TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


இதயமின்றி உயிர்வாழும் உலகின் முதலாவது மனிதன்

Posted: 06 Feb 2012 12:50 AM PST


இதயமின்றி உயிர்வாழும் உலகின் முதலாவது மனிதன்

இதயத்தில் ஏற்பட்ட மாற்றமுடியாத நோயினால் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த கிரே லெவிஸ் எனும் 55 வயதுடைய மனிதர் இன்று இதயமே இன்று புத்துணர்வுடன் வாழ்ந்து வருகின்றார்.

கடந்த வருடம் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபருக்கு டெக்சாசிலுள்ள இருதய நிறுவனத்தில் வேலைசெய்யும் இரு வைத்தியர்களின் முடிவே அவரின் எதிர்காலத்தை தீர்மானித்தது.




சிகிச்சையின் போது இதயம் முற்றாக அகற்றப்பட்டு இதயத்தை போலவே செயல்படக்கூடிய "contunuos flos" எனப்படும் செயற்கை உபகரணம் பொருத்தப்பட்டது. இந்த உபகரணம் இதயம் போன்று துடிப்பதில்லை எனினும் இதயத்தை போன்றே அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளவல்லது.

போதையில் தள்ளாடிய நடிகை ப்ரியாமணிக்கு முத்தமிட்ட இந்தி நடிகர்

Posted: 06 Feb 2012 12:45 AM PST


போதையில் தள்ளாடிய நடிகை ப்ரியாமணிக்கு முத்தமிட்ட இந்தி நடிகர்

நள்ளிரவு பார்ட்டியில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் சச்சின் ஜோஷி அத்துமீறியதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் அதனை ப்ரியாமணி மறுத்துள்ளார்.
சி.சி.எல் எனப்படும் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது. கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு அங்குள்ள ஸ்டார் ஹோட்டலில் விடிய விடிய உற்சாக பான விருந்து நடைபெற்றுள்ளது.

பார்ட்டியில் பங்கேற்ற ப்ரியாமணி, போதையில் அதிகாலையில் தனது அறைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த இந்தி நடிகர் சச்சின் ஜோஷி, ப்ரியாமணியின் கையை பிடித்து இழுத்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாகவும், ப்ரியாமணி அவரை தள்ளி விட்டு விட்டு தப்பியதாகவும் கேரள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கொச்சியில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. யாரோ வேண்டுமன்று வதந்தி கிளப்பி விட்டிருக்கிறார்கள், என்று கூறி மறுத்திருக்கிறார்.



Jayatv Morning news 06-02-2012 | Jayanews 6th february 2012 | Jaya Tv news 06-02-2012

Posted: 06 Feb 2012 12:35 AM PST


Jayatv Morning news 06-02-2012 | Jayanews 6th february 2012 | Jaya Tv news 06-02-2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 06-02-2012 | Sun Tv Athipookal Serial 6th february 2012

Posted: 06 Feb 2012 01:19 AM PST


Athipookal 06-02-12 | Sun Tv Athipookal Serial 6th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

பீர் குடிப்பவரா? ஆண்மை குறைபாடு ஏற்படும் – அதிர்ச்சி அறிக்கை

Posted: 06 Feb 2012 12:19 AM PST


பீர் குடிப்பவரா? ஆண்மை குறைபாடு ஏற்படும் – அதிர்ச்சி அறிக்கை

தினந்தோறும் டாஸ்மாக் பார் சென்று குளிர குளிர பீர் சாப்பிட்டுக்கொண்டே சைடு டிஸ்சாக கடலையை உள்ளே தள்ளுபவரா? அப்படியெனில் இது உங்களுக்குத்தான் படியுங்கள்

பீர், வைன், கடலை இவைகளில் கலக்கப்படும் ரசாயனம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி உருவாகும் வாய்ப்பையே குறைக்கிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு குறைபாடு, மலடுத்தன்மை குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அதில் உடனடி காபி பவுடர் வாங்கி காபி போட்டுக் குடித்தால் கூட இந்தச் சிக்கல் வருகிறது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த பொருட்களில் உள்ள ஒருவகை அமிலமே இந்த குறைபாடு ஏற்பட காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசாயன கலப்பு 

பைட்டோஸ்ரோஜன்ஸ் எனப்படும் ஒருமூலக்கூறு சிகப்பு வைன், பீர், கடலை போன்ற பொருட்களில் அதிக அளவு இருப்பதாகவும், உடலில் இந்த மூலக்கூறு அதிகரிக்கும் போது அது ஆண்களின் உயிரணுக்களை நீர்த்துப் போகச் செய்து அவர்களுடைய உயிரணு எண்ணிக்கையை அழிக்கிறது.

இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரணுக்களை இழப்பதுடன், வருங்காலத் தலைமுறையையும் ஆரோக்கியமற்றவர்களாக உருவாக்குகினர் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் கண்டர் குஹேல், தெரிவித்துள்ளார்.மதுப் பழக்கங்கள் உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் எனும் நிலையைத் தாண்டி ஆண்மையையே பாதிப்பது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான மாபெரும் எச்சரிக்கை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வு மது மற்றும் பீர் பிரியர்களிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.

7 மணி நேரம் பவர்கட்-பாழாய்டுமோ படிப்பு?: கவலையில் பிளஸ்டூ மாணவர்கள்!!

Posted: 06 Feb 2012 12:13 AM PST


7 மணி நேரம் பவர்கட்-பாழாய்டுமோ படிப்பு?: கவலையில் பிளஸ்டூ மாணவர்கள்!!

நெல்லை: தமிழகத்தில் தினமும் 7 மணி நேர மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நேரம் என்பதால் பாடங்களை படிக்க முடியாமல் மாணவர்களும் சிரமப்படுகின்றனர்.

தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற பகுதியில் பகல் நேரத்தில் 4 மணி நேரம், இரவு நேரத்தில் 3 மணி நேரம் என தினமும் 7 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகின்றது. இதனால் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீட்டில் பணிகள் கடு்மையாக பாதிக்கப்படுகின்றன. இது போன்ற வீடுகளில் காலை 8 மணிக்குள் டிபன், மதிய சாப்பாடு ஆகியவற்றை தயாரிக்க வேண்டிய நிலை உள்ளது. மின்சாரம் எப்போது போகும், வரும் என தெரியாத நிலை உள்ளதால் அவர்கள் அதிகாலை 4 மணி முதலே தங்கள் பணிகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் தற்போது பிளஸ் டூ செய்முறை தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. அதே போல மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கின்றன. தேர்வுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் மாணவர்கள் இரவு பகல் பாராது தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதே போல பத்தாம் வகுப்பு மாணவர்களும் தேர்வுக்கு மும்முரமாக படித்து வருகின்றனர். இரவு நேர மின்தடை, அதிகாலை மாயமாகும் மின்சாரத்தால் மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் தேர்வை சரிவர எழுத முடியாமல் அவர்களது மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


மணிரத்னத்தின் அடுத்த படம் கடல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 06 Feb 2012 12:07 AM PST


மணிரத்னத்தின் அடுத்த படம் கடல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த அறிவிப்பை இன்று அவரே முறைப்படி வெளியிட்டார்.

ராவணன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள். பூக்கடை என இந்தப் படத்துக்கு பெயரிடப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை மணிரத்னம் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் இன்று புதிய அறிவிப்பு வெளியிட்டார். படத்துக்குப் பெயர் கடல் என்றும், கார்த்திக் மகன் கவுதம்தான் ஹீரோ என்றும் அவர் கூறியுள்ளார். சமந்தா நாயகியாக நடிக்கிறார்.

அர்ஜூனும், மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சுவும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதுகிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தென் தமிழகத்தின் கடலோர கிராமப் பின்னணியில் நடக்கும் காதல் கதை இந்தப் படம் என்று கூறப்படுகிறது. தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் அடிக்கடி தாக்குவது, சித்திரவதை செய்வது பற்றியும் இந்தப் படத்தில் மணிரத்னம் காட்சிப்படுத்துவார் என்கிறார்கள். ஆனால் அதில் எந்த அளவுக்கு நேர்மையாக இருப்பார் மணிரத்னம் என்பது தெரியவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஈழப் போரையே, வல்லரசுகளின் ஆயுத வியாபாரம் என மணிரத்னம் காட்சி வைத்திருந்தது நினைவிருக்கலாம்.

அரசு வழங்கிய ஆடுகளின் காதுகளை அறுத்து சந்தையில் விற்கும் கொடுமை

Posted: 06 Feb 2012 12:06 AM PST


அரசு வழங்கிய ஆடுகளின் காதுகளை அறுத்து சந்தையில் விற்கும் கொடுமை
சென்னை: தமிழக அரசு வழங்கிய விலையில்லா ஆடுகள் (அதாவது இலவசம்) தற்போது கொடூரமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனவாம். அதாவது அரசு கொடுத்த

ஆடுகளின் காதுகளை மட்டும் அறுத்து நல்ல விலைக்கு விற்க ஆரம்பித்துள்ளனராம் சிலர்.

அதிமுக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக ஆடு, மாடு வழங்குவது.

தமிழக அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, ரூ. 10 ஆயிரம் மதிப்பீட்டில் நான்கு விலையில்லா ஆடுகளை வழங்கிறது. இலவசமாக வழங்கப்படும்

ஆடுகளுக்கு அடையாளமாக, அதன் காது ஒன்றில், அரசு முத்திரை மற்றும் அடையாள எண் அடங்கிய, பிளாஸ்டிக் ஐடி கார்டைப் பொருத்தியுள்ளனர்.

