TV SHOWS | MOVIES | TV SERIALS |
- Junior Vikatan 14-03-2012 | Free Download Junior Vikatan PDF This week | Junior Vikatan 14th March 2012 Ebook
- விஜயகாந்த் சஸ்பெண்ட்: விதிகளின்படியே முடிவு: சட்டசபை செயலர்
- டெல்லியில் நடிகை ரீமாசென் திருமணம்
- அகிலேஷ் யாதவ் உ.பி. முதல்வராக தேர்வு
- Bala Jothidam 10-03-2012 | Free Download BalaJothidam PDF This week | BaalaJothidam 10th March 2012 Ebook Latest
- இந்த வார ராசிபலன் 13-3-2012 முதல் 19-3-2012 வரை
- Oru vaarthai Oru Laksham 10-03-2012 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 10th March 2012
- Mun Jenmam 10-03-2012 | Vijay tv Thriller Serial MunJenmam 10th March 2012
- Mano 25th year Celebrations 10-03-2012 | Vijay Tv Shows Mano 25th year musical journey 10th march 2012
- Nakkeeran 10-03-2012 | Free Download Nakeeran PDF This week | Nakkheeeran 10th March 2012 Ebook Latest
- கவர்ச்சி நடிகையின் கண்ணீர் கதை
- Sigaram Thotta Pengal 11-03-2012 | Vijay tv Shows Sigaram Thotta Pengal Promo video
- Sun Tv Shows Azhagi This week Promo video
- Sun Tv Shows Thendral This week Promo video
- மு.க.அழகிரி - குஷ்பு சந்திப்பு
- சாத்தான்களிடம் விற்றுவிட்டேன் வெற்றிமாறன் வேதனை
- வந்தாச்சு தமன்னா புண்ணியம் டூ தி.நகர்
- ஸ்நேகா உல்லால் அடுத்த வீடியோ ரெடி!
- தனுஷின் அடுத்தப்படம்...'கொலவெறி' அனிருத்துக்கு டாடா!
- வடிவேலுவே... வாங்க!அழைக்கிறது அமெரிக்கா
- Dinkaran E-paper 10-03-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 10th March 2012
- Dinamalar Aanmeegamalar 10-03-2012 | Free Download Aanmeegamalar PDF today ebook | Aanmeega Malar 10th March 2012
- Dinamalar E-paper 10-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 10th March 2012
- Yugiyudan Yugiyungal 09-03-2012 | Jaya tv Yugi yudan Yugiyungal 9th March 2012
- Nadanthathu Enna 09-03-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 9th March 2012
Posted: 09 Mar 2012 11:21 PM PST Junior Vikatan 14-03-2012 | Free Download Junior Vikatan PDF This week | Junior Vikatan 14th March 2012 Ebook- First on Net Pages -61 Size - 2.87 mb with Good Quality Download Links http://adf.ly/69iA3 http://adf.ly/69gs8 http://adf.ly/69hKK http://adf.ly/69hlF http://adf.ly/69i6F ( Note : Don't Copy our titles and images. ) Some bloggers copied our all titles and images. Why? ...We are working to free service not earning to money. pl understand and support us. We are using adf.ly ads only. because we pay to internet connections, electric charges. |
விஜயகாந்த் சஸ்பெண்ட்: விதிகளின்படியே முடிவு: சட்டசபை செயலர் Posted: 09 Mar 2012 11:20 PM PST விஜயகாந்த் சஸ்பெண்ட்: விதிகளின்படியே முடிவு: சட்டசபை செயலர் சட்டசபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களை நோக்கி கையை நீட்டியதாகவும், நாக்கை மடக்கியதாகவும் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்வது என, உரிமைக் குழு முடிவெடுத்தது. உரிமைக் குழுவின் முடிவு, சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.தன்னை "சஸ்பெண்ட்' செய்ததை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்தார். இம்மனுவுக்கு சட்டசபை செயலர் ஜமாலுதீன் தாக்கல் செய்த மனு:சட்டசபையில் நடந்த நிகழ்வுகளின் வீடியோ காட்சிகளை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட உரிமைக் குழு உறுப்பினர்கள் பார்த்தனர். மனுதாரர் தரப்பையும் கேட்க வேண்டும் என, குழு முடிவெடுத்தது. பிப்ரவரி 2ம் தேதி குழு கூட்டத்துக்கு வருமாறு, விஜயகாந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வரவில்லை. ஆனால், ஒரு கடிதம் அனுப்பினார்.அந்தக் கடிதத்தில், வீடியோ காட்சியில் உள்ள அவரது நடத்தையை, மிரட்டும் சைகையை மறுக்கவில்லை. ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தன்னைப் பார்த்து சத்தம் போட்டதாகவும், திட்டியதாகவும் கூறியுள்ளார். ஆனால், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மனுதாரரோ, எதிர்க்கட்சி உறுப்பினர்களோ, சபாநாயகரிடம் நோட்டீஸ் எதுவும் அளிக்கவில்லை. மனுதாரரின் கடிதத்தை உரிமைக் குழு பரிசீலித்தது. உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. பின், உரிமை மீறல் நடந்திருப்பதாக குழு முடிவுக்கு வந்தது. குழுவின் அறிக்கையானது, உறுப்பினர்கள் படிப்பதற்காக, சட்டசபை நூலகத்தில் வைக்கப்பட்டது. 2ம் தேதி சட்டசபை கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவருக்கு சபையில் அறிக்கையின் நகல் வழங்க முடியவில்லை. இருந்தாலும், தே.மு.தி.க., துணைத் தலைவரிடம் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டது. அவர் படித்தார்.குரல் ஓட்டெடுப்பு மூலம், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தே.