதயத்தையே பார்த்தார். அதுவரையிலும் பார்த்தில்லையாம்!


அல்வாராவிலிருந்து ஜலந்தருக்கு ஸ்பெஷல் பஸ் பிரயாணம். அழகான பஸ்ஸை அந்த மாமி கொண்டு வந்திருந்தார்.


பின்னணிப் பாடகர்கள் பி.பி.எஸ்., பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரும் வந்திருந்ததைக் குறிப்பிட மறந்து விட்டேன்.


எல்லாரும் பஸ்ஸில் ஏறிக்கொண்டனர்.


பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பஞ்சாப்பும், வங்காளமும். இந்த இரண்டு மாநிலங்களையும் பார்க்கும் ஒருவன் கனவில்கூடப் பிரிவினை கருத மாட்டான்.


தங்கள் சகோதரர்கள் லாகூர் பகுதியில் பட்ட அவமானங்களை எண்ணி ஒவ்வொரு பஞ்சாபியும் வேங்கை போல் சினந்து நின்றான்.


தென்னிந்தியக் கலைக் குழுவினருக்கு அவர்கள் அளித்த ஆரவாரமான் வரவேற்பு, கொஞ்ச நஞ்சமல்ல.


ஜலந்தர் போகும் வழியில் அவன் சாலைகளையே கூர்ந்து கவனித்தான்.


"ஓ! பாஞ்சாலமே! என் இனிய பாஞ்சாலமே! தேச விடுதலைப் போரின் போது தியாகச் செம்மல்களை அதிகம் கொடுத்த வீரப் பாஞ்சாலமே! உன் திருமண்ணைத் தொட்டு வணங்குவதே இந்த நாட்டுக் குடிமகனின் வேலை."


அவனுக்கு என்னென்னவோ பாட வேண்டும்போல் தோன்றிற்று. ஒவ்வொரு பஞ்சாபியையும் கட்டித் தழுவத் தோன்றிற்று.


ஜலந்தர் இராணுவ ஆஸ்பத்திரிக்குள் நுழைந்ததும், 'தான் ஓர் இந்தியன்' என்ற பெருமிதம் ஏற்பட்டது. கை போனவர்கள், கால் போனவர்கள், கண் போனவர்கள், படுக்கையில் உற்சாகம் குன்றாமல் காட்சியளித்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிரியமான நடிகைகளைப் பற்றிக் கேட்டனர்.


ஆஸ்பத்திரி மைதானத்திலேயே பொதுக் கூட்டம். அவர்கள் தமிழில் பேசினார்கள். யாருக்கும் அது புரியவில்லை.


இந்தி தெரியாத குறையை ஜலந்தரில் அவர்கள் மிகவும் உணர்ந்தார்கள்.


ஜலந்தர் நகரின் மைதானத்தில் அன்று மாலை அவர்களது கலை நிகழ்ச்சி.


எங்கும் ஒரே தாடிக்கார சீக்கியர்கள் குவிந்து கிடந்தார்கள். அவ்வளவு இராணுவத்தினரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.


இசை நிகழ்ச்சி ஆரம்பமானதும் திருமதி பி.சுசீலா, 'சரவணப் பொய்கையில் நீராடி' என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார். பஞ்சாபியரெல்லாம் கைதட்டி அவரை உட்கார வைத்து விட்டார்கள்.யாருடைய தமிழ்ப் பாட்டையும் அவர்கள் கேட்க விரும்பவில்லை!


பஞ்சாபியரிடையே செல்கிறோமே தமிழ்ப் பேச்சும் பாட்டும் எடுபடுமா என்று சிந்திக்கிற பண்பாடு இல்லாது போயிற்று.


தமிழ் நாட்டிலிருந்து வருகிறார்களே, புரியாவிடினும் அவர்கள் கலைகளை ரசித்து மகிழ முயல்வோம் என்ற பண்பாடு அவர்களிடம் இல்லாது போயிற்று.


பிறகு எம்.என். ராஜத்தின் கணவர் ராகவன் ஓர் ஆங்கிலப் பாட்டுப் பாடினார். சபை கொஞ்சம் அமைதியாக இருந்தது. சந்திரபாபு ஆங்கிலத்தில் விடுத்த வேண்டுகோள் பலித்தது.


பிறகு பத்மினியும் அம்பிகாவும் ஆடிய 'பங்காரா' நடனத்துக்கு ஒரே ஆரவார வரவேற்பு. அதையே திரும்பத் திரும்ப ஆடி, நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டோம்.


