TV SHOWS | MOVIES | TV SERIALS |
- லிப்-டூ-லிப் முத்தக்காட்சி : காட்டுபுலி படத்திற்கு 14கட்!!
- சொத்துக்குவிப்பு விசாரணைக்கு தனியாக வந்த சசி; ஜெ., வை பிரிந்த நிலையில் போட்டு கொடுப்பாரா ?
- பிரதமரின் விருந்துக்கு 'கொலவெறி' நாயகி ஸ்ருதிக்கும் அழைப்பு
- 'அந்த' மாதிரி பெண்களுக்காக செலவு செய்யும் ப.சி: 'ட்விட்டரில்' குண்டு போடும் சு.சாமி'!
- 8 மணி நேர மின்வெட்டு: அம்மி, உரலை நாடும் பெண்கள்
- Thiyagam Serial 09-02-2012 | Sun Tv Serial Thiyagam 9th february 2012
- Athipookal 09-02-2012 | Sun Tv Athipookal Serial 9th february 2012
- Ilavarasi 09-02-2012 | Sun Tv Elavarasi Serial 9th february 2012
- ஆபாச பட புகார் : அமைச்சர்கள் சிக்கியதன் பின்னணி
- Cinekoothu 08-02-2012 | Free Download Cinikoothu PDF This week | Cinikoothu 8th february 2012 ebook
- Nakkeeran 08-02-2012 | Free Download Nakeeran latest PDF This week | Nakkheeeran 8th february 2012 ebook
- Mutharam 09-02-2012 | Sun Tv Muthaaram Serial 9th february 2012
- Vellai Thamarai 09-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 9th february 2012
- Uravugal 09-02-2012 | Sun Tv Uravugal Serial 9th february 2012
- Kasturi 09-02-2012 | Sun Tv kasthuri Serial 9th february 2012
- Maruthani 09-02-2012 | Sun tv Marudhaani 9th february 2012
- சச்சினுக்காக தனுஷ் உருவாக்கிய பாடல் வெளியான ஒரு மணிநேரத்துக்குள் சூப்பர் ஹிட்
- குழந்தையை பெற்றெடுக்க ஊட்டச்சத்து உணவு முக்கியம்
- பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள் ராஜினாமா
- போரடிக்குதா? புதுசா ட்ரை பண்ணுங்களேன் !
- முதலில் சிம்பு! இப்போ பிரபுதேவா!! நயன்தாரா உறவினர்கள் புலம்பல்!!!
- இலவச மின்சாரத்தால் மின்வாரியத்திற்கு, 6,438.93 கோடி ரூபாய் நஷ்டம்
- விவாதம் அவசியம்!
- Dinakaran E-paper 09-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 9th february 2012
- Dinamalar E-paper 09-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 9th february 2012
லிப்-டூ-லிப் முத்தக்காட்சி : காட்டுபுலி படத்திற்கு 14கட்!! Posted: 09 Feb 2012 01:20 AM PST லிப்-டூ-லிப் முத்தக்காட்சி : காட்டுபுலி படத்திற்கு 14கட்!! சமூகத்தைப் பாதுகாக்கும் முக்கியமான மூன்று துறைகளில் ஒன்றான மருத்துவத்துறையில் நுழையும் புல்லுருவிகளால், சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுகிறது என்று அலசியிருக்கிறார் இயக்குனர் டினு வர்மா. முழுக்கமுழுக்க நரமாமிசம் உண்பவர்கள், மனிதர்களை வேட்டையாடும் காட்சிகள் போன்றவை திரைப்பட ரசிகர்களுக்கு திகிலுடன் கூடிய புது அனுபவமாக இருக்கும். தனது மனைவி குழந்தையுடன் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் டாக்டர் அர்ஜூனுக்கு உதவி செய்ய வரும் மூன்று ஜோடிகள், அதனைத் தொடர்ந்து ஏற்படும் பரபரப்பான சம்பவங்கள், கொலைகள், அதிலிருந்து எப்படி அனைவரையும் அர்ஜூன் காப்பாற்றுகிறார் என்பதே காட்டுப் புலியின் விறுவிறுப்பான கதை. படத்தில் நிறைய திகில் காட்சிகளை வைத்திருக்கும் டைரக்டர் கூடவே நிறைய கிளுகிளு காட்சிகளையும் அதிகமாக வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஜாஹன் – ஜெனிபர் ஜோடிக்களுக்கு இடையே வரும் லிப் டூ லிப் முத்துக்காட்சியை பார்த்த சென்சார் போர்டு 14 கட் கொடுத்திருக்கிறது. அந்தளவிற்கு படத்தில் கிறங்கடிக்கும் காட்சிகள் இருந்திருக்கிறது. சென்சார் போர்ட்டின் இந்த நடவடிக்கை டைரக்டருக்கு ஒருவிதம் வருத்தம் அளித்தாலும், அனைத்து தரப்பினரும் படத்தைப் பார்த்து ரசிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். டினு வர்மா தனது, கிபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து இருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. |