மு.தி.க., துணைத் தலைவர், இந்தப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க கோரினார். சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டால், அதன்பின் மேற்கொண்டு விவாதம் நடத்த அனுமதியில்லை. இதுதான் பார்லிமென்ட் நடைமுறை. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சபாநாயகரின் அறிவிப்பு, பத்திரிகைகளில் வெளிவந்தது. சட்டசபையின் செயலர் என்கிற முறையில், சபாநாயகரின் உத்தரவுப்படி, சபையின் முடிவை மனுதாரருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினேன். அரசியலமைப்புச் சட்டம், சபை விதிகளுக்கு உட்பட்டு, நடைமுறை பின்பற்றப்பட்டு, முடிவெடுக்கப்பட்டது. மனுதாரரின் உரிமைகள் எதுவும் மீறப்படவில்லை.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.விசாரணையை 14ம் தேதிக்கு நீதிபதி ராமசுப்ரமணியன் தள்ளி வைத்துள்ளார். Thanks to Dinamalar |
டெல்லியில் நடிகை ரீமாசென் திருமணம் Posted: 09 Mar 2012 11:02 PM PST டெல்லியில் நடிகை ரீமாசென் திருமணம் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். அதற்கு இருவரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து ரீமாசென் ஷிவ்கரன்சிங் நிச்சயதார்த்தம் டெல்லியில் நடந்தது. அப்போது, ஷிவ்கரன்சிங் முழங்காலை ஊன்றி நின்றபடி, ரீமாசென்னிடம் ஒரு ரோஜாப்பூவை கொடுத்து, ஐ லவ் யூ'' என்று தனது காதலை சொன்னார். பின்னர் இரண்டு பேரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். நிச்சயம் செய்தபடி, ரீமாசென்னுக்கும், ஷிவ்கரன்சிங்குக்கும் டெல்லியில், ஞாயிற்றுக்கிழமை (11.03.2012) மாலை 3 மணிக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். ரீமாசென்னின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் ராம்ஜி, நடிகை சோனியா அகர்வால் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் டெல்லி புறப்பட்டு சென்றார்கள். Thanks to Nakkheeran |
அகிலேஷ் யாதவ் உ.பி. முதல்வராக தேர்வு Posted: 09 Mar 2012 11:01 PM PST அகிலேஷ் யாதவ் உ.பி. முதல்வராக தேர்வு உத்தரப்பிரதேச முதல்வர் யார் என்பதில் பரபரப்பு நிலவி வந்த நிலையில், அகிலேஷ் யாதவ்தான் அடுத்த முதல்வர் என்று சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்களை சமரசப்படுத்தி அகிலேஷ் யாதவ்வை முதல்வராக முன்மொழிந்தார் முலாயம் சிங் யாதவ். இதன்படி, உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக 38 வயதான இளம் அகிலேஷ் யாதவ் பொறுப்பேற்க உள்ளார். தனது வயது காரணமாகவும், உடல் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முலாயம் கூறியுள்ளார். உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரக் களத்தில் எல்லோருடைய பார்வையும் ராகுல்காந்தியின் மீது இருந்தாலும், தேர்தல் முடிகளையடுத்து ஹீரோவாகியிருப்பவர் 38 வயதான அகிலேஷ் சிங் யாதவ்தான். 403 தொகுதிகளை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் 224 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்றது. அகிலேஷ் சிங் யாதவ்வின் எளிமையான பேச்சால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பிரச்சாரம் எடுபடவில்லை. Thanks to Nakkheeran |
Posted: 09 Mar 2012 11:12 PM PST Bala Jothidam 10-03-2012 | Free Download BalaJothidam PDF This week | BaalaJothidam 10th March 2012 Ebook Latest Download Links |
இந்த வார ராசிபலன் 13-3-2012 முதல் 19-3-2012 வரை Posted: 09 Mar 2012 10:49 PM PST இந்த வார ராசிபலன் 13-3-2012 முதல் 19-3-2012 வரை ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் சந்திரன் மாறுதல்: ஆரம்பம்- துலாம் 13-3-2012- விருச்சிகம் 15-3-2012- தனுசு 17-3-2012- மகரம் 19-3-2012- கும்பம் கிரக பாதசாரம்: சூரியன்: பூரட்டாதி- 3, 4, உத்திரட்டாதி- 1. செவ்வாய்: மகம்- 4 (வக்ரம்). புதன்: பூரட்டாதி- 3, 2 (வக்ரம்). குரு: பரணி- 1, 2. சுக்கிரன்: பரணி- 1, 2, 3. சனி: சித்திரை- 3 (வக்ரம்). ராகு: அனுஷம்- 4. கேது: ரோகிணி- 1. கிரக மாற்றம்: செவ்வாய்- வக்ரம். புதன்- வக்ரம், அஸ்தமனம். சனி- வக்ரம். 12-3-2012- கும்ப வக்ர புதன். 14-3-2012- மீன சூரியன். மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ஆம் இடத்தில் வக்ரமாக இருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சூரியன் கும்பத்திலிருந்து செவ்வாயைப் பார்க்கிறார். 14-ஆம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் (பங்குனி-1) ராசிக்கு 8-ல் மறைவார். அப்போது சூரியனை செவ்வாய் பார்க்கும் காரணத்தால் இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது. எனவே இந்த வாரம் ஏற்றம்- இறக் கம் கலந்த வாரமாக அமையும். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு சில காரியங்களைச் செய்து முடிக்க நேரும். கௌரவம், மதிப்பு, மரியாதைக்கு குறைவில்லை என்றாலும், எல்லா வகையிலும் டென்ஷன் டென்ஷன் என்று டென்ஷன்மயமாக இருக்கும். 