TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


SunTv Headline News 06-03-2012 | Sun Tv headline News 06-03-12 | Sunnews 6th March 2012

Posted: 06 Mar 2012 01:39 AM PST



SunTv Headline News 06-03-2012 | Sun Tv headline News 06-03-12 | Sunnews 6th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

மணப்பாடு கிராமத்தில் தொடங்கியது மணிரத்னத்தின் கடல்!

Posted: 06 Mar 2012 01:36 AM PST


மணப்பாடு கிராமத்தில் தொடங்கியது மணிரத்னத்தின் கடல்!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் மகன் நடிக்கும் கடல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.


தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையில் உள்ள கடற்கரை கிராமமான மணப்பாடில் முதல் காட்சி படமாக்கப்பட்டது. 


மீனவர் வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட கடல் முழுக்க முழுக்க காதல் கதையாகும். காதல் கதைதான் என்றாலும், மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அந்நிய கடற்படையினரிடம், அந்நிய மீனவர்களிடம் சிக்கி அனுபவிக்கும் துன்பங்களை ஹைலைட்டாகச் சொல்லப் போகிறாராம் மணிரத்னம்.


அவரது இயக்கத்தில் ஒரு வெற்றிப்படம் வெளியாகி ரொம்ப நாளாகிவிட்டதால் இந்தப் படத்தை, தமிழில் மட்டுமே எடுக்கிறார். தமிழ் மீனவ கிராமங்களை அதன் இயல்புத் தன்மையுடன் காட்ட பெரும் முயற்சி மேற்கொண்டுவருகிறார். முழுக்க முழுக்க தமிழ்நாட்டு கடற்கரை லொகேஷன்களிலேயே எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம்.


கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.


அர்ஜுன் - அரவிந்த் சாமி


ஆக்ஷன் கிங் அர்ஜூன் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் அரவிந்த் சாமியும் கைகோர்க்கிறார்.


இசை ஏ ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவு - ராஜீவ் மேனன்!
Thanks to OneIndia

அப்போது பறித்த ரோஜா மலர் போல இருக்கணும்...!

Posted: 06 Mar 2012 01:32 AM PST


அப்போது பறித்த ரோஜா மலர் போல இருக்கணும்...!

தம்பதியர் இருவரும் தனியாய் சந்திக்கும் இடம் படுக்கையறைதான். அங்கு பெண்கள் செய்யும் ஒரு சில தவறுகள் ஆண்களின் மனதை அப்செட் செய்து விடும். எனவே தாம்பத்ய வாழ்க்கையில் தடங்கள் ஏற்படாமல் இருக்க பெண்கள் தவிர்க்கவேண்டிய சில விசயங்கள் உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர் அவற்றை பின்பற்றுங்கள்.


வெட்கத்தை தள்ளி வைப்போம்


அச்சம், மடம், நாணம், வெட்கம் பெண்களுக்கு இருக்க வேண்டியதுதான். ஆனால் படுக்கையறையில் அது செல்லுபடியாகாது. அதிகமாக இருந்தால் உங்கள் ஹஸ்பெண்ட் உங்களை சஸ்பெண்ட் செய்துடுவார். எனவே படுக்கையறையில் தேவையற்ற கூச்சம், வெட்கத்தை தள்ளி வைத்து, கணவருக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.


புதிதாய் பூத்த பூ


படுக்கையறையில் எதையாவது நினைத்து கன்னத்தில் கைவைத்துக் கொண்டு உட்காந்திருக்க கூடாது. இந்த தோற்றத்தை கண்டாலே கணவருக்கு இருந்த மூடெல்லாம் போய் விடும். எனவே படுக்கையறைக்கு செல்லும் போது அப்போது பறித்த ரோஜா மலர் போல சிரித்த முகத்துடன் இருங்கள்.


அதிகாரம் வேண்டாமே


நிர்வாகத்தில் ராஜகுமாரியாக இருங்கள். ஆனால், படுக்கையறையில் ராஜகுமாரி தோரணையில் கணவரை மிரட்டாதீர்கள். இது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே கணவரின் செயல்களுக்கு மறுப்பு தெரிவிக்காதீர்கள்.


விமர்சனம் கூடாது


படுக்கையறையில் எந்த சந்தர்ப்பத்திலும் கணவரை விமர்சனம் செய்யக் கூடாது. அது அவர்களின் தன்மான உணர்வை தூண்டிவிடுமாம். இதனால் இருவருக்குமிடையே விரிசல்தான் எற்படும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.


சிலிர்க்க வைக்கும் உடைகள்


படுக்கையறைக்கு வரும்போது அதற்கேற்ப நைட்டி, உடை அணிந்து கொள்கின்றனர். இது ஆண்களுக்கு பிடிக்காதாம். எனவே சிலிர்பூட்டக்கூடிய உடைகளை அணிவதைத்தான் ஆண்கள் விரும்புகின்றனராம்.


இரு கை சேர்ந்தால் தான் ஓசை வரும். அது போல இருவரின் ஆசையும் இணைந்தால்தான் இல்லறம் இனிக்கும். எனவே உளவியல் நிபுணர்கள் கூறும் சூத்திரங்களை பின்பற்றினால் தம்பதிகள் இருவரும் அன்பெனும் ஊஞ்சலில் நாளெல்லாம் சந்தோஷ சங்கீதம் பாடலாம்.
Thanks to OneIndia

ஓட்டு உங்களுக்குத் தான், ஆனால்..: அதிமுகவினரை ஓட வைக்கும் மக்கள்!

Posted: 06 Mar 2012 01:27 AM PST


ஓட்டு உங்களுக்குத் தான், ஆனால்..: அதிமுகவினரை ஓட வைக்கும் மக்கள்!

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் வாக்கு சேகரிக்க செல்லும் அதிமுகவினரிடம் மக்கள் மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மக்கள் புகார் கொடுக்கின்றனர். இதனால் ஆளுங்கட்சியினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு இடத்தை காலி செய்கின்றனர்.


சங்கரன்கோவில் தொகுதியில் பாரதி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மாநில அதிமுக அமைப்பு செயலாளர் பி.எச் பாண்டியன் தலைமையிலான அதிமுகவினர் தீவிர பிரச்சாரம் செய்தனர். அவர்களுடன் மாநகர அதிமுக செயலாளர் சுதா பரமசிவம், முன்னாள் எம்.பி முருகேசன் உட்பட பலரும் சென்றனர்.


பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் கூறியதாவது,


நாங்கள் அதிமுகவுக்குத் தான் ஓட்டு போடுவோம். ஆனால் தற்போது மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருவதால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கார்டு பிரச்சனை உட்பட அத்தியாவசியப் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்றனர்.


இக்கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிமுகவினர் அங்கிருந்து அவசரம், அவசரமாக கிளம்பினர்.
Thanks to Oneindia

மீண்டும் மீண்டும் மண்ணைக் கவ்வும் ராகுல்- அமேதியைக் கூட காக்க முடியாத சோகம்!

Posted: 06 Mar 2012 01:23 AM PST


மீண்டும் மீண்டும் மண்ணைக் கவ்வும் ராகுல்- அமேதியைக் கூட காக்க முடியாத சோகம்!

சென்னை: காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவர், நாளைக்கே பிரதமர் பதவி கிடைத்தாலும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படக் கூடியவர், அலெக்சாண்டர் போல் பிரமாதமான தலைவர் என்றெல்லாம காங்கிரஸாரால் கோஷ்டி கானம் பாடப்பட்டு வரும் ராகுல் காந்திக்கு ஐந்து மாநிலத் தேர்தலில் மீண்டும் ஒரு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. அவரது உத்திகளுக்குக் கிடைத்த பெரும் அடியாக இது கருதப்படுகிறது.


பெரிய சோகம் என்னவென்றால், தான் எம்.பியாக உள்ள அமேதி தொகுதிக்குட்பட்ட அத்தனை சட்டசபைத் தொகுதிகளையும் அவரது கட்சி சமாஜ்வாடியிடம் பறி கொடுத்திருப்பதுதான். இதுதான் காங்கிரஸை நடுநடுங்க வைத்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸின் கொள்கை வகுப்பு, தேர்தல் உத்திகள், வேட்பாளர் தேர்வு என பல முக்கிய விஷயங்களை ராகுல் காந்தியிடம் தூக்கிக் கொடுத்து விட்டனர். இதனால் பிரதமரை மதிக்கக் கூடத் தேவையில்லை என்ற அளவுக்கு காங்கிரஸார் போய் விட்டனர். அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான், என்ற அளவுக்கு அவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். விளைவு, இப்போது ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் ராகுல் காந்தியின் கொள்கை பலத்த அடியை வாங்க ஆரம்பித்துள்ளது.