அந்த ஆறு நாட்களும் அற்புதமான நாட்கள். ஒவ்வொரு படைத் தளத்திலும் தமிழ் வீரர்களைக் கூட்டம் கூட்டமாகச் சந்தித்தோம்.


அவன் பயந்ததுபோல் படை வீரர்களிடம் தி.மு.க.செல்வாக்கு அதிகமில்லை. அதிலும் சீன பாகிஸ்தான் யுத்தங்களுக்குப் பிறகு தேசிய உணர்வே மேலோங்கி நின்றது.


புதுடில்லி வந்து சேர்ந்தபோது விமானத் தளத்தில் ஏராளமான தமிழ்ப் படை வீரர்களே அவர்களை வரவேற்றார்கள். எல்லாரும் எல்லாரோடும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.


அந்த வீரர்களிடையே நடிகர்களை விட, அவனுக்குத் தான் செல்வாக்கு அதிகம் இருந்தது. பலரும் அவனுடைய கவிதைகளை ஒப்புவித்தார்கள்.


இரவு அசோகா ஹோட்டலில் தங்கல். அரசாங்கம் ஓரளவுதான் அதற்குப் பணம் கொடுத்தது. கூடுதல் தொகையை அவரவரும் செலுத்தினார்கள்.


அனைவரிலும் அவன் செலுத்திய தொகையே அதிகம். காரணம், பலபேரும் அவனுடைய அறையிலேயே சாப்பிட்டு விட்டுப் போய்விட்டார்கள்.


மறுநாள் ஜனாதிபதியைச் சந்திக்க ஏ.எல்.எஸ். தலைமையில் ஒரு குழு புறப்பட்டது. அங்கே ஒரு வேடிக்கை நடந்தது.


நன்றி : கண்ணதாசன் (மனவாசம்)
Thanks to Tamilleader

‘மறுமுகம்’ முன்னோட்டம்

Posted: 01 Mar 2012 06:46 PM PST


'மறுமுகம்' முன்னோட்டம்

'ஊமைவிழிகள்' படத்தின் மூலம் தமிழகத்தை மிரட்டிய ஆபாவாணனின் உதவியாளரும், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவருமான கமல் முதன் முறையாக என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிடெட் சார்பில் 'மறுமுகம்' என்ற படத்தை இயக்குகிறார்.


'12 Hours' – மலேசியாவில் வெளிவந்த தமிழ்ப்படம். அந்நாட்டின் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. அப்படத்தின் கதை, திரைக்கதை கமல் என்பது குறிப்பிடத்தக்கது.


'முத்திரை' படத்திற்குப் பிறகு இரண்டு ஹீரோக்கள் படத்தில் டேனியல் பாலாஜி-அனுப் (சிக்கு புக்கு) இணைந்து நடிக்கிறார்கள். மும்பை இறக்குமதி ரன்யா முதல் படத்திலேயே ஆணித்தரமான நடிப்பை வெளிப்படுத்தும் மிக வலுவான பாத்திரத்தில் அறிமுகமாகிறார்.


அன்புக்கு ஏங்கும் பணக்கார இளைஞர்கள் இன்றைய நவநாகாரீக வாழ்க்கையில் நிறைய உண்டு. தன்னை யாராவது நேசிக்கமாட்டார்களா? என ஒரு பணக்கார இளைஞன் (டேனியல் பாலாஜி) ஏங்கும்போது மனக்கூடை நிறைய அன்பை சுமந்து கொண்டு பறக்கும் ஒரு பெண்ணிடம் காதல் கொள்கிறான். அவளோ இன்னொரு இளைஞனான (அனுப்) வாழ்க்கையில் முன்னுக்கு வரத் துடிப்பவனிடம் மனதைப் பறிகொடுக்கிறாள். உள்ளுக்குள்ளே காதலை வைத்துக் கொண்டு, அதை அடைவதற்காக காய் நகர்த்தும் உச்சக்கட்ட த்ரில்லரை சொல்கிறது 'மறுமுகம்'. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இன்னொரு முகம் இருக்கும். டேனியல் பாலாஜியின் இன்னொரு 'மறுமுகம்' காண்பவர்களை உறையவைக்கும் திகிலுடன் இருக்கும் என்கிறார் இயக்குனர்.


பானு சந்தர், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெற்றோர் தேர்வு செய்யும் பையன் வாழச் சிறந்தவனா அல்லது பெண் தானே தேர்வு செய்யும் பையன் சிறந்தவனா என்பதற்கும் ஒரு விடையைச் சொல்லும் படமாக 'மறுமுகம்' இருக்கும்.


திரைப்படக்கல்லூரி மாணவனான கனகராஜ் ( மலேசிய தமிழ்படம் '12 hours' படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே). ஒளிப்பதிவு செய்ய, இசையமைக்கிறார் அகஸ்தியா. பிரபல தெலுங்கு இசையமைப்பாளரான அகஸ்தியா முதன்முறையாக தமிழில் இசையமைக்க, முழுப்படத்திற்கும். அதாவது எல்லா பாடல்களுக்கும் வார்த்தைகள் தீட்டுகிறார் ஏக்நாத். தயாரிப்பு நிர்வாகத்தை சீனுவும், நிர்மலும் கவனிக்க, இணைந்து தயாரிக்கிறார் சங்கீதா ரெபெக்கா.


படப்பிடிப்பு சென்னை கடற்கரைப் பகுதிகளிலும், கொடைக்கானலிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Thanks to ozeeya

வாக்குமூ்லம் பெறுவதை தள்ளி வைக்கக் கோரிய சசி மனு நிராகரிப்பு

Posted: 01 Mar 2012 06:41 PM PST


வாக்குமூ்லம் பெறுவதை தள்ளி வைக்கக் கோரிய சசி மனு நிராகரிப்பு

பெங்களூர்: வாக்குமூலம் பெறுவதைத் தள்ளி வைக்கக் கோரிய சசிகலாவின் மனுவை பெங்களூர் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.


முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சசியின் அண்ணி இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவை தொடர்ந்து சசிகலா தற்போது வாக்குமூலம் அளித்து வருகிறார்.


நேற்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜுர்னய்யா முன்னிலையில் சசிகலா வாக்குமூலம் அளித்தார். அப்போது அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா, சசிகலா வக்கீல் மணிசங்கர் ஆகியோர் ஆஜரானார்கள்.


பையனூர் பங்களா, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்கள் குறித்த நீதிபதியின் கேள்விகளுக்கு நேற்று சசிகலா பதில் அளித்தார். போலீசாரின் நெருக்கடியால் சொத்துகளின் மதிப்பை அதிகரித்து சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.


ஒரு கட்டத்தில் சசிகலாவின் நீண்ட பதிலால் நீதிபதி அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் சசிகலாவின் வக்கீலைப் பார்த்து, சசிகலா விளக்கம் அளிக்கிறாரா? அல்லது மொழிபெயர்ப்பு செய்கிறாரா?. இதுபோன்ற விளக்கங்களை நீங்கள் வாதிடும்போது எடுத்துச் சொல்லலாம்'' என்றார்.


அதற்கு சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், சில கேள்விகள் நீளமாக உள்ளன. அத்தகைய கேள்விகளுக்கு அவசியமான, விளக்கமான பதில் தேவைப்படுகிறது என்றார். தொடர்ந்து சசிகலா வாக்குமூலம் அளித்தார். நேற்று மட்டும் சசிகலா 47 கேள்விகளுக்கு சசி வாக்குமூலம் அளித்தார்.


நேற்றைய விசாரணையின் முடிவில், வக்கீல் மணிசங்கர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ள சிறப்பு விடுப்பு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. எனவே, சசிகலாவிடம் வாக்குமூலம் பெறும் பணிகளை வருகிற 6-ந் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.


ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். இதனால் இன்றும் சசிகலாவிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது.
Thanks to OneIndia

ஒபாமா 'சிபாரிசு'...ராஜபக்சேவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்க கோர்ட்!

Posted: 01 Mar 2012 06:35 PM PST


ஒபாமா 'சிபாரிசு'...ராஜபக்சேவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்க கோர்ட்!

வாஷிங்டன்:  இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரின்போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்டப் போரின்போது லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளும் கொடுமைப்படுத்தி கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,


இலங்கை அதிபர் ராஜபக்சே வெளிநாட்டு தலைவர் என்பதால் அந்த அடிப்படையில் அவருக்கு சட்ட விலக்கு இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் தெரிவித்துள்ளதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.


இருப்பினும் திரிகோண மலை கடற்கரையில் வைத்து 5 தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது மற்றும் மூதூர் தொண்டு நிறுவன படுகொலை போன்ற சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Thanks to OneIndia

பெங்களூரில் "போயஸ் டீம்" கஸ்டடியில் சசி!

Posted: 01 Mar 2012 06:32 PM PST


பெங்களூரில் "போயஸ் டீம்" கஸ்டடியில் சசி!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறதோ தெரியாது, ஆனால், இந்த விஷயத்தில் போயஸ் கார்டன் எடுத்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பெரும் யூகங்களைக் கிளப்பி வருகின்றன.


ஜெயலலிதாவுக்கு "எதுவுமே" தெரியாமல் அவர் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததில் சசிகலா அண்ட் கோவுக்குத்தான் முழுப் பங்கு இருக்கிறது என்று எல்லோரும் நம்ப வேண்டும் என்பது தான் போயஸ் கார்டனின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது.


பெங்களூர் நீதிமன்றத்தில் ஆற அமர இழுத்தடித்து, சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் பி.பியை எகிற வைத்து சசிகலா அளித்து வரும் "பதில்கள்" போய்க்கொண்டிருக்கும் பாதை மேற்சொன்ன திசையை நோக்கித்தான்...


ராவணன் தொடங்கி எம்.நடராஜன் வரை சசி அண்ட் கோ பிரதிநிதிகள் சிறையில்! சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில்!


பெங்களூர் நீதிமன்றத்துக்கு வந்து போகும் சசி, இளவரசி, சுதகாரன் தவிர வேறு சில கதாபாத்திரங்களும் உண்டு. போயஸ் கார்டனின் திட்டத்தை அரங்கேற்றி வருபவர்கள் இவர்கள்தான்!


அதாவது சசிகலாவின் குடும்பத்துக்கு போலீஸ் கஸ்டடி, ஜூடிசியல் கஸ்டடி என்றால் சசிகலாவுக்கு போயஸ் கார்டன் கஸ்டடி!.


சசிகலாவின் பாதுகாவலர்கள் என்பவர்கள் அனைவருமே கார்டன் கட்டளைப்படி நியமிக்கப்பட்டவர்கள்.


அவர் அளிக்கின்ற பதில்களை பக்கத்தில் அமர்ந்து கொண்டே சொல்லித் தருவதும் திருத்துவதும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார்தான்!. இன்னொரு கார்டன் பிரதிநிதி ரங்கராஜ்.


யார் இந்த ரங்கராஜ்?:


ஜெயலலிதாவின் 1991ம் ஆண்டு ஆட்சிக்காலத்து தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர் (நிலக்கரி ஊழல் புகார் எழுந்தபோது இவரை 'கரி'பாஸ்கள் என்று பத்திரிக்கைகள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது). இவரது உதவியாளராக இருந்தவர்தான் இந்த ரங்கராஜ். போயஸ் கார்டனின் நம்பிக்கைப் பிரதிநிதி. இவர்தான் பெங்களூரில் சசிகலா நீதிமன்றம் வரும்போது அவரது உதவியாளர் என்ற பொறுப்பு வகிப்பவர்.


விசாரணையின் போது இந்த ரங்கராஜனும் சில போயஸ் தோட்டத்து வழக்கறிஞர்களும் சசிகலாவின் அருகிலேயே போய் சில விஷயங்களை சொல்லப்போய் நீதிபதி மல்லிகார்ஜுனையா இது என்ன கான்பரென்ஸா? என 'சூடானதும்' நடந்தது.


இவர்கள் கஸ்டடியை மீறி சசிகலா தன் போக்கில் ஏதாவது சொல்லிவிட்டால் மன்னார்குடி கேங்கில் இன்னொரு நபருக்கு போலீஸ் கஸ்டடி ரெடியாகிவிடும்!


நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரிகள்:


இவர்கள் போக பத்திரிக்கையாளர்களுக்கான பகுதியில் வந்து உட்கார்ந்து சசிகலா வாக்குமூலம் கொடுக்கத் தொடங்கியவுடன் செல்போனை ஆன் செய்துவிடுகிறவர் ஐ.ஜி. குணசீலன்!


இதேபோல் ஏற்கெனவே ஜெயலலிதா அளித்த 313 வாக்குமூலத்தை கையில் வைத்துக் கொண்டு சசிகலாவின் பதில்களோடு ஒப்பிட்டுப் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் இன்னொரு உளவுப் பிரிவு அதிகாரி!


சர்ச்சைக்குரிய சென்னை லஸ் சர்ச் சாலை நிலம், ஊத்துக்காடு அருகே வெலக்காயம் கிராமத்து நிலம், பையனூர் பங்களா விவகாரம் போன்றவற்றிலும் ஜெயலலிதாவுக்கு எந்த ஒரு சம்பந்தமே இல்லை போயஸ் கார்டன் எதிர்பார்த்தபடியான பதிலை சொல்லிவிட்டார் சசி.


இதேபோல் பல கேள்விகளுக்கும் "ஜெயலலிதாவுக்கோ- போயஸ்தோட்டத்துக்கோ" எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்ற பதிலே சசியின் வாயிலிருந்து வருகிறது.


இதைத்தானே போயஸ் கார்டன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.


பெங்களூர் வழக்கில் சசிகலா அளிக்கப் போகும் வாக்குமூலம் இன்னும் சில காலம் நீடிக்கக் கூடும்.


அதுவரை போலீஸ் கஸ்டடி, ஜூடிசியல் கஸ்டடியில் என ராவணன், திவாகரன், நடராஜன் ஆகியோர் அடைபட்டிருக்கத்தான் வேண்டும்! பெங்களூரில் சசிகலாவும் "போயஸ் கார்டன் கஸ்டடியில்" தான் இருந்தாக வேண்டும்!
Thanks to OneIndia

Dinakaran E-paper 02-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 2nd March 2012

Posted: 01 Mar 2012 05:37 PM PST


Dinakaran E-paper 02-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 2nd March 2012

Download Links

ஸ்டாலின் பிறந்த நாள்: அழகிரி "ஆப்சென்ட்'

Posted: 01 Mar 2012 05:15 PM PST


ஸ்டாலின் பிறந்த நாள்: அழகிரி "ஆப்சென்ட்'

சென்னை: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தனது 60வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். விழாவிற்கு மூத்த சகோதரரும் மத்திய அமைச்சருமான அழகிரி வரவில்லை.


நேற்று காலை 7 மணிக்கு, அவரது வீட்டில் மனைவி, மகன், மகள், சகோதரி செல்வி உள்ளிட்டோர் முன்னிலையில், "கேக்' வெட்டினார். தொடர்ந்து, கோபாலபுரம் சென்று, தந்தை கருணாநிதி மற்றும் தாய் தயாளுவிடம் ஆசி பெற்றார். ராயப்பேட்டையில், தென் சென்னை மாவட்ட தி.மு.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. இரண்டு மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒன்றில் ஸ்டாலினும், மற்றொன்றில் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. மத்திய அமைச்சர்கள், மாநில முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் திரண்டு, ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர். இளைஞர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வெள்ளை சட்டையும், கறுப்பு நிற பேன்ட்டும் அணிந்திருந்தனர். பகல் ஒரு மணி வரை நிகழ்ச்சி நடந்தது. மாஜி அமைச்சர்கள் பொன்முடியும், வேலுவும் கடைசி வரை ஸ்டாலின் கூடவே இருந்தனர். நிறைய பேர் மாலையும், "பொக்கே'வும் கொடுத்தனர். சிலர் பணமாலையும் அணிவித்தனர். இளைய சகோதரியும் எம்.பி.,யுமான கனிமொழி கூட, வீட்டுக்குச் செல்லாமல், விழா பந்தலுக்கு வந்து தான் வாழ்த்துக் கூறினார். மூத்த சகோதரரும் மத்திய அமைச்சருமான அழகிரி வரவில்லை. போனில் வாழ்த்துச் சொன்னதாகவும் தகவல் இல்லை.
Thanks to Dinamalar

Dinamalar E-paper 02-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 2nd March 2012

Posted: 01 Mar 2012 05:17 PM PST


Dinamalar E-paper 02-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 2nd March 2012

Download Links

Dailythanthi E-paper 02-03-2012 | Free Download Dinathanthi PDF today ePaper | Dinathanthi 2nd March 2012

Posted: 01 Mar 2012 05:23 PM PST


Dailythanthi E-paper 02-03-2012 | Free Download Dinathanthi PDF today ePaper | Dinathanthi 2nd March 2012

Download Links

Cinekoothu 29-02-2012 | Free Download cinikuthu PDF This week | cinikoothu 29th February 2012 ebook

Posted: 01 Mar 2012 11:35 AM PST


Cinekoothu 29-02-2012 | Free Download cinikuthu PDF This week | cinikoothu 29th February 2012 ebook

Download Links


Ananda Vikatan 07-03-2012 | Free Download Ananda Vikatan PDF This week | Ananda Vikatan 7th March 2012 ebook

Posted: 01 Mar 2012 11:45 AM PST


Ananda Vikatan 07-03-2012 | Free Download Ananda Vikatan PDF This week | Ananda Vikatan 7th March 2012 ebook - First on Net

Download Links ( 4 Links )