2-க்குடைய சுக்கிரன் பாக்கியாதிபதியான குருவோடு கூடியிருப்பதாலும், குருவும் சுக்கிரனும் சுக்கிரன் சாரத்தில் (பரணியில்) சஞ்சரிப்பதாலும் பணத்தட்டுப்பாடுக்கு இடமில்லை. தாராளமான வரவு- செலவுகள், எதிர்பார்க்கும் தனவரவுகள், திட்டமிட்ட காரியங்களில் சுப முதலீடுகள் ஆகிய எல்லாம் கச்சிதமாக நிறைவேறும். ஆயிரக்கணக்கில் பணம் வரவு- செலவு நடந்தாலும் 2-ஆம் இடத்துக் கேது சேமிப்புக்கு இடம் இல்லாமல், வரவுக்கும் செலவுக்கும் சரியாக்கிவிடுவார். ஆரோக்கியத்தில் கவலை இல்லை. ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய) ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 12-ல் மறைகிறார். ஆனாலும் சுயசாரம் பெறுகிறார். சுக்கிரனோடு 8, 11-க்குடைய குரு கூடி இருக்கிறார். குருவும் சுக்கிரனும் சுக்கிரன் சாரம் பெறுகிறார்கள். மதிப்பு, மரியாதை, கௌரவம், புகழ், அந்தஸ்து, திறமை, செயல்பாடு இவற்றில் எந்தக் குறையும் இல்லை. மேனேஜர் பதவியில் இருந்து கணக்குப்பிள்ளை பதவிக்கு மாற்றப் பட்டாலும் பழைய அந்தஸ்தும் சம்பளமும் அப்படியே கிடைக்கும். என்றாலும் மனதில் மட்டும் எதிரிக்கு இடம் கொடுத்தது மாதிரி ஆகிவிட்டதே என்ற கவலை காணப்படும். 6-ஆம் இடத்துச் சுக்கிரன் பார்ப்பதால் எதிரி, கடன், வைத்தியச் செலவு போன்ற 6-ஆம் இடத்துப் பலன்களும் தவிர்க்க முடியாததாக அமையும். தொழிலதிபர்களுக்கு லாபம் கிடைத்தாலும் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாதபடி சூழ்நிலை காணப்படும். வியாபாரிகள் வங்கி மற்றும் அரசாங்க வகைத் தொடர்புகளில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஊழியர்களுக்கும் பணியாளர்களுக்கும் செய்யும் தொழில் துறையில் விருத்தியும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். தாய்வழி உறவில் கவனம் தேவை. மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய) மிதுன ராசிநாதன் புதன் வக்ரமாகவும் இருக்கிறார்; அஸ்தமனமாகவும் இருக்கிறார். நீச ராசியை விட்டு மாறி கும்பத்தில் ராசிக்கு திரிகோணம் பெறுகிறார். அவருக்கு 6, 11-க்குடைய செவ்வாயின் பார்வை கிடைக்கிறது. புதன் 11-ஆம் இடத்து குருவின் சாரம் பெறுகிறார். தேக சுகத்தில் பிரச்சினைக்கு இடமில்லை. என்றாலும் சிலசில அசௌகர்யங்கள் அவ்வப்போது ஏற்பட்டு விலகும். அதற்குக் காரணம் 5-ஆம் இடத்தில் சனி வக்ரமாகவும் உச்சமாகவும் இருப்பதுதான். பொதுவாக 5-ல் சனி இருந்தால் புத்திர தோஷம் எனப்படும். அத்துடன் சாணக்கியத் தந்திரத்தோடு திட்டங்கள் தீட்டுவார்கள். அவர்கள் மனதில் உள்ள எண்ணங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியாது. அதேசமயம் 5-ஆம் இடத்தை குருவும் 5-க்குடைய சுக்கிரனும் பார்ப்பதால் புத்திர தோஷம் இல்லை. வாரிசு யோகம் உண்டாகும். சனி 6-க்குடைய சாரம் பெறுவதால் கடன் கவலை, எதிரி கவலை, தொழில் போட்டிக் கவலை போன்றவற்றைச் சந்திக்க நேரும். சனி சாந்தி ஹோமம் செய்துகொள்வது நல்லது. கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய) கடக ராசிக்கு 12-க்குடைய புதன் 8-ல் மறைவது யோகம். 8-ல் இருக்கும் சூரியன் 14-3-2012 முதல் 9-ஆம் இடத்திற்கு மாறுவார். 9-க்குடைய குரு 10-ல் இருக்கிறார். எனவே விபரீத ராஜயோகமும் தர்மகர்மாதிபதி யோகமும் ஏற்படுகிறது. அதனால் பொருளாதாரத்திலும் வரவு- செலவுகளிலும் எந்த பிரச்சினைக்கும் இடமில்லை. 10-க்குடைய செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் நின்று 9-க்குடைய குரு பார்வையைப் பெறுவதால், குடும்பத்தில் சுப மங்கள நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். தேக நிலையில் சுகமும் ஆரோக்கியமும் விருத்தி அடையும். மருத்துவச் செலவுகள் மறையும். வீண் விரயங்கள் குறையும். பண வரவு- செலவு தாராளமாக இயங்கும். 4-ல் சனி உச்சம் பெறுவதால் பூமி, வீடு, வாகனம், தொழில் சம்பந்த மாக சுபக்கடன் உருவாகும். குடும்பத் தில் வழக்கமான மகிழ்ச்சிக்கும் உற்சாகத்திற்கும் குறைவிருக்காது. பெற்றோர்களின் கருத்துக்களைப் பரிசீலித்து ஏற்றுக்கொள்வீர்கள். "நெய்க்குத் தொன்னை ஆதாரமா- தொன்னைக்கு நெய் ஆதாரமா' என்ற முறையில், உறவு முறையிலும் நட்பு முறையிலும் உடன்பாடு உண்டாகும். சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய) சிம்ம ராசிநாதன் வாரத் தொடக்கத்தில் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். நாளை புதன்கிழமை 8-ல் மீன ராசிக்கு மாறுவார். அது மறைவு ஸ்தானம். என்றாலும் சூரியன் குருவின் சாரம் பெற்று குருவின் ராசியில் இருக்கும்போது குரு ராசிக்கு 9-ல் பலம் பெற்று ராசியைப் பார்ப்பதாலும், குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஜென்ம ராசியில் நின்று சூரியனைப் பார்ப்பதாலும், குருவின் பார்வையைப் பெறுவதாலும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உருவாகும். உங்கள் செயல்களில் ஆக்கபூர்வமான- மதிநுட்பமான அணுகுமுறைகள் நடப்பதால் பேரும் பெருமை யும் புகழும் உண்டாகும். வியா பாரத்தில்- தொழில் துறையில்- உத்தியோகத்தில் நிர்வாகத் திறமையால் சீரும் சிறப்பும் செல்வாக்கும் அடையலாம்; லாபம் ஈட்டலாம். கையாளும் காரியங்களில் வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்கலாம். சனியின் உச்சமும் வக்ரமும் உங்களுக்குத் தனித்தன்மையான