TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

Posted: 03 Mar 2012 01:33 AM PST


ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்

அன்பிற்குரியவர்களின் புகைப்படத்தை பார்த்தாலே எத்தகைய உடல்வலியும், மனவலியும் பறந்து போகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பார்ப்பதற்கே இப்படியா என நினைக்கவேண்டாம். அதேபோல் நேசத்திற்குரியவர்களை சந்தித்து ஐ லவ் யூ சொன்னால் போதுமாம் மன அழுத்தம் காணாமல் போய்விடும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் துறை பேராசிரியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 25 பெண்களை தேர்வு செய்தனர். அவர்களின் கையில் லேசாக சூடு வைத்தனர். "ஆ" என அலறித் துடித்த பெண்களிடம் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த அவர்களது ஆண் நண்பர்களின் படத்தை அந்தந்த பெண்ணிடம் கொடுத்தனர். தனது அன்புக்குரியவரை பார்த்த விநாடியில் பெண்களின் இதழில் புன்னகை தோன்றியது. அவர்களது காயத்தின் வலி தணிந்தது. படத்தை பார்த்ததற்கே இப்படியா என வியந்த ஆய்வாளர்கள் அவரவர் துணையை நேரில் வரவழைத்தனர். அவர்களிடம் லேசாக அணைத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது உடல் வலியும், மன அழுத்தமும் மறைந்து போனது கண்டறியப்பட்டது. அன்பிற்குரியவர் அணைக்கும் போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பது கட்டுப்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.


இதனையடுத்து கடுமையான உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை அன்புக்குரியவரின் அணைப்பு விரட்டி விடும் என்ற முடிவுக்கு வந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனநல கல்வியாளர் டாக்டர் லுட்விக் லோன்ஸ், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நீடிக்க, தம்பதியர் குறைந்தபட்சம் தினமும் நான்கு முறையாவது அணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.


மாதத்திற்கு 2 முறையாவது கைகோர்த்து வாக்கிங் செல்ல வேண்டும். ஒரு முறையாவது சினிமா, டிராமா என்று செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இப்படி செய்து வந்தால் டாக்டர்களை தேடிச் செல்லாமல், மக்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேபோல் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் அன்பிற்குரியவரை சந்தித்து ஐ லவ் யூ கூறவைத்தனர். அப்போது அவர்களுக்கு காதல் உணர்வு அதிகரித்ததோடு மன அழுத்தம் பறந்து போனதாம்.
Thanks to oneIndia

'எனக்கேத்த ஜோடி காஜல்': சூர்யா

Posted: 03 Mar 2012 01:31 AM PST


'எனக்கேத்த ஜோடி காஜல்': சூர்யா

இயக்குநர் கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.


சூர்யா, காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்துள்ள மாற்றான் திரைப்படத்தினை கே.வி. ஆனந்த் இயக்குகிறார். ஆந்திராவில் சூர்யா படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இதனை "டூப்ளிக்கேட்" என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸ் செய்கின்றனர். ஆந்திராவில் "டூப்ளிகேட்" படம் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளது.


தெலுங்கில் டூப்ளிகேட் படம் வெளியாவது குறித்து ஐதராபாத்தில் சூர்யா, காஜல் அகர்வால், கே.வி.ஆனந்த் ஆகியோர் நிருபர்களை சந்தித்து பேசினர். அப்போது சூர்யா கூறியதாவது,


கே.வி.ஆனந்த், இயக்கத்தில் நான் இரண்டாவது முறை நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். காஜல் அகர்வால் எனக்கேற்ற பொருத்தமான ஜோடியாக உள்ளார். இப்படம் பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார். 


இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கோடையில் ரிலீஸ் செய்யதிட்டமிட்டுள்ளார். ஏற்கனவே கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த அயன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதேபோல் இந்த திரைப்படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Thanks to OneIndia


பெண்களின் அக அழகை விரும்பும் ஆண்கள் !

Posted: 03 Mar 2012 01:30 AM PST


பெண்களின் அக அழகை விரும்பும் ஆண்கள் !

மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு தலையில் மல்லிகைப்பூ என மங்களகரமாய், இயற்கை அழகோடு இருக்கும் பெண்களைத்தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். அளவிற்கு அதிகமாக மேக் அப் போட்டு, கண்ணுக்கு மையிட்டு, லிப்ஸ்டிக் போட்டிருக்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


அக அழகு முக்கியம்


ஆர்பாட்டமில்லாத அழகு, பாந்தமான முகம் பார்த்தாலே பற்றிக்கொள்ளும். அம்மாவைப் போல அம்சமான தோற்றத்தை விரும்பும் ஆண்களின் மத்தியில் அதீத மேக் அப் போட்டு செல்லும் பெண்கள் உதாசீனப்படுத்தப்படுகின்றனர் என்றும் அவர்களின் அக அழகையே எதிர்பார்க்கின்றனர் என்றும் உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.


எளிமையே அழகு


அதேபோல உடை விசயத்திலும் கண்களை உறுத்தாத பாந்தமான, எளிமையான உடை அணிந்த பெண்களையை ஆண்கள் விரும்புகின்றனர். இயற்கை நிறத்தை வெளிப்படுத்தும் முகமும், எளிமையான உடையும் அணிந்த பெண்களே ஆண்களின் மனதில் இடம் பிடிக்கின்றனராம். சினிமாவிலோ, சாதரணமாக பார்த்து ரசிக்கவோதான் மேக் அப் அணிந்த பெண்கள். அதுவும் காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகளை ஆண்கள் ரசிக்கின்றனர் என்பதற்காக அனைவருமே மேக்அப் போட்டு அவர்களைப் போல கண்களை உறுத்தும் ஆடைகளை அணிந்து சென்றால் ஆண்களின் கேலி, கிண்டலுக்குத்தான் ஆளாக நேரிடும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.


ஆழமான கண்கள்


மனதில் அழகை வெளிப்படுத்துவதில் பெண்களின் கண்களுக்கு தனி இடம் உண்டு. பெரும்பாலான இயற்கையான அழகை வெளிப்படுத்தும் கண்களைக் கொண்ட பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகின்றனராம். எனவே கண்களுக்கு அளவுக்கு அதிகமான மை தீட்டி ஆண்களை பயமுறுத்துவதை தவிர்க்கவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை. அதேபோல் அடிக்கும் அளவிற்கு லிப்ஸ்டிக் போடாமல் சாதாரணமாக லிப் கிளாஸ் உபயோகிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


தனித்தன்மையும், தன்னம்பிக்கையும் நிறைந்த இயற்கை அழகான பெண்களே ஆண்களை கவர்கின்றனர். எனவே மேக் அப் போட்டு போனால்தான் அனைவரையும் கவரமுடியும் என்று தப்புக்கணக்கு போடவேண்டாம். பெண்கள் தங்களின் இயற்கை அழகை வெளிப்படுத்து விதமாக சென்றாலே ஆண்களுக்கு பிடிக்கும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
Thanks to OneIndia

Thendral This week Promo video

Posted: 03 Mar 2012 12:55 AM PST


Thendral This week Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Azhagi This week promo

Posted: 03 Mar 2012 12:54 AM PST


Azhagi This week promo

This posting includes an audio/video/photo media file: Download Now

கேவி ஆனந்திடம் கதை கேட்டார் ரஜினி?

Posted: 02 Mar 2012 11:41 PM PST


கேவி ஆனந்திடம் கதை கேட்டார் ரஜினி?

இப்போதெல்லாம் ரஜினி நடிக்கிறார் என ஒரு படத்தின் செய்தி வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை கிளறும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த யூகங்கள் வந்துவிடுகின்றன.


சுல்தானில் நடிப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே ராணா பற்றிய செய்தி வந்தது. பின்னர் அறிவிப்பாக மாறியது.


ராணா படம் பற்றி பேசிக் கொண்டிருந்த நேரத்தில்தான், கோச்சடையான் அறிவிப்பு வந்தது.


கோச்சடையான் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் ஷங்கர் - ரஜினி படம் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அட, இப்போது இன்னும் ஒரு படம் குறித்த வதந்தி.


இந்த முறை, ரஜினியின் வழக்கமான இயக்குநர்கள் இல்லை. இது வேற செட்டப்.


அயன், கோ இயக்குநரும், சிவாஜி படத்தின் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்திடம் ரஜினி கதை கேட்டுவிட்டார், ஈராஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது என்றெல்லாம் கொளுத்திப் போட்டுவிட்டனர்.


ஆர்வத்தோடு படித்த ரசிகர்கள், அடுத்து வதந்திக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்!
Thanks to OneIndia

பெங்களூர் நீதிமன்றத்தில் மழுப்பி வரும் சசிகலா... போயஸ் தோட்ட மதிப்பும் தெரியாதாம்!

Posted: 02 Mar 2012 11:39 PM PST


பெங்களூர் நீதிமன்றத்தில் மழுப்பி வரும் சசிகலா... போயஸ் தோட்ட மதிப்பும் தெரியாதாம்!

பெங்களூர்; தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனின் மதிப்பு, ஏழே கால் கோடி ரூபாயா என்பது பற்றி, தமக்கு எதுவும் தெரியாது,'' என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற விசாரணையின்போது சசிகலா தெரிவித்தார்.


சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில், முக்கிய கட்டமாக, சொத்துகள் குறித்து நீதிபதி கேள்விகளை எழுப்பினார்.


சொத்தின் மதிப்பீடு குறித்த பெரும்பாலான கேள்விகளுக்கு, தமக்கு எதுவும் தெரியாது, என்று சசிகலா, மழுப்பலான பதிலையே தெரிவித்தார்.


கேள்வி பதில் விவரம் வருமாறு:


கேள்வி: ஈக்காட்டு தாங்கலில் ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் கட்டடத்தின் மதிப்பீடு செய்யப்பட்டது தெரியுமா?


