TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


திரிந்த பால் அலம்பல் நடிகையின் அலட்டல்- TechRenu

Posted: 05 Mar 2012 01:08 AM PST


                'அந்த மில்க் நடிகை சரசரனு மேல ஏறினா மாதிரி இருக்குல?நிறைய படங்கள்ல நடிக்கிறா மாதிரி ஒரு பிரமைய ஏற்படுத்தி இருக்காங்கல? பார்த்துகிட்டே இருங்க... ஏறின வேகத்துல மடமடனு அதலபாதாளத்துல அவங்க இறங்கலைனா என் பேரை நான் மாத்திக்கறேன்...' 


ஒருவரல்ல, இருவரல்ல... ஒட்டுமொத்த திரையுலகை சேர்ந்தவர்களும் அந்த நடிகையை பார்த்து இப்படித்தான் சவால் விடுகிறார்கள். 

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. வந்தாரை வாழ வைக்கும் பண்பு, தமிழர்களுக்கு உண்டுதான். மெல்ல மெல்ல உச்சாணிக்கு செல்லும் நடிகைகளின் கடந்தக் கால வாழ்க்கை குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளாமல், நிகழ்காலத்தில் அவர்கள் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்றுதான் அனைவருமே பார்க்கிறார்கள், கருத்தில் கொள்கிறார்கள்.

ஆனால், 'பால்' நடிகையின் விஷயத்தில் சொல்லி வைத்தது போல் அனைவருமே இதற்கு நேர் எதிராக இருக்கிறார்கள். இதற்கு காரணமும் அந்த மில்க் நடிகையின் நிகழ்கால நடவடிக்கைகள்தான். அதனாலேயே அவரது கடந்த காலத்தைப் பற்றி பேசி, எதிர்காலத்தை அளவிடுகிறார்கள்.

கேரளாதான் அந்த பால் நடிகையின் சொந்த ஊர். 'கலீஜா'ன தெருவில் ஒண்டுக் குடித்தனத்தில், ஒண்டுக் குடித்தனம். படிப்பு ஏறவுமில்லை; படிக்க வைக்க பணமும் இல்லை. அனைவருமே வேலைக்கு சென்றால்தான் கால் வயிற்று கஞ்சியாவது குடிக்க முடியும் என்ற நிலை. எனவே அந்தக் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் வேலைக்கு சென்றார்கள்.

பார்ப்பதற்கு பால் நடிகை சுமாராக இருப்பார். எனவே, சினிமாவுக்கு அவர் சென்றால், ஓரளவு பணம் கிடைக்கும் என குடும்பத்தினர் தீர்மானித்தார்கள். அதற்கு ஏற்ப, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக மலையாள திரையுலகில் மில்க் நடிகை காலடி எடுத்து வைத்தார். 'சி' கிரேட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இலுப்பைப் பூவையே சர்க்கரையாக நினைத்து 'அந்த' மாதிரி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழகத்தை சேர்ந்த கலை இயக்குநர் ஒருவருக்கு ஹீரோவாக நடிக்க சான்ஸ் கிடைத்தது. பூஜை போட்ட கையோடு தனது பட்ஜெட்டுக்கு சரிப்பட்டு வந்த பால் நடிகையை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். 'வீரமான' அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு பால் நடிகை தன் அம்மாவுடன், லொட லொட அரசாங்க பேருந்தில், அதுவும் தன் சொந்த செலவில் வந்து நடித்துக் கொடுத்தார். 

இதனையடுத்து, 'மாமனாரின் இன்ப வெறி' என்ற பொருளில் எழுதப்பட்ட கதையம்சமுள்ள சமவெளி படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதே நேரத்தில்தான் பறவையின் பெயர் கொண்ட அந்தப் படமும் தயாராகி வந்தது. இந்த இரு படங்களில் முதலில் சமவெளி திரையரங்குக்கு வந்தது. 

அந்தப் படத்தைப் பார்த்த பறவைப் பட இயக்குநர் அதிர்ந்து விட்டார். தனது படத்தில் பால் நடிகையை அவர் குடும்ப விளக்காக காண்பித்திருந்தார். இதற்கு நேர்மாறாக சமவெளி படத்தில் மாமனாருடன் தன் காமத்தை தணித்துக் கொள்ளும் புரட்சியை பால் நடிகை நிகழ்த்தியிருந்தார்.

நொந்துப் போன பறவை இயக்குநர், தனது பட ஆடியோ வெளியீட்டுக்கு மில்க் நடிகை வரக் கூடாது என உத்தரவு போட்டுவிட்டார். 

ஒருவழியாக பறவை படம் ரிலீசானது. வரலாறு காணாத வெற்றியையும் அப்படம் கண்டது. அவ்வளவுதான்... இந்த வெற்றிக்கு தனது 'அழகு'தான் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொண்ட அந்த மில்க் நடிகை, புகழ் போதை தலைக்கு ஏற, ஆட ஆரம்பித்து விட்டார்.

இன்றைய தினம் இவரது வழிமுறையே அலாதியானது. எந்தப் படத்தில் நடிக்கிறாரோ, அந்தப் படத்தின் ஹீரோ அல்லது டைரக்டர் அல்லது தயாரிப்பாளரை மயக்கி விடுவார். சொல்லவும் எழுதவும் கூசும் பலான எஸ்.எம்.எஸ்.ஸை தொடர்ந்து அனுப்பி அவர்களுக்கு கிளுகிளுப்பு மூட்டுவார்.

 'ஜொள்ளர்களைப்' போலவே மோனோ ஆக்டிங் செய்து அவர்களை கவிழ்ப்பார். அவ்வப்போது 'கம்பெனி'யும் கொடுப்பார். 

பிறகென்ன... இந்த மயக்கத்தைப் பயன்படுத்தி 5 நட்சத்திர விடுதியில் சூட், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் காபி, ஃப்ளைட் என்றால் பிசினஸ் சீட்... என புரொடியூசரை மொட்டை அடிப்பார். காலை 7 மணிக்கு கால்ஷீட் என்றால், 10 மணிக்கு ஸ்பாட்டுக்கு வருவது இவரது ஹாபி. எவரும் கேள்வி கேட்க முடியாது. காரணம், அப்படத்தின் முக்கியமான புள்ளியின் பிடி, இவரது கைக்குள். ஆனால், இவையனைத்தும் குறிப்பிட்ட அந்தப் படம் முடியும் வரைதான். அதன் பிறகு, கறிவேப்பிலையைப் போல் அவர்களை கிள்ளி எறிந்துவிட்டு, ஒப்பந்தமான இன்னொரு படத்தின் மையமான இளிச்சவாயனை மயக்க ஆரம்பிப்பார்.

இந்த பேட்டா, அந்த பேட்டா என தில்லுமுல்லு செய்து பணத்தை கறக்கும் இவர், தனது உதவியாளர்களுக்கு மட்டும் ஒழுங்காக சம்பளம் மட்டுமல்ல, பேட்டாவும் தருவதில்லை. 

மும்பையிலிருந்து ஹேர் டிரெஸ்ஸர், காஸ்ட்யூம் டிசைனர் என வரவழைத்து தயாரிப்பாளரின் தலையில் மிளகாய் அறைக்கும் இந்த பால்தான், ஒரு காலத்தில் 10 பேர் சீவிய அழுக்குச் சீப்பை கெஞ்சிக் கேட்டு வாங்கி, தன் தலைமுடியை பின்னிக் கொண்டவர். 

பிரபலமான பத்திரிகைகள் மற்றும் சேனல்களுக்கு மட்டுமே பேட்டி அளிப்பேன் என்று இன்று தொடை தட்டுபவர், ஒரு காலத்தில் தன்னைக் குறித்து நாலு வரியாவது எழுதும்படி ஊரிலுள்ள அனைத்து நிருபர்களையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவர்.

இவரது குணம் தெரிந்ததாலோ என்னவோ, எந்த மலையாள நடிகையும் இவருடன் நட்பு வைத்துக் கொள்ளவில்லை. எதையோ குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது தன் குணத்தைதான் காண்பிக்கும் என்பார்களே... அப்படித்தான் இவர் நடந்துக் கொள்வதாக வேதனைப்படுகிறார்கள். 

வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம், இந்தப் பால் நடிகை தான்.திருமதி பைலட்ஸ்

தொகுப்பு: வம்பு பையன்
(படத்தில் இருப்பவர் நடிகை ஷீனா. அவருக்கும் இந்த செய்திக்கும் தொடர்பு இல்லை)
Thanks to Kungumam

சோழி போடலாமா சோழி-TechRenu

Posted: 05 Mar 2012 01:01 AM PST


சோழி போடலாமா சோழி


             நடிகையை கவிழ்க்க, 'ரசிகர்' என்ற ஆயுதத்தையே அனைத்து இன, மொழிகளிலும் பயன்படுத்துகிறார்கள். அனன்யா விஷயத்தில் ஆஞ்சநேயன் இப்படி விளையாடியது நேற்றைய செய்தி என்றால், வித்யா பாலனிடம் வேறொரு தொழிலதிபர் 'சோழி போடலாமா சோழி' என களத்தில் இறங்கப் பார்த்தது இன்றைய நியூஸ்.

வித்யா பாலன் எந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும் சரி, உலகின் எந்த மூலையில் அது நடந்தாலும் சரி, அங்கு ஆஜராகி விடுவாராம் இந்த தொழிலதிபர். ஆட்டோகிராஃப் வாங்குவது, ஒன்றாக படம் எடுத்துக் கொள்வது, சிரிப்பது, பரிசு தருவது... என 'நட்பை' வளத்துக் கொண்ட பிறகு, ஒருநாள் திடீரென்று வித்யா பாலனின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டாராம்.

 திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொன்னாராம். நல்லவேளையாக சுதாரித்துக் கொண்ட வித்யா, அவரை செக்யூரிட்டியின் உதவியுடன் வெளியேற்றி விட்டாராம். 'இந்த தொழிலதிபர்ங்க தொல்ல தாங்க முடியலைப்பா...' என கவுண்டமணி சும்மாவா சொன்னார்?

Athipookal 05-03-2012 | Sun Tv Athipookal Serial 5th March 2012

Posted: 05 Mar 2012 01:14 AM PST


Athipookal 05-03-12 | Sun Tv Athipookal Serial 5th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 05-03-2012 | Sun Tv Elavarasi Serial 5th March 2012

Posted: 05 Mar 2012 12:23 AM PST


Ilavarasi 05-03-12 | Sun Tv Elavarasi Serial 5th March 2012
Updating..

This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 05-03-2012 | Sun Tv Thiyagam Serial 5th March 2012

Posted: 04 Mar 2012 11:57 PM PST


Thiyagam 05-03-12 | Sun Tv Thiyagam Serial 5th March 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

தண்ணீரில் விழுந்த செல்போனை காப்பாற்றுவது எப்படி?

Posted: 04 Mar 2012 11:55 PM PST


தண்ணீரில் விழுந்த செல்போனை காப்பாற்றுவது எப்படி?- TechRenu
செல்போன் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விலையுயர்ந்ததோ அல்லத்து மலிவானதோ செல்போன் என்பது அதன் உரிமையாளருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஏன்? சிலருக்கு ஆறாம் விரல் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு செல்போன் முக்கியமானதாகியுள்ளது. செல்போன் கீழே விழுந்தாலோ, மறந்து எங்காவது வைத்து விட்டாலோ, அவ்வளவு தான் துடித்து போய்விடுவோம் அல்லவா?. அப்படி இருக்க, நீரில் விழுந்த செல்போன்கள் செயலிழப்பது என்பது பொதுவான மற்றும் முக்கியமான ஒன்று. இங்கே நாம் எப்படி நீரில் விழுந்து நனைந்த செல்போனைக் காப்பாற்றுவது என்பதை இங்கே பார்ப்போம்


1. முதலில், உங்கள் செல்போன் நீரில் விழுந்தால் அதை எவ்வளவு சீக்கிரம் வெளியே எடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வெளியே எடுங்கள். அவ்வாறு நீங்கள் எடுக்க தவறினால், நீர் உங்கள் செல்போன் உள்ளே உள்ள அனைத்து பாகங்களையும் அடைந்து நாசமாக்கிவிடும்.


2. இரண்டாவதாக, உங்கள் செல்போனில் உள்ள சிறிய ஸ்குரு (Screw)களை திறந்து உள்ளே நீர் சென்றுள்ளதா?, இல்லையா? என காண முயற்சி செய்யாதீர்கள்.


3. அடுத்து உங்கள் செல்போனை நீரிலிருந்து எடுத்த உடனே, கைபேசியிலிருந்து அதன் பேட்டரி (Battery) யை பிரித்து வைப்பது நல்லது. பெரும்பாலும் இதை யாரும் செய்வதில்லை . இதனாலேயே நீரில் விழுந்த செல்போன்கள் செயலிழக்கின்றன. உங்கள் செல்போனிற்குள் உள்ள பாகங்கள் நீரில் நனைந்திருந்தால் பேட்டரியில் இருந்து வரும் பவர் (Power) அவற்றை செயலிழக்கச் செய்கின்றன. எனவே நீரில் விழுந்த செல்போனிலிருந்து அதன் பேட்டரியை பிரித்து வைப்பது முக்கியமான ஒன்று.


4. முக்கியமாக, உங்கள் செல்போனை நீரிலிருந்து எடுத்த ஒரு சில வினாடிகளில், அதை உலர்த்த செய்வது அவசியம். உலர்ந்த துணிகளைக் கொண்டு உங்கள் கைபேசியை உலர்த்தலாம்.


குறிப்பு:- இவை அனைத்தையும் வெகு விரைவில் செய்து முடிபது மிகவும் அவசியம்.
Thanks to TamilNews


போர் ஆரம்பித்தால் 2 நாட்களுக்குத் தேவையான வெடி பொருட்கள் கூட ராணுவத்திடம் இல்லை!

Posted: 04 Mar 2012 11:53 PM PST


போர் ஆரம்பித்தால் 2 நாட்களுக்குத் தேவையான வெடி பொருட்கள் கூட ராணுவத்திடம் இல்லை!

டெல்லி: இந்திய ராணுவத்திடம் போதிய அளவு வெடி பொருட்கள் (ammunition) இல்லை என்றும், போர் ஆரம்பித்தால் 2 நாட்களில் எல்லா வெடி பொருட்களும் தீர்ந்துவிடும் அபாயகரமான நிலைமை நிலவுவதாகவும் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனிக்கு பரபரப்புக் கடிதம் எழுதியுள்ளார்.


மேலும் பீரங்கிப் படைகளிடமும் (artillery), விமான எதிர்ப்புப் படையினரிடமும் கூட போதிய அளவு குண்டுகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


ராணுவத்திற்குத் தேவையான சப்ளைகள் தொடர்பாக மத்திய அரசும், பாதுகாப்பு அமைச்சகமும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்காததும், பல முக்கிய சப்ளை நிறுவனங்களுக்கு தடை போட்டதும் தான் இந்த நிலைமைக்குக் காரணம் என்றும் வி.கே.சிங் கூறியுள்ளார்.


வயது பிரச்சனை காரணமாக மத்திய அரசுக்கும் வி.கே.சிங்குக்கும் மோதல் நடந்து வந்த நிலையில் கடந்த மாதம் ஆண்டனிக்கு சிங் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.


டெல்லியில் விவிஐபிக்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்தாக சிங் மீது புகார்கள் கிளம்பி அதை ஐபி விசாரித்து வரும் அதே நேரத்தில், இந்த ஆயுத பற்றாக்குறை விவகார கடிதம் வெளியே கசிந்துள்ளது.


அவர் ஆயுத பற்றாக்குறை விவகாரத்தை கிளப்பியதும் அவர் மீது ஒட்டுக் கேட்பு புகார் எழுப்பபட்டதா அல்லது அவர் மீது ஒட்டுக் கேட்பு புகார் எழுந்ததும் ஆயுத பற்றாக்குறை புகார் தொடர்பாக ஆண்டனிக்கு எழுதிய. கடிதத்தை சிங் தரப்பு பத்திரிக்கைகளுக்கு லீக் செய்ததா என்பது தெரியவில்லை. இரு விவகாரங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெடித்துள்ளன.


ஆண்டனிக்கு வி.கே.சிங் அனுப்பியுள்ள கடிதத்தில், சில முக்கிய வெடி பொருள் கொள்முதல்கள் தொடர்பாக பைல்களை பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 5 ஆண்டுகளாக அடை காத்து வருகிறது. அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.


ராணுவத்தில் சைபர் பட்டாலியன் எனப்படும் அதிநவீன தொழில்நுட்ப படைப் பிரிவை உருவாக்க அனுமதி கேட்டு அனுப்பப்பட்ட கோப்புகளுக்கும் கடந்த 2 வருடங்களாக பதில் இல்லை. தனியார் ஐடி துறையைச் சேர்ந்த மிகச் சிறந்த மூளைகளை ராணுவத்துக்கு இழுக்கும் திட்டத்துடன் இந்தப் பிரிவை உருவாக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.