இந்த எண்ணை ஆதாரமாக வைத்தே பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு இன்ஸ்சூரன்ஸ் வழங்கப்படும். இந்த பிளாஸ்டிக் கார்டை கழற்ற முடியாது.

இந்த நிலையில் சில விஷமிகள் என்ன செய்கிறார்கள் என்றால் அரசு கொடுத்த ஆடுகளை நல்ல விலைக்கு விற்க ஆரம்பித்துள்ளனராம். காதில் உள்ள அடையாளத்தை எடுக்க முடியாது என்பதால்

காதையே வெட்டி எடுத்து விடுகிறார்களாம்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் சந்தையில் இந்த காதறுக்கப்பட்ட ஆடுகளை அமோகமாக விற்று வருவதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடக்கும் சந்தையில்

ஆடுகள் விற்பனைக்கு வைக்கப்படும். இங்குதான் இந்த காதறுக்கப்பட்ட அரசு ஆடுகளையும் கொண்டு வந்து விலைக்கு விற்கிறார்கள்.

அரசு கொடுத்த ஆடுகளை இப்படி ஈவு இரக்கம் இல்லாமல் காதுகளை அறுத்து விற்பதை அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

Ilavarasi 06-02-2012 | Sun Tv Elavarasi Serial 6th february 2012

Posted: 06 Feb 2012 12:37 AM PST


Ilavarasi 06-02-12 | Sun Tv Elavarasi Serial 6th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

லேப்டாப் மீது சிகரெட் விழுந்து, தீப்பிடித்து, வெடித்து விபத்து-வாலிபர் பலி!

Posted: 06 Feb 2012 12:01 AM PST


லேப்டாப் மீது சிகரெட் விழுந்து, தீப்பிடித்து, வெடித்து விபத்து-வாலிபர் பலி!

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்னொருவரின் உயிரைக் குடித்துள்ளது லேப்டாப் ஒன்று. ஆனால் இந்த முறை தவறு அந்த இளைஞரின் மீதுதான்.

கொல்கத்தாவில் 3 மாதங்களுக்கு முன்பு சயன் செளத்ரி என்ற பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவன ஆலோசனை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அருகே சார்ஜரில் மாட்டப்பட்டிருந்த லேப்டாப்பும், இயர்போன்கள் அவரது காதுகளில் மாட்டப்பட்டும் இருந்தது.

இந்த நிலையில் லேப்டாப்பால் இன்னொரு உயிர் போயுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சப்தரிஷி சர்கார். 30 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அருகில் எரிந்த நிலையில் லேப்டாப் கிடந்தது.

அறை முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வந்து கதவைத் திறந்தபோது இந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், அறைக்குள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் சர்க்கார். அறை ஜன்னல்கள், கதவு மூடப்பட்டிருந்தது. அறை முழுவதும் புகையாக காணப்பட்டது. மூச்சுத் திணறி அவர் இறந்துள்ளார்.

லேப்டாப் ஒன்று வெடித்து எரிந்த நிலையில் காணப்பட்டது. அவர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்று தெரிகிறது. சிகரெட் பிடித்தபோது அது லேப்டாப்பில் விழுந்து அது தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

இதில் எந்த சதியும் இருப்பதாக தெரியவில்லை. விபத்தாகவே தெரிகிறது என்றனர்.

லேப்டாப்பில் அஜாக்கிரதை- உயிரைக் குடிக்கும்

லேப்டாப்பை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். படுக்கை அறையில் வைத்து அதைப் பயன்படுத்துவதோ, அதை அப்படியே அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதோ கூடாது என்கிறார்கள்.

படுக்கையானது மிகவும் மென்மையாக இருப்பதால், லேப்டாப்பின் கீழ்ப்பகுதி வழியாக காற்று புகுவதைத் தடுக்குமாம். சரியான காற்றோட்டம் லேப்டாப்புகளுக்குத் தேவை. அது தடைபடும்போது லேப்டாப் சூடாகி வெடிக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே லேப்டாப் வெடித்து உயிர்ப் பலி ஏற்பட்ட சம்பவங்கள் ருமேனியா மற்றும் நியூசிலாந்திலும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சார்ஜ் செய்து கொண்டே லேப்டாப்பை பயன்படுத்தியதால் விபத்து நடந்தது.

ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?”

Posted: 05 Feb 2012 11:52 PM PST


ஸ்டாலினின் கோபக் கேள்வி "நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?"