பதில்: ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் வாடகைக் கட்டடத்தில் தான் இயங்கி வந்தது. கட்டடம் யாருடையது என்றுகூட தெரியாமல், மதிப்பீடு செய்தது தவறு.


கேள்வி: சென்னை. 36, போயஸ் கார்டன் கட்டடத்தின் மொத்த மதிப்பு, 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு கொடுக்கப்பட்டது தெரியுமா?


பதில்: தெரியாது.


கேள்வி: சிறுதாவூர் பங்களா மதிப்பீடு, 5 கோடியே 40 லட்சம் ரூபாய் என்பது தெரியுமா?


பதில்: தெரியாது.


கேள்வி: பையனூர் பங்களா மதிப்பீடு, ஒன்றே கால் கோடி ரூபாய் என்பது தெரியுமா?


பதில்: தெரியாது.


கேள்வி: ஐதராபாத் திராட்சைத் தோட்டத்தின் மதிப்பு, 6 கோடியே 40 லட்சம் ரூபாய் என்று தெரியுமா?


பதில்: தெரியாது.


மேலும் நமது எம்.ஜி.ஆர்., நாளிதழ் கட்டடம், நீலாங்கரை ராஜா நகரிலுள்ள பிளாட்கள், ஈ.வி.கே., தொழிற்பேட்டையில் உள்ள நான்கு ஷெட்கள், தி.நகர், பத்மநாபநகரில் உள்ள வீடுகள், வேல்ஸ் கார்டன் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள பிளாட்கள், சென்னை நந்தனம் பகுதியில் வாங்கிய சொத்துகள், சாந்தோம் ஆர்.ஆர்.நகரில் வாங்கிய சொத்துகளின் மதிப்பு உட்பட சென்னையில் பல இடங்களில் வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளின் வாடகை ஒப்பந்தங்கள் என பல கேள்விகள் கேட்கப்பட்டது.


இதற்கு சசிகலா, மதிப்பீடு அதிகம் போட்டுள்ளதாகவும், மதிப்பீடு செய்யும் அதிகாரிகள் எதுவும் கேட்கவில்லை என்றும், விசாரணை அதிகாரிகள் சாட்சிகளை பொய் சொல்ல வைத்துள்ளனர் என்றும் பதிலளித்தார். இதுவரை ஐந்து நாள் விசாரணையில் மொத்தம், 286 கேள்விகளுக்கு பதில் பெறப்பட்டுள்ளது.


இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியுள்ளது.


விசாரணை முடிந்து சசிகலா, இளவரசி தனியாக ஒரு காரில் புறப்பட்டு பெங்களூருவில் தாங்கள் தங்கியுள்ள கேபிட்டல் ஸ்டார் ஓட்டலுக்கு சென்றனர். விசாரணையின்போது, சசிகலா பதிலளிக்க, நீதிபதி அதிக நேரம் கொடுப்பதில்லை என அவரது வழக்கறிஞர்கள் நிருபர்களிடம் தெரிவித்தனர்.


சுதாகரன் மாதக் கணக்கில் பெங்களூருவில் தங்கவுள்ளதால், சிவாஜிநகர் பாலே குந்திரி சர்க்கிள், இந்தியன் எக்ஸ்பிரஸ் சர்க்கிள் அருகேயுள்ள, "குயின்ஸ் பாரடைஸ்' என்ற அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
Thanks to OneIndia

பிரசாந்த் அழைப்பு ஷங்கர், கே.வி.ஆனந்த்-ன் முடிவென்ன?

Posted: 02 Mar 2012 11:29 PM PST


பிரசாந்த் அழைப்பு ஷங்கர், கே.வி.ஆனந்த்-ன் முடிவென்ன?

பின் டிராப் சைலண்ட் ஆக இருக்கிறது பிரசாந்த் ஏரியா. பொன்னர் சங்கர், மலையூர் மம்பட்டியான் படங்களுக்கு பிறகு அவர் நடிக்கப் போகும் அடுத்த படம் என்ன? இந்த எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்திற்கும் இல்லை, குடிமக்களுக்கும் இல்லை. அதற்காக படங்களில் நடிக்காமல் விட்டுவிட முடியுமா என்ன? கொஞ்சம் பெரிசாக பிளான் போட்டுக¢கொண்டிருக்கிறாராம் பிரசாந்த். ஆனால் இந்த முறையும் சொந்தப்படம் எடுக்க வேண்டுமா என்ற எண்ணம் மட்டும் தந்தைக்கும் தனயனுக்கும் இருப்பதாக கிசுகிசுக்கிறது இதே கோடம்பாக்கம்.


எப்படியிருந்தாலும் தமிழ்சினிமாவை ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரையாச்சே. பழைய சகவாசத்தில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தின் ஆல் ஓவர் வெளியீட்டு உரிமையை கூட கேட்டுப் பார்த்தார் தியாகராஜன். அப்போது சிக்காத ஷங்கரை இப்போதும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறாராம் இவர். பிரசாந்த்துக்கு ஒரு படம் இயக்கித் தரலாமே என்றாராம் அவரிடம். விக்ரம், கமல் என்று இரு பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த ஷங்கருக்கு அவர்களின் கால்ஷீட்டும் உடனே கிடைக்காத அவஸ்தை.


இந்த ஐடியா நல்லாயிருக்கே என்று பிரசாந்த் பக்கம் அவர் திரும்பினாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள். இதற்கிடையில் கே.வி.ஆனந்தையும் அணுகினாராம் தியாகராஜன். அவரோ, தனக்கு பத்து கோடி சம்பளம் கேட்டதாகவும் பதறியடித்துக் கொண்டு இவர் திரும்பிவிட்டதாகவும் கூட பேச்சிருக்கிறது.


நிஜம் என்னவோ?
Thanks to Tamilcinema

அஜீத் படம் நயன்தாரா போட்ட நிபந்தனை

Posted: 02 Mar 2012 11:27 PM PST


அஜீத் படம் நயன்தாரா போட்ட நிபந்தனை

தூண்டில் முள்ளையும் முழுங்கிட்டு, துணைக்கு பீடாவும் கேட்குற அளவுக்கு அனுபவம் இருக்கும்போது எதுக்காக மேனேஜர், பி.ஆர்ஓ வெல்லாம்? பேக் டூ சினிமாவாகியிருக்கும் நயன்தாராவின் இந்த திடீர் பாலிஸியால் நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தின் துணைக்கோள்கள் அத்தனையும்.

வருகிற ஏப்ரல் மாதம் முழுக்க சென்னையிலிருக்கும் பிரபல ஓட்டல் ஒன்றில் ரூம் போட்டிருக்கிறாராம் நயன்தாரா. இங்கிருந்து கொண்டுதான் எல்லாவற்றையும் ஆபரேட் செய்யப் போகிறார் அவர். அஜீத் நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா கமிட் ஆகிவிட்டார் என்ற தகவலிலும் உண்மையில்லையாம்.

ஐயய்யோ... அப்புறம்?

இந்த படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவை அணுகிய தயாரிப்பு தரப்பிடம் நயன்தாரா போட்ட ஒரே நிபந்தனை இதுதான். அஜீத்துடன் நடிக்க எனக்கு விருப்பம்தான். அதற்காக நீங்க கேட்கிற தேதியை அப்படியே மாதக்கணக்கில் என்னால கொடுக்க முடியாது. அவர் இந்த படத்திற்காக என்ன தேதி கொடுத்திருக்கிறார் என்று முதலில் சொல்லுங்க. அதுக்கேற்ற மாதிரி என் தேதிகளை ஒதுக்குகிறேன் என்றாராம்.

அலசி பிழிந்து கொண்டிருக்கிறார்கள். தேதிகள் திருப்தியானால் மட்டுமே அஜீத் படத்தில் இருப்பார் நயன்தாரா.
Thanks to TamilCinema

பச்சை என்கிற எரிச்சல் சிக்கலில் தவிக்கிறார் நயன்

Posted: 02 Mar 2012 11:23 PM PST


பச்சை என்கிற எரிச்சல் சிக்கலில் தவிக்கிறார் நயன்

காடு கொள்ளாம சிரிச்ச காந்தாரிக்கு கடவாய் பல்லுல ரத்தமாம். அந்தளவுக்கு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. காதல் கண்ணை மறைத்த நேரத்தில் அவர் செய்த ஒரு காரியம் தான் இப்போது உறுத்திக் கொண்டிருக்கிறது மனசையும் உடம்பையும்.


அதற்குள் நீங்கள் வேறு கற்பனைக்கு போனால் நாங்கள் பொறுப்பல்ல. நாம் சொல்ல வருகிற விஷயமே வேறு. பிரபுதேவாதான் தன் உலகம் என்று சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் தன் கைகளில் ஆசை காதலரின் பெயரை பச்சை குத்திக் கொண்டிருந்தார் அவர். இப்போது காதல் முறிந்துவிட்டது. அதற்காக ஐயோ பாவம். அந்த கை என்ன செய்யுமாம்?


அப்படியே பளிச்சென்று அதே பெயரை தாங்கியபடி நடமாடிக் கொண்டிருக்கிறது. பார்க்கிற இடத்திலெல்லாம் பல் இளிக்கும் இந்த பெயரை எப்படி அழிப்பது என்பதுதான் நயன்தாராவின் இப்போதைய தலையாய பிரச்சனையாக இருக்கிறதாம்.


தோல்பொருள் துறை வல்லுனர்கள் இதற்கு தனி சொல்யூஷன் கொடுத்திருக்கிறார்களாம். எப்படி?


