TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


கோச்சடையான் படத்திலிருந்து சினேகா நீக்கம்... ருக்மணி ஒப்பந்தம்!

Posted: 10 Feb 2012 01:32 AM PST


கோச்சடையான் படத்திலிருந்து சினேகா நீக்கம்... ருக்மணி ஒப்பந்தம்!

கால்ஷீட் பிரச்சினை காரணமாக, ரஜினியின் கோச்சடையான் படத்திலிருந்து நடிகை சினேகா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 


'கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்குகிறது. இந்த படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.


முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா ஆகியோரும் நடிக்கிறார்கள். ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.


அவர் மே மாதத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த மாதம் அவருக்கும் பிரசன்னாவுடன் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே சினேகாவும் பிரசன்னாவும் மாறி மாறி இதனை பத்திரிகைப் பேட்டிகளில் கூறி வருகின்றனர். 


எனவே அந்த நேரத்தில் அவர் கோச்சடையானில் நடிக்க முடியாது என்பது தெரிந்து, அவருக்குப் பதில் ருக்மணியை ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.


ருக்மணி சிறந்த நடனக் கலைஞர். பாரதிராஜா இயக்கத்தில் `பொம்மலாட்டம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். முக்கிய கலை நிகழ்ச்சிகளில் இவரது நடனம்தான் இப்போதெல்லாம் ஹைலைட். கோச்சடையானுக்காக நேற்று நடந்த 'போட்டோ சூட்'டிலும் (புகைப்பட ஷூட்டிங்) கலந்து கொண்டார்.


ரஜினியின் ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கவிருந்து, திடீரென கடைசி நேரத்தில் அவருக்குப் பதில் தீபிகா படுகோன் ஒப்பந்தமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.



ஜெ பற்றிய செய்தி வழக்கு: நக்கீரன் கோபாலை கைது செய்ய நீதிமன்றம் தடை!

Posted: 10 Feb 2012 01:19 AM PST


ஜெ பற்றிய செய்தி வழக்கு: நக்கீரன் கோபாலை கைது செய்ய நீதிமன்றம் தடை!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றி செய்தி வெளியிட்ட வழக்குகளில், நக்கீரன் ஆசிரியர் கோபாலை கைது செய்யக்கூடாது என்று போலீசாருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனுவில், "முதல்வர் ஜெயலலிதா மாட்டுக்கறி உண்டது குறித்து கடந்த ஜனவரி 7-ந் தேதி நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து நக்கீரன் அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் தாக்கினர். மேலும் அந்த செய்தி குறித்து என்மீது ஜாம்பஜார் போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

செய்தி வெளியிட்ட அதே நிகழ்வு தொடர்பாக என்மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு, அவற்றின் அடிப்படையில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

ஒரே குற்றத்தன்மை

ஜெயலலிதா பற்றி செய்தி வெளியிட்டதற்காக, எங்கள் மீது ஆபாச படங்களை வெளியிட்டதாகவும், மத உணர்வை புண்படுத்தியதாகவும், மத மோதலை ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் என்மீது பதிவாகியுள்ளது. ஒரே குற்றத்தன்மை கொண்ட புகாருக்காக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே தமிழகம் முழுவதும் என்மீது பதிவாகியுள்ள அனைத்து வழக்குகளையும், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ள ஜாம்பஜார் போலீஸ் நிலையத்துக்கு மாற்ற டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

கைதுக்கு தடை

இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். இந்த மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்வதற்கு அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் காலஅவகாசம் கேட்டார்.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள், 'இந்த வழக்கில் ஏற்கனவே கோபால் முன்ஜாமீன் வாங்கியுள்ளார். எனவே அதே குற்றச்சாட்டின்கீழ் பதிவான மற்ற வழக்குகளில், அவரை கைது செய்யக்கூடாது' என்று உத்தரவிட்டனர். வழக்கு 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

கடவுள் இருக்கிறாரா...? - சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதை!

Posted: 10 Feb 2012 01:18 AM PST


கடவுள் இருக்கிறாரா...? - சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதை!

கண்ணதாசன் நாத்திகராயிருந்து ஆத்திகராக மாறியது குறித்து ரஜினி சொன்ன ஒரு காரணம் இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம். அதை எழுத்தாளர்கள் பலரும் வியப்புடன் கேட்டனர். 


அந்தக் கதை:


"ஆண்டவன் இருக்கான்... இல்லேன்னு யுகம் யுகமா பேசிக்கிட்டிருக்காங்க. வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் சண்டை வருது. வசிஷ்டர் வாயால நான் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கறேன்னு. விஸ்வாமித்திரர் ஒரு அகோரி. கடவுள் நம்பிக்ககை இல்லாதவர். வசிஷ்டர் சாஸ்துவோக்தமா... கடவுள், கைலாசம், வைகுந்தம், வேதம் அப்டி போறவரு. விஸ்வாமித்திரர் கடவுளை நம்பாதவர், பஞ்ச பூதங்களை நம்புறவர். அப்படிப்பட்ட விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடமிருந்து பிரம்ம ரிஷி பட்டம் வாங்கினார். ஆக அந்த காலத்திலேருந்தே கடவுள் இருக்கானா இல்லையான்னு விவாதம் நடந்துகிட்டுதானிருக்கு.