திருச்சியில் தென்பட்ட காட்சி ஒன்றை பார்த்துவிட்டு, அது என்ன என்று விசாரிக்காமல் செய்தி வெளியிட்டிருந்தால், "இளம் சன்யாசிகள் பாசறை" என்று தலைப்பு கொடுத்திருக்க வேண்டும். தூய வெண்ணிற ஆடையணிந்து, நெற்றியில் மங்களகரமாக திருநீற்றுப் பட்டை, குங்குமம் என்று அசத்தலாக 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.

ஆனால், இந்த இளம் சன்யாசிகள் தோற்றத்தில் இருந்தவர்கள் ஒன்றுகூடிய இடம்தான் குழப்பத்தை விளைவித்தது. காரணம் அந்த இடம், "கடவுள் இல்லை" என்ற பகுத்தறிவுக் கொள்கையுடைய தி.மு.க.-வின் மாவட்ட செயல் அலுவலகமான, திருச்சி கலைஞர் அறிவாலயம்!

ஒருவேளை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி உடன்பாடு ஏதாவது ஏற்பட்டு, பா.ஜ.க. தொண்டரணி தி.மு.க. அலுவலகத்துக்கு வந்துள்ளார்களோ என்ற சந்தேகத்தில் நின்றிருக்க, கார் ஒன்றில் மற்றொரு இளைஞர் வந்து இறங்கினார். அந்த இளைஞருக்கு  சுமார் 60 வயது இருக்கும்.

அருகே போய்ப் பார்த்தால், தி.மு.க. இளைஞரணி தலைவர் மு.க. ஸ்டாலின்!

அதன் பிறகுதான், வெண்ணிற ஆடை, பட்டை குங்குமத்துடன், ஏதோ சன்னியாச தீட்சை பெற வந்தவர்கள் போல காட்சியளித்த இளைஞர்கள், தி.மு.க. இளைஞர் அணியில் பதவிகளுக்காக நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் என்று தெரியவந்தது. நல்ல வேளையாக யாருடைய இடுப்பிலும் சுருக்குப் பையில் விபூதி காணப்படவில்லை.

அந்த இளைஞர்களை ஒவ்வொருவராக அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தினார் மு.க.ஸ்டாலின். தி.மு.க. வரலாறு, அதன் முன்னோடிகள் தொடர்பான சில கேள்விகள் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்டன. வந்திருந்த பலருக்கு அப்படியொரு வரலாறு இருப்பதாகவோ, மு.க. குடும்பத்தைத் தவிர அக்கட்சிக்கு வேறு யாராவது முன்னோடிகள் உள்ள விஷயமோ தெரிந்திருக்கவில்லை.

திருதிருவென விழித்தார்கள்.

நல்ல வேளையாக மு.க. குடும்ப முன்னோடிகள் பற்றி அவர்களுக்கு தெரிந்துள்ளதே என்று ஆறுதலடைந்த ஸ்டாலின், அவர்களுக்கு மதிப்பெண் போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார். சரி. நேர்முக தேர்வுக்கு வந்தவர்களுக்கு மு.க. குடும்ப முன்னோடிகள் பற்றி ஜெனரல் நாலேட்ஜ் இருப்பதை தளபதி ஸ்டாலின் எப்படி கண்டு கொண்டார்? எல்லாம், அவர்களிடம் இருந்து வந்த பதில்களை வைத்துத்தான்.

இதோ உதாரணத்துக்கு சாம்பிள் பாருங்கள்:

ரியல் இளைஞர் ஒருவரிடம், தி.மு.க. இளைஞர் ஸ்டாலின் தனது முதல் கேள்வியை வீசினார், "அறிஞர் அண்ணா தெரியுமா?"

"ரொம்ப நல்லா தெரியுமுங்க தளபதி. ஜெயலலிதா கட்சி பெயர்ல உள்ள அண்ணாதானே.. அ.தி.மு.க. கட்சி போஸ்டர்ல போட்டோ பாத்திருக்கேன்"

"அப்படி சொல்லக்கூடாது தம்பி. அறிஞர் அண்ணாதான் தி.மு.க.-வின் முன்னோடி"

"அட, நம்ம அண்ணா பற்றி கேட்கிறீங்களா? நம்ம கட்சி போஸ்டர்ல போட்டோ பாத்திருக்கேனே.."

"பரவாயில்லையே.. இப்பதான் சரியான ட்ராக்குக்கு வர்ரே.. சரி. அறிஞர் அண்ணாவோட.. அதுதான் நம்ம அண்ணாவோட முழு பெயர் என்ன தெரியுமா?"

"ரொம்ப நல்லா தெரியுமே.. மு.க.அழகிரிங்க"

ஸ்டாலினின் முகத்தில் கோபம் தென்பட தொடங்குகிறது. இளைஞரை உற்றுப் பார்த்தார் அவர்.