National Counter Insurgency School (NCIS) என்ற தீவிரவாதிகள், நஸ்கல்கள் தாக்குதல்களை முறியடிக்க என தனிப் பயிற்சிப் பள்ளியை உருவாக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நக்ஸல்கள் பாதித்த பகுதிகளில் நிலம் கூட ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்தப் பள்ளியை உருவாக்கவோ, அதில் பாரா மிலிட்டரிப் படையினருக்கு பயிற்சி அளிக்கவோ தேவையான ஒப்புதல்களைக் கேட்டு 2 வருடமாக காத்திருந்தும் பயனில்லை. ஏ.கே.ஆண்டனி எந்த முடிவும் 
எடுக்கவில்லை.


இந்திய ராணுவத்தின் மிக முக்கிய ஆயுதம் T-72 டேங்குகள். இந்த டேங்குகளின் பேரல்களை மாற்ற ராணுவம் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. முதலில் இதை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த பேரல்கள் எல்லாம் வெடித்துச் சிதறிவிட்டன. இதனால் வெளிநாட்டிலிருந்து அதை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இது தொடர்பான ஒப்புதலை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால் இந்த டேங்குகளின் செயல்திறன் மிக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.


இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜூன் டேங்குகளில் ஏராளமான தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளன. ஆனால், இதை வாங்கிக் குவிக்குமாறு ராணுவத்தை மத்திய அரசு நிர்பந்தம் செய்து வருகிறது.


இவ்வாறு ராணுவம் சந்தித்து வரும் பல பிரச்சனைகளை பட்டியலிட்டு ஆண்டனிக்குக் கடிதம் எழுதியுள்ள வி.கே.சிங், ஒரு மிக கவலைக்கிடமான விஷயத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.


ஒருவேளை பாகிஸ்தானுடன் போர் ஆரம்பித்தால், இரண்டே நாட்களில் நமது எல்லா வெடி பொருளும் காலியாகிவிடும். அந்த அளவுக்குத் தான் ரிசர்வ் வெடி பொருட்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.


பின் குறிப்பு: 2012ம் ஆண்டுக்கான சீனாவின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 11.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டில் மட்டும் சீனா தனது ராணுவத்துக்காக 106.4 பில்லியன் டாலர்களை (ஒரு பில்லியன் டாலர் என்பது சுமார் 4,700 கோடி ரூபாய்) செலவிட உள்ளது.
Thanks to OneIndia

நயன்தாராவே கிளப்பி விட்ட புயல்-ஒன் டூ த்ரி பரிதாப லிஸ்ட்

Posted: 04 Mar 2012 11:49 PM PST


நயன்தாராவே கிளப்பி விட்ட புயல்-ஒன் டூ த்ரி பரிதாப லிஸ்ட்
காவலாளி இல்லாத தோட்டமாகிவிட்டது நயன்தாராவின் நிலைமை. வேணும்னா ஆறுதலுக்கு நான் வரவா? என்கிறார்களாம் கோலிவுட் மற்றும் டோலிவுட் ஹீரோக்கள் பலர். இதில் பாதி பேர் கொழுத்த குடும்பஸ்தர்கள் என்பதுதான் பரிதாபம் நம்பர் ஒன்று.


அப்படியே பரிதாபம் நம்பர் ரெண்டு என்னவென்று பார்த்தால் அது இன்னும் ஷாக். கதறி அழும்போது ஒரு கர்சீப்பை நீட்டினாலோ, சுட்டு விரல் கொண்டு துடைத்தாலோ அவர் மீது ஒரு அட்ராக்ஷன் வருமல்லவா? அது வந்து தொலைத்திருக்கிறதாம் நயன்தாராவுக்கு. அதுவும் யார் மீது?


தனது மேக்கப்மேன் மீது! பொதுவாகவே நடிகைகள் தன்னுடைய மேக்கப், காஸ்ட்யூமர்களிடம் ரொம்ப நெருக்கமாக இருப்பார்கள். நடிகை பற்றி உலகத்துக்கே தெரியாத பல ரகசியங்கள் இவர்களுக்கு அத்துப்படியாக இருக்கும். தன்னிடமிருந்து வேலையை விட்டு போனால் கூட இவர்களிடம் நட்பு பாராட்டுவதுடன் செமத்தியாக துட்டும் கொடுத்து வைத்துக் கொள்வார்கள் நடிகைகள். கோடம்பாக்கத்தில் காலகாலமாக நடந்து வரும் இந்த சங்கதிதான் இன்னும் ஒரு ஸ்டெப் மேலேறி காதலாகிவிட்டது என்கிறார்கள்.


இல்லையில்லை, கொடி தவழுதேன்னு தெரிஞ்சா ஆளாளுக்கு கொம்பு நடுவார்கள் என்பதால் அவரே கிளப்பிவிட்ட வதந்திதான் இது என்றும் கூறுகிறார்கள்.


ஆக நயன்தாராவை சுற்றி அடுத்த புயல்...!
Thanks to TamilCinema

ஓட்டலில் நடந்தது என்ன? கொக்கரிக்கும் ப்ரியாமணி

Posted: 04 Mar 2012 11:47 PM PST


ஓட்டலில் நடந்தது என்ன? கொக்கரிக்கும் ப்ரியாமணி

குங்குமச் சிவப்பாகியிருக்கிறார் ப்ரியாமணி. இது வெட்கத்தால் வந்த பூரிப்பல்ல, கோபத்தால் வந்த கொக்கரிப்பு. தெலுங்கு, மலையாளம் என்று அந்தப்பக்கமாகவே சுற்றிக் கொண்டிருக்கும் ப்ரியாமணிக்கு சென்னையில் சூறாவளியாக சுற்றிக் கொண்டிருக்கும் 'அந்த விஷயத்தை' பற்றி காதில் விழவேயில்லை போலிருக்கிறது.


நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நாலு இளைஞர்களிடம் அவர் சிக்கிக் கொண்டார் என்று வெளியான தல்லவா? அதைப்பற்றிய குமுறல்தான் இது! சிரமப்பட்டு அந்த வம்பளப்பை ப்ரியாமணியின் காதில் போட்டு விட்டது குங்குமம் வார இதழ். அவர்களிடம்தான் பொறிந்து தள்ளி யிருக்கிறார் ப்ரியாமணி. என்னவென்று?


இல்லாத விஷயத்தை இருப்பது போல எழுதிய அந்த நிருபரோட போன் நம்பரை மட்டும் கொடுங்க. மற்றதை நான் பேச வேண்டிய விதத்தில் பேசிக்கிறேன். ஒரு நடிகைன்னா என்ன வேணா எழுதலாமா? நான் சென்னைக்கு வந்தே பல நாளாச்சு. ஐதராபாத்ல ஃபைனல்ஸ் மேட்ச் முடிச்ச மறுநாளே நான் கொச்சிக்கு வந்துட்டேன். என்னோட சிஸ்டர் ஃபேமிலி இங்க இருக்கு. அவங்களோடதான் நான் இருந்தேன். உண்மை இதுதான். நான் சென்னைக்கு வரவும் இல்ல. எந்த பார்ட்டியிலும் கலந்துக்கவும் இல்ல.


ப்ரியாமணியின் இந்த பதில் ஒரு மாபெரும் சர்ச்சைக்கு முடிவு கட்டியிருக்கிறதா, அல்லது மர்மத்தை கிளற வைக்கிறதா? எது எப்படியோ, தேவையில்லாத இடத்தில் மூக்கை நுழைப்பவர்களுக்கு மூக்கு பத்திரம் என்று எச்சரித்திருக்கிறார் ப்ரியாமணி.


ரொம்ப சில்லியான மேட்டர் அது
Thanks to TamilCinema

வாராவாரம் வுமன்ஸ் டே! பப்களை நிரப்பும் பகீர் கலாசாரம்

Posted: 04 Mar 2012 11:44 PM PST

                ''இன்னிக்கு இந்த ஹோட்டல் பப்ல வுமன்ஸ் டே! போலாமா மச்சி?'' - சாலையோரத்தில் டூ வீலர்களையே குட்டிச் சுவராக்கி அமர்ந்திருந்த ஓர் இளைஞர் கூட்டத்தில்தான் இப்படியொரு குரல் கேட்டது. 'மார்ச் எட்டுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கே... அதுக்குள்ள என்ன கொண்டாட்டம். அதுவும் பசங்களுக்கு?' என்று சந்தேகித்த நம் அவுட் டேட்டட் மனம், அதை அக்கறையாய் விசாரித்தது.
''அய்யே... எந்தக் காலத்துல இருக்கீங்க? இப்பல்லாம் சென்னையில நிறைய ஸ்டார் ஹோட்டல் பப்கள்ல வாரத்துல ஒரு நாள் வுமன்ஸ் டே. அன்னைக்கு பப்ல நெறைய பொண்ணுங்க வருவாங்க. நாம யாராவது பொண்ணுங்களை கூட்டிட்டுப் போனாலும் அவங்களுக்கு ட்ரிங்க்ஸ் ஃப்ரீ'' என்று அடுக்கிக் கொண்டே போனவர்கள், ''வேணும்னா நீங்களும் வாங்களேன்'' என்று அழைத்துப் போனார்கள்...

சென்னையின் பிஸியான சாலையை ஒட்டி இருந்த அந்த ஹோட்டலின் வரவேற்பறை அலங்கார விளக்குகளால் ஜொலிக்கிறது. அதன் ஒவ்வொரு அங்குலத்திலும் பணக்கார வாசனை. காலியாக இருக்கும் ஒவ்வொரு இருக்கையும் யாருக்காகவோ காத்திருக்கிறது. காத்திருந்தவர்களின் கண்கள் எல்லாம் யாரையோ தேடிக்கொண்டிருந்தன.

இரவு எட்டு மணிவாக்கில் யூத் கூட்டம் வர ஆரம்பிக்கிறது. பப் உள்ளே அனுமதிக்க நிபந்தனைகள் உண்டு. கட்டாயம் ஷூ... பர்ஸ் நிறைய பணம். பிசினஸ் புள்ளிகள், சாஃப்ட்வேர் பார்ட்டிகள், காலேஜ் மாணவர்கள் என வரும் ஜோடிகளைப் பார்த்தே தரம் பிரித்து நம் மனசு கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. கூட்டத்தோடு மிங்கிளாகி நடந்தோம். அங்கே ஒரு செக் போஸ்ட். இரண்டு கோட் சூட் ஆசாமிகள், நமது பெயர், செல்போன் எண் கேட்டு பதிவு செய்தார்கள்.

''வெல்கம் அண்ட் என்ஜாய் ஸார்'' என்றபடி கதவு திறக்கப்பட, புரியாத ஆங்கிலத்தில் காதைக் கிழித்த பாடலுக்கு ஏற்ப கூட்டம் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அரையிருட்டில் பல வடிவங்களில் வெளிச்சக் கீற்றுகள் அரங்கம் முழுவதும் மின்னல் வேகத்தில் வட்டமடிக்கின்றன. 

இரண்டு முதல் நான்கு பேர் வரை அமரும் விதமாக டேபிள்கள். மங்கிய வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகள். ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான உற்சாக பானங்கள். அதற்கு எதிரே அமர்ந்து குடிக்க ஆறேழு உயர்ந்த ஸ்டூல்கள். ஒரு மூலையில் மேடை போட்டு மியூசிக் ப்ளே செய்யும் டிஸ்கோ ஜாக்கி இளைஞர்கள். உள்ளே வரும் பெண்களில் சிலர் நேரே அந்த டி.ஜேக்களுக்கு முத்தமிட்டுச் செல்வதை பார்க்க முடிகிறது. ஆண்கள் கூட்டத்தில் இரண்டு கரை வேட்டிகளும் அடக்கம்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

    ''இங்க ஒரு பீர் 250 ரூபா. வெளியில 80தான். ஆனா, இங்க கிடைக்கிற மாதிரி ஃபிகர்கள் கிடைக்காதே!'' என்றபடி நம்மை அழைத்து வந்த இளைஞர்கள் பாட்டிலும் பாட்டிலிலும் ஐக்கியமாக, நாம் ஒரு டேபிள் ஆசாமியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

''பாஸ், நான் ஒரு ஐ.டி. கம்பெனில டீம் லீடர். இந்த பப்ல 25 ஆயிரம் கட்டி மெம்பரா இருக்கேன். கிட்டத்தட்ட டெய்லி வருவேன். நைட் 9 மணிக்கு வந்தேன்னா பதினோரு மணி வரைக்கும் ஜாலிதான். டென்ஷனெல்லாம் பறந்துடும். நிறைய ஃப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க'' என்றவர், சிகரெட்டோடு அருகில் இருந்த கண்ணாடி அறைக்குள் சென்றார். 

அது சிகரெட் புகைக்கவே உள்ள பிரத்யேக அறையாம். ''அதுக்கு மட்டுமில்ல சார்... அதுக்குள்ள போய் நின்னா இங்க பார்ட்டியில என்ன நடக்குது, எந்தப் பொண்ணு ஃப்ரீயா எல்லார் கூடவும் ஆடுறாள்னு தெளிவா பார்க்கலாம். அத வச்சு ஒரு முடிவுக்கு வந்து டிரை பண்ணோம்னா ஃபிகர் ஈஸியா மடியும். அதுக்கப்புறம் தேவைப்படற சில ஏற்பாடுகளைப் பண்ணித் தர்ற பப்களும் இங்க இருக்கு'' என்று நமக்கு ஞானோபதேசம் தந்த டேவிட், ஓ.எம்.ஆரில் உள்ள கல்லூரியொன்றில் எஞ்சினியரிங் மாணவர்.

''அங்க ஆடறாளே... அவ பேரு ஜாஸ். கோபி பக்கத்துல அவங்க அப்பா பெரிய விவசாயி. வாரத்துல ரெண்டு நாள் அவ கூட இங்க வருவேன். அவ கூட ஆடறது என் கிளாஸ்மேட். திருச்சி பையன். எவ்ளோ ஜாலியா ஆடறான் பாருங்க. வாழ்க்கைய இப்படித்தான் கொண்டாடணும்'' என்ற டேவிட், அருண் என்பவரை அறிமுகப்படுத்தினார்.

டேவிட்டுக்கு சீனியர் மாணவர் அருண். அப்பா தொழிலதிபர். தன்னுடன் படிக்கும் பெண்களை அழைத்து வந்து இங்கு சீனியர்களுக்கும் நண்பர்களுக்கும் கோர்த்து விடுவதுதான் அவர் வேலை.

'என்னடா நடக்குது இங்க?' என்ற ஆதங்க தொனி, நம் முகரை எங்கும் கறையாகப் படிந்திருக்க, அதைக் கண்டு தோளில் கை போட்டு சியர் அப் சொன்னார் அருண். 



''சிட்டியில கிட்டத்தட்ட 20 பப் இருக்கு. இங்கல்லாம் குடிக்கவும் டான்ஸ் ஆடவும் வீக் எண்ட்ல கூட்டம் அலைமோதும். ஆனா திங்கள் கிழமையி லேருந்து வியாழக் கிழமை வரைக்கும் நிறைய பப்ல ஈ ஓட்டுவாங்க. குறிப்பா பொண்ணுங்க எண்ணிக்கை சுத்தமா டவுன் ஆயிடும். பொண்ணுங்க இல்லேன்னா பசங்களும் வர மாட்டாங்க. இதை சரிக் கட்டத்தான் இந்த வுமன்ஸ் டே! ஆடித் தள்ளுபடி, சம்மர் டிஸ்கவுன்ட் மாதிரி இது ஹோட்டல்ஸ் பண்ற ஒரு வியாபாரத் தந்திரம். ஒவ்வொரு பப்லயும் வாரம் ஒருநாள் வுமன்ஸ் டே! அன்னிக்கு பொண்ணுங்களுக்கு என்ட்ரி ஃப்ரீ. வோட்கா, ஜின்... இப்படி ஏதாவது வெல்கம் டிரிங்க்கும் ஃப்ரீ. இதனால பொண்ணுங்க வர்றாங்க. பொண்ணுங்களுக்காக நாங்க வர்றோம். தன் கூடவே பசங்களைக் கூட்டிட்டு வர்ற பொண்ணுங்களுக்கு டிஸ்கவுன்ட் இன்னும் ஜாஸ்தியாகும். பொண்ணுங்களுக்கு டிஸ்கவுன்ட் கொடுக்குற காசை நம்ம கிட்ட தீட்டிருவாங்க. ஆனா, பரவாயில்ல... ஃபிகரு ஓகே ஆயிடுச்சுன்னா இதெல்லாம் ஒரு செலவா? மொத்தத்துல இதுல எல்லாருக்கும் லாபம்!'' என்று கணக்குப் போட்டுக் காண்பித்தார் அருண். 