இப்ப ரீசன்டா, டிடி ரங்கராஜனோட டிஸ்கோர்ஸ் பார்த்தேன். அவர் ஒரு சம்பவம் சொல்றார். அவர் அமெரிக்காவில் ஒரு ட்ரெயின்ல ஒரு சயின்டிஸ்ட். அவருக்கு முன்னால கொஞ்சம் சின்ன வயசு... பைபிள் படிச்சிக்கிட்டிருக்கார். 


உடனே சயின்டிஸ்ட் அந்த இளைஞரிடம், 'என்ன பண்றீங்க'ன்னு கேக்கறார். உடனே பைபிள் படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொல்றார். 


'இல்ல, என்ன வேலை செய்யறீங்கன்னு' கேக்கறார். 


உடனே 'சயின்டிஸ்ட்' என்கிறார் இளைஞர்... 


'ஓ.. சயின்டிஸ்டா, சரி என்ன படிச்சிக்கிட்டிருக்கே'...


'பைபிள்'.. அப்படீன்னு இளைஞர் சொல்றார்.


உடனே, 'ஏம்பா, அறிவிருக்கா... இது சயின்டிபிக் யுகம், சயின்டிபிக் காலம், எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்... நீயும் சயின்டிஸ்ட் என்கிறாய். இன்னும் நீ மதம், கடவுள், பைபிள், கிறைஸ்ட்டுனு படிச்சிக்கிட்டு உட்காந்திருக்கியே, நாமளே இப்படி உட்கார்ந்துட்டா, எப்படி நாடு முன்னேறும். மக்கள் என்ன ஆவறது. கொஞ்சமாவது அறிவை வளத்துக்க வேண்டாமா.. இனிமேலாவது இந்த புக்கு, பைபிளையெல்லாம் தூக்கி போடு, கடவுளு, மண்ணாங்கட்டின்னு' சொல்லிட்டார். 


'சரி'..ன்னு கேட்டுக்கிட்டார்.


'நீ ப்ரீயா இருக்கும்போது என்னை வந்து பார். இந்தா என் கார்டு... பேசலாம்ட-னு சொல்றார் சயின்டிஸ்ட். 


ஸ்டேஷன் வந்ததும், இறங்குறாங்க. கிளம்பும்போது, 'சரி, நான் என்னை உன்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டேன். நீ உன்னை என்கிட்ட அறிமுகப்படுத்திக்கவே இல்லையே'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.


உடனே, அந்த இளைஞர் தன் கார்டை கொடுக்கிறாங்க. அதை திருப்பி பார்த்தா, அது தாமஸ் ஆல்வா எடிசன்!


உடனே அந்த சயின்டிஸ்ட், 'சார் மன்னிக்கணும்... நீங்க எனக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கணும். உங்களைப் பார்க்கணும்னு', கேட்கிறார். 


'சரி வாங்கன்னு' சொல்லி டைம் கொடுத்தார் எடிசன். அந்த டைமுக்கு தாமஸ் ஆல்வா எடிசன் லேபுக்கு இந்த சயின்டிஸ்ட் போறாங்க. 


அந்த லேபுல, ஒரு பெரிய சோலார் சிஸ்டம் மாடல் ஒன்றை தாமஸ் ஆல்வா எடிசன் செஞ்சு வச்சிருக்கார். அதைப் பார்த்துவிட்ட சயின்டிஸ்ட், 'என்ன சார்.. இவ்வளவு அருமையா இருக்கு, இதை யார் செஞ்சாங்க, எத்தனை பேர் செஞ்சாங்க, பார்ட்ஸ் எங்கே கிடைச்சது'.. ன்னு கேட்டார்.


அதற்கு தாமஸ் ஆல்வா எடிசன், 'திடீர்னு ஒரு நாள் கதவைத் திறந்து பார்த்தேன். இந்த மிஷின் இருந்துச்சி'ன்னு சொல்றார்.


'சார், தமாஷ் பண்ணாதீங்க. நான் சீரியஸா கேக்கறேன். இதை எப்படி செஞ்சீங்க'ன்னு கேக்கறார் சயின்டிஸ்ட்.


'இல்லப்பா.. உண்மையிலேயே நான் ஒண்ணும் பண்ணல. திடீர்னு கதவை திறந்து பார்த்தேன். இது இங்கே இருந்தது'...ன்னு எடிசன் சொன்னாங்க. 


'சார்... சீரியஸாவே நான் கேக்கறேன்.. நான் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்... சொல்லுங்க'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.


'ஏம்ப்பா... நீங்க சயின்டிஸ்ட்டுங்க.. திடீர்னு ஒரு நாள் காஸ்மோஸ் (பிரபஞ்சவெளி) உருவாச்சின்னு சொல்றீங்க. திடீர்னு காஸ்மோஸ் உருவாகும்போது, இது உருவாகக் கூடாதா? கிரியேஷன்... Where there is a creation there should be a creator... படைப்பு இருந்தா, படைப்பாளி இருந்துதான் ஆகணும். Without the creator there is no creation. So கடவுள் இருக்கார்!', சயின்டிஸ்ட் சைலன்ட் ஆகிட்டார். 


இதை ஏன் சொல்றேன்னா... இது வந்து நடந்ததா இல்லையா என்பது வேறு.. தாமஸ் ஆல்வா எடிசன் அங்கே இருந்தாரா இல்லையான்றது டிஃப்ரன்ட்... சொன்னவர் இதை எங்கேயாவது படிச்சிருப்பார் டெபனிட்டா...


ஆனா, இதை எழுதினவர் என்ன சொல்ல விரும்பினார்... கடவுள் இருக்கார்னு சொல்றதுக்கு, இவர் இந்த சப்ஜெக்டை எடுத்துக்கிட்டார். இதுக்கு இந்த சிச்சுவேஷன் கிரியேட் பண்ணார். இதுக்கு ரெண்டு சயின்டிஸ்டை உருவாக்கினார். தாமஸ் ஆல்வா எடிசனை கொண்டு வந்தார். அவர் வாயால சொல்ல வச்சதாலதான், இது இந்த அளவு ஆழமா இது போகுது. இதான் ரைட்டருடைய வேலை. அந்த எழுத்தோட்டம் இருக்கு பாருங்க... அது ப்யூட்டிபுல். 


இந்த மாதிரி ஒரு ஓட்டத்தை நான் ராமகிருஷ்ணனிடம் பார்த்தேன். புதுசா இருக்கு. கண்டுபிடிக்கிற சிச்சுவேஷன்ஸ் டிஃபரெண்டா இருக்கு. பாத்திரங்கள் வித்தியாசமா இருக்கு. ஒண்ணொன்னும் வித்தியாசமா இருக்கு. எழுத்துங்கறது எவ்வளவு பவர்புல்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலை இல்லை!


கம்ப ராமாயணத்தை கொளுத்த முயன்ற கண்ணதாசன்


கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்... கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிஷம் யோசிச்ச கண்ணதாசன், சரி... அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!


படைப்பாளி கஷ்டப்படக் கூடாது!


எழுத்துக்கு, வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. படைப்புகளுக்கே இவ்வளவு சக்தி என்றால், படைப்பாளிகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும். நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள். ராமகிருஷ்ணன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன். படைப்பாளி கஷ்டப்படக்கூடாது. அவர்களா நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல சூழலில் இருக்க நாமெல்லாரும் துணை நிற்க வேண்டும்," என்றார்.

ஆசிரியையை குத்திக்கொன்றது ஏன்? கைதான மாணவர் பரபரப்பு வாக்குமூலம்

Posted: 10 Feb 2012 01:12 AM PST


ஆசிரியையை குத்திக்கொன்றது ஏன்? கைதான மாணவர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: போலீஸ் விசாரணையின்போது ஆசிரியை உமா மகேஸ்வரியை எதற்காக கொலை செய்தார் என்று கைதான மாணவர் முகமது இஸ்மாயில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


9ம் வகுப்பு மாணவர் முகமது இஸ்மாயில் இந்தி ஆசிரியை உமா மகேஸ்வரியை வகுப்பறையில் வைத்து கத்தியால் குத்திக் கொன்றார். இதையடுத்து அந்த மாணவர் மீது சட்டக்கல்லூரி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை ரகசியை இடத்தில் வைத்து விசாரித்தபோது பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


அதன் விவரம் வருமாறு,


நான் சென்னை ஏழுகிணறு தெருவில் பெற்றோருடன் வசித்து வருகின்றேன். என் தந்தை கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். எனக்கு இந்தி பாடம் அவ்வளவாக வராது. அதனால் ஆசிரியை உமா மகேஸ்வரி என்னை திட்டிக் கொண்டே இருப்பார். அது எனக்கு பிடிக்காது. மேலும் நான் சரியாகப் படிப்பதில்லை என்று ரிப்போர்ட் கார்டில் 3 முறை எழுதினார். அதைப் பார்த்து எனது பெற்றோர்கள் திட்டினார்கள். அவரால் நான் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது. 


இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து எனது வீட்டருகே உள்ள கடையில் ரூ. 20 கொடுத்து கத்தி வாங்கினேன். இந்நிலையில் உமா மகேஸ்வரி இந்தி ஸ்பெஷல் வகுப்பு நடத்தப் போவதாகக் கூறினார். அப்பொழுதே அவரை கொல்வது என்று தீர்மானித்தேன்.


காலை 11 மணிக்கு வகுப்புக்கு வரச் சொன்னார். ஆனால் நான் 10.50 மணிக்கே சென்றேன். அப்போது வகுப்பில் யாரும் இல்லாததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கத்தியால் குத்தினேன். 


நான் இப்படி செய்வேன் என்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. டேய் இப்படி செய்துவிட்டாயே என்று மட்டும் கூறினார். மேலும் தன்னைக் காப்பாற்றுமாறும் கத்தினார். அவரைக் கொன்றவுடன் தப்பிக்க முயலவில்லை. தண்டனையை ஏற்பது என்று முடிவு செய்தேன் என்றார்.