அதை கவனிக்காத இளைஞர், "தொடக்கத்தில நீங்க 'அறிஞர்' அண்ணான்னு சொன்னதும் கன்ஃபியூஸ் ஆயிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க தளபதி சார்" என்றார் பவ்வியமாக.

"என்ன தம்பி இப்படி பதில் சொல்ரே.." என்றார் ஸ்டாலின் கடும் கோபமாக.

அவரது கோபத்தைப் பார்த்து நடுங்கிய இளைஞர், "ஐயோ.. நெசமாலுமே உங்க அண்ணா அழகிரி சார் ஒரு அறிஞர்ன்னு எனக்கு யாரும் சொல்லல.. அவுரு ஏதோ அடிதடி பண்ணுற ஆசாமின்னு கட்சில பேசிக்கிட்டாங்க. இப்ப அறிஞர் ஆயிட்டாருங்களா? என்றார் பரிதாபமாக.

வேறு வழியில்லாமல் இந்த இளைஞருக்கும் மதிப்பெண் போட்டு அனுப்பிய ஸ்டாலின், "தி.மு.க. ஆட்சி அமைக்கவும், இயக்கம் வளரவும் இளைஞர்களும், மாணவர்களும் தான் காரணம். கடந்த தேர்தலில் இளைஞர்கள் ஓட்டளிக்காததால், தி.மு.க. தோல்வியை சந்தித்தது. இப்போது நாம் இளைஞர் அணியில் இணைக்கும் புதிய உறுப்பினர்கள் அந்த இடைவெளியை சரி செய்து நம்ம கட்சிக்கு வெற்றியை தேடித் தருவார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறிவிட்டு சென்றார்.

இன்னும் நாலைந்து இடங்களில் நேர்காணல் நடத்தும் சோலி அவருக்கு உள்ளது.

Aanpavam 06-02-2012 | Sun Tv Aan pavam Serial 6th February 2012

Posted: 05 Feb 2012 11:42 PM PST


Aanpavam 06-02-12 | Sun Tv Aan pavam Serial 6th February 2012



Update coming soon...pl wait

This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 06-02-2012 | Sun Tv Thiyagam Serial 6th february 2012

Posted: 06 Feb 2012 12:14 AM PST


Thiyagam 06-02-12 | Sun Tv Thiyagam Serial 6th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 06-02-2012 | Sun Tv Muthaaram Serial 6th february 2012

Posted: 05 Feb 2012 11:40 PM PST


Mutharam 06-02-12 | Sun Tv Muthaaram Serial 6th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 06-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 6th february 2012

Posted: 05 Feb 2012 11:35 PM PST


Vellai Thamarai 06-02-12 | Sun Tv Serial Vellai Thamarai 6th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 06-02-2012 | Sun Tv Uravugal Serial 6th february 2012

Posted: 05 Feb 2012 11:35 PM PST


Uravugal 06-02-12 | Sun Tv Uravugal Serial 6th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 06-02-2012 | Sun Tv kasthuri Serial 6th february 2012

Posted: 05 Feb 2012 11:34 PM PST


Kasturi 06-02-12 | Sun Tv kasthuri Serial 6th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 06-02-2012 | Sun tv Marudhaani 6th february 2012

Posted: 05 Feb 2012 11:33 PM PST


Maruthani 06-02-12 | Sun tv Marudhaani 6th february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினியின் கோச்சடையான் - அசத்தல் ஸ்டில்... அதிர வைக்கும் '8 பேக்ஸ்' ரஜினி!

Posted: 05 Feb 2012 08:58 PM PST


ரஜினியின் கோச்சடையான் - அசத்தல் ஸ்டில்... அதிர வைக்கும் '8 பேக்ஸ்' ரஜினி!


ஓங்கி உயர்ந்த மலையுச்சி... அதில் விண்ணுக்குமாக மண்ணுக்குமாக, ஒற்றைக் காலில் ஆக்ரோஷமாக நிற்கும் ரஜினி. ஜடா முடியும் அதில் தங்க நிற சூலமும் நீண்ட தாடியுமாக நிற்கும் ரஜினி, இடையில் நீல நிற பட்டுக் கச்சை அணிந்திருக்கிறார். அந்தக் கச்சையின் இன்னொரு நுனி விண்ணுக்கு நீள்கிறது.

கிட்டத்தட்ட சிவபெருமானின் ருத்ரதாண்டவம் மாதிரியான ஒரு தோற்றம் அது. பார்த்த உடன் சிலிர்க்க வைக்கிறது.

இந்த ஸ்டில்லில் ரஜினியின் உடல் 8 பேக்ஸ் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. Photorealistic படம் என்பதால் இது சாத்தியம்தான்.

இந்த ஸ்டில் வெளியானது முதல் மீடியா மற்றும் ரசிகர் மத்தியில் ஒரே பரபரப்பு.

எங்கும் ரஜினியின் கோச்சடையான் ஸ்டில்களே. அதற்கேற்ப, ரஜினியும் பாரபட்சமின்றி அத்தனை நாளிதழ்களுக்கும் கோச்சடையான் டிஸைனை விளம்பரமாகக் கொடுத்திருந்தார்.

இந்தியாவின் அத்தனை முன்னணி இணையதளங்களும் 'கோச்சடையான் பர்ஸ்ட் லுக்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கில டிஸைன்களை வெளியிட்டிருந்தனர்.

கோச்சடையான் பட அறிவிப்பு வெளியானபோது, ரஜினி ரசிகர்களுக்கே அதில் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் இப்போது முதல் ஸ்டில்லைப் பார்த்ததிலிருந்து அவர்களால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் - சௌந்தர்யா ரஜினி குழுவுக்கு எடுத்த எடுப்பிலேயே வெற்றிகிடைத்துள்ளது எனலாம்!!


Thanks - http://tamil.oneindia.in/


பொதுக்குழுவை 'வெற்றி'கரமாக முடித்த கையோடு குடும்பதோடு கோலாலம்பூர் போனார் அழகிரி!

Posted: 05 Feb 2012 08:50 PM PST


பொதுக்குழுவை 'வெற்றி'கரமாக முடித்த கையோடு குடும்பதோடு கோலாலம்பூர் போனார் அழகிரி!


சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது மனைவி மற்றும் குடும்பத்தினரோடு கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தனிப்பட்ட முறையிலான பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு விமானம் மூலம் அழகிரி, மனைவி காந்தி மற்றும் குடும்பத்தினர் கிளம்பிச் சென்றனர். சென்னை விமான நிலையத்தில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம், இது தனிப்பட்ட பயணம் என்றார் அழகிரி.

சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில் பெரும் அமளி ஏற்பட்டது. அழகிரியின் குரல் போல ஒலித்த மூத்த தலைவர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக பெரும் குரல்கள் ஒலித்தன. ஸ்டாலின் ஆதரவாளர்களால் எழுந்த இந்த எதிர்ப்பால் வீரபாண்டியார் மட்டுமல்லாமல் கட்சியின் மூத்த தலைவர்களும் கூட அதிர்ச்சி அடைந்தனர். கருணாநிதியே குறுக்கிட்டு கண்டிக்க நேரிட்டது.

இந்த அமளி துமளி மற்றும் எதிர்ப்புகளால், மு.க.ஸ்டாலினுக்கு பதவி உயர்வு தரும் முடிவையும், கனிமொழிக்குப் பதவி தரும் முடிவையும் கட்சித் தலைமை எடுக்கவில்லை.

பொதுக்குழுக் கூட்டத்திலும், அதற்கு முதல் நாள் நடந்த கட்சியின் உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்திலும் மு.க.அழகிரி கலந்து கொண்டார். ஆனால் எதுவும் பேசவில்லை. மாறாக தனக்கு எதிராக, பாதகமாக எதுவும் நடந்து விடாமல் கவனமாக காய் நகர்த்தினார். தற்போது எல்லாம் நல்லபடியாக முடிந்த நிலையில் மலேசியாவுக்குக் குடும்பத்துடன் கிளம்பிப் போயுள்ளார் அழகிரி.


Dinakaran E-paper 06-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 6th february 2012

Posted: 05 Feb 2012 08:49 PM PST


Dinakaran E-paper 06-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 6th february 2012

Download Link

Dinamalar E-paper 06-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 6th february 2012

Posted: 05 Feb 2012 08:42 PM PST


Dinamalar E-paper 06-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 6th february 2012

Download Link

பாலிவுட்டில் பந்தாட்டம் இலியானாவின் அசத்தல் மூவ்

Posted: 05 Feb 2012 08:37 PM PST


பாலிவுட்டில் பந்தாட்டம் இலியானாவின் அசத்தல் மூவ்

'நண்பன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இலியானா காட்டில் வாய்ப்பு மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறது. தெலுங்கில் சற்றே இறங்குமுகமாக இருந்த அவரது மார்க்கெட் மீண்டும் உச்சத்திற்குப் போய்விட்டதில் ஏக குஷியாக இருக்கிறார் இலியானா.

நண்பன் படத்தைப் பார்த்த போலிவுட் மன்மதன்கள் எல்லாம் தேடிவரும் இயக்குநர்களிடம், "எங்களுக்கு இந்தக் கிளிதான் வேண்டும்" என்று இலியானாவைச் சுட்டிக் காட்டுகிறார்களாம்.