சொத்துக்குவிப்பு விசாரணைக்கு தனியாக வந்த சசி; ஜெ., வை பிரிந்த நிலையில் போட்டு கொடுப்பாரா ? Posted: 09 Feb 2012 01:18 AM PST சொத்துக்குவிப்பு விசாரணைக்கு தனியாக வந்த சசி; ஜெ., வை பிரிந்த நிலையில் போட்டு கொடுப்பாரா ? கடந்த, 1991-96ல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதில் ஜெ., சசிகலா, இளவரசி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் . சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜெ., சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் வழக்கை தாமதிக்கும் நோக்கிற்கு ஒரு உதாரணமாக மாறிவிட மாட்டோம் என நீதிபதிகள் நிராகரித்தனர். இதனையடுத்து கடந்த அக்., மற்றும் செப்., மாதங்களில் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன்பு ஆஜரான ஜெ.,விடம் சுமார் 700 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இவருடன் சசிகால துணையாக வந்திருந்தார். ஆனால் கடந்த மாதம் இருவரும் பிரிந்து விட்டபடியால் சொத்து குவிப்பு வழக்கு பாதை எப்படி மாறுமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. காரணம் சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் பலரை தமிழக அரசு வழக்குகள் போட்டு சிறைக்குள் தள்ளியிருக்கிறது. ஒரே வழக்கில் குற்றவாளிகளாக ஜெ.,வும், சசியும் இருப்பதால் வழக்கில் சசிகலா தற்போது என்ன வாக்குமூலம் கொடுக்க போகிறார் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையில் கோர்ட்டில் தன்னிடம் தமிழில் கேள்விகள் கேட்டு பதிவு செய்ய வேண்டும் என சசி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இது தள்ளுபடியாகி விட்டது. இருப்பினும் இவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். இதனால் இன்றைய விசாரணை நடக்கவில்லை. மீண்டும் வரும் 18 ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். பிளைட்டில் வந்த சசி தற்போது காரில்: வழக்கமாக இதற்கு முன்னதாக இந்த விசாரணைக்கு சசி , ஜெ.,வுடன் விமானத்தில் தான் வருவார். ஆனால் இந்த முறை காரில் வந்தார். அவருடன் எந்த கூட்டமும் வரவில்லை. கோர்ட் அறையில் இளவரசியும், சசியும் பேசிக்கொண்டிருந்தனர். அட்வகேட் ஜெனரல் பதவி விலகல் மர்மம் என்ன ? ; கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யா ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கிலும் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். ஆனால் இங்கு ஆளும் பா.ஜ,. அரசு ஆச்சார்யாவிற்கு பிரசர் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஆச்சார்யா 2 பதவிகளை வகிக்க கூடாது என்றும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆச்சார்யா பெரிய அந்தஸ்து உள்ள அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பப்ளிக் பிராசிக்யூட்டராக நீடிக்கிறேன் என்றார். ஆச்சார்யா ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் திறம்பட வாதாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை சரிக்கட்ட அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. |
பிரதமரின் விருந்துக்கு 'கொலவெறி' நாயகி ஸ்ருதிக்கும் அழைப்பு Posted: 09 Feb 2012 01:16 AM PST பிரதமரின் விருந்துக்கு 'கொலவெறி' நாயகி ஸ்ருதிக்கும் அழைப்பு இந்த கொலவெறி விருந்துகள் இப்போதைக்கு ஒய்வது போலத் தெரியவில்லை. ஹீரோ தனுஷுக்கு அடுத்து, அந்தப் படத்தின் ஹீரோயின் ஸ்ருதிக்கும் அழைப்பு வந்துள்ளதாம், பிரதமர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு. தனுஷ் கலந்து கொண்ட விருந்தில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் ஜப்பான் பிரதமர். இந்த முறை மொரீசியஸ் பிரதமர் நவின் ராம்கூலத்துக்கு டெல்லி ரேஸ்கோர்சில் உள்ள தனது வீட்டில் மன்மோகன்சிங் விருந்து அளிக்கிறார். இந்த விருந்துக்குதான் ஸ்ருதிக்கும் அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து ஸ்ருதி கூறும்போது, "பிரதமர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிட்டியதை கவுரவமாக நினைக்கிறேன். இது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இளம் வயதில் எனக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம்தான்," என்றார். |