கண்கள் எரியும் அளவுக்கு அறையெங்கும் அவ்வளவு புகை. ஆண்களோடு பெண்களும் போட்டி போட்டு அநாயாசமாக ஊதித் தள்ளு
கிறார்கள். இப்படிப்பட்ட இடங்களில் இலவசமாக 'ஊற்றிக் கொடுப்பதாலேயே' குடிக்கப் பழகிக் கொண்ட இளம் பெண்களும் எக்கச்சக்கமாம்.
Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
நேரம் கரைந்து பதினோரு மணியைத் தொட்டபோது யாரும் நாற்காலியில் இல்லை. கோப்பையை பற்றியிருந்தவர்களின் கைகள் இப்போது ஜோடியின் இடுப்பை வளைத்திருந்தன. இசை உச்சபட்ச டெஸிபலில் அலற, ஜோடிகளின் ஆட்டத்திலும் தறிகெட்ட வேகம் கூடியிருந்தது. 

பிசினஸ்மேன்களுக்கு இது ரிலாக்ஸ். ஐடி வேலையில் உள்ளவர்களுக்கு ஜஸ்ட் ஃபன். சின்னத்திரை, சினிமா பிரபலங்கள் சிலர் இந்த மாதிரியான இடங்களில்தான் தங்களுக்கான தொடர்புகளை பலப்படுத்தி வாய்ப்புகளை வசமாக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இதில் ஆதாயம் இருக்கிறது. ஆனால், பெண்களுக்கு?

பாய் ஃபிரண்ட் கூப்பிட்டான் என்று இங்கு வரும் பெண்களில் பலர் மிடில் கிளாஸ்தான். வெளியூர்களிலிருந்து படிக்கவோ, வேலை பார்க்கவோ வந்திருப்பவர்கள். முதல்முறை தயக்கத்தோடு உள்ளே நுழைந்து, எல்லாவற்றையும் மிரட்சியோடு பார்ப்பவர்கள்... அப்புறம் 'எல்லாவற்றுக்குமே' பழகி விடுகிறார்கள். வுமன்ஸ் டே, இலவசம், தள்ளுபடி என என்னென்னவோ ஆசை காட்டி, கொஞ்சமும் பொருந்தாத ஒரு கலாசாரத்துக்குள் அவர்களை இழுத்து சீரழித்துக் கொண்டிருக்கின்றன இந்த பார்ட்டிகள்.

சமையலறையில் சிறைபட்டிருந்த பெண்கள் வீறுகொண்டு எழுந்து சரித்திரம் படைக்க உத்வேகம் தந்தது 'பெண்கள் தினம்'. இன்று இப்படிப்பட்ட போதைகளுக்கு அந்தப் பெயரே ஊறுகாய் ஆக்கப்பட்டிருப்பதுதான் உச்சபட்ச அவலம்! 

- எஸ்.ஆர்.செந்தில்குமார்
Thanks to Kumudam

டில்லியில் உருவாகும் இன்டர்நெட் உளவு மையம்!

Posted: 04 Mar 2012 11:36 PM PST


டில்லியில் உருவாகும் இன்டர்நெட் உளவு மையம்!
இந்திய உளவுத்துறைகள், ராணுவம், மற்றும் உட்துறை அமைச்சு அதிகாரிகளின் சமீபத்தைய கூட்டத்தின் பின், இன்டர் நெட் நடவடிக்கைகளை உளவு பார்க்கும் மையம் ஒன்றை திறக்கும் திட்டத்துக்கு கிரீன் சிக்னல் வழங்கியுள்ளது மத்திய அரசு. National Cyber Coordination Centre (NCCC) என்ற பெயரில் இயங்கவுள்ள இந்த மையம், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடக்கூடிய நடவடிக்கைகளை உளவு பார்க்க திட்டமிட்டுள்ளது.


இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடும் தீவிரவாத அமைப்புகள் இன்டர் நெட் மூலம் தமது தொலைத் தொடர்புகளை வைத்துக் கொள்வது சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. அதை இந்த மையம் மானிட்டர் பண்ணவுள்ளது.


அத்துடன், இந்தியாவுக்குள் வந்துபோகும் ஆட்கள் பற்றிய லைவ் மூவ்மென்டுகளிலும், இந்த மையம் கண் வைத்திருக்கப் போகின்றது.


பெயர் வெளியிட விரும்பாத மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், "தீவிரவாதத் திட்டங்களுடன் இந்தியாவுக்குள் அனுப்பப்படும் பலரும், இன்டர்நெட்டையே தமது தொடர்பு சாதனமான பயன்படுத்துகின்றனர். போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவது அதிகமாகியுள்ள நிலையில், இது பாதுகாப்பானது என்பதை அவர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். புதிதாக அமைக்கப்படவுள்ள மையத்தில் இந்தத் தொடர்புகளை இடைமறித்து அறியும் வசதிகள் இருக்கும்" என்றார்.


அமெரிக்கா கடந்த சில வருடங்களாகவே டெக்ஸாஸ் மாநிலத்தில் இப்படியான மையம் ஒன்றை இயக்கி வருகிறது. பிரிட்டன், லீட்ஸ்-பிராட்ஃபர்ட் பகுதியில் இப்படியான மையம் ஒன்றை இயக்குவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் உண்டு.
 Thanks to ViruVirupu

காதலன் தற்கொலை : நடிகை அல்போன்சா தற்கொலை முயற்சி

Posted: 04 Mar 2012 11:25 PM PST


காதலன் தற்கொலை : நடிகை அல்போன்சா தற்கொலை முயற்சி
பாட்சா படத்தில் 'ரா ரா ராமையா',  தில் படத்தில் 'மச்சான் மீசை வீச்சறுவா' உள்பட ஏராளமான பாடல்கள் நடித்திருப்பவர்  நடிகை அல்போன்சா. இவர் விருகம்பாக்கம், ஆற்காடு ரோட்டில் உள்ள சியாமளா கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்.இதேவீட்டில் கல்பாக்கம் புதுப்பட்டனத்தை சேர்ந்த வினோத்குமார் என்ற வாலிபரும் தங்கி இருந்தார். இவர் சினிமாவில் டான்சராக பணியாற்றினார். ஒரு படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. அல்போன்சாவும், வினோத்குமாரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். எனவே இருவரும் ஒரே வீட்டில் குடியிருந்தனர். நேற்று இரவு சாப்பிட்டு முடித்ததும் வினோத்குமார் படுக்கை அறைக்கு சென்றார். சில நிமிடங்கள் கழித்து அந்த அறைக்குள் அல்போன்சா சென்றபோது வினோத்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.
உடனடியாக பக்கத்து வீட்டில் இருந்த டாக்டரை அழைத்தனர். அவர் பரிசோதித்தபோது வினோத்குமார் இறந்து போனது தெரியவந்தது. 
இதையடுத்து குடியிருப்பின் காவலாளி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதனால் நள்ளிரவில் விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

அல்போன்சாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அல்போன்சா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், கணவரை பிரிந்து வாழ்கிறார் என்றும் கூறப்படுகிறது. 
அல்போன்சாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வினோத்குமார் அடிக்கடி வற்புறுத்தி வந்தாராம். ஆனால் திருமணத்துக்கு அல்போன்சா சம்மதிக்கவில்லை. இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. 

வினோத்குமார் தற்கொலை செய்தது குறித்து போலீசாரிடம் அல்போன்சா அளித்த வாக்குமூலத்தில்,''நானும், வினோத்குமாரும் ஒரு வருடமாக காதலித்தோம். தன்னை திருமமணம் செய்து கொள்ளும்படி வினோத்குமார் வற்புறுத்தி வந்தார். நானும் சரி என்றேன். எனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவரை முறைப்படி விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்றேன். இந்த நிலையில் நேற்று இரவு வினோத்குமாருக்கு அவரது வீட்டில் இருந்து போன் வந்தது. அவருக்கு உறவில் பெண் ஒருவரை பார்த்து இருப்பதாகவும் அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் போனில் வற்புறுத்தினர். இதனை என்னிடம் சொல்லி அழுதார். நான் தைரியம் சொன்னேன். பிறகு திடீரென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்'' என்று இந்த நிலையில் வினோத்குமார் தந்தை பாண்டியன் மற்றும் உறவினர்கள் இன்று காலை அல்போன்சா வீட்டில் திரண்டார்கள். வினோத்குமார் உடலை பார்த்து கதறி அழுதனர். 

என் மகனை அடித்து கொன்று விட்டீர்களே என்று அல்போன்சாவை பாண்டியன் அடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் தடுத்தனர். இதனால் மனம் உடைந்த அல்போன்சா வீட்டுக்குள் சென்று தூக்க மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Thanks to Nakkheeran

Mutharam 05-03-2012 | Sun Tv Muthaaram Serial 5th March 2012

Posted: 04 Mar 2012 11:27 PM PST


Mutharam 05-03-12 | Sun Tv Muthaaram Serial 5th March 2012
Updating...

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 05-03-2012 | Sun Tv Vellai Thamarai Serial 5th March 2012

Posted: 04 Mar 2012 11:08 PM PST


Vellai Thamarai 05-03-12 | Sun Tv Vellai Thamarai Serial 5th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 05-03-2012 | Sun Tv Uravugal Serial 5th March 2012

Posted: 04 Mar 2012 11:07 PM PST


Uravugal 05-03-12 | Sun Tv Uravugal Serial 5th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 05-03-2012 | Sun Tv kasthuri Serial 5th March 2012

Posted: 04 Mar 2012 10:56 PM PST


Kasturi 05-03-12 | Sun Tv kasthuri Serial 5th March 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 05-03-2012 | Sun tv Marudhaani 5th March 2012

Posted: 04 Mar 2012 11:06 PM PST


Maruthani 05-03-12 | Sun tv Marudhaani 5th March 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Deepam tv Shows Asatha Povathu Yaru 4th march 2012

Posted: 04 Mar 2012 10:54 PM PST


Deepam tv Shows Asatha Povathu Yaru 4th march 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

12 இடம் வேண்டாம் என்றுவிட்டு 1 இடத்திற்காக அலைகிறார் வைகோ : நடிகர் செந்தில் தாக்கு

Posted: 04 Mar 2012 08:24 PM PST


12 இடம் வேண்டாம் என்றுவிட்டு 1 இடத்திற்காக அலைகிறார் வைகோ : நடிகர் செந்தில்  தாக்கு
சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை குயிலி, நகைச்சுவை நடிகர் செந்தில் ஆகியோர் நேற்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.


சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்விக்கு ஆதரவு கேட்டு இளையரசனேந்தல் பிர்கா பகுதியில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை வாக்குகள் சேகரித்தார்.


அப்போது அவருடன் சினிமா நடிகர்கள் செந்தில், ஜெய சூரியகாந்த், நடிகை குயிலி, சினிமா படத்தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், டைரக்டர் லியாகத் அலிகான் ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


கிராமங்களுக்கு மினி லோடு ஆட்டோவில் வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் ஓட்டுகள் சேகரித்தனர்.


பிரச்சாரத்தின் போது நடிகர் செந்தில்,  ''தி.மு.க. ஆட்சி செய்தபோது மக்களை பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்களாகிய நீங்கள் தான் குடும்பம். எப்போதும் உங்களுக்கு நன்மைகள் செய்யும் நோக்கத்துடன் இருப்பார்.


முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது.

அப்போது மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக் கப்பட்டது. அதன்பிறகு வந்த தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டினால் தான் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள மின்வெட்டு பிரச்சினையை முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் தீர்த்து வைப்பார்.


தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை உள்பட அனைத்து துறைகளிலும் கடனாக்கி சென்று விட்டனர். டெல்லியில் சோனியா காந்தியைத்தான் நம்பி தி.மு.க இருக்கிறது.


தமிழகத்தில் குஷ்புவை நம்பித்தான் தி.மு.க. உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வைகோவுக்கு 12 இடங்கள் கொடுப்பதாக ஜெயலலிதா கூறினார். ஆனால் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார். 


தற்போது ஒரு இடத்துக்காக வெளியே அலைந்து கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வியை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். அவர் கிராமத்தில் உள்ள குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பார்'' என்று பேசினார்.
Thanks to Nakkheeran

நாங்கள் எப்போதும் சிங்கம்தான்! குரலை உயர்த்தும் தேமுதிக!

Posted: 04 Mar 2012 08:22 PM PST


நாங்கள் எப்போதும் சிங்கம்தான்! குரலை உயர்த்தும் தேமுதிக! 
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிகவோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கைகோர்த்துள்ளது. 


தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும். எப்படிப்பட்ட வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பது பற்றி விரிவான ஆலோசனை செய்ய தேமுதிகவின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று (04.03.2011) சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள அக்கட்சியின் தேர்தல் அலுவலத்தில் நடைபெற்றது. 


இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர், முன்னாள் மாவட்ட தலைவர் பழனி உள்பட அனைவரும் பங்கேற்றனர்.


தேமுதிகவின் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் நடிகர் ராஜேந்திர நாத் பேசும்போது, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன நக்கீரன் சூளுரைத்த மதுரை மண்ணில் பிறந்தவர் கேப்டன். அந்த திசை நோக்கி வணங்குகிறேன் என்றவர், தற்போதைய மின்வெட்டால் தமிழகம் இருள் அடைந்து விட்டது. புரட்சித் தலைவருக்கு பின்பு, மக்கள் தலைவர்தான் கேப்டன். 2011ல் நாங்கள் 29 எம்எல்ஏ, 2016ல் 79ஆக உயரும் என்றார். 


இந்த அம்மா ஆட்சியில்தான் பள்ளி மாணவன் ஆசிரியரை வெட்டிக்கொல்கிறான். கூட இருந்த சசிகலா அடித்தது தெரியாது என்று சொல்லும் இந்த ஜெயலலிதாவுக்கு மக்களைப் பற்றி என்ன தெரியும் என்றார். 


அடுத்துப் பேசிய தேமுதிகவின் வெங்கடேசன் எம்எல்ஏ, சட்டமன்றத்தில் நாங்கள் பால் விலை உயர்த்தப்பட்டுவிட்டது. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது. மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டுவிட்டது என்றுதான் கேள்வி கேட்டோம். நாங்கள் கேட்ட கேள்வி ஒன்று. அவர்கள் சொன்ன பதில் வேறு. கேள்விக்கும் பதிலுக்கும் சம்மந்தமே இல்லை என்றார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட முன்னாள் தலைவர் பழனி, தமிழக மக்களின் வாழ்வாதாரம் இப்போது சீர்குலைந்து இருக்கிறது. இதுதான் தற்போதைய தமிழக மக்களின் நிலைமை. இதை முன்னுரித்தி நாம் வாக்கு கேட்டாலே நமக்கு மக்களின் ஆதரவு திரளும். வெற்றி நிச்சயம் என்றார். 


தேமுதிகவின் தேர்தல் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான மாபா பாண்டியராஜன் பேசும்போது, கடந்த ஆட்சியில் தமிழகத்தின் கடன் ஒரு லட்சத்து இரண்டாயிரம் கோடி என்று அதிமுகவினர் பட்டியலிட்டார்கள். அதன்பின்பு 80 ஆயிரம் கோடி ரூபாய் இவர்கள் கடன் வாங்கியுள்ளார்கள். மொத்தத்தில் பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் 19 ஆயிரம் ரூபாய் கடன் சுமை ஏறியுள்ளது. 


இப்போதுள்ள அமைச்சர்களுக்கு தங்களுக்கு என்ன பொறுப்பு, தங்களது செகரட்டரிகளை மாற்றியது கூட தெரியாமல் இருக்கிறார்கள். கல்வி அபிவிருத்தியில், தொழில் வளர்ச்சியில் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று மக்களிடம் திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியும் என்றார்.


இறுதியாக பேசிய தேர்தல் பொறுப்பாளரும், தேமுதிகவின் மாநில இளைஞர் அணி தலைவருமான சுதீஷ், முன்பு புரட்சித் தலைவர் திமுகவில் இருந்து வெளியேறி, கட்சி ஆரம்பித்தபோது தேர்தலில் நின்றார். அப்போது அவருக்கு கை கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி. 


புரட்சித் தலைவர் முதல்வர் ஆனார். அதேபோல் கூட்டணியில் இருந்து கேப்டன் வெளியேறியபோது, நமக்கு ஆதரவு கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். 2016ல் கேப்டன் முதல்வர் ஆவார் என்று பஞ்ச் வைத்து பேசியவர், தேர்தலில் நாம் எப்படிப்பட்ட வியூகங்களை முன் வைக்க வேண்டும், தேர்தல் பணிகளை நாம் எப்படி செய்ய வேண்டும் என்று மண்டல பொறுப்பாளர்களுக்கும், கட்சி பொறுப்பாளர்ளுக்கும் விளக்கினார். 
Thanks to Nakkheeran

சென்னையில் ஆளுங்கட்சியினரின் மாமூல் வசூல் கோலோச்சுகிறது

Posted: 04 Mar 2012 08:17 PM PST


சென்னையில் ஆளுங்கட்சியினரின் மாமூல் 
வசூல் கோலோச்சுகிறது

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், ரத்தத்தின் ரத்தங்கள் வெற்றிக் களிப்பில் மிதந்தனர். வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, அனைவருக்கும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார். கடந்த தி.மு.க, ஆட்சியாளர்களின் ஆட்டத்தைக் கண்டு வெறுத்துப் போன மக்கள், நமக்கு அளித்துள்ள வாய்ப்பு இதை உணர்ந்து செயல்படுங்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற தைரியத்தில் கட்டபஞ்சாயத்து, மாமூல் வசூல் போன்றவற்றில் ஈடுபடாதீர்கள் என எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, சமீபத்தில் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் பேசிய முதல்வர், கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடனும், மக்கள் மத்தியில் பாராட்டும்படி செயல்பட்டால், லோக்சபா தேர்தலில் நாற்பதும் நமக்கே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது, என்றார்.


ஆனால், முதல்வர் என்னதான் எச்சரித்தாலும், ஒன்றிரண்டு மாதங்கள் பொறுத்திருந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் எல்லாம் தங்கள் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் வெளிக்காட்டி, பணம் சுருட்டுவதில் தீவிரமாக இறங்கி விட்டனர். தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர் மாமூல் வாங்குவது எங்கும் இல்லாத வகையில் பரவி வருகிறது.


அலறும் பொதுமக்கள்: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், எம்.எல். ஏ.,க்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், ரேஷன் கடை, மதுபான கடைகளில், மாமூல் வசூலிப்பதில் கறாராக ஈடுபடத் துவங்கியுள்ளனர். பிற மாவட்டங்களில் மணல் குவாரி விஷயங்களிலும், ஆளும் கட்சியில் பதவியில் இருப்போரின் மாமூல் வேட்டை, சொல்ல முடியாத அளவில் இருக்கிறது. இதைப் பார்த்து மணல் மாபியாக்களே அசந்து போயுள்ளனர். ஆளுங்கட்சியினரைப் பார்த்து பொதுமக்கள், வியாபாரிகள், சிறு வியாபாரிகள் எல்லாம் பயப்படத் துவங்கியுள்ளனர்.


சென்னை புறநகர் பகுதியிலிருந்து எம்.எல்.ஏ., ஆகியுள்ள தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் நடவடிக்கை, முகம் சுளிக்க வைக்கிறதாம். ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை பெற்றுத் தருவதில், இவர் முன்னணியில் இருக்கிறாராம். ஆளுங்கட்சியினர் மாமூல் வசூலிப்பதில் முதலில் குறி வைப்பது, மதுபான கடைகளைத் தான். இங்கு நாள் ஒன்றுக்கு மாமூல் வசூலித்து வந்தது போய், இப்போது மாதந்தோறும் தனியாக கப்பம் கட்ட வேண்டும் என கிளம்பியுள்ளனர். இதனால், மதுபான ஏலம் எடுத்தவர்கள் கதி கலங்கிப் போய் உள்ளனர். இதில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக, நேற்று மணலியில் நடந்த சம்பவம், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கதையாக அமைந்துள்ளது.


ரூ.5 ஆயிரம் கேட்டு மிரட்டல்: மணலி காமராஜர் சாலையில் குடிமையம் உள்ளது. இது, அ.தி.மு.க., நகர இணைச் செயலர் கோமதிக்குச் சொந்தமானது. குடிமையத்தை மனைவி பெயரில் முருகேச பாண்டியன் நடத்தி வருகிறார். நேற்று பிற்பகலில் குடி மையத்துக்குச் சென்ற அ.தி.மு.க., மணலி நகர செயலர் சந்திரன், மாதம் 5,000 ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.


ஆளுங்கட்சி நிர்வாகிகள்: ஏற்கனவே தினமும், 750 ரூபாய் மாமூலாக தருவதால், மாதம் 5,000 ரூபாய் தர முடியாது என, முருகேச பாண்டியன் மறுத்துள்ளார். கோபமடைந்த சந்திரன், மாவட்ட பிரதிநிதி இளங்கோ, மகளிர் அணி நகர செயலர் கஸ்தூரி, வட்ட செயலர் செல்வதுரை, துணைச் செயலர் நாராயணன் ஆகியோருடன் சென்று, குடிமையத்தை ‹றையாடியதாகக் கூறப்படுகிறது. காலி மதுபாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதில் பயந்து போன குடிமகன்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். முருகேச பாண்டியன் மீது பாட்டிலை வீசினர். மணலி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ஆளுங்கட்சியினரே, தனது சக கட்சிக்காரரிடம் தகராறு செய்ததால், மணலி பகுதி மக்கள் "காலக்கொடுமை'யை பார்த்தீர்களா என முணுமுணுத்தபடி சென்றனர். இந்த காட்சி மணலியில் மட்டும் இல்லை, சென்னையில் பெரும்பாலான பகுதியில் இதே நிலைதான். சிலர் வெளியே சொல்ல முடியாமல் இருக்கின்றனர். விரைவில், கட்சிக் கூட்டம் நடக்கும்போது வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா? சென்னை மாநகராட்சிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், பெரும் தொகை கொடுத்து, "சீட்' வாங்கியதால், போட்ட காசை எடுக்க வேண்டும் என பலவற்றிலும் கை வைப்பதால், ஆளுங்கட்சிக்கு லோக்சபா தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு, முதல்வர் ஜெயலலிதா முட்டுக்கட்டை போட்டால் நல்லது என்பது, ஆளுங்கட்சியின் உண்மையான விசுவாசிகளின் எதிர்பார்ப்பு.


- நமது சிறப்பு நிருபர் -
Thanks to Dinamalar 

அழகிரிக்கு ஒரு நாள் ரெஸ்ட்

Posted: 04 Mar 2012 08:15 PM PST


அழகிரிக்கு ஒரு நாள் ரெஸ்ட்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் மற்றவர்களுக்கு கிடுக்கிபிடி போட்ட மத்திய அமைச்சர் அழகிரி ரெஸ்ட் எடுத்ததால் யாரும் இல்லாமல் வேட்பாளர் மட்டும் தனியாக பிரசாரத்திற்கு சென்றார். சங்கரன்கோவிலில் அண்மையில் பிரசாரத்தை துவக்கிய மத்திய அமைச்சர் அழகிரி, கட்சியினர், முக்கிய தலைவர்கள் தேர்தல் முடியும் வரையிலும் சங்கரன்கோவிலில் முகாமிட்டிருக்க வேண்டும். யாராவது ஒரு நாள், இரண்டு நாள் என ஊருக்கு சென்றால் அதனை கவனித்துக் கொண்டிருப்பேன். அப்புறம் அடுத்த பொறுப்புகளை கேட்கும்போது என்னிடம்தான் வரவேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் நேற்று அழகிரி, மதுரைக்கு கிளம்பி விட்டார். இன்று சங்கரன்கோவிலுக்கு வரவில்லை. கட்சியினரிடம் கேட்டபோது "அண்ணன் ஒரு நாள் ரெஸ்ட்' என்றார்கள். அழகிரி ரெஸ்ட் எடுப்பதை முன்பே அறிந்து கொண்ட மற்ற இரண்டாம் கட்ட தலைவர்களும் பகலில் கடும் வெயிலில் இருந்து ஓய்வெடுத்தனர். மாவட்ட செயலர் கருப்பசாமிபாண்டியன், எம்.பி.,தங்கவேலுவும் கட்சி அலுவலகத்திலேயே இருந்தனர். வேட்பாளர் ஜவகர் சூர்யக்குமார், குருவிகுளம் ஒன்றியத்தில் ஆராய்ச்சிப்பட்டி, வன்னியம்பட்டி, மீனாட்சிபுரம், மருதங்கிணறு, கொக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் தனியாக சென்று ஓட்டு கேட்டார். மாலையில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டனர்.
Thanks to Dinamalar

அ.தி.மு.க.,விற்கு ஷாக் எது..! பிரசாரத்தில் வைகோ கிண்டல்

Posted: 04 Mar 2012 08:13 PM PST


அ.தி.மு.க.,விற்கு ஷாக் எது..! பிரசாரத்தில் வைகோ கிண்டல்
சங்கரன்கோவில் :சங்கரன்கோவிலில் மறைந்த அமைச்சர் கருப்பசாமியின் தந்தையிடம் வைகோ ஆசி பெற்று பிரசாரம் செய்தார்.சங்கரன்கோவிலில் காலையில் ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தை துவக்கினார். மறைந்த அமைச்சர் கருப்பசாமியின் சொந்த ஊர் புளியம்பட்டிக்கு சென்றார். அவருடன் வேட்பாளர் சதன்திருமலைக்குமாரும் சென்றிருந்தார். கருப்பசாமியின் தந்தை சொக்கன் அங்கு இருந்தார். அவரை சந்தித்த வைகோ, கருப்பசாமி தேர்தல்களில் நின்றபோது, எங்கள் வீட்டுக்கு வருவார். என் தாயாரிடம் ஆசிபெறுவார். அந்த வகையில் இந்த முறை வேட்பாளர் சதன்திருமலைக்குமாருக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் என்றார். அவரும் ஆசிவழங்கினார். 
பின்னர் வைகோ குருவிகுளம் ஒன்றியத்திற்கு உள்பட்ட மைப்பாறை, நடுவப்பட்டி, சீகம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், பொதுவாக மின்சாரம் தொட்டால்தான் ஷாக் அடிக்கும். ஆனால் அ.தி.மு.க.,வை பொறுத்தவரை மின்சாரம் தற்போது தொடாமலேயே ஷாக் அடிக்கச்செய்கிறது. தமிழகத்தை தற்போது மதுவின் பிடியிலும் இலவச பொருட்கள் பெரும் எதிர்பார்ப்பிலும் சிக்க வைத்துள்ளனர். முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் முதல் இயக்கமாக நின்று போராடிவரும் ம.தி.மு.க.,விற்கு வாக்களியுங்கள் என்றார் வைகோ.
Thanks to Dinamalar

ஸ்டாலின் தரப்பு அனிதா விவகாரத்தை லீக் செய்தது ஏன் தெரியுமா?