நடிகர் அக்ஷய்குமார் அடுத்து நடிக்க உள்ள 'கிலாடி 786' படத்தில் இலியானாவை ஒப்பந்தம் செய்ய துடியாய்த் துடிப்பதாகக் கேள்வி. "எவ்வளவு சம்பளம் கேட்டாலும் பரவாயில்லை. அவரை எப்படியாவது ஒப்பந்தம் செய்யுங்கள்" என்று தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார் அக்ஷய்.

இதேபோல் இந்தி நடிகர்கள் இம்ரான்கான், அஜய் தேவ்கன் ஆகியோரது விருப்பப் பட்டியலிலும் இலியானாவுக்குதான் முதலிடம். இப்படி வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையிலும், "கொஞ்ச நாள் பொறுங்க, கால்ஷீட் தர்றேன்" என்று இலியானா சொல்லி வருவது, போலிவுட்காரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இலியானா இந்தியில் நடிக்கும் முதல் பட வேலைகள் இன்னும் முடிந்தபாடில்லை. அந்தப் படம் வெளியாகட்டும் என்று காத்திருக்கிறதாம் கிளி.

"தற்போது தெலுங்கில் ரவி தேஜாவுடன் ஒரு படம், அல்லு அர்ஜுனுடன் ஒரு படம் என்று பிஸியாக உள்ளார் இலியானா. அவரைப் பொறுத்தவரை இந்தி, தமிழ், தெலுங்கு என்று எல்லா மொழிப் படங்களும் ஒன்றுதான். தன் மனதுக்குப் பிடித்த கதை என்றால் மட்டுமே நடிக்கச் சம்மதிப்பார். இந்தியில் நடிப்பதற்கு அவசரப்படவில்லை" என்கிறார் அவரது மேனேஜர்.

http://www.tamilcinema.com

பழைய ஸ்ரீதேவியும் அவரது புதிய கொள்கையும்

Posted: 05 Feb 2012 08:36 PM PST


பழைய ஸ்ரீதேவியும் அவரது புதிய கொள்கையும்

குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினார்கள் என்றால் ஸ்ரீதேவிக்கு லட்சக்கணக்கான இந்தி ரசிகர்கள் மனக்கோவில் கட்டி ஆராதித்து வருகிறார்கள். ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று 16 வயதில் கும்மாளம் போட்டவர் இப்போது ஆத்தாவாகவே மாறி தோல் சுருங்கினால் கூட அவரது ரசிகர் வட்டாரம் நிலை குலையாது போலிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு "குடும்பம்தான் முக்கியம்" என்று போலிவுட்டுக்கு டாட்டா காட்டிய ஸ்ரீதேவியை அண்மையில் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தின் தயாரிப்பாளர் எப்படியெல்லாமோ பேசி அப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

ஆனால் இப்படத்தில் நடித்து முடித்த பிறகு, தனக்கு ரசிகர்களிடம் உள்ள புகழையும் பெயரையும் வைத்து சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் முடிவுக்கு வந்துள்ளாராம் ஸ்ரீதேவி.

மேற்படி படத்தில் ஸ்ரீதேவிக்கு நியூயார்க்கில் வசிக்கும் இல்லத்தரசி வேடம். இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு வெளிநாடுகளில் குடும்பம் நடத்தச் செல்லும் இந்தியப் பெண்கள் அந்நாடுகளில் உள்ள மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். இந்தத் தடுமாற்றம் அவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை தருகிறது. இதனால் வாழ்க்கையே வெறுத்துப் போன பெண்களும் உண்டு.

"இப்படிப் பணம், வசதி எல்லாம் இருந்தும் வாழ்க்கையையே தொலைத்துவிட்டதைப் போல் முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு பூஸ்ட் கொடுக்கப் போகிறார் ஸ்ரீதேவி. இதற்காக விரைவில் அவர் வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்களுக்காக இணையம் வழி ஆலோசனை மையம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளார்" என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்த டிஜிட்டல் ஆலோசனை மையத்தின் கதாநாயகி ஸ்ரீதேவி என்றால், இவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபல நிபுணர்கள் உதவியாகச் செயல்படுவார்களாம். 
குடும்பப் பிரச்னை தொடங்கி, அழகுக் குறிப்பு, தொழில் நடத்தி முன்னேறுவதற்கான குறிப்புகள், கம்யூனிட்டி பிஹேவியர் எனப்படும் வெகுஜன தொடர்புக்கான ஆலோசனைகள், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான எளிய பயிற்சிகள் என சகலவித ஆலோசனைகளும் ஸ்ரீதேவியிடம் கிடைக்கும்.

இந்த டிஜிட்டல் ஆலோசனை மையத்தை துவங்குவதற்கான முதல்படியாக விரைவில் பேஸ்புக், டிவிட்டர் போன்ற இணையதளங்களில் தன் பெயரில் கணக்கு தொடங்கப் போகிறாராம் ஸ்ரீதேவி. இதன் வழி வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்கள் சமூகம் ஒன்றை நடத்தப் போகிறார். உலகின் எந்த மூலையிலும் வசிக்கும் இந்தியப் பெண்கள் இதில் உறுப்பினராகச் சேரலாம். அவர்கள் ஸ்ரீதேவியுடன் நேரடியாக உரையாடலாம்.

"தன் குடும்பம், தன் குழந்தைகள் என சிறிய வட்டத்திற்குள் தனக்கென ஒரு அழகான, சிறிய உலகத்தை அமைத்துக் கொண்டு வாழ்ந்த ஸ்ரீதேவி இப்போது புதிய பரிமாணத்துடன் சமுதாயத்திற்கான பங்களிப்பை தர முன்வந்திருக்கிறார். அவர் வழங்கப்போகும் ஆலோசனைகள் பல பெண்களின் வாழ்க்கையை ஆரோக்கியமாக மாற்றி அமைக்கும். இதற்கு நாங்களும் முடிந்த பங்களிப்பைச் செய்வோம்" என்கிறார் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தின் தயாரிப்பாளர்.

யப்பா, யாராவது இவங்களுக்கு ஒரு டாக்டர் பட்டத்தை வெட்டுங்கப்பா...

தேர்தல் களத்தில் அதிமுக, திமுக, மதிமுக மட்டுமே மும்முரம்-தேமுதிக நிலை?

Posted: 05 Feb 2012 08:29 PM PST


தேர்தல் களத்தில் அதிமுக, திமுக, மதிமுக மட்டுமே மும்முரம்-தேமுதிக நிலை?


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத் தேர்தல் களத்தில் தற்போதைய நிலவரப்படி மதிமுகதான் படு தீவிரமாக உள்ளது. அடுத்து அதிமுக உள்ளது. 3வது இடத்தில் திமுக உள்ளது. தேமுதிகவின் நிலை குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பூர்வாங்கப் பணிகளை முதலில் தொடங்கியது மதிமுகதான். இந்தத் தொகுதி உறுப்பினரான கருப்பசாமி மறைந்ததுமே அந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான களப் பணிகளில் மதிமுக இறங்கியது. அதிமுகவே சற்று அயர்ந்து போகும் அளவில் படு சுறுசுறுப்பாக, பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர் மதிமுகவினர்.

சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுகவுக்கென்று கணிசமான வாக்குகள் உள்ளதால் அந்தக் கட்சி பெருத்த தெம்புடன் உள்ளது. இத்தொகுதியில் மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரை வேட்பாளரை அறிவித்து விட்டார்கள். நகராட்சித் தலைவராக உள்ள முத்துலட்சுமிதான் வேட்பாளராக இறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அதிமுகவும் ஆரம்ப கட்டப் பணிகளை முடுக்கி விட்டு வேலை பார்க்க ஆரம்பித்துள்ளது.

திமுக தரப்பிலும் விருப்ப மனுக்கள் வாங்க ஆரம்பித்துள்ளனர். அது முடிந்ததும் வேட்பாளரை இறுதி செய்து திமுக ஆரம்பிக்கும். பூர்வாங்கப் பணிகள் ரேஸில் தற்போது 3வது இடத்தில்தான் இருக்கிறது திமுக.

பாமகவுக்கு இந்தத் தொகுதி சற்றும் சம்பந்தமில்லாதது என்பதால் அந்தக் கட்சியும் ஒதுங்கி ஓரம் கட்டியுள்ளது. தற்போதைய பெரும் கேள்வி தேமுதிகவின் நிலை என்ன என்பதுதான்.

சட்டசபையில் நடந்த பெரும் மோதலுக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவிலில் திராணி இருந்தால் தனித்து நின்று காட்டுங்கள் என்று தேமுதிகவுக்கு சவால் விட, ஆளுநர் ஆட்சியில் தேர்தல் நடத்துங்கள், நாங்கள் தனித்து நிற்கிறோம் என்று விஜயகாந்த்தும் பதில் சவால் விட்டுள்ளார்.

இதனால் இந்தத் தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா, போட்டியிடாதா என்பதில் குழப்பம் நிலவுகிறது. பேச்சுக்குத்தான் கேப்டன் அப்படிக் கூறினார். மற்றபடி போட்டியிடாமல் இருக்க மாட்டார் என்று தேமுதிக தரப்பில் கூறுகிறார்கள். இருப்பினும் தேமுதிக போட்டியிடுமா அல்லது திமுகவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்க தீர்மானிக்குமா என்பது தெரியவில்லை.

இதுவரை சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தொடர்பாக தேமுதிகவின் நிலை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனவே அதற்காக அக்கட்சித் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.