Athipookal 10-02-2012 | Sun Tv Athipookal Serial 10th february 2012

Posted: 10 Feb 2012 01:32 AM PST


Athipookal 10-02-12 | Sun Tv Athipookal Serial 10th february 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 10-02-2012 | Sun Tv Elavarasi Serial 10th february 2012

Posted: 10 Feb 2012 01:07 AM PST


Ilavarasi 10-02-12 | Sun Tv Elavarasi Serial 10th february 2012
Source 1

Source 2


This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 10-02-2012 | Sun Tv Theyagam Serial 10th february 2012

Posted: 10 Feb 2012 12:10 AM PST


Thiyagam 10-02-12 | Sun Tv Theyagam Serial 10th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Mankatha Arjun fight scene

Posted: 09 Feb 2012 11:38 PM PST


Mankatha Arjun fight scene

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 10-02-2012 | Sun Tv Muthaaram Serial 10th february 2012

Posted: 09 Feb 2012 11:53 PM PST


Mutharam 10-02-12 | Sun Tv Muthaaram Serial 10th february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 10-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 10th february 2012

Posted: 09 Feb 2012 11:10 PM PST


Vellai Thamarai 10-02-12 | Sun Tv Serial Vellai Thamarai 10th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 10-02-2012 | Sun Tv Uravugal Serial 10th february 2012

Posted: 09 Feb 2012 11:09 PM PST


Uravugal 10-02-12 | Sun Tv Uravugal Serial 10th february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

வயசான ஹீரோவாக இருந்தாலும் ஓ.கே.! - த்ரிஷா

Posted: 09 Feb 2012 10:22 PM PST


வயசான ஹீரோவாக இருந்தாலும் ஓ.கே.! - த்ரிஷா

நான் வயசான ஹீரோ, இளம் ஹீரோ என்றெல்லாம் பாரபட்சம் காட்ட மாட்டேன். எனது கேரக்டர் நன்றாக இருந்தால் யாருடனும் நடிக்க தயாராக இருக்கிறேன், என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயினாக தொடர்ந்து வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. ஒரு காலத்தில் இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவந்த த்ரிஷா, சமீப காலமாக கல்யாண வதந்திகளில் சிக்கி வருகிறார். எனக்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லை என்று ஒவ்வொரு முறையும் மறுத்து வரும் த்ரிஷா, நடிப்பு விஷயத்தில் தனது விதிமுறைகளை சற்று தளர்த்தியிருக்கிறார்.


இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், எந்த வயசா இருந்தாலும் பரவால்ல... கதையும் என் கேரக்டரும் நல்லாருந்தா, ஜோடியாக நடிக்க நான் ரெடி. என்னை விட வயது குறைவான இளம் ஹீரோ, வயசான ஹீரோ என எந்த பாரபட்சமும் பார்க்க மாட்டேன். எனக்கேற்ற கதை, நல்ல கேரக்டர் அமைய வேண்டும் என்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்துவேன், என்று கூறியுள்ளார்.

கலைஞர் ட்ரெயினிங்: “ஆச்சார்யா ஆஹா! மாறன் பிரதர்ஸ் ஹி ஹி”

Posted: 09 Feb 2012 10:19 PM PST


கலைஞர் ட்ரெயினிங்: "ஆச்சார்யா ஆஹா! மாறன் பிரதர்ஸ் ஹி ஹி"

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு கோர்ட்டில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கின் பப்ளிக் பிராசிகியூட்டர் ஆச்சார்யா விவகாரத்தை தி.மு.க.-வும் கையில் எடுத்துள்ளது.


"முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு எதிராக ஆஜராகும் அரசு சிறப்பு வழக்கறிஞரை, அப் பணியிலிருந்து அகற்ற, பா.ஜ.க.-வும், கர்நாடக அரசும் எந்த அளவுக்கு செயல்பட்டன என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது"' என்று கூறியுள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.


தி.மு.க. இந்த விவகாரத்தில் கருத்து கூறாவிட்டால்தான், அது ஆச்சர்யம். காரணம், தி.மு.க.-வுக்கு 'ஒரு கல் – இரு மாங்காய்' விவகாரம் இது.


முதல்வர் ஜெயலலிதாமீது சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருப்பதை மக்களுக்கு ஞாபகப் படுத்துவதாக ஒரு மாங்காய். பா.ஜ.க.-வுக்கு ஒரு இடி இடிப்பதன் மூலம், காங்கிரஸை ஆனந்தப் படுத்துவது இரண்டாவது மாங்காய்.


தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, பெங்களூரு கோர்ட்டில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில், 2004ம் ஆண்டு முதல் அரசு சிறப்பு வழக்கறிஞராக, ஆஜராகி வரும் ஆச்சார்யா, தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதிலிருந்து, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு உதவி புரிய பா.ஜ.க.-வும், கர்நாடக அரசும் எந்தளவுக்கு செயல்பட்டன என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்பது கருணாநிதியின் அறிக்கையின் சாராம்சம்.


ஊழல் வழக்கு விவகாரங்களில் வாய் திறக்கும்போது, மிக அவதானமாக வாய் திறக்க வேண்டிய நிலையில் உள்ள கட்சி தி.மு.க.தான்.


காரணம், மத்திய அரசில் இருந்து, மாநில அரசுவரை தி.மு.க.-வினருக்கு எதிராக வழக்குகள் தொடுத்துள்ளன. ஆச்சார்யா தொடர்பாக அறிக்கைவிட்டு எந்த மத்திய அரசை கருணாநிதி மகிழ்விக்கிறாரோ, அதே மத்திய அரசு தி.மு.க. தலைவரின் குடும்பத்தினருக்கு எதிராகவும் வழக்குகளை தொடுத்துள்ளது.


மாநில அரசே கருணாநிதி குடும்பத்தில் யாரையும் கைது செய்திராத நிலையில், மத்திய அரசு கனிமொழியை கைது செய்து உள்ளே வைத்துவிட்டு, இப்போது வெளியே விட்டிருப்பது, வெறும் ஜாமீனில்தான்! டில்லி சுப்ரீம் கோர்ட்டில் (கனிமொழி) இருந்து, மதுரையருகே மேலூர் டிஸ்ட்ரிக்ட் கோர்ட்வரை (அழகிரி) தி.மு.க. தலைவர் குடும்பத்து உறுப்பினர்கள் அடிக்கடி விசிட் அடிக்க வேண்டிய இடங்களாக உள்ளன.


இதனால், கோர்ட் விவகாரத்தில் வேறு யாராவது பற்றி தி.மு.க.-வினர் செய்தியாளர்களிடம் வாய்திறந்தால், அவர்களது தலைவரின் குடும்பம் பற்றி செய்தியாளர்கள் மறு கேள்வி கேட்டுவிடும் அபாயமும் உண்டு. ஒரு அசட்டுச் சிரிப்புடன் அதை சமாளிக்க திறமையும் வேண்டும்.


ஒரு உதாரணம் பாருங்கள்.


ஆச்சார்யா விஷயத்தில் கருணாநிதி அறிக்கை விட்டு, எதிர்க் கேள்வி இல்லாமல் தப்பித்துக் கொண்டார். ஆனால், அதே விவகாரத்தை செய்தியாளர்கள் முன் சொல்லத் துணிந்த தி.மு.க. எம்.பி. டிகேஎஸ். இளங்கோவன் சங்கடத்தில் மாட்டிக் கொண்டார். (இளங்கோவனுக்கு மத்திய அமைச்சராகும் சான்ஸ் அடிக்க உள்ளதாக சொல்கிறார்கள்)


செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், "பா.ஜ.க. ஆச்சார்யாவுக்கு நெருக்கடி கொடுத்து ஜெயலலிதாவுக்கு உதவிசெய்ய முயற்சிக்கிறது. இது ஊழலைக் காப்பாற்ற பா.ஜ.க. என்னவெல்லாம் செய்யும் என்பதைக் காட்டுகிறது" என்றார்.


அதற்கு ஒரு செய்தியாளர், "அது சரிங்க, மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்திருக்காங்களே… அது பற்றியும் கருத்து தெரிவியுங்களேன்" என்று எதிர்க் கேள்வி போட்டுவிட்டார்.


இதுதான் கலைஞர் குடும்பத்தை மடியில் கட்டிக்கொண்டு, சகுனம் பார்ப்பதில் உள்ள சிக்கல்.


பாவம் இளங்கோவன் என்ன செய்வார்? சமாளிஃபிகேஷன் விட வேண்டியதுதான்! "மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது பற்றி இப்போதுதான் நாங்கள் பத்திரிகையில் பார்த்தோம். அதையெல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்" என்று விட்டு நடையைக் கட்டினார்.


அண்ணே… ஆச்சார்யா விவகாரத்தை மட்டும் உங்களுக்கு அவரே போன் பண்ணி சொன்னாரா? அதையும் பத்திரிகையில்தானே பார்த்திங்க? .. வுடுங்க அவுகளே பாத்துக்குவாங்க"


Kasturi 10-02-2012 | Sun Tv kasthuri Serial 10th february 2012

Posted: 09 Feb 2012 10:11 PM PST


Kasturi 10-02-12 | Sun Tv kasthuri Serial 10th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 10-02-2012 | Sun tv Marudhaani 10th february 2012

Posted: 09 Feb 2012 10:09 PM PST


Maruthani 10-02-12 | Sun tv Marudhaani 10th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

கருப்பு நடிகருக்கும் காரியதரிசிக்கும் மோதல்?!

Posted: 09 Feb 2012 07:13 PM PST


கருப்பு நடிகருக்கும் காரியதரிசிக்கும் மோதல்?!

தன் பெயரிலேயே போதை வைத்திருக்கும் காமெடி நடிகருக்கும் அவரது காரியதரிசிக்கும் முட்டிக்கிச்சு என்கிறது கோலிவுட் வட்டாரம். பல படங்களில் காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் அவருக்கு எல்லாமுமாக இருந்த காரியதரிசி இப்போது சம்பந்தப்பட்ட நடிகரைப் பற்றி பேசினாலே உஷ்னம் தலைக்கேறி உர்ர்... என்கிறாராம்.காரணம் கேட்டால் வருத்தப்படுவதற்கு ஆயிரம் காரணம் இருக்கு என விரக்தியாக சொல்கிறார். 


அதே கேள்வியை நடிகரிடம் கேட்டாலோ நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டான்யா.. அத பாத்துக்குறேன்... இது பாத்துக்குறேன்னு லட்சக்கணக்கில் காசு அடிச்சுட்டான். எல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தது என்கிறார். எது மெய்யோ...எது பொய்யோ...!? 

Thalaimurai Kalvi 06-02-2012 | Free Download Puthiyathalaimurai kalvi magazine ebook 6th february 2012 ebook latest

Posted: 09 Feb 2012 07:10 PM PST


Thalaimurai Kalvi 06-02-2012 | Free Download Puthiyathalaimurai kalvi magazine ebook 6th february 2012 ebook latest

Download Link

Dinamalar E-paper 10-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 10th february 2012

Posted: 09 Feb 2012 06:16 PM PST


Dinamalar E-paper 10-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 10th february 2012

Download Link


Dinakaran E-paper 10-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 10th february 2012

Posted: 09 Feb 2012 06:16 PM PST


Dinakaran E-paper 10-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 10th february 2012

Download Link


அட்டகாசமான முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்தார்.

Posted: 09 Feb 2012 12:19 PM PST


அட்டகாசமான முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்தார்.

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்க, நான்கு வல்லுனர்கள் கொண்ட குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது. வல்லுனர்களைக் 
கொண்ட குழுவை அமைத்து, அட்டகாசமான முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளதால், மின் வெட்டே இல்லாத, "பிரகாசமான' மாநிலமாக தமிழகம் மிளிரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அணுஉலை எதிர்ப்பாளர்களின் கூடாரம் காலியாகும் நிலையும் உருவாகும். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களிடம் இதுகுறித்து தற்போது நிலவி வரும் எண்ணம் மற்றும் அச்ச உணர்வு குறித்தும் அறிந்து, அறிக்கை அளிக்கும் வகையில், மாநில அரசால் வல்லுனர் குழு அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது' என தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், முதல்வரது உத்தரவுப்படி, நான்கு பேர் கொண்ட குழு, நேற்று அமைக்கப் பட்டுள்ளது.


தலைமைச் செயலர் தேவேந்திரநாத் பிறப்பித்த உத்தரவு:
* பேராசிரியர் எம்.ஆர்.சீனிவாசன், முன்னாள் தலைவர், அணுமின் சக்தி கழகம்.
* டி.அறிவு ஒளி - பேராசிரியர், இயற்பியல் துறை, அண்ணா பல்கலைக்கழகம்.


* எஸ்.இனியன் - பேராசிரியர் மற்றும் இயக்குனர், எரிசக்தி ஆய்வு மையம், அண்ணா பல்கலைக்கழகம்.
* எல்.என்.விஜயராகவன், ஐ.ஏ.எஸ்., (ஓய்வு). வல்லுனர் குழுவின் அமைப்பாளராக, இனியன் செயல்படுவார். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேரும், அணுஉலை பாதுகாப்பு, அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து நன்கு அறிந்தவர்கள் என்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலத் தேவையையும், 




கூடங்குளம் அணு உலைக்கு அருகே வாழும் மக்களின் பாதுகாப்பு குறித்தும், துல்லியமாக விளக்குவர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து, கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்கி, தமிழகம், "பிரகாசிக்கும்' நிலை ஏற்பட்டுள்ளது. 
போராட்டக் குழுவினர் அதிர்ச்சி: "தமிழக அரசு, புதிதாக நிபுணர் குழு அமைத்தால், வரவேற்போம்' என, மொட்டையடித்து அறிவித்த உதயகுமார் மற்றும் குழுவினர், நேற்று, குழு உறுப்பினர்கள் பெயரைக் கேட்டதும், அதிர்ச்சி அடைந்துள்ளனர். "இந்த நிபுணர் குழு அறிவிப்பு, எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. போராட்டத்தை வாபஸ் பெறுவதா, தொடர்வதா என்பது குறித்து, நெல்லையில் இன்று தெரிவிக்கிறோம்' என அறிவித்துள்ளனர்.

கலி முத்திப்போச்சு., ‘கொலை வெறி ’ பெருகி போச்சு ! வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை

Posted: 09 Feb 2012 12:09 PM PST


 கலி முத்திப்போச்சு., 'கொலை வெறி ' பெருகி போச்சு ! வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை

சென்னை: பள்ளியில் நடத்தை குறித்து பெற்றோர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பியதால் ஆத்திரமுற்ற மாணவன் ஒருவன் சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பெண் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்து 500 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி 150 ஆண்டுகள் பழமையானவை. இங்குள்ள மாணவ, மாணவிகள் மீது மிகுந்த அக்கறையும், முழுக்கவனமும் எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் இங்கு 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் (15 வயது ஆவதால் பெயர் குறிப்பிட வில்லை) . இவன் சென்னை ஏழுகிணறு பகுதியில் வசித்து வருகிறான். இவரது தந்தை ரபீக் துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 


வேதியியல் மற்றும் இந்தி பாடம் எடுக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி (39 ) . மந்தைவெளியை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வழக்கம் போல் பாடம் எடுத்து விட்டு 3 வது பாடவேளையின் போது மாற்று வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் மாணவன் 


  ஆசிரியை நோக்கி ஆவேசமாக பாய்ந்தான். கையில் இருந்த கத்தியால் குத்தினான். இதில் 7 இடங்களில் குத்து விழுந்தது. மாணவன் கத்தியால் குத்தியதால் அதிர்ச்சியால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார். மாணவர்கள் அக்கம், பக்கம் ஓட துவங்கினர். கொலை செய்த மாணவன் எங்கும் ஓடாமல் வகுப்பறைக்குள்ளேயே இருந்தான். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியை உமாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இந்த சம்பவம் பள்ளியை சுற்றிஉள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மாணவனிடம் போலீஸ் விசாரணை: 
கைது செய்யப்பட்ட மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவனிடம் கேட்டதில் ; ஆசிரியை என்னுடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் என்னை பெற்றோர்கள் திட்டினர். எனவே எனக்கு பெரும் கோபம் ஏற்பட்டது. இதனால் குத்தி கொன்றேன் என்றான். இந்த மாணவன் அடிக்கடி பள்ளிக்கு வராமல் கட் அடிப்பான் என பள்ளி சக மாணவர்கள் கூறினர். 


கொலை வெறி., கொலைவெறி : சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவ ஒருவர் கூறுகையில்: மாணவர்களின் ரிப்போர்ட் குறித்து 


அவ்வப்போது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து விசாரித்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களது நிலைமை தெரிந்து அதற்கேற்ப பெற்றோர்கள் நடந்து கொள்ள முடியும். இப்போது வரும் சினிமாக்களை பார்த்து மாணவர்களின் மனம் மாறி விடுகிறது. கொலை வெறி., கொலைவெறி என்று பாடல்கள் எடுத்தால் நாட்டில் கொலை வெறிதான் தலை விரித்தாடும் என்றார். 


முன்னாள் போலீஸ் கமிஷனரின் உறவினர் ஆசிரியை :
கொலை செய்யப்பட்ட ஆசிரியை , சென்னையில் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற நாஞ்சில் குமரனின் உறவினர் ஆவார். ஆசிரியை கொலை சம்பவம் கேள்வி பட்டதும் அவர் ஆசிரியை வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார், ஆசிரியை கொலை சம்பவம் அடுத்து அவரது வீட்டில் உறவினர்கள் கதறி அழுதபடி இருந்தனர்.


கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தூத்துக்குடியில் டாக்டர் ஒருவர் கிளினிக் உள்ளேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் மாணவன் , ஆசிரியை ஒருவரை கொலை செய்திருப்பது பெரும் கவலை அளிப்பதாக மனித நேய விரும்பிகள் கருத்து கூறியுள்ளளனர்.

'தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி மக்களையும் குழப்பி...!!'-அஜீத்

Posted: 09 Feb 2012 12:04 PM PST


'தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி மக்களையும் குழப்பி...!!'-அஜீத் '

தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியலில் எதுக்கு இறங்கணும் என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.


ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான் அவரது நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இருந்து வந்தன.


அதே நேரம் க்யூவில் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியலை நிறுத்திக் கொள்வது அவர் வழக்கம்.


இந்தநிலையில் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.


அவர் கூறுகையில், "ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.


எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!'' என்று கூறியுள்ளார்.

அதிகமா ஜங்க் ஃபுட் கொடுக்காதீங்க அஜீரணம் ஆயிடும்

Posted: 09 Feb 2012 11:50 AM PST


அதிகமா ஜங்க் ஃபுட் கொடுக்காதீங்க அஜீரணம் ஆயிடும்

பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலோனோர் வயிற்றுக்கோளாறு, மலச்சிக்கல், வாயுப் பிரச்சினை போன்றவைகளால் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் உண்ட உணவு செரிமானமாகாமல் அஜீரணக் கோளாறுகளாலும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படுவதற்கான காரணங்களையும், அவற்றை தடுப்பது குறித்தும் ஆலோசனை தெரிவித்துள்ளனர் குழந்தை நல மருத்துவர்கள்


அவசரமாக உண்ணுதல்


காலையில் பள்ளி செல்லும் அவசரத்தில் குழந்தைகள் அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு பள்ளி வாகனத்தைப் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள். அவசர கோலத்தில் சாப்பிடுவது அஜீரணத்திற்கு காரணமாகிறது. உணவை நன்கு மென்று நிதானமாக சாப்பிடும்போதுதான் ஜீரணம் எளிதாக நடைபெறுகிறது. உணவானது உமிழ் நீருடன் சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது வேக வேகமாக சாப்பிடுவதால் எளிதில் அஜீரணம் தொற்றிக் கொள்கிறது.


இயக்கத்திற்கு உதவும் உணவு


பெரும்பாலான குழந்தைகள் நேரமின்மையால் அவசர அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள் அல்லது காலை உணவை தவிர்க்கின்றனர். இந்த இரண்டுமே அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.


காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. எனவே காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.


குழந்தைகள் காலையில் சாப்பிட மறுத்தாலும் சில நாட்களுக்கு பழக்கம் வருவதற்காக கட்டாயமாக சாப்பிட வைத்தால் பிறகு தானாகவே காலை 8 மணிக்குள் வயிறு பசிக்கத் தொடங்கிவிடும். சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.


பசியின்மைக்கான காரணம்


குழந்தைகளுக்கு பசியின்மை இப்போது அதிகமாக உள்ளது. காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக பசிக்காது. அதேபோல `ஜங் புட்' எனப்படும் உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கும் அதிகம் பசி வராது. துரித உணவுகள் எளிதில் வயிற்றை நிரப்பிவிடும். எனவே வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் சாப்பிட முடியாது. மேலும் ஜீரணத்தை சிதைத்துவிடும். எனவே அஜீரணம் ஏற்படுகிறது. குழந்தை பசியின்மையாக இருந்தால் பிரச்சினைக்கான காரணத்தை தெரிந்து அதற்காக சிகிச்சை அளிக்கவேண்டும்


சுகாதாரமற்ற உணவுகள்


அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. உணவு சாப்பிடும் பழக்கம் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிறது. கோடைகாலங்களில் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில் சுத்தம், சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.


வயிற்று உப்புசம்


அஜீரணத்தை உருவாக்கும் ஒரு நோய் செலியாக். கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால் மற்றும் பால் உணவுகளில் `குளூட்டன்' என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய் `செலியாக்' எனப்படுகிறது. இதன் அறிகுறிகளாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் கெட்டவாடை வீசும். வயிறு உப்புசம் உருவாகும். இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும். உடல் எடை குறையும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க அந்த புரதம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.


பால் பொருட்கள்


பால் மற்றும் பால் உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள் பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். இப்படி பால் ஒத்துக் கொள்ளாத பிரச்சினையை `லாக்டோஸ் இன்டால ரன்ஸ்' என்று குறிப்பிடுவார்கள்.


பயறு, கோஸ், பீன்ஸ் போன்ற உணவுகள் நைட்ரஜன் சத்து அதிகம் கொண்டவை. இவை அஜீரணத்தை ஏற்படுத்தும். காரம் அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக் கொண்டு, வாயு தொந்தரவு தரும் உணவுகளை தவிர்த்தால் வயிற்று வலியை தவிர்க்கலாம். அஜீரணத்தை தடுக்கலாம்.


அதிக பசியாலும், வயிற்று எரிச்சலாலும் தொப்புள் பகுதிக்கு மேல்புறமாக வலிக்கும். காலை உணவு சாப்பிடாவிட்டாலும், அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடு பவர்களுக்கும் மேற்கண்டது போலவே வலி ஏற்படும். அதற்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிக்கவேண்டும்.


தண்ணீர் மருத்துவம்


குழந்தைகளுக்கு அதிகம் தண்ணீர் கொடுத்து பழக்கவேண்டும். ஏனெனில் தண்ணீர் பலவித பிரச்சினைகளை தடுக்கும். போதுமான தண்ணீர் பருகா விட்டால் ஜீரணம் பாதிக்கும். ஜீரணம் சரியாக இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் அதிகரித்தால் மலத்தோடு கோடுபோல ரத்தம் வெளியேறும். இது மல துவாரத் தின் கீழ்ப்பகுதி கிழிவதால் ஏற்படுகிறது. இதனால் `ஆனல் பிஷர்' நோய் உண்டாகும்.


தண்ணீர் அதிகம் குடிக்காமல் சாப்பிடுவது, பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிக்க வைக்க பழக்க வேண்டும். பழங்கள், நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வைக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

''என்று தணியும் இந்த மின்சார தாகம்?'': விஜயகாந்த்

Posted: 09 Feb 2012 11:48 AM PST


''என்று தணியும் இந்த மின்சார தாகம்?'': விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் ''என்று தணியும் இந்த மின்சார தாகம்'' என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு இதை உணருமா? மக்களுக்கு பரிகாரம் விரைவில் கிடைக்குமா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.


அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்ற நிலை தான் உள்ளது. விவசாயத்திற்கு மின்சாரம் கிடைக்கவில்லை. பின்னர், மகசூலை எப்படி அதிகரிக்க முடியும்?.


தினசரி 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று சொன்னாலும், அது பல மணி நேரம் நீடிக்கிறது என்பதுதான் உண்மை. சிறு, குறுந்தொழில் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் மின்வெட்டால் தினமும் ரூபாய் 400 கோடிக்கு உற்பத்திக்கு இழப்பு என்று அறிக்கை தருகிறார். கடனை வாங்கி விவசாயத்திலோ, தொழிலிலோ முதலீடு செய்து விட்டு மக்கள் தவிக்கின்றனர்.


பள்ளிக்கூடப் பிள்ளைகள் படிப்பதில் இருந்து, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து தொழில்களை துவங்கி விட்டு மின்சாரம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் திகைக்கின்ற அளவில் பரிதாப நிலைதான் ஏற்பட்டுள்ளது.


அண்டை மாநிலங்களில் இருந்தும், அன்னிய நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டில் மூலதனம் போட்டு தொழில்களை துவங்குவதற்கு கூட மின்சாரப் பற்றாக்குறையால் தயங்குகின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள தொழில்களை விரிவாக்கம் செய்பவர்கள் கூட வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் நாளும் பெருகி வருகிறது.


கடந்த ஆகஸ்ட் முதல் மின்வெட்டே இருக்காது என்று முதல்வர் கூறினார். இப்போது அவர் அடுத்த ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின்பற்றாக்குறை நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


மின்சாரமே கிடைக்காத சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை அபரிமிதமாக உயர்த்துவதற்கு ஜெயலலிதா அரசு பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதுபற்றி பொது மக்களிடம் கருத்து கேட்கிறது.


கருத்துக் கேட்பு கூட்டங்களில் பொது மக்கள் ஆவேசப்படுவதும், அதிகாரிகள் பொது மக்களை சந்திக்க பயப்படுவதும், போலீஸ் காவலை வைத்துக் கொண்டுதான் பொது மக்கள் குறை கேட்கும் கூட்டங்களை நடத்த வேண்டி உள்ளது என்பதும் இன்றுள்ள தத்ரூபமான நிலைமை.


''என்று தணியும் இந்த மின்சார தாகம்'' என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு இதை உணருமா? மக்களுக்கு பரிகாரம் விரைவில் கிடைக்குமா?


இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Ananda Vikatan 15-02-2012 | Free Download Ananda Vikatan PDF This week | Ananda Vikatan 15th february 2012 ebook

Posted: 09 Feb 2012 11:27 AM PST


Ananda Vikatan 15-02-2012 | Free Download Ananda Vikatan PDF This week | Ananda Vikatan 15th february 2012 ebook

Download Link