Posted: 04 Mar 2012 08:11 PM PST


ஸ்டாலின் தரப்பு அனிதா விவகாரத்தை லீக் செய்தது ஏன் தெரியுமா?

திருச்செந்தூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க.-வுக்கு போகப் போகின்றார் என்ற பேச்சு எப்படி திடீரென அடிபடத் தொடங்கிது என்று பலருக்கும் குழப்பம். தி.மு.க. தரப்பில் இருந்து வெளியான கதையல்ல இது என்று அடித்துச் சொல்கிறார்கள் அக்கட்சியின் உள்விவகாரம் அறிந்தவர்கள்.


தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஒருவருடன் பேசியபோது அவர், "சசிகலா குரூப்பை ஜெயலலிதா வெளியேற்றினால் அனிதா அந்தப் பக்கம் போய்விடுவார் என்று தி.மு.க. உயர் மட்டத்தில் முன்பே தெரிந்த விஷயம்தான். என்ன இருந்தாலும், அவர் அங்கிருந்து வந்தவர்தானே! திரும்பி அங்கே போவதில் எந்த அதிர்ச்சியும் கிடையாது.


இந்த ஆட்சியில் அவர்மீது கொலை முயற்சி வழக்கு கூட போடப்பட்டுள்ளது. அவர் ஆளும் கட்சிக்குப் போனால், அந்த வழக்கெல்லாம் மாயமாக மறைந்துவிடும். அதனால், அவர் அ.தி.மு.க.-வுக்கு போக விரும்புவார் என்று தி.மு.க. வட்டாரத்தில் சசிகலா வெளியேற்றப்பட்ட நாளில் இருந்தே பேசப்பட்ட விஷயம்தான் இது" என்றும் சொன்னார் அவர்.


"கடந்த ஒரு வார காலமாகவே, தி.மு.க. உயர் மட்டத் தொடர்புகளை அனிதா முற்று முழுதாக கட் பண்ணி விட்டார். சங்கரன்கோவில் தேர்தல் பணிக்கு அவரை அழைத்தபோதே, அவர் வருவது சந்தேகம் என்று தெரிந்திருந்தது" என்றும் தி.மு.க. சர்க்கிள்களில் இப்போது சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.


இவர்கள் என்னதான் சொன்னாலும், நமக்கு தெரிந்த சோர்ஸ் ஒருவர், "இந்தக் கதை வெளியானதே தி.மு.க. வளையம் ஒன்றில் இருந்துதான். அதுவும் ஸ்டாலினுக்கு நெருக்கமாக சர்க்கிள் அது" என்று அடித்துச் சொல்கிறார்.


"தமது கட்சியில் இருந்து ஒருவர் வெளியேறுகிறார் என்ற கதையை வெளியிடுவதில் ஸ்டாலின் தரப்புக்கு என்ன லாபம்?" என்று நாம் கேட்டதற்கு சில உள் விவகாரங்களை சொன்னார் அவர்.


"என்னதான் அனிதா வெளிப்படையாக காட்டிக்கொள்ளாவிட்டாலும், அவர் அழகிரி ஆதரவாளர்தான். அதே நேரத்தில் எந்தக் கட்சியில் இருந்தாலும், திருச்செந்தூரில் அனிதா அசைக்க முடியாத நபர். அ.தி.மு.க.-வில் இருந்து விலகி தி.மு.க.-வுக்கு வந்தபோது, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தி.மு.க. பேனரில் ஜெயித்துக் காட்டும் அளவுக்கு தில்லான நபர்.


நாளைக்கே தென் மாவட்டத்தில் அழகிரி ஆட்களையெல்லாம் ஓரங்கட்டி விட்டு, ஸ்டாலின் ஆட்களை கொண்டுவருவதென்றால், மற்றைய இடங்கள் எப்படியோ, திருச்செந்தூரில் சிக்கல்தான். எதைச் சொல்லி அனிதாவை ஒதுக்குவது? அதுதான் இந்த ரூட்டில் அவரை வெளியேற்ற விரும்புகிறார்கள்" என்றார் அந்த சோர்ஸ்.


அப்படியானால் அனிதா, அ.தி.மு.க.-வுக்கு திரும்ப சொந்தமாக முயற்சி ஏதும் செய்யவில்லையா?


அது வேறு கதை என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரத்தில். அனிதா தூது விட்டது உண்மை. சசிகலா குரூப் இல்லாவிட்டால், அவருக்கு அ.தி.மு.க. திரும்புவதில்தான் இஷ்டம் அதிகம். அ.தி.மு.க.-வில் அனிதாவை வெறுத்துப்போக வைத்து கிளப்பியதில் பெரும் பங்கு திவாகரனுக்கு உண்டு. கார்டனில் திவாகரன் செய்த பாலிட்டிக்ஸில்தான் அனிதாவின் தலை உருண்டது.


அதன்பின் அனிதாமீது கொலைமுயற்சி கேஸ் போடவைத்து உள்ளே தள்ளியதும் திவாகரன் லீலைதான். இப்போது திவாகரன் உள்ளே!


அனிதாவின் கோரிக்கை கார்டனுக்கு சரியான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது. அவரது கோரிக்கைக்கு கார்டனில் இருந்து எதிர்ப்பு வரவில்லை. ஆனால், இன்னமும் கிளீனாக கிரீன் சிக்னல் கிடைக்கவும் இல்லை என்கிறார்கள்.


அதற்குமுன், தி.மு.க. தரப்பில் இருந்து கதையை வீக் செய்து அனிதாவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். 13-ம் தேதி ஜெயலலிதா சங்கரன்கோவில் பிரசாரத்துக்கு வருமுன் சிக்னல் வராவிட்டால், அனிதா வேறு விதமாக அறிக்கை விட வேண்டியிருக்கும்! அதுதான் வியூகம்!
Thanks to ViruVirupu

உதயக்குமார் மனைவி நடத்தி வரும் பள்ளியின் காம்பவுண்ட் சுவர் திடீர் இடிப்பு

Posted: 04 Mar 2012 08:08 PM PST


உதயக்குமார் மனைவி நடத்தி வரும் பள்ளியின் காம்பவுண்ட் சுவர் திடீர் இடிப்பு

நாகர்கோவில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயக்குமாரின் மனைவி நடத்தி வரும் பள்ளிக்கூடத்தின் சுற்றுச் சுவரை சிலர் இடித்து விட்டனர். இதுகுறித்துப் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.


உதயக்குமாரின் போராட்டத்தால்தான் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக ஒரு கருத்து கிளம்பியுள்ளதால், அவருக்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கு நடந்து வருகின்றன.


இந்த நிலையில், உதயகுமார் மற்றும் அவருடைய மனைவி மீரா ஆகியோர் நடத்தி வரும் பள்ளிக்கூடத்தின் சுற்றுச் சுவரை நேற்று முன்தினம் நள்ளிரவு யாரோ இடித்து தள்ளிவிட்டனர். இந்த பள்ளிக்கூடம் நாகர்கோவில் அருகே பழவிளையில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.


இந்தப் பள்ளியின் சுற்றுச் சுவர் சிமென்ட் கற்களால் கட்டப்பட்டது. இதில் பக்கவாட்டு சுவரில் 50 அடி நீளத்திற்கு இடித்து விட்டனர். தகவல் அறிந்ததும் உதயக்குமாரின் மனைவி மீரா விரைந்து சென்று இடிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். பின்னர் தனது கணவருக்குத் தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் ராஜாக்கமங்கலம் போலீஸில் புகார் கொடுத்தார்.


அதில் சில இந்து அமைப்புகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Thanks to OneIndia