'அந்த' மாதிரி பெண்களுக்காக செலவு செய்யும் ப.சி: 'ட்விட்டரில்' குண்டு போடும் சு.சாமி'! Posted: 09 Feb 2012 01:14 AM PST 'அந்த' மாதிரி பெண்களுக்காக செலவு செய்யும் ப.சி: 'ட்விட்டரில்' குண்டு போடும் சு.சாமி'! இது குறித்து சாமி இன்று காலை 8.58 மணியளவில் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் பாஜகவை குறை கூறும் சிபல் போன்ற காங்கிரஸார் உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக பி.சி. மாதம் எவ்வளவு பணம் செலவு செய்கிறார் என்பதை கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். (Swamy39: "Those Congis like Sibal who paint BJP with porn should ask how much PC pays per month for Uzbekis"). Read: In English அரசியல் வட்டாரங்களும், ஊடகங்களும் ப. சிதம்பரத்தை பி.சி. என்று அழைப்பதுண்டு. குற்றச்சாட்டு என்ற பெயரில் சாமி எழுதியுள்ள இந்த ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
8 மணி நேர மின்வெட்டு: அம்மி, உரலை நாடும் பெண்கள் Posted: 09 Feb 2012 01:12 AM PST 8 மணி நேர மின்வெட்டு: அம்மி, உரலை நாடும் பெண்கள் மிக்சியும் கிரைண்டரும் இல்லாத வீடு இப்போது இல்லை! ஆட்டு உரலையும் அம்மிக்கல்லையும் அறிந்திருக்கும் பெண்களும் இப்போது இல்லை! காட்சிப் பொருளாகிப் போய்விட்ட அம்மிக்கல்லும் ஆட்டு உரலும் இப்போது அத்தியாவசிய தேவைக்கான பொருட்களின் பட்டியலில் இடம்பெற வேண்டிய நிலை! எப்போதுதான் மிக்சியும் ஏசியும் கிரைண்டரும் இயங்குமோ என ஏங்கிக் கிடக்க வேண்டிய நிலையை தொடரும் மின்வெட்டு உருவாக்கியதன் விளைவுதான் இது! ஆட்சி மாறினால் காட்சிகளும் மாறிவிடும் என்பது நப்பாசையாகிவிட்டது! அதிகாரப்பூர்வமாகவே 8 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்துவிட்ட பின்பு வேறு என்னதான் செய்ய முடியும்? 25 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த அம்மிக்கல்லையும் ஆட்டு உரலையும்தான் நாடியாக வேண்டும்! 8 மணி நேரம் என்பது அறிவிக்கப்பட்டதுதான் எனினும் அறிவிக்கப்படாத கூடுதல் மின்வெட்டு கிராமப் புறங்களில் நீடித்து வருகிறது. ஆட்டு உரலும் அம்மிக் கல்லும் சில கிராமங்களில்தான் இப்போதும் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் மின்வெட்டின் பாதிப்பை இது சமன் செய்து விடாதுதான். மின்வெட்டு நீடிக்கும் என்ற நிலையில் ஆட்டு உரலையும் அம்மிக் கல்லையும் தயாரித்து வைத்துக் கொண்டு காத்திருக்கவும் அதன் தயாரிப்பாளர்கள் தயங்கவும் செய்கின்றனர். அனைத்து பொருட்களின் விற்பனையும் உயரும்போது இவற்றின் விலையும் உயராமல் இருக்குமா என்ன? 300 ரூபாய் தொடங்கிய 500 ரூபாய் வரை அம்மிக்கல் விலையும் 200 ரூபாய் தொடங்கி 600 ரூபாய் வரை ஆட்டு உரலும் விற்கப்படுகிறது.. மின்வெட்டு நீடித்தால் அம்மி, ஆட்டு உரல் வாங்கலையோ என்ற கூப்பாடு இனி அனைத்து வீதிகளிலும் எதிரொலிக்கத்தான் செய்யும்.. |
Thiyagam Serial 09-02-2012 | Sun Tv Serial Thiyagam 9th february 2012 Posted: 09 Feb 2012 12:49 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Athipookal 09-02-2012 | Sun Tv Athipookal Serial 9th february 2012 Posted: 09 Feb 2012 01:21 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Ilavarasi 09-02-2012 | Sun Tv Elavarasi Serial 9th february 2012 Posted: 09 Feb 2012 12:46 AM PST |
ஆபாச பட புகார் : அமைச்சர்கள் சிக்கியதன் பின்னணி Posted: 08 Feb 2012 11:46 PM PST ஆபாச பட புகார் : அமைச்சர்கள் சிக்கியதன் பின்னணி பெங்களூரு : கர்நாடக சட்டசபையில், ஆபாச படம் பார்த்ததன் காரணத்தினால், 3 அமைச்சர்கள் தங்களது பதவியை இழந்துள்ளனர். இதற்கு பின்னணியாக கூறப்படும் காரணங்கள், சட்டசபையில் நிகழும் நிகழ்வுகள் மற்றும் விவாதங்களை படம்பிடிக்க கர்நாடக சட்டசபையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் 10 நாட்கள் காலஅளவிலான கூட்டத்தொடருக்கும் மட்டும் இந்த தடை விலக்கப்பட்டிருந்தது. இதன்படி, கன்னட டிவி வீடியோகிராபர்கள், பார்வையாளர்கள் கூடத்தில் அமர்ந்து சபை நிகழ்ச்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அவர்களின் பார்வையில், அமைச்சர்கள் ஆபாச படம் பார்த்த நிகழ்வு சிக்கியது. கர்நாடக சட்டசபையில், மொபைல்போன்கள் பயன்படுத்த தடை உள்ளது. இதற்கென சட்டசபையில், மொபைல் ஜாமர் உள்ளது. சிலநாட்களுக்கு முன்னர், இந்த ஜாமரில் பழுது ஏற்பட்டது. பணியாளர்கள் குறைவால், மொபைல் ஜாமரில் ஏற்பட்ட பழுது நீக்கப்படாமல், செயல்படாதநிலையில் உள்ளது. இதனாலேயே, ஆபாச படத்தை, அமைச்சர்கள் சட்டசபையில் வைத்துப் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சிலமாதங்களுக்கு முன்பாக, ஹூப்ளி-தார்வாத் பகுதியிலிருந்து இந்த வீடியோ பெறப்பட்டுள்ளதாகவும், 4 நிமிடநேர அளவிலான இந்த ஆபாச வீடியோவை, சட்டசபையில் அமைச்சர்கள் பார்த்த சம்பவம், நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. |