பீகார் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வாங்கிய மரண அடியை இன்னும் கூட அக்கட்சியினர் மறந்திருக்க முடியாது. அதேபோல ஒரிசாவிலும் ராகுல் காந்தியின் உத்திகளுக்கு பலத்த அடி கிடைத்தது. தமிழகத்திலும் ராகுல் காந்தியின் அணுகுமுறைகள் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கேவலமான தோல்வியையே தழுவியது.


இப்போது உ.பியிலும், பஞ்சாபிலும், கோவாவிலும் காங்கிரஸ் வாங்கியுள்ள அடியைப் பார்த்தால், இந்த மாநில மக்களும் ராகுல் காந்தியை ஏற்கவில்லை என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


உ.பியில்தான் ராகுல் காந்தியின் அணுகுமுறை பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி வெல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பல தொகுதிகளையும் அந்தக் கட்சி நழுவ விட்டுள்ளது. முலாயம் சிங் யாத்வையும், மாயாவதியையும் தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் ராகுல் காந்தி. தேர்தல் பிரசாரத்தின்போது அவர் அடித்த ஸ்டண்ட்டைப் பார்த்தபோது அனைவருமே வியந்து போயிருந்தனர். ஒருவேளை காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்று விடுமோ என்று கூட நினைக்கத் தோன்றியது. 


ராகுல் காந்திக்கு உதவி புரிய சகோதரி பிரியங்கா காந்தி, தனது கணவருடன் உ.பியில் முகாமிட்டு ஊர் ஊராகப் போய் வந்தார். ராகுல் காந்தி போகாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு ஷேவிங் செய்யக் கூட நேரமில்லாமல் தாடியுடன், உ.பியை வலம் வந்தார்.நடந்து போனார், விவசாயிகளுடன் உட்கார்ந்து பேசினார், குடிசைகளுக்குள் புகுந்து சாப்பிட்டார், இன்னும் என்னவெல்லாமோ செய்தார். ஆனால் கடைசியி்ல வாக்குகளைப் பெறத் தவறி விட்டார்.


இதில் கிளைமேக்ஸ் என்னவென்றால் தனது அமேதி தொகுதியில் ஒரு சட்டசபைத் தொகுதியில் கூட அவரால் காங்கிரஸை வெற்றி பெற வைக்க முடியவில்லை என்பதுதான். அமேதி எம்.பி. தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபைத் தொகுதிகளையும் சமாஜ்வாடி பிடித்து விட்டது. இது ராகுல் காந்திக்கு பெருத்த அவமானமான செய்தி என்பதில் சந்தேகமில்லை. தனது சொந்தத் தொகுதியைக் கூட அவரால் தக்க வைக்க முடியவில்லை.


ராகுல் காந்தியின் புயல்வேகப் பிரசாரம் காங்கிரஸுக்குக் கை கொடுக்கவில்லை. அவரது தேர்தல் உத்திகள், அணுகுமுறைகளுக்கும் பெரும் தோல்வியாக மாறியுள்ளது.


உ.பியைப் போலவே பஞ்சாபிலும் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியுள்ளது. கோவாவில் ஆட்சியை பாஜகவிடம் பறி கொடுத்து விட்டது. மணிப்பூரை மட்டுமே தக்க வைத்துள்ளது. அதுவும் கூட அந்த மாநில முதல்வர் இபோபிசங்கின் தனிப்பட் செல்வாக்குதான் காரணமே தவிர காங்கிரஸின் செல்வாக்கு அல்ல.


உ.பியில் கடந்த முறை வாங்கியதை விட சில சீட்களை கூடுதலாகப் பெற்றுள்ளது காங்கிரஸ். உத்தரகாண்ட்டில் கூட பாஜகவிடமிருந்து ஆட்சியை இன்னும் அது முழுமையாக பறிக்கவில்லை, இழுபறிதான் காணப்படுகிறது. மொத்தத்தில் ஐந்து மாநில பொதுத் தேர்தல் ராகுல் காந்திக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸுக்கும் பெருத்த ஏமாற்றம்தான்.


இளைஞர் காங்கிரஸாரை மட்டுமே நம்பி அவர் களப் பணியாற்றுவது பலன் தராது என்பது புரிந்து போய் விட்டது. மேலும் அவரது அதிபுத்திசாலித்தனமான பேச்சுக்களும் மக்களிடம் எடுபடவில்லை என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது.


இனியும் காங்கிரஸ் மேலிடம் ராகுலை முழுமையாக நம்பியிருப்பது எந்த அளவுக்கு அந்தக் கட்சிக்கு உதவும் என்பதும் புரியவில்லை.
Thanks to OneIndia

Athipookal 06-03-2012 | Sun Tv Athipookal Serial 6th March 2012

Posted: 06 Mar 2012 01:19 AM PST


Athipookal 06-03-12 | Sun Tv Athipookal Serial 6th March 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 06-03-2012 | Sun Tv Elavarasi Serial 6th March 2012

Posted: 06 Mar 2012 12:33 AM PST


Ilavarasi 06-03-12 | Sun Tv Elavarasi Serial 6th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

அல்போன்சா தற்கொலை முயற்சி விலகாத மர்மங்கள்

Posted: 06 Mar 2012 12:07 AM PST


அல்போன்சா தற்கொலை முயற்சி விலகாத மர்மங்கள்
இன்று காலை செய்தி மிகவும் பரபரப்பானது. எல்லாராலும் அறியப்பட்ட நடிகை அல்போன்சா து£க்க மாத்திரை சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்பது முதல் செய்தி. அவரது காதலர் வினோத்குமார் து£க்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்பது இன்னொன்று.

குரூப் டான்சர் குடும்பம்தான் அல்போன்சாவுக்கு. சுந்தரம் மாஸ்டர், சிவசங்கர் மாஸ்டர் என்று டாப்மோஸ்ட் நடன இயக்குனர்களின் குரூப்பில் ஆடிக் கொண்டிருந்தவர்தான் அல்போன்சாவின் அம்மா. மகளை பெரிய நடிகையாக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. ஆனால், அதற்குள் அதைவிட பெரிய ஆஃபர் ஒன்று அல்போன்சாவுக்கு அமைய, திரையுலக பிரவேசத்தை தள்ளிப் போட்டார் அவர்.

அந்த நிர்பந்தம் அல்போன்சாவை சில வருடங்கள் சூழ்ந்திருந்ததாகவும் பிற்பாடு அது மெல்ல விலகியதாகவும் கூறுகிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். அதற்கப்புறம்தான் பாட்ஷா படத்தின் மூலம் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற இறங்கினார் அல்போன்சா. வந்த வேகத்திலேயே அவர் காதல் வயப்பட, மொத்த குடும்பமுமே இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனாலும் தானும் தன் காதலும் வாழ குடும்பத்தையே கூட உதறியெறிய துணிந்தார் அல்போன்சா. இதெல்லாம் பழைய கதை. சினிமாவில் நடிக்காவிட்டாலும் அடிக்கடி கலைசேவை செய்ய வெளிநாடுகளுக்கு சுற்ற ஆரம்பித்தவர், போகிற நேரங்களில் எல்லாம் காதலர் வினோத்குமாரை உடன் அழைத்துச் செல்வதை தவிர்த்தே வந்தாராம். இதன் காரணமாக காதலர்களுக்குள் விவாதமும், வீண் சண்டையும் எழுந்ததாக கூறப்படுகிறது.

நேற்றும் அப்படியே நடந்திருக்கிறது. இதையடுத்து காதலர் வினோத்குமார் து£க்கில் தொங்கி இறந்ததாகவும் துக்கம் தாளாமல் அல்போன்சாவும் உயிரை விட துணிந்ததாகவும் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் வினோத்குமாரை அடித்தே கொன்றுவிட்டார்கள் என்று அவரது குடும்பத்தினர் கதற ஆரம்பித்திருக்கிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி அல்போன்சா அபாய கட்டத்தை தாண்டிவிட்டாராம். இனிமேல் நடக்கப் போகும் வழக்கு விசாரணைகள்தான் மிச்ச சொச்ச சந்தேகங்களை தீர்க்க வேண்டும்.
Thanks to TamilCinema

பிரகாஷ்ராஜ் இல்லையா?-ஏமாற்றத்தில் விஷால்

Posted: 06 Mar 2012 12:06 AM PST


பிரகாஷ்ராஜ் இல்லையா?-ஏமாற்றத்தில் விஷால்

சமரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். பச்சை புள்ளைக்கு முட்டாயை காட்டுவது மாதிரிதான் இவருக்கு பிரகாஷ்ராஜை காட்டி கமிட் பண்ணினார்களாம். அவர் பெரிய சம்பளம் கேட்கிறார் என்று விஷாலிடம் சொன்ன போது, 'வேணும்னா எக்ஸ்ட்ரா வர்ற அந்த சம்பளத்தை என் சம்பளத்தில் குறைச்சுகோங்க' என்று ரிடக்ஷனும் கொடுத்திருந்தார் விஷால். எல்லாம் பிரகாஷ்ராஜின் கால்ஷீட்டுக்காக.


இந்த நேரத்தில்தான் இப்படத்தை தயாரித்துக் கொண்டிருந்த மற்றொரு படமான ஒஸ்தி வெளியே வந்தது. தியேட்டர் ரிசல்ட்? ரொம்பவே மட்டம்! தண்ணி குடித்துவிட்டாராம் தயாரிப்பாளர். உருவாகிக் கொண்டிருக்கும் சமரன் படத்தில் எல்லாத்தையும் குறைங்க என்று அதிரடியாக வந்தது உத்தரவு.


அப்புறமென்ன? முதலில் பலியானவர் பிரகாஷ்ராஜ்தான். அவருக்கு கொடுக்கிற சம்பளத்தை வைத்துக் கொண்டு அரை படத்தை முடித்துவிடலாமே என்று கணக்கு போட்டவர்கள், ஜே.டி.சக்ரவர்த்தியை பிரகாஷுக்கு பதிலாக நடிக்க வைத்துவிட்டார்கள். சம்பளத்தையும் தியாகம் செய்து, பிரகாஷ்ராஜையும் இழந்த விஷால்தான் இப்போது பேஸ்த் அடித்துப் போயிருக்கிறார்.


பழந்தின்னு கொட்டை போட்ட விஷாலுக்கே இந்த நிலைமையா?
Thanks to tamilcinema

வடசென்னை கிடக்கட்டும்...சிம்புவின் கொலவெறி

Posted: 06 Mar 2012 12:03 AM PST


வடசென்னை கிடக்கட்டும்...சிம்புவின் கொலவெறி
நார்த் மெட்ராஸ் என்றாலே வேர்த்து வடிகிற அளவுக்கு பேஸ்த் ஏரியாவாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள் அதை. அரசு கூட வட சென்னை என்றால் புறக்கணிப்பதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் அங்கு வசிப்பவர்கள். சீனப் பெருஞ்சுவரையே சில வருடங்களுக்குள் கட்டி முடித்துவிடும் நெடுஞ்சாலைத்துறை கூட, நார்த் மெட்ராஸ் விஷயம் என்றால் குறைந்த பட்சம் அதை பத்தாண்டு திட்டமாக்கி பல்லாங்குழி ஆட வைக்கிறது. இந்த விபரீத நிலைமையை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறது ஊரும் உலகமும்.

அட நிஜத்திற்குதான் இப்படி ஒரு சோதனை என்றால், நிழலுக்கும் அதே கதிதான் போலிருக்கிறது. வடசென்னை என்றொரு படத்தை எடுப்பதாக எப்பவோ அறிவிப்பு கொடுத்தார் வெற்றிமாறன். ஆனால் இன்னும் ஒரு அங்குலம் கூட படம் நகர்ந்தபாடில்லை என்கிறார்கள். காரணம்? வேறு யாராக இருக்கும். படத்தின் ஹீரோவான சிம்புவேதான்.

இந்த படத்திற்கு அவர் கொடுப்பதாக சொன்ன தேதிகள் எல்லாம் கடந்து பல மாதங்கள் ஆகிவிட்டனவாம். தனுஷ் கொலவெறி பாடலை ஹிட்டடித்தாலும் அடித்தார். சிம்புவின் வாய் மூக்கிலிருந்தெல்லாம் போபால் புகை வர ஆரம்பித்துவிட்டது. அந்த பாடலை பின்னுக்கு தள்ளிவிட்டுதான் புதுப்படத்தில் நடிப்பது என்று சபதம் செய்து, லவ் ஆங்க்தம் ஆல்பத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

கால்ஷீட்டுக்காக சிம்புவின் வீடு இருக்கும் இந்தி பிரச்சார தெருவுக்கு நடந்து நடந்து பஞ்சர் ஆகிவிட்டார் வெற்றிமாறனும். பிரச்சனை என்னவென்றால் அவர் வேறொரு படத்தை இயக்க தெலுங்குக்கு போயாக வேண்டுமாம். எப்போது வடசென்னையை முடிப்பது? எப்போது ஆந்திராவுக்கு பிளைட் ஏறுவது என்பதுதான் வெற்றிமாறனின் ஒரே கவலை!
Thanks to TamilCinema

டைரக்டரானார் 'மிர்ச்சி' சிவா பிரபல நிறுவனம் தயாரிப்பு

Posted: 06 Mar 2012 12:02 AM PST


டைரக்டரானார் 'மிர்ச்சி' சிவா பிரபல நிறுவனம் தயாரிப்பு
ரேடியோ மிர்ச்சி சிவா ஆடியோவில் மட்டுமல்ல. வீடியோ ஏரியாவிலும் வெற்றிமாறனாகதான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சென்னை 28 ல் தொடங்கி இவர் நடித்த எல்லா படங்களுமே கல்லாபெட்டிக்கு திருஷ்டி கழிக்கிற அளவுக்கு வசூலை வாரிக்குவித்த படங்கள்தான். (குவார்ட்டர்தான் கவிழ்த்துருச்சு) இதற்கெல்லாம் காரணம் சம்பந்தப்பட்ட படங்களின் டைரக்டர்தான் என்றாலும், சென்ட்டிமென்ட் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அந்த வகையிலும் சிவாவுக்கு சலாம் அடிக்க தயங்கவில்லை கோடம்பாக்கம்.


ஒரு படம் ஒடினாலே ஓவர் பேச்சு பேசும் நடிகர்களுக்கு மத்தியில் சிவா கேட்ட சம்பளம் சற்றே நெஞ்சடைப்பு சமாச்சாரம் என்றாலும், பொறுத்துக் கொள்ளவும் செய்தது அதே கோடம்பாக்கம். இந்த நிலையில்தான் தனது அடுத்த அஸ்திரத்தை ஏவ ஆரம்பித்திருக்கிறார் இவர்.


இவரே இயக்குனர் ஆகிவிட்டார் இப்போது. அதுவும் பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்கும் படத்தை இயக்குகிற அளவுக்கு. திரு திரு துறுதுறு போன்ற சுமார் படங்களை வழங்கிய சத்யம் சினிமாஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தைதான் சிவா இயக்கவிருக்கிறார். இதில் இவரே ஹீரோவாகவும் நடிக்கிறார்.


நாற்பது லட்சம் கொடு, ஐம்பது லட்சம் கொடு என்று ஊரையே மிரட்டி வந்த சிவா, இந்த படத்திற்கு வாங்கியிருக்கும் சம்பளம் வெறும் பத்து லட்சம்தானாம். நடிப்பு, இயக்கம் என்ற இருபெரும் சேவைகளுக்கும் சேர்த்தேதான் இந்த அமவுண்ட்!
Thanks to TamilCinema

Thiyagam 06-03-2012 | Sun Tv Thiyagam Serial 6th March 2012

Posted: 06 Mar 2012 12:34 AM PST


Thiyagam 06-03-12 | Sun Tv Thiyagam Serial 6th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 06-03-2012 | Sun Tv Muthaaram Serial 6th March 2012

Posted: 06 Mar 2012 01:19 AM PST


Mutharam 06-03-12 | Sun Tv Muthaaram Serial 6th March 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 06-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 6th March 2012

Posted: 05 Mar 2012 11:06 PM PST


Vellai Thamarai 06-03-12 | Sun Tv Vellai Thamarai Serial 6th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 06-03-2012 | Sun Tv Uravugal Serial 6th March 2012

Posted: 05 Mar 2012 10:57 PM PST


Uravugal 06-03-12 | Sun Tv Uravugal Serial 6th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 06-03-2012 | Sun Tv kasthuri Serial 6th March 2012

Posted: 05 Mar 2012 10:56 PM PST


Kasturi 06-03-12 | Sun Tv kasthuri Serial 6th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 06-03-2012 | Sun tv Marudhaani 6th March 2012

Posted: 05 Mar 2012 10:54 PM PST


Maruthani 06-03-12 | Sun tv Marudhaani 6th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Dailythanthi E-paper 06-03-2012 | Free Download Dinathanthi PDF today ePaper | Dinathanthi 6th March 2012

Posted: 05 Mar 2012 06:27 PM PST


Dailythanthi E-paper 06-03-2012 | Free Download Dinathanthi PDF today ePaper | Dinathanthi 6th March 2012

Download Link

Dinakaran E-paper 06-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 6th March 2012

Posted: 05 Mar 2012 06:35 PM PST


Dinakaran E-paper 06-03-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 6th March 2012

Download Links

கூடங்குளம் குறித்து "மூச்...!': அமைச்சரவை கூட்டத்தில் விவாதம் இல்லை - கவலைப்படவில்லை அரசு

Posted: 05 Mar 2012 01:21 PM PST


கூடங்குளம் குறித்து "மூச்...!': அமைச்சரவை கூட்டத்தில் விவாதம் இல்லை - கவலைப்படவில்லை அரசு
தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு, "கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது' என, தனது அறிக்கையை அளித்து ஒரு வாரமாகியும், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்காமல், தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. நேற்று, அவசர அவசரமாக நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும், கூடங்குளம் விவகாரம் பற்றி விவாதிக்கப்படவில்லை.மின் வெட்டு கடுமையாக நீடிக்கும் நிலையில், கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மின் வெட்டின் அவதி இன்னும் அதிகமாகும். தேர்தலில் தி.மு.க., தோல்வியடைவதற்கு, மின் வெட்டு பிரச்னையும், முக்கிய காரணமாக இருந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது, "தமிழகத்தில் மின் பற்றாக்குறையை போக்குவோம்' என்ற வாக்குறுதியை, அ.தி.மு.க., அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், மின் பற்றாக்குறையை போக்க, உடனடி தீர்வாக கூடங்குளம் அணு மின் நிலையம் தான் இருந்தது.ஆனால், அந்த அணு மின் நிலையத்தை மூட வேண்டுமென, சில தேச துரோக எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கடந்த ஜூலை மாதம் முதல், கூடங்குளம் மின் நிலையப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.கூடங்குளம் பகுதி மக்களின் அச்ச உணர்வு போக்கப்படும் வரை, அணு மின் நிலையப் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என, தமிழக அமைச்சரவை, தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசும் பணிகளை நிறுத்தியது; அதன் பின்பும் போராட்டங்கள் தொடர்ந்தன; அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்
  தமிழக அரசு எடுக்கவில்லை. கடந்த ஜனவரி மாத இறுதியில், மின் பற்றாக்குறை அதிகமாகி, மின் வெட்டும் அதிகமானதால், மக்கள் மத்தியில், அ.தி.மு.க., அரசு மீது கடும் அதிருப்தி ஏற்படத் துவங்கியது. தற்போதைக்கு, மின் பற்றாக்குறையை சமாளிக்க, வேறு உடனடித் திட்டங்கள் இல்லாததால், கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பு குறித்து ஆராய, நிபுணர் குழுவை தமிழக அரசே அமைத்தது.பிப்ரவரி மாத துவக்கத்தில் அமைக்கப்பட்ட இக்குழு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை நேரில் ஆய்வு செய்து, தங்களது அறிக்கையை முதல்வரிடம் கடந்த வாரம் அளித்தது. அந்த அறிக்கையில், அணு மின் நிலையம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அப்படியிருந்தும், அந்த அறிக்கை மீது முடிவு எடுக்காமல், போராட்டக்காரர்களை அழைத்து முதல்வர் பேசினார். அப்போது, அவர்கள் தரப்பில் ஒரு அறிக்கை அளிக்கப்பட்டது. அப்போதும் கூட, போராட்டக்காரர்களிடம், தமிழக அரசின் நிலை குறித்து எவ்வித கருத்தையும் முதல்வர் தெரிவிக்கவில்லை என, அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம், நேற்று அவசரமாக கூடியது. நிபுணர் குழு அறிக்கை அளித்து ஒரு வாரம் ஆவதால், அதுபற்றி இக்கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இக்கூட்டத்துக்காக, சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர்கள் அனைவரும், அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.-


மதுரையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்து, கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்னை பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை என, தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்பட்டது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடப்பதால், அதுவரை இவ்விஷயத்தில் மவுனம் காக்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் தொடர்பாக துறைவாரியாக மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழக அரசு தயாரித்து வரும், "தொலைநோக்குத் திட்டம் - 2025' தொடர்பாக, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கூடங்குளம் பகுதியை சுற்றியுள்ள சிலரும், போராட்டக்காரர்கள் சிலரும் என, தமிழகம் முழுவதும் சில ஆயிரம் பேர் தான், கூடங்குளம் திட்டத்துக்கு எதிராக உள்ளனர். சங்கரன்கோவில் தொகுதி மக்கள் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாகத் தான் உள்ளனர்.அப்படி இருந்தும், தமிழக அரசு இப்பிரச்னையில் எந்த முடிவும் எடுக்காமல், மூச்சு விடாமல்மவுனம் காப்பது, மின் வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தொழில் துறை, விவசாயத் துறை, பொதுமக்கள் என, அனைத்துத் தரப்பினரும், மின் வெட்டு பிரச்னையால் சிக்கித் தவிக்கும் நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக, அரசு தனது முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. தமிழக அரசின் இந்த மவுனத்தால், மின் வெட்டு நிலைமை இன்னும் மோசமாகும். ஏற்கனவே, பல சிறுதொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்குச் சென்று, கடன் வாங்கி தொழில் செய்வோரும், அவர்களிடம் பணிபுரிந்தோரும் நடுத்தெருவுக்கு வந்து, செய்வதறியாது, கடும் வெறுப்பிலும், கோபத்திலும், ஆத்திரத்திலும் உள்ளனர்; மின் வெட்டு மோசமாகும் சூழ்நிலையில், மக்களின் அவதியும், கோபமும் மேலும் அதிகமாகும் என்பது, 
நமது சிறப்பு நிருபர் -
Thanks to Dinamalar

Dinamalar E-paper 06-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 6th March 2012

Posted: 05 Mar 2012 01:12 PM PST


Dinamalar E-paper 06-03-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 6th March 2012

Download Links




Cinema Seithigal 05-03-2012 | Sun Tv Cinema News 5th March 2012

Posted: 05 Mar 2012 10:25 AM PST


Cinema Seithigal 05-03-12 | Sun Tv Cinema News 5th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kalloori Kachery 05-03-2012 | kalaignar Tv Shows Kalloori Kachery 5th March 2012

Posted: 05 Mar 2012 10:07 AM PST


Kalloori Kachery 05-03-2012 | kalaignar Tv Shows Kalloori Kachery 5th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Partha Niyabagam 05-03-2012 | kalaignar Tv Shows Partha Niyabagam 5th March 2012

Posted: 05 Mar 2012 10:06 AM PST


Partha Niyabagam 05-03-2012 | kalaignar Tv Shows Partha Niyabagam 5th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Surayaputhiri 05-03-2012 | kalaignar Tv Shows Surayaputhiri 5th March 2012

Posted: 05 Mar 2012 10:04 AM PST


Surayaputhiri 05-03-12 | kalaignar Tv Shows Surayaputhiri 5th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now