அந்த இடத்தை அப்படியே ஒரு டிசைனால் மறைத்துவிடுவது. பெயரும் வெளியில் தெரியாது என்பதுதான் அவர்கள் தரும் ஐடியா. மேலும் மேலும் அந்த இடத்தில் அப்பிக் கொள்வதை விட, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பழைய நிலைமைக்கே போய் விடலாம் என்று கருதுகிறாராம் நயன்தாரா.
Thanks to tamilCinema


முருகதாஸ் எடுத்த முடிவு குதூகலிக்கும் கோடம்பாக்கம்

Posted: 02 Mar 2012 11:20 PM PST


முருகதாஸ் எடுத்த முடிவு குதூகலிக்கும் கோடம்பாக்கம்

எடிட்டிங் டேபிளில் பிலிமை கொட்டிவிட்டு நிம்மதியாக அஞ்சப்பர் ஓட்டலிலோ, அரசப்பர் ஓட்டலிலோ கோழிக்கறியை வெட்டலாம். அந்தளவுக்கு திருப்தி திலகம் என்ற பெயரை இயக்குனர்கள் மத்தியில் வாங்கிவிட்டார் எடிட்டர் ஆன்ட்டனி.


ஆனால் இந்த பொல்லாத நல்ல பெயரை, பொழுதோடு கெடுத்துக் கொள்கிற அளவுக்கு நடந்து கொள்கிறாராம் சமீபகாலமாக. அதே இயக்குனர்கள் ஏதாவது ஐடியா கொடுத்தால் கூட அதை டஸ்ட் பின்னில் எறிந்துவிட்டு தனது போக்கிலேயே கத்தரியை எடுப்பதால் கரடு முரடான முடிவெடுக்கவும் தயாராகிவிட்டார்களாம் ஏராளமான இயக்குனர்கள். அதில் முதலில் வெளியேறியிருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ் என்கிறார்கள்.


என்ன நடந்தது?


7 ஆம் அறிவு படத்தின் அத்தனை விமர்சனங்களிலும் எடிட்டர் ஆன்ட்டனியின் பெயரை கொத்து பரோட்டா போட்டிருந்தார்கள் விமர்சகர்கள். அதுமட்டுமல்ல, எடிட்டிங் நேரத்தில் முருகதாஸ் சொன்ன எந்த அறிவுரையும் அவரது காதுகளில் ஏறவில்லையாம். கடைசியில் என்னாச்சு பார்த்தியா? என்று அந்த முருகதாசே 'கருகல்'தாஸ் ஆக வேண்டிய நிலைதான் ஏற்பட்டது.


இதையெல்லாம் மனதில் கொண்ட முருகர், தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தில் ஆன்ட்டனியை மாற்றிவிட்டாராம். அவருக்கு பதிலாக மணிரத்னம் படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீகர் பிரசாத் நியமிக்கப்பட்டிருக்கிறார்.


குறித்தப்பாத முடிவு. சபாஷ் பிரதர்...
Thanks to tamilcinema

தமிழினத்தின் துரதிருஷ்டம்!

Posted: 02 Mar 2012 11:15 PM PST


தமிழினத்தின் துரதிருஷ்டம்!

தமிழர்கள் துரதிருஷ்டசாலிகள். இல்லையென்றால், ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படும் நேரத்தில், அந்நாட்டு ராணுவத்தின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய பிரிட்டன் பத்திரிகையாளர் மேரி கால்வின் நம்மிடையே இல்லாமல் போவாரா?


சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார்கள், அப்பாவிகள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டது எப்படி என்பதையெல்லாம் தனது செய்திகளில் விவரித்தவர்தான் மேரி.


இறுதிக் கட்டப் போரின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி வந்த நடேசன், அவரது மனைவி, புலித்தேவன் உள்ளிட்டோரை இலங்கை ராணுவத்தினர் ஈவிரக்கமில்லாமல் கொன்றனர் என்பதை தனது போர்ச் செய்தியில் அவர் பதிவு செய்திருக்கிறார்.


"துப்பாக்கிகளை மெüனத்தில் ஆழ்த்துகிறோம்' என்று கூறியபோதே, ராணுவத்திடம் சரணடைய விடுதலைப் புலிகள் தயாராகிவிட்டிருந்தனர் என்பது உலகறிந்த விஷயமாகியிருந்தது. அந்தப் பின்னணியில் புலிகளுக்கும் ஐ.நா. அமைப்புக்கும், ராஜபட்ச அரசுக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுத்தும் பணியில் மேரி ஈடுபட்டிருந்தார்.


"சரணடைகிறோம்' என்று நடேசனோ, புலிகளின் பிற தலைவர்களோ வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், ஆயுதங்களைக் போட்டுவிட்டு சரணடைவதுதான் அவர்களது நோக்கமாக இருந்தது என்பதற்கு நேரடியான சாட்சியாக இருந்தவர் மேரி. நடேசன் உள்ளிட்டோரிடம் சாடிலைட் போனில் பேசுவது, குறுஞ்செய்திகள் மூலம் தகவல்களைப் பெறுவது என விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இருந்தார்.


மேற்கத்திய ஊடகங்களின் வழக்கமான "நடுநிலை' பத்திரிகையாளராக இலங்கைக்கு வந்தவர்தான் மேரி. மேலை நாட்டுச் சந்தையில் அதிகமாக விற்கும் "மனித உரிமை' சாயம் பூசிய செய்திகளைத் திரட்டுவதுதான் அவரது முதல்நிலைப் பணியாக இருந்தது. ஆனால், விடுதலைப் புலிகள் என்பவர்கள், பயங்கரவாதிகள் என்கிற பலரது எண்ணத்தை மேரி தந்த செய்திகள் மாற்றின. புலிகளை "விடுதலைப் போராட்ட வீரர்கள்' என்று துணிச்சலாகக் குறிப்பிட்டார். ஏதோ ஒரு வகையில், தமிழினத்துக்கு அவர் பேருதவி புரிந்திருக்கிறார் என்பதை நாம் மறுக்க முடியாது. மறந்துவிடவும் கூடாது!


மேரி கால்வின் இன்றைக்கு உயிருடன் இல்லாவிட்டாலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைப் போர், ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், அகதிகள் நடத்தப்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்து அவர் விட்டுச் சென்றிருக்கும் ஆவணங்கள் நமக்குப் பயன்படுகின்றன.


இன்றைக்கு ஜெனீவா தீர்மானத்தை அமெரிக்கா முன்னெடுப்பதற்கு மேரியின் "மனித உரிமை' செய்திகளும் ஒரு காரணம். ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மேலை நாடுகள் இலங்கை அரசுக்கு எதிரான நிலை எடுத்திருப்பதும் மேரி கால்வின் போன்றவர்களால்தான்.


அவர் இன்று இல்லை என்பது தமிழர்களின் துரதிருஷ்டமே. ஆனால், அதைவிட மிகப்பெரிய துரதிருஷ்டம் என்ன தெரியுமா? தமிழர்களை அங்கமாகக் கொண்ட இந்தியா, தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாததுதான். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், அவர்களது சர்வதேச ராஜதந்திரத்தின் ஒரு பகுதிதான். அவர்களைப் பொருத்தவரை, லிபியா, ஈரான், இராக், சிரியா போன்ற நாடுகளுக்கு எதிரான தீர்மானத்தைப் போன்றதுதான் இதுவும். தமிழர்கள் மீது அவர்களுக்கு நேரடியான கரிசனம் ஏதும் இல்லை என்பதும் உண்மைதான். என்றாலும், இத்தகைய தீர்மானத்தால், இலங்கை இனப்படுகொலையில் உறவுகளை இழந்த தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படும் என்பதை மறுக்க முடியாது.


இத்தகைய சூழலில் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று இந்தியா வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றால், அதற்காக யாரைக் குறை சொல்வது? அரசுக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியையா அல்லது அதில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சிகளையா? இல்லை, அரசில் செல்வாக்குடன் வீற்றிருக்கும் அரசியல்வாதிகளையா?


47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைக் குழுவில் இந்தியாவுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலோ இருப்பதைத்தான் இந்தியா விரும்புகிறது என்பதை பிரதமர் உள்ளிட்டோரின் அசெüகரியமான மெüனம் நமக்கு உணர்த்துகிறது.


சிரியா உள்பட பல நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களின்போது எடுக்கப்பட்ட நிலையைத்தான் இப்போதும் எடுக்கிறோம் என்று "சாக்கு' சொல்லப்படலாம். தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு அருமையான வாய்ப்புக் கிடைத்தும் அதை எட்டி உதைக்கப் போகும் மத்திய அரசின் இத்தகைய முடிவை "தமிழர்களின் துரதிருஷ்டம்' என்று கூறாமல் வேறென்ன சொல்ல?


இந்த இரண்டையும் விடப் பெரிய துரதிருஷ்டமும் தமிழர்களை இப்போது பீடித்திருக்கிறது. இலங்கைக்கு எதிராக பிரசாரம் செய்வதிலும், ஆதரவு திரட்டுவதிலும் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை இல்லை என்பதுதான் தாங்க முடியாத வேதனை.


படுகொலைகளையும் சித்திரவதைகளையும் நேரில் பார்த்தறிந்தவர்கள், இந்த விஷயத்தில் பிளவுபட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.


ஒருவேளை இலங்கையின் ஆதரவு திரட்டும் முயற்சிகளையும் மீறி, மனித உரிமைக் குழுவின் தீர்மானம் வெற்றி பெற்றாலும்கூட, அதனால், சிங்களர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிடுமோ, இப்போதைய அமைதிக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சும் இழிநிலைதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.


ஒருவேளை இலங்கையின் ஆதரவு திரட்டும் முயற்சிகளையும் மீறி, மனித உரிமைக் குழுவின் தீர்மானம் வெற்றி பெற்றாலும்கூட, அதனால், சிங்களர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிடுமோ, இப்போதைய அமைதிக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சும் இழிநிலைதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.


ஜெனீவா தீர்மானத்துக்கு ஆதரவாக நேரடியாகக் களத்தில் இறங்காவிட்டால், மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படும், அது உள்ளாட்சித் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் பார்க்கிறார்கள்.


இலங்கை அரசை நேரடியாக எதிர்த்தால், அது தமிழர்களுக்கு எதிராக இன்னொரு வன்முறைக்கு வழிவகுக்கும் என்று மற்றவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த நிலைக்கு யாரைக் குறைசொல்ல?


எல்லோருக்கும் துரதிருஷ்டம் வரும். தமிழினத்துக்கு மட்டும் அது தொடர்கதையாகத் தொடர்கிறதே, என் செய்ய? 
Thanks to Dinamani

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு ஏன்?

Posted: 02 Mar 2012 11:13 PM PST


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு ஏன்?

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருக்கும் பாண்டியன், வினோதகன், கணேசன் ஆகிய மூன்றுபேர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடந்து வருகிறது.


இவர்கள் மீது என்னக் குற்றச்சாட்டு அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. முன்பாக இவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வது தான் முறை.


பாண்டியன், வினோதகன், கணேசன் மூன்றுபேரும் ஆயுதப் படையில் கிரேட் 2 கான்ஸ்டபிளாக இருந்தவர்கள். இவர்கள் பாண்டியன் மட்டும் 1984-ல் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தவர். மற்ற இருவரும் பாண்டியனுக்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்கள். பாண்டியன் டி.எஸ்.பி.யாகவும், மற்ற இருவரும் இன்ஸ்பெக்டர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இதில் டி.எஸ்.பி. யாக பாண்டியனுக்கு பதவி உயர்வு கொடுத்ததும், மற்ற இருவருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கொடுத்ததும் பெரும் சர்ச்சையிம் இருப்பது தனிக்கதை.


இந்த மூன்று பேரும் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்து கொண்டு அவரை பாதுகாப்பது, தள்ளு வண்டி நாற்காலியில் வைத்துக் கொண்டு தள்ளுவது இந்த இரு விஷயங்களைக் கடந்து வேறு வேலைகளில்தான் அவர்கள் ஆர்வம் காட்டினார்கள்.


குறிப்பாக உயர் அதிகாரிகளுக்கு அதாவது, ஐ.பி.எஸ். படித்து மத்திய அரசால் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளே இவர்களைப் பிடித்துத்தான் தங்களுக்கான பதவிகளை வாங்கிக் கொள்ள முடிந்தது.


அதிலும், பாண்டியன் மற்றும் வினோதகன் ஆதரவில்லாமல் முக்கியமான எந்தப் பதவியும் எந்த ஐ.பி.எஸ்.ஸும் வாங்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. இன்னும் சொல்லப்போனால் தி.மு.க. ஆட்சியில் காந்திராஜன் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியை உளவுத்துறை ஐ.ஜி.யாக 2006ஆம் ஆண்டு கொண்டு வந்ததே பாண்டியன்தான்.


உளவுத்துறை ஐ.ஜி. மட்டுமல்ல சென்னை நகரின் கமிஷனர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளும் பாண்டியனும் வினோதகனும்தான் முடிவு செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். இது தவிர, இவர்களை நெருங்கி கொடுக்க வேண்டியதை கொடுத்தால், மாவட்ட எஸ்.பி. மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பணிகள், வீடியோ பைரசி மற்றும் பணம் வரும் பணிகளை வாங்கித் தருவார்கள்.


இப்படி சர்வ வல்லமைப்படைத்த இந்த மூன்று பேருக்கும் முதலமைச்சரின் பொது விருப்ப ஒதுக்கீடு மூலம் சென்னை முகப்பேரில் வீட்டு வசதிவாரிய மனைகள் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தலா 2 கிரவுண்டு வீட்டு மனைகள் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.


இந்த நிலத்தின் மார்க்கெட் விலை 2 கோடி ரூபாய். ஆனால் அரசு நிர்ணயித்த விலை 75 லட்சம் ரூபாய்தான். இந்த மூன்று பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மனைகளை 75 லட்சம் ரூபாய் கொடுத்து நிலத்தை வாங்கியிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அப்படி செய்யவில்லை.


ஆயில் சண்முகம் என்ற குற்றப் பின்னணி உடையவரை பிடித்து இந்த மூன்று பேரும் அந்த நிலத்தை தனியாருடன் ஒப்பந்தம் போடுகிறார்கள். அந்தத் தனியார்தான் இந்த மூன்று வீட்டு மனைகளுக்கான பணத்தை செலுத்துகிறார்கள். அதாவது வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்கள்தான் பணத்தை செலுத்த முடியும். ஆனால், ஒதுக்கீடு பெற்றவர்கள் அந்த நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப் பதிவு செய்யாமலேயே அதிகாரிகளுடன் ஒப்பந்தம் போட்டு மூன்று பேரும் தலா ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு அந்த வீட்டு மனைகளை விற்று விடுகிறார்கள்.


உலகத்தில் இப்படியொரு அப்பட்டமாக மோசடி நடந்திருக்குமா என்றால் இல்லை என்றே கூறலாம். மூன்று டி.எஸ்.பி.களுக்கு 75 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை வாங்குவதற்கே முடியாத காரியம். அந்தத் தொகையை அவர்கள் வங்கியிலோ அல்லது பைனான்ஸ் நிறுவனத்திலோ தான் கடன் வாங்கி வாங்க முடியும். ஒரு நாளில் அத்தனை பெரிய தொகையை டி.ஜி.பி. கூட செலுத்த முடியாது. சாதாரண டி.எஸ்.பி.யும் இரண்டு இன்ஸ்பெக்டர்களும் எப்படி செலுத்த முடியும்.


இந்த மூவரும் எல்லா மோசடிகளையும் இத்தனை துணிச்சலாக செய்ய துணை நின்றவர் அன்றைய முதல்வர் கருணாநிதி கூட இல்லை. அவர்களுக்கு துணை நின்றவர் அன்றைய உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஜாபர் சேட்.


இந்த மோசடி குறித்து, மூன்று பேர் மீதும் ஏகப்பட்ட புகார்கள் எழுதப்பட்டன. இவர்கள் மீது வந்த புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஐகோர்ட்டில் வழக்கு போட்டாலும் மனு தள்ளுபடி தான்.


அதற்கு என்ன காரணம் என்றால் இவர்களைப் போலவே உளவுத்துறை ஐ.ஜி.ஆக இருந்த ஜாபர்சேட்டும் திருவான்மியூரில் அரசு வீட்டு வசதி நிலத்தை வாங்கி தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்றவர் ஜாபர்சேட்.


இப்படிப்பட்ட ஜாபர்சேட் இருக்கும்போது அவருக்கு கீழே பணியாற்றும் மூன்று பேர் மீது கடந்த ஆட்சியில் யாராவது நடவடிக்கை எடுக்க முடியுமா?


இப்போது ஆட்சி மாறி கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழித்து இந்த மூன்று பேரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறது. இந்த விசாரணையிலாவது மோசடி அம்பலப்படுத்தி நீதியை நிலைநாட்டினால் நேர்மையான ஊழியர்கள் சந்தோஷப்படுவார்கள்.
Thanks to TamilLeader

நடராஜனுக்கு போலீஸ் ஸ்டேஷனோடு இடிந்து நெருங்கிய இமேஜ்!

Posted: 02 Mar 2012 11:11 PM PST


நடராஜனுக்கு போலீஸ் ஸ்டேஷனோடு இடிந்து நெருங்கிய இமேஜ்!

நடராஜன் தொடர்பாக வெளியே காண்பிக்கப்பட்ட இமேஜ் உடைந்து நொருங்குவதை அவரது ஆதரவாளர்கள் காணத் தொடங்கியுள்ளார்கள். நடராஜனை கைது செய்தால், அரசியல் ரீதியாக கொந்தளிப்பு ஏற்படும் என்று இருந்த எதிர்பார்ப்பு, புஸ் என்று போயிருக்கிறது.


இந்தக் கைதுடன் தொடர்பாக அரசியல் ரீதியாக ஏதாவது ஆக்ஷன் காட்டக்கூடிய சில அமைப்புகள் இருந்தன. அந்த அமைப்புகளை 'சைலன்ட்' ஆக்கும் வகையில் காவல்துறை செய்த சில ஏற்பாடுகள் வெற்றி கண்டிருக்கின்றன.


இதில் தொடர்புடையதாக கூறப்படும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் பிரச்னையாக்கப்படவில்லை.


கைது செய்யப்பட்டபோது இருந்த வேகம் எல்லாம் உள்ளேயிருந்த நாட்களில் நடராஜனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு விட்டது. காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர் இப்போது விரக்தியுற்ற, தளர்ந்த நிலையில் இருக்கிறார் என்றார்கள். (நடராஜன் தஞ்சாவூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோவில் அவரது தோற்றத்தை கவனியுங்கள்)




தஞ்சாவூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட நடராஜனின் பரிதாப தோற்றம்
நிலைமை இப்படியாக இருந்தாலும், ரிலாக்ஸ்டாக இருக்க விரும்பவில்லை போலீஸ்.


நடராஜன் முதலில் கைது செய்யப்பட்ட நிலம் தொடர்பாக இனியும் 'இன உணர்வு' தொடர்பான திருப்பங்கள் ஏற்படலாம் என்ற சான்ஸ் இருப்பதால், அந்த விவகாரத்தையே சீனில் இருந்து வெளியே எடுத்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பழைய கேஸ் அப்படியே இருக்க, புதிய கேஸ் ஒன்றில் அவரை புக் பண்ணும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுவிட்டது.


நடராஜன் மீது பதிவாகியுள்ள புதிய வழக்கு, ஒரு மோசடி கேஸ்.


ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ1.6 கோடி மோசடி செய்ததாக பதிவாகியுள்ளது இந்த வழக்கு. புதிய வழக்கில் எந்த வகையிலும் நடராஜன் தரப்பால் அரசியல் செய்ய முடியாது என்பதை உறுதி செய்த பின்னரே கேஸை புக் பண்ணியுள்ளது காவல்துறை.


நடராஜனின் அக்கா ராஜலெட்சுமியின் மகன் சுரேஷ் என்பவருக்கு, திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் 1.69 ஏக்கர் நிலம் இருந்தது. அதனை ரூ1 கோடியே 60 லட்சம் விலைக்கு திருச்சியில் லாவண்யா பில்டர்ஸ் நடத்தி வரும் வரதராஜன் என்பவர் புரோக்கர்கள் மூலம் வாங்க விரும்பினார். பேச்சுவார்த்தை முடிந்து ரூ50,000 அட்வான்ஸ் தொகை கடந்த ஆண்டே சுரேஷிடம் கொடுக்கப்பட்டது. அதன்பின் மீதித் தொகையையும் செட்டில் செய்திருக்கிறார் வரதராஜன்.


பணம் கிடைத்த பின்னரும் சுரேஷ் அந்த இடத்தை வரதராஜனின் பெயருக்கு எழுதிக் கொடுக்கவில்லை.


நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு கேட்டதற்கு, நிலத்தையோ, பணத்தையோ கொடுக்க முடியாது என சுரேஷும், நடராஜனும் வேறு சிலரும் மிரட்டியதாக புகார் கொடுத்தார் வரதராஜன். அதன்பேரில் நடராஜன், சுரேஷ், குமார், சரண், அனந்தகிருஷ்ணன், சுரேஷின் மாமனார் செல்லபாண்டியன் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இவர்களில் நடராஜன் திருச்சி மத்திய சிறையில் உள்ளார். நடராஜனின் அக்கா மகன் சுரேஷ், புரோக்கராக செயல்பட்ட குமார் ஆகிய இருவரையும் தஞ்சாவூரில் கைது செய்துள்ளனர். மற்றையவர்கள் தலைமறைவு என வழமைபோல கூறப்பட்டுள்ளது.


இந்த வழக்கு பதிவான பின்னர், தனது கைதை வைத்து அரசியல் செய்திருக்கக்கூடிய காலம் கடந்து விட்டது என்பதை நடராஜன் புரிந்து கொண்டுள்ளார் என்கிறார்கள். நாம் அறிந்தவரை, நடராஜன் வெளியே வந்திருக்கக்கூடிய வேறு ஒரு வாய்ப்பும் அவருக்கு இருந்தது. அதையும் அவர் சரியாகக் கையாளவில்லை.


மேலிடத்துடன் முரண்படாமல் அடக்கி வாசிப்பது என்ற முடிவை அவர் எடுத்திருக்கவே சான்ஸ் அதிகம்.
Thanks to ViruVirupu

ஜாபர் சேட் முகத்தில் அவரே கரி பூசி கொண்டது எப்படி?

Posted: 02 Mar 2012 11:08 PM PST


ஜாபர் சேட் முகத்தில் அவரே கரி பூசி கொண்டது எப்படி?

"ஐ.ஜி.யாக இருக்கும் ஏ.கே.விஸ்வாதன் ஐ.பி.எஸ். மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம்" என்று தமிழ்நாட்டின் ஊழல் தடுப்பு கமிஷனர் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார். இது ஏ.கே.விஸ்வநாதனுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதை விட, தி.மு.க. ஆட்சியில் சூப்பர் முதல்வராக இருந்த ஜாபர் சேட்டு முகத்தில் பூசப்பட்ட கரி என்று சொல்லலாம். ஐகோர்ட்டில் இந்த வழக்கு பைசல் ஏன் ஆனது என்பதற்கு முன்பாக, ஏ.கே.விஸ்வநாதன் ஏன் இப்படி பழிவாங்கப்பட்டார் என்பதை தெரிந்து கொள்வதுதானே சரி.


1989ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியாக தமிழ்நாட்டில் பணியில் சேர்ந்தவர் ஏ.கே.விஸ்வநாதான். இவரது மனைவி சீமா அகர்வாலும் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கிறார். தற்போது, ஐ.ஜி. அந்தஸ்தில் இருக்கும் ஏ.கே.விஸ்வநாதன், கடந்த தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறையின் டி.ஐ.ஜி.யாக பணியாற்றினார். அதே உளவுத்துறையின் விஸ்வநாதனுக்கு மேல் அதிகாரியாக ஐ.ஜி. ஜாபர் சேட் பணியாற்றினார்.


ஐ.ஜி.யாக உளவுத்துறைக்கு வந்த சில நாட்களிலேயே, ஜாபர் சேட் அடாவடி செயல்களில் ஈடுபடத்தொடங்கினார். சட்டத்துக்கு புறம்பாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தனிப்பட்ட எதிரிகளை பழிவாங்கும் பணிகளில் ஜாபர் சேட் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதற்காக, விஸ்வநாதனையும் துணைக்கு அழைக்க, அவர் அதுபோன்ற செயல்களுக்கு தன்னால் ஒத்துழைப்பு தரமுடியாது என்று தெரிவித்துவிட்டார்.


சில நேரங்களில் முதல்வர் சொன்னார் என்று கூட விஸ்வநாதனை சட்டத்துக்கு புறம்பாக செயல்படுத்த தூண்டினார். அவரும் உளவுத்துறையில் இருப்பவர் தானே. இது ஜாபரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்பதை புரிந்து கொண்டு, அப்பணிகளை ஏற்க மறுத்தார். தனது கட்டளைகளை ஏற்க மறுத்ததன் விளைவு, விஸ்வநாதனின் பணி தொடர்பான ரகசிய அறிக்கையில்(ஏ.சி.ஆர்), விஸ்வநாதன் சரியாக பணியாற்ற முடியாதவர், திறமையில்லாதவர் என்றெல்லாம் எழுதிவிட்டார் ஜாபர்.


இதை கண்ட டி.ஜி.பி. ஜெயின், "வாட் ஜாபர்...? இப்படி ரிப்போர்ட் எழுதி இருக்கிறாய். உன்னுடைய விருப்பு, வெறுப்பை எல்லாம் இதில் காட்டக்கூடாது' என்று சொல்லி, அந்த ஏ.சி.ஆர் குறிப்பில் இருந்த வரிகளை நீக்கிவிட்டார் ஜெயின். இந்த நேரத்தில், விஸ்வநாதன் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, சென்னை நகர போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தடியடி சம்பவம் நடந்தது.


தடியடி சம்பவத்துக்கு காரணமே, ஏ.கே.விஸ்வநாதன் தான் என்று யாருமே எதிர்பாராத விதமாக, அன்றைய சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதற்கும் காரணம், ஜாபர் சேட், போலீஸ் கமிஷனரை அழைத்து 'விஸ்வநாதன் தலை உருண்டால் தான் உங்களை இதிலிருந்து காப்பாற்ற முடியும்' என்று சொல்லவே, வக்கீல்கள் வழக்கில் இருந்து தான் தப்பிக்கவும் முதல்வரின் நிழலாக இருக்கும் ஜாபர் பேச்சை கேட்டால்தான், கமிஷனர் பதவியில் நீடிக்கவும் முடியும் என்று அன்றைய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலையாட்டினார்.


அதன் பேரிலேயே, "ஐகோர்ட்டில் நடந்த தடியடி சம்பவத்துக்கு கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனனும் மற்றவர்களும் தான் காரணம். இச்சம்பவங்கள் நடந்து முடியும் வரை எனக்கு தெரியாது. தடியடிச் சம்பவம் முடிந்த பிறகே ஐகோர்ட்டுக்கு போனேன்" என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.


போலீஸ் கமிஷனர் போட்ட மனுவுக்கு அதிரடியாக ஏ.கே.விஸ்வநாதன் பதில் மனு தாக்கல் செய்தார். "ஐகோர்ட்டில் நடந்த தடியடி சம்பவங்கள் போலீஸ் கமிஷனருக்கு தெரியும். அவர் சம்பவ இடத்திலிருந்து அவரது உத்தரவின் பேரிலும் வழிகாட்டுதலின் பேரிலும் தான் இச்சம்பவங்கள் நடந்தன" என்று தெரிவித்தார் விஸ்வநாதன்.


இதையடுத்து, ஐகோர்ட்டில் நடத்தப்பட விசாரணையில், சம்பவ இடத்திற்கு தடியடி தொடங்கும் முன்பே, போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் அங்கே நின்றிருந்தது அப்பட்டமாக தெரிந்தது. எனவே, எல்லா போலீஸ் அதிகாரிகளையும் மாற்றம் செய்ய வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டத்தில் குதித்தனர்.


நாளுக்கு நாள் வக்கீல்கள் போராட்டம் தீவிரமாக, வக்கீல்கள் பிரச்னையை சமாளிக்க வேண்டும் என்றால், விஸ்வநாதனை மாற்ற வேண்டும் என்று முதல்வரிடம் சொல்லி, அவரை நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக மாற்றினார் ஜாபர். இந்த நிலையில் தான், அழகிரி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார். அவரது துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றும் படி அழைக்கப்பட்டார் விஸ்வநாதன். அங்கே சென்று. இரண்டு மாதங்கள் மட்டும் பணியாற்றினார். அழகிரியுடன் இணைந்து பணியாற்ற மறுத்து, சென்னை திரும்பினார்.


இந்த நேரத்தில், "உளவுத்துறையில் இருந்த போது, நாம் சொன்ன வேலைகளையும் விஸ்வநாதன் செய்யவில்லை. ஐகோர்ட் விஷயத்தில், அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். உங்கள் மகனைப் பற்றி தாறுமாறாகவும் தவறாகவும் டெல்லியில் பரப்பிவிட்டார் விஸ்வநாதன். அவர் மீது ஏதாவது வழக்குப் போட்டு சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் இது மற்ற அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்" என்று முதல்வரை உசுப்பேற்றினார் ஜாபர். முதல்வர் சம்மதம் தெரிவித்ததுமே, விஸ்வநாதன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துவிட்டதாக ஒரு செய்தியை பொய்யாக தயார் செய்து, பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அச்செய்தி வந்ததுமே, அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


அதாவது ஐ.பி.எஸ். அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை செய்ய வேண்டும் என்றால், எந்தெந்த நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமோ அதை ஜாபர் செய்யவேயில்லை. விஸ்வநாதனும் ஐ.ஜி. அந்தஸ்திலான அதிகாரி. ஜாபர் சேட்டும் ஐ.ஜி. அந்தஸ்திலான அதிகாரி. ஒரு ஐ.ஜி.யை பற்றி விசாரித்து அறிக்கை அனுப்ப, இன்னொரு ஐ.ஜி.யாக இருப்பவரால் முடியாது. ஆனால், விஸ்வநாதனை பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஐ.ஜி. ஜாபர் சேட் அறிக்கை அனுப்பினார். இதை அவர், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. அனுப் ஜெய்ஸ்வால், டி.ஜி.பி. ஜெயின் ஆகியோரிடம் முறைப்படி தெரிவித்திருக்க வேண்டும். அப்படி எதுவுமே செய்யாமல், ஜாபர் சேட் அந்த அறிக்கையை நேரிடையாக உள்துறைச் செயலர் மாலதிக்கு, தலைமைச் செயலர் ஸ்ரீபதிக்கும் அனுப்பி வைத்தார்.


இது தொடர்பாக, தலைமைச் செயலரையும் உள்துறைச் செயலரையும் டி.ஜி.பி. ஜெயினும் கூடுதல் டி.ஜி.பி. அனுப் ஜெய்ஸ்வாலும் சந்தித்து, "ஜாபரின் செயல்கள் சரியில்லை. விஸ்வநாதன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக அவரை, ஜாபர் பழிவாங்க துடிக்கிறார். இதற்கு அனுமதி தர வேண்டாம்" என்று தெரிவித்தனர். மேலும், ஜாபருக்கும் அவருக்கும் தனிப்பட்ட விரோதம் இருக்கிறது. அதன் காரணமாகவே, விஸ்வநாதனை பழிவாங்கத் துடிக்கிறார் என்று எழுத்துப் பூர்வமாக உள்துறை செயலர் மாலதிக்கு டி.ஜி.பி. ஜெயின் கடிதம் எழுதிருந்தார்.


அதன் பிறகும், ஜாபர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், விஸ்வநாதன் மீது வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கை விசாரிக்கும் படி ஸ்ரீபதியும் மாலதியும் உத்தரவிடுகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டி.ஜி.பி. ஜெயினை கட்டாய விடுமுறையில் செல்லும்படி செய்ய வைக்கிறார் ஜாபர். தமிழக அரசுக்கு எதிராக சதி செய்தார் என்று அனுப் ஜெய்ஸ்வாலை உளவுத்துறையிலிருந்து தூக்கியடிக்கிறார் ஜாபர்.


தன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து விஸ்வநாதன் ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார்.


அதே நேரத்தில், விஸ்வநாதன் மீது நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று லஞ்ச ஒழிப்புதுறையின் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில், அவரை கைது செய்து விசாரித்தால் தான், அவருக்கு எதிராக ஆதாரங்களை திரட்ட முடியும் என்று, சட்டத்துக்கு புறம்பான ரிப்போர்ட் கொடுக்கும்படி ஜாபர் கேட்க, லஞ்ச ஒழிப்புத்துறையும் கொடுத்தது.


ஆனால், அதை ஜாபரால் செயல்படுத்தமுடியவில்லை. விஸ்வநாதன் மீது முறையாக விசாரணை நடத்தியும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக எந்த வித ஆதாரத்தையும் சேகரிக்க முடியவில்லை. இதனால், ஐகோர்ட்டில் விஸ்வநாதன் தொடர்ந்த வழக்கில், தி.மு.க. அரசு பதில் மனு தாக்கல் செய்ய முடியாமல் காலம் தாழ்த்தி வந்தது.


இந்த நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி வந்தது. விஸ்வநாதன் மீது நடத்தப்பட்ட விசாரணையில் எந்த வித குற்றமும் இல்லை என்று அதிகாரிகள் தங்கள் மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, அவரது வழக்கை கைவிட்டுவிடலாம் என்று அறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கையை வைத்துதான், ஊழல் தடுப்புத்துறை கமிஷனரும், தலைமைச் செயலருமான தேபேந்திரநாத் சாரங்கி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்கிறார்.


சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில், இரண்டாவது பெஞ்ச் வந்ததது. அதாவது, "ஐ,ஜி.யாக இருக்கும் ஏ.கே.விஸ்வநாதன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் போடப்பட்ட வழக்கின் விசாரணையை நாங்கள் ரத்து செய்துவிடுகிறோம். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதற்கும் ஆதாரமில்லை. அவர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை" என்று தமிழக அரசின் ஊழல் தடுப்பு கமிஷனர் பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்கிறார்.


வழக்கு விசாரணையை ரத்து செய்து கொள்வதாக சொன்னதுமே, ஏ.கே.விஸ்வநாதன் தரப்பை நீதிபதிகள் எலிபி தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் "நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?' என்று கேட்கிறது. "வழக்கையும் நாங்கள் வாபஸ் பெற்றுக் கொள்கிறோம்" ஏ.கே.விஸ்வநாதனின் வக்கீல் செல்வராஜ் பதில் அளித்தார்.அதன் பேரில் தான் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.


தி.மு.க. அரசில் போடப்பட்ட பொய் வழக்கில், அ.தி.மு.க. அரசில் நியாயம் கிடைத்திருக்கிறது! இது ஏ.கே.விஸ்வநாதனுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட, ஒரு நேர்மையான அதிகாரியை பழி வாங்க தனது முகத்திலே ஜாபர் சேட் கரி பூசிக் கொண்டார் என்பதுதான் போலீஸ் வட்டாரத்தில் பேசப்படும் செய்தியாக இருக்கிறது.
Thanks to TamilLeader

தயாநிதி மாறன் பற்றி வெளிநாட்டு உளவுத் துறையிடம் தகவல்கள்!

Posted: 02 Mar 2012 11:05 PM PST


தயாநிதி மாறன் பற்றி வெளிநாட்டு உளவுத் துறையிடம் தகவல்கள்!

சில வெளிநாட்டு உளவுத்துறைகளிடம் இருந்து தயாநிதி மாறன் பண டீலிங் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு, வெளியுறவு அமைச்சு பச்சைக் கொடி காட்டி விட்டது.


வெளிநாட்டு உளவுத்துறைகளின் உதவி கோரவேண்டும் என்று சி.பி.ஐ.-யால் எடுக்கப்பட்ட முடிவு, வெளியுறவு அமைச்சின் அனுமதிக்காக, 'வழமையைவிட' நீண்ட காலம் காத்திருக்க நேர்ந்தது என்கிறார்கள்.


2ஜி-ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் இந்த டீல் நேரடியாக வரவில்லை. ஆனால், ஒதுக்கீட்டை பெறப்போகும் நிறுவனத்தை அழுத்தம் கொடுத்து கைமாற்றிவிட்ட விவகாரத்தில்தான் இந்த பண டீலிங் வருகிறது.


ஏர்செல் நிறுவனத்தை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி நெருக்கடி கொடுத்ததாக, ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சி.பி.ஐ.-யில் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தை தமக்கு பெற்றுக் கொடுத்த உதவிக்கு, தயாநிதிக்கு மேக்ஸிஸ் கைமாறு செய்ய வேண்டாமா?


அதுதான் இந்த பண வழங்கல் (547 கோடி ரூபா) என்பதே சி.பி.ஐ.-யின் வியூ பாயின்ட்.


2ஜி-ஸ்பெக்ட்ரம் நேரடி ஊழலில், கைமாறிய பணம் இந்தியாவுக்குள் ட்ராக்-டவுன் பண்ணக்கூடிய வகையில் கைமாறியதில்தான் ராசா, கனிமொழி என்று வரிசையில் ஆட்கள் சிக்கிக் கொண்டார்கள். ஆனால், தயாநிதிக்கு போன பணம் அவ்வளவு சுலபமான ட்ரான்சாக்ஷனில் உள்நாட்டுக்குள் சுற்றி வரவில்லை என்று சி.பி.ஐ.-க்கு தெரிந்து வைத்திருக்கிறது.


சி.பி.ஐ. ஆவணங்களின்படி, இந்தப் பணம் இந்தியாவுக்குள் வருமுன் மேற்கில் இருந்து தென்கிழக்காக ஒரு ரவுண்ட் அடித்துவிட்டுதான் வந்திருக்கிறது.


பெர்முடாவில் ஒரு வரவு. அங்கிருந்து லண்டனுக்கும், கோலாலம்பூருக்கும் அடுத்தடுத்து ட்ரான்ஸ்ஃபர், கோலாலம்பூரில் இருந்து நேரடியாகவும், சிங்கப்பூர் ஊடாகவும் இந்தியாவுக்குள் வருகை என சுலபமாக ட்ராக்-டவுன் பண்ண முடியாத பாதையில் வந்த பணம் இது.


1980-களில் கனடாவில் பிரையன் மல்ரோனி பிரதமராக இருந்த நாட்களில், அரசு நிறுவனமான ஏர் கனடாவுக்கு பிரெஞ்ச் ஏரோ-பார்ஷியல் நிறுவனத்திடம் இருந்து ஏர்-பஸ் விமானங்கள் வாங்கிய விவகாரம் ஒன்று சர்ச்சையில் அடிபட்டது. அதில் தொடர்புடையதாக கூறப்பட்ட பணமும் இப்படியொரு பெரிய சர்க்கிள் ட்ரிப் அடித்து மொன்ட்ரியாலுக்கு வந்ததாக விசாரணை இழுபட்டுக் கொண்டிருந்தது.


(பிரையன் மல்ரோனி தாமே திறமையான லாயர். பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியபின் அவரது சொந்த சட்ட நிறுவனமே அந்த வழக்கை போட்டு மிகத் திறமையாக புரட்டி எடுத்தது. இறுதியில் எதையும் நிரூபிக்க முடியவில்லை)


தயாநிதி விவகாரத்திலும் கிட்டத்தட்ட அப்படியான சுற்றுப் பாதையில்தான் பணம் வந்ததாக சி.பி.ஐ. சொல்கிறது.


கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் பண டீலிங்குகளை சி.பி.ஐ. விபரமாக தெரிந்து வைத்திருக்கிறது. ஆனால், பெர்முடா, லண்டன் ட்ரான்ஸாக்ஷன்களை குத்து மதிப்பாகவே தெரிந்து வைத்திருக்கிறது. பூரணமாக தெரிந்துகொள்ள வேண்டுமானால், சம்மந்தப்பட்ட வெளிநாட்டு உளவுத்துறைகளின் உதவி தேவை.


இதை சி.பி.ஐ. இரண்டு வழிகளில் செய்யலாம். ஒன்று நேரடியான, சுலபமான வழி. ஆனால் அரசியல் காரணங்களுக்காக அந்த வழியில் செல்ல மாட்டார்கள்.


இரண்டாவது கொஞ்சம் கடினமான பாதை. மத்திய வெளிவிவகார அமைச்சின் அனுமதி பெற்று… அவர்கள் ஊடாக பிரிட்டனிலும், பெர்முடாவிலும் (அமெரிக்காவுக்கு அருகேயுள்ள, பிரிட்டிஷ் ஓவர்ஸீஸ் டெரிட்டரி) உள்ள இந்திய தூதரகங்களை அணுகி… அவர்கள் மூலமான அங்குள்ள உளவுத்துறைகளை அணுகி…. அவர்களது சட்டத்துக்கு உட்பட்ட முறையில் தகவல் பெறுவதுதான் இந்த இரண்டாவது பாதை.


இந்த வழியில்தான் செல்லப் போகிறது சி.பி.ஐ.! தற்போது, டில்லியில் மத்திய வெளியுறவுத் துறையின் அனுமதி கிடைத்துள்ளது.


சரி. இதில் முதலாவது பாதை ஒன்றும் இருப்பதாக சொன்னோமல்லவா? அதை அரசியல் காரணங்களுக்காக இவர்கள் செய்யப் போவதில்லை. இருந்தாலும் அதையும் சொல்லி விடுகிறோம்.


அதன்படி, முதலில் தயாநிதி மாறனுக்கு எதிராக ஒரு கிரிமினல் ஆஃபென்ஸ் ரிலேடட் கேஸ் ஷீட் தாக்கல் செய்து அவரை கைது செய்ய வேண்டும். அதன்பின், நேரே இன்டர்போல் சென்றுவிடலாம். INTERPOL Operations and Command Center-ன்  Economic Crimes Investigative Division-ல் ஓவர்ஸீஸ் கேஸ் பதிவு செய்யப்படும்.


கேட்கும் தகவல்கள் மின்னல் போல, புதுடில்லி வந்து சேரும்.
Thanks to ViruVirupu

மனைவியிடம் பொய் சொல்லும் கணவரா?

Posted: 02 Mar 2012 09:04 PM PST


மனைவியிடம் பொய் சொல்லும் கணவரா?

இன்னைக்கு நீ சூப்பரா இருக்கியே? என்ன விசயம்? தினசரி மனைவியைப் பார்த்து கணவர் சொல்லும் முதல் பொய் இதுவாகத்தான் இருக்கும். அப்போதுதானே அன்றைய பொழுது பிரச்சினை இல்லாமல் கழியும்.


இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே உள்ள கணவர்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பதற்காகத்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். மனைவியை திருப்தி படுத்த கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.


பொது இடத்தில் பொய்


மனைவியுடன் பொது இடத்தில் நடந்து செல்லும்போது அம்சமாய் ஒரு பெண் கிராஸ் செய்தால் அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை நோக்கி, இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க என்று கேட்டால். சீச்சீ நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே என்று கேட்பதோடு நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு 'அதை'ப் பார்க்கணும் என்பார்கள்.


புது ஐட்டம் பாஸ்


வீட்டில் ஏதாவது புதிதாக சமைத்தால் முதலில் பரிசோதனை செய்வது கணவரை வைத்துதான். மனைவியை சந்தோசப்படுத்த கணவரும் மூச்சுவிட முடியாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார். என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு ஓ, ரொம்ப நல்லா இருந்தது என்று கணவன்மார்கள் பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் விடுவார்களாம்.


சமைத்த சாப்பாடு நல்லா இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக் கொள்வார்கள். அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின் குணம்.


நீதான் அப்சரஸ்


புதிதாக ஒரு புடவையை கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள். உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள். அவர்கள் சொல்வது சேலையைத் தான் அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்..! (எதுக்குச் சொல்வானேன், அங்கங்கே எக்குத்தப்பா வீங்குவானேன்...)


கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் ஆண்கள்.


இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தானாம். இதையே சாக்காக வைத்து எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை கணவர்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Thanks to OneIndia

கென்டகி கர்னல்' மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் பாராட்டு

Posted: 02 Mar 2012 09:01 PM PST


கென்டகி கர்னல்' மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் பாராட்டு

சென்னை: கென்டகி கர்னல் விருது பெற்ற தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


முன்னாள் துணை முதல்வரும் திமுக பொருளாளருமான முக ஸ்டாலினுக்கு சமீபரத்தில் கென்டகி கர்னல் விருது கிடைத்துள்ளது. 


இதனைப் பாராட்டியும் வாழ்த்தியும் நடிகர் சங்கம் சமீபத்தில் நிறைலவேற்றியுள்ள தீர்மானம்:


"அமெரிக்க நாட்டின் கென்டகி மாநில கவர்னரால் அளிக்கப்பட்ட மிக உயரிய விருதான கென்டகி கர்னல் என்ற விருதை பெற்ற நடிகர் சங்கத்தின் கவுரவ உறுப்பினரான மு.க.ஸ்டாலினுக்கு இந்த செயற்குழு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது'' என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
Thanks to OneIndia

Nakeeran 03-03-2012 | Free Download Nakkeeran PDF This week | Nakkheeeran 3rd March 2012 Ebook

Posted: 02 Mar 2012 08:52 PM PST


Nakeeran 03-03-2012 | Free Download Nakkeeran PDF This week | Nakkheeeran 3rd March 2012 Ebook- First on Net

Junior Vikatan 07-03-2012 | Free Download Junior Vikatan PDF This week | Junior Vikatan 7th March 2012 Ebook

Posted: 02 Mar 2012 08:42 PM PST


Junior Vikatan 07-03-2012 | Free Download Junior Vikatan  PDF This week | Junior Vikatan 7th March 2012 Ebook -
First on Net
Download Links (6)

Ungalil Yaar Prabhudeva Season 2 04-03-2012 | Vijay Tv Shows Ungalil Yaar Prabhudeva 2 4th March 2012 Promo video

Posted: 02 Mar 2012 07:35 PM PST


Ungalil Yaar Prabhudeva Season 2 04-03-12 | Vijay Tv Shows Ungalil Yaar Prabhudeva 2 4th March 2012 Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Neeya Naana 04-03-2012 | Vijay Tv Neeya Naana 4th March 2012 Promo video

Posted: 02 Mar 2012 07:34 PM PST


Neeya Naana 04-03-12 | Vijay Tv Neeya Naana 4th March 2012 
Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

காற்று வாங்க ஜன்னல்களை திறக்கிறீர்களா? திருடர்களிடம் உஷார்-TechRenu

Posted: 02 Mar 2012 06:22 PM PST


காற்று வாங்க ஜன்னல்களை திறக்கிறீர்களா? திருடர்களிடம் உஷார்

சென்னை: காற்றுக்காக ஜன்னல், கதவுகளைத் திறந்து வைத்து தூங்கும் வீடுகளில் மர்ம நபர்கள் குறி வைத்து, நகை மற்றும் பணத்தை திருடுவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். காற்று வாங்க ஜன்னல்களை திறக்கிறீர்களா? உஷாராக இருங்கள்.


சென்னை மற்றும் புறநகரில் தினமும் இரண்டு மணி நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மின்சாரம் எப்போது போகும்; வரும் எனத் தெரியாத சூழல் நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் பல இடங்களில் நள்ளிரவு மற்றும் பகலில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை புறநகரை ஒட்டியுள்ள படப்பை, மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, வஞ்சாவஞ்சேரி, வைப்பூர், ஆதனூர், ஊரப்பாக்கம், வண்டலூர், மலைப்பட்டு, மாகாணியம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர், பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும், 10 மணி நேரம் மின் தடை உள்ளது. இது போன்ற சமயங்களில், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெயில் காலமும் துவங்கிவிட்டதால், பகலில் ஆடி, ஓடி உழைத்துவிட்டு இரவில் தூங்கும் சமயத்தில், மின்சாரம் தடைபடுகிறது. காற்றுக்காக கதவு, ஜன்னலை திறந்து வைத்து, பெண்கள் மற்றும் முதியவர்கள் படுத்து உறங்குகின்றனர்; சில இடங்களில் மாடியிலும் தூங்குகின்றனர். இதை திருடர்கள் சாதகமாக்கிக் கொள்கின்றனர்.


திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், எல்லையம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஏசுராமின் மனைவி ராஜேஸ்வரி, காற்றுக்காக வீட்டு ஜன்னலை திறந்து வைத்திருந்தார். நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவரின் கழுத்திலிருந்த ஐந்து சவரன் செயினை, மர்ம நபர் பறித்து தப்பினார். தூக்கத்தில் நகை பறித்ததை அறிந்து சத்தம் போட்டார். அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். திருவொற்றியூர் போலீசில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். இதுபோல, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் கடந்த சில மாதங்களாக, வீடுகளில் திருடு போகும் நகைகள் மற்றும் பொருட்களை பற்றி புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு சென்றால், புகாரை வாங்கி போலீசார் வைத்துக் கொள்கின்றனர். திருடனைப் பிடித்ததும் வழக்கு பதிவு செய்து நகையைத் தருகிறோம் என, போலீசார் கூறுகின்றனர். இதனால், விலை உயர்ந்த பொருட்களை பறிகொடுத்த மக்கள், யாரிடம் முறையிடுவது தெரியாமல் தவியாய் தவிக்கின்றனர். ஜன்னல் மற்றும் வீட்டின் கதவுகளைத் திறந்து வைக்காமல் விழிப்போடு இருந்தால் தான், நகைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. காற்றுக்காக கதவு ஜன்னலை திறந்து வைக்கும் போது உஷாராக இருங்கள்.
Thanks to Dinamalar

ஒதுங்குகிறார் சோனியா?

Posted: 02 Mar 2012 06:21 PM PST


ஒதுங்குகிறார் சோனியா?

தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல் பிரசாரங்களில், சோனியா தீவிரமாக ஈடுபட்டாலும், அரசியலில் இருந்து மெதுவாக அவர் ஒதுங்குகிறாரோ என்ற சந்தேகம், டில்லி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. ராஜிவ் காந்தி பவுண்டேஷன், இந்திரா காந்தி டிரஸ்ட், தீன்மூர்த்திபவன் மெமோரியல் என பல அமைப்புகள், சோனியா குடும்பத்தினர் வசம் உள்ளது. இந்த அமைப்புகளில் பிரியங்கா உறுப்பினராக உள்ளார். கோடிக்கணக்கான பணம் புரளும் இந்த அமைப்புகள், பிரியங்காவின் மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்பது சோனியாவின் விருப்பம். அதே சமயம் மகன் ராகுல், மேலும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு பலவித பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்கிறார் சோனியா காந்தி. தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று சோனியா விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.


தள்ளாடும் மத்திய அமைச்சர்: கவலை என்று வந்துவிட்டால், சிலர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர். இதற்கு வி.ஐ.பி.,க்களும் விலக்கு அல்ல. மத்திய இணை அமைச்சர் ஒருவரும், தற்போது இந்த பழக்கத்தால் தள்ளாடிக் கொண்டிருக்கிறார். இளம் அமைச்சரான இவர், நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர். டில்லி மாநில முதல்வராக வர வேண்டும் என்பது, இவரது ஆசை. அதற்கான தகுதிகளும் இவரிடம் உண்டு. ஆனால், முதல்வர் பதவி தான் காலி இல்லை. தற்போது முதல்வராக உள்ளவர், 74 வயதாகியும் ஸ்ட்ராங் ஆக உள்ளார். திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருந்து வெறுத்துப் போன இந்த மத்திய இணை அமைச்சர், அடிக்கடி டில்லியில் லோதி சாலையில் உள்ள பிரபல கிளப்பில் தென்படுகிறார். குடித்துவிட்டு நடக்க முடியாமல், இவர் திண்டாடுவதைப் பார்த்து, அங்கிருப்பவர்கள் வருத்தப்படுகின்றனர். முதல்வர் பதவியில் இருப்பவருக்கும், சோனியாவிற்கும் உறவு சரியில்லை. அத்தோடு, காமன்வெல்த் போட்டி ஊழலிலும் அந்த முதல்வர் பெயர் அடிபட்டாலும், அவருக்கு எதுவும் ஆகவில்லையே என்று குடித்துவிட்டு, நொந்து போய் சொல்கிறார் அந்த இணை அமைச்சர்.


சுப்ரீம் கோர்ட்டிலும் தமிழக அரசியல்: சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் இடையே, கழக அரசியல் நுழைந்து, தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. தற்போது இந்த தமிழக அரசியல், சுப்ரீம் கோர்ட்டிலும் தென்பட ஆரம்பித்துள்ளது. சில தமிழக வழக்கறிஞர்கள், தமிழக முதல்வர் பிறந்த நாளன்று, சுப்ரீம் கோர்ட்டில் லட்டுகளை வினியோகித்தனர். ஜெ., பேரவை தொடங்கியிருப்பதாகக் கூறி, சென்னையில் இந்த வழக்கறிஞர்கள் பணம் வசூல் செய்தனர். இதுவரை டில்லியில் சுப்ரீம் கோர்ட்டில் இப்படி எந்த ஒரு மாநில முதல்வரின் பிறந்த நாளும், கொண்டாடப்பட்டதில்லை. ஐகோர்ட்களில் என்ன அரசியல் இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டில் அது பிரதிபலித்தது இல்லை. காரணம், சுப்ரீம் கோர்ட் புனிதமான இடம் என்பதோடு, தற்போதுள்ள தலைமை நீதிபதி கபாடியா மிகவும் கண்டிப்பானவர். அத்தோடு ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள போது, இப்படி வழக்கறிஞர்கள் செய்வது, தலைமை நீதிபதிக்கு தெரியவந்தால், பெரும் பிரச்னை ஏற்படும் என்று, மூத்த வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.


தமிழக தலைவரின் ஆவல்: சென்ற வாரம் சுப்ரீம் கோர்ட்டில் ஓரினச் சேர்க்கை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது உள்துறை அமைச்சக அரசு வழக்கறிஞர், "ஓரினச் சேர்க்கை இயற்கைக்கும், நம் பாரம்பரியத்திற்கும் எதிரானது' என்று வாதிட்டார். இது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. உடனே உள்துறை அமைச்சக வழக்கறிஞர், "வாதிட்டது எங்கள் முடிவல்ல. அவரை நாங்கள் கோர்ட்டில் ஆஜராக சொல்லவில்லை' என்று மறுப்பு தெரிவித்தது. ஆனால், கோர்ட்டோ அந்த வழக்கறிஞர் உள்துறை அமைச்சகத்திற்கு வாதிட்டார் என்று பதிவு செய்துவிட்டது. இந்த விவகாரம் நடந்த மறுநாள், இந்த விசாரணையின் போது கோர்ட்டில் இருந்த ஒருவருக்கு சென்னையிலிருந்து போன் - "ஓரினச்சேர்க்கைக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் என்ன சம்பந்தம்? என்ன நடந்தது... எதற்கு உள்துறை அமைச்சர் பெயர் அடிபடுகிறது?' என கேட்டார். போனில் விசாரித்தவர் ஒரு முன்னாள் தமிழக அமைச்சர். நடந்த விவரங்களை அந்த முன்னாள் அமைச்சரிடம் சொன்னார் அந்த நபர். பின் அந்த முன்னாள் அமைச்சர், கட்சியின் முக்கிய பிரமுகரின் பெயரைச் சொல்லி, "தலைவர் கேட்கச் சொன்னார்... என்ன பிரச்னை' என்று விஷயத்தை போட்டு உடைத்தார். ஓரினச் சேர்க்கை விவகாரத்தில், தமிழக தலைவர்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை?
Thanks to Dinamalar

சி.பி.ஐ., வளையத்தில் உதயகுமார், லால்மோகன்: எந்த நேரத்திலும் பிடிபட வாய்ப்பு-TechRenu

Posted: 02 Mar 2012 06:18 PM PST


சி.பி.ஐ., வளையத்தில் உதயகுமார், லால்மோகன்: எந்த நேரத்திலும் பிடிபட வாய்ப்பு

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, தடை செய்யப்பட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தியது தொடர்பாக, உதயகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய, சி.பி.ஐ., நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, மக்களை பீதியில் ஆழ்த்தி, தடை செய்யப்பட்ட பகுதிகளில் போராட்டம் நடத்துவதாக, உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. போராட்டம் தொடர்பாக, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், நேற்று வரை, 225 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


சி.பி.ஐ., வலை: இதுகுறித்து, மத்திய உள்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டக்காரர் உதயகுமார், அவரது கூட்டாளிகள் புஷ்பராயன், மைபா ஜேசுராஜன், பாதிரியார் ஜெயக்குமார், ஜெர்மன் ஹவாலா ஏஜன்ட் ஹெர்மானுடன் தொடர்புடைய லால்மோகன் ஆகியோரது நடமாட்டங்களை, சி.பி.ஐ., போலீசார் தங்கள் வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். உள்ளூர் கியூ பிரிவு போலீசார் மற்றும் சிறப்பு பிரிவு சி.ஐ.டி., போலீசாரும், சி.பி.ஐ.,க்கு துணையாக, களத்தில் இறங்கியுள்ளனர். பல்வேறு இடங்களுக்கு உதயகுமார் காரில் செல்லும் போது, ஒவ்வொரு காராக மாறிச் செல்வதாக, சி.பி.ஐ., போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சி.பி.ஐ., போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


செயற்கைக்கோள்: இது தவிர, இடிந்தகரை பகுதியை, செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து வருகின்றனர். எந்த நேரத்திலும், உதயகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் நிதி அளித்த தொண்டு நிறுவனத்தினரை, சி.பி.ஐ., போலீசார் விசாரணைக்கு பிடித்துச் செல்லலாம் என, மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உதயகுமார் கைதாகும் வேளையில், இடிந்தகரையில் பயிற்சியளிக்கப்பட்ட அவரது ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபடலாம் என, போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதை சமாளிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


கூடுதல் டி.ஜி.பி., திடீர் ஆய்வு: கூடங்குளம் அணு மின் நிலையத்தில், தமிழக கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். கூடங்குளத்திலிருந்து, கடலோர கிராமங்களுக்குச் செல்லும் வழிகளை கேட்டறிந்தார். அவரது ஆய்வு மூலம், தமிழக அரசு விரைவில் கூடங்குளம் விவகாரத்தில், போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அணு மின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவே, கூடுதல் டி.ஜி.பி., பார்வையிட்டதாக, தமிழக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


- நமது சிறப்பு நிருபர் -