Cinekoothu 08-02-2012 | Free Download Cinikoothu PDF This week | Cinikoothu 8th february 2012 ebook Posted: 08 Feb 2012 11:43 PM PST Cinekoothu 08-02-2012 | Free Download Cinikoothu PDF This week | Cinikoothu 8th february 2012 ebook Download Links |
Posted: 08 Feb 2012 11:44 PM PST Nakkeeran 08-02-2012 | Free Download Nakeeran latest PDF This week | Nakkheeeran 8th february 2012 ebook Download Link |
Mutharam 09-02-2012 | Sun Tv Muthaaram Serial 9th february 2012 Posted: 08 Feb 2012 11:44 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Vellai Thamarai 09-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 9th february 2012 Posted: 08 Feb 2012 11:17 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Uravugal 09-02-2012 | Sun Tv Uravugal Serial 9th february 2012 Posted: 08 Feb 2012 11:15 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Kasturi 09-02-2012 | Sun Tv kasthuri Serial 9th february 2012 Posted: 08 Feb 2012 11:15 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
Maruthani 09-02-2012 | Sun tv Marudhaani 9th february 2012 Posted: 08 Feb 2012 11:11 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
சச்சினுக்காக தனுஷ் உருவாக்கிய பாடல் வெளியான ஒரு மணிநேரத்துக்குள் சூப்பர் ஹிட் Posted: 08 Feb 2012 06:32 PM PST சச்சினுக்காக தனுஷ் உருவாக்கிய பாடல் வெளியான ஒரு மணிநேரத்துக்குள் சூப்பர் ஹிட் தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் வெளியாகி அனைவரது வரவேற்பை பெற்றது டிவிட்டர் TRENDINGல் தொடர்ந்து 3 நாட்கள் முதல் இடத்தில் இருந்தது. இதனால் KOLAVERI பாடல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானது. பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் BOOST நிறுவனம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினுக்காக ஒரு பாடல் தயார் செய்து தருமாறு தனுஷை கேட்டுக் கொண்டது. இப்பாடல் எப்படி தயாராகி வருகிறது என்பது குறித்து தனுஷ் பேசி முதலில் ஒரு TEASER ஒன்றை வெளியிட்டார்கள். தற்போது அதன் முழு வீடியோ பதிவையும் வெளியீட்டு இருக்கிறார்கள்.அவ்வீடியோ பதிவு வெளியான 1 மணி நேரத்திற்குள் இந்தியா முழுவதும் TWITTER TRENDINGல் 7ம் இடத்தை பிடித்து இருக்கிறது. சச்சினுக்காக தனுஷ் உருவாக்கி இருப்பதால் கொலவெறி பாடலை விட இப்பாடல் பெரும் வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.வெளியான 1 மணி நேரத்திற்குள் TWITTER TRENDINGல் இடம் பெற்று இருப்பதால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தனுஷ் மற்றும் அனிருத். This posting includes an audio/video/photo media file: Download Now |
குழந்தையை பெற்றெடுக்க ஊட்டச்சத்து உணவு முக்கியம் Posted: 08 Feb 2012 06:30 PM PST குழந்தையை பெற்றெடுக்க ஊட்டச்சத்து உணவு முக்கியம் பெண்கள் கருவுற்றது முதல் குழந்தையை பெற்றெடுக்கும் வரை தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் 10 கிலோ வரை எடை அதிகரிக்க வேண்டும். அதற்கு காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள பொருட்களை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள் ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொண்டால்தான் குழந்தை ஆரோக்யமுடன் வளரும். அத்துடன் சுகப்பிரசவத்துக்கும், குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரப்பதற்கும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.