தைரியத்தையும் துணிவையும் தரும். ஒரு மனிதன் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் பணபலம் வேண்டும். அல்லது படைபலம் வேண்டும். உங்களுக்கு இந்த இரண்டுமே பக்கபலமாக அமைகிறது. கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய) கன்னி ராசிநாதன் புதன் கும்பத்தில் வக்ரமாகவும் அஸ்தமனமாகவும் இருக்கிறார். ஒரு கிரகம் வக்ரமாகலாம்; வக்ரத்தில் உக்ரபலம். ஆனால் அஸ்தமனமடையக் கூடாது. அஸ்தமனம் என்பது இருட்டு. இருட்டில் எதைப் பார்ப்பீர்கள்? எதைத் தேடுவீர்கள்? ஆனாலும் புதனுக்கு வீடு கொடுத்த சனி 2-ல் வக்ரமடைவதாலும் உச்சபலம் அடைவதாலும் புதனுக்கு மறைமுக பலம் கிடைக்கிறது. கன்னி ராசிக்கு 6-ல் மறைந்தாலும் 10-ஆம் இடமான தொழில் ஸ்தானத் திற்கு திரிகோணம் பெறுவதால் வாழ்க்கை, தொழில் இவற்றில் எந்தப் பிரச்சினைக்கும் இட மில்லை. புதன் மீனத்தில் நீசமாக இருந்த காலத்தை விட இப்போது கும்பத்தில் இருக்கும் காலத்தில் உற்சாகமும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் தெளிவும் ஏற்படும். அதே சமயம் ஏழரைச் சனி- பாதச் சனி வக்ரமாக இருப்பதால், ஒருசிலர் சுயநலத்தோடு செயல்படுவார்கள். "கண்டால் காமாட்சி நாயக் கன்- காணாவிட்டால் பூனை தின்னி வடுகன்' என்ற பழமொழிப்படி, நேரில் ஒன்று- காணாத போது ஒன்று என்று பேசலாம். இது சனியின் திருவிளையாட்டு. அதன் பாதிப்பு சரியான சமயத்தில் சுவற்றிலடித்த பந்துபோல திரும்பி வரும். துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய) துலா ராசிநாதன் சுக்கிரன் 7-ல் கேந்திர பலம் பெற்று ராசியைப் பார்க்கிறார். சுக்கிரன் சுயசாரமும் பெறுகிறார். அவரோடு சேர்ந்த குரு 3, 6-க்குடையவர் என்பதால் குரு, சுக்கிர சேர்க்கை திருப்திகரமாக இருக்காது. போட்டி, பொறாமை, எதிரி, கடன், வைத்தியச் செலவு அல்லது கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, தகராறு, திருமணத்தடை ஆகிய பலன்களை சந்திக்கக் கூடும். என்றாலும் குருவும் சுக்கிரனும் சுக்கிரனுடைய நட்சத்திரமாகிய பரணி நட்சத்திரத்திலேயே சஞ்சரிப்பதால், கொள்கை வேறுபட்ட கட்சிகளும் தற்காலிக தோர்தல் கூட்டணி அமைத்துக்கொள்வது போல விதிவிலக்கு ஏற்படும். மேலும் துலா ராசிக்கு யோகாதிபதியான சனி ஜென்ம ராசியில் உச்சம் பெற்று குருவையும் சுக்கிரனையும் பார்ப்பதால், குட்டையைக் கலக்கி மீனைப் பிடிப்பதுபோல லாபம் பெறலாம். ஓரு சிலர் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு இரண்டு கண் போக வேண்டும் என்ற பாலிசியில் செயல்படலாம். அதனால் சிறுசிறு நஷ்டங்களும் ஏமாற்றங்களும் தோல்விகளும் ஏற்பட்டாலும்- இவை அனைத்தும் அடுத்து வரும் ஆதாயங்களுக்கு அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம். விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய) விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ல் பலம் பெறுகிறார், வக்ரமாக இருக்கிறார்; கேது சாரம் பெறுகிறார்; கேது ராசிக்கு 7-ல் பாக்கியாதிபதி சந்திரன் சாரம் பெறுகிறார். இவை எல்லாம் உங்களுக்கு ப்ளஸ் பாயிண்ட்டுகள்தான். அதற்கு மேலாக ராசிநாதன் செவ்வாயே ராசியைப் பார்க்கிறார். 2, 5-க்குடைய குரு 6-ல் மறைந் தாலும் ராசிநாதனைப் பார்ப்பதோடு 2-ஆம் இடத்தையும் பார்க்கிறார். எனவே ஏற்றத்தாழ்வு காணப்பட்டபோதிலும் பொருளாதார வீழ்ச்சிக்கு இடமில்லை; நட்டத்திற்கு இடமில்லை. பழைய கடன்களை அடைக்க புதிய திட்டங்களும் வழிமுறைகளும் ஏற்படும். சகோதரர்களும் நண்பர்களும் உதவி புரிவார்கள்; ஒத்துழைப்பு தருவார்கள். வியாபார, தொழில்துறையில் நம்பிக்கையும் தைரியமும் விடாமுயற்சியும் ஏற்படுவதால், வெற்றியும் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். கடந்த காலத்தில் கணவன்- மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி நெருக்கமும் இணக்கமும் ஏற்படும். அதேசமயம் 7-ல் கேது நிற்பதால் இருவருக்கும் ஏற்படும் "ஈகோ' உணர்வை விலக்கி, விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய) தனுசு ராசிநாதன் குரு 5-ல் நின்று ராசியைப் பார்த்தாலும், 6-க்குடைய சுக்கிரன் சாரம் பெறுவதோடு அவரோடும் சேர்ந்திருக்கிறார். குருவும் சுக்கிரனும் 10-ஆம் இடத்திற்கு 8-ல் மறைகிறார்கள். அதனால் சிலருக்குத் தொழில் வகையில் கடன், போட்டி, பொறாமை, கடன்காரர்களின் கெடுபிடிகள் கவலையூட்டும். சிலருக்கு குரு 4-க்குடையவர் என்பதால் பூமி, வீடு, வாகன வகையில் சுபக்கடன் உருவாகும். சிலருக்கு ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் நோய் நொடி, வைத்தியச் செலவு என்று உருவாகும். 6-ஆம் இடம் என்பது மேலே கண்ட நோய், வைத்தியச் செலவு, கடன், எதிரிகளைக் குறிக்கும் ஸ்தானம். அந்த 6-க்குடைய சுக்கிரன் அந்த இடத்திற்கு 12-ல் மறைவதால் தெய்வ பக்தியும் தெய்வ நம்பிக்கையும் முறையான பரிகாரங்களும் இருந்தால் 6-ஆம் பாவக் கெடுதல்களிலிருந்து காப்பாற்றப்படலாம். பன்னிரு திருமுறையில் 6-ஆம் பாவ கெடுதல்கள் மறைவதற்காக, "செய்யனே திருஆலவாய் மேவிய அய்யனே அஞ்சலென்றருள்' என்று தொடங்கும் ஞானசம்பந்தர் பாடிய பதினோரு பாடல்களை தினசரி பாராயணம் செய்ய வேண்டும். திருச்சேறை சென்றும் வழிபடலாம். மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய) மகர ராசிநாதன் சனி 10-ல் உச்சம் பெறுகிறார்; வக்ரமாக இருக்கிறார். 4, 11-க்குடைய செவ்வாயின் சாரம் பெறுகிறார். பொதுவாக செவ்வாயும் சனியும் எந்த பாவத்தில் இருந்தாலும் சேர்ந்தாலும் பார்த்தாலும் அந்த இடத்துப் பலன் பிரச்சினைதான். உதாரணமாக 7-ஆம் பாவத்தில் சேர்ந்தால் திருமண வாழ்க்கை பிரச்சினை. 5-ஆம் இடத்தில் சேர்ந்தால் வாரிசு பிரச்சினை. 10-ஆம் இடத்தில் சேர்ந்தால் தொழில் பிரச்சினை. இப்படி செவ்வாய், சனி சேர்க்கையும் பார்வையும் கெடுதலை உண்டுபண்ணும் என்பது விதி. உங்கள் ராசிப்படி செவ்வாயும் சனியும் வக்ரமாகி, செவ்வாய் 8-ல் மறைகிறார். சனி 10-ல் உச்சமாகிறார். அத்துடன் இவர்கள் இருவருக்கும் குரு பார்வை கிடைக்கிறது. ஆகவே முன் சொன்ன விதிக்கு எதிர்மறையாக எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களும் நண்பர்களும் ஒத்தாசையாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியும் முன்னேற்றமும் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் துணிவான முடிவெடுத்து துடிப்பாகச் செயல்படுவீர்கள். கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய) பொதுவாக கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத் திற்குரியவர்கள் என்பது எனது கணக்கு. அதற்குக் காரணம் ராசிநாதனே விரயாதிபத்தியம் பெறுவதுதான். அவர்கள் வாழ்க்கையே சந்தனம், ஊதுவர்த்தி, மெழுகுவர்த்தியாகத்தான் அமையும்- தன்னை அழித்துக்கொண்டு மணமும் ஒளியும் வீசுவதுபோல! அந்த விதி ராசிநாதன் சனி உச்சமாக இருக்கிற இக்காலகட்டத்தில் விதிவிலக்காக மாறிவிடும். கும்ப ராசிக்காரர்களின் சோதனைகளையும் வேதனைகளையும் விரட்டியடிக்கும் பரிகார ஸ்தலம் எய்யலூர் ஆகும். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி அருகில் எய்யலூர் இருக்கிறது. சின்னக்கண்ணு என்பவரை அலைபேசி எண்: 97157 50200 தொடர்பு கொண்டு போய்வந்தால் நல்ல திருப்பம் உண்டாகும். சனி தற்போது உச்சமாகவும் வக்ரமாகவும் இருக்கிறார். 4-2-2012 முதல் சனி வக்ரம். 26-3-2012-ல் கன்னி ராசிக்கு மாறுவார். அப்போது மீண்டும் அட்டமத்துச் சனி வரும். இரண்டாவது அட்டமத்துச் சனி ஆறு மாதத்தில் எதிர்பாராத நன்மைகளும் யோகங்களும் உண்டாகும். முதலில் கெடுத்த சனி அடுத்து வரும் காலம் நன்மைகளைக் கொடுத்து திருப்திப்படுத்துவார். மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய) மீன ராசிக்கு சனி 8-ல் இருப்பது- அட்டமத்துச் சனி- மைனஸ் பாயிண்ட். ராசிநாதன் குரு 2-ல் நின்று சனியைப் பார்ப்பது ப்ளஸ் பாயிண்ட். 3, 8-க்குடைய சுக்கிரன் 2-ல் நிற்பது மைனஸ் பாயிண்ட். சுக்கிரனும் குருவும் சுக்கிரன் சாரம் பெற்று சுக்கிரன் வீட்டில் இருக்கும் சனியைப் பார்ப்பது ப்ளஸ் பாயிண்ட். 2, 9-க்குடைய செவ்வாய் 6-ல் மறைவது மைனஸ் பாயிண்ட். 9-க்குடைய செவ்வாய் 9-ஆம் இடத்தையே பார்ப்பது ப்ளஸ் பாயிண்ட். இப்படி மைனஸும் ப்ளஸும் உங்கள் ராசிக்கு அமைவதால் எந்தத் திட்டங்களிலும் செயல்களிலும் மலைப்பும் திகைப்பும் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் உருவானாலும், மீன ராசிக்கு 9-க்குடைய செவ்வாயை 10-க்குடைய குரு பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அதனால் புராண காலத்தில் ரிஷிகளின் சாபத்திற்கு சாப விமோசனமும் பாப விமோசனமும் கிடைத்த மாதிரி உங்களுக்குப் பரிகாரமாகிவிடும். இந்த கிரக சடுகுடு விளையாட்டை சமாளிக்க தெய்வ நம்பிக்கையும் பக்தியும் அவசியம் தேவை. பக்தி, பூஜை ஒன்றினால்தான் கிரக பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும். அட்டமத்துச் சனி சிலருக்கு இடப்பெயர்ச்சியை உருவாக்கலாம். அது ஒரு வகையில் நல்லதாக அமையலாம். Thanks to Nakkheeran |
Oru vaarthai Oru Laksham 10-03-2012 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 10th March 2012 Posted: 09 Mar 2012 10:29 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Mun Jenmam 10-03-2012 | Vijay tv Thriller Serial MunJenmam 10th March 2012 Posted: 09 Mar 2012 10:28 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Posted: 09 Mar 2012 10:26 PM PST Mano 25th year Celebrations 10-03-2012 | Vijay Tv Shows Mano 25th year musical journey 10th march 2012 This posting includes an audio/video/photo media file: Download Now |
Posted: 09 Mar 2012 10:41 PM PST Nakkeeran 10-03-2012 | Free Download Nakeeran PDF This week | Nakkheeeran 10th March 2012 Ebook Latest Download Links |
கவர்ச்சி நடிகையின் கண்ணீர் கதை Posted: 09 Mar 2012 09:54 PM PST கவர்ச்சி நடிகையின் கண்ணீர் கதை அல்போன்சா வீட்டில் தங்கியிருந்த அல்போன்சாவின் காதலர் வினோத்குமார் கடந்த 4-ந்தேதி அதிகாலை ஒரு மணிக்கு தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் அல்போன்சா தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்னும் தகவல்கள் வெளியாயின. ஸ்டேட்மெண்ட்-1 வினோத்குமாரின் தந்தை பாண்டியன் சொல்கிறார். ""கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் குடியிருக்கோம். என் மகன் வினோத்குமார் சினிமாவில் நடிக்க விரும்பி சென்னை வளசரவாக்கத்தில் என்னோட மைத்துனர் வீட்டில் தங்கி யிருந்தான். "கவசம்'கிற படத்தில் ஹீரோவா நடிச்சிருக்கான். படம் இன்னும் ரிலீஸ் ஆகல. டான்ஸ் பயிற்சிக்காக மாஸ்டர் ராபர்ட் டிடம் போயிருக்கான். அப்போ இருவருக்கும் நட்பாகியிருக்கு. "சங்கு'னு ஒரு படம் எடுக்குறோம். அதில் நீயும் ஒரு ஹீரோ. தயாரிப்பு செலவுக்கு 50 லட்சம் வேணும்'னு என் மகன்கிட்ட ராபர்ட் தொல்லை பண்ணிருக்கார். அதோட தன் அக்கா அல்போன்சாவையும் என் மகன்கிட்ட அறிமுகப்படுத்தி அல்போன்சா மூலமாகவும் பணம் கேட்டு தொல்லை பண்ணிருக்காங்க. இந்த சூழ்நிலையிலதான் 4-ந்தேதி நைட் ஒரு மணிக்கு என் மகனோட செல்ஃபோன்ல இருந்து பேசின அல்போன்சா "ஒங்க மகன் சூஸைட் பண்ணிக்கிட்டார்'னு சொன்னார். நாங்க வந்து பாத்தப்போ கார் பார்க்கிங்கில் என் மகன் உடலை கிடத்தி வச்சிருந்தாங்க. மகனோட மூக்குலயும், வாயிலயும் ரத்தம் இருந்திச்சு. அவன் சூஸைட் பண்ணிக்கிட்டதா சொல்லப்பட்ட அறையிலும் ரத்தக்கறை இருந்திச்சு. என் மகனோட சாவில் மர்மம் இருக்கு. ராபர்ட், அல்போன்சா, இவங்களோட அம்மா... இவங்க மேல எங்களுக்கு சந்தேகம் இருக்கு!''. ஸ்டேட்மெண்ட்-2 ![]() "நடிச்ச படமும், ரிலீஸாகல. சினிமாவில் சாதிக்க முடியலையே'னு அடிக்கடி விரக்தியா பேசுவார். நான் அவருக்கு தைரியம் சொல்வேன். அவரோட வீட்ல இருந்து பணம் வாங்கித்தான் செலவு செய்வார். எனக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி துபாயில் போய் நடன நிகழ்ச்சி நடத்துவேன். இது வினோத்குமாருக்கு பிடிக்கலை. "செலவுக்கு பணம் வேணுமே?'னு அவரை சமாதானப்படுத்துவேன். நான் நடன நிகழ்ச்சிக்கு போறது பிடிக்கலைங்கிறத விட துபாய்க்கு போறதை வினோத் விரும்பல. துபாயில் இருக்கும் என் கணவர் நோபிளை நான் சந்திப்பதா சந்தேகப்பட்டார். இதனால் அப்பப்போ எங்களுக்குள் பிரச்சினை வரும். அப்புறம் சமா தானமாகிடுவோம். இப்போ நான் துபாய் போய்ட்டு வந்திருந்த நிலையில்தான் மறுபடியும் எங்களுக்குள் சண்டை. நான் நோபிளை சந்தித்துப் பேசிய தாச் சொல்லி சண்டை போட்டார். "அதெல்லாம் இல்லை. முறைப்படி நோபிளிடமிருந்து விவாகரத்து வாங்கியதும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்டா நோபிள் பிரச்சினை பண்ணுவார்'னு சொல்லி புரிய வச்சேன். ஆனாலும் அவர் டென்ஷனா இருந்ததால் அவரை சந்தோஷப்படுத்தினேன். ஆனா என் மேல நம்பிக்கை இல்லாம இப்படி ஒரு முடிவை எடுத்திட்டார்.'' ஸ்டேட்மெண்ட்-3 4-ந்தேதி இரவு சண்டை நடந்த போதே... தன் குடும்பத்தினருக்கு அல்போன்சா போன் செய்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அது என்ன? என்பது பற்றி அல் போன்சாவின் குடும்ப நண்பர் சொல்கிறார்: ""அல்போன்சாவும், வினோத் குமாரும் மது அருந்தும் போதுதான் போதையில் சந்தேகப்பட்டு சண்டை போட்டிருக்கார் வினோத். நோபி ளுடன் அல்போன்சா பேசுறதில்லைங்கிறது எங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். ஆனா இப்போ துபாய் போய்ட்டு வந்தப்போ நோபிளை அல்போன்சா சந்திச்சதா நினைச்சு வினோத் சண்டை போட, அல்போன்சா மறுத்திருக்கார். "நோபிள் உனக்கு வேணாம்ல. நான்தான வேணும். அப்ப நான் சொல்றபடி செய். இப்பவே நான் உனக்கு தாலி கட்றேன். இல்லேன்னா மோதிரம் மாத்திக்கலாம். உடனே கல்யாணம் பண்ணணும்'னு சொல்லி "தாலியா? மோதிரமா? தாலியா? மோதிரமா?'னு பேசியதையே பேசினாராம் வினோத். "நோபிள் ரஃப் டைப். நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்மள நிம்மதியா இருக்க விடமாட்டார். கொஞ்சநாள் பொறு. டைவர்ஸ் வாங்கியதும் கல்யாணம் பண்ணிக் கலாம்'னு அல்போன்சா சொல்ல... வினோத் அதை ஏத்துக்கல. "நீ எப்படியோ போ. நான் செத்துப் போயிடு றேன்'னு டார்ச்சர் பண்ண... "நீ என்னா சாகுறது. நான் செத்துப்போறேன்'னு நாலஞ்சு ஸ்லீப்பிங் டேப் லட்ஸை எடுத்து அல் போன்சா முழுங்கீருக்கார். கோபமா எந்திரிச்சு வினோத் அவரோட ரூமுக்குப் போயி ருக்கார். அல்போன்சா போதை மயக்கத்தில் இருக்க... இந்த கேப்பில்தான் வினோத் தூக்கு மாட்டி யிருக்கார். அதுக்குப் பின்ன பாத்ரூம் போக எழுந்தப்ப தான் அந்த ரூமிற்குப் போய் வினோத் தூக்கில் தொங்குற தைப் பாத்திருக்கார் அல்போன்சா. வினோத் தற்கொலை குறித்து எல்லாருக்கும் இன்ஃபார்ம் பண்ணிட்டு அப்புறம்தான் அதிர்ச்சியில் நிறைய தூக்க மாத்திரைகளை அல்போன்சா சாப்பிட்டி ருக்கார்.'' ஸ்டேட்மெண்ட்-4 போலீஸ் தரப்பில் விசா ரித்தபோது, அவர்கள் சொன் னது.... ""முதலில் "சந்தேக மரணம்'னுதான் பதிவு செஞ் சோம். அல்போன்சா வசிக்கும் குடியிருப்பில் உள்ள சி.சி.டிவி. கேமரா பதிவுகளை பார்த்தப் போ... சம்பவநாளின் இரவிலோ... சம்பவம் நடப்பதற்கு முன்போ அல்போன்சா வீட்டுக்குள் யாரும் போனதாக பதிவு இல்லை. டவல் கட்டியபடி உதவி கேட்டு அல்போன்சா அழுதபடியே வீட்டுக்குள்ளிருந்து வருவது பதிவாகியிருக்கு. இது தற்கொலை என்பதற்கான சூழ்நிலைதான்னு தெரியுது. இருந்தாலும் வினோத்தை அல்போன்சா தற்கொலைக்குத் தூண்டினாரா என விசாரித்து வருகிறோம்.'' ![]() சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பலரின் கருத்து இதுதான்... கணவனை சட்டப்படி பிரியாத ஒரு பெண்ணுடன், தங்கள் வினோத் வசிப்பது தெரிந்தும் அவரின் பெற்றோர்கள் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். இப்படி ஒரு கூடா காமம் கேடாய் முடிந்திருக்கிறது. "கவர்ச்சி நடிகைக் குப் பின்னே... கண்ணீர்க் கதைகள் உண்டு' என்கிற விதிக்கு அல்போன்சா விதிவிலக்கல்ல. நி பெரிய நடிகரின் சின்னவீடாக இருந்தார் நி ஏற்கனவே இவரை ரணப்படுத்திய காதல் விவகாரங்கள் இப்படி... அல்போன் சாவின் போராட்ட வாழ்க்கைப் பற்றி அறிந்த வர்கள் ஏகப்பட்ட தகவல் களைச் சொல்கிறார்கள். அவை சினிமாவை விஞ் சுவதாக இருக்கிறது. அதுபற்றி அடுத்த இதழில்... Thanks to Nakkheeran |
Sigaram Thotta Pengal 11-03-2012 | Vijay tv Shows Sigaram Thotta Pengal Promo video Posted: 09 Mar 2012 09:50 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Sun Tv Shows Azhagi This week Promo video Posted: 09 Mar 2012 09:44 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Sun Tv Shows Thendral This week Promo video Posted: 09 Mar 2012 09:43 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
மு.க.அழகிரி - குஷ்பு சந்திப்பு Posted: 09 Mar 2012 09:41 PM PST மு.க.அழகிரி - குஷ்பு சந்திப்பு வரும் மார்ச் 18ஆம் தேதி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை சந்தித்தார். Thanks to Nakkheeran |
சாத்தான்களிடம் விற்றுவிட்டேன் வெற்றிமாறன் வேதனை Posted: 09 Mar 2012 09:39 PM PST சாத்தான்களிடம் விற்றுவிட்டேன் வெற்றிமாறன் வேதனை அறச்சீற்றம் இல்லாதவன் ஒரு சினிமா இயக்குனராக இருக்கவே முடியாது என்று ஒரு விழாவில் கூறினார் 'நீயா நானா' கோபிநாத். அதை உண்மை என்று நிரூபிப்பது போல பேசியிருக்கிறார் டைரக்டர் வெற்றிமாறன். லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறனின் பேச்சில் அநியாயத்துக்கு காரமும், கவலையும்!இனி கார்ப்பரேட்டுகளின் கையில் தமிழ்சினிமா சிக்கிக் கொள்ளப் போகிறது. அவர்கள் அளவுக்கு நம் தயாரிப்பாளர்களால் முதலீடு செய்ய முடியாது. முதலீடு செய்வது அவர்கள் என்பதால் இனி அவர்கள் சொல்வது போலதான் படம் எடுக்க முடியும். நம் அடையாளங்களை தெரிந்தே தொலைக்கப் போகிறோம் என்றார். பட்ஜெட்டை குறைச்சுக்கோ என்று அந்த மேடையில் தன்னை அறிவுறுத்திய குருநாதர் பாலுமகேந்திராவுக்கு வெற்றிமாறன் சொன்ன பதில்- நான் என் ஆன்மாவை சாத்தான்களிடம் விற்றுவிட்டேன்! இயக்குனர்கள் பலரது சொல்ல மறந்த கதை இந்த ஒரு வரிதான்! Thanks to TamilCinema |
வந்தாச்சு தமன்னா புண்ணியம் டூ தி.நகர் Posted: 09 Mar 2012 09:36 PM PST வந்தாச்சு தமன்னா புண்ணியம் டூ தி.நகர் ச்சும்மா உட்கார்ந்து பாக்கு இடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளை கூட 'பிஸிண்ணே பிஸி' என்று பதில் சொல்ல வைக்கிற அளவுக்கு மொய்த்து தள்ளுகிறார்கள் அவர்களை. இந்த நேரத்தில் மறுபடியும் தமன்னாவை அழைத்தார்களாம் சில ஏஜென்டுகள். தமிழ் ஃபீல்டு அவுட். ஆந்திராவிலும் அறிவிக்கப்படாத தொழில் தடை என்றிருக்கும் தமன்னா, அடித்து பிடித்துக் கொண்டு ஒப்புக் கொண்டாராம் இந்த வாய்ப்புகளை. அதென்ன ஆந்திராவில் பிரச்சனை? பெரிய வாரிசு நடிகர் ஒருவரின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தமன்னா, கால்ஷீட் சொதப்பலில் ஈடுபட்டதுதான் இந்த அறிவிக்கப்பமாத தடைக்கு காரணம் என்கிறார்கள். இந்த நேரத்தில்தான் இந்த விளம்பரப்பட அழைப்பு. ஷுட்டிங் மட்டும் சென்னையில் வேண்டாம் என்ற கண்டிஷனோடு ஒப்பு கொண்டிருக்கிறாராம் தமன்னா. ஏங்க்கா....? Thnks to Tamil cinema |
ஸ்நேகா உல்லால் அடுத்த வீடியோ ரெடி! Posted: 09 Mar 2012 09:34 PM PST இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், கன்னடா, பெங்காலி என பல மொழி படங்களிலும் கலக்கிய ஸ்னேகா உல்லால் மொழியே இல்லாத படத்திலும் கலக்கியது தான் பரபரப்பு பேச்சாக உள்ளது. ஏதோவொரு போட்டோ ஷூட்டிற்கு போன ஸ்நேகா உல்லால் போட்டோ ஷூட் முடிந்ததும் வெள்ளை நிற மெல்லிய உடையை போட்டுக் கொண்டு அங்கிருந்த கட்டிலில் புரண்டிருக்கிறார். இதை அவரது நண்பரான சரத் வீடியோ எடுத்ததை பார்த்ததும் அந்த வீடியோவை வாங்கி பார்த்த ஸ்நேகா உல்லால் உற்சாகத்தில் அதை யூட்யூபில் போட்டுவிட்டார்(வேறு யாரோ போட்டார்கள் என்றும் கூறப்படுகிறது) இதுவரை அந்த வீடியோவை 1,31,440 நபர்கள் பார்த்திருக்கிறார்கள் (ரசித்திருக்கிறார்கள்). ஸ்நேகா உல்லாலுக்கோ ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவரிடம் அடுத்த வீடியோ எப்போது என ஒரு நண்பர் கேட்டதற்கு "வீடியோவிற்கான பாட்டு முடிவு செய்வதில் கடைசி கட்டத்தில் இருக்கிறோம். வீடியோ எடுப்பதற்கு ஹைதராபாத்தில் நல்ல லொகேஷன் பார்க்க சரத்துடன் செல்வேன். ஆனால் சத்தியமாக சொல்கிறேன் இந்த மாத இறுதிக்குள் அடுத்த வீடியோ ரிலீஸாகிடும்" என்று கூறியிருக்கிறார். இந்த மாத இறுதியில் யூடியூப்பில் பரபரப்பாக தேடப்படும் பெயர் கண்டிப்பாக ஸ்நேகா உல்லால் தான் போலிருக்கே! Thanks to Nakkheeran |
தனுஷின் அடுத்தப்படம்...'கொலவெறி' அனிருத்துக்கு டாடா! Posted: 09 Mar 2012 09:06 PM PST தனுஷின் அடுத்தப்படம்...'கொலவெறி' அனிருத்துக்கு டாடா! தவிக்கிற வாய்க்கு தண்ணி தராவிட்டாலும் பரவாயில்ல, மென்னிய பிடிச்சு திருகாம இருந்தா போதும் என்கிற அளவுக்கு வெறுத்துப் போயிருக்கிறாராம் புது இசையமைப்பாளர் அனிருத். வொய் திஸ் கொலவெறி என்ற ஒற்றை பாடலின் மூலம் இசையுலகத்தையும் சேர்த்து கலங்கடித்த இந்த மழலை மேதைக்கு (வயசை கேட்டா அப்படிதான் அழைக்க தோணுது) இப்போதைக்கு ஏற்பட்டிருக்கிற விரக்தி கொஞ்ச நஞ்சமில்லையாம். ஏன்?தனுஷின் அடுத்த படத்தில் இவர் இல்லை. அதனால்தான். பொதுவாக ஒரு காம்பினேஷன் க்ளிக் ஆகிவிட்டால் அதையே கட்டிக் கொண்டு மாரடிப்பது தமிழ்சினிமாவின் வழக்கம். நான் படப்பிடிப்புக்கு கேமிராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனின் இரண்டு கண்களைதான் எடுத்துச் செல்கிறேன் என்று முப்பது வருடத்திற்கு முன் முழங்கிய பாரதிராஜா கூட, அதே கண்ணனோடுதான் இப்பவும் படமெடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படி பெரும் முதலைகளே அச்சத்தோடு பின்பற்றி வருகிற இந்த சென்ட்டிமென்ட் லாக்கை முதல் படத்தோடு உடைத்துக் கொண்டு விட்டாராம் தனுஷ். 3 படத்திற்கு பிறகு இவர் நடிக்கப் போகும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் பரத் பாலா. இவர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிப்பில் வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கியவர். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த புதிய படத்திற்கு இசை அனிருத் இல்லை என்பதுதான் இப்போதைக்கு தெரிய வந்திருக்கும் செய்தி. Thanks to TamilCinema |
வடிவேலுவே... வாங்க!அழைக்கிறது அமெரிக்கா Posted: 09 Mar 2012 09:01 PM PST வடிவேலுவே... வாங்க!அழைக்கிறது அமெரிக்கா அமெரிக்க தமிழ் சங்கத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது வடிவேலுவுக்கு. அவர் பிஸியாக இருந்தபோதெல்லாம் கூட இதே அழைப்பு வந்ததாம் பலமுறை. ஆனால் இந்த முறைதான் அவரால் 'யெஸ்' சொல்ல முடிந்திருக்கிறது. காரணம் நாமெல்லாம் அறிந்ததுதான். இந்த விவகாரத்தை கிண்டி கிளறி மேலும் செப்டிக் ஆக்குவதை விட அடுத்தகட்ட செய்திக்கு போவதுதான் நல்லது.இந்த நிகழ்ச்சிக்கு அவர் வருவதாக ஒப்புக் கொண்டாலும், விழா நடக்கும் இடம் வெள்ளை மாளிகைக்கு சற்று அருகில் என்பதால் ஏகப்பட்ட செக்யூரிடி பிராப்ளமாம். முன்னதாக வடிவேலு பற்றிய குறிப்புகளை கேட்டுவிட்டார்களாம் அதிகாரிகள். அதன்காரணமாக வடிவேலு நடித்த காட்சிகளை வீடியோ வடிவில் வழங்கினார்களாம் தமிழ் சங்கத்தினர். அவற்றையெல்லாம் பார்த்த அதிகாரிகள் விழுந்து விழுந்து சிரித்ததோடு முழு மனதோடு சம்மதமும் வழங்கிவிட்டார்கள். இதற்கிடையில் மலையாள நடிகர் முகேஷ் வடிவேலுவை சந்தித்தாராம். உங்கள் புதுப்படத்திற்காக எங்கள் நாடு வெயிட்டிங். எப்ப பிரச்சனையெல்லாம் சரி பண்ணிட்டு நடிக்கப் போறீங்க என்றாராம். அதற்கு பதில் தேடிதானே இப்போதும் அலைந்து கொண்டிருக்கிறது வைகைப்புயல். Thanks to Tamil Cinema |
Posted: 09 Mar 2012 07:54 PM PST Dinkaran E-paper 10-03-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 10th March 2012 Download Links |
Posted: 09 Mar 2012 01:05 PM PST Dinamalar Aanmeegamalar 10-03-2012 | Free Download Aanmeegamalar PDF today ebook | Aanmeega Malar 10th March 2012 Download Links http://adf.ly/698EH http://adf.ly/69AXl http://adf.ly/698EH ( Note : Don't Copy our titles and images. ) Some bloggers copied our all titles and images. Why? ...We are working to free service not earning to money. pl understand and support us. We are using adf.ly ads only. because we pay to internet connections, electric charges. |
Dinamalar E-paper 10-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 10th March 2012 Posted: 09 Mar 2012 01:04 PM PST Dinamalar E-paper 10-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 10th March 2012 Download Links ( Note : Don't Copy our titles and images. ) Some bloggers copied our all titles and images. Why? ...We are working to free service not earning to money. pl understand and support us. We are using adf.ly ads only. because we pay to internet connections, electric charges. |
Yugiyudan Yugiyungal 09-03-2012 | Jaya tv Yugi yudan Yugiyungal 9th March 2012 Posted: 09 Mar 2012 09:31 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Nadanthathu Enna 09-03-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 9th March 2012 Posted: 09 Mar 2012 09:27 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |