TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


வித்யா பாலனுக்கு தேசிய விருது வாங்கித் தந்த 'சில்க்'!

Posted: 07 Mar 2012 02:01 AM PST


வித்யா பாலனுக்கு தேசிய விருது வாங்கித் தந்த 'சில்க்'!

கடந்த இரு ஆண்டுகளாக பெரிதும் எதிர்ப்பார்த்து ஏமாந்த வித்யா பாலனுக்கு இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துவிட்டது.


ஏற்கெனவே 2009-ஆண்டு பா படத்துக்காகவும், 2010 இஷ்கியா படத்துக்காகவும் அவர் சிறந்த நடிகை விருது பெறுவார் என யூகங்கள் வெளியாகின. ஆனால் கிடைக்கவில்லை.


இந்த முறை அவர் மறைந்த சில்க் ஸ்மிதா 'உதவி'யுடன் இந்த விருதைப் பெற்றுள்ளார். காரணம் தி டர்ட்டி பிக்சர் சில்க்கின் சொந்த வாழ்க்கைக் கதை. இந்தப் வெளியானபோதே வித்யாவுக்கு தேசிய விருது கண்டிப்பாக உண்டு என கூறப்பட்டது.


விருது அறிவிக்கப்பட்டபோது வித்யா இந்தியாவில் இல்லை. துபாயில் இருந்தார். சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றது குறித்து அவர் கூறுகையில், "கடந்த 2009-ம் ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, மதியம் 2 மணியிலிருந்து போனை ப்ரீயாக வைத்துக் கொள். நல்ல சேதி வரும் என்று தகவல் வந்தது. நானும் அப்படியே வைத்திருந்தேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.


கடந்த 2010-ம் ஆண்டும் அதே மாதிரி சொன்னார்கள். இஷ்கியா படத்துக்காக சிறந்த நடிகை விருது கிடைக்கும் என்றனர். அதுவும் நடக்கவில்லை.


இந்த ஆண்டு நான் இந்தியாவில் இல்லை. கஹானி படத்தின் புரமோஷனுக்காக துபாய் வந்துள்ள நேரத்தில் விருது அறிவிப்பு வந்துள்ளது," என்றார்.


"விருதுகள் ஒரு கலைஞனுக்கு மிக முக்கியமானவை. அந்த விருதுகள் அர்த்தமுள்ளதாக அமையும்போதுதான் மகிழ்ச்சி பிறக்கிறது," என்கிறார் வித்யா.


இப்போ ஹேப்பிதானே!
Thanks to OneIndia

படுக்கையறையில் கட்டுப்படுங்கள்!- கை மேல் பலன் கிடைக்கும்!!

Posted: 07 Mar 2012 01:59 AM PST


படுக்கையறையில் கட்டுப்படுங்கள்!- கை மேல் பலன் கிடைக்கும்!!
இருமனங்கள் இணையும் திருமண விழாவில் புதுமணத்தம்பதிகள் ஆர்வத்துடன் காத்திருப்பது அன்றைய இரவுப் பொழுதிற்காகத்தான். இருவருக்குமே முதல் இரவினைப் பற்றி எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் ஏகப்பட்ட கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், அறைக்குள் நுழையும் ஆணை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நினைத்து பெண்கள் செய்யும் சில செயல்கள்தான் அப்செட் செய்வதுபோல மாறிவிடுமாம். எனவே பெண்கள் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை அறிவுறுத்தியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.


எல்லாம் தெரிஞ்சவங்களா?


முதல்நாளன்றே உங்களின் திறமையை வெளிப்படுத்தவேண்டாம். அது துணைவருக்கு அச்சத்தையும், ஒருவித சந்தேகத்தையும் ஏற்படுத்திவிடும். என்னதான் நடக்கிறது என்று கவனியுங்கள். இப்படியில்லை, அதுமாதிரி வேண்டாம் என்ற ஆலோசனையும் கூடாதாம். முதல்நாளே அட்வைஸ் செய்வது, இதுமாதிரி விசயங்களில் ஐடியா சொல்வது ஆண்களின் ஈகோவை தூண்டிவிடுவது போல் ஆகிவிடுமாம். எனவே பெண்களே, தெரிந்த மாதிரி காட்டிக்கொள்ள வேண்டாம். அது வாழ்க்கை பயணத்தை சிக்கலின்றி தொடர உதவும். இல்லையென்றால் முதல்நாளன்று ஆர்வக்கோளறில் செய்யும் செயல் வாழ்க்கை முழுவதும் தொடர்ச்சியான சிக்கல்களை உருவாக்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.


பழைய கதை வேண்டாம்


முதல் நாளன்றே தன்னைப் பற்றி முழுவதுமாக தன் கணவர் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த காலத்தைப் பற்றி கணவருக்கு சொல்ல நினைக்க கூடாதாம். அது உங்கள் மீது கசப்பு உணர்வுகளைத்தான் ஏற்படுத்துமாம். எனவே திருமண நாளன்று காலையில் தொடங்கி இரவு வரை அலுத்து, சலித்து வந்திருக்கும் ஆணிடம் பழைய கதை பேசி போராடிப்பது திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்ளவேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். 


ஓவர் வெட்கப் படாதீங்க


முதன் முதலாக திடீரென்று ஒரு ஆணுடன் படுக்கை அறைக்குள் தனித்து விடப்படும்போது அச்சம், வெட்கம் பெண்ணுக்கு ஏற்படுவது இயல்பானதுதான். அதற்காக எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் ஆணுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது. அது புதிதாய் வாழ்க்கையை தொடங்க நினைக்கும் கணவருக்கு மூட் அப்செட் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொஞ்சமே, கொஞ்சம் வெட்கத்தை தளர்த்திக் கொள்ளலாம்.


கட்டுப்படுங்கள்


அது தொடர்பான புத்தகம் படித்தோ, வீடியோ பார்த்திருந்தோ பெண்களுக்கும் ஓரளவிற்கு விபரம் தெரிந்திருந்தாலும் முதல்நாள் இரவு ஆணின் ஆளுமைக்கு கீழ் கட்டுப்படவேண்டும். அதைத்தான் பெரும்பாலான ஆண்களும் எதிர்பார்ப்பார்கள். முதல் இரவில் மெல்லியதாய் ஒரு வெட்கம். இதமான ஒரு நடுக்கத்துடன் அணுகும் பெண்களைத்தான் ஆணுக்குப் பிடிக்குமாம். அதை விடுத்து தன்னுடைய கட்டுப்பாட்டில் ஆணை கொண்டுவரவேண்டும் என்று நினைக்கும் பெண்களைக் கண்டு ஆண்கள் மிரட்சியடைகின்றனராம்.


எனவே இதுபோன்ற தவறுகளை முதல்நாளன்று செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்பது உளவியல் நிபுணர்களின் ஆலோசனையாகும்.
Thanks to OneIndia

அல்போன்சாவும், தொடரும் அவரது காதல் குழப்பங்களும்!

Posted: 07 Mar 2012 01:58 AM PST


அல்போன்சாவும், தொடரும் அவரது காதல் குழப்பங்களும்!
அல்போன்சா காதல் குழப்பத்தில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல, 3வது முறையாகும். இதில் 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்று மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அன்னக்கிளி செல்வராஜ் மூலம் கதாநாயகியாகத்தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தார் அல்போன்சா. இவரது தந்தை பெயர் ஆண்டனி. இவர் ஒரு டான்சர். தாயார் பெயர் ஓமனா. இரண்டு அண்ணன்கள், ராபர்ட் என்கிற தம்பி அல்போன்சாவுக்கு உண்டு. வீட்டில் இவர் ஒரே பெண் என்பதால் செல்லம் ஜாஸ்தி. கேரளாவிலிருந்து வந்தவர் என்பதால் தமிழ் சினிமாவில் பட்டுக்கம்பளம் போட்டுத்தான் வரவேற்றார்கள். ஆனால் ரசிகர்கள் அல்போன்சாவை கதாநாயகியாக ரசிக்கவில்லை. அதையும் தாண்டி அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்த கவர்ச்சிதான் மேலோங்கி தெரிந்தது. இதனால் அவர் கவர்ச்சி நாயகியாக மாறினார்.


பாட்ஷா படத்தில் அவர் பாடிய கவர்ச்சிகரமான பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவே அவருக்கு பெரும் பிரேக்காகவும் அமைந்தது. அதன் பின்னர் அல்போன்சாவின் கவர்ச்சி நடனத்துக்கு கூட்டம் சேர்ந்தது, அவரும் பிசியாக ஆடிக் கொண்டிருந்தார்.


அப்போதுதான் அவருக்கும் சாகர் என்ற நடிகருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இந்த காதல் படு வேகமாக காலியாகிப் போனது. சாகர் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு ஒதுங்கினார். ஆனால் இந்த நிராகரிப்பால் அதிர்ந்தும், ஏமாந்தும் போன அல்போன்சா, தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.


இந்த நேரத்தில்தான் அல்போன்சாவின் தம்பி ராபர்ட் தலையெடுத்தார், டான்ஸ் மாஸ்டரானார். அல்போன்சாவும் மெதுவாக கிரேஸ் குறைந்து படங்களிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார். நோபள் என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். குழந்தையும் பிறந்தது.


இந்தத் திருமண வாழ்க்கை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, நோபளுக்கும், அவருக்கும் பிரச்சினை வெடித்தது. அதற்குக் காரணம், வினோத்குமார் மீது அல்போன்சாவின் பார்வை படர்ந்ததே என்கிறார்கள். வினோத்குமாருடன் அல்போன்சா நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வெகுண்ட நோபள், தனது மனைவியையும், மகளையும் விட்டு விட்டு துபாய் போய் விட்டார். அது அல்போன்சாவுக்கு வசதியாகிப் போய் விட்டது.


விருகம்பாக்கத்தில் பிளாட்டை வாடகைக்குப் பிடித்து அங்கு வினோத்துடன் குடும்பமே நடத்த ஆரம்பித்து விட்டார். அல்போன்சாவுடன் இணைந்தது முதல் தனது குடும்பத்தினரைக் கூட மறந்து விட்டார் வினோத்குமார். இப்படியாக இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.


இந்த செயலை இருவரது வீட்டாரும் ஆரம்பத்திலேயே கண்டித்து சரி செய்திருந்தால் ஒரு உயிர் பறி போயிருக்காது. ஆனால் அதைச் செய்யாமல் ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் அல்போன்சாவும், வினோத்குமாரும் தங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு இப்படி ஒரு உயிரைப் பறி கொடுக்க நேரிட்டுள்ளது.


தற்போது போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் அல்போன்சா. இதில் என்ன விசேஷம் என்றால், முதல் முறையாக அவர் தற்கொலைக்கு முயன்று எந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரோ, அங்கேயேதான் தற்போதும் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
Thanks to OneIndia

கருணாநிதி சபதம்: “ராகுல், நம்ம ஸ்டாலினை நெருங்க விடக்கூடாது”

Posted: 07 Mar 2012 01:35 AM PST


கருணாநிதி சபதம்: "ராகுல், நம்ம ஸ்டாலினை நெருங்க விடக்கூடாது"

உ.பி. தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. முடிவுகள் எப்படி வரப்போகின்றன என்பதை காங்கிரஸ் கட்சி ஆவலுடன் எதிர்பார்த்ததோ, இல்லையோ, அரசியலில் ஆர்வம் உடைய அனைவரும் எதிர்பார்த்தார்கள். காரணம், இந்தத் தேர்தலுக்காக முழு மூச்சாக இறங்கி பிரசாரம் செய்தவர் ராகுல் காந்தி.


"காங்கிரஸ் கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று பரவலாக கூறப்படும் ராகுல் காந்தியால், இந்தியாவின் ஒரு மாநிலத்தில் (ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓகோ என்று செல்வாக்கு இருந்த இடத்தில்) காங்கிரஸ் கட்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியுமா?"  என்ற கேள்விக்கு பதிலை தெரிந்து கொள்ள விரும்பினர் பலரும்.


பதில் இப்போது கிடைத்திருக்கிறது. ராகுல் காந்தி பெயில்!


அரசியலில் வெற்றி, தோல்வி வருவது சகஜம்தான். அதே நேரத்தில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல்கள் வரப்போகும் நிலையில் ராகுல் காந்தியின் இமேஸில் இப்படி ஒரு அடி விழுந்திருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு பாதகம்தான். ஆனால், இவை எல்லாவற்றையும்விட ஒரு விஷயத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார் ராகுல் காந்தி.


அது, தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள்!


பொதுவாகவே 'இந்திய ஸ்டைல் அரசியலில்' ஒரு கட்சி தோல்வியுற்ற பின், தோற்ற கட்சியின் தலைவர் தெரிவிக்கும் கருத்துக்கள அலாதியானவை. அந்த இந்திய அரசியல் ட்ரேட் மார்க்கை தகர்த்திருக்கிறார் ராகுல் காந்தி.


அடுத்த தலைமுறை அரசியலுக்கான வரவேற்கத்தக்க மாறுதல் இது.


ஒரு கட்சி தேர்தலில் தோற்றால், டிபிகல் இந்திய ஸ்டைல் ரியாக்ஷன் என்ன?


அதற்கு அதிக தூரம் போக தேவையில்லை. இருக்கவே இருக்கிறார் நம்ம 'தமிழினத் தலைவர்' கருணாநிதி. இவர் தோற்காத எலக்ஷனா? தோற்றவுடன் என்ன கருத்துச் சொல்வது அவரது வழக்கம் என்று கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.


தம்மை தோல்வியடைய செய்த வாக்காளர்களை "நாயே.. பேயே.." என்று நேரடியாக திட்டுவது மட்டும்தான் அவர் செய்வதில்லை. மற்றைய அர்ச்சனை எல்லாம் நடக்கும். "சூடு சுரணையற்ற தமிழா.. சினிமா கவர்ச்சிக்கு மயங்கிய தமிழா.." என்று தொடங்கி, "ஐயகோ… அடுத்த ஐந்தாண்டுகள் உன்னை காலில் போட்டு மிதிக்கப் போகிறார்களே.. உனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்" என்ற ஓலம் அவரது முதலாவது அறிக்கையாக வருவது வழக்கம்.


அதன்பின் தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டபின், "ரொம்பத்தான் திட்டிவிட்டோமோ" என்று கொஞ்சம் பயம் வந்து விடும். அடுத்த ஸ்டைல் அறிக்கையை முரசொலியில் கடிதமாக தட்டிவிடுவார்.


"தமிழர்களே.. தமிழர்களே.. நீங்கள் என்னை கடலில் தள்ளினாலும் கட்டுமரமாக மிதந்து உங்களுக்கு பயன்படுவேன். (அந்த கட்டுமரத்தில் ஏறி டில்லிக்கு செல்வார் கனிமொழி) நீங்கள் என்னை கொதிக்கும் எண்ணையில் தூக்கிப் போட்டால், குதிக்கும் மசால் வடையாக மாறி உங்களுக்கு சுவை தருவேன்" என்று சோக கீதமாக மாறும் சூழ்நிலை.


இது கருணாநிதிக்கு மட்டுமல்ல, தற்போதைய இந்திய அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். இதுதான் டிபிகல் இந்திய அரசியல் ஸ்டைல்.


உ.பி. தேர்தல் முடிவுக்குப் பின், ராகுல் என்ன கருத்துக் கூறியிருக்கிறார்? "சுடும் கல்லில் தூக்கிப் போட்டால், சடன் சப்பாத்தியாக வாய்க்குள் விழுவேன்" என்றெல்லாம் சொல்லவில்லை.


"உ.பி. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதில், நல்ல பாடம் கற்றேன்" என்று சொல்லியிருக்கிறார்.


இதோ, அவர் கூறியிருப்பதை பாருங்கள். "உத்தர பிரதேச தேர்தலில், பிரசாரத்தை நான்தான் முன்னின்று நடத்தினேன். அங்கு படுமோசமான தோல்வி எங்களுக்கு கிடைத்திருக்கிறது. சமாஜ்வாடி கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இந்த வெற்றிக்காக அகிலேஷுக்கு என் பாராட்டுக்கள். அம்மாநில மக்களின் மத்தியில் சமாஜ்வாடி கட்சிக்கான ஆதரவு அதிகமாக உள்ளது.


காங்கிரசுக்கு செல்வாக்கான அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில்கூட (இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி போட்டியிட்ட தொகுதிகள்) நாங்கள் தோற்றுப் போயிருக்கிறோம். இதுதான் உண்மை. இதைப் பற்றி கருத்து கேட்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் எல்லா தொகுதிகளிலுமே நாங்கள் பரவலாக தோல்வி கண்டுள்ள நிலையில், இதை பற்றி என்ன கூறுவது?" என்று கூறியிருக்கிறார்.


காங்கிரஸ் செய்யும் அரசியல் பற்றி எமக்கு பல்வேறு அபிப்பிராய பேதங்கள் உண்டு. அந்தக் கட்சித் தலைமை, தமது தமிழக பிரிவு (தமிழக காங்கிரஸ்) ஆட்களை நடத்தும் விதத்தை யாராவது பார்த்தால், பிராணிகள் வதைப்பு தடுப்பு சங்கத்தில் புகார் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி, தேர்தல் தோல்விக்குப் பின் ராகுல் கூறியுள்ள கருத்துக்கள் சூப்பர்.


தி.மு.க.-வுக்கு உதயநிதி ஸ்டாலின் தலைவராகும் காலத்தில், அவரும் இப்படி கருத்து தெரிவிக்க சான்ஸ் உள்ளது!
Thanks to ViruVirupu

SunTv Headline News 07-03-2012 | Sun Tv headline News 07-03-12 | Sunnews 7th March 2012

Posted: 07 Mar 2012 01:32 AM PST


SunTv Headline News 07-03-2012 | Sun Tv headline News 07-03-12 | Sunnews 7th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 07-03-2012 | Sun Tv Athipookal Serial 7th March 2012

Posted: 07 Mar 2012 01:37 AM PST


Athipookal 07-03-12 | Sun Tv Athipookal Serial 7th March 2012
Source 1

Source 2



This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 07-03-2012 | Sun Tv Elavarasi Serial 7th March 2012

Posted: 07 Mar 2012 12:38 AM PST


Ilavarasi 07-03-12 | Sun Tv Elavarasi Serial 7th March 2012



This posting includes an audio/video/photo media file: Download Now

Junior Vikatan 11-03-2012 | Free Junior Vikatan PDF This week | Junior Vikatan 11th March 2012 ebook

Posted: 07 Mar 2012 12:46 AM PST


Junior Vikatan 11-03-2012 | Free Junior Vikatan PDF This week | Junior Vikatan 11th March 2012 ebook - First On Net

Download Links

நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகமாகும் உலகின் முதல் பறக்கும் கார்

Posted: 06 Mar 2012 11:52 PM PST


நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகமாகும் உலகின் முதல் பறக்கும் கார்
ஜேம்ஸ்பாண்டு படங்களில்தான் தரையிலிருந்து திடீரென ஆகாயத்தில் சீறிப் பாயும் பறக்கும் கார்களை பார்த்திருக்கிறோம். ஆனால், வணிக ரீதியில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதல் பறக்கும் கார் அடுத்த மாதம் நியூயார்க் ஆட்டோ ஷோவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.


அமெரிக்காவை சேர்ந்த டெர்ராபியூஜியா நிறுவனம் இந்த பறக்கும் காரை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டு மத்தியில் செய்தித்தாள்களில் பரபப்பை ஏற்படுத்திய இந்த கார் உலகின் வணிக ரீதியில் வெற்றிகரமான முதல் பறக்கும் காராக கருதப்படுகிறது.


டெர்ராபியூஜியா டிரான்சிஷன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கார் அடுத்த மாதம் நடைபெற உள்ள நியூயார்க் ஆட்டோ ஷோவில் முதன்முறையாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. சமீபத்தில் இந்த காருக்கான அனைத்து கிளியரன்ஸ் சான்றுகளையும் அமெரிக்க போக்குவரத்து ஆணையம் வழங்கிவிட்டது.


இதனால், இந்த கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை டெர்ராபியூஜியா நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. ஆனால், இந்த கார் பயன்படுத்தும்போது பல்வேறு நடைமுறை மற்றும் சட்ட சிக்கல்கள் இருப்பதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த கார் விற்பனைக்கு அனுமதிக்கப்படுமா என்பதில் சந்தேகம் இருக்கிறது.


இந்த காரில் மடங்கி விரியும் தொழில்நுட்பம் கொண்ட இரண்டு இறக்கைகள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இறக்கைகள் வெறும் 30 வினாடிகளில் விரிந்து பறப்பதற்கு தயாராகி விடும். இந்த காரில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 745 கிமீ தூரம் வரை பறக்கும்.


மணிக்கு அதிகபட்சமாக 177 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1.40 கோடி விலையில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காருக்கு இதுவரை 100 பேர் புக்கிங் செய்துள்ளதாக டெர்ராபியூஜியா தெரிவித்துள்ளது.
Thanks to OneIndia

காரில் எல்பிஜி சிலிண்டர் பொருத்துவது ஆபத்தா?-சிறப்பு பார்வை

Posted: 06 Mar 2012 11:48 PM PST


காரில் எல்பிஜி சிலிண்டர் பொருத்துவது ஆபத்தா?-சிறப்பு பார்வை
புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றின் சேர்மானம்தான் எல்பிஜி அல்லது லிக்யூடு பெட்ரோலியம் கேஸ் என்று கூறப்படுகிறது. தற்போது கார்களை இயக்குவதற்கான முக்கிய எரிபொருளாக எல்பிஜி மாறி வருகிறது.


பெட்ரோல் விலை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம். ஆம், ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாயில் விற்கப்படும் விலையில், எல்பிஜி ஒரு கிலோ 43 ரூபாயில் கிடைக்கிறது. இதனால், எல்பிஜி கிட்டுடன் வரும் கார்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு கூடி வருகிறது.


முன்பு தனியார் நிறுவனங்கள் தனியாக பிட்டிங் செய்து கொடுத்து வந்த எல்பிஜி சிலிண்டர் கிட்டை தற்போது பல முன்னணி நிறுவனங்களே கார்களில் பிட்டிங் செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றன.


எல்பிஜி சிலிண்டர் கிட்டை காரில் பொருத்துவதற்கு ரூ.20,000 வரை செலவாகும். பொதுவாக 33 கிலோ கொள்ளளவு கொண்ட எல்பிஜி சிலிண்டர்கள் கார்களில் பொருத்தப்படுகின்றன. எல்பிஜி கிட் கார்களின் டிக்கியில் பொருத்தப்படுவதால் சாமான்கள் வைக்கும் இடம் கார்களுக்கு தக்கவாறு 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அடைபட்டு விடும் என்பது மைனஸ்தான்.


இதேபோன்று, உங்களது ஏரியாவில் எல்பிஜி நிரப்பும் பங்க் இருத்தலும் அவசியம். ஆனால், எல்பிஜி பங்குகள் குறைவான அளவில் இருப்பதால் அங்கு நீண்ட கியூவில் நின்றுதான் நிரப்ப வேண்டிய நடைமுறை தொந்தரவும் இருக்கிறது.


எல்பிஜி கிட் பாதுகாப்பானதா?


இந்த நிலையில், எல்பிஜி சிலிண்டர் கிட் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவது உண்மைதான். எதிர்பாராத விதமாக காரின் பின்பக்கத்தில் ஏதேனும் வாகனங்கள் மோதி விபத்து நேரிட்டால் எல்பிஜி சிலிண்டர் வெடித்து விடும் என்ற அச்சம்தான் அதில் முக்கியமாக கூறப்படுகிறது.


ஆனால், இதுபற்றி பெரிய அளவில் கவலைப்பட தேவையில்லை என்று கூறுகின்றனர் ஆட்டோமொபைல் வல்லுனர்கள். ஏனெனில், எல்பிஜி சிலிண்டர்கள் மிகவும் பாதுகாப்பான அடுக்குகள் கொண்டதாகவும், உறுதியாகவும் வடிவமைக்கப்படுகின்றன. 


எனவே, விபத்து ஏற்பட்டாலும் சிலிண்டர் பாதிக்காத வகையில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர். மேலும், பெட்ரோலை விட எல்பிஜியில் இயங்கும் காரால் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.


ஒரு லிட்டர் பெட்ரோல் மூலம் 2.3 கிலோ கார்பன் டை ஆக்சைடு எரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. ஆனால், ஒரு கிலோ எல்பிஜியின் மூலம் 1.5 கிலோ கார்பன் டை ஆக்சைடு மட்டுமே எரித்து வெளியேற்றப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை ஓரளவு தவிர்க்கும் வாய்ப்பை எல்பிஜி வழங்குகிறது.
Thanks to Driverspark

Sun tv Shows New Game Show Kaiyil oru Kodi-Are you Ready? Promo video

Posted: 06 Mar 2012 11:40 PM PST

 

Sun tv Shows New Game Show Kaiyil oru Kodi-Are you Ready? Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 07-03-2012 | Sun Tv Thiyagam Serial 7th March 2012

Posted: 07 Mar 2012 12:20 AM PST


Thiyagam 07-03-12 | Sun Tv Thiyagam Serial 7th March 2012
Source 1
Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 07-03-2012 | Sun Tv Muthaaram Serial 7th March 2012

Posted: 06 Mar 2012 11:40 PM PST


Mutharam 07-03-12 | Sun Tv Muthaaram Serial 7th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 07-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 7th March 2012

Posted: 06 Mar 2012 10:57 PM PST

Vellai Thamarai 07-03-12 | Sun Tv Vellai Thamarai Serial 7th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 07-03-2012 | Sun Tv Uravugal Serial 7th March 2012

Posted: 06 Mar 2012 10:55 PM PST


Uravugal 07-03-12 | Sun Tv Uravugal Serial 7th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 07-03-2012 | Sun Tv kasthuri Serial 7th March 2012

Posted: 06 Mar 2012 10:55 PM PST


Kasturi 07-03-12 | Sun Tv kasthuri Serial 7th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 07-03-2012 | Sun tv Marudhaani 7th March 2012

Posted: 06 Mar 2012 10:50 PM PST


Maruthani 07-03-12 | Sun tv Marudhaani 7th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

உ.பி., தேர்தல் முடிவுகள் நல்ல பாடம்: ராகுல் மனம் திறந்த பேட்டி

Posted: 06 Mar 2012 07:46 PM PST


உ.பி., தேர்தல் முடிவுகள் நல்ல பாடம்: ராகுல் மனம் திறந்த பேட்டி
""உ.பி., தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதில், நல்ல பாடம் கற்றேன்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் தெரிவித்தார்.


உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நேற்று காலை முதல் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், காங்கிரசுக்கு மிகப் பெரிய தோல்வி முகமாகவே காணப்பட்டது. இதையடுத்து ஜன்பாத் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ராகுல், திக்விஜய் சிங் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு ஆரம்பித்த இந்த ஆலோசனை கூட்டம் மூன்று மணி நேரம் நீடித்தது.


பின் நிருபர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது:உத்தர பிரதேச தேர்தலில், பிரசாரத்தை நான் தான் முன்னின்று நடத்தினேன். அங்கு படுமோசமான தோல்வி காங்கிரசுக்கு கிடைத்தது. எனவே, நானே இதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதில், நல்ல பாடம் கற்றேன். சமாஜ்வாடி கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இந்த வெற்றிக்காக அகிலேஷுக்கு என் பாராட்டுக்கள். ஆனால், முடிவுகள் எதிர்பாராதது.
உ.பி.,யில் கட்சியின் அமைப்பு பலம் சரியாக இல்லை. இரண்டாவதாக அம்மாநில மக்களின் மத்தியில் சமாஜ்வாடி கட்சிக்கான ஆதரவு இருந்துள்ளது.காங்கிரசுக்கு செல்வாக்கான அமேதி மற்றும் ரேபரேலியிலும் கூட காங்கிரஸ் தோற்றுள்ளது உண்மை. அம்மாநிலத்தில் எல்லா இடங்களிலுமே பரவலாக தோல்வி கண்டுள்ள நிலையில், இதை பற்றி என்ன கூறுவது?இருப்பினும் 2009ம் ஆண்டு தேர்தலை விட, இந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த தோல்விக்காக மனம் தளரப் போவதில்லை. காங்கிரஸ் கட்சிக்காக என் பிரசாரத்தை மேலும் தொடர்வேன். தேர்தல் தோல்வி பற்றி கவலைப்படவில்லை.இவ்வாறு ராகுல் கூறினார்.


உடனிருந்த உ.பி., காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான திக்விஜய் சிங் நிருபர்களிடம் கூறும் போது, ""உ.பி.,யில் காங்கிரஸ் அடைந்த தேர்தல் தோல்விக்காக ராகுல் மீது பழி போட முடியாது. பிரசாரம் மட்டுமே செய்தார். சமாஜ்வாடி கட்சியிடம் வைக்கும் ஒரே வேண்டுகோள் என்னவெனில், முந்தைய அவர்களது ஆட்சியை போல, குண்டர்கள் ராஜ்ஜியத்தை மீண்டும் உ.பி.,யில் கொண்டு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.


பார்த்தார் பிரியங்கா:
வீட்டு வாசலில் வைத்து நிருபர்களிடம் ராகுல் பேட்டியளித்துக் கொண்டிருந்த சமயத்தில், வீட்டின் உட்புற கேட் அருகில் சுவர் ஓரமாக ராகுலின் சகோதரி பிரியங்கா சாய்ந்து நின்று, இவற்றை பார்த்து கொண்டிருந்தார். நிருபர்களிடம் பேசி முடித்த பின், ராகுல் வந்த பிறகு, அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.


- நமது டில்லி நிருபர் -
Thanks to Dinamalar

60 வயதில் நான் இளைஞரணி செயலாளர்': ஸ்டாலின் புலம்பல்

Posted: 06 Mar 2012 07:45 PM PST


60 வயதில் நான் இளைஞரணி செயலாளர்': ஸ்டாலின் புலம்பல்

சேலம்:""எனக்கு 60 வயதாகிறது. அடுத்த ஆண்டு மணிவிழா கொண்டாடப் போகிறேன். நான் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளேன். வயது வரம்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே, தலைவர் கருணாநிதி உத்தரவின்பேரில், 30 வயதுக்கு உட்பட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்,'' என, ஸ்டாலின் பேசினார்.
தமிழகம் முழுவதும், மாவட்ட வாரியாக சென்று இளைஞரணி நிர்வாகிகள் நேர்காணலை ஸ்டாலின் நடத்தி வருகிறார். சேலத்தில், இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நேற்று நடந்தது.

ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., எந்த கொள்கை அடிப்படையில் வளர்ந்ததோ, அந்த கொள்கை அடிப்படையை பின்பற்றி நிர்வாகிகள் வரவேண்டும். சட்டசபை தேர்தலில் நாம் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தோம். அப்போது கூட, நாம் முடங்கிப்போகாமல், கட்சியை வளர்த்து வருகிறோம். ஆளும் கட்சியாக இருக்கும்போது, அடக்கமாக இருக்க வேண்டும், இப்போது நாம் ஆட்சியில் இல்லை, அதனால் உங்கள் இஷ்டத்துக்கு பேனர், படம் வைத்துக் கொள்ளுங்கள். அதே வேளையில், கட்சியின் கட்டுப்பாட்டையும் காப்பாற்றுங்கள்.

கடந்த, 1949ம் ஆண்டு திராவிட கட்சி துவக்கப்பட்டது. 1957ல் முதன்முதலாக சட்டசபை தேர்தலை சந்தித்தோம். அப்போது, 15 இடங்களில் வெற்றி பெற்றோம், அதன் பின். 1962ல் போட்டியிட்டு, 50 இடங்களை பிடித்து எதிர்கட்சியாக மாறினோம். 1967ல் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றோம். அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நாடகம் நடத்தி, வீட்டுக்கு கட்சியினர் அழைத்தால், அங்கு சாப்பிட்டால், உறங்கினால், தேநீர் அருந்தினால் அதற்கென ஒரு நிதி கொடுக்க வேண்டும் என, 500, 1,000 ரூபாயாக சிறிது சிறிதாக சேகரித்து, 11 லட்சம் ரூபாயை, தேர்தல் நிதியாக, அண்ணாதுரையிடம் வழங்கியவர் கருணாநிதி.

அதற்காக, விருகம்பாக்கத்தில் நடந்த மாநாட்டில், வேட்பாளர் அறிவிப்பின்போது, "சைதாப்பேட்டை தொகுதியில் மிஸ்டர், 11 லட்சம் போட்டியிடுகிறார்' என, கருணாநிதியை, அண்ணாதுரை அறிமுகம் செய்து வைத்தார். அவ்வாறு, வளர்ந்து வந்த, தி.மு.க.,வில், பெயரளவுக்கு செயல்படக்கூடாது.

சமீபத்தில், ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த, ஒன்றிய அமைப்பாளர், தலைவர் கருணாநிதியை சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். அப்போது, தலைவர் யூகித்துக்கொண்டு, உனக்கு என்ன வயது என அவரிடம் கேட்டார். அவர், 55 வயது என்றார். 55 வயதில் ஒன்றிய அமைப்பாளரா என அவர் வேதனைப்பட்டார். அங்கிருந்த நான், தலைகுனிந்து வெட்கப்பட்டேன். ஏனென்றால், எனக்கு, 60 வயது ஆகிறது. அடுத்த ஆண்டு நான் மணிவிழா கொண்டாட உள்ளேன். இந்த நிலை இருக்கக்கூடாது என்பதற்காக தான் வயது வரம்பு கொண்டு வரப்பட்டுள்ளது. தலைவரும் அதை தான் விரும்புகிறார். எனவே, 30 வயதுக்குட்பட்டவர் தான் பொறுப்பில் வரவேண்டும் என, நேர்காணலை நடத்துகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
Thanks to Dinamalr

FACEBOOK நிறுவனத்தில் பாதி சொத்து பெற்றுதர, புதிதாக 5 வக்கீல்கள்!

Posted: 06 Mar 2012 07:42 PM PST


FACEBOOK நிறுவனத்தில் பாதி சொத்து பெற்றுதர, புதிதாக 5 வக்கீல்கள்!
மெகா சமூக வலைத்தளம் பேஸ்புக்கின் பில்லியன்கள் பெறுமதியான சொத்தில் பாதி தன்னுடையது என வழக்கு தொடுத்துள்ள நபர், தனது தரப்பில் வாதாடும் வக்கீல் டீமில் புதிதாக 5 பிரபல வக்கீல்களை இணைத்திருப்பதாக அறிவித்துள்ளார்.


இந்த மூவரும் நியூயார்க்கின் பிரபல சட்ட நிறுவனங்களில் தமது வேலைகளை ராஜினாமா செய்து விட்டு, இந்த டீமில் வந்து இணைந்துள்ளனர்.


845 மில்லியன் உறுப்பினர்களை கொண்ட பேஸ்புக்கின் கடந்த ஆண்டு வருமானம், 3.7 பில்லியன் டாலர். இந்தளவுக்கு வருமானம் கொழிக்கும் நிறுவனத்தில் பாதி தம்முடையது என்று பால் சிக்லியா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு பஃபலோவில் உள்ள நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது.


பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பர்க்,  2003-ம் ஆண்டு ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே வந்த நாட்களில், தமது நண்பருடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தார். தாம் புதிதாக தொடங்கும் வர்த்தகம் ஒன்றில் சிறிதளவு பணம் முதலீடு செய்யுமாறு நண்பர் பால் சிக்லியாவை கேட்க, அவரும் பணம் கொடுத்திருக்கிறார்.


அந்த வர்த்தகத்தில் இருவருக்கும் சம பங்குள்ள பார்ட்னர்ஷிப் இருப்பதாக, ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.


அதன்பின் மார்க் தொடங்கிய பேஸ்புக் பிரபலமாகி, மற்போது மல்டி-பில்லியன் டாலர் நிறுவனமாகி விட்டது.


தாம் கொடுத்த பணத்தில் பேஸ்புக் தொடங்கப்பட்டது என்பதால், ஒப்பந்தப்படி அதன் சொத்தில் பாதி தமக்குரியது என்கிறார் பழைய நண்பர் பால். அதற்காகவே வழக்கும் தொடர்ந்துள்ளார்.


மார்க் என்ன சொல்கிறார்? பாலிடம் பணம் வாங்கியது நிஜம். ஒப்பந்தம் செய்தது நிஜம். ஆனால் அந்த வர்த்தகம் பேஸ்புக் அல்ல. அது வேறு, இது வேறு என்கிறார்.


பால் சிக்லியா தனது வக்கீல் டீமில் தற்போது இணைத்துக் கொண்டிருப்பவர்கள், நியூயார்க் சட்ட நிறுவனம் மில்பேர்க் வக்கீல்களுடன் மேலதிகமாக இந்த வழக்கை கவனிக்கப் போகிறார்கள். தமது தரப்பு பலமாக இருப்பதாலேயே திறமையான வக்கீல்கள் தமது டீமில் இணைந்து கொள்ள வந்திருப்பதாக பால் சிக்லியாவின் வக்கீல் டீமின் தலைவர் டீன் போலன்ட் தெரிவித்துள்ளார்.


இந்த வழக்கில் பேஸ்புக் சார்பில் வாதாடவுள்ள கலிபோர்னியாவைத் சேர்ந்த சட்ட நிறுவனம் மென்லோ பார்க்கின் வக்கீல்கள், "எதிர்த் தரப்பு வைத்திருக்கும் ஒப்பந்தம், பேஸ்புக் என்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தம் என்று அதில் எந்த இடத்திலும் குறிப்பிப்படவில்லை. எனவே, பேஸ்புக்குக்கும் அதற்கும் தொடர்பு கிடையாது" என்கின்றனர்.
Thanks to ViruVirupu

நடராஜனுக்கு ஜாமீன்: “நம்ம நிலமல்ல அது.. நீங்களே வெச்சுக்குங்க!”

Posted: 06 Mar 2012 07:38 PM PST


நடராஜனுக்கு ஜாமீன்: "நம்ம நிலமல்ல அது.. நீங்களே வெச்சுக்குங்க!"

நில அபகரிப்பு வழககில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.நடராஜனுக்கு (சசிகலா கணவர்) மதுரை ஹேகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கை தந்திரமான முறையில் எதிர்கொண்டு, ஜாமீன் பெற்றிருக்கிறார் அவர்.


குறிப்பிட்ட நிலம் தன்னுடையதே கிடையாது என்று, நிலத்தையே கைகழுவி விட்டதன் மூலம், அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.


நடராஜன் இந்த புகாரின் அடிப்படையில்தான் முதலில் கைது செய்யப்பட்டார். தஞ்சை விளாரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தஞ்சாவூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் கொடுத்திருந்த புகார் அது. நடராஜன் கைது செய்யப்பட்டபோதே, அது ஒரு குழப்பமான நில விவகாரம் என்று விறுவிறுப்பு.காமில் எழுதியிருந்தோம்.


முள்ளிவாய்க்கால் (விடுதலைப்புலிகளின் யுத்தம் முடிந்த இடம்) நினைவுச் சின்னம் அமைக்க கொடுக்கப்பட்ட நிலம் அது என்பதை, சம்மந்தப்பட்ட பார்ட்டிகள் அழுத்தமாக கூற முடியாமல் போனதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன என்று பொதுப்படையாக கூறமுடியாது. வெளிப்படையாக கூறமுடியாத ஒரேயொரு காரணம்தான் சம்மந்தப்பட்ட பார்ட்டிகளுக்கு இருந்தது.


அதை விடுங்கள். பட்டா யார் பேரில் இருந்தாலும், எனக்கு வேண்டாம் என்று ஹைகோர்ட்டில் எழுதிக் கொடுத்துவிட்டார் நடராஜன். (நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ஒன்றரை கோடி ரூபா)


இந்த வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக நடராஜன் சார்பில் இன்று மதுரை கோர்ட் கிளையில் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடராஜன், "இந்த வழக்கில் தொடர்புடையவரின் நிலத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதன்மீது எந்தக் காலத்திலும் நான் உரிமை கோர மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்" என்று எழுதி கையொப்பமிட்டிருந்தார்.


நிலமே என்னுடையது இல்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய பின்னரும், அவருக்கு ஜாமீன் வழங்காமல் எப்படி மறுக்க முடியும்?


அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. "சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் நடராஜன் தினமும் காலையும், மாலையுமாக 2 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்" என்ற நிபந்தனையின்பேரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


நடராஜனுடன் சிறையில் உள்ள மற்றைய இருவருக்கும் இதே நிபந்தனையின்பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கு நடராஜன்மீது போடப்பட்ட முதலாவது வழக்கு. இதில் ஜாமீன் கிடைத்தாலும் அவரை போலீஸ் வெளியே வட வேண்டும் என்ற அவசியமில்லை. காரணம், அவர்மீது 2-வது வழக்கை (கொலை மிரட்டல்) ஏற்கனவே பதிவு செய்திருக்கிறார்கள்.
Thanks to Viruvirupu

கயிற்றில் ஊசலாடும் வாழ்க்கை'

Posted: 06 Mar 2012 07:35 PM PST


கயிற்றில் ஊசலாடும் வாழ்க்கை'
                      முழங்கால் மேலேறிய ஜிகினா உடை, முகமெங்கும் வழியும் புன்னகை, மிரட்சியும் அதிர்ச்சியும் தரும் சாகசம்... இப்படி வியக்கவும் ரசிக்கவும் வைக்கும் சர்க்கஸ் கூடாரத்து தேவதைகளின் புறவாழ்க்கை எப்படி இருக்கும்? வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான நூலிழை இடைவெளியில் ஊடாடும் அவர்களின் அன்றாடங்களில் என்னென்ன சுவாரஸ்யங்கள் இருக்கின்றன? பல நாடுகள், பல மொழிகள், பல பண்பாடுகள் கலந்துறவாடும் சர்க்கஸ் கூடாரத்தின் உட்புறச்சூழல் எப்படியிருக்கும்?

பரபரப்பு தொடங்காத ஒரு காலை வேளையில் சென்னையில் நடந்துவரும் கிரேட் பாம்பே சர்க்கஸ் கூடாரத்துக்குள் நுழைந்தோம். வண்ண விளக்கொளி, கைத்தட்டல், விசில் சத்தக் கலகலப்புக்குச் சிறிதும் தொடர்பின்றி அமானுஷ்யம் ததும்பிய சூழல். வெளிப்புறத்தில் யானைகளும் ஒட்டகங்களும் அசைபோட்டபடி சோம்பி நிற்கின்றன.

உள்ளேயுள்ள ஒரு டென்ட்டில் வீணான துணிகளை மடித்து அழகிய கலைப்பொருளாகத் தைத்துக் கொண்டிருக்கிறார் சித்து. மாடர்ன் உடையில் கல்லூரி மாணவியைப் போல இருக்கிற சித்துவுக்கு 33 வயதென்றால் நம்ப முடியாது. Ôரோலர் பேலன்ஸ்Õ சாகசத்தில் திகைக்க வைக்கும் தேவதை! 

"நீங்க நினைக்கிற மாதிரி எந்நேரமும் ஜிகினா டிரஸ் போட்டுக்கிட்டு கயிறில தொங்கிக்கிட்டே இருக்க மாட்டோம். எங்களுக்கும் வாழ்க்கை இருக்கு. வேறு வேறு சந்தோஷங்கள், பொழுதுபோக்குகள் இருக்கு. உங்களுக்கு எப்படி இது வேலையோ அதுமாதிரி எங்களுக்கு சர்க்கஸ் வேலை. அவ்வளவுதான். ஒவ்வொருத்தரும் என்னென்ன அயிட்டம் செய்யப்போறோம்னு முன்னாடியே வரிசையா நம்பர் கொடுத்திருவாங்க. அவங்கவங்க நம்பர் வர்றதுக்கு சில நிமிடங்கள் முன்னாடி தயாராகி டென்ட் வாசலுக்குப் போயிடணும். அயிட்டம் முடிஞ்சிட்டா அப்புறம் இயல்பு வாழ்க்கைதான்...'Õ - யதார்த்தம் பேசுகிறார் சித்து.

சித்து பிறந்தது சீனாவில். அப்பா ஷிங்காங் சீனாக்காரர். அம்மா கமலா நேபாளி. இருவரையும் சேர்த்து வைத்தது சர்க்கஸ்தான். அந்தரத்தில் ஒன்றாக ஊஞ்சலாடிய இருவருக்கும் காதல் பூத்தது. அதே சர்க்கஸ் கூடாரத்தில் மலர்ந்தவர்தான் சித்து! 

"சர்க்கஸ் கூடாரத்துக்குள்ள நுழைஞ்சிட்டா அதுதான் உலகம்... அதில இருந்து வெளியேறத் தோணாது. வெளி மாநிலங்கள், வெளியூர்கள் போற சந்தோஷம்.. நிரந்தர வேலைவாய்ப்பு. நிச்சயமான சம்பளம்... போன தலைமுறை வரை யாரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துல சேர்க்கிறதில்லை. சர்க்கஸ்தான் பாடம். பெரும்பாலும் பிரசவமே கூடாரத்திலதான் நடக்கும். சர்க்கஸ் பாத்துத்தான் வளருவாங்க. ஏதாவது ஒரு அயிட்டம் கத்துக்கிட்டு 10-12 வயசுல களத்துல இறங்கிருவாங்க'Õ என்கிறார் சித்து. அழகு தமிழ் பேசுகிறார். சீனம், ஆங்கிலம், மலையாளம், இந்தி மொழிகளும் அத்துப்படியாம்.

சர்க்கஸ் கூடாரம் ஒரு சர்வதேச சமூகமாக இயங்குகிறது. 'கிரேட் பாம்பே சர்க்க'ஸில் இந்தியா தவிர, நேபாளம், சீனா, ரஷ்யா, ஆப்பிரிக்க நாடுகளின் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். பெரும்பாலும் காதல் திருமணம்தான். நாடு விட்டு நாடு... மதம் விட்டு மதம்... உலகத்தையே சர்க்கஸ் கூடாரத்துக்குள் இணைக்கிறது காதல். ஒரே வேலை, ஒரே சூழல் என்பதால் காதலுக்குப் பெரிதாக எதிர்ப்புகளும் இருப்பதில்லை. 

சித்துவின் மனதைத் திருடியது கேரளத்து ராஜேஷ். 

''அப்போ ராஜேஷுக்கு 16 வயசு. எனக்கு 12. ரெண்டு பேரும் சேர்ந்து ஸ்கேட்டிங், ப்ளேட்டிங் எல்லாம் செய்வோம். ஒருமுறை ஸ்கேட்டிங்குல நான் கீழே விழுந்துட்டேன். ராஜேஷ் மட்டும் சரியான நேரத்துக்குப் பிடிக்கலேன்னா காலே ஒடிஞ்சிருக்கும். அன்னையில இருந்து ராஜேஷ் மேல ஒரு இனம் புரியாத நேசம்... ராஜேஷ்தான் முதல்ல லவ் சொன்னார். கொஞ்ச நாள் பார்வையிலயே பேசிக்கிட்டு லவ் பண்ணினோம். ராஜேஷ் பத்தி இங்கே எல்லாருக்கும் நல்லாத் தெரியும். அதனால வீட்டிலயும் ஏத்துக்கிட்டாங்க. 18 வயசுல கல்யாணம்...'' என்று வெட்கப்படுகிறார் சித்து.

Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,Kungumam Thozhi Monthly  Magazine

திருமணங்கள் பெரும்பாலும் சர்க்கஸ் கூடாரத்துக்குள்தான். பிற சர்க்கஸ் கம்பெனிகளின் கலைஞர்களையும் அழைத்து பிரமாண்டமாக நடத்துகிறார்கள். சித்துவின் திருமணம் மும்பையில் நடந்திருக்கிறது. கிரேட் 1 சர்க்கஸ், ராயல் சர்க்கஸ், அமர் சர்க்கஸ், ஒலிம்பிக் சர்க்கஸ் கலைஞர்கள் திரண்டு வந்து வாழ்த்தியிருக்கிறார்கள். 

சித்து-ராஜேஷ் தம்பதிக்கு 2 பையன்கள். இருவரும் கேரளாவில் படிக்கிறார்கள். 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷீலா தமிழ்நாட்டு மருமகள். குட்டி சைக்கிளில் பத்து, பதினைந்து பெண் கலைஞர்களை சுமந்து கொண்டு ஓட்டும் சாகசக்காரர் சுபாஷ் தோளில் அமர்ந்த ஷீலா மனதிலும் அமர்ந்து கொள்ள காதல்... கல்யாணம்! இப்போது ஷீலா ரோப் டைவிங் விளையாடுகிறார். பாதுகாப்பாக கீழே நிற்கிறார் சுபாஷ்.

''இந்தத் தலைமுறையில யாரும் குழந்தைகளை சர்க்கஸ் கூடாரத்துக்கு கொண்டு வர்றதில்லை. ஊர்ல இருக்கிற உறவுகள்கிட்ட விட்டு படிக்க வைக்கிறாங்க. வருஷத்துக்கு ஒருமுறை, ரெண்டுமுறை போய் பாக்குறதோட சரி... அதுதான் எங்க வாழ்க்கையில பெரிய நெருக்கடி...'' என்று வருந்துகிறார் ஷீலா. 

"எப்போ எந்த ஊருக்குப் போவோம்னு தெரியாது. ஊர்ல ஒரு நல்லது கெட்டது நடந்தாக்கூட சரியான நேரத்துக்குப் போக முடியாது. திடீர்னு குழந்தைங்க ஞாபகம் வந்திடும். மனசு வலியெடுத்து 'ஓ'ன்னு கதறி அழுவணும் போல இருக்கும். ஆம்பளைங்க பரவாயில்லை. ஏதாவது ஒண்ணை நினைத்து மனதைத் தேத்திக்குவாங்க. பெத்த வயிறு அடங்குமா... சில நேரம் வெளிநாடுகள்ல இருப்போம். திடீர்னு முக்கிய உறவுக்காரங்க இறந்து போவாங்க. முகத்தைக் கூட பாக்க முடியாது. மத்தபடி பாதுகாப்பான வாழ்க்கை... கைத்தட்டல், விசில் சத்தம், பாராட்டு எல்லாம் கிடைக்கும்...'' என்கிறார் ஷீலா

ஷீலா வறுமையான சூழலில் சர்க்கஸ் கூடாரத்துக்கு வந்தவர். தொடக்கத்தில் இந்த வாழ்க்கையில் பிடிப்பில்லை. அதுதான் எதிர்காலம் என்றான பிறகு ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். ஜெமினி சர்க்கஸில் வேலை செய்தபோது சுபாஷ்-ஷீலா காதல் கைகூடியிருக்கிறது.

"மத்த வேலைகள்ல என்ன கஷ்டமோ அதெல்லாம் சர்க்கஸ்ல உண்டு. மத்தபடி வெளியில இருந்து பாக்கிறவங்களுக்குத்தான் இதெல்லாம் சவாலாத் தெரியும். நாங்க சர்வசாதாரணமா விளையாடிட்டு வருவோம். கர்ப்ப காலத்தில மட்டும் ரிஸ்க் இல்லாத விளையாட்டுகளைச் செய்வோம். 6 மாசத்துக்குப் பிறகு ஓய்வுதான். சென்னை, நான் புகுந்த ஊரு. இங்கே சர்க்கஸ் கலைஞர்களை நல்லா மதிக்கிறாங்க.  கேரளா மாதிரி மாநிலங்கள்ல சர்க்கஸ்ல இருக்கோம்னு சொன்னாலே ஒரு மாதிரி பாக்கிறாங்க'Õ - ஷீலாவின் வார்த்தைகளில் சோகம் தொனிக்கிறது.

Kungumam Thozhi Tamil Magazine, Kungumam Thozhi Tamil Monthly  Magazine, Kungumam Thozhi Magazine,Kungumam Thozhi Monthly  Magazine

சர்க்கஸ் கலைஞர்களின் ஒரே மனநெருக்கடி - குழந்தைகளை ஆண்டுக்கொரு முறைதான் பார்க்க முடியும் என்பதுதான். ஷீலாவுக்கு ஒரே மகள். பெயர் சோனியா. மேற்கு வங்கத்தில் அண்ணி வீட்டில் தங்கி ப்ளஸ் 1 படிக்கிறாராம். ஃபேஷன் டிசைனிங் படிக்க வைக்க வேண்டும் என்பது ஷீலாவின் கனவு. 

ஸ்மிதா குடும்பமே சர்க்கஸ் குடும்பம். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்மிதாவின் அப்பா ஜகபோந்து சக்கரவர்த்தி புகழ்பெற்ற எம்பிஆர் சர்க்கஸில் கேஷியராக இருந்தவர். அம்மாவும் ரிங்க் பேலன்ஸ் போன்ற ரிஸ்க்கான அயிட்டங்கள் செய்பவராம். சிறு வயதிலேயே சர்க்கஸுக்கு வந்துவிட்ட ஸ்மிதா இப்போது ரோப் ஊஞ்சலாடுகிறார். இவருக்கு நிகழ்ந்தது ஏற்பாட்டுத் திருமணம்தான். கணவர் ஸ்ரீகிருஷ்ணா சுத்திருதாரும் ஊஞ்சல் விளையாடுபவர். 2 மகன்கள். ஊரில் படிக்கிறார்கள்.  

"தினமும் காலையில பிராக்டீஸ் இருக்கும். மாஸ்டர் முன்னாடி அயிட்டங்களை செஞ்சு காட்டணும். சிலநேரங்கள்ல பிள்ளை ஞாபகம் வந்துட்டா வேலைல கவனம் செலுத்தமுடியாது. கயிறுல பேலன்ஸ் பண்றப்போ ரெண்டு மூணு முறை கீழே விழுந்து கை ஒடிஞ்சிருக்கு'' என்று தழும்புகளைக் காட்டுகிறார் ஸ்மிதா.

ஒரு காலத்தில் இந்தியாவில் மட்டும் 25க்கும் அதிகமான சர்க்கஸ் கம்பெனிகள் இருந்தன. எல்லாவற்றிலும் மிருகங்களின் ராஜ்ஜியம்தான். மனிதர்கள் செய்யும் சாகசங்களை விட மிருகங்கள் செய்யும் சேட்டைகளுக்கு ரசிகர்கள் அதிகம். மிருகவதை தடுப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்ட பிறகு பல கூடாரங்கள் காலியாகிவிட்டன. இப்போது 6 கம்பெனிகள் மட்டுமே இயங்குகின்றன.

கிரேட் பாம்பே சர்க்கஸ் கூடாரத்துக்குள் மூன்று பிரிவுகளில் டென்ட்டுகள் உண்டு. ஒன்று தம்பதிகளுக்கு. பேச்சலர் பெண்களுக்குத் தனி, ஆண்களுக்குத் தனி. திருமணமாகாத பெண்கள் தங்கியுள்ள கூடாரத்துக்கு மேனேஜர் கூடச் செல்லமுடியாது. அவ்வளவு பாதுகாப்பு. மாஸ்டரிடம் அனுமதி பெற்று அவரின் முன்னிலையில்தான் பேசமுடியும். நேரத்துக்குச் சாப்பாடு, காபி, பிஸ்கெட் எல்லாம் மெஸ்ஸில் இருந்து வந்துவிடும். அனைத்து அறைகளிலும் டிவி உண்டு. ஷிப்ட், ஓய்வு எல்லாம் உண்டு. தம்பதிகளாக இருப்பவர்கள் மட்டும் தனியாக சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.

நேபாளத்தைச் சேர்ந்த ரியாவுக்கு படிக்க ஆசை. ஆனால், 6ம் வகுப்போடு குடும்ப வறுமை சர்க்கஸ் கூடாரத்துக்குத் துரத்திவிட்டது. இப்போது இந்த உலகத்தில் ஒன்றிவிட்டார். ரிங் ஜிம்னாஸ்டிக்கில் மிரளவைக்கிறார்.

18 வயது கிரண்குப்தா ரிங் டான்ஸர். இவரும் முதல் தலைமுறைதான்... "30 வயசு வரைக்கும்தான் பெண்கள் சர்க்கஸ்ல இருக்கலாம். அதுக்குப்பிறகு மனசு ஒத்துழைச்சாலும் உடம்பு ஒத்துழைக்காது. மரத்துப் போகும். அதுக்குள்ள ஓரளவுக்கு சம்பாதிச்சு வாழ்க்கையில செட்டில் ஆகிடணும்'' என்று முதிர்வாகப் பேசுகிறார் கிரண்.

கிரேட் பாம்பே சர்க்கஸின் 'ஹாட்' லோபனவா தாய்ஸியாவும், பீயஸிவா அன்னாவும்தான். தீ டான்ஸ், கத்தி டான்ஸ், ரிங்ஸ் டான்ஸ் என்று கதிகலங்கடிக்கிறார்கள். இப்பெண்களின் பெல்லி நடனத்தில் இவர்களின் இடுப்புக்கு இணையாக நமக்கு மனசு அதிருகிறது. 'சென்னே ரெம்பா நல்லோயருக்கு பாஸ். மோரினோ பீச் வெரி இன்ட்ரஸ்டிங்... கடல் ஃபிஷ்ஷும் நொல்லாயிருக்கு'' என்று தமிழைக் கொஞ்சுகிறார் லோபனவா தாய்ஸியா. அன்னாவுக்கு 23 வயதுதான். 'மல்டி திங்ஸ் கேச்சிங்' விளையாடும் ஷெர்காந்த் மனதை கேட்ச் செய்துவிட்டார். இளமை ததும்பும் இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருக்கிறது. உஸ்பெக்கிஸ்தானில் அன்னாவின் தாயிடம் வளர்கிறதாம். 

இப்படி கண்ணுக்கு விருந்தாகவும் சோர்வுக்கு மருந்தாகவும் இருக்கும் சர்க்கஸ் கூடாரங்களுக்குப் பின்னுள்ள வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிற எல்லா சோகங்களும் மகிழ்ச்சிகளும் இருக்கின்றன. எல்லோருடைய வாழ்க்கையும் தேடலுக்காகவே ஊடாடுகின்றன! 

- வெ.நீலகண்டன்
படங்கள்: சிவா, வேணு

Thanks to Kungumam Thozhi

அப்பாவுக்கு எதிராக ஸ்ருதிஹாசன்!

Posted: 06 Mar 2012 07:31 PM PST


அப்பாவுக்கு எதிராக ஸ்ருதிஹாசன்!
'அன்பே சிவம்' என்று சொல்வதை வாழ்வாக்கி கொண்ட கடவுள் மறுப்பாளர் கலைஞானி கமல். எதையும் ஒளிவு மறைவு இன்றி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கும் தூய்மையான திரைக்கலைஞராக இருக்கும் கமலைப் போல வெளிப்படையாக இருக்கிறார் அவரது மகள் ஸ்ருதிஹாசன். உண்மையை உரக்கப் பேசுவதில் அச்சு அசலாக அப்படியே அப்பா பொண்ணு இந்த ஸ்ருதிஹாசன்.


திரையில் முதலிடம் நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன், ஒரு பாடகியாக, இசையமைப்பாளராக, நாயகியாக பலமுகங்கள் காட்டி வருகிறார்.


இந்த நிலையில் கதாநாயகி ஆசனத்தில் அமர்ந்திருப்பவர்கள், தங்கள் கௌரவமும் , இமேஜும் காற்றில் பறந்து விடக்கூடாதே என தங்களிடம் உள்ள குறைக்களை பொதுவாக மறைப்பதைத்தான் வழக்கமாக வைத்திருகிறார்கள். ஆனால் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக இருந்தும் கூட, தன்னிடம் உள்ள பிரச்னைகளை ஒழிக்காமல் ஒப்புக்கொண்டிருக்கிறார்.


 முதலில் தனக்கு "கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய இரண்டு பிரச்னைகளுமே இருக்கிறது" என்பதை ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்தார். தற்போது மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், மருத்துவரின் ஆலோசனையை ஏற்று மூக்குத்தண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டதையும் ஒப்புகொண்டு பேட்டி அளித்திருக்கும் ஸ்ருதி " அழகுக்காக மூக்கில் ஆபரேசன் செய்யும் எண்ணம் அறவே இல்லை. இப்போது நன்றாக மூச்சு விட முடிகிறது" என்று சொல்லியிருக்கிறார்.


இப்படி அப்பாவைப்போல வெளிப்படையாக இருக்கும் ஸ்ருதி அப்பாவுக்கு எதிர்வழியில் கடவுள் பக்தி கொண்டவராக இருக்கிறார் ஸ்ருதி. அதிலும் ஸ்ருதியின் ஃபேவரைட் கடவுள் திருப்பதி வெங்கடாஜலபதி. சமீபத்தில் திருப்பதி சென்ற ஸ்ருதி, அங்கு பயபக்தியுடன் சாமிகும்பிட்டார். நெய்வேத்தியம் செய்தும் வழிபட்டார்.


கோவிலுக்குள் ஸ்ருதியை பார்த்ததும் ரசிகர்கள் முண்டியடித்து கூச்சல் எழுப்பிய போது ஸ்ருதி ரசிகர்களிடம், அமைதியாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார். சாமி கும்பிடும் இடத்தில் இப்படி கூச்சல் போடக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். தரிசனம் முடிந்து வெளியே வந்தபோது ஏராளமான ரசிகர்கள் அவரை முற்றுகையிட " உங்கள் அன்புக்கு நன்றி. இங்கே நீங்கள் வந்திருப்பது பெருமாளை வழிபட.. என்னை அல்ல!" என்று சொல்லி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். ஆத்திகராக இருந்தாலும் ஸ்ருதி அப்பாவைப் போல அதிரடி பேர்வழிதான்!
Thanks to Tamilleader

ஆ.ராசா… தயாநிதி வரிசையில் அன்புமணியும் காத்திருக்கிறார் ?

Posted: 06 Mar 2012 07:30 PM PST


ஆ.ராசா… தயாநிதி வரிசையில் அன்புமணியும் காத்திருக்கிறார் ?
தகுதியற்ற மருத்துவக் கல்லூரிக்கு அனுமதியளித்ததாகக் கூறப்படும் வழக்கின் குற்றப்பத்திரிகையில் மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பெயரும் சேர்க்கப்படலாம் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த துணைச் செயலர், உதவிச் செயலர், மருத்துவக் கல்லூரியின் இரு டாக்டர்கள் ஆகியோர் மீது விசாரணை நடத்துவதற்கு அரசின் அனுமதியை சி.பி.ஐ. கோரியிருப்பதாகக் கூறப்படுகிறது.


அரசின் அனுமதி கிடைத்த பிறகு குற்றப்பத்திரிகையில் அன்புமணி ராமதாஸின் பெயர் குற்றஞ்சாட்டப்பட்டவர் பட்டியலில் இணைக்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இயங்கி வரும் இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியின் இரண்டாவது ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கடந்த 2008-ம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அந்தக் கல்லூரி நாடியது


இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவக் கவுன்சில் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டது.


மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆய்வு நடத்திய குழுவினர், பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைகளைச் சுட்டிக்காட்டி மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் அனுமதி மறுத்ததாகத் தெரிகிறது.


அதே நேரத்தில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர், நடத்திய ஆய்வில் அனைத்து வசதிகளும் முறையாகச் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்ததாகத் தெரிகிறது.


இந்த நடவடிக்கையின்போது, அடிப்படை வசதிகள், ஆள் எண்ணிக்கை போன்றவை தொடர்பாக போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.


இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தொடர்புகொள்ள முயன்றபோது, "இந்த வழக்கில் குற்றஞ்சாட்டபட்டவர்களின் பெயர்களை சிபிஐ இன்னும் இறுதி செய்யவில்லை' என்று அவரது தனிச் செயலர் சுவாமிநாதன் கூறினார்.
Thanks TamilLeader

மருத்துவர் ராமதாஸூக்கு யாராவது மருத்துவம் பார்த்தால் தேவலை !

Posted: 06 Mar 2012 07:27 PM PST


மருத்துவர் ராமதாஸூக்கு யாராவது மருத்துவம் பார்த்தால் தேவலை !

"தமிழகத்தில் வரும் 2016ல் வன்னியர் ஆட்சி மலரும்; அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது:


வன்னியர்கள் தி.மு.க., - அ.தி.மு.க., பின்னால் இருக்க கூடாது. இந்த கட்சிகளை வேர் அறுக்க வேண்டும். 2016ல், வன்னியர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். ஓட்டுப் போடும் ஜென்மங்களாக நம்மை வைத்திருந்தது போதும். நாம் வாழ குலக்கொடியை உயர்த்தி பிடிப்போம். அதுவரை உறக்கம் இல்லை; ஓய்வு இல்லை.


15, 18 வயதுடைய எல்லோரும் மாமல்லபுரம் வர வேண்டும். பா.ம.க.,வில் சேர்ந்து மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும்.எங்களுக்கு வேறு யாரும் தலைவர்கள் கிடையாது. எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் தலைவர்களாக இருக்க முடியும். திராவிட கட்சிகள் இலவசத்தையும், சினிமாவையும், சாராயக் கடையையும் தான் தந்தனர். கழகங்களின் மாய்மாலம் இனி மேலும் செல்லாது.


நான்கு ஆட்டு குட்டியை கொடுத்து வளர்த்து கொள்ள சொன்னால், அது வளர்ந்து உடனே நகைக் கடையும், துணிக் கடையும், ஓட்டலும் நடத்தும் அளவிற்கு உயர்ந்து விடுவர் என ஏமாற்றுகின்றனர்.1980களில் வன்னியர்கள் கண்ணை மூடிக்கொண்டு வந்ததை போல், இப்போது தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட்டு, என் பின்னால் வர வேண்டிய நேரம் வந்து விட்டது. எல்லோரும் ஓடி வாருங்கள்;


2016ல் கழகங்களை மூட்டை கட்டி போடப் போகிறோம். அவர்களை வீட்டுக்கு அனுப்ப போகிறோம். புதிய அத்தியாயம், புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கையை வன்னியர்களுக்கு மட்டும் அல்லாமல் தமிழக மக்களுக்கும் சொல்கிறோம். மானம், ரோஷம், சூடு, சொரணை அதிகம் உள்ளவர்கள் யார்? நீங்களே பதில் சொல்லுங்கள். இவர்கள் எல்லாம் மற்ற கட்சியிலா இருக்க வேண்டும்.


 ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டமாக இருந்த போது நெல்லிக்குப்பம்
கிருஷ்ணமூர்த்தியும், உங்கள் ஊர்காரரும் (செஞ்சியார்) சந்து பொந்து, மூலை முடுக்கெல்லாம் சென்று தி.மு.க.,வை வளர்த்தனர்.இப்போது விழுப்புரத்தில் ஒருவன் கேட்கிறான் (பொன்முடியை மறைமுகமாக குறிப்பிட்டு) உங்கள் ஊர்காரரை யார் என்று? அவர் யார் என்பதை நீங்கள் தான் ஞபாகப்படுத்த வேண்டும்.அடுத்தவர்களின் கொடியை பிடித்ததால் கோழைகளாக மாற்றப்பட்டோம். இப்போது நம்மை வெளிக்காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுவரை தமிழகத்தில் 30 முதல்வர்கள் இருந்தனர். 10 நாள் கூட ஒரு வன்னியர் முதல்வராக இருந்ததில்லை.


இதுவரை வன்னியர்களுக்கு கழகங்களில் என்ன பதவியை கொடுத்தனர்; ஒன்றிய செயலர், சேர்மன், கவுன்சிலர், கிளை செயலர் பதவியைத் தவிர எதையும் கொடுக்கவில்லை. இதையெல்லாம் நான் வயிற்றெரிச்சலில் சொல்லவில்லை. 2016ல் வன்னியர் ஆட்சி மலரும்; அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இதை நோக்கி நம் பயணம் தொடரட்டும்". இவ்வாறு ராமதாஸ் பேசினார்.


நன்றி: தினமலர்