பால், முட்டை, பருப்பு வகைகள், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன.கர்ப்பிணிகள் இதுபோன்ற சத்துள்ள உணவுப் பொருட்களை கூடுதலாக எடுத்துக் கொண்டால் அவர்களது உடல்நிலை ஆரோக்யமாக இருப்பதுடன், கருவில் வளரும் குழந்தையும் ஆரோக்யமாக வளரும். அதேநேரம் உடல் எடையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். 10 கிலோவுக்கு மேல் எடை கூடினால் அதுவும் ஆபத்தானது. பிரசவத்தின்போது சிக்கல் ஏற்படும். குறிப்பாக, உடல் பருமனான கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இதுபோல், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், முந்திரி, பிஸ்தா, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய், இறைச்சி, வனஸ்பதி ஆகிய கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது. குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொண்டு அவர்களது ஆலோசனையைப் பெற்று அதன்படி நடந்து கொள்வது நல்லது. இதன்மூலம் சுகப் பிரசவம் ஏற்படுவதுடன், குழந்தையும் ஆரோக்யமாக இருக்கும். |
பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள் ராஜினாமா Posted: 08 Feb 2012 06:26 PM PST பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள் ராஜினாமா அப்போது, கூட்டுறவு அமைச்சர் லட்சுமண் சவதி செல்போனை வயிற்றின் கீழ் மறைத்து வைத்துக் கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகிலிருந்த மகளிர் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் செல்போனை எட்டிப் பார்த்து கொண்டிருந்தார். அவர்களின் ஆர்வத்தை டிவி கேமராவில் 'ஜூம்' செய்து பார்த்தபோது, அவர்கள் ஆபாச படம் பார்த்தது வெளிச்சத்துக்கு வந்தது. அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சித்தராமையா, மஜத தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதை முதலில் அமைச்சர் லட்சுமண் சவதி மறுத்தார். செல்போனில் தனக்கு அமைச்சர் கிருஷ்ண பலேமர் அனுப்பிய எஸ்எம்எஸ்,ஐ பார்த்ததாக கூறினார். இதையடுத்து, சர்ச்சையில் பலேமரும் சிக்கினார். நேற்று காலை பெங்களூரில் அவசரமாக பாஜ கட்சியின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர். அதில், அவர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டது. அதற்கு அவர்களும் சம்மதித்து ராஜினாமா கடிதத்தை தந்தனர். சட்டப் பேரவை வழக்கம்போல் நேற்று காலை 10 மணிக்கு கூடியது. அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அவர்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் அமளியால் அவை நடவடிக்கை நாள் முழுவதும் ஸ்தம்பித்தது. மாலையில் சபாநாயகர் போப்பையா எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரச்னை குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட அனைத்து கட்சிக்குழுவை நியமித்தார். இக்குழு மார்ச் 13க்குள் அறிக்கை தரும். அதோடு 3 அமைச்சர்களும் பிப்ரவரி 13க்குள் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். இதற்கிடையே அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். |
போரடிக்குதா? புதுசா ட்ரை பண்ணுங்களேன் ! Posted: 08 Feb 2012 06:08 PM PST போரடிக்குதா? புதுசா ட்ரை பண்ணுங்களேன் ! வாசனை திரவியங்கள் தலை மற்றும் உடலுக்கு மென்மையாக வாசனைதிரவியங்களையும், எண்ணெய்களையும் பூசினால் அந்த வாசனையானது ஆளை அசத்தும். அப்புறம் என்ன உங்கள் படுக்கையறையில் உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும். இயற்கை மூலிகைகள் நிரம்பிய அரோமா ஆயில் உபயோகிப்பது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மல்லிகை, ரோஜா போன்ற மலர்களின் வாசனை அடங்கியவை என்றால் ஆட்டம் பாட்டம் அமர்களம்தான். கண்ணாமூச்சி விளையாட்டு ஒருவர் கண்ணை கட்டிக்கொண்டு தொட முயற்சிப்பது உறவிற்கு உற்சாகம் தரும் விளையாட்டு. இது வேண்டும் என்றே தொட அருகில் வருவதும், பின் விலகி ஓடுவதும் என தொட்டு விட தொட்டு விட உறவு தானாய் மலரும். போரடிக்காத இந்த விளையாட்டை அடிக்கடி விளையாடலாம். இறகால் வருடலாம் மென்மையான குஞ்சங்களைக் கொண்ட ஃப்ரஸ்சினால் வருடுவது, இறகால் மென்மையாய் தொடுவது மனதையும், உடலையும் உற்சாகமடையச் செய்யும். எங்கு தொட்டால் சிலிர்க்குமோ, அங்கே இவற்றை உபயோகித்து விளையாடலாம். இது மனதின் ரொமான்ஸ் பக்கங்களை தூண்டிவிடும் மாற்றம் தரும் இசை காதல் உணர்வுகளை தூண்டும் மெல்லிய இசை நிச்சயம் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும். எனவே தினமும் இரவு நேரங்களில் மூடு வர காதல் பாடல்களை கசியவிடுங்கள். அப்புறம் என்ன உற்சாகம் உங்களுக்கு கை கொடுக்கும். சுவையான உணவுகள் காதல் உணர்வுகளை தூண்டுவதில் உணர்வுகளுக்கு முக்கிய பங்குண்டு. கருப்பு திராட்சைகளை கைகளில் எடுத்து ஊட்டிவிட்டு விளையாடலாம். ஜாம், ஜெல்லி, கிரீம் போன்றவைகளை சாப்பிடும் போது விளையாட்டாக முகத்தில் பூசி அதை துடைப்பதுபோல ரொமான்சை தொடங்கலாம். |
முதலில் சிம்பு! இப்போ பிரபுதேவா!! நயன்தாரா உறவினர்கள் புலம்பல்!!! Posted: 08 Feb 2012 06:06 PM PST முதலில் சிம்பு! இப்போ பிரபுதேவா!! நயன்தாரா உறவினர்கள் புலம்பல்!!! முதலில் சிம்புவை நம்பி ஏமாந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவையும் நம்பி ஏமாந்துவிட்டாள் என்று நயன்தாராவின் உறவினர்கள் புலம்பி வருகின்றனர். சிம்பு உடனான காதல் முறிவுக்கு பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. நயன்தாராவுக்காக முதல் முனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. அதேபோல் பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு எல்லாம் மாறினார் நயன்தாரா. அதைவிட கல்யாணம் பண்ணாமலேயே இருவரும் சிறந்த தம்பதிகள் பட்டம் எல்லாம் வாங்கினர். அப்படி ஈருடல் ஓருயிராக இருந்த வந்த இருவரும், இப்போது பிரிந்து விட்டனர். நயன்தாரா மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் நயன்தாராவின் இந்த நிலைமையை பார்த்து அவரது சித்தி, சித்தப்பா ஆகியோர் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, நயன்தாராவின் நிலைமையை பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நாங்கள் தூக்கி வளர்த்த பெண் நயன்தாரா. இன்று அவளுக்கு இப்படி ஒரு நிலைமையாகும் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. நயன்தாரா பிடிவாதக்காரி என்று எல்லோரும் சொல்கின்றனர். அவள் பிடிவாதக்காரியல்ல, ரொம்ப வெகுளி பெண். சிம்புவிற்காக வல்லவன் படத்திற்கு நயன்தாரா பண உதவி எல்லாம் செய்தாள். கடைசியில் சிம்புவை நம்பி ஏமாந்து போனாள். அடுத்து பிரபுதேவாவை நம்பி போனாள். இனியாவது அவள் வாழ்வில் சந்தோஷம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். பிரபுதேவாவை ரொம்ப நம்பினாள் நயன்தாரா. கடைசியில் பிரபுதேவாவிடமும் ஏமாந்து போனாள். ரமலத்-பிரபுதேவா விவாகரத்து உள்பட பல விஷயங்களுக்கு பிரபுதேவாவுக்கு பண உதவி செய்தவர் நயன்தாரா தான். அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருந்ததே தவிர நயன்தாராவின் பாசம் அல்ல. நயன்தாரா இனி மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்து இருக்கும். கடைசியில் அவளிடமிருந்த எல்லா பணத்தையும் சுரண்டி விட்டு, இப்போது அவளையும் கழற்றி விட்டு விட்டார்கள். சினிமாவை மட்டும் நயன்தாரா விட்டுவிட்டு வந்தால் நாங்களே அவளுக்கு நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம். இவ்வாறு அவர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர். |
இலவச மின்சாரத்தால் மின்வாரியத்திற்கு, 6,438.93 கோடி ரூபாய் நஷ்டம் Posted: 08 Feb 2012 06:01 PM PST இலவச மின்சாரத்தால் மின்வாரியத்திற்கு, 6,438.93 கோடி ரூபாய் நஷ்டம் விவசாயம்: இந்நிலையில், மின்வாரியத்தின் மானியக் கணக்கீடு குறைபாடு காரணமாக, இலவச மின்சார செலவுகளுக்கு, தமிழக அரசிடம் முழுமையான மானியம் பெற முடியாதது குறித்து, தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக மின்வாரியம், மின்கட்டண உயர்வை அனுமதிக்க கோரி, விரிவான கணக்கு அறிக்கையை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. இதில், ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து வினியோகம் செய்ய, 5.98 ரூபாய் செலவாகும்; நடப்பு (2011-12) நிதி ஆண்டில், விவசாயிகளின் மின்சார உபயோகம், 1090.30 கோடி யூனிட் என, கூறப்பட்டுள்ளது. இந்த கணக்குப்படி, விவசாய பயன்பாட்டுக்கு, 6,519.99 கோடி ரூபாய் செலவாகும். ஆனால், ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, தமிழக அரசிடம் வெறும், 290.40 கோடி ரூபாய் மட்டுமே, தமிழக மின்வாரியம் பெற்றுள்ளது. இதனால் மின்வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டம் மட்டும், 6,229.59 கோடி ரூபாய். ஒரு விளக்கு: இதுதவிர, ஒரு விளக்கு திட்டத்திற்கு நடப்பு நிதியாண்டிற்கு, இலவசமாக, 38.5 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுவதாக, மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கான உற்பத்தி, வினியோக செலவு, 230.23 கோடி ரூபாய். இதற்கு அரசிடமிருந்து வெறும், 20.89 கோடி ரூபாய் மட்டுமே மானியம் பெறப்படுவதால், மின்வாரியத்திற்கு, 209.34 கோடி ரூபாய் நஷ்டமாகிறது. இவ்வாறு, விவசாயம் மற்றும் ஒரு விளக்கு திட்ட இலவச மின்சாரத்திற்காக, தமிழக மின்வாரியத்திற்கு, 6,438.93 கோடி ரூபாய் நஷ்டமாவது, மின்வாரிய கணக்கிலிருந்தே தெளிவாக தெரிகிறது. அரசே பொறுப்பு: இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இலவச மின்சார திட்டம், அரசின் கொள்கை முடிவு சார்ந்த, சமூக நோக்கிலான திட்டம். ஆனால், மின்வாரியம் தனியான வணிக நிறுவனமாக இருப்பதால், அதன் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், இலவச மின்சார செலவுகளை, அரசு முழுமையாக ஏற்க வேண்டும் என்று, பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். மின்வாரியம், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம். இதுகுறித்து, தமிழக அரசும், ஒழுங்குமுறை ஆணையமும் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நஷ்டம் எதனால்: இந்த ஆண்டில் மட்டும் மின்வாரியத்திற்கு, 9,700 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலவச மின்சாரத்திற்கு மிகக்குறைந்த மானியம் பெறுவதே நஷ்டத்திற்கு முக்கிய காரணம் என்பதும், இந்த சுமை அனைத்தும், பணம் கட்டும் நுகர்வோர் மீதுதான் விழுகிறது என்பதும், தெளிவாக தெரிகிறது. - நமது சிறப்பு நிருபர் - |
Posted: 08 Feb 2012 05:59 PM PST விவாதம் அவசியம்! அவையின் புனிதத்தைக் கெடுத்ததற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறுவது சட்டப்படி சாத்தியம் இல்லை. ஆனால், விவாதம் இல்லாமல் விசாரணை நடத்திட பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரம் குறித்து அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வலியுறுத்துவதில் நியாயம் இருக்கிறது. மூன்று பேரும் பதவி விலகி விட்டதால் இந்தப் பிரச்னையை விவாதிக்க வேண்டியதில்லை என்கிறார் முதல்வர் சதானந்த கெüடா. ஆனால், இந்தப் பிரச்னையை விவாதிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும் என்பது நமது கருத்து. இந்த விவாதம் இரண்டு முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். இந்தச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்ட, எதிர்பார்க்கப்பட்ட ஒன்றா என்பதையும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் சட்டப்பேரவையில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் என்ன என்பதையும் தீர்மானிக்கும் கருத்துக்களமாக இந்த விவாதம் அமையும் என்பது நிச்சயம். பேரவையில் முக்கிய விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது அவர் நீலப்படம் பார்த்தாரா, அல்லது ஒரு திரைப்படத்தின் "ஐட்டம் சாங்' பார்த்தாரா, அல்லது பக்தப் பிரகலாதா படமா, இல்லை தன் குழந்தையின் பிறந்தநாள் விடியோ காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாரா என்பதல்ல பிரச்னை. அவை நடவடிக்கையில் பங்கேற்காமல், மக்கள் பிரச்னை விவாதிக்கப்படும்போது அதில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்தார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மக்கள் வரிப் பணத்தைச் செலவழித்துத் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருக்கிறார்கள் எனும்போது, விவாதம் மிகவும் அவசியமாகிறது. மிக முக்கியமான மக்கள் பிரச்னை குறித்து விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது ஓர் உறுப்பினர் அவையில் தூங்குகிறார். ஒருவர் எழுந்துபோய் கேண்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஓர் உறுப்பினர் கையெழுத்துப் போட்டுவிட்டு, பேரவைக்குள் இன்னொரு உறுப்பினருடன் அரட்டை அடித்துக்கொண்டு, சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். ஒருவர் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். இவையும்கூட, மக்கள் பிரச்னையை அலட்சியப்படுத்தும் அணுகுமுறையாகத்தான் பார்க்கப்பட வேண்டும். மேற்சொன்னவை யாவும், ஓர் அவை நடவடிக்கையை பாதிக்காத, தனிப்பட்ட விவகாரம் என்று கருதப்படுமேயானால், இந்தக் காரணங்களுக்காக அந்த உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலாது என்று சொல்லப்படுமேயானால், அவையின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பாதிப்பில்லாமல், அடுத்தவருக்கும் தொந்தரவு இல்லாமல் தன் செல்போனில் ஏதோ ஒரு படம் பார்ப்பதை எப்படி ஒழுங்கீனம் என்று கருத முடியும்? எப்படி தண்டிக்க முடியும்? ஆகவே, மக்கள் பிரச்னையில் பங்கேற்காமல், அவைக்குள் அலட்சியமாக எந்த வகையில் செயல்பட்டாலும், அந்த உறுப்பினர் யாராக இருந்தாலும் அவர் மீது எத்தகைய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்ன தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் களத்தை அமைத்துக் கொடுப்பதாக கர்நாடக சட்டப்பேரவையின் இந்த விவாதம் அமைய வேண்டும். இதை சதானந்த கெüடா அனுமதிக்க முன்வர வேண்டும். அடுத்ததாக, கர்நாடக சட்டப்பேரவையில் செல்போன் பேச்சு குறித்து முதல்வரும் பேரவைத் தலைவரும் தொடர்ந்து கடுமையாகவே சாடி வருகின்ற நிலையில், இந்த நிகழ்ச்சி நடந்துள்ளதையும் கவனிக்க வேண்டியுள்ளது. அமைச்சர்களோ அல்லது எம்எல்ஏ-க்களோ இந்த நீலப்படத்தை செல்போனின் சேமிப்பிலிருந்து மீட்டெடுத்துப் பார்க்கவில்லை. ஓர் அமைச்சருக்கு வந்த விடியோ குறுந்தகவல், மற்றொரு அமைச்சருக்குப் "பார்வர்டு' செய்யப்பட, அதை இரண்டு அமைச்சர்கள் பார்த்தார்கள் என்பதோடு, அவையில் பல எம்எல்ஏ-க்களுக்கும் இதே குறுந்தகவல் வந்ததாகவும் அவர்களும் பார்த்ததாகவும் அந்த நேரத்தில் அவைக்குள் இருந்தவர்களால் கூறப்படுகிறது. அப்படியானால், இவர்களுக்கு இந்த நீலப்படம் எந்த செல்போனில் தொடங்கி, அவைக்குள் வந்து சேர்ந்தது என்பதைக் கண்டறிவது முக்கியம். இதைக் கண்டறிய வேண்டுமானால், அந்த நேரத்தில் அவைக்குள் இருந்த அனைவருடைய செல்போன்களிலும் அந்த வேளையில் வந்த, தகவல், அழைப்பு, குறும்படத் தகவல் அனைத்தையும் விசாரணைக்கு உட்படுத்தினால்தான், பல உண்மைகள் தெரியவரும். சுமார் 15 நிமிடங்களில் அவை நடவடிக்கை முடிவுற இருந்த நேரத்தில் வந்த குறுந்தகவலை வேறு சிலரும் பார்த்துக்கொண்டிருக்க, ஏன் அமைச்சர்கள் மட்டும் கேமராவில் பிடி(க்கப்)பட்டார்கள் என்பது தொடங்கிப் பல உண்மைகள் அம்பலமாகும். இத்தகைய விரிவான விசாரணை எந்தெந்த பொருண்மைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனும் கருத்துருவாக்கத்துக்கு விரிவான விவாதம் தேவை. விவாதம் இல்லாமல் வெறுமனே 3 கட்சிகளைச் சேர்ந்த 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அறிக்கை அளிக்கும் என்பது சரியல்ல. இதை விவாதிப்பது சட்டப்பேரவைக்குக் களங்கம் என்று சதானந்த கெüடா கருதுவது நியாயம் என்றால், இதை மூடி வைக்க முயலுவதும் நியாயம் இல்லை. விவாதிக்கப்பட்டால்தான் புதிய விதிமுறைகள் உருவாகும். சட்டப்பேரவை என்பது மக்களால் மக்கள் பிரச்னைகளை விவாதிக்கவும், மக்களுக்காகச் சட்டங்கள் இயற்றவும் மக்களால் ஏற்படுத்தப்பட்ட அவை. அவையின் உரிமையும், வானளாவிய அதிகாரமும் மக்கள் பணியில் தடையில்லாமல் செயல்படுவதற்காகத்தானே தவிர மக்கள் வரிப் பணத்தில் பொழுதுபோக்குவதற்காக அல்ல. இதை உறுப்பினர்கள் மறந்துவிடக் கூடாது! |
Posted: 08 Feb 2012 05:49 PM PST Dinakaran E-paper 09-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 9th february 2012 Download Link |
Posted: 08 Feb 2012 05:48 PM PST Dinamalar E-paper 09-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 9th february 2012 Download Link |
You are subscribed to email updates from TechRenu | TV SHOWS | MOVIES | TV